You are on page 1of 6

சங்கீ த புத்தகம்

தலைப்பு:

சங்கீ தங்களின் மொத்த தொகுப்பும் “துதிகள்” என - எபிரேயமொழி உரையில் பெயர்


சூட்டப்பட்டுள்ளது. பின் நாட்களில் ரபீ –(யூதகுருமார்கள்) இத்தொகுப்பினை” துதிகளின்
புத்தகம்” என அவ்வப்போது பெயரிட்டு அழைத்தனர். செப்டுவாஜிண்ட் (LXX),
பழையஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பு” சங்கீ தங்கள்” எனப் பெயரிட்டது (சங்கீ த
புஸ்தகங்கள் என புதிய ஏற்பாட்டு: லூக்கா 20:42; அப்.1:20 ல் அழைக்கப்படுகிறது).
“சங்கீ தங்கள்” என்னும் பெயர்ச்சொல் “சரங்களை பறித்து முறுக்கி பண் எழுப்பு” என்ற
கிரேக்க வினைச்சொல்லில் இருந்து வருவதால் இவ்வார்த்தைக்கு இசையுடன் ஓர் தொடர்பு
இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆங்கிலப் பெயர்சூட்டினது- கிரேக்க பெயர்
மற்றும் அதன் பின்னணியில் இருந்து எடுத்தாளப்படுகிறது. இஸ்ரவேலருக்கு” தேவ
ஆவியினால் அருளப்பட்டிருக்கிற” ( 2 திமோ.3:16) “பாட்டுப்புத்தகம்” என்பதால்-சங்கீ தபுத்தகம்
பண்டைய காலத்தில் சரியான மெய்ப்பொருளாகவும் ஆராதனைகளின் உள்ளடக்கமாகவும்
இருந்தது.

மொத்தம் 116 சங்கீ தங்கள் தலைப்பு அல்லது மேலே குறிப்பைப் பெற்றுள்ளன. எபிரேய
மொழி உரையில் இந்த தலைப்புக்கள் வசனங்களுடன் சேர்ந்தே இருக்கின்றன.
தலைப்புக்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக பார்த்தால் பொதுவாக அவை யாவும்
சங்கீ தம் எழுதப்பட்ட பின்னர் உடன் சேர்க்கப்பட்டவை எனவும் மிகவும் நம்பத்தகுந்த
தகவல்களைப்பெற்று இருக்கின்றன என்ற முக்கிய தகவலைக் கண்டுபிடிக்கலாம் (லூக்கா
20:42).

அந்த தலைப்புக்கள் – எழுதிய ஆசிரியர், யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது, வரலாற்று தருணம்,


இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீ தம், வழிபாட்டுமுறை அறிவுரைகள் (இது
எப்படிப்பட்ட சங்கீ தம், இத்துடன் இசைக்கருவியை இசைக்க வேண்டுமா, அல்லது எந்த
வேளையில் பயன்படுத்தவேண்டும்) இது தவிர, அவைகள் பழைமை
வாய்ந்தவைகளானதால் வேறு நுட்ப அறிவுரைகள், ஓர் சிறிய எபிரேய முன்னிடைச்சொல்
சங்கீ த தலைப்புக்களில் அங்கங்கே காணலாம். அவை உதாரணமாக,” உடன்”,” இருந்து”,”
ஆல்” “க்கு” “ஆக” என்பதுடன் - “பற்றி” என்பதுடன் வெவ்வேறு உறவுகளை
ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் “இந்த X நபருக்காக Y நபரால் எழுதப்பட்டது என்ற
தகவலைத் தருகின்றன. ஆனாலும் இந்த தலைப்புக்க்கள் அதிகமாக,– தாவதால்
ீ எழுதப்பட்ட
இஸ்ரவேலின் சங்கீ தம் - , மோசேயினால் எழுதப்பட்ட -, சாலமோனால் எழுதப்பட்ட,
ஆசாப்பினால் எழுதப்பட்ட - அல்லது கோராவின் புத்திரரால் எழுதப்பட்ட - என ஆசிரியர்
பற்றிச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

