You are on page 1of 1

வணக்கம் நண்பர்களே!

நான் புகழேந்தி செங்கனிராஜன்.


இன்று உங்களுடன் ‘சிங்கத்துடன் அன்ட்ரொசில்ஸ்’ எனும் கதை புத்தகத்தைப்
பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
இக்கதை புத்தகத்தை இந்தியாவில் உள்ள ‘நெஸ்லிங் புக்’ எனும் பதிப்பகம்
வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் திரு.சுப்ரமணியம் இக்கதையை எழுதியுள்ளார். இப்புத்தகம் 16
பக்கங்களைக் கொண்டுள்ளது.
சரி மாணவர்களே! வாருங்கள் இப்பொழுது நான் இக்கதையின் சுருக்கத்தை
உங்களுக்குக் கூறுகிறேன்.

ஒரு ஊரில், அரண்மனை ஒன்றில் ‘அன்ட்ரொசில்ஸ்’ எனும் அடிமை வாழ்ந்து


வந்தான். அவன் அரசரால் பல கொடுமைக்கு ஆளானான். எனவே, அவன்
அரண்மனையை விட்டு தப்பித்துக் காட்டுக்குள் சென்றான். அங்கே, ஒரு
சிங்கத்திடம் அகப்பட்டான். சிங்கம் காலில் அடிப்பட்டு இருப்பதை அவன்
கண்டான். உடனே, அவன் சிங்கத்தின் காலில் குத்தியிருந்த முள்ளை பிடுங்கி
எடுத்து, காயத்திற்கு கட்டு போட்டான். சிங்கம் அவனை ஒன்றும் செய்யாமல்
காட்டுக்குள் ஓடிவிட்டது. பல நாட்கள் கழித்து, காட்டிற்கு வந்த அரண்மனை
காவலாளிகள் ‘அன்ட்ரொசில்ஸ்’ கைது செய்து அரண்மனைக்குக் கொண்டு
சென்றனர். அரசர் அவன் மீது கடும் கோபம் கொண்டார். அவனுக்கு கொடூரமான
தண்டணை வழங்க ஆணையிட்டார். மக்கள் அனைவரும் ஒன்றுகூடினர். பல
நாள் பட்டினியில் கிடக்கும் ஒரு சிங்கத்தின் கூண்டுக்குள் ‘அன்ட்ரொசில்ஸ்’
தள்ளினர். சிங்கம் வெறி கொண்டு பாய்ந்து அவன் முன் வந்தது.
‘அன்ட்ரொசில்ஸ்’ பயத்தில் கண்களை மூடிக் கொண்டான்.
சரி நண்பர்களே! ‘அன்ட்ரொசில்ஸ்’கு என்ன நேர்ந்திருக்கும் என நினைக்கிறீர்கள்...
நீங்கள் நினைப்பது சரியா! தவறா! என அறிந்து கொள்ள இப்புத்தகத்தைப்
படியுங்கள்.
உங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்...
நன்றி

You might also like