You are on page 1of 21

CHAPTER MEETING SCRIPT

சேப்டர் வாரச் சந்திப்பின் உரை


(Timings based on chapter of 35 members)
(35 உறுப்பினர்களுக்கானது)

இந்த உரையின் ஒவ்வொரு பகுதியும் நம் சேப்டருக்கு வணிகம் தரக் கூடியது. எதையும் விட வேண்டாம்.

1. 7.45-7.59am: Open Networking


சரியாக 8 மணிக்கு
Good Morning….
( கவுண்ட் டவுன் – 10...9...8...1) (கரவொலி)

தலைவர் : அனைவரும் எழுந்து நின்று, தமிழ் தாயை வாழ்த்தி பாடுவோம்....

நன்றி. அனைவரும் அமர்ந்து கொள்ளவும் . நம் சந்திப்பை இப்போது தொடங்க

இருக்கிறோம்..

8:00 – 8:06 am : அறிமுகம் மற்றும் வரவேற்பு.

தலைவர் : அனைவரையும் எங்கள் சேப்டருக்கு வணக்கத்துடன் வரவேற்கிறேன்.

நேரம் இப்பொழுது மிகச் சரியாக 8 மணி.

உங்களிடம் இருக்கும் அனைத்து மொபைல் போன்களையும் சுவிட்ச் ஆப்

செய்யவும் அல்லது அமைதி நிலையில் வைக்கவும். சந்திப்பைத் துவங்க

இருப்பதால், அனைவரையும் இருக்கைகளில் உட்காருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இன்று வருகை தந்துள்ள பார்வையாளர்களுக்கு நன்றி மற்றும் வணக்கம்.

நான் உங்கள் பெயர்களை படிக்கும்போது, தயவு செய்து எழுந்து நில்லுங்கள்.


1.
2.
Read out
BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - Visitor
2021 List
-1-
3.

இவர்களை அழைத்து வந்த உறுப்பினர்களும்எழுந்து நிற்கவும்.


இவர்களைக் கை தட்டி பாராட்டுவோம். .

பார்வையாளர்களே .....நீங்கள் எங்களுடன் இந்த இனிய காலைப் பொழுதில்

இணைந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த கூட்டத்தின் பின் பகுதியில்

உங்கள் தொழில் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

அதுவரை காத்திருங்கள்.

எங்கள் சேப்டரின் தலைமை அணியினரை அறிமுகப் படுத்தும் நேரம் இது.

என்னுடைய பெயர் _______________________. இந்த சேப்டரின் தலைவராக

என்னுடைய பொறுப்பு வாராவாரம் இந்த சந்திப்பைத் தலைமை தாங்கி, தொழில்

வளர்ச்சிக்காக அருமையாக வடிவமைக்கப்பட்ட BNI யின் நிகழ்ச்சி நிரல் படி இந்த

சந்திப்பை நடத்துவது.

இப்போது நான் அறிமுகம் செய்பவர்கள் எழுந்து நின்று எங்களின் அங்கீகாரத்தை

ஏற்றுக் கொள்ளலாம்.

இவர் திரு __________________________ BNI யின் இயக்குனர்.‌

இவர் திரு ___________________________________.எங்கள் சேப்டரின் ஆலோசனை

இயக்குனர்.

எங்கள் சேப்டரின் துணைத் தலைவர் திரு. ____________________. அவருக்கு 2

முக்கிய பொறுப்புகள் உள்ளன.

துணைத்தலைவர் : வணக்கம்.. என் பெயர்_______________________.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-2-
என் பொறுப்புகளில் முதலாவது, ஒரு நல்ல நிறுவனத்தைப் போல் இயங்கும் எங்கள்

சேப்டர், அதன் இலக்குகளை நோக்கிய வெற்றிப் பயணத்தில் செல்கிறதா என்று

கண்காணிப்பது.

இரண்டாவது, எங்கள் சேப்டரின் முன்னேற்றக் குழுவிற்கு தலைமையேற்பது.

புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வது,

உறுப்பினர்களிடையே தோன்றும் வேறுபாடுகளை களைந்து, நல்லுறவை

ஏற்படுத்துவது,

BNI யின் கோட்பாடுகளின் படி செயல்முறைகளை நிர்வகிப்பது, முக்கியமாக

தொடர்ந்த வளர்ச்சிக்குத் திட்டமிடுவது

ஆகியவை முன்னேற்றக் குழுவின் முக்கிய பொறுப்புகள்.

இப்போது எங்கள் சேப்டரின் முன்னேற்றக் குழுவினரை அறிமுகம் செய்வதில்

பெருமை கொள்கிறேன்
(கலந்து கொள்பவர்களின் பெயர்களை மட்டும் அறிவிக்கவும்)

1. வளர்ச்சி ஒருங்கிணைப்பாளராக திரு. _____________________

2. பங்கேற்பு ஒருங்கிணைப்பாளராக திரு. ___________________

3. புதிய உறுப்பினர் தேர்வு ஒருங்கிணைப்பாளராக திரு. _____

4. பரிந்துரை மதிப்பு மற்றும் தர ஒருங்கிணைப்பாளராக திரு

5. நெறிப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளராக திரு. __________

நன்றி.

