You are on page 1of 1

AGM கரணம்:

ஜோதிடத்தின் ஒரு பகுதியாகவே பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம்
அமைந்துள்ளது.
இதில் ஒன்றான கரணம் ஜோதிடத்தில் யோகங்களை அதிகரித்து தரும் துணை அமைப்பாக பயன்படுகிறது.
மொத்தம் 11 கரணங்கள் காணப்படுகின்றன. இந்த கரணங்களை பற்றி பொதுவான பலன்கள் பஞ்சாங்கத்தில்
கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பொதுபலன்களை அனைவருக்கும் பொருந்தாது. ஏனென்றால் கரணம் பற்றி பலன்கள்
எழுதுபவர்கள் பல பொதுவான 50 சதவீதம் ஜாதகர்களுக்கு கூட பொருந்தாத பொதுபலன்களையே எழுதிவருகிறார்கள்.
பிறந்த ஜாதகத்தில் உள்ள முக்கிய யோகங்களையும், பலன்களையும் அதிகரிக்கவோ குறைக்கவோ மட்டுமே இந்த கரணம்
,கரணாதிபதி பயன்படுகிறது. இதை பற்றி விரிவாக உதாரண ஜாதகங்களுடன் சில பதிவுகள் மூலமாக விளக்குகிறேன்.
ஒவ்வொரு கரணத்திற்கும் ஒரு கிரகம் அதிபதியாக
இருக்கும். இந்த கரணநாதனாகிய கிரகம் பிறந்த ஜாதகத்தில் பலமாகவும் யோக அமைப்புடனும் இருக்க வேண்டியது
அவசியம். கரணநாதன் பலமாக இருந்தால் தனது தசாபுக்திகளில் யோகபலன்களை தருவான். உதாரணமாக வணிஜை
கரணம் எனப்படும் பசு கரணத்திற்கும் அதிபதியான கிரகம் ,கரணநாதன் சூரியன். இந்த சூரியன் பிறந்த ஜாதகத்தில்
வலுவாக இருந்தால் சூரியனின் காரகத்துவம் மூலமாக வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் யோகபலன்களின் அளவு அதிகமாக
இருக்கும். இந்த கரணநாதன் யோகியாக நாமயோகத்தின்படி வந்தால் மிகப்பெரிய யோகபலன்களை தனது தசாபுத்திகளில்
தருவான். கரணநாதனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகங்களும் தனது தசாபுத்திகளில் நல்ல யோகபலன்களையே செய்யும்.
சில பஞ்சாங்க நூல்கள் கரணநாதன் மெய்க்காப்பாளன், பாதுகாவலன் என்று கூறுகிறது. அவயோகி கரணநாதனாக வந்தால்
தீமை செய்வதில்லை. அல்லது குறைவான தீமையையே செய்யும் . இதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

You might also like