You are on page 1of 1

சனி நீதிபதியல்ல. நீதிக்கு காரகர் குரு .

இதைபற்றி விரிவாக இன்று பதிவிடுகிறேன். மூலநூல்கள் சனி ஒரு பாவர் என்றும், பொய், ஏமாற்றுதல்,
விதாண்டாவாதம் செய்தல், அறியாமை, முட்டாள்தனம் போன்றவற்றுக்கு காரகத்துவம் என்பவை
ஒளிவுமறைவு இன்று முட்டாளுக்கும் , ஜோதிடஞானம் இல்லாதவனுக்கும் புரியும்படி வெளிப்படையாகவே
விளக்கியுள்ளன. இதில் சூட்சுமமாக மறைத்து எல்லாம் எழுதிவைக்கவில்லை. அண்மையில் சனி நீதிபதி
என்றால் குரு யார் என்று பல குழுக்களில் கேட்டிருந்தேன். அதில் 90 சதவீதம் பேர் சனி தர்மதேவதை,
உங்களுக்கு அவரது அருமை தெரியவில்லை, அதனால்தான் அவர் பல பட்டங்களையும் பெற்றுள்ளார்.,
நீதியை குறிக்கும் துலாம் ராசியில் உச்சமடைகிறார் என்று வாதிட்டனர். இதில் 20 வருட அனுபவம் உள்ள பல
ஜோதிடர்கள் அடக்கம். சனி இரண்டில் இருந்து சுபர் பார்க்காவிட்டால் பொய் கூறுவான். ஆக பொய்யிற்கு
காரகம் வகிப்பவர் சனி. இதை பற்றியே இன்று விரிவாக பதிவிட உள்ளேன். நம்பர்1 பாவியான சனியை
விட்டுவிட்டு ஜோதிடத்தை பற்றி பேசமுடியாது என்பதால் இதைபற்றி பதிவிடலாம் என்று இருக்கிறேன். குருஜி
ஐயா எனது மானசீக குருவான ஆதித்ய குருஜி இதைபற்றி மிக உயர்ந்த நிலையில் ஏற்கனவே
விலக்கிவிட்டார். அதை தேடி படிக்க முடியாதவர்கள் நிறைய இணையத்தில் உள்ளனர். குருஜி ஐயா
அளவிற்கு எனக்கு அனுபவமே ,ஜோதிடஞானமோ இல்லை என்றாலும் அவரது எழுத்துக்கள் எனக்கு
இன்னும் இந்த விசயத்தில் அதிக தெளிவை தந்துள்ளதால் இதை பதிவிட இருக்கிறேன்

You might also like