தலைவர் : இவர் எங்கள் அணியின் செயலர் மற்றும் பொருளாளர்

திரு____________________________

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-3-
செயலாளர் : என் பெயர் __________________. என்னுடைய பணி, எங்கள் அணியின்

நிதியையும், வரவு செலவையும் நிர்வகிப்பது.

இவர் எங்கள் அணியின் தலைமை விருந்தினர் நிர்வாகி

திரு._____________________________.

வணக்கம்....விருந்தினர் நிர்வாக குழுவினரை அறிமுகம் செய்கிறேன். (அரங்கில்

இருப்பவர்களின் பெயர்களை மட்டும் படிக்கவும்)

1.
2.
3.
4.
5.

தலைவர் : இப்போது எங்கள் அணி சிறப்பாக செயல்பட உதவும் முக்கிய

பொறுப்பாளர்களை அறிமுகம் செய்கிறேன்.

1. எங்கள் கல்விப் பொறுப்பாளர், திரு________________________

இவரது பணி ஒவ்வொரு வாரமும் 5 நிமிட கல்விப் பொழுதின் வழியே வணிகம்

மற்றும் தொடர்புறுதல் திறமையை செம்மைப் படுத்துவது.

2. எங்கள் நிகழ்வுப் பொறுப்பாளர், திரு______________________

இவரது பணி BNI யின் அற்புதமான பயிற்சி, வணிகம் மற்றும் சமூக நிகழ்வுகளை

ஒருங்கிணைப்பது.

3. எங்கள் நேருக்கு நேர் பொறுப்பாளர் திரு.___________

இவரது பணி, BNI-ன் மிக முக்கிய செயலான நேருக்கு-நேர் சந்திப்புகளை

ஊக்குவிப்பது.

4. எங்கள் BNI கனெக்ட் பொறுப்பாளர் திரு________.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-4-
இவரது பணி BNI connect செயலியைப் பற்றிய தெளிவையும் புரிதலையும்

உருவாக்குவது.

5. எங்கள் சாதனை விளக்கு பொறுப்பாளர் திரு_______.________

இவரது பணி எங்கள் அணியினரின் பங்கேற்பையும் வணிகத்தையும்

மதிப்பெண்கள் அளித்து மேலும் உயர்த்துவது.

6. எங்கள் வணிகச் செயற்குழு பொறுப்பாளர் திரு__________ இவரது பணி

வணிகச் செயற்குழுக்களை சீராகச் செயல்பட வைப்பது.

7. எங்கள் விளக்கப் பேருரைப் பொறுப்பாளர் திரு_______._______

இவரது பணி ஒவ்வொரு வாரமும் சிறப்பான 8 நிமிட விளக்கவுரைகள் நிகழ

உதவி புரிவது.

8. எங்கள் வாரச் சிற்றுரைப் பொறுப்பாளர் திரு_______._______

இவரது பணி ஒவ்வொரு வாரமும் சிறப்பான 30 வினாடி வாரச் சிற்றுரைகள் நிகழ

உதவி புரிவது.

9. எங்கள் நிதி பொறுப்பாளர் திரு_______._______

இவர், அனைவரிடமிருந்து வாரச் சந்திப்பிற்கான கட்டணங்களைப் பெற்று நிதி

நிலையைச் சீராக வைத்திருப்பார்.

10. எங்கள் நேர நிர்வாகி திரு_______.________ இவரது பணி அனைவரும்

அளிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே பேச உதவி புரிவது.

11. எங்கள் அயல் வணிகப் பொறுப்பாளர் திரு_______________ இவரது பணி பிற

நகரங்கள் மற்றும் நாடுகளில் உள்ள BNI சேப்டர்களுடன் தொடர்பு கொண்டு

நம் உறுப்பினர்களின் வணிகம் வளர உதவி புரிவது.

12. எங்கள் BNI நிபுணர் திரு____________________. இவர் பார்வையாளர்களிடம்

சுவையாகப் பேசி BNI பற்றிய தெளிவான புரிதலை உருவாகுவதில் நிபுணர்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-5-
எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதலையும் கடைபிடிக்க வேண்டிய

நெறிமுறைகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் எங்களின் இயக்குனர் திரு

______________________அவர்களுக்கு நன்றி.

3. 8.07-8.08am: PURPOSE AND OVERVIEW OF BNI


BNI யின் தேவையும் விளக்கமும்

தலைவர் : BNI ல் உறுப்பினராக இருக்கும்போது இந்த சேப்டரில் உள்ள அனைத்து

உறுப்பினர்களும் உங்களுக்காக விற்பனை பிரதிநிதியாக பணியாற்றுகிறார்கள்.

