You are on page 1of 52

ELECTRIC SHOCKER

மின் இணைப்புகள்
(Electrical Circuits)

பாகம் - 1
ஓர் அறிமுகம் (Introduction)

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 1


2 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)

https://www.clubhouse.com/club/core-electronics-career
மின் இணைப்புகள்
(Electrical Circuits)

பாகம் - 1
ஓர் அறிமுகம் (Introduction)

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்
whatsapp: 97908 73099
https://www.quora.com/profile/Balajee-Seshadri
1,60,00,000 Content Views
33,000 Followers
1,200 Answers

https://www.linkedin.com/in/balajeeseshadri/
12,000+ Connections
மின் இணைப்புகள் - பாகம் 1
1
பாலாஜி

முதல் பதிப்பு: ஜூன் 2017


வெளியிடுவ�ோர்: சார்க் பப்ளிகேஷன்
நெ.28, டாக்டர் அம்பேத்கர் ர�ோடு, க�ோடம்பக்கம்,
சென்னை - 600 024.
வடிவமைப்பு: சார்க் டிசைனிங் சென்டர்
பக்கங்கள்: 48

விலை: Rs.50
M¬ô: `50

ELECTRICAL CIRCUITS - Part 1


Balajee

© SHARK PUBLICATION
First Edition: June 2017
Published by SHARK PUBLICATION
No.28, Dr.Ambedkar Road, Kodambakkam, Chennai - 600 024.
Layout: Shark Designing Centre - 90250 44447
Pages: 48

Price: Rs.50

புத்தகம் வாங்க த�ொடர்புக்கு

அச்�ப் �த்தகங்கள் அேமசான்


இைணய தளத்தில்
கிைடக்கின்றன.

All rights reserved. No part of this book may be reprinted or reproduced or utilised in any form or by any electronic,
mechanical or other means, now known or hereafter invented, including photocoping and recording, or in any informa-
tion storage or retrieval system, without permission in writing from the Author.
முன்னுரை

மின் இணைப்புகள் பற்றிய தெளிவான புரிதல் ஒவ்வொரு


எலக்ட்ரானிக் மாணவருக்கும் அவசியம். மின்சாரவியல் மற்றும்
மின் இணைப்புகள் (Electrical Circuits) பற்றிய பயிற்சி மிகவும்
தேவை. எலக்ட்ரானிக் சர்க்யூட்களில் மின் இணைப்புகளின்
தேவை மிக அதிகம். இன்றைய எலக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு
எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட்கள் அதிகம் புரியாமல் ப�ோவதற்கு,
அவர்களுக்கு மின் இணைப்புகளைப் பற்றி சரியான புரிதல்
இல்லாமையே. இந்த புத்தகத்தில் ஆசிரியர் மின் இணைப்புகளைப்
பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு பக்கத்தையும்
மிகவும் கவனமாக படித்துப் புரிந்து க�ொள்ள முயற்சியுங்கள்.
பயிற்சிகளை செய்து பாருங்கள். இந்த புத்தகத்தினைப் படித்து
முடித்தவுடன் “மின் இணைப்புகள் - பயிற்சி” என்ற புத்தகத்தில்
உள்ள பயிற்சிகளை செய்து பார்க்கவும். இந்த புத்தகத்தை நன்றாகப்
படித்து புரிந்து க�ொண்டால் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய புத்தகங்கள்
படிப்பது எளிது.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 5


நன்றியுரை

எந்நன்றி க�ொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை


செய்ந்நன்றி க�ொன்ற மகற்கு.
- குறள்: 110

நான் வாழ்வில் உயர்வதற்கு உதவியவர்கள் ஏராளம். ஒவ்வொரு


வருக்கும் எனது ஒவ்வொரு புத்தகத்தையும் காணிக்கையாக்குகிறேன்.

