You are on page 1of 8

முனைவர்A.M.

காசிவிஸ்வநாதன் IAS கல்வி மற்றும் தொண்டு


அறக்கட்டளை
(Dr.A.M.KASIVISWANATHAN IAS EDUCATIONAL AND CHARITABLE TRUST)

சென்னை மாவட்டம், மைலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டித்


தெரு, கதவு எண்.14 என்ற முகவரியில் வசிக்கும் காலஞ்சென்ற
முத்துச்சாமி அவர்களின் குமாரர் முனைவர் A.M.கசிவிஸ்வநாதன் வயது

73 ஆகிய நான் இந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ----------ம் தேதியில்
ஏற்படுத்தியுள்ள அறக்கட்டளை சாசனம் என்னவென்றால்

நான் பொதுமக்கள் கல்வி அறிவு பெறுவதற்கு வறுமை ஒழிப்பிற்கு


,பள்ளிகள் கல்லூரிகள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ,திறமை
வளர்ப்பு பயிற்சி மையங்கள் (SKILL DEVELOPMENT TRAINING CENTRES )
முதலானவற்றை நிறுவுவதற்கும், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி
ஏற்படுத்தி கொடுப்பதற்கு, கிராமங்களில் மருத்துவ முகாம்கள்
நடத்துவதற்கு ,சுய வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு
மக்களிடையே சுற்றுச் சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு,
பள்ளி, கல்லுரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பரிசு மற்றும்
உதவி தொகை வழங்குவதற்கு ஏதுவாக இந்த அறக்கட்டளை (TRUST)
ஆவணத்தை இன்று ஏற்படுத்தி அதில் கீ ழ் கண்ட நிபந்தனைக்குட்பட்டு
நடத்த வேண்டும் என்று தீர்மானம் செய்துள்ளேன் .

1. இந்த அறக்கட்டளை "முனைவர்A.M காசிவிஸ்வநாதன் IAS கல்வி


மற்றும் தொண்டு அறக்கட்டளை" (Dr. A.M.KASIVISWANATHAN IAS
EDUCATIONAL AND CHARITABLE TRUST) என்ற பெயரில்
அழைக்கப்படும்.
2. இந்த அறக்கட்டளை சேலம் மாவட்டம் ,சேலம் வட்டம் ,சின்னனுர்
கிராமம் ,பெருமாள் கோவில் தெரு ,கதவு எண்.1/58, என்ற
முகவரியில் இயங்கும் .
3. இந்த அறக்கட்டளை நடத்தி வரும் போது பின்னாட்களில் அலுவலக
முகவரி மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டால் அறக்கட்டளை
நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனரே ஏகமனதாக முடிவு
எடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம் .
4. இந்த அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர்
A.M.காசிவிஸ்வநாதன் IAS ஆவார். அவரே இந்த அறக்கட்டளையின்
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார் .

1|Page
5. இந்த அறக்கட்டளை (TRUST) ரத்து செய்ய முடியாத ஒன்றாகும் .

6. இந்த அறக்கட்டளையில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்


உட்பட மொத்தம் ஐந்து நபர்கள் அறங்காவலராக, உறுப்பினர்கள்
(TRUSTEES) இருப்பார்கள்.

7. இந்த அறக்கட்டளையில் என்னையும் (நிறுவனர்) எனது மனைவி


V.S.விருந்தா அவர்களையும் தவிர எனது மகன் மருத்துவர் A.K.தருண்
மற்றும் மகள் மருத்துவர் A.K.சவிதா குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே
உறுப்பினர் ஆக (TRUSTEES) தகுதியானவர்கள் ஆவர் .இவர்களைத்
தவிர
வெளிநபர்கள் எவரும் உறுப்பினர் ஆக முடியாது .
8. போர்டு(BOARD):