அனைத்து உறுப்பினர்களின் BUSINESS CARD இருக்கும் இந்த FILE ஐ

உறுப்பினர்கள் எப்போதும் தங்களிடம் வைத்திருப்பார்கள். ஒரு

CLIENT,ASSOCIATE, COLLEAGUE அல்லது நண்பரிடம் உறுப்பினர் பேசும்போது,

அவர்கள் தங்களுக்கான தேவையை சொல்லும்போது, அந்த தேவையை

நிறைவேற்றக்கூடிய ஒருவருடைய BUSINESS CARD இதில் இருந்தால் அதை

அவரிடம் கொடுத்து, அவரை பரிந்துரை செய்வார். இது phone directory யிலிருந்து

தெரியாத ஒருவரை தேர்ந்தெடுத்து வியாபாரம் செய்வதை விட சிறந்தது அல்லவா?

தலைவர் : BNI தான் இந்த மாதிரியான அமைப்புகளில் ஆக சிறந்தது. தற்போது

_______________உறுப்பினர்களுடன் _____________ சேப்டர்களைக் கொண்டு 74

நாடுகளில் BNI சிறப்பாக இயங்குகிறது.

உலகம் முழுதும் உள்ள BNI உறுப்பினர்கள் கடந்த 12 மாதங்களில் ___________கோடி

பரிந்துரைகளைத் தங்களுக்குள் அளித்து, ரூ ____________________________

கோடிகளுக்கு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.. இது உலகத்தின்

புள்ளிவிவரம்.

அதேபோல் கடந்த ஒரு வருடத்தில், இந்தியாவில் 98 நகரங்களில் _______

சேப்டர்களில் _____________________ உறுப்பினர்கள் BNI ல் உள்ளோம்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-6-
எங்களுக்குள் கடந்த ஒரு வருடத்தில் இந்தியா முழுவதுமாக _____________ லட்சம்

பரிந்துரைகள் மூலம் ரூ ______________கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

உறுப்பினர்களே.... நீங்கள் இன்று உட்கார்ந்திருக்கும் இந்த இருக்கையின் மதிப்பு

சராசரியாக வருடத்திற்கு ரூ _________லட்சம்.

தலைவர் : BNI-யின் அடிப்படை தத்துவமே – கொடுப்போம்......

ஜெயிப்போம் என்பது தான்.

நான் என் சேப்டர் உறுப்பினர்களின் வர்த்தகத்தை மேம்படுத்த உதவினால், அவர்கள்

என் வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்த உதவுவார்கள். நாம் அனைவருமே ஜெயிக்க

முடியும். நாம் எவ்வளவு தருகிறோமோ, அதை விட அதிகமாகவே

திரும்ப வரும்.

BNI __________________ சேப்டர் _____________ உறுப்பினர்களையும், அவர்களுக்கு

மாதம் ______________________ லட்சம் வர்த்தகத்தையும் அடைவதை இலக்காக

கொண்டிருக்கிறோம்.

BNI, 7 விழுமியங்களால் கட்டமைக்கப்பட்டது.

கொடுப்போம் ஜெயிப்போம்.

நட்புறவை வளர்ப்போம்.

ஒவ்வொரு நாளும் கற்போம்.

மரபுடன் புதுமையும் ஏற்போம்.

நேர்மறையாக சிந்திப்போம்.

விளைவுகளுக்குப் பொறுப்பேற்போம்.

சாதனைகளைப் போற்றுவோம்.

இவை அனைத்தையும், இன்றைய சந்திப்பில் பரவலாகக் காணலாம்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-7-
4. 8.09-8.13am: EDUCATION SLOT / கல்விப் பொழுது

தலைவர் : எங்கள் கல்விப் பொறுப்பாளரிடம் அவையை ஒப்படைக்கிறேன்.

கல்விப் பொறுப்பாளர் : நண்பர்களே... ஒவ்வொரு நாளும் கற்பது நம்

விழுமியங்களில் ஒன்று. இன்று, திரு __________________ அவர்களை, நம் வணிகத்

திறனை வளர்க்கும் சிந்தனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

(அவருடைய உரை முடிந்தவுடன்..)

தலைவர் : உங்களின் உரை மிகவும் பயனுள்ளதாகவும் ஆர்வம் ஊட்டுவதாகவும்

இருந்தது.

5. 8.14-8.15am: ANNOUNCE NETWORK LEADERS | சாதனையாளர்


அறிவிப்பு:

தலைவர் – வணிகத் தொடர்பின் சாதனையாளர்களை அறிவித்தல்.


(வணிகத் தொடர்பின் சாதனையாளர்களை அறிவிக்கும் நேரம். – சாதனைபற்றிய மனம் திறந்த

பாராட்டுக்களுடன், அவர்களின் சிறப்பு பற்றிய பாராட்டுரைகளையும் வழங்கலாம்.)

தலைவர் : நண்பர்களே.... இப்போது BNI யின் முக்கிய விழுமியங்களான,

கொடுப்போம் ஜெயிப்போம் மற்றும் சாதனைகளைப் போற்றுவோம் ஆகிய

இரண்டையும் செயலில் பார்க்கலாம். பொதுவாக ஒரு தொழில் அதிபருக்கு

பாராட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், BNI யில் “கொடுப்பவர்களை”

தொடர்ந்து அங்கீகரிக்கிறோம். அதிக அளவில் பார்வையாளர்களை பங்கேற்கச்

செய்தவரையும், பரிந்துரைகளை கொடுத்தவரையும், வணிகத் தொடர்பின் சாதனைத்

தலைவர் என்று சான்றிதழ் வழங்கி கெளரவிக்கிறோம்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-8-
அதிக அளவில் பார்வையாளர்களைப் பங்கு பெறச் செய்த திரு ________________

அவர்களுக்கு சாதனையாளர் விருதை வழங்குகிறோம்.

