You are on page 1of 3

பிறக்கும் போது சில குழந்தைகள் அறிவுக்கூர்மைÔ டைய குழந்தைகளாக

பிறப்பது உண்டு. ஆனால் அப்படி பிறந்த அனைத்து குழந்தைகளுமே


பின்னாளில் சாதித்துவிடும் என்பதற்கு உறுதி கூற இயலாது. அதுபோலவே
தான் அறிவுக்கூர்மை அதிகம் இல்லாமல் சராசரியாக பிறக்கும் குழந்தை
பின்னாளில் சாதிக்காது என்பதற்கும் எவரும் உறுதி கூற முடியாது.
 
ஹாய் நண்பர்களே, இவ்வார புனைவாளர் பகுதியில் யாரைப் பற்றி தெரிந்து
கொள்ளவிருக்கிறோம் என்று தெரியுமா? ஆம் தோமஸ் அல்வா எடிசன் தான்
இவ்வார புனைவாளர். ஆரம்ப காலங்களில் ஆசிரியர்களால் தேறாது என
ஒதுக்கப்பட்ட ஒரு மாணவர் தான் எடிசன். ஆனால் பின்னாளில் அவர்
உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவெடுத்தார் என்றால் அதற்கு அவரது
கடும் உழைப்பு தான் காரணம். இதனால் தான் உலகம் இன்றுவரை
“கண்டுபிடிப்புகளின் அரசன்” என வர்ணிக்கிறது இவரை.

எடிசன் பிறப்பு  
பிப்ரவரி 17,1847 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும்
ஜான்சி மேத்தியூஸ் ஆகிய இருவருக்கும் 7 வது மகனாக பிறந்தார் எடிசன்.
இளம் வயதிலேயே ஸ்கார்லெட் எனும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட
எடிசனுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. இதுபோன்ற
பிரச்சனைகளால் அவருக்கு 4 வயதுவரைக்கும் பேச்சும் வரவில்லை.
அப்படிப்பட்ட சூழலிலும் கூட எடிசனுக்கு எந்தவொரு விசயத்தையும் கூர்ந்து
கவனிக்கும் பழக்கமும் அதில் கேள்வி கேட்கும் பழக்கமும்
தொற்றிக்கொண்டது. 

எடிசனின் முதல் ஆராய்ச்சி


பின்னாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான
காப்புரிமையை வைத்திருந்த எடிசன் மேற்கொண்ட முதல் ஆராய்ச்சி
என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதில் எல்லாருக்குமே பெரிய
ஆர்வம் இருக்கும். ஆம் அது நடந்தது அவருடைய 5 ஆம் வயதில். அப்போது
முட்டைகளின் மேல் தாய்க்கோழி அமர்ந்து இருப்பதையும் பின்னாளில்
கோழிக்குஞ்சு உருவாவதையும் பார்த்த எடிசனுக்கு வந்தது சந்தேகம்.
இதனை தீர்த்துக்கொள்ள சில முட்டைகளின் மேல்  அவரும் அமர
ஆரம்பித்தார். இப்படி, தான் பார்க்கும் ஒவ்வொரு விசயம் குறித்தும் சிந்திக்க
துவங்கினார் எடிசன். 

சில உடல் குறைபாடுகளால் 8 வயதில் தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்


எடிசன். எடிசன் பின்னாளில்  சிறந்த கண்டுபிடிப்பாளராக வருவதற்கு முழு
முதற்காரணம் எடிசனின் அம்மா தான் என்றால் அது மிகை ஆகாது. ஒருநாள்
பள்ளிக்கு சென்றுவிட்டு எடிசன் வடு
ீ திரும்பினார். அப்போது ஆசிரியர்

கொடுத்ததாக ஒரு கடித்தத்தை தனது அம்மாவிடம் கொடுத்தார். அதனை


பிரித்துப்பார்த்த எடிசனின் அம்மாவிற்கு கண்களில் நீர் வழிந்தது. அவர்
தன்னை தேற்றிக்கொண்டு அந்த கடிதத்தை “உங்களது மகன் ஒரு மேதை.
அவன் படிப்பதற்கு இது தகுந்த இடம் அல்ல, மேலும் அவனுக்கு
சொல்லிக்கொடுக்க கூடிய அளவிற்கு இங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள்
இல்லை” என்றார். அதைக் கேட்ட எடிசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதன்பிறகு
பள்ளிக்கு செல்வதை எடிசன் நிறுத்திக்கொண்டார்.அன்று முதல் எடிசனுக்கு
ஆசிரியராகச் செயல்பட்டது அவரின் அம்மாதான். எழுத்து, வாசிப்பு, பேச்சு
என அனைத்தும் அம்மாவிடம் கற்றுக்கொண்டார். தனது தந்தையின்
மூலமாக கிடைத்த புத்தகங்களை வட்டிலேயே
ீ படித்து தனது அறிவை
பெருக்கிக்கொண்டார்.