தேவனின் கண்ணோட்டத்தில் இருந்து- தேவன் அவர் தாமே சங்கீ தங்களின்


ஆசிரியர் என்று அறிகிறோம். ஆசிரியர் யார் என்று மனுஷரின் கண்ணோட்டத்தில்
காணும் ஒருவர் ஏழு தொகுப்பாளர்களை அடையாளம் காணலாம். 150
சங்கீ தங்களில் ஏறக்குறைய 73 சங்கீ தங்களை தாவது
ீ ராஜா எழுதியுள்ளார்.
கோராவின் புத்திரர் 10 சங்கீ தங்களும் (சங். 42, 44-49, 84,85,87); ஆசாப் 12
சங்கீ தங்களையும் (சங்.50,73-83) எழுதியுள்ளனர்.
….2

பக்கம்2

ஏனைய எழுத்தாளர்கள் சாலமோன் (சங்.72,127), மோசே (சங்.90), ஏமான் (சங்.88),


மற்றும் ஏத்தான் (சங்.89). எஸ்றா சில சங்கீ தங்களை எழுதியிருக்கலாம் என
எண்ணப்பட்டாலும், மிஞ்சியுள்ள 50 சங்கீ தங்களின் ஆசியர் யார் என
அறியப்படாததாகவே இருக்கின்றன. மோசே யின் காலம் 1410 கி.மு. வில் ( சங்.90)
தொடங்கி ஐந்தாம் நூற்றாண்டு ஆரம்பம் அல்லது ஆறாவது நூற்றாண்டின் முடிவு
வரை (சங்.126) (சிறையிருப்பில் இருந்து திரும்பிய காலம்) வரை யூதவரலாற்றின்
ஏறக்குறைய 900 வருடங்கள் வரை ஆன கால இடைவெளியில் சங்கீ தங்கள்
எழுதப்பட்டுள்ளன.

பிண்ணனி மற்றும் அமைப்பு

சங்கீ தங்களின் பின்னணி இரண்டுவிதமாக இருக்கின்றது. 1) தேவனின் சிருஷ்டிப்பு


அதன் வரலாறு 2) இஸ்ரவேலரின் வரலாறு. வரலற்று காலவரிசைப்படி
சங்கீ தங்கள் உலகில் உயிர் உண்டானதில் இருந்து பாபிலோன் சிறையிருப்பில்
இருந்து இஸ்ரவேலர் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பின மகிழ்வான நாட்கள்
வரை கடந்து செல்கிறது. கருப்பொருள் -பரலோக ஆராதனையில் இருந்து
பூலோக யுத்தம் வரை பல தலைப்புகளை குறித்து பேசுகிறது.
பரிசுத்தவேதாகமத்தில் உள்ள புத்தகங்களிலேயே மிகப்பெரிய புத்தகம் சங்கீ தம்
புத்தகம் மிகப்பெரிய அதிகாரம் சங்கீ தம் 119 மற்றும் புதிய ஏற்பாட்டில் அதிக
எண்ணிக்கையில் குறிப்பாகச் சொல்லப்படும் பழையஏற்பாட்டு புத்தகம்
சங்கீ தபுத்தம். பரிசுத்த வேதாகமத்தில் 1189 அதிகாரங்கள் உள்ளன இவற்றில்
மைய்ய அதிகாரம் சங்கீ தம் 117 ம் அதிகாரம். ”தேவனைத் துதிக்க, ஆராதிக்க -
சரியான முறையை தோற்றுவித்து தருவதற்கு உதவும்” என்ற சங்கீ தங்களின்
சுய- உன்னத நோக்கத்தை, சங்கீ த புத்தகம் பலயுகங்களாக - முன் நிறுத்தி வந்து
கொண்டே இருக்கிறது.

