You are on page 1of 7

பாகம் 2 / [கேள்விகள் 21 - 25]

[30 புள்ளிகள்] / [பரிந்துரைக்கப்படும் நேரம் : 45 நிமிடம்]

கேள்வி 21

அ.கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

1 அப்பா வரவேற்பறையில் நாளிதல் படித்துக் கொண்டிருக்கிறார். ( 1 புள்ளி )

2 கபிலனை புத்தகத்தை கொண்டு வருமாறு ஆசிரியர் பணித்தார். ( 1 புள்ளி )

3 பறவைகள் வானில் பறந்து சென்றது. ( 1 புள்ளி )

4 சீத்தா பட்டணத்திலிருந்து தினமும் பள்ளியில் வருகிறார். ( 1 புள்ளி )

ஆ. கொடுக்கப்பட்ட மொழியணிகளைப் பூர்த்தி செய்க.

5 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்


_________________________________________________ ( 1 புள்ளி )
6 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
________________________________________ ( 1 புள்ளி )

தெய்வத்துள் வைக்கப் படும்

தோன்றலின் தோன்றாமை நன்று

( 6 புள்ளிகள் )
கேள்வி 22
கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.

தாமான் வாவாசான் குடியிருப்பு இயக்கம்


கூட்டுப் பணி
நாள் : 15.8.2015
இடம் : பொது மண்டபம், தாமான் வாவாசான்
நேரம் : காலை 8.30 மணியிலிருந்து 1.00 வரை

நோக்கம் : சுற்றுப்புறத்தைத் தூய்மைபடுத்துவது


குடியிருப்புப் பகுதியைச் சுற்றி மரங்கள் நடுவது
பொது மண்டபத்திற்குச் சாயம் பூசுவது

இக்கூட்டுபணியைச் சிறப்பாகச் செயல்படுத்திட பொது மக்கள் அனைவரும்


அழைக்கப்படுகின்றனர்.
நன்றி, வணக்கம்.
வாவாசான் செயலவைக் குழுவினர்.

அ. இக்கூட்டுப்பணி எப்பொழுது நடைப்பெறவுள்ளது?

___________________________________________________________________________

( 1 புள்ளி )

ஆ. இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் இரண்டு நடவடிக்கைககளைக் குறிப்பிடுக.

1. ______________________________________________________________________

2. _____________________________________________________________________

( 2 புள்ளி )

இ. இவ்வாறான கூட்டுப்பணியில் ஈடுபடுவதால் மக்களுக்கு கிடைக்கப்பெறும் 2 நன்மைகளை


எழுதுக.

1. _____________________________________________________________________

2. _____________________________________________________________________

( 3 புள்ளிகள்)

( 6 புள்ளிகள் )
கேள்வி 23
கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு
விடை எழுதுக.

1. இச்சிறுவன் எதிர்நோக்கும் சிக்கல் யாது?


___________________________________________________________________________

(1 புள்ளி)

2. இச்சிக்கல் ஏற்பட காரணம் என்ன?

i) ___________________________________________________________________________

(1 புள்ளி)

3. இச்சிக்கல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?


___________________________________________________________________________

(2 புள்ளிகள்)

4. இச்சிக்கலைக் களைய சிறுவன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்


என்ன?
i) ___________________________________________________________________________

ii) ___________________________________________________________________________
(2 புள்ளிகள்)

( 6 புள்ளிகள் )
கேள்வி 24
கீ ழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை வாசித்து , பின்வரும்
வினாக்களுக்கு விடை காண்க

நல்லவர் சொல்லை நாம் கேட்போம்

நல்லவர் சொல்லை நாம் கேட்போம்


நலமாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் சொன்ன வழி நடப்போம்
தாய் நாட்டினையே வாழ வைப்போம்.

பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை


நாம் பார்த்து வாழக் கூடாது
பதுக்கும் மனிதன் இருந்தாலே
அங்கு பறிக்கும் மனிதன் தோன்றிடுவான்.

