You are on page 1of 12

Truth words for Youth fellowship:

5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என்


இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

சங்கீதம் 25:5

10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை, உமது


சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன், உமது கிருபையையும்
உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான்
ஒளித்துவைக்கவில்லை.

சங்கீதம் 40:10

17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ


வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

நீதிமொழிகள் 12:17

20 சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும்,


நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச்
சொல்லும்படிக்கும்,

நீதிமொழிகள் 22:20

21 ஆலோசனையையும் ஞானத்ததையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை


எழுதவில்லையா?

நீதிமொழிகள் 22:21

23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே, அப்படியே ஞானத்தையும்


உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

நீதிமொழிகள் 23:23

1 கர்த்தாவே, நீரே என் தேவன் உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன், நீர்
அதிசயமானவைகளைச் செய்தீர், உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும்
உறுதியுமானவைகள்.

ஏசாயா 25:1
2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக
வாசல்களைத் திறவுங்கள்.

ஏசாயா 26:2

18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது, குழியில்


இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை.

ஏசாயா 38:18

19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே,


உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

ஏசாயா 38:19

14 நியாயம் பின்னிட்டு அகன்றது, நீதி தூரமாய் நின்றது, சத்தியம் வீதியிலே இடறி,


யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

ஏசாயா 59:14

15 சத்தியம் தள்ளுபடியாயிற்று, பொல்லாப்பை விட்டு விலகுகிறவன்


கொள்ளையாகிறான், இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று
விசனமுள்ளவரானார்.

ஏசாயா 59:15

1 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டு பிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத்


தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து,
விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள், காண்பீர்களானால் அதற்கு
மன்னிப்புத் தருவேன்.

எரேமியா 5:1

3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக: நீ அவைகளை உன்


கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
நீதிமொழிகள் 3:3

13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே


பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும்
இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத்
தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை
ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

2 தெசலோனிக்கேயர் 2:13

3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும்


பிரியமுமாயிருக்கிறது.

1 தீமோத்தேயு 2:3

4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,


அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

1 தீமோத்தேயு 2:4

5 கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை


ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும்
மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 தீமோத்தேயு 6:5

15 நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்


போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி
ஜாக்கிரதையாயிரு.

2 தீமோத்தேயு 2:15

4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச்


சாய்ந்துபோகுங்காலம் வரும்.

2 தீமோத்தேயு 4:4
5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி,
சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

2 தீமோத்தேயு 4:5

13 இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது. இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய


கட்டுக்கதைகளும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய
கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,

தீத்து 1:13

14 விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களை


கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.

தீத்து 1:14

26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப்


பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு
பலி இனியிராமல்,

எபிரேயர் 10:26

27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப்


பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

எபிரேயர் 10:27

14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும்


வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு
விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

யாக்கோபு 3:14

18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு


நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

யாக்கோபு 1:18

22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி,


ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச்
சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே
ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.

1 பேதுரு 1:22

17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக்


குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு
அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

1 யோவான் 3:17

18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும்


உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

1 யோவான் 3:18

6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள். தேவனை அறிந்தவன் எங்களுக்குச்


செவிகொடுக்கிறான். தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச்
செவிகொடுக்கிறதில்லை. இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி
இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

1 யோவான் 4:6

2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய


பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,

2 யோவான் 1:2

3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய


இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும்
அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.

2 யோவான் 1:3

3 சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய


உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

3 யோவான் 1:3

4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற


சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

3 யோவான் 1:4
7 ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய
நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.

3 யோவான் 1:7

8 ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேளையாட்களாயிருக்கும்படி


அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்.

3 யோவான் 1:8

31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில்


நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்,

யோவான் 8:31

32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

யோவான் 8:32

37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான்.


இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்,
சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த
உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

யோவான் 18:37

23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும்


உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே
வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்
இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

யோவான் 4:23

24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்


ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

யோவான் 4:24

14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்


நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக்
கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே
இருந்தது.
யோவான் 1:14

13 சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை


நடத்துவார், அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள்
யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

யோவான் 16:13

16 நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

யோவான் 17:16

17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே


சத்தியம்.

யோவான் 17:17

18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில்


அனுப்புகிறேன்.

யோவான் 17:18

19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி,


அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

யோவான் 17:19

18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித


அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரோமர் 1:18

4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு


தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.

1 கொரிந்தியர் 13:4

5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு


நினையாது.

1 கொரிந்தியர் 13:5
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

1 கொரிந்தியர் 13:6

7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும்,


சகலத்தையும் சகிக்கும்.

1 கொரிந்தியர் 13:7

8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய


பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

1 கொரிந்தியர் 13:8

9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும்


குறைவுள்ளது.

1 கொரிந்தியர் 13:9

10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

1 கொரிந்தியர் 13:10

8 ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும்


புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே
பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

1 கொரிந்தியர் 5:8

8 சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு


அநுகூலமாகவே செய்யக்கூடும்.

2 கொரிந்தியர் 13:8

2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும்,


தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே
தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை
உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

2 கொரிந்தியர் 4:2
15 அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள்
கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும்
செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

கலாத்தியர் 4:15

16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச்


சத்துருவானேனோ?

கலாத்தியர் 4:16

14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான்


கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது
என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார்
முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக
நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?

கலாத்தியர் 2:14

4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை


நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாகும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த
கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

கலாத்தியர் 2:4

5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு


நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.

கலாத்தியர் 2:5

13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும்


செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய
சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 6:13

14 சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்,


நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்,

எபேசியர் 6:14
15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக்
கால்களிலே தொடுத்தவர்களாயும்,

எபேசியர் 6:15

16 பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம்


அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும்
கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

எபேசியர் 6:16

17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின்


பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 6:17

18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்


ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல
பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்
கொண்டிருங்கள்.

எபேசியர் 6:18

9 சகல ஜாதிகளும் ஏகமாய்ச்சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்,


இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்?
கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக்
கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.

ஏசாயா 43:9

24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும்


உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். அவர் உங்களிடத்தில் எவ்வளவு
மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

1 சாமுவேல் 12:24

7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர்


ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம்
சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

1 யோவான் 1:7
8 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே
வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

1 யோவான் 1:8

25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்: வஞ்சனைக்காரனோ


பொய்களை ஊதுகிறான்.

நீதிமொழிகள் 14:25

44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள்


பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற்
கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம்
அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன்
பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன்
சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

யோவான் 8:44

16 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே


உண்மையைப் பேசுங்கள். உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும்
ஏற்க நியாயந் தீருங்கள்.

சகரியா 8:16

17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும்


அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர்
உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை
அறிவீர்கள்.

யோவான் 14:17

5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும், நீரே என்


இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

சங்கீதம் 25:5

11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே


நடப்பேன், நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை
ஒருமுகப்படுத்தும்.

சங்கீதம் 86:11
27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும்
உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து
உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது
உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

1 யோவான் 2:27

13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு,


விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால்
அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

எபேசியர் 1:13

17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது,


கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.

யோவான் 1:17

18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக்


கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

சங்கீதம் 145:18

You might also like