அறக்கட்டளை போர்டு என்பது ஒரு நிறுவனர் (தலைவர்) மற்றும்


மேலாண்மை இயக்குனர் மற்றும் நான்கு டிரஸ்ட் உறுப்பினர்கள் சேர்த்து
மொத்தம் ஐந்து நபர்களை கொண்டது ஆகும். இவர்கள் மூன்று
மாதத்திற்கு ஒரு முறை போர்டு கூட்டத்தை (BOARD MEETING) கூட்டி
அறக்கட்டளை சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து
தீர்மானத்தை நிறைவேற்றி ,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை போர்டு
மினிட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்ய (MINUTES BOOK OF THE BOARD
MEETING)வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கூட்டம்
,கூடும் இடம், தேதி, கூட்டப் பொருள் ஆகியவை அடங்கிய அறிக்கையை
போர்டின் உறுப்பினர்கள் அனைவருக்கும் 21 தினங்களுக்கு முன்பாக
அறிவிக்க வேண்டும் .அறக்கட்டளையின் தேவையை கருதி போர்டின்
அவசர கூட்டத்தைக் கூட்ட அறக்கட்டளையின் தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குனர்களுக்கு அதிகாரம் உண்டு .அறக்கட்டளை
உறுப்பினர்களை சேர்க்கும், நீக்கும் அதிகாரம் போர்டு அதிகாரத்திற்கு
உட்பட்டது .போர்டு கூட்டத்தை கூட்டி ,தீர்மானம் நிறைவேற்றி ,மினிட்
புத்தகத்தில் பதிவு செய்து ,மினிட் புத்தகத்தில் போர்டு உறுப்பினர்களின்
கையொப்பம் பெற்று ,உறுப்பினர் சேர்த்தல், நீக்கல் முறைப்படி
நடைமுறை படுத்த வேண்டும் .அறக்கட்டளை போர்டின் தலைவராக
அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்
செயல்படுவார்.

2|Page
9. இந்த அறக்கட்டளையின் நிறுவனர் தற்போதைக்கு ரூபாய்10,000
(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மூலதனமாய் முதலீடு செய்துள்ளார் .அது
தவிர இந்த அறக்கட்டளைக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்
எதுவும் இல்லை.

10.தேசிய மயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில்


அறக்கட்டளையின் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, அறக்கட்டளைக்கு
வரும் வருமானங்களை வங்கிகளில் செலுத்தி அறக்கட்டளை தலைவர்
மற்றும் மேலாண்மை இயக்குனர் அவர்கள் வரவு மற்றும் செலவுகளை
முறைப்படி நிர்வகித்து வருவார்கள்.

11. நிர்வாகக் குழு (EXECUTIVE COMMITTEE)

அறக்கட்டளை நிர்வாகக் குழு என்பது ஓரு நிறுவனர் (தலைவர்)


மற்றும் மேலாண்மை இயக்குனர் மற்றும் ஏதாவது இரண்டு டிரஸ்ட்
உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் மூன்று நபர்களை கொண்ட குழு
ஆகும்.இந்த நிர்வாகக் குழுவின் அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை
மூன்றாக இருக்கும் .அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண்மை
இயக்குனர் நிர்வாகக் குழு தலைவராக செயல்படுவார் .இந்த நிர்வாகக்
குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். சுழற்சி
முறையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்
அறக்கட்டளையின் போர்டு விரும்பினால் இந்த குறிப்பிட்ட காலம்
நீடிக்கப்படலாம்.

12.அறக்கட்டளையின் இந்த நிர்வாகக் குழு (EXECUTIVE COMMITTEE) இந்த


அறக்கட்டளையின் சொத்துக்களை அறக்கட்டளையின் நோக்கத்திற்காக
மட்டும் உபயோக படுத்த வேண்டியது.

13. இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் போது 3 மாதத்திற்கு ஒரு முறை


தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நிர்வாகக் குழு கூட்டத்தை
கூட்டி தணிக்கை(AUDIT) செய்யப்பட அறக்கட்டளையின் வரவு செலவு
கணக்குகளை சமர்ப்பித்து குழுவின் அங்கீ காரம் பெற்று கொள்ள
வேண்டியது.

14. அறக்கட்டளையின் மூலதனத்திற்காக நன்கொடைகள் ரொக்கமாகவோ,


பொருளாகவோ,காசோலையாகவோ அசையும் மற்றும் அசைய
சொத்துக்களாகவோ, அறக்க்கட்டளையின் உறுப்பினர்களாக
இணைபவர்களிடமிருந்தோ, அறக்க்கட்டளையின் செயல்பாடுகளால்

3|Page
ஈர்க்கப்பட்டவர்களிடமிருந்தோ, தனி நபர்களிடமிருந்தோ கூட்டு
விலாசத்திலிருந்தோ, கம்பெனிகளிடமிருந்தோ மற்ற நிறுவனங்களிடம்
இருந்தோ, ஏனைய அறக்கட்டளையரிடமிருந்தோ பெறலாம் .அவ்வாறு
பெரும் நிதி உதவி பெரும் தொகைகள் வருமான வரி விலக்கு 80(G ) ன்
கீ ழ் பெற்றுக்கொள்ளப்படும்

15. அறக்கட்டளையின் சொத்துக்களை இந்திய வருமான வரி சட்டம்


அனுமதிக்கும் முதலீடுகளில் முதலீடு செய்யலாம் மற்றும்
அறக்கட்டளையின் வருமானத்தை உயர்த்துவதற்காக இலாப நோக்கமின்றி
எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கலாம்.

16. இந்த அறக்கட்டளையின் நோக்கத்திற்காக அடமான கடனோ, மற்ற


கடன்களோ வாங்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு .

