You are on page 1of 1

1.

திருச்சபையின் அரசராம் இறைவா


உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன் எமது திரு
அவையானது நற்செய்தி பணி
ஆற்றிடவும் , உலக நாடுகளின் தலைவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளிட்கு ஏற்ப இறை சமூகத்தை
ஆன்மிக வாழ்விட்கு அழைத்துச்செல்ல தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ……

2.படைப்பின் பரம்பொருளே இறைவா!


இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி
புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்நது ் வாழவும், அன்பு, மகிழ்ச்சி,
பரிவு, இரக்கம் போன்ற நற்பண்புகள் இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவி புரிந்து
ஒரு எடுத்துக்காட்டான வாழ்வை இத்தொற்று நோய் காலத்தில் வாழத்தேவையான அருளைப் பொழிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்………

3.வாழ்வோரின் கடவுளாகிய ஆண்டவரே,


நீர் என்றும் வாழ்பவர். சாவைக் கடந்தவர். உம்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் முடிவில்லாத
வாழ்வைத் தருபவர். உமக்கு நன்றி கூறுகிறோம். இன்றைய நாளில் உமது விசுவாசிகள்
அனைவரையும், குறிப்பாக யாரும் நினையாத, மறக்கப்பட்ட ஆன்மாக்களை
நினைவுகூர்ந்து மன்றாடுகிறோம். அனைவருக்கும் இன்பமும், ஒளியும், அமைதியும் அளித்திட
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்……

4. அன்புத்தந்தையே இறைவா
புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் புனிதர்களின் வாழ்விலிருந்து
நல்லவற்றை நாங்கள் எங்கள் வாழ்வில் கடைபிடிக்கவும், உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் விரைவில்
ஈடேற்றம் பெற்று உமது புனிதர்களின் கூட்டத்தில் இணைந்து உம்மைப் போற்றிட வேண்டிய அருள் வரங்களைப்
பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்………

5. மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,


எம் இளம் சமூகத்திற்காக மன்றாடுகின்றோம் . இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும்
செய்ய தகுதி பெறவும் , ஞானத்தோடு அனைத்தையும் செய்து
முடிக்கவும் , தீமைகளிலிருந்து விலஎகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ ஆசிர்வதித்து
வழிபடுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் …….

You might also like