ஒன்றாய் வாழப் பழகிடுவோம்


நாம் நன்றாய் வாழக் கற்றிடுவோம்
பயமே நமக்குப் பகையென்போம்
உள்ளத் தெளிவே அதற்கு மருந்தென்போம்.

அ. யாருடைய சொல்லை நாம் கேட்க வேண்டும்?

______________________________________________________________________
( 1 புள்ளி )

ஆ. நாம் எப்படிப்பட்ட வாழ்வு வாழப் பழக வேண்டும்?

__________________________________________________________________________
( 1 புள்ளி )

இ. சரியான விடைக்கு ( / ) அடையாளம் இடுக.

பதுக்கும் மனிதன் என்று கவிஞர் யாரைக் குறிப்பிடுகிறார்?

1. திருடர்கள்

2. கருமிகள்
3. பணக்காரர்கள்

( 1 புள்ளி )
ஈ. பசியின் கொடுமை என்பது என்ன?

_________________________________________________________________________
( 2 புள்ளி )

உ. சரியான விடைக்கு ( / ) அடையாளம் இடுக.

தெளிவான வாழ்வு வாழ தடையாக அமைவது யாது?

1. பகைவர்

2. உள்ளம்
3. பயம்

( 1 புள்ளி )

( 6 புள்ளிகள் )
கேள்வி 25

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு


விடை எழுதுக.

நிருபர் : வணக்க,. தாங்கள் நீண்ட காலமாக பெருநடை போட்டியில் ஈடுபட்டு


வருகிறீர்கள். ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் எதிர்நோக்கிய சிரமங்களைச் சொல்ல முடியுமா?

செல்வன் : பல சமயங்களில் நான் எத்தனையோ சிரமங்களை அனுபவித்து


இருக்கிறேன். ஆரம்பக்காலத்தில் போட்டிக்கான பயிற்சிகளைத் தகுந்த
முறையில் செய்ய முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில்
பட்டினியாகக் கூட இருந்து பயிற்சி மேற்கொண்டேன்.

நிருபர் : இந்தக் குறைகளை எவ்வாறு களையலாம் என்று தாங்கள்


கருதுகிறீர்கள்?

செல்வன் : விளையாட்டு துறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள்


வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி விளையாட்டாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கி
வருமானத்திற்கு வழி செய்தால் அவர்கள் விளையாட்டில் முழு
கவனத்தைச் செலுத்தலாம்.

நிருபர் : பெருநடை போட்டியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தாங்கள்


கூறும் ஆலோசனை என்ன?

செல்வன் : முதலாவதாக ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்படப் பழகிக்கொள்ள


வேண்டும். அடுத்ததாக,முறையான பயிற்சிகளைத் தவறாமல் செய்ய
வேண்டும். போட்டிகளில் தோல்வி ஏற்படும்போது துவண்டுவிடாமலும்
வெற்றி கிடைக்கும்போது கர்வம் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.

நிருபர் : நன்றாகக் கூறினீர்கள். சமீபத்தில் தங்களுக்கு மலேசியாவின் சிறந்த


விளையாட்டு வீரர் எனும் விருதை வழங்கினார்கள். அதற்கு எனது
மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி, வணக்கம்

1. திரு. செல்வன் என்பவர் எந்த போட்டியில் கலந்து கொள்பவர் ?


____________________________________________________________________________

(1 புள்ளி)

2. திரு.செல்வன் எதிர்நோக்கிய சிரமம் என்ன ?

i. ___________________________________________________________________
(1 புள்ளி)

3. ’ஆலோசனை’ என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளுக்கு (√) அடையாளமிடுக.

1 அறிவுரை

2 கருத்து

(1 புள்ளி)

4. பெருநடை போட்டியில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டியவையில் இரண்டினை எழுதுக.

ii. ___________________________________________________________________
iii. ___________________________________________________________________
(2 புள்ளி)

5. திரு.செல்வம் சமீபத்தில் பெற்ற விருது யாது?

__________________________________________________________________________

(1 புள்ளி)

( 6 புள்ளிகள் )

You might also like