17. அறக்க்கட்டளையின் நிர்வாகத்திற்காக ஊழியர்களை பணியில்


அமர்த்துவதற்கும், விலக்குவதற்கும், ஊதியம் நிர்ணயம் செய்வதற்கும்
நிர்வாகக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.

18. நிர்வாகக் குழுக்கூட்டம் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்


பட வேண்டியது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பதிவேட்டில் பதிவு
செய்யப்பட்டு நிர்வாகக் குழுவின் தலைவர் அதில் கையொப்பமிட்டு
ஆவணம் செய்ய வேண்டியது.

19. நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு சன்மானம், ஊதியம் மற்றும் பிற


பயனப்படிகள், தினப்படிகள் வழங்கலாம் .இவைகளை வழங்குவதற்கு
அறக்க்கட்டளையின் நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

20. இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை அடையும் பொருட்டு அதற்கு


சம்மதமான வியாபாரங்களை செய்யலாம் அதற்காக தனிப்பட்ட
கணக்குகளை பராமரித்து வர வேண்டியது.

21. இந்த அறக்கட்டளை சுமூகமாக நடப்பதற்காக இந்த அறக்கட்டளை


சரத்துகளில் சில மாற்றங்களோ, புதிய சரத்துக்களை சேர்ப்பதற்க்கோ நீதி
மன்றத்திற்கு செல்லாமல் போர்டே (BOARD) செய்து கொள்ள
முழுஅதிகாரம் உண்டு. அனால் மேற்படி மாற்றங்கள் வருமானவரி
துறையின் ஒப்புதலின்படி செய்ய வேண்டியது .

22. அறக்கட்டளை நடத்தி வரும் காலத்தில் அறக்கட்டளைக்கு


வெளியிலிருந்து ஏதாவது வியாஜிதங்கள், வில்லங்க வழக்குகள்
ஏற்பட்டால் அது சம்மதமான அனைத்து காரியங்களையும் தலைவர்

4|Page
மற்றும் நிர்வாக இயக்குனர் முன்னிலை வகித்து வழக்கறிஞர்களை
நியமனம் செய்து வழக்குகளை நடத்த வேண்டியது .வழக்கு விசாரணை
விவரங்களை நிர்வாகக் குழுவிற்கு தெரிவிக்க வேண்டியது.

23. திருA.M.காசிவிஸ்வநாதன் அவர்களே சார்பதிவாளர் அலுவலகத்தில்


பதிவு செய்து கொள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும்
சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்கள்:

1. சமுதாயத்தில் நலிவுற்ற ஏழை மக்களின் மருத்துவ தேவைகளையும்,


மருத்துவ வசதிகளையும் இலவசமாக கொடுத்து உதவுதல்.

2. மருத்துவ முகாம்களை நடத்தி நோயின்றி வாழ்வது குறித்து


மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது முகாம்களிலேயே
நோயாளிகளுக்கு மருந்துகள், மருத்துவ உதவி வழங்குதல்,
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்.

3. ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள்,


தொழிற் கல்வி நிறுவனங்கள், போட்டி தேர்வு பயிற்சி மைய்யங்கள்,
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள்
அமைத்தல்.

4. மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினர் அதிகம் படிக்கும் தனியார்/அரசு


பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த
உதவுதல்.

5. கிராமபுற மற்றும் நகர்ப்புற மக்களின் நன்மைக்காக சமுதாய பணிகளை


மேற்கொள்ளுதல்.

6.கிராமபுற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளை


பயமின்றி எளிதில் எதிர் கொள்ள, போட்டி தேர்வு மைய்யங்களை (Coaching
Centres for Competitive Examinations) நிறுவுதல்
7. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, உடல் நலம், சுற்று சூழல் பாதுகாப்பு,
வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு மற்றும் கலை பண்பாடு ஆகிய
துறைகளின் பின்தங்கியுள்ள ஏழைகளுக்கு சேவை புரிவது, மேலும்
அத்துறையின் சாதனை புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கி
கௌரவப்படுத்துவது.

5|Page
8 ஆண்டுதோறும் 10 மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்
பெரும் ஏழை மாணவ மாணவிகளை உருவாக்கும் விதமாக பாராட்டி,பரிசு
வழங்கி கௌரவப்படுத்துவது.

9.படித்த கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அவர்களின் தொகுதிகளுக்கு


ஏற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், வேலை வாய்ப்பு பெற உதவி புரிதல்
மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குதல், தொழிற் கல்வி பயின்ற
இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க வழிகாட்டுதல்.

10 விளையாட்டு துறையில் தலை சிறந்து விளங்கும் மாணவ


மாணவியர்களுக்கு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக
அவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்.