இந்தப் புத்தகத்தினை எனது கல்லூரி EEE துறைத் தலைவர்


பேராசிரியர் ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நான் 1980-ம்
ஆண்டு காரைக்குடி அழகப்பா ப�ொறியியல் கல்லூரியில் மின்சாரம்
மற்றும் மின்னணுவியல் பிரிவை தேர்ந்தெடுத்து இரண்டாம் வருடம்
துறையின் உள்ளே நுழைந்த ப�ோது சில சமயம் கையெழுத்துக்காக
பேராசிரியர் ராகவன் அவர்களை சந்தித்ததுண்டு. மிகவும்
கனிவான பேச்சு. ஆனால் கண்டிப்பானவர். சில சமயங்களில்
நாங்கள் செயல்முறை வகுப்புகள் செய்யும் ப�ோது அருகில் வந்து
நிறைய கேள்விகள் கேட்பார். மூன்றாம் வருடத்தில் அவருடன்
த�ொடர்பு அதிகமாயிற்று. நான்காம் வருடத்தில் நானும் எனது
நண்பர் சுவாமிநாதனும் “Non Linear Control System” என்ற பாடத்தை
விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்த ப�ோது, பல்கலைக்கழகம்
இரண்டு பேருக்காக நாங்கள் விருப்பப் பாடம் ஒதுக்க இயலாது
என தெரிவித்து விட்டனர். ஆனால் பேராசிரியர் ராகவன் மதுரை
சென்று பல்கலைக்கழகத்தில் வாதிட்டு, தான் வகுப்பு எடுப்பதாக
கூறி எங்கள் இரண்டு பேருக்கும் விருப்பப் பாடத்தை பெற்றுத்
தந்தார். அதேப�ோல் நாங்கள் ஆய்வகத்தில் மைக்ரோபிராஸசர்
செய்முறைகள் செய்து க�ொண்டிருந்த ப�ோது ஒரு பக்கம் எட்டு
சுவிட்சுகள் மறுபுறம் எட்டு விளக்குகள் ஆனால் இணைப்பு ஒரு
கம்பி மூலம் மட்டுமே. ஒவ்வொரு சுவிட்சும் ஒரு விளக்கை
கட்டுப்படுத்த வேண்டும் என்றார். அன்று அதனை செய்து முடித்தது,
பின்னாளில் கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க் கற்கும் ப�ோது
எளிதாக இருந்தது ராகவனைப் ப�ோல் ஒவ்வொருவருக்கும் கல்லூரி
நாட்களில் ஒரு பேராசிரியர் கிடைத்தால் வாழ்வில் அவர்களது
உயர்வு நிச்சயம்.

6 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


பதிப்புரை

சார்க் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இந்த புத்தகத்தை வெளியிடு


வதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு. தமிழில் இதுப�ோன்ற
புத்தகம் நிறைய இருந்தாலும் இது சற்று புதியது. காரணம், இதன்
ஆசிரியர் 30 ஆண்டுகள் மின்னணு துறையில் அனுபவம் நிறைந்தவர்.
அந்த அனுபவ அறிவையே புத்தகமாகத் தந்துள்ளார்.

கற்றதும் பெற்றதும் சேரும்போது, அதன் பலன் அதிகம்.


இப்புத்தகத்தை நீங்கள் படிப்பத�ோடு மட்டும் இல்லாமல், இதில்
க�ொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி முயற்சி செய்தீர்கள்
என்றால் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவர்கள்.

வாழ்த்துக்களுடன்

சார்க் பதிப்பகம்

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 7


மின் இணைப்புகள்
(Electrical Circuits)

நாம் முன்பே எலக்ட்ரிகல் பாகம் 1-ல் ஒரு தண்ணீர்


த�ொட்டியிலிருந்து தண்ணீர், குழாய் வழியாக செல்வதையும், ஒரு
மின் கலத்திலிருந்து மின்சாரம், மின்கம்பி வழியாக செல்வதையும்
ஒப்பிட்டிருந்தோம்.

