You are on page 1of 1

பார்வையில்லாத இடங்கள்

 பால மற்றும் விருத்தாவஸ்தையில் இருக்கும் கிரகங்களும்


 அஸ்தமனம் அடைந்த கிரகங்களும்,
 கிரகயுத்தத்தில் தோல்வியுற்ற கிரகங்களும்

மற்ற ராசியைப் பார்ப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவை அந்த ராசிகளைப் பார்ப்பதில்லை

பால அவஸ்தை என்பது ஆண்ராசியில் 0- 6 பாகையும் பெண்ராசியில் 24-30 பாகையும் ஆகும்.

விருத்த அவஸ்தை என்பது ஆண்ராசியில் 18-24 பாகையும் பெண்ராசியில் 6-12 பாகையும் ஆகும்.

ஆண்ராசிகள் என்பது மேசம், மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்( மேசம் முதல் ஒன்றுவிட்ட ஒரு ராசிகள்)

பெண்ராசிகள் என்பது ரிசபம், கடகம்,கன்னி,விருட்சிகம், மகரம், மீனம் ஆகியவை.

கிரகயுத்தம் என்பது ஒரு பாகைக்குள் இருகிரகங்கள் சேர்ந்து அதில் அதிகபாகை பெற்ற கிரகம் வெற்றியும் குறைவான
பாகை பெற்ற கிரகம் தோல்வியும் பெறும்.அதாவது குருவும் சனியும் ஒரு பாகையில் சேரும்போது குரு 08.13 பாகை,கலை சனி
09.02 பாகை கலையெனில் குரு கிரகயுத்தத்தில் தோல்வியுறும்.சனி கிரகயுத்தத்தில் வெற்றிபெற்று தனது தசாவில்
நன்மைசெய்யும்.

You might also like