You are on page 1of 12

Tamil Vaanam

வணக்கம், இந்த வலைதளத்தில் தொண்டு நிறுவனங்களை (TRUST, SOCIETY


& Sec 8 COMPANY) எவ்வாறு தொடங்குவது, மேலும் திட்டங்களை
செயல்படுத்த தேவையான நிதி உதவிகளை எங்கிருந்து பெறலாம் மற்றும்
வருமான வரி விலக்கு பெறுவது தொடர்பான கட்டுரைகளை
எழுதவிருக்கிறேன். இந்த தளத்தில் வெளியாகவிருக்கும் கட்டுரைகள்
நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளவைகளாக இருக்கும். நன்றி.

தொண்டு நிறுவனம் தொடங்க வேண்டுமா? நீங்கள் அவசியம்


தெரிந்துகொள்ள வேண்டியவை.

- மே 16, 2022

தொண்டு நிறுவனம் என்றால் என்ன?

சமீ பத்தில் இந்த உலகமே எதிர்கொண்ட கோவிட்-19


பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காத்ததில் அரசுக்கு இணையாக
களத்திலிறங்கி வேலை செய்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்ளின்
பங்களிப்பை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். பேரிடர் காலங்களில்
மட்டுமல்லாது கல்வி, உடல்நலம், ஆதரவற்றோருக்கு உறுதுணையாக
இருப்பது, மறுவாழ்வளிப்பது என மானுட சமுதாயத்தின் அனைத்து
தளங்களிலும் செயல்படுகின்ற தொண்டு நிறுவனங்களின் பங்கு
அளப்பரியது. இப்படியான தொண்டு நிறுவனங்கள் என்றால் என்ன?
அவற்றின் முக்கிய நோக்கம் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன?
தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமா? மற்றும்
எங்கு பதிவு செய்ய வேண்டும் மேலும், பதிவு செய்ய என்னென்ன சட்ட
நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு விரிவாகப்
பார்க்கலாம்.

தொண்டு நிறுவனங்களின் நோக்கங்கள் என்னென்ன?


மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே தொண்டு நிறுவனங்களின்
முதன்மையான நோக்கம். தொண்டு நிறுவனங்கள் லாப நோக்கோடு எந்த
செயலையும் செய்ய மாட்டார்கள். இந்தியாவைப் பொறுத்தமட்டில்
தொண்டு நிறுவனங்கள் கல்வி, பொது சுகாதாரம், ஆதரவற்ற குழந்தைகள்
காப்பகம், முதியோர் இல்லங்கள் அமைத்தல், மனநலம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரமளித்தல், பெண்கள் முன்னேற்றம்,
பாலின சமத்துவம், சுயதொழில் பயிற்சிகளை அளித்தல், இலவச சட்ட
ஆலோசனைகளை வழங்குதல் என எந்தவித லாப நோக்கமுமின்றி மக்கள்
சேவையே முதன்மையென செயல்பட்டு வருகின்றன.

தொண்டு நிறுவனங்கள் எத்தனை வகைப்படும்?

இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்


படுகின்றன.

1. Trust எனப்படும் அறக்கட்டளைகள்.

2. Society எனப்படும் சங்கங்கள்

3. Sec 8 Companies எனப்படும் லாப-நோக்கற்ற கம்பெனிகள்.

தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யபடுவது கட்டாயமா? #trustregistration


அறக்கட்டளைகளோ அல்லது சங்கங்களோ பதிவுசெய்ய
வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை, ஆனால் தாங்கள் பெறக்கூடிய
நன்கொடைகளுக்கு 12A மற்றும் 80G வரிவிலக்கு சலுகைகளைப் பெறவும்,
மத்திய & மாநில அரசுகளின் நிதியுதவியைப் பெறுவதற்கும் தொண்டு
நிறுவனங்களை பதிவு செய்யவேண்டியது அவசியம்.

தொண்டு நிறுவனங்களை பதிவு செய்யாத வரை தனிநபர்


நன்கொடைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும், அரசையோ தனியார்
கம்பெனிகளின் Corporate Social Responsibility திட்டத்தில் வழங்கப்படும்
நிதியுதவிகளையோ பெறமுடியாது.