இவ்வாறு செல்லும் தண்ணீருக்கு எப்படி குழாயே ஒரு தடையாக


செயல்படுகிறத�ோ, அதேப�ோல் மின் ஓட்டத்திற்கும் மின்கம்பியே
தடையாக செயல்படுகிறது. ஆனால் இந்த தடை மிகவும் குறைவாக
இருப்பதால் தண்ணீரின் ஓட்டமும், மின்சார ஓட்டமும் மிக
அதிகமாக இருக்கும். இந்த ஓட்டத்தின் அளவை குறைப்பதற்காக
நாம் ஒரு தடையை குழாயின் நடுவே ஏற்படுத்தலாம்.

தண்ணீர் குழாயில், குழாயின் இடையே ஒரு தடையை புகுத்தி


யிருக்கிற�ோம். அதன் காரணமாக தண்ணீர் ஓட்டத்தின் அளவு
குறையும். அதே ப�ோல் மின் இணைப்பிலும் ஒரு மின்தடையை

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 9


புகுத்தியிருக்கிற�ோம். அதன் காரணமாக மின் ஓட்டத்தின் அளவும்
குறையும். அதேப�ோல் குழாயின் நடுவே இரண்டு தடைகளை
இணைத்தால் இரண்டும் சேர்ந்து தண்ணீரின் ஓட்டத்திற்கு அதிக
தடையை தரும்.

எப்படி இரண்டு தடைகளும் சேர்ந்து தண்ணீருக்கு அதிக


தடையைத் தரும�ோ, அதேப�ோல் இரண்டு மின் தடைகளும்
சேர்ந்து மின் ஓட்டத்திற்கு அதிக மின் தடையைத் தரும். ஆகவே
நாம் இரண்டு தடைகளின் அளவுகளையும் கூடுதல் செய்து ஒரே
தடையாகப் பார்க்கலாம்.

“Ohm’s Law” ஒரு மின் அழுத்தம், ஒரு மின் தடை மற்றும் ஒரு
மின் ஓட்டத்தை பற்றியதே. உதாரணமாக

இந்த மின் இணைப்பில் நம்மால் நேரடியாக “Ohm’s Law”-ஐப்

10 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


பயன்படுத்த முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம். மின் ஓட்டம்

மின்கலத்தின் “+” -லிருந்து புறப்பட்டு R1 மற்றும் R2 என்ற மின்


தடைகளின் வழியாக மின்கலத்தின் “-”-ஐ அடைகிறது. ஆகவே மின்
ஓட்டம் இரண்டு தடைகளை எதிர் க�ொள்கிறது. இதன் காரணமாக
மின் ஓட்டத்தின் அளவு குறைகிறது. ஆகவே நாம் R1 மற்றும் R2
இரண்டையும் கூட்டி அதனை ஒரே மின் தடையாகக் க�ொள்ளலாம்.

இரண்டு மின் தடைகளை எவ்வாறு ஒரு மின்தடையாக மாற்றுவது


என்று பார்க்கலாம்.

மேலே உள்ள படத்தில் A, B என்ற புள்ளிகளுக்கிடையே உள்ள


மின் அழுத்த வித்தியாசம் 5V. A-யும், C-யும் மற்றும் B-யும் E-யும்
இணைக்கப்பட்டிருப்பதால் C, E புள்ளிகளுக்கிடையே உள்ள மின்
அழுத்தம் 5V. ஆனால் C, D-க்கும் D, E-க்கும் இடையே உள்ள மின்
அழுத்தத்தை எவ்வாறு கணக்கிடுவது? I = V/R என்ற விதியை
உபய�ோகப்படுத்தி மின் இணைப்பில் செல்லும் மின் ஓட்டத்தைக்
கணக்கிடலாம்.

