You are on page 1of 4

நியாயாதிபதிகள் புத்தகம்

தலைப்பு:

”நியாயாதிபதிகள்” – என்னும் மிகப் பொருத்தமான பெயரை இந்த புத்தகம்


பெற்றுள்ளது. தேவன் தம்முடைய ஜனங்கள் - அவர்களுடைய சத்துருக்களிடம்
இருந்து பாதுகாத்துக் கொள்ள- தேவன் தந்த ஒப்பிடமுடியாத தலைவர்களை இது
குறிக்கிறது (2:16:18; 17:9; 19:17). சாமுவேலுக்கு முன் இப்படி தனித்துவம் வாய்ந்த
பண்ணிரண்டு நியாயாதிபதிகள் எழும்பினர்; பின்னர் ஏலியும் சாமுவேலும் இந்த
எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தினர். தேவன் அவர் மிக உன்னத
நியாயாதிபதியாகிய கர்த்தர் (11:27). யோசுவா ஜெயம் பெற்ற (1398 கி.மு) ஆண்டில்
இருந்து ஏலி மற்றும் சாமுவேல் நியாயாதிபதிகளாக பொறுப்பு வகித்து
ராஜாக்களின் காலத்தினை (1043 கி.மு) நிலைநாட்டினது வரை 350 ஆண்டுகள்
கடந்து சென்றுள்ளது..

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

ஆசிரியர் என ஒருவரது பெயரும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை, ஆனால்


யூதர்களின் புத்தகம் தல்மூத் – இந்த சம்பவங்கள் நிறைவேறின காலத்தில்
வாழ்ந்தவரான சாமுவேல், இக்காலகட்டத்து ராஜாங்கத்தின் முறையை
புஸ்தகத்தில் எழுதி (1 சாமுவேல்10:25) தந்திருக்கலாம் கருதுகிறது. தாவது

எருசலேமை கைப்பற்றின 1004 கி.மு. நாட்களுக்கு முந்தைய நாட்கள்
(2 சாமுவேல்5:6,7) ஏனென்றால், அந்நாள் மட்டும் எபூசியர் அந்த இடத்தை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் (நியா.1:27). இப்புத்தகத்தினை எழுதிய ஆசிரியர் -
ஒரு ராஜா ஏற்படுத்தப்பட்டு தேசத்தை ஆளும் காலம்வரை நிறைவேறினவற்றை
குறித்து எழுதுகிறார் (17:6; 18:1; 21:25). சவுல் தன் ராஜ்யபாரத்தை ஆரம்பித்த 1043
கி.மு, காலத்தினை அடுத்த நாட்களில்- நியாயாதிபதிகள் புத்தகம்
எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிண்ணனி மற்றும் அமைப்பு

யோசுவாவின் புத்தகத்திற்கு - பின்தொடர்ந்து வரும் - ஒரு துயர்நிறைந்த புத்தகம்


நியாயாதிபதிகள் புத்தகம். யோசுவாவில்- யுத்தத்தில் ஜெயம்பெற்று தேசத்தை
சுதந்தரிப்பது வரை தேவனுக்கு கீ ழ்ப்பந்திருந்தனர். நியாயாதிபதிகளின்
புத்தகத்தில் – கீ ழ்ப்படியாதவர்களாக, விக்கிரகாரதனை செய்பவர்களாக,
அதிகமான இடங்களில் தோற்றுப் போனவர்களாக ஜனங்களை காண்கிறோம்.
நியா: 1:1- 3:6 வரை உள்ள வசனங்களில் யோசுவா புத்தக நிறைவில் நடந்த
சம்பவங்களைக் குறித்து அதிகமாகப் பார்க்கிறோம். நியா: 2:6-9 யோசுவாவின்
மரணத்தையும் (உறுதிபடுத்தும் வசனங்கள் யோசுவா:24:28-31) அவன்
அடக்கத்தையும் குறித்து பேசுகிறது. ...2
பக்கம்2

யோசுவா மரிக்கும் முன்பில் இருந்தே, இஸ்ரவேலர் கர்த்தரை விட்டுப்


பின்வாங்கிப் போனதுவும், அதற்குபின் - வெளிப்படையாக காணப்படும் ஏழு
தொடர்நிகழ்வுகளை இப்புத்தகம் விவரிக்கிறது - பின்னர் அது கர்த்தரை விட்டு
இஸ்ரவேல் முழுவதும் விலகிப்போன அளவிற்கு மாறினதைப் பார்க்கிறோம்.
இஸ்ரவேலரின் ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையில்
பின்வாங்கிப்போனதற்கு ஐந்து அடிப்படைக் காரணங்கள் உண்டு. 1) தேசத்தில்
இருந்து கானானியரை துரத்தி விடுவதில் தவறினது (நியா.1:19,21,35) 2)
விக்கிரகாரதனை (2:12) 3) பொல்லாத கானானியருடன் கலப்புமணம் செய்தது (3:5,6)
4) நியாயாதிபதிகளின் வார்த்தைக்கு செவி கொடாது போனது (2:17) மற்றும்
நியாயாதிபதிகளின் மரணத்திற்குப் பின் தேவனிடத்தில் இருந்து விலகிச்செல்வது
(2:19).