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

வாழ்க்கையில் ஒரேநேரத்தில் இரண்டு பரிமாணங்கள் செயல்படுகின்றன. 1)


கிடைமட்டமான அல்லது தற்காலிக உண்மை 2) செங்குத்தான அல்லது
எல்லை கடந்து செல்லும் சத்தியம். மெய்யான உலகில் மெய்யான வாழ்க்கை
வாழ்வதே, சங்கீ தங்களின் அடிப்படைக் கருப்பொருள்.

உலகில் பாடுகளை இல்லை என கூறாமல், தேவனுடைய ஜனங்கள்


பரலோக/நித்திய பரிமாணத்தின் நபர் மற்றும் அவர் தரும் வாக்குதத்தங்களைச்
சார்ந்து மகிழ்வுடன் வாழவேண்டும். மனுஷ வாழ்வில் வரும் துன்பங்கள்
வெற்றிகள் என்னும் சுழற்சிகள் அனைத்தும் இஸ்ரவேலின் சர்வல்ல
கர்த்தரிடத்தில் தங்கள் நம்பிக்கையினை காட்ட, குறைகளைச் சொல்ல,
ஜெபிக்க அல்லது துதிக்க சந்தர்ப்பங்களை அளிக்கின்றன என்று
கற்றுத்தருகிறது.
….3

பக்கம் 3

இவைகளை வைத்துப் பார்க்கும் போது, சங்கீ தங்கள், அனுதின வாழ்க்கையில்


செயல்படுத்த வல்ல பரவலான- இறையியல் கருத்துக்களை வழங்குகிறன.
மனுஷனின் பாவம் நிறைந்த குணத்தை குறித்து மட்டுமல்ல, பொல்லாதோரின்
நடவடிக்கையின் மாதிரிகள் குறித்தும், விசுவாசிகள் தொடர்ந்து தடுமாறி விழுவது
குறித்தும் கூட உறுதியாக எழுதுகிறது. தேவனுடைய இறையாட்சியை
அனைத்து இடங்களிலும் அங்கீ கரிக்கிறது, அதே வேளையில் மனுஷனின்
பொறுப்பை எந்தவொரு இடத்திலும் தட்டிக் கழிக்கவில்லை. வெளியில்
இருந்து பாரக்கும் போது, வாழ்க்கை கட்டுப்பாடு இழந்தது போல் காணப்படுகிறது
ஆனால், தெய்வக
ீ வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கும் போது, தேவனது கால
அட்டவணைப்படி நடைபெறும் அனைத்து சம்பவங்களும், சூழ்நிலைகளும் தேவன்
நியமித்தபடி சரியான பாதையில் நடத்திச் செல்கின்றன என அறிந்து
கொள்ளலாம். எதிர்காலத்தில் “தேவனுடைய நாள்” ஒன்று உண்டு என்ற
நிச்சயத்தை தந்து, முடிவு பரியந்தம் நிலைத்து -விடாமுயற்சியுடன் இருக்க ஓர்
அழைப்பைத் தருகிறது. இந்த துதியின் புத்தகம் மிக எளிதில்
நடைமுறைப்படுத்தக்கூடிய இறையியலை வெளிப்படுத்துகிறது.