தனது அம்மா இறந்த பிறகு ஒருமுறை அலமாரியை பார்க்கும் போது தனது


இளமைப்பருவத்தில் ஆசிரியர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில்
உண்மையில் எழுதி இருந்தது இதுதான். அதாவது, உங்களது குழந்தைக்கு
மூளை வளர்ச்சி சரியாக இல்லை ஆகவே அவனை இனிமேல் வகுப்பில்
அனுமதிக்க முடியாது” என எழுதி இருந்தது. இதைப்பார்த்து தான் அவரது

அம்மா கண்ண ீர் வடித்து மாற்றிக்கூறினார் என்பது நினைவுக்கு வந்தது.


ஒருவேளை இந்தக்கடிதத்தில் இருந்தபடியே அவரது அம்மா படித்திருந்தால்
எடிசன் என்ற விஞ்ஞானி அப்போதே முடங்கிப்போயிருப்பார். ஒவ்வொரு
குழந்தைக்கும் ஊக்கம் கொடுக்க இப்படியொரு அம்மா இருந்தால் நிச்சயமாக
எந்தவொரு குழந்தையும் மேதை ஆகும்.

தோல்வியைண்டு துவளாதவர் எடிசன்


எடிசன் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது
அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அதற்காக எத்தனை முறை தோல்வி
அடைந்திருப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? உதாரணத்திற்கு,
மின்விளக்கினை கண்டுபிடித்தாயிற்று, ஆனால் நீண்ட நேரம் நீடித்து
எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்த பொருளில் உருவாக்குவது என்பதில்
பெரிய சிக்கல் உண்டானது. கிட்டத்தட்ட 5000 முறை வேறு வேறு
பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார்.
அப்போதும் அவர் ஓயவில்லை, கேட்டால் இதையெல்லாம் நான் தோல்வி
என சொல்ல மாட்டேன். 5000 பொருள்களும் இதற்கு பயன்படாது என்பதை
நான் கண்டறிந்து இருக்கிறேன் என நம்பிக்கையோடு பேசுவார் எடிசன்.
இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையை கண்டுபிடித்தார். 
 
ஒருமுறை எடிசனின் மிகப்பெரிய தொழிற்சாலை தீ விபத்தை சந்தித்தது.
அந்த தருணத்தில் எடிசன் அமைதியாக ஓரமாக உட்கார்ந்துகொண்டு தனது
தொழிற்கூடம் தீயில் எரிவதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.
அதோடு நிற்காமல், அருகே இருந்த அவரது மகனை அழைத்து வட்டில்

இருக்கும் உன் அம்மா மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு வா. இனி
எப்போதும் அவர்களால் இப்படியொரு தீ விபத்தை பார்க்க முடியாது என்றார்.
அதிர்ச்சி அடைந்த அவரது மகன் “அப்பா நமது முழு தொழிற்கூடமும் தீயில்
இரையாகிக்கொண்டு இருக்கிறது, இப்படி சொல்கிறீர்களே என்றார்”. அதற்கு
எடிசன் “ஆமாம் நமது தொழிற்கூடம் தற்போது தீயில் சாம்பலாகிக்கொண்டு
இருக்கிறது. அதோடு சேர்த்து நமது தவறுகளும் சேர்ந்து தான்
சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது. நாம் நாளை மீ ண்டும் துவங்குவோம்”
என்றார். இதுதான் எடிசன். இதனால் தான் அவரால் உலகின் மிகப்பெரிய
கண்டுபிடிப்பாளராக உயர முடிந்தது.
எடிசனும் மின்சார விளக்கு கண்டுபிடிப்பும்
ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி
நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க
ஜனாதிபதி எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும்
மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார்.
அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்
கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வதியில்

பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும்
ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும்
விளக்குகள் அணைக்கப்பட்டன.

ஆம்… நண்பர்களே! நீங்களும் தோல்வியைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.


எடிசனைப் போல்….. அல்ல… அல்ல…. அவரை விட உயர்ந்த நிலையை
அடைய உங்களால் முயற்சித்தால் மட்டுமே முடியும்… காத்திருங்கள்… காலம்
கனிந்து வரும். அடுத்த வரம் மேலும் ஒரு, இவ்வார புனைவாளர் தொகுப்பில்
சந்திப்போம் நண்பர்களே!

You might also like