You are on page 1of 1

23.10.

2021 இல் நடைபெறவுள்ள அலோர் காஜா


தொகுதி கங்கிரஸ் பேராளர் மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்கள்

1. ம.இ.கா தேசியத் தலைவர் மதிப்புமிகு டான்ஸ்ரீ ச. விக்கேஸ்வரன் அவர்கள் தொடர்நது


் நம்
சமுதாயத்தைச் சிறந்த முறையில் வழி நடத்திட தொகுதி காங்கிரஸ் தனது முழுமையான
ஒத்துழைப்பையும் பிளவுபடாத ஆதரவையும் வழங்கிவரும்.
2. ம.இ.கா தேசியத் துணைதலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு.சரவணன் அவர்கள் ஏகமனதாக
போட்டியின்றி ம.இ.கா தேசிய துணைதலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு
கேட்டுக்கொள்கிறது.
3. மலாக்கா மாநிலம் துரித வளர்ச்சி பெறவும், இம்மாநிலத்தில் வாழும் பல இன மக்கள்
ஒற்றுமையோடு வாழவும் மாநில முதல்வர் எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அலோர்
காஜா தொகுதிக் காங்கிரஸ் தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வரும்.
4. அலோர் காஜா நகராண்மைக் கழகத்தில்; தற்போது ஒருவர் மட்டுமே ம.இ.கா வின் பிரதிநிதியாக
இருந்து வருகின்றார். இதுவும் மஸ்ஜிட் தானா தொகுதி மற்றும் அலோர் காஜா தொகுதியும் 2
ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி பதவி வகித்து வருகின்றனர். நமது பிரச்சனைகளைக்
களைவதற்கு நிரந்தரமாக ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் இருவர் ம.இ.கா பிரதிநிதியாக அலோர்
காஜா நகராண்மைக் கழகத்தில் நியமிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தொடர்ந்து மாவட்ட மன்ற தலைவரை சந்தித்து நமது இந்தியர்களின் வியாபார லைசின்ஸ், பதவி
உயர்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றைப் பற்றி கேட்டுக் கொண்டோம்.
5. மலாக்கா மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணும்

பொருட்டு ‘ pegawai seranta’ என அழைக்கப்படும் பொது அதிகாரிகளை அல்லது சமூக நல


உதவியாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவர் வீதம் நியமிக்க வேண்டும் என மாநில அரசை
இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
6. மலாக்கா மாநிலத்தில் மாநில அரசின்கீழ் இயங்கும் துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படும் சமயத்தில்;
தகுதியுள்ள இந்தியர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்
கொள்கிறது.
7. மலாக்கா மாநிலத்தில் இருக்கும் ஆலயம் மற்றும் இந்தியர் சம்பந்தப்பட்ட பொது இடங்களை
மேம்படுத்த / சீரமைக்க மாவட்ட அலுவலகம் குறிப்பிட்ட நிதியினை ஒதுக்க வேண்டும் என
இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

You might also like