சங்கீ தங்களில்” ஒன்று” என்னும் சங்கீ தக்காரருக்கும் ”அனேகர்” என்னும்


இறையச்சம் சார்ந்த ஜனங்களுக்கும் இடையில் காணப்படும் உறவு தான்
அதிகமான வேளைகளில் தவறாக புரிந்து கொள்ளப்படும் நிகழ்வு; அவற்றில்
தாவது
ீ ராஜா எழுதிய சங்கீ தங்களில் கிட்டத்தட்ட அதிகமானவைகள்
நிகழ்கின்றன. ஆளுபவராக/ மத்தியஸ்தராக இருந்த ராஜாவிற்கும் அவரது
ஜனங்களுக்கும் பிரிக்க முடியாத ஓர் உறவு இருந்தது; ராஜாவிற்கு எப்படி
வாழ்க்கை இருந்ததோ அப்படியே அவரது ஜனங்களுக்கும் இருந்தது. இந்த உறவு
சில வேளகளில், சங்கீ தக்காரனுக்கு கிறிஸ்துவுடன் இருந்த உறவு என
மேசியாவின் சங்கீ தங்களில் (அல்லது சங்கீ தங்கள் சிலவற்றில்- மேசியா குறித்து
எழுதியுள்ள பகுதிகளில்) வெளிப்படுகிறது. இந்த கண்ணோட்டத்தில் இருந்து
சாபங்களைக் கூறும் சங்கீ தங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கும்
மனுஷருக்கும் இடையில் மத்தியஸ்தராக பூவுலகில் இருக்கும் பிரதிநிதியாக,
இருந்தார். -தாவது
ீ தனது சத்துருக்கள்-தனக்கு துன்பம் விளைவிப்பது
மாத்திரமல்ல, தேவனுடைய ஜனத்திற்கும் துன்பம் விளைவித்து வந்தனர் என்றும்
இறுதியில் பார்த்தால், அவர்கள் ராஜாதி ராஜா, இஸ்ரவேலின் தேவனானவருக்கு
சவால் விட்டுக் கொண்டிருந்தனர் – எனவே தான், தாவது
ீ தன் சத்துருக்களின் மீ து
தேவன் நியாயம் விசாரிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார் என்பது நமக்கு
புரிகிறது.

…4

பக்கம் 4

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

துதிப்பாடல்புத்தகமாகிய - சங்கீ தத்தில் திரும்ப திரும்ப ஒரேவிதமான வகைகள்


எழும்புவதை நாம் கவனித்தால் நலமாகும். வெளியரங்கமாக இருக்கக்
கூடியவைகள்” 1) சரியான வாழ்க்கை வாழ தேவையான ஞானம் தரும்
அறிவுரைகள் நிறைந்த சங்கீ தங்கள்; 2) (எதிரில்இல்லாத சத்துருக்களால் எழும்பும்)
வாழ்க்கையின் வேதனைகள் பற்றிய புலம்பல்கள்; 3), “உள்ளிருக்கும்” சத்துரு
அதாவது பாவம் - தீவினை செய்ததற்காக வருந்தும் சங்கீ தங்கள்; 4) அரசாட்சியை
வலியுறுத்தும் சங்கீ தங்கள் ( சர்வலோக ஆட்சி அல்லது மத்தியஸ்தம்;
தெய்வபயம் சார்ந்த உடன்/அல்லது மேசியாவின் ஆட்சி); மற்றும் 5)
நன்றிசொல்லும் சங்கீ தங்கள்.

சங்கீ தத்தின் நடை மற்றும் உட்பொருள்கருத்துக்கள் மேற்காணுமாறு


வேறுபிரிப்பதற்கு அடையாளம் காட்டுகின்றன.

சங்கீ தங்களின் விரிவான இலக்கியப் பண்பு – அவை யாவும் தனிச்சிறப்பு


வாய்ந்தவை. ஆங்கில கவிதைகள் எதுகை மோனையை சார்ந்து
எழுதப்பட்டிருப்பது போன்று இல்லாமல்,தர்க்க இசைவே சங்கீ தங்களின் அடிப்படை
குணாதிசயங்களாக இருக்கின்றன. சில முக்கிய தர்க்க இசைவுகள்: 1) ஒரே
பொருள் உடையவை (முதல் வரியில் சொல்லப்பட்ட கருத்து இரண்டாவது
வரியில் அதனைப்போன்ற வேறொரு கருத்துடன் திரும்ப சொல்லப்பட்டிருக்கும்
உதாரணம் சங்கீ தம் 2:1). 2) எதிர்மறை பொருள் உடையவை (இரண்டாவது
வரியில் உள்ள கருத்து முதல் வரியில் உள்ள கருத்துக்கு முரணாக இருக்கும். 3)
உச்சகட்ட வரிகள் ( இரண்டாவது அல்லது அடுத்து உள்ள வரிகள் முக்கியமான
வார்த்தை, சொற்றொடர் அல்லது கருத்தினை எடுத்துக் கொண்டு அதனை
படிப்படியான முறையில் வளர்த்துக் கொண்டேச் செல்வது (சங்.29:1,2). 4)
வார்த்தைகள் புரட்டிப்போட்டு கருத்தினை தெரிவிப்பது (தர்க்கம் அ…. ஆ
என்பதை ஆ….அ என்று உருவாக்குவது - உதாரணம் சங்கீ தம் 1:2)

