You are on page 1of 5

ஏசாயா – அதிகாரம் 45:1-8

1 கர்தத
் ராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக
ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை
அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க,
கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன்
வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

2 நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச்


செவ்வையாக்குவேன்.

3 உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்


நானே என்று நீ அறியும்படிக்கு,

4 வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து,


அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற
புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய
யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும்,
நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும்
உனக்கு நாமம் தரித்தேன்.

5 நானே கர்தத
் ர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற


திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ
என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே
கர்தத
் ர், வேறொருவர் இல்லை.

7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்


படைத்து தீஙகை
் யும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே
இவைகளையெல்லாம் செய்கிறவர்.

8 வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள்


நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து,
நீதியுங்கூட விளைவதாக; கர்தத
் ராகிய நான் இவைகளை
உண்டாக்குகிறேன்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,


உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது
போல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!


ஆண்டவர் உம்முடனே,
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே,
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி
பெற்றவரே.
தூய மரியே,
இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள்
இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த, எல்லாம் வல்ல
தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
அவருடைய ஒரே மகனாகிய, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
நம்புகிறேன்.
இவர் தூய ஆவியாரால் கருவாகி, தூய கன்னி மரியாவிடமிருந்து
பிறந்தார்.
பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில்
அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள், இறந்தோரிடமிருந்து
உயிர்த்தெழுந்தார்.
விண்ணகம் சென்று, எல்லாம் வல்ல தந்தையாகிய, கடவுளின்
வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து, வாழ்வோருக்கும் இறந்தோருக்கும், தீர்ப்பு வழங்க
மீண்டும் வருவார்.
தூய ஆவியாரை நம்புகிறேன்.
தூய கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களுடைய சமூக
உறவையும் நம்புகிறேன்.
பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
நிலை வாழ்வை நம்புகிறேன்.
ஆமென்

You might also like