நான்கு பகுதிகளாக பிரித்து பார்க்க கூடிய வரிசைநிகழ்வுகள் இஸ்ரவேலர்


வரலாற்றின் இந்த காலகட்டத்தில் மீ ண்டும் மீ ண்டும் நிகழ்கிறது. 1) இஸ்ரவேலர்
தேவனை விட்டு தூரமாக செல்லுதல் 2) தேவன் இஸ்ரவேலரை யுத்தத்தில்
தோற்றுப் போக அனுமதிப்பதன் மூலம் அவர்களை சிட்சித்து, அவர்களை
பணியசெய்தல் 3) இஸ்ரவேலர் விடுவிக்கும்படி ஜெபித்தல் 4) உள்ளூர் வாசிகளில்
இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அல்லது யுத்தத்தில் சத்துருக்களை தோற்கடித்து
முன்நின்று நடத்திய ஜெயவரன்
ீ இப்படிப்பட்டவர்களை “நியாயாதிபதிகளாக”
தேவன் எழுப்புவது. பதினான்கு நியாயாதிபதிகள் எழும்பினர் – அதில் ஆறு பேர்
யுத்தத்தை மேற்கொண்டவர்கள் (ஒத்தானியேல், ஏகூ, தெபோரா, யெப்தா மற்றும்
சிம்சோன்), இருவர் ஆவிக்குரிய தலைமைபொறுப்பு வகிப்பதில் விசேஷமான
முக்கியத்துவம் பெற்றவர்கள்- அதேவேளையில் இவ்விருவருக்கும் இடையில்
வேறுபட்ட பண்பு காணப்படுகிறது. அவர்கள் 1) ஏலி, நியாயாதிபதி மற்றும் பிரதான
ஆசாரியர் (நல்ல உதாரணமாக இவரைச் சொல்ல முடியாது) 2) சாமுவேல்,
நியாயாதிபதி, ஆசாரியர் மற்றும் தீர்க்கதரிசி (இவர் ஒரு நல்ல உதாரணம்).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

நியாயாதிபதிகள் புத்தகம் காலவரிசைப்படி எழுதப்படாமல், கருப்பொருட்களின்


அடிப்படையில் எழுதப்பட்டது; கருப்பொருட்களில் தேவனுடைய வல்லமை
முதன்மையானதாக இருக்கிறது மேலும் இஸ்ரவேலர்கள் பாவ வாழ்க்கையுடன்
சமரசம் செய்து தேவனை விட்டு விலகினதால் விளைந்த தீயபலன்களில் இருந்து
- தேவனுடைய உடன்படிக்கையின் இரக்கம் இஸ்ரவேலர்களை விடுவிப்பதை
முக்கிய கருப்பொருளாக இப்புத்தகத்தில் பார்க்கிறோம் (2:18,19; 21:25). பாவத்தில்
இருந்து இரட்சிப்பிற்குள் கடந்து வந்த குறிப்ப்ட்ட ஏழு காலகட்டத்தில்,
யோசுவாவினால் பிரித்து தரப்பட்ட தேசத்தின் பகுதிகள் அனைத்திலும் இருந்த,
தேவன் அவரது ஜனங்களை - தமது மனதுருக்கத்தினால் விடுவித்தார்
(யோசுவா 13-22) …3
பக்கம் 3

தேசம் முழுவதும் இஸ்ரவேல் ஜனங்கள் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள்


தேவனாகிய கர்த்தரை மறந்து போனார்கள்; ஒவ்வொரு திசையில் இருந்த
தேசத்தின் பகுதிகளைக் குறித்து நமக்கு சொல்லப்பட்டுள்ளது. தெற்குப்பகுதி(3:7-31);
வடக்குப்பகுதி (4:1 - 5:31); தேசத்தின் மையப்பகுதி (6:1 -10:5); கிழக்குப்பகுதி (10:6 -
12:15); மேற்குப்பகுதி (13:1 -16:31). அவர்கள் மாம்சீக சுபாவத்தோடு சமரசம்
செய்துகொண்டு, அவர்கள் எல்லைமீ றி செய்த பாவங்களால் - விளைந்த
அனைத்து தீய விளைவுகளின் அந்தகார கேடுகளில் இருந்து பற்றுறுதியுடன்
தேவனின் வல்லமை இஸ்ரவேலரை விடுவிப்பதைப் பார்க்கிறோம் (யோசுவா 17-
21). புத்தகத்தின் கடைசி வரி (21:25)- “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா
இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்து வந்தான் என
புத்தகத்தின் சுருக்கத்தைச் சொல்கிறது”.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

