You are on page 1of 1

வேதகதோசம்:

வேதகன் நன்மை செய்வானா?


இந்த பதிவை போடுவதன் நோக்கமே ஜோதிடம் படிப்பவர்கள் மத்தியில் உள்ள தேவையற்ற பயத்தை
அகற்றவே!
முழுமைபெறாத ஜோதிடர்களின் பதிவுகள் நிறைய முகநூலில் காணப்படுகிறது. இவர்களது பதிவுகளை
பார்க்கும்போது இவர்களை நம்பி செல்லும் ஜாதகர்களின் கதி பரிதாபத்தை அடைவது உறுதி.
ஜோதிடம் கரைகாணமுடியாத கடல் என்று உங்களுக்கு சலிப்புதட்டினாலும் பரவாயில்லையென்று எனது
பதிவுகளில் மீண்டும் மீண்டும் உணர்த்துவதற்கு காரணம் அதில் எக்கசக்கமான உண்மைகளும் ,விதிகளும்,
விதிவிலக்குகளும் நிரம்பிக்கிடப்பதால்தான்.போதிய ஜோதிடஞானம் இல்லாதவர்களால் அதில் உள்ள
விதிகள் தவறாக பரப்பப்புவதால் எதுசரியானதென்று பல ஜோதிடார்வலர்கள் குழப்பமடைய நேரிடும்.
இவர்களது போதிய அனுபவமற்ற பதிவுகளால் புதிதாக ஜோதிடம் கற்பவர்களும் குழப்பமடைந்து ஏதாவது
வழிபிறக்காதா என்ற நினைப்பில் ஜாதகம் பார்க்கசெல்லும் ஜாதகர்களும் குழப்பத்தையே அடைவர்.
இதை ஏன் இங்கு பதிவிடுகிறேன் என்றால் தனது பெரும்பாலான ஜோதிடபதிவுகளில் போதகர், பாசகர்,
காரகர், வேதகர், அமைப்புகளை முதன்மை விதியாக( !?) கொண்டு பலன்கூறி அதற்கு உதாரண
ஜாதகங்களையும் கைகளால் கிறுக்கி இதனால்தான் இந்த பலன் நடந்தது என்றும்(?) இப்படிதான்
ஜோதிடர்கள் பலன்கூறவேண்டும் என்று சிலர் பதிவிடுகின்றனர். இவை முதன்மை விதிகள் அல்ல. ஆனால்
ஒரு கிரகதசா பலன்களை இந்தவேதகநிலை அமைப்பு கூட்டவோ குறைக்கவோ செய்யும் என்பதால் இங்கு
பதிவிடுகிறேன்.
இதில் முக்கியமாக தசாபலன்களை தடுக்கும் அமைப்பான வேதகதோசத்தை மட்டும் பதிவிடுகிறேன்.
விதி:
சூரியனுக்கு 11 ல் சுக்கிரன் இருந்தால் வேதகன்.
சந்திரனுக்கு 3 ல் சூரியன் இருந்தால் வேதகன்.
செவ்வாய்க்கு 12 ல் புதன் இருந்தால் வேதகன்.
புதனுக்கு 3 ல் செவ்வாய் இருந்தால் வேதகன்.
குருவிற்கு 12 ல் சூரியன் இருந்தால் வேதகன்.
சுக்கிரனுக்கு 4 ல்சனி இருந்தால் வேதகன்.
சனிக்கு 7 ல் செவ்வாய் இருந்தால் வேதகன்.
இதில் தவறான புரிதல் என்னவென்றால் குருவுக்கு சூரியன் வேதகன் என்பதால் குருதசாவில் சூரியபுத்தி
நன்மைசெய்யாது என்று அனுபவமற்ற ஜோதிடர்களால் கூறப்படுவதுதான். சரியான விதியென்னவென்றால்
குருவுக்கு சூரியன் எங்கே இருந்தால் வேதகன் என்பதே.
குருவுக்கு கேந்திரத்தில் சூரியன் இருப்பது நல்ல அமைப்பு. குருவுக்கு ஏழில் சூரியன் இருந்தால்தான்
சிவராஜயோகம் என்ற ராஜயோகமே ஏற்படுகிறது.
எனவே குருவுக்கு சூரியன் வேதகன் என்று கூறக்கூடாது.
குருவுக்கு 12 ல் சூரியன் இருந்தால் மட்டுமே வேதகநிலை என்று்தெளிவாக கூறவேண்டும்.மேலும் இவ்வாறு
வேதகதோசம் பெற்ற கிரகம் தசாமுழுவதுமே ஒருவித தடையை தரும். அந்த குறிப்பிட்ட வேதகனின்
புத்திகாலத்தில் அதிக தீயபலனை தரும். இதற்கும் பல விதிவிலக்குகள் உள்ளன.
அது வேதக கிரகம் தசாநாதனைவிட பலமிழப்பதே ஆகும். அதாவது வேதகன் பலவீனமானால்
யோகபலன்களை செய்வான் என்று சர்வார்த்த சிந்தாமணி என்ற மூலநூல் நிறைய இடங்களில் கூறுகிறது.

You might also like