மிக அதிக அளவில் நம் உறுப்பினர்களுக்கு வணிகம் தந்த திரு ________________

அவர்களுக்கு சாதனையாளர் விருதை வழங்குகிறோம்.

மிக அதிக அளவில் உறுப்பினர்களுக்கு பரிந்துரைகளைத் தந்த திரு

________________ அவர்களுக்கு சாதனையாளர் விருதை வழங்குகிறோம்.

சாதனையாளர்கள் அனைவருக்கும் அவர்களின் பங்களிப்பிற்காக மீண்டும் ஒரு

நன்றி.

மாதத்தின் 2 வது சந்திப்பிலிருந்து மாதத்தின் இறுதி சந்திப்பு வரை

கடந்த மாதத்தில் சிறப்பான சாதனையைப் புரிந்தவர்கள் :

மிக அதிக அளவு வணிகம் தந்தவர் ______________________

மிக அதிக அளவு பரிந்துரைகள் தந்தவர் ______________________

மிக அதிக அளவு பார்வையாளர்களை அழைத்து வந்தவர் _________________

7. 8.17-8.20am: WELCOME NEW MEMBERS TO BNI.| புதிய மற்றும் புதுப்பிக்கும்

உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

தலைவர் : எங்கள் முன்னேற்றக் குழு _____ புதிய உறுப்பினரை (உறுப்பினர்களை)

சேர்த்துக் கொள்ள தேர்வு செய்துள்ளது, என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்

கொள்கிறேன்.

திரு___________________ அவர்களை __________________ துறையின் உறுப்பினராக

வரவேற்கிறேன்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

-9-
அவரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை அளிக்குமாறு அவரை இந்த சாப்டருக்கு

அறிமுகம் செய்திருக்கிற திரு_________ அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய உறுப்பினர் திரு____________________________ அவர்களை இந்த மேடைக்கு

முன்னால் வருமாறு அழைக்கிறேன்.

நான் இப்போது BNI யின் கோட்பாடுகளை அறிவிக்கப் போகிறேன். ஒவ்வொரு

வாக்கியத்தின் இறுதியிலும் "ஆம் ஒப்புக்கொள்கிறேன்" என்று நீங்கள் கூற

வேண்டும்.

1. நீங்கள் உங்கள் பொருட்களையோ அல்லது சேவையையோ ஏற்கனவே

ஒப்புக்கொண்ட விலையிலும் சரியான தரத்திலும் தொடர்ந்து வழங்குவேன் என்று

ஒப்புக் கொள்கிறீர்களா?

2. இந்த சாப்டரின் உறுப்பினர்களிடமும், அவர்கள் பரிந்துரைத்தவர்களிடமும்

நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்வேன் என்று ஒப்புக்

கொள்கிறீர்களா?

3. இந்த சாப்டரின் உறுப்பினர்களிடமும், அவர்கள் பரிந்துரைத்தவர்களிடமும்

நல்லுறவையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வேன் என்று ஒப்புக்

கொள்கிறீர்களா?

4. எனக்கு பரிந்துரைக்கப் பட்டவர்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ளும்

பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?

5. என் தொழில் தர்மத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வேன் என்று ஒப்புக்

கொள்கிறீர்களா?

இந்தச் சாப்டரின் உறுப்பினர்களிடம் நேர்மறையான மற்றும் ஒத்துழைப்பு நல்கும்

மனப்பான்மையுடன் நடந்து கொள்வேன் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?

இப்போது எல்லா உறுப்பினர்களையும் எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 10 -
இன்று நம் சேப்டர் உறுப்பினராக இணைந்துள்ள திரு____________________

பற்றியும், அவரது தொழிலைப் பற்றியும் புரிந்து கொண்டு, BNI யின்

கோட்பாடுகளின் படியும், நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும், அவருடைய

தொழில் வளர உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளிக்கிறீர்களா ?

புதிய உறுப்பினரை நோக்கி...

BNI சேப்டருக்கு உங்களை வரவேற்கிறேன். எங்கள் நெறிப்படுத்துதல்

ஒருங்கிணைப்பாளர் திரு_______________________ உங்களுக்கு BNI யின்


கோட்பாடுகளையும், செயல்முறைகளையும் விளங்க வைக்க ஒரு நெறியாளரை

நியமிப்பார். இன்றைய சந்திப்பு முடிந்தவுடன் நாம் இருவரும் தனியே

உரையாடலாம். நன்றி. நீங்கள் உங்கள் இருக்கைக்குத் திரும்பலாம்.