11.வரைகலை மற்றும் நுண்கலைகளில் திறமை வாய்ந்தவர்களை


கண்டறிந்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை
பாராட்டி பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்துதல்

12. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வை பள்ளி,


கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களிடையே கொண்டு செல்வது

இளைஞர் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு இயக்கம்:

சேலம் மாவட்ட்டம், சின்னனூர் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு


"இளைஞர் கல்வி, வேலை வாய்ப்பு ,திறன் வளர்ப்பு இயக்கம்" (Youth
Educational, Employment and Skill Development Movement) கடந்த 10
ஆண்டுகளாக படித்த ஏழை மாணவ மாணவியர்களுக்கு திறன் வளர்ப்பு
பயிற்சி வழங்கும் மையமாக செயல்பட்டு வருகிறது .இந்த இயக்கத்தின்
நிறுவனர் திரு.A.M.காசிவிஸ்வந்தான் ஆவார்.இந்த மைய்யத்தின்
வலிக்காட்டுதல் மூலம் இதுவரை சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட ஏழை
மாணவர்கள் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தமிழ்
நாடு அரசு பணியில் சேர்ந்து பலன் பெற்றுள்ளனர் .

சீருடை பாணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வில் வெற்றி


பெற்று காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாகவும், காவலர்களாகவும்
200 க்கும் மேற்பட்டவர் சிறைத்துறையில் சிறைக் காவலர்களாகவும்,
100 க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு துறையில் தீயணைப்பு
வரர்களாகவும்
ீ அரசு பணியில் சேர்ந்துள்ளனர் .இரயில்வே தேர்வு வாரியம்
நடத்தும் தேர்வில் 50 க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்று, இரயில்வே
பணியில் சேர்ந்துள்ளனர் .மேலும் அரசு மற்றும் தனியார் துறைகளில்

6|Page
வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு சேர "நேர்முக தேர்வை
எதிர் கொள்வது எப்படி?" என்ற திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது
.இந்த பயிற்சியின் மூலம் 600 க்கும் மேற்பட்ட இளைஞர்களை
பயனடைந்துள்ளனர் .கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு "போட்டி
தேர்வை எதிர் கொள்வது எப்படி? " என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி
வருகிறது .கடந்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி
,கல்லூரி மாணவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில்
பயனடைந்துள்ளனர் .இந்த இயக்கத்தின் கீ ழ் செயல்படும் சின்னனூர்
பயிற்சி மையம் இந்த அறக்கட்டலையுடன் இன்று முதல்
இயக்கப்படுகிறது .மேற்படி இந்த இயக்கம் ஏழை இளைஞர்களுக்கு
செய்து வந்த சேவைகள், இந்த அறக்கட்டளை சின்னனுர் மையத்தின்
மூலம் தொடர்ந்து நடத்தும் .

அறக்கட்டளையின் உறுப்பினர்கள் (TRUSTEES)விவரம்

இந்த அறக்கட்டளையின்(TRUST) மூலகர்த்தாவாகிய நான் ,இந்த


அறக்கட்டளையை நடத்த கீ ழே கண்ட ஐந்து நபர்களை
அறக்கட்டளைதாரர்களாகக்(உறுப்பினர்களாக)(TRUSTEES)கொண்டு
நடத்த ஏற்படுத்தியுள்ளேன் .எனது சந்ததியினர் (A.M.காசிவிஸ்வநாதன் )
மட்டுமே அறக்கட்டளையின் ஆயுட்கால உறுப்பினர்களாக
தேர்ந்தெடுக்க வேண்டியது

1. முனைவர் A.M.காசிவிஸ்வநாதன் IAS (ஓய்வு ), நெ.14, டிமாண்டித்தெரு,


சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை-600004
அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் .

2. திருமதி V.S.விருந்தா (மனைவி) நெ.14, டிமாண்டித்தெரு, சாந்தோம்


நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை -600004 அறக்கட்டளையின்
உறுப்பினர்.

3. Dr.A.K.தருண் M.S.(Ortho) M.B.A (மகன்) நெ.50/5 ,R.T. நகர் ரெட்டியூர்,


சேலம் -636004 அறக்கட்டளையின் உறுப்பினர்.

4. Dr.N.சூர்யா M.S. (ENT) (மறுமகன் ) நெ. 50/5 ,R.T. நகர் ரெட்டியூர், சேலம் -
636004 அறக்கட்டளையின் உறுப்பினர்.

7|Page
5. Dr.A.K.கவிதா M.B.B.S, M.D., (மகள்) நெ.14, டிமாண்டித்தெரு, சாந்தோம்
நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னை -600004 அறக்கட்டளையின்
உறுப்பினர்.

8|Page

You might also like