You are on page 1of 7

1.

1 கொரிந்தியர் 1
9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற
இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும்,
பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும்
உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

2. எபேசியர் 4
22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும்
இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள்
களைந்துபோட்டு,
23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக
சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர்
அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன்
பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன்
அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

3. மத்தேயு:5
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள்
சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை
ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை
செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற


உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும்
நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி,
நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும்
மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

4. மத்தேயு:6
31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக்
குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று
கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்;


இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று
உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய


நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம்
உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்;


நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.
அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

5. மத்தேயு – 7
1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே
நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற
அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன்
சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

6. எபேசியர் 5
28அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள்
சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில்
அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன்
தன்னில்தான் அன்புகூருகிறான்.
29தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே;
கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல
ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக்
காப்பாற்றுகிறான்.
30நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய
மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும்
உரியவர்களாயும் இருக்கிறோம்.
31இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும்
விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே
மாம்சமாயிருப்பார்கள்

7. மாற்கு 10
14இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள்
என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத்
தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம்
அப்படிப்பட்டவர்களுடையது.
15எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய
ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில்
பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச்
சொல்லுகிறேன் என்று சொல்லி,
16அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை
வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

8. ஆதியாகமம் 33
9அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு;
உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.
10அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில்
எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என்
கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர்,
நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய
முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது

9. யோவான் 4
23உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை
ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம்
வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத்
தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி
பிதாவானவர் விரும்புகிறார்.
24தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத்
தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும்
அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

10. கலாத்தியர் 2
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும்,
பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள்
பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில்
பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய
குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

11. லூக்கா 22
19பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி,
அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக்
கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை
நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
20போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே
பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச்
சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய
உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.

12. மத்தேயு:6
2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால்
புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும்
செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே;
அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம்
அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன்
இடது கை அறியாதிருக்கக்கடவது;

4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே


உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

13. லூக்கா 17
20தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்
அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர்
பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய்
வராது.
21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும்
சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய
ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

14. அப்போஸ்தலர் 2
32இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு
நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
33அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா
அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று,
நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப்
பொழிந்தருளினார்

15. அப்போஸ்தலர் 2
42அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்,
அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும்,
ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
43எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே
அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
44விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும்
பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
16. கலாத்தியர் 5
13சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள்,
இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக
அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர்
ஊழியஞ்செய்யுங்கள்.
14உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும்
அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே
நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
15நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால்
அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்.
16பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால்,
ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச
இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்

17. 1 கொரிந்தியர் 6
19உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில்
தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய
ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள்
உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
20கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு
உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள்
ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

18. கலாத்தியர் 5
22ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம்,
நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.
23சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு
விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
24கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின்
ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி
நடக்கவும்கடவோம்.

You might also like