You are on page 1of 1

சுகபோக வாழ்வு

வாகனம், வீடு, சுகபோகவாழ்வு, சந்தோசம், நவீனவசதிகள், ஆடம்பர வசதிகள் அமைய லக்னத்திற்கும்


ராசிக்கும் நான்காமிடம் பாவகிரகங்கள் தொடர்பின்றி சுபத்துவமாக இருக்கவேண்டும்.
அதாவது ராகு, சனி, செவ்வாய் அமராமலும் பார்க்காமலும் இருக்கவேண்டும்.
சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறை சந்திரன் இருந்தாலோ நான்காமிடத்தை
பார்த்தாலோ சுகவாழ்வு அமையும்.
நான்காமதிபதி லக்னத்திற்கு கேந்திரகோணங்களான 1,4,7,10,5,9 லோ அல்லது 2,11 லோ பகை மற்றும்
நீசமில்லாமல் அமர்ந்தால் உயர்தரமான வசதிவாய்ப்புகள் அமையும்.
கூடவே செவ்வாய் பலமாக சுபத்துவமாக சுபர் தொடர்புடன் அமைந்தால் சொத்து, நிலம், மனை (பிளாட்)
போன்றவை அதிகமாக இருக்கும் அல்லது சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.
நான்காமதிபதி பத்தில் அமர்ந்தால் சிம்மாசனயோகம். இந்த யோகத்தால் உயர்பதவி, வாகனம்,சொத்து
,சுகம், வசதி ஏற்படும்.
நான்காமதிபதி 11 ல் அமர்ந்தால் பல வாகனங்களும் ,பல வீடுகளும் வாழ்நாளில் சம்பாதிப்பர்.
நான்காமிடத்திற்கு காரகர் சுக்கிரன்.
மிகமிக முக்கியமாக சுக்கிரன் பலமிழக்க கூடாது.
நான்காமதிபதியும் சுக்கிரனும் சுபவலிமை பெற்றால் நவீன ஆடம்பர மாளிகைபோன்ற பங்களா, உயர்தர நவீன
வாகனம், வசதியான வாழ்ககை ் , சுகபோகம் அமையும்.
நான்காமதிபதி 1,5,9 ஆம் அதிபதிகளுடன் சேர்ந்து கேந்திரகோணங்களில் அமைந்தால் நவீன ஆடம்பர
வசதிகள் ,பலவாகனங்கள் அமையும்.
லக்னாதிபதி மற்றும் ராசிநாதன் வலிமையழக்கக கூடாது.

You might also like