R = R1 + R2 = 3Ω +2Ω = 5Ω;

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 11


I = V/R; I = 5 V / 5Ω = 1A

C, D-க்கு இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசத்தை V1 என்று


குறிப்பிட்டால்

V1 = I x R1 = 1A x 3Ω = 3V

D, E-க்கு இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசத்தை V2 என்று


குறிப்பிட்டால்

V2 = I x R2 = 1A x 2Ω = 2V

ஆகவே V = V1 + V2. அதாவது மின்கலன் தரும் மின் அழுத்தமும்,


மின் தடைகளின் இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசங்களின்
கூடுதலும் சமமாக இருக்கும். இதனையே மேலும் ஒரு உதாரணத்தின்
மூலம் பார்க்கலாம்.

மேற்கண்ட மின் இணைப்பில்

R = R1 + R2 + R3. ஆகவே R = 5Ω
I = 5V / 5Ω = 1A

12 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


V1 = I x R2 = 1A x 2Ω = 2V
V2 = I x R2 = 1A x 2Ω = 2V
V3 = I x R3 = 1A x 1Ω = 1V
ஆகவே,

V (5V) = V1 (2V) + V2 (2V) + V3(1V)

இனி நாம் மின் தடைகளை வேறு முறையில் இணைப்போம்.


இந்த முறையையும் தண்ணீர் த�ொட்டியுடன் ஒப்பிட்டுக் கற்கலாம்.
இந்த இணைப்பில் தண்ணீர் த�ொட்டியுடன் இரண்டு குழாய்கள்
இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றிலும் ஒரு தடை ப�ொருத்தப்பட்டுள்ளது. ஆகவே


தண்ணீர் த�ொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர் இரண்டு
குழாய்கள் வழியாக செல்கிறது. த�ொட்டியிலிருந்து வெளியேறும்
தண்ணீரின் அளவு இரண்டு குழாய்களின் வழியாக செல்லும் தண்ணீர்
அளவுகளின் கூடுதல் ஆகும். குழாய்களின் வழியாக செல்லும்
தண்ணீரின் அளவு அந்த குழாயில் ப�ொருத்தப்பட்டுள்ள தடையைப்
ப�ொறுத்துள்ளது. அதேப�ோல் மின் இணைப்பில் பாட்டரியிலிருந்து
செல்லும் மின் ஓட்டத்தின் அளவு, இரண்டு மின் தடைகளின்
வழியாக செல்லும் மின் ஓட்டத்தின் அளவுகளின் கூடுதல் ஆகும்.
I = I1 + I2.

இணைப்புப் படத்தில் A-யும், C-யும்,


E-யும் இணைந்திருப்பதாலும், B-யும்,
D-யும், F-ம், இணைந்திருப்பதாலும் A,
B-க்கு இடையே உள்ள மின் அழுத்த
வித்தியாசமும், C, D-க்கு இடையே
உள்ள மின் அழுத்த வித்தியாசமும்,

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 13


E, F-ற்கு இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசமும் சமமாக
இருக்கும். ஆகவே

AB = CD = EF = 5V.
I1 = V / R1 = 5V / 5Ω = 1A
I2 = V / R2 = 5V / 5Ω = 1A

மின்கலத்தின் “+” பகுதியில் இருந்து ஆரம்பித்த மின் ஓட்டம், மின்


தடை R1 மற்றும் மின் தடை R2 வழியாகவும் பிரிந்து செல்கிறது.
ஆகவே மின் கலத்தின் “+” பகுதியில் இருந்து புறப்பட்ட மின்சார
ஓட்டத்தின் அளவு

I = I1 + I2 = 1A + 1A = 2A.
ஆகவே மின்கலத்தில் இருந்து புறப்பட்ட மின்சாரத்தின் அளவு 2A.
இந்த இணைப்பில் மின்கலன், R1 மற்றும் R2 என்ற மின் தடைகளை
ஒரே ஒரு மின் தடையாகப் பார்க்கிறது. ஆகவே மின் தடை R1
மற்றும் R2 இரண்டையும் ஒன்றாக்கினால் என்ன மின் தடை வரும்
என்று பார்க்கலாம்.