எந்த சட்டத்தின் கீ ழ் பதிவுசெய்ய வேண்டும்?

1. Trust எனப்படும் அறக்கட்டளை, Indian Trust Act 1882 சட்டத்தின்கீ ழ்


பதிவு செய்யப்படுகின்றன.

2. Societies எனப்படும் சங்கங்ககள், Indian Societies Act 1860


சட்டத்தின்கீ ழ் பதிவு செய்யப்படுகின்றன.

3. Sec 8 Non-Profit Companies எனப்படும் லாப-நோக்கற்ற கம்பெனிகள்,


Companies Act 2013 சட்டத்தின்கீ ழ் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த சட்டங்களைத் தவிர சில மாநிலங்களில் தொண்டு நிறுவனங்களை


பதிவு செய்வதற்கும் அவற்றை நெறிமுறைப் படுத்தவும் சிறப்பு
சட்டங்களும் இயற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க
வேண்டும்?

தொண்டு நிறுவனங்களை பொறுத்தவரையில் அதன் வகையைப்


பொறுத்து குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும்.

1. அறக்கட்டளை (Trust)

குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

2. சங்கம் (Society)

சங்கங்களைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்கள்


இருக்கவேண்டியது அவசியம்.

3. லாப-நோக்கற்ற கம்பெனிகள் (Sec 8 Companies)

லாப-நோக்கற்ற கம்பெனியில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள்


இருக்கவேண்டும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொண்டு நிறுவனங்களில்


உறுப்பினர்களாக இருக்கலாமா?

அறக்கட்டளையில் (Trust) ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்


உறுப்பினர்களாக இருக்கலாம், அதற்கு சட்டப்படி எந்தத் தடையும் இல்லை.
சங்கத்தைப் (Society) பொருத்தமட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப
உறுப்பினர்கள் மேலாண்மைக் குழுவில் இருக்கும்பட்சத்தில், பதிவாளர்
சங்கத்தை பதிவுசெய்ய மறுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அடிப்படை ஆவணங்கள் என்னென்ன?

Trust Deed தான் அறக்கட்டளைகளுக்கு அடிப்படை ஆவணமாகக்


கருதப்படும்.

Societies மற்றும் Sec 8 Companies பொறுத்தவரையில் Memorandum of Association


(MoA) எனப்படும் கூட்டு ஒப்பந்தப் பத்திரமே அடிப்படை ஆவணமாகக்
கருதப்படும்.

அடிப்படை ஆவணங்களை யார் தயார் செய்யலாம்?

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், வழக்கறிஞர் அல்லது ஆவண எழுத்தர்


மட்டுமே அடிப்படை ஆவணங்களை ( Trust Deed உட்பட
அனைத்துவகையான ஆவணங்களையும்) தயாரிக்கவேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வெளியிட்டிருந்த


சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது.

முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள்/ ஆவண எழுத்தர்கள்/வழக்கறிஞர்கள் கவனத்திற்கு

போலி ஆவணப்பதிவினை தடுக்கும் விதமாக மாண்புமிகு வணிகவரி


மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி
பதிவுத்துறைத்தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண் 24129/C1/2021 நாள்
04.08.2021 ன்படி

ஆவணத்தின் இறுதிப்பக்கத்தில் ஆவணத்தை தயார் செய்த ஆவண


எழுத்தர் அல்லது வழக்கறிஞர் அவர்களின் பெயர் ஆவண எழுத்தர் /
வழக்கறிஞர் உரிமம் எண் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அதனருகில் அவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தின் ஸ்கேன்
செய்யப்பட்ட பிம்பம் அதிலேயே அச்சுப்பிரதியில் வரும் வண்ணம்
அச்சுப்பிரிதி எடுத்து அதன் அருகில் அவர்களின் கையொப்பம் 09.08.2021
முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

How to Write Trust Deed Part 1 |டிரஸ்ட் பத்திரம் எழுதுவது எப்படி?

