You are on page 1of 2

பெருமதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே, துணைதலைமையார்களே,

ஆசிரியர்களே, மற்றும் என் சக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்


வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நேசமணிமேகலா மணிவண்ணன்,
நண்பர்களே, இதோ.. என் கையில் இருக்கும் கதை புத்தகத்தை நீங்கள்
படித்திருக்கிறீர்களா?
கவலை வேண்டாம்.. இப்புத்தகத்தைப் பற்றி நான் உங்களுக்கு கூறுகிறேன்
கேளுங்கள்.
இப்புத்தகத்தின் தலைப்பு ‘மூன்று கரடிகளும் தங்கநிறக் கூந்தல் சிறுமியும்’
என்பதாகும்.
இப்புத்தகம் 16 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதனை ‘அனேகா’ பதிப்பகம்
வெளியிட்டுள்ளது.
வாருங்கள் மாணவர்களே! நான் உங்களுக்கு இக்கதையின் சுருக்கத்தைக்
கூறுகிறேன்.

முன்னொரு காலத்தில், தந்தை கரடி, தாய் கரடி மற்றும் பிள்ளைக் கரடி என


மூன்று கரடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள், காலைப் பொழுதில்
தாய் கரடி ஒரு பெரிய பானையில் கஞ்சி சமைத்தது. அதனை, மூன்று
கிண்ணத்தில் ஊற்றியது. பெரிய கிண்ணம் தந்தை கரடிக்கும், இடையளவு
கிண்ணம் தாய் கரடிக்கும், சிறிய கிண்ணம் குழந்தை கரடிக்கும் வைத்தது.
அப்பொழுது தந்தை கரடி ‘ஐயையோ இந்த கஞ்சி மிகவும் சூடாக உள்ளது. நாம்
சிறிது நேரம் வெளியே சென்று வருவோம்’ எனக் கூறி மூவரும் வெளியா உலா
சென்றனர்.
அச்சமயம், தங்க நிற கூந்தல் சிறுமி கரடியின் வீட்டிற்கு வந்தாள். அவள் மூன்று
கிண்ணத்தில் சுவையான கஞ்சி இருப்பதை கண்டால்.
‘ஆஹா! சுவையான கஞ்சி, இதனை நாம் பருகி விடுவோம்’ என நினைத்து பெரிய
கிண்ணத்தி இருந்த கஞ்சியை எடுத்தாள்...
‘ஐயோ, இது மிகவும் சூடாக இருக்கிரதே’ என்று அதனை கீழே வைத்தாள்.
அடுத்ததாக, இடையளவு கிண்ணத்தில் உள்ள கஞ்சியை எடுத்தாள்..
‘ஆ! இதுவும் சூடாக உள்ளதே! என சிறுமி அலரினாள்.
இறுதியாக, சிறிய கிண்ணத்தில் உள்ள கஞ்சி வெதுவெதுப்பாக இருந்ததால்
அதனை முழுவதும் பருகினால்...
‘ம்ம்ம் வயிறு நிரம்மி விட்டது, நாம் சற்று ஓய்வு எடுப்போம்’ என மேல்மாடியில்
உள்ள கரடிகளின் அறையில் உறங்கினால்...
சற்று நேரத்திற்கு பிறகு மூன்று கரடிகளும் வீட்டிற்கு வந்தன...

மாணவர்களே.. பிறகு என்ன நேர்ந்தது என தெரிந்து கொள்ள விருப்புகிறவர்கள்..


நீங்கள் தாராளமாக நாம் பள்ளி நூலகத்தில் உள்ள ‘மூன்று கரடிகளும் தங்கநிறக்
கூந்தல் சிறுமியும்’ எனும் இக்கதை புத்தகத்தை இரவல் பெற்று படித்து தெரிந்து
கொள்ளலாம்.
நீங்களும் என்னைப் போல் மற்றவர்களுக்கு கதைகளைக் கூறி மகிழலாம்.
இத்துடன் நான் விடைப்பெறுகிறேன். நன்றி

You might also like