8. 8.21-8.40am: WEEKLY PRESENTATIONS | வாரச் சிற்றுரை (35

உறுப்பினர்களுக்கானது)

தலைவர் : நான் ஒவ்வொரு உறுப்பினரையும் அழைக்கும்போது, அவர்கள் தங்களை

அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் வாரச் சிற்றுரையை வழங்குமாறு கேட்டுக்

கொள்கிறேன்.

உறுப்பினர்கள் அனைவருக்கும் - தங்கள் சிற்றுரையில் இந்த ஐந்து விவரங்களும்

இருக்கவேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.-

உங்கள் பெயர்,

உங்கள் நிறுவனத்தின் பெயர்,

நீங்கள் என்ன பொருள் அல்லது சேவையை அளிக்கிறீர்கள், உங்களுக்கு மிகச்

சரியாக தேவைப்படும் பரிந்துரை எது, உங்களைப் பரிந்துரைக்க முக்கிய காரணம்?

பார்வையாளர்களே..., தற்போது நீங்கள் அமர்ந்தே இருங்கள். உறுப்பினர்கள் தங்கள்

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 11 -
சிற்றுரையை முடித்த பிறகு நீங்கள் யார் என்பதையும், என்ன செய்கிறீர்கள்

என்பதையும் சுருக்கமாக சொல்லி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் அனைவரிடமும் இந்த சாப்டரின் உறுப்பினர் பட்டியலோ அல்லது

குறிப்பேடோ இருந்தால். அதில் உறுப்பினர்கள் கேட்கும் பரிந்துரைகளை குறித்துக்

கொள்ளுங்கள்.

இன்றைய சந்திப்பின் சிறந்த சிற்றுரைகளைத் தேர்வு செய்யும் நடுவராக

திரு___________________________ இருப்பார்.

இன்றைய சந்திப்பின் சிற்றுரைப் புதிர் கேள்வியாளராக

திரு___________________________ இருப்பார்.

(உறுப்பினர் பட்டியல் வரிசைப்படி, உறுப்பினர் அல்லது பிரதிநிதியின் பெயர் சொல்லி


அழைக்க வேண்டும்)

9. 8.41-8.43am: Visitor Introductions | பார்வையாளர் அறிமுகம்

தலைவர் : பார்வையாளர்களே... இது உங்கள் நேரம். திரையில் கேட்கப்பட்டுள்ள

விவரங்களை சொல்லி 10-15 வினாடிகளில் உங்களை அறிமுகம் செய்து

கொள்ளுங்கள்.

பார்வையாளர்கள் அறிமுகத்திற்குப் பின்...

பார்வையாளர்களே... உங்கள் அறிமுகம் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி.

இப்படிப்பட்ட ஒரு இடத்தில், இத்தனை பேர் முன்னால் நீங்கள் தைரியமாக பேசியது

பயனுள்ளதாக இருந்தது. பாராட்டத் தக்கது. மீண்டும் நன்றி.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 12 -
நீங்கள் எங்களுடன் இன்று இங்கிருந்தது மிக்க மகிழ்ச்சி. இந்த கூட்டத்தின்

பிற்பகுதியில் நீங்கள் எப்படி உங்கள் வணிக போட்டியாளரை இந்த சேப்டருக்குள்

வர விடாமல் தடுக்க முடியும் என்பது குறித்து உங்களுக்கு விளக்கப்படும்.

நீங்கள் BNI ல் சேர்வது குறித்த முடிவை எடுக்கும்படி உங்களை கேட்போம்.

நிகழ்ச்சியின் அடுத்த பகுதியை நடத்துமாறு துணைத்தலைவரை

கேட்டுக்கொள்கிறேன்.

10. 8.44-8.45am: VICE PRESIDENT’S REPORT | துணைத்தலைவர் அறிக்கை.

துணைத்தலைவர்: துணைத்தலைவராக என்னுடைய கடமைகளில் ஒன்று....எங்கள்

சேப்டர், அதன் இலக்குகளை நோக்கிய வெற்றிப் பயணத்தில் செல்கிறதா என்று

கண்காணிப்பது. இதோ எங்கள் சாதனைகளில் சில :

தொடங்கிய நாள் முதல் இன்று வரையில் எங்கள் சாப்டரில் ____________

பரிந்துரைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த பரிந்துரைகளினால் இன்று வரை_________________ ரூபாய்களுக்கு வணிகம்

செய்து இருக்கிறோம்.

சராசரியாக ஒரு உறுப்பினருக்கு கிடைத்த வணிகம்____________ரூபாய்.

சராசரியாக ஒரு பரிந்துரையின் மதிப்பு ___________ரூபாய்.

BNI சந்திப்பில் பார்வையாளர்கள் தான் மிகமிக முக்கியமானவர்கள்.

இதுவரை ________பார்வையாளர்கள் எங்கள் சாப்டரில் பங்கேற்று இருக்கிறார்கள்.

இன்று ______ பேர் பங்கேற்று இருக்கிறீர்கள்.