மின்கலத்தின் “+” மற்றும் “-” இடையே உள்ள மின் அழுத்த


வித்தியாசம் 5V. மின்கலன் தரும் மின்சார ஓட்டம் 2A. ஆகவே மின்
தடையின் அளவு 5V / 2A.

R = 5V/2A = 2.5Ω

14 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இதனைக் கணித வழியில் பார்க்கலாம்.

I = I1 + I2
V / R = V / R1 + V / R2
1 / R = (1 / R1) + (1 / R2) = (R1 + R2) / (R1 x R2)

ஆகவே R = (R1 x R2) / (R1 + R2)

R = (5Ω x 5Ω) / (5Ω + 5Ω) = = (25/10) Ω = 2.5Ω

மின் தடைகளை கீ ழ்க்கண்ட முறைகளில் இணைக்கலாம்.

முதல் முறையில் இரண்டு மின் தடைகளை த�ொடர் இணைப்பில்


இணைத்துள்ளோம். ஆகவே இதனை த�ொடர் இணைப்பு (Series
Connection) என்று அழைக்கிற�ோம். இரண்டாம் முறையில் இரண்டு
மின் தடைகளை பக்க இணைப்பில் இணைத்துள்ளோம். ஆகவே
இதனை பக்க இணைப்பு (Parallel Connection) என்று அழைக்கிற�ோம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 15


த�ொடர் இணைப்பில்

பக்க இணைப்பில்

நாம் இதுவரை த�ொடர் மற்றும் பக்க இணைப்புகளைப் பற்றி


தனித்தனியாக பார்த்தோம். இனி த�ொடர் மற்றும் பக்க இணைப்புகளை
ஒரே மின் இணைப்பில் எவ்வாறு கையாள்வது என்று பார்க்கலாம்.

இந்த இணைப்புகளை கையாள்வதற்கு முன் நாம் ஒரு விதியை


சரியாக புரிந்து க�ொள்ள வேண்டும். நாம் த�ொடர் இணைப்பில் இரண்டு
மின்தடைகளின் (R1+R2) அளவைக் கூட்டி ஒரே மின்தடையாக ஆக்கும்
ப�ோது, மின்தடைகள் R1 மற்றும் R2 ஆகியவை ஒரே மின்தடை.
இப்பொழுது ஒரு மின்தடையுடன் இரண்டு மின்தடைகளை இணைக்க
முற்படும் ப�ோது முதலில் அந்த இரண்டு மின்தடைகளையும் ஒரே
மின்தடையாக மாற்ற வேண்டும். பிறகு முதல் மின்தடையுடன்,
மாற்றிய ஒரே மின்தடையை இணைத்து, ம�ொத்த மின்தடைகளின்
அளவை கண்டறிய வேண்டும்.

16 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இதனை கீ ழே விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது R4-ன் மதிப்பைக் கண்டறியலாம்.

இந்த இணைப்பில் R2 மற்றும் R3 பக்க இணைப்பில் உள்ளதால்

இந்த இணைப்பில் R1 மற்றும் R4 த�ொடர் இணைப்பில் இருப்பதால்


R = R1 + R4. ஆகவே இந்த மின் இணைப்பின் ம�ொத்த மின்தடை
அளவை R என்று குறிப்பிடலாம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 17


மேலே படத்தில் உள்ள மின் இணைப்பிற்கு மின் அழுத்தம்
க�ொடுத்தால் ஒவ்வொரு மின்தடை வழியாகவும் எவ்வளவு மின்
ஓட்டம் பாய்கிறது மற்றும் ஒவ்வொரு மின்தடையின் இடையேயும்
எவ்வளவு மின் அழுத்தம் இருக்கும் என்று கண்டறியலாம்.