You are on page 1of 15

மனந்திரும்புதல் - Repentance

3 மனந்திரும்புத
ல் அவசியமா?
BIBLE MINUTES YESUDAS SOLOMON
பொருளடக்கம்
1. தேவன் விரும்புகிறார்
2. இயேசுவும், யோவான் ஸ்நானகனும், அப்போஸ்தலர்களும் இதையே
அறிவுறுத்தினர்
3. உண்மையான விசுவாசத்திற்கு அவசியமானது
4. பாவ மன்னிப்பு பெற அவசியமானது
5. காலம் கடந்தால் மனம் மாறுதல் பெற முடியாது
6. மனந்திரும்பாமல் இருப்பது பாவமாகும்
7. மனந்திரும்பவில்லை என்றால் தண்டனை உண்டு

BIBLE MINUTES
BIBLE MINUTES
1. தேவன் விரும்புகிறார்
• எல்லா மனுஷரும் மனந்திரும்ப கட்டளை
கொடுத்திருக்கிறார் - அப் 17:30
• நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் - 2 பேது 3:9
• மனந்திரும்ப வாய்ப்பு கொடுக்கிறார் - வெளி 2:21
• எல்லா மதத்தினருக்கும் தந்தருளினார் - அப் 11:18; லூக்
24:47
• தன்னுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவையே பரிகார
பலியாக தந்தருளினார் - அப் 5:31; யோவா 3:16
• நாம் மனந்திரும்ப தயவாய் இருக்கிறார் - ரோம 2:4
• மனந்திரும்பும்படி சிட்சிக்கிறார் - வெளி 3:19
• வாக்குவாதம் பண்ணுகிறவர்களுக்கும் சுத்தமாக
புத்திசொல்லவும் உபதேசிக்கவும் சொல்லுகிறார் - 2
தீமோ 2:25
BIBLE MINUTES
2. இயேசுவும், யோவான் ஸ்நானகனும்,
அப்போஸ்தலர்களும் இதையே அறிவுறுத்தினர்

புதிய ஏற்பாட்டில் முதல் பிரசங்கம்


• இயேசுவின் முதல் பிரசங்கமாக மத்தேயுவில்
வருவது மனந்திரும்புதல் தான் - மத் 4:17
• யோவான் ஸ்நானகனின் முதல் பிரசங்கமாக
வேதத்தில் வருவது மனந்திரும்புதல் தான் -
மத் 3:2
• அப்போஸ்தலர்களின் முதல் பிரசங்கம்
மனந்திரும்புதல் தான் - அப் 2:38

BIBLE MINUTES
2. இயேசுவும், யோவான் ஸ்நானகனும்,
அப்போஸ்தலர்களும் இதையே அறிவுறுத்தினர்
இயேசு கிறிஸ்து
• மனந்திரும்புதலை குறித்து
பிரசங்கிக்கிறார் - மத் 4:17; மாற் 1:15
• மனந்திரும்பாவிட்டால் “கெட்டுப்போவீர்கள்”
என்று எச்சரிக்கிறார் - லூக் 13:3,5
• மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார் - மத் 9:13
• மனந்திரும்பாதவர்களை கடிந்துக்கொண்டார் -
மத் 11:20-24
• மனந்திரும்பினால் பரலோகத்தில் மிகுந்த
சந்தோஷம் உண்டாகும் என்கிறார் - லூக் 15:7
• மனந்திரும்புதலை உலகமெங்கும் பிரசங்கிக்க
கட்டளை கொடுத்திருக்கிறார் - லூக் 24:47
BIBLE MINUTES
2. இயேசுவும், யோவான் ஸ்நானகனும்,
அப்போஸ்தலர்களும் இதையே அறிவுறுத்தினர்

அப்போஸ்தலர் பேதுரு
• அப் 2:38 - நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும்
பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப்
பெறுவீர்கள்.
• அப் 3:20 - உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள்
மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

BIBLE MINUTES
2. இயேசுவும், யோவான் ஸ்நானகனும்,
அப்போஸ்தலர்களும் இதையே அறிவுறுத்தினர்
அப்போஸ்தலர் பவுல்
• அப் 20:21 - தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும்
சாட்சியாக அறிவித்தேன்.
• அப் 26:20 - முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா
தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய்,
அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற
கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
• அப் 17:30 - (அத்தேனே) அறியாமையுள்ள காலங்களைத் தேவன்
காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள
மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்