கடந்த மாதம்________ பார்வையாளர்கள் பங்கேற்றனர். ________பரிந்துரைகள்

வழங்கப்பட்டன.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 13 -
பார்வையாளர்கள் தான் இந்த சந்திப்பு இவ்வளவு உற்சாகமாக நடைபெறுவதற்கும்,

எங்களின் வணிக வளர்ச்சிக்கும் காரணமானவர்கள் என்று நாங்கள் புரிந்து கொண்டு

இருப்பதனால் இந்த மாதம் ______பார்வையாளர்களை பங்கேற்கச் செய்ய

திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் சாப்டர் நான் சொல்லப் போகும் 5 வகை வணிகர்களுக்கு பரிந்துரைகள் தர

தயாராக இருக்கிறோம்.
1.
2.
3.
4.
5.
வரும் வாரங்களில் இந்த வகை பார்வையாளர்களை பங்கேற்க செய்யுமாறு

அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

11. 8.46-8.47am: MEMBERSHIP COMMITTEE REPORT: முன்னேற்றக் குழு


அறிக்கை.

இப்போது எங்கள்___________ ஒருங்கிணைப்பாளரை ஒரு செயல் அறிக்கையை

வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

______________________ ஒருங்கிணைப்பாளர் :
(ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வழங்கிய பின் )

நன்றி.

துணைத்தலைவர் : இறுதியாக இந்த வார BNI வரைமுறை:


(19 வரைமுறைகளில் ஒன்றைத் தேர்வு செய்து படிக்கவும்)

இப்போது, விளக்கவுரை பற்றிய அறிக்கையை வழங்க எங்கள் செயலாளரை

அழைக்கிறேன்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 14 -
13. 8.48-8.49am: SECRETARY / TREASURER: | செயலாளர் அறிக்கை.

செயலாளர் : அடுத்த ஆறு வாரங்களுக்கு எட்டு நிமிட விளக்கவுரை வழங்கும்

உறுப்பினர்கள் :
No. Date Name
1. _____________ _______________________and_________________________
2. _____________ _______________________and_________________________
3. _____________ _______________________and_________________________
4. _____________ _______________________and_________________________
5. _____________ _______________________and_________________________
6. _____________ _______________________and_________________________

நீங்கள் பேசும் வாரத்திற்கு முன்பு உங்களைப் பற்றிய அறிமுக குறிப்பையும்

நினைவுப் பரிசுகளையும் மறக்காமல் கொண்டு வர வேண்டுகிறேன்.

அடுத்த வாரப் பேச்சாளர்களான திரு._________________ யும்,

திரு._________________ யும், எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எந்த வகையான பார்வையாளர்கள் வந்தால் சரியாக இருக்கும் என்பதை

உறுப்பினர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

13. 8.50-9.07am SPEAKER GIVES THE FEATURE PRESENTATION | உறுப்பினர்


விளக்கவுரைகள்

இன்றைய முதல் விளக்கவுரை வழங்க இருப்பவர்_____________.


(அவரை சிறப்பாக அறிமுகப்படுத்தி, பெரும் கரவொலியுடன் அவரை அழைக்கவும். 2, 4 மற்றும் 8 நிமிடங்கள்
நிறைவடையும் போது மணி ஒலித்து தெரியப்படுத்துங்கள்)

இன்றைய இரண்டாவது விளக்கவுரை வழங்க இருப்பவர்_____________.


(அவரை சிறப்பாக அறிமுகப்படுத்தி, பெரும் கரவொலியுடன் அவரை அழைக்கவும். 2, 4 மற்றும் 8 நிமிடங்கள்
நிறைவடையும் போது மணி ஒலித்து தெரியப்படுத்துங்கள்)

இரண்டு விளக்கவுரைகளும் முடிந்தவுடன்….

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 15 -
நன்றி. நாம் அனைவரும் இந்த இரண்டு உறுப்பினர்களை பற்றி நன்கு அறிந்து

கொண்டோம். வரும் வாரங்களில் அவர்களுக்கு நம்மால் முடிந்த பரிந்துரைகளை

வழங்குவோம்.

14. 9.07-9.19 REFERRALS & TESTIMONIALS | பரிந்துரைகள் நேரம்.

தலைவர் : இப்போது நாம் இந்த சந்திப்பின் முக்கிய பகுதிக்கு வந்துவிட்டோம்.

பார்வையாளர்களே... எங்கள் அடிப்படை தத்துவமான

“கொடுப்போம்...ஜெயிப்போம்” -ஐ செயலில் காணும் நேரம் இது.

பரிந்துரைகள் புதிய வாடிக்கையாளர்களிடம் வணிகம் செய்யும் மகத்தான வாய்ப்பை

வழங்குபவை.

இப்போது எல்லா உறுப்பினர்களும் தாங்கள் வழங்கிய பரிந்துரைகள்,

வணிகத்திற்கான நன்றி அறிவிப்புகள், நிகழ்த்திய 1-2-1 சந்திப்புகள் மற்றும் மற்ற

உறுப்பினருக்கான பாராட்டிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பார்கள்.

உறுப்பினர்களே....ஞாபகமாக, உங்கள் பார்வையாளர்களுக்கு இன்றைய வருகைக்கு

நன்றி தெரிவியுங்கள்.

