You are on page 1of 7

1) Jan 20, 2020

Mat 3:8
நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால்
காட்டுங்கள்.

2) Jan 21, 2020


Mat 4:4
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல்
ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

3) Jan 22, 2020


Mat 4:7
உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்.

4) Jan 23, 2020


Mat 4:10
உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி
செய்.

5) Jan 24, 2020


Mat 4:17
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.

6) Jan 25, 2020


Mat 4:19
என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர்
ஆக்குவேன்.

7) Jan 28, 2020


Mat 5:3
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு
அவர்களுக்கு உரியது.
8) Jan 29, 2020
Mat 5:4
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல்
பெறுவர்.

9) Jan 30, 2020


Mat 5:5
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை
உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

10) Jan 31, 2020


Mat 5:6
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நிறைவுபெறுவர்.

11) Feb 1, 2020


Mat 5:7
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம்
பெறுவர்.

12) Feb 3, 2020


Mat 5:8
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள்
கடவுளைக் காண்பர்.

13) Feb 4, 2020


Mat 5:9
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள்
கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

14) Feb 5, 2020


Mat 5:10
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
15) Feb 6, 2020
Mat 5:11,12
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப்
பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது
நீங்கள் பேறுபெற்றவர்களே!
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில்
உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே
உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள்
துன்புறுத்தினார்கள்.

16) Feb 7, 2020


Mat 5:13
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப்
போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது
வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும்
உதவாது.

17) Feb 10, 2020


Mat 5:14
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும்
நகர் மறைவாயிருக்க முடியாது.

18) Feb 12, 2020


Mat 5:16
உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள்
நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப்
புகழ்வார்கள்.

19) Feb 13, 2020


Mat 5:19
இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீ றி அவ்வாறே
மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக்
கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக்
கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.

20) Feb 14, 2020


Mat 5:20
மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள்
நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள்
புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

21) Feb 18, 2020


Mat 5:22
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "தம் சகோதரர்
சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு
ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே"
என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; "அறிவிலியே"
என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

22) Feb 19, 2020


Mat 5:23-24
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த
வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்
மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து
விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்
கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

23) Feb 24, 2020


Mat 5:25
உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது
வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு
செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம்
உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள்
சிறையில் அடைக்கப்படுவர்கள்.

24) Feb 26, 2020
Mat 5:28
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை
இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே
அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.

25) Feb 27, 2020


Mat 5:29
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப்
பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில்
எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள்
இழப்பதே நல்லது.

26) Feb 28, 2020


Mat 5:30
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும்
உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல்
முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில்
ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

27) Feb 29, 2020


Mat 5:32
எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக்
காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர்
எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.
விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

28) Mar 2, 2020


Mat 5:34-35
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே
வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்;
ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்;
ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது
பேரரசரின் நகரம்.

29) Mar 5, 2020


Mat 5:36
உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி
ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.

30) Mar 6, 2020


Mat 5:37
ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும்
சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

31) Mar 10, 2020


Mat 5:39
தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு
மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

32) Mar 11, 2020


Mat 5:40
ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள
விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.

33) Mar 12, 2020


Mat 5:41
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை
செல்லுங்கள்.

34) Mar 13, 2020


Mat 5:44
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத்
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

35) Mar 14, 2020


Mat 5:48
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும்
நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
36) Mar 16, 2020
Mat 6:1
மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.
இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத்
தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

37) Mar 18, 2020


Mat 6:3-4
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள்
தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

38) Mar 19, 2020


Mat 6:7
மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற
இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை
அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும்
என அவர்கள் நினைக்கிறார்கள்.

You might also like