How to Write Trust Deed Part 2 | Explained with Sample |டிரஸ்ட் பத்திரம்
எழுதுவது எப்படி? https://youtu.be/Zm9rzosiXrQ

தொண்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் செயல்பட முடியுமா?

Trust மற்றும் Section 8 Company ஆகிய நிறுவனங்கள் சட்டப்படி பதிவு


செய்யும்பொழுதே இந்தியா முழுவதும் செயல்படுவதற்கான உரிமையைப்
பெற்றுவிடுகின்றன, ஆனால் Society அதாவது சங்கம் பதிவு செய்யப்பட
மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் செயல்பட வேண்டுமானால்
அனைத்திந்திய பதிவு ஒருமுறை செய்யவேண்டும்.

தொண்டு நிறுவனங்களுக்கு வங்கிக்கணக்கு அவசியமா?

தொண்டு நிறுவனங்கள் தங்களது தினசரி வரவு செலவுகளை


நிர்வகிக்கவும், நிறுவனத்தின் பெயரில் ஒரு நடப்புக் கணக்கு வைத்திருக்க
வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும்
நிதிநிலை அறிக்கை தயார்செய்து வருமானவரி தாக்கல்
செய்யவேண்டியதும் அவசியம்.

Best Bank to Open Current Account for Trust- NGOs: https://youtu.be/uT4vtJExzUs

தொண்டு நிறுவனங்களுக்கு பணம் எங்கிருந்து பெறமுடியும்?

மக்களுக்கு சேவை செய்ய மனம் மட்டுமிருந்தால் மட்டும் போதாது


பணமும் அவசியம், தொண்டு நிறுவனங்களுக்கு போதுமான நிதி ஆதாரம்
இருந்தால் மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து மக்களுக்கு சேவை
செய்யமுடியும்.

தொண்டு நிறுவனங்கள் பினவரும் வழிகளில் நிதியைத் திரட்டலாம்.

1. தனிநபர் நன்கொடைகள்
2. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை
செயல்படுத்துவதன் மூலம் நிதியை பெறலாம்.

3. வெளிநாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள்.

4. உலக வங்கி மற்றும் ஐ நா அமைப்புகள்.

5. Corporate Social Responsibility (CSR) திட்டங்களின் மூலம் பெரு


நிறுவனங்களிடமிருந்து திட்ட நிதியைப் பெறுதல்.

6. Crowd funding எனப்படும் online மூலமாக நிதி திரட்டுதல்.

மேலே கொடுக்கப் பட்டுள்ள ஆறு வழிகளில் CSR மற்றும் Crowd funding


ஆகியவை தற்போது தொண்டு நிறுவனங்களின் முக்கியமான நிதி
ஆதாரங்களாக உள்ளன.

உங்க Trust க்கு Fund வேணுமா? | How to raise funds for your Charitable Trust?
https://youtu.be/sA6kXfsFvKQ

நிதியுதவி பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

1.அறக்கட்டளையாக இருக்கும்பட்சத்தில் Trust deed. Society மற்றும் Sec 8


கம்பெனிகளுக்கு RC எனப்படும் Registration Certificate.

2. NGO Darpan Unique ID


3.12A மற்றும் 80G பதிவுச் சான்றிதழ்

4. சென்ற ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை.

5. கடந்த ஆண்டுகளின் ஆண்டு அறிக்கை (Annual Report)

6. வெளிநாட்டு நிதியுதவி பெற FCRA Registration மற்றும் Permission


எனப்படும் அனுமதி பெறவேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் வரிவிலக்கு பெறமுடியுமா?

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்திய வருமான வரிச்சட்டம் 1961


பிரிவு 12A ல் பதிவுசெய்வதன் மூலம் தாங்கள் நன்கொடையாகப் பெறும்
பணத்திற்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறமுடியும்.

அதேசமயம் தொண்டு நிறுவனங்கள் இந்திய வருமான வரிச்சட்டம் 1961


பிரிவு 80G ல் பதிவுசெய்திருந்தால் நன்கொடையாளர்கள் தாங்கள்
நன்கொடையாகத் தரும் பணத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு
பெற முடியும்.