முதலாவதாக, திரு_______________________

உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

(உறுப்பினர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து BNI உறுப்பினராக அவர்களின் அனுபவத்தையும், அதனால்

அவர்கள் பெற்ற முன்னேற்றத்தைப் பற்றியும் 30 விநாடிகள் உரையை வழங்கச் செய்யுங்கள்)

தலைவர் : இப்போது எங்கள் உறுப்பினர்கள் திரு___________________________

மற்றும் திரு________________________ BNI யில் அவர்களின் சிறந்த அனுபவத்தைப்

பற்றியும் அவர்கள் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பற்றியும் 30 வினாடிகள்

பேசுவார்கள்.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 16 -
இப்போது திரு _______________________________ அவர்களை, இன்றைய சந்திப்பில்

அவருக்கு மிகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றி 1 நிமிடம் பேசுமாறு கேட்டுக்

கொள்கிறேன்.

இப்போது திரு _______________________________ அவர்களை, இன்றைய சந்திப்பில்

அவருக்கு மிகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றி 1 நிமிடம் பேசுமாறு கேட்டுக்

கொள்கிறேன்.

15. 9.20-9.21am REFERRAL REALITY CHECK | பரிந்துரைகள்


நிலைஅறிதல்
( 2 வாரங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 2 பரிந்துரைகளைத் தேர்வு செய்து அவற்றை சரி பார்க்க

வேண்டும்.)

பரிந்துரை மதிப்பு மற்றும் தர ஒருங்கிணைப்பாளர் : இதற்கு முந்தைய வாரங்களில்

வழங்கப்பட்ட 2 பரிந்துரைகளின் தற்போதைய நிலையைப் பற்றி இப்போது அறிந்து

கொள்ளலாம்.

திரு________________________________ உங்களுக்கு ஒரு பரிந்துரையை வழங்கி

இருந்தார். அதில் ....

1) தொடர்பு கொள்ளும் எண் இருந்ததா?

2) உங்கள் அழைப்பை எதிர்பார்த்திருந்தாரா?

3) அது ஒரு வணிகமாக மாறக் கூடுமா?

4) அதன் தற்போதைய நிலை என்ன?

Over to Secretary

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 17 -
அறிக்கை அளிக்க செயலாளரை அழைக்கிறேன்.

16. 9.22-9.24 SECRETARY/TREASURER’S REPORT|செயலாளர் அறிக்கை.

உறுப்பினர் கட்டணம் பற்றிய அறிக்கை:

செயலாளர் : அடுத்த 4 மாதங்களுக்கு புதுப்பிக்க வேண்டியவர்கள் :

உறுப்பினர் புதுப்பிப்பு செய்வதற்கு ஒவ்வொரு உறுப்பினரும் விண்ணப்பிக்க

வேண்டும். அது உறுப்பினர் பொறுப்பாகும். 1 மாதம் முன்னதாகவே உறுப்பினர்

கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

எண் பெயர் புதுப்பிக்கும் நாள் செலுத்த வேண்டிய

நாள்

புதுப்பிக்க இந்த சந்திப்பு முடிந்தவுடன் என்னைத் தொடர்பு கொண்டு ஆன்லைன்

விண்ணப்பத்தைப் பெற்று முன்னேற்றக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்

கொள்கிறேன். முன்னேற்றக் குழு பரிந்துரைத்தால் மட்டுமே, உங்கள் உறுப்பினர்

நிலை புதுப்பிக்கப்படும்.

பார்வையாளர்களே.....

இந்த சேப்டரில் உறுப்பினராக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் விண்ணப்பத்துடன் உறுப்பினர் கட்டணமாக ரூ. 25800/- மற்றும் நுழைவுக்

கட்டணமாக ரூ. 4100/- இரண்டும் சேர்த்து – ரூ. 29900 மற்றும் 18% சேவை வரியாக

ரூ. 5382 ஆக மொத்தம் ரூ. 35282/- செலுத்த வேண்டும். இரண்டாண்டுகளுக்கு ஒரே

நேரத்தில் 59637/- செலுத்தும் போது 10% சேமிப்பு செய்யலாம்.


BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 18 -
இந்த 29900 கட்டணத்துடன் மற்ற வழிகளில் வணிகம் பெறுவதை ஒப்பிட்டு

பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரே ஒரு நாள் ஒரு நாளிதழில் விளம்பரம்

செய்ய, இந்த காலத்தில் 25000 முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகும்.

தனியே பலருக்கு அனுப்பினாலும் அதை அவர்கள் கவனிப்பது குறைவாகவும்,

செலவு கூடியதாகவும் இருக்கும்.

BNI யில் நீங்கள் செய்யும் சிறு முதலீடு, சரியான இலக்குகளை அடைவதாகவும்,

புதிய வணிகத்திற்கு பெரும் வாய்ப்பாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருக்கிறது

என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

உறுப்பினர் கட்டணத்தை காசோலையாகவோ, இணைய வழியிலோ, கிரெடிட் கார்ட்

மூலமாகவோ செலுத்தலாம்.

17. 9.25-9.26 am Vice President Announcement | துணைத்தலைவர் அறிக்கை.

