You are on page 1of 2

மலேசிய இந்துதர்ம மாமன்றம், ஸ்ரீ கணேச கோட்ட

சிலாங்கூர் மாநிலத்தின் தலைவர் உரை

அனைவருக்கும் வணக்கம். இன்பமே சூழ்க


எல்லாரும் வாழ்க. எனது இனிய புத்தாண்டு
வாழ்த்துக்களும் மற்றும் பொங்கல் தின
வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வருடமும் ‌ நடைபெறவிற்க்கும் நமது


அருள் நிலையத்தின் ஆண்டு பொது கூட்டம்
இவ்வாண்டும் நடைபெறவுள்ளது. ஆகவே
அனைத்து அருள் நிலையத்தின் தலைவர்கள்,
துணைத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும்
அனைத்து பொறுப்பாளர்கள் இனைந்து தங்களின் பொது கூட்டத்தை சிறப்பாக நடத்த
வேண்டுகிறேன்‌.

நமது மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஸ்ரீ கணேச கோட்ட சிலாங்கூர் மாநிலம்


அனைத்து அருள் நிலையங்கள் வளர்ச்சி காண வேண்டும். இவ்வாண்டு 2023 ஆம்
ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது நல்லதொரு மாற்றத்தை அருள் நிலையத்தின்
தலைவர்கள் மற்றும் அருள் நிலையத்தின் பொறுப்பாளர்கள் செயல்படுத்த
வேண்டுகிறேன். முடிந்தவரை அருகில் இருக்கும் ஆலயங்களில், அருகில் இருக்கும்
தமிழ் பள்ளிகளில் நடத்த முயற்சி செய்ய வேண்டும். புதிய இடத்தில் திருப்பணி
மையம் அமைத்து, தேவாரம் வகுப்புக்கள் நடத்த முயற்சி செய்ய வேண்டுகிறேன்.
திருப்பணி மையம் அருள் நிலையமாக மாற்றி‌அமைப்போம்.
இளைஞர்களை இணைத்துக் கொண்டு பல புதிய திட்டங்களை கொண்டு வர
வேண்டும். சில அருள் நிலையங்களில் இளைஞர்களை இனைத்து நன்கு செயல்பட்டு
வருகின்றனர். மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

அருள்நிலையங்கள் தவறாமல் தேசிய, கோட்ட நடவடிக்கைகளில் பங்கு பெறுதல்


வேண்டும். இவ்வாண்டு சில அருள் நிலையங்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்
செயலவையினர்களுக்கான தேர்தல் இடம்பெறுமாயின் அர்ப்பணிப்புடன் நன்கு
திறம்பட செயலாற்றக் கூடியவர்களை குறிப்பாக இளைஞர்களை வாய்ப்பு கொடுக்க
வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாண்டு கோட்டத்தில் பல திட்டங்கள் செயல்படத்தவுள்ளது. நமது ஸ்ரீ கணேச


கோட்டமும் சில முயற்சிகள் எடுத்து கொண்டிருக்கின்றன. பல புதிய திட்டங்களை
கொண்டு வர கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றன. அவையில் ஒன்று நமது
பாராயண விழா, பதிய அருள் ‌ நிலையங்கள், தர்ம‌வேல் திட்டம், கணேச கோட்ட
தேவாரம்‌வகுப்பு நடத்துனர்‌பயிற்சி, இளைஞர் முகாம், மற்றும் பல.

இவ்வாண்டு 2023 ஆம் ஆண்டு அனைத்து அருள் நிலையத்தின் பொதுக் கூட்டங்கள்


சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.

நன்றி,

இக்கன்,

திரு. G.K நடராஜன் கருப்பையா


தேசிய உதவித் தலைவர் & ஸ்ரீ கணேச கோட்ட தலைவர்
மலேசிய இந்துதர்ம மாமன்றம்

You might also like