BIBLE MINUTES
3. உண்மையான விசுவாசத்திற்கு அவசியமானது

இரட்சிப்பிற்கான விசுவாசம் / இயேசுவை


விசுவாசிக்கும் விசுவாசம்
• மாற் 1:15 - மனந்திரும்பி சுவிசேஷத்தை
விசுவாசியுங்கள்
• அப் 20:21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும்..
• லூக் 16:30 ஐசுவரியவான்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே,
மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால்
மனந்திரும்புவார்கள் என்றான்.

BIBLE MINUTES
4. பாவ மன்னிப்பு பெற அவசியமானது

• லூக் 24:47 - அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச்


சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
• அப் 3:20 - உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள்
மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

பாவ மன்னிப்புதான் இரட்சிப்பு


• லூக் 1:77 பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு
• எபே 1:7 பாவமன்னிப்பாகிய மீட்பு
• கொலோ 1:14 பாவமன்னிப்பாகிய மீட்பு
ஆக, நாம் இரட்சிக்கப்பட மனந்திரும்புதல் அவசியமானது

BIBLE MINUTES
5. காலம் கடந்தால் மனம் மாறுதல் பெற முடியாது

எபிரேயர் 12:17
• பிற்பாடு அவன் (ஏசா) ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள
விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன்
கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக்
காணாமற்போனான்.
• ஏசா அழுதார், கவலைப்பட்டார், கண்ணீர்விட்டார், மனந்திரும்ப முயற்சி
செய்தார் ஆனால் காலம் தாமதமானபடியால்
அவருக்கு மனந்திரும்ப மற்றுமொரு வாய்ப்புக் கிடைக்கவில்லை

BIBLE MINUTES
6. மனந்திரும்பாமல் இருப்பது பாவமாகும்
யாக் 4:17
• ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச்
செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
• மனந்திரும்புவது, சரியான பாதையில் நடப்பது, நீதிமானாய் வாழ்வது,
மற்றவர்களுக்கு உதவி செய்வது இவை எல்லாமே நன்மையான
காரியங்கள்
• நாம் இவைகளை செய்யாமல் இருப்பது பாவமாகும்
1 யோவா 1:8
• நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே
ஏமாற்றிக்கொள்கிறவர்களாய் இருப்போம்

BIBLE MINUTES
7. மனந்திரும்பவில்லை என்றால் தண்டனை உண்டு

• ரோமர் 6:23 - பாவத்தின் சம்பளம் மரணம்


• வெளி 20:12-15 - ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக்
காணப்படாதவனெவனோ அவன் இரண்டாம் மரணமாகிய அக்கினிக்
கடலிலே தள்ளப்படுவான்
• வெளி 21:8 - பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்,
அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும்,
சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும்
இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற
கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

BIBLE MINUTES
முடிவுரை
• வெளி 3:19 - நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக்
கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து,
மனந்திரும்பு.
• மனந்திரும்புதலை குறித்து மேலும் அறிந்துக்கொள்ள எங்களுடைய
மற்ற வீடியோக்களையும் பாருங்கள்.
• எங்களுடைய Telegram App Channel மற்றும் Website-ல் அனைத்தையும்
PDF, PPT Audio & Video வடிவில் இலவசமாக Download
செய்துக்கொள்ளுங்க, உங்கள் சபைகளில் பயன்படுத்துங்க.
• ஏதாவது கேள்விகள் இருந்தால் WhatsApp அல்லது Email மூலமாக
தொடர்புக்கொள்ளுங்கள்.
• உண்மையான மனந்திரும்புதலை கண்டடைய தேவன் உதவி
செய்வாராக

BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social

+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes


+91 76765 05599 Facebook: Bible Minutes

Download All resources from Telegram App Channels or from our website:

https://t.me/TamilBibleStudy https://t.me/TamilChristianPDFs www.WordOfGod.in

You might also like