துணைத்தலைவர் அறிவிப்பு :

துணைத்தலைவர்: இப்போது நட்புறவை வளர்ப்பது மற்றும் விளைவுகளுக்குப்

பொறுப்பேற்பது ஆகிய விழுமியங்களை செயலில் காண்போம்.

இன்றைக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள்மொத்தம்_______.

இன்றைக்கு வந்த பார்வையாளர்கள் மொத்தம்______.

இந்த வாரம் நடைபெற்ற வணிகத்தின் மதிப்பு மொத்தம் ரூபாய்________.

கடந்த வாரம் நடந்த 121 சந்திப்புகள் மொத்தம்___________.

இன்றைக்கு வழங்கப்பட்ட பாராட்டுரைகள் மொத்தம்____.

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 19 -
18. 9.26-9.27 am VISITOR ORIENTATION | பார்வையாளர் கலந்துரையாடல்
பற்றிய அறிவிப்பு.

தலைவர்: பார்வையாளர்களே.... இப்போது உங்களுக்கு இரண்டு கேள்விகள்.

1. இன்று காலை இங்கு நீங்கள் கண்டது உங்களுக்கோ உங்கள் நிறுவனத்திற்கோ

வியாபாரம் பெருக வழி வகுக்கும் என்று நினைக்கிறீர்களா?

2. இதற்கு உங்கள் பதில் ஆம் என்றால், வரும் மாதங்கள் ஆண்டுகளில் இந்த சாப்டர்

உறுப்பினர்கள் இடையே நடைபெறும் புதிய வர்த்தகத்தில் நீங்களோ அல்லது

உங்கள் நிறுவனமோ பங்கேற்று உங்களுக்கான பங்கை அதில் பெற உங்களுக்கு

விருப்பம் உள்ளதா?

ஒரு தொழில் அல்லது வியாபார பிரிவில் ஒருவரை மட்டுமே இந்த சாப்டரில்

சேர்த்துக்கொள்வது என்ற கொள்கையின் அடிப்படையில், நீங்கள் விரைவாக

முடிவெடுத்து இணைந்தால், உங்கள் இடத்தை இதில் தக்கவைத்து கொள்வது

மட்டுமின்றி உங்கள் போட்டியாளரையும் இதில் சேர இயலாமல் செய்ய முடியும்.

நீங்கள் காசோலை கொண்டுவரவில்லை என்றால் உங்கள் ஏமாற்றத்தை தவிர்க்க,

விண்ணப்பத்தை நிரப்பி அதை கொடுத்து விடலாம். எங்கள் உறுப்பினர்களில்

ஒருவர் பின்னர் உங்களிடம் கட்டணத்தை வாங்கி நீங்கள் இதில் சேர்வதை

உறுதிசெய்வார்.

பார்வையாளர்களே, உங்களை, எங்கள் விருந்தினர் குழுவுடன் பார்வையாளர்

கலந்துரையாடலுக்கு செல்லும்படி கேட்டுகொள்கிறேன்.

19. 9.28-9.29 BNI ANNOUNCEMENTS, REMINDERS, & SPECIAL REPORTS |


நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு

பயிற்சி நிகழ்வு மற்றும் BNI யின் பிற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் தரும்படி

நிகழ்ச்சி பொறுப்பாளரைக் கேட்டுக்கொள்கிறேன்

BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 20 -
20. 9.29 – 9.30 Door Prize | பரிசளிப்பு

தலைவர்: இன்றைய சந்திப்பின் பரிசுகளை அறிவிக்க துணைத்தலைவரை

அழைக்கிறேன்.

துணைத்தலைவர் : இன்றைக்கு விளக்கப் பேருரை வழங்கிய உறுப்பினர்,

இந்த வாரம் அதிக பரிந்துரைகள் தந்த மற்றும் அதிக பார்வையாளர்களைப்

பங்கேற்கச் செய்த உறுப்பினர்களுக்கு சிறப்புப் பரிசை தந்து கெளரவிப்பார்.

அதிக வணிகம் தந்ததற்கான பரிசைப் பெறுபவர்________________________

அதிக பரிந்துரைகளுக்கான பரிசைப் பெறுபவர் திரு _____________________

அதிக பார்வையாளர்களுக்கான பரிசைப் பெறுபவர் திரு _____________________

சிறந்த சிற்றுரை வழங்கிய உறுப்பினர்(கள்) _______________________________

பார்வையாளர்களுக்கு நன்றி.

Over to _________________ (President)

20. 9.29 – 9.30 CLOSE MEETING | நிறைவு

தலைவர்: இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டு பங்களிப்பைத் தந்த

அனைவருக்கும் மிக்க நன்றி.

நாம் பிரிந்து செல்லும் முன் நினைவில் நிற்கும் ஒரு பொன்மொழியோடு இந்த

சந்திப்பை நிறைவு செய்வோம்.

“_________________________________________________________________________
_”

நன்றி. வணக்கம்.
BNI வாரச் சந்திப்பின் உரை – மார்ச் - 2021

- 21 -

You might also like