12A மற்றும் 80G முழுத் தகவல்களை வடியோ


ீ வடிவில் காண இந்த LINK ஐ
க்ளிக் செய்யவும்: https://youtu.be/VbnQTbiPG7E

Newly Registered Trust/Society க்கு 12A & 80G வாங்க முடியுமா?


https://youtu.be/clBdEhnMCj8
தொண்டு நிறுவனங்கள் மக்களைச் சென்றடைவது எப்படி?

இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் சமூக


பிரச்சினைகள், தொண்டு நிகழ்வுகள் மற்றும் தன்னார்வ வாய்ப்புகள் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படும் மிகவும் சக்திவாய்ந்த கருவிகள்
உருவெடுத்திருக்கின்றன. சமீ பத்தில் nonprofitsource.com வெளியிட்ட
ஆய்வறிக்கையின்படி, 80% இளம் வயதினர் ஆன்லைன் மன்றங்கள் மூலம்
சமூக காரணங்களுக்காக நன்கொடை அளிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டில் டெக் ரிப்போர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி,


உலகெங்கிலும் உள்ள 92% தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள்
ஆதரவாளர்களுடன் இணைவதற்குப் முகநூல் (FACEBOOK) எனப்படும்
மிகவும் பிரபலமான சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும்
ட்விட்டரில் 72% மற்றும் இன்ஸ்டாகிராமில் 39% தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் இந்த தளங்களில் சுயவிவரங்களை உருவாக்குகின்றன. 2
பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு, சமூகத்தில்
மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு ஃபேஸ்புக் ஏன் ஒரு சிறந்த கருவியாக
இருக்க முடியும் என்பது தெளிவாகிறது. இளைய தலைமுறையினருடன்
இணைந்து ஆதரவைப் பெற, விழிப்புணர்வை ஏற்படுத்த,
தன்னார்வலர்களைச் சேர்ப்பதற்கு, நன்கொடையாளர்களை அழைக்க
மற்றும் சமூக ஊடகங்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொண்டு நிறுவனங்கள் NGO DARPAN தளத்தில் பதிவுசெய்ய வேண்டியது


கட்டாயமா?

அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் NGO DARPAN தளத்தில்


தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மத்திய மற்றும் மாநில
அரசாங்கத் திட்டத்தின் கீ ழ் மானியங்கள் மற்றும் நிதியுதவிக்கு ஒப்புதல்
பெறுவதற்கு NGO தர்பனில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

NGO DARPAN தளத்தில் யாரெல்லாம் பதிவு செய்யலாம்?

· Trust எனப்படும் அறக்கட்டளைகள்.

· Society எனப்படும் சங்கங்கள்

· Sec 8 Companies எனப்படும் லாப-நோக்கற்ற கம்பெனிகள்.

NGO DARPAN தளத்தில் பதிவுசெய்வதால் கிடைக்கும் நன்மைகள்


என்னென்ன?

· மத்திய மற்றும் மாநில அரசாங்கத் திட்டத்தின் கீ ழ் மானியங்கள்


மற்றும் நிதியுதவி பெறலாம்.

· தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள்


பற்றிய தகவல்கள் தொடர்ந்து கிடைக்கப்பெறும்.

How to register your Trust in NGO DARPAN Portal: https://youtu.be/MBhkoaRl8Nw

இந்தக் கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்குமென


நம்புகிறேன்.
தொண்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை வடியோ
ீ வடிவில் காண
எங்களது YouTube சேனலை Subscribe செய்து பின்தொடருங்கள்

https://www.youtube.com/channel/UCKGs0gAhlggb9pKmcbA98jw.

மேலும் தகவல்களுக்கு 6369646201 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுங்கள்.


நன்றி

12A 80G என்றால் என்ன அறக்கட்டளை How to register trust how to start NGO
NGO DARPAN என்றால் என்ன trustregistration what is NGO in Tamil

You might also like