You are on page 1of 2

விடுகதைகள்

1. அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்?

விடை: ஐஸ்

2. இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?

விடை: கைரேகை

3. அதிவேகக் குதிரைக்கு விலா எலும்பில் அங்கங்கே ஓட்டை. அது என்ன?

விடை: ரயில் பெட்டி

4. பார்த்தால் ஒன்று; பிரித்தால் ஆயிரம் பாம்பு. அது என்ன?

விடை: இடியாப்பம்

5. ஒரு தாய் பிள்ளைகள்; ஒருவன் ஓடுவான், மற்றவன் நடப்பான். அவர்கள் யார்?

விடை: கடிகார முட்கள்

6. உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி. அது என்ன?

விடை: கண் இமை

7. செலவில்லாமல் வீடு கட்டி நிலையில்லாமல் வாழ்ந்திடுவாள். அவள் யார்?

விடை: சிலந்தி

8. தாய் தள்ளப்பட்டு தரையிலே கிடக்கிறாள்; மகள் மகாராணியாய் இருக்கிறாள். அவர்கள் யார்?

விடை: சிப்பி, முத்து

9. தாயின் மடியில் இலை வடிவம்; அரைத்தால் கலை வடிவம். அது என்ன?

விடை: மருதாணி இலை

10. நாம் அவனைப் பிடிக்கலாம்; ஆனால், அவனால் நம்மைப் பிடிக்க முடியாது. அவன் யார்?

விடை: குடை

11. அம்மாவும், பிள்ளையும் சேர்ந்தால் அகப்பட்டதெல்லாம் தூள், தூள். அவர்கள் யார்?

விடை: அம்மி, குழவி

12. காவலுக்கு வேலியாகும்; காலடிக்கு எதிரியாகும். அது என்ன?


விடை: முள்

13. எனக்கு ஐந்து விரல்கள் உண்டு; ரத்தமும் இல்லை, சதையும் இல்லை. நான் யார்?

விடை: கையுறை

14. இரவல் கிடைக்காது; இரவில் கிடைக்கும். அது என்ன?

விடை: தூக்கம்

You might also like