You are on page 1of 3

சக்சஸ் கோச்சிங் சென்டர் - சித்தனி ( 9677357699 )

[ அரசுப்பணி நாடுவோரின் பயிற்சிப்பட்டறை ]

தமிழ் ( சீறாபுராணம் )

சீறாபுராணம் - உமறுப்புலவர்

# உமறுப்புலவர் பிறந்த ஊர் - கீ ழக்கரை (தூத்துக்குடி மாவட்டம்)

# உமறுப் புலவரின் ஆசிரியர் பெயர் - கடிகை முத்துப் புலவர்

# உமறுப்புலவரின் தந்தையாரின் பெயர் - செய்கு முகம்து அலியார்


( அ ) சேகு முதலியார்

# உமறுப் புலவர் வாழ்ந்த காலம் - 17 ஆம் நூற்றாண்டு

# உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - சீதக்காதி வள்ளல்

# சீதக்காதி வள்ளலின் இயற்பெயர் - அப்துல் காதிர் மரைக்காயர்

# உமறுப் புலவர் எழுதிய நூல் - சீறாப்புராணம்

# சீறாப்புராணம் எழுதுவதற்கு பொருள் உதவி செய்தவர் - சீதக்காதி


வள்ளல்

# சீதக்காதிக்குப்பின் உமறுப்புலவரை ஆதரித்தவர் - அபுல்காசிம்

# நபிகளின் வாழ்க்கை வரலாற்றை இறுதியாக எழுதி முடித்தவர் -


பனு அகமது மரைக்காயர்

# பனு அகமது மரைக்காயர் பாடிய நூல் - சின்ன சீறா

# சின்ன சீறாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 2145 பாடல்கள்

# உமறுப் புலவர் எழுதிய பிற நூல்கள் :

* முதுமொழிமாலை

* சீதக்காதி நொண்டி நாடகம்


# முதுமொழிமாலையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 80
பாடல்கள்

# உமறுப் புலவரின் சிறப்பு பெயர் - இஸ்லாமிய கம்பர்

# எட்டயபுரத்தின் அரசவை புலவர் - உமறுப் புலவர்

# நபிகள் நாயகத்தின் மீ து முதுமொழிமாலை என்ற நூலையும்


இயற்றியுள்ளார்.

# உமறுப் புலவரின் சீறாப்புராணம் நூல் முற்றும் முன்னமே சீதக்காதி


மறைந்தார். அவருக்குப் பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால்
சீறாப்புராணம் நிறைவுற்றது.

சீறாப்புராணம் நூல் குறிப்பு :

# சீறா என்பதன் பொருள் - வாழ்க்கை

# புராணம் என்பதன் பொருள் - வரலாறு

# சீறாப்புராணம் எத்தனை பாடல்களைக் கொண்டது - 5027


விருத்தப்பாக்கள்

# சீறாப்புராணம் மூன்று காண்டங்களை உடையது.

* விலாதத்துக் காண்டம் - பிறப்பியற் காண்டம்

* நுபுவ்வத்துக் காண்டம் - செம்பொருட் காண்டம்

* ஹிஜ்ரத்துக் காண்டம் - செலவியர் காண்டம்

# சீறாப்புராணம் 92 படலங்களை கொண்டது.

# இலங்கை தமிழ் முஸ்லிம்களின் முக்கிய நூல் - சீறாப்புராணம்

# உமறுப்புலவரின் மகன் கவிக்களஞ்சியப் புலவர்.

# சீறாப்புராணம் "சிந்தை அள்ளும் சீறா" என்று போற்றப்படுகிறது.

# அமுத கவிராசர் என்று அழைக்கப்படுபவர் - உமறுப்புலவர்


1. விலாதத்துக் காண்டம் - 24 படலங்கள் உள்ளன.

2. நுபுவ்வத்துக் காண்டம் - 21 படலங்கள் உள்ளன.

3. ஹிஜ்றத்துக் காண்டம் - 47 படலங்கள் உள்ளன.

# சீறாப்புராணம் உரையாசிரியர் - மகாமதி சதாவதானி


(செய்குதம்பிப்பாவலர் )

# சொற்பொருள் : வரை - மலை ; கம்பலை - பேரொளி ; புடவி - உலகம்


; வாரணம் - யானை ; பூரணம் - நிறைவு ; நல்கல் - அளித்தல் ; வதுவை
- திருமணம் ; கோன் - அரசன் ; மறுவிலா - குற்றமில்லாத ; பொறிகள் -
ஐம்புலன் ; தீன் - மார்க்கம் ; தென்டிரை - தெள்ளிய நீர் அலை ; விண்டு
- திறந்து ; மண்டிய - நிறைந்த ; காய்ந்த - சிறந்த

# இலக்கண குறிப்பு :

* மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த - பெயரெச்சங்கள்

* இடன் - ஈற்றுப் போலி

* பெரும்புகழ், தெண்டிரை - பண்புத் தொகைகள்

* பொன்நகர் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்


தொக்க தொகை

* மாநகர், உறுபகை - உரிச்சொல் தொடர்கள்

* ஐந்தும் - முற்றும்மை

* தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் - எண்ணும்மைகள்

You might also like