You are on page 1of 2

பாடம் – 10

ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என்


உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக்
காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி,
அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன். ஆகிலும் உன் தகப்பனாகிய
தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன்
குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.
1 இரா: 11 : 11,12

பாடம் – 11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே,
பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு
லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்;
உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக
வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை
மேற்கொள்ளவிடாதேயும் என்றான். 2 நாளா: 14 : 11

பாடம் – 12
ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது,
எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள்
தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை,
பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான். 2 நாளா: 19 : 7

பாடம் – 13
தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும்
சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின்
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக,
யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத்
தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான
ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து, 2 நாளா: 23 : 18

பாடம் – 14
அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான
சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று:
நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள்
சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்;
நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
2 நாளா: 24 :20
பாடம் – 15
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு
விலக்கிக் காக்கிறான். அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று
பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான். நீதி: 21 : 23, 24

பாடம் – 16
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன்
பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை
அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகையால், தேவனுக்குக்
கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன்
உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு: 4 : 6,7

பாடம் – 17
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய
வருஷங்களோ குறுகிப்போம். நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;
துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு
அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம். நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;
துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. நீதி: 10 : 27 - 30

பாடம் – 18
அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப்
பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத்
தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்;
அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும்,
இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.
2 நாளா: 29 : 31

You might also like