பெருமளவில், சங்கீ தங்களின் சிலமுதல் வரியில் இருந்து கடைசிவரை


கரைந்துறைபாட்டாக (Acrostic) அல்லது அகரவரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன.
சங்கீ தங்கள் 9,10,25,34,37,111,112,119 மற்றும் 145 முழுமைபெற்ற அல்லது
முழுமைபெறாத கரந்துறைப்பாட்டுகளாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளன. எபிரேய
உரையில். ஒவ்வொரு வசனத்தின் முதல் வார்த்தையின் முதலெழுத்து எபிரேய
வெவ்வேறான மெய்யெழுத்துக்களாக மாறி, இறுதியில் 22 எபிரேய
மெய்யெழுத்துக்களும் முடிந்து விடும்.

….5

பக்கம்5

இப்படிப்பட்ட இலக்கிய படைப்பு உள்கருத்தை மனப்பாடம் எளிதில் செய்ய


உதவும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அது பாட்டின் கருத்து - அ
முதல் முதல் ஔ வரை எல்லாம் அதில் நிறைவாக தரப்பட்டுள்ளன எனவும்
சுட்டிக்காட்டுகிறது.

சங்கீ தம் 119 இப்படிப்பட்ட படைப்பிற்கு முழுமையான உதாரணமாக இருக்கிறது.


ஏனென்றால், அதன் 22–8-வரி சரணங்கள் எபிரேய அகர வரிசையின்படிச்
செல்கின்றன.

சுருக்கம்

ஆரம்ப நாட்களில்- கிறிஸ்த திருச்சபைகளால் அங்கீ கரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட


புத்தக வரிசையில் 150 சங்கீ தங்களும் ஐந்து “புத்தகங்கள்” என வரிசைப்படுத்-
தப்பட்டன. இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் இறை வாழ்த்துப்பாடலுடன்
முடிவடைகின்றன. அவையாவன :(சங்கீ தம் 41:13; 72:18-20; 89:52; 106:48; 150:6). இந்த
ஐந்து புத்தகங்கள் மோசேயின் ஐந்தாகம புத்தகங்களை பிரதிபலிக்கின்றன என
யூத பாரம்பரியத்தினர் முறையீடு செய்தனர்.

தனிப்பட்ட நபருடன் அல்லது குழுவுடன் ஒன்று சேர்க்கப்பட்ட சங்கீ தங்களின்


கொத்துக்கள் (Clusters) இருக்கின்றன. (உதாரணமாக, கோராவின் புத்திரரின்
சங்கீ தங்கள் சங்.42-49; ஆசாபின் சங்கீ தங்கள் சங்.73-83); 2) ஒரு குறிப்பிட்ட செயல்
உதாரணமாக ஆரோகணம் - ஆரோகண சங்கீ தங்கள் (சங்கீ தம் 120-134) -
அதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட சங்கீ தங்கள்; அல்லது 3) துதி ஆராதனைக்கென்று
வெளிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட சங்கீ தங்கள் (சங்.146-150).

ஆனால், எந்தவொரு தொகுப்பும் இந்த ஐந்து புத்தகங்களை எதன் அடிப்படையில்


பிரித்தனர் என்ற “இரகசியத்தை” வெளிப்படுத்தவில்லை. ஆகையால், மொத்த
சங்கீ தங்களுக்கு இடையில் - இந்த ஒரு கருப்பொருளின் அடிப்படையிலான
அமைப்பு இருக்கிறது - என்று நம்மால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

You might also like