நமது கருத்தை அதிகம் கவரும் சவால்கள்: மனிதர்கள் தங்கள் சத்துருக்களுக்கு


அல்லது தன் தேசத்தவருக்கு இழைக்கும் கொடுஞ்செயலை செய்வதற்கு
தேவனுடைய ஒப்புதலைப் பெற வேண்டுமா அல்லது பெற வேண்டாமா? 2)
சிலவேளைகளில் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவர்களும் வேறுசில
வேளைகளில் அவர்களது பாவ உந்துதல்களைப் பின்பற்றும் தலைவர்கள் சிலரை
தேவன் எடுத்து பயன்படுத்துவது ஏன்? (கிதியோன், ஏலி, யெப்தா, சிம்சோன்); 3)
யெப்தா செய்த பொருத்தனையும் அவன் தன் மகளை சர்வாங்க தகனபலியாக
செலுத்தியது என்பதை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் (11:30-40);
மற்றும் 4) மனுஷன் பாவத்தில் வழ்ந்த
ீ போதும், அவர் அவனது தேவைகளை
சந்திப்பதில் இருந்து தேவனுடைய ஆளுகையில் உள்ள அவருடைய சித்தத்தை
எப்படி தீர்மானமாக அறிந்து கொள்ள முடியும்? (14:4).

யாத்திராகமத்தில் இருந்து சாலமோனின் நான்காம் வருட காலம் 967 கி.மு/966


கி.மு. வரை உள்ள ஆண்டுகள் 480 ஆண்டுகள் -இந்த காலகட்டத்திற்குள் -
வெவ்வேறு நியாயாதிபதிகள் - தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தபடியால்,
நியாயதிபதிகளின் காலகட்டத்தின் மொத்த ஆண்டுகளை இந்த கால
இடைவெளிக்குள் அமைத்து கணக்கிடுவது கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது.
நியாயாதிகள் பலர் தேசத்தின் பல இடங்களில் நியாயம் விசாரித்து விடுதலை
பெற்றுத் தந்த காலங்கள் என்பவை ஒன்றுக்கொன்று மேல் அமைந்தவை –
அவர்கள் நியாயம் விசாரித்த காலங்கள் தொடர்ச்சியாக செல்லவிலை என்பதே
இதற்கு நியாயமான விளக்கம். பவுல் அப்போஸ்தலர்: 13:20 ல் கணக்கிட்ட
“ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய்” எனக் குறிப்பிடுவது ஒரு
தோரயமான கால அளவாகும்.

…4
பக்கம் 4

சுருக்கம்

I அறிமுகம் மற்றும் சுருக்கம் – இஸ்ரவேலின் கீழ்ப்படியாமை (1:1-3:6)

அ. கானானியர் மீது முற்றுப்பெறாத யுத்தத்தை மேற்கொள்ளல் (1:1-36)

ஆ. சரிவு மற்றும் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தல் (2:1 - 3:6)

II: தெரிந்தெடுக்கப்பட்ட நியாதிபதிகளின் வரலாறு – இஸ்ரவேல் விடுவிக்கப்படுதல் (3:7-16:31)

அ. முதல் காலகட்டம்: ஒத்தானியேல் (எதிர்) மெசபோதாமியர்கள் (3:7-11)

ஆ. இரண்டாம் காலகட்டம்: எகூத் மற்றும் சம்கார் (எதிர்) மோவாபியர்கள் (3:12-31)

இ. மூன்றாம் காலகட்டம்: தெபோராள் (எதிர்) கானானியர்கள் (4:1 - 5:31)

ஈ. நான்காம் காலகட்டம்: கிதியோன் (எதிர்) மீதியானியர்கள் (6:1 – 8:32)

உ. ஐந்தாம் காலகட்டம்: தோலா மற்றும் யாவீர் (எதிர்) அபிமேலேக்குவின் எதிர்ப்புகள் (8:33 – 10:5)

ஊ. ஆறாம் காலகட்டம்: யெப்தா, இப்சான், ஏலோன்,அப்தான் (எதிர்) பெலிஸ்தியர் மற்றும் அம்மோனியர்கள்


(10:6 – 12:15)

எ. ஏழாம் காலகட்டம்: சிம்சோன் (எதிர்) பெலிஸ்தியர்கள் (13:1 – 16:31)

III. பின்குறிப்பு: இஸ்ரவேல் தன் கடமையில் இருந்து தவறுதல் (17:1 – 21:25)

அ. மீ கா மற்றும் தாண் கோத்திரத்தார் (17:1 -18:31)

ஆ.கிபியாவில் நடந்த குற்றம் மற்றும் பென்யமீ னுக்கு விரோதமாக யுத்தம் (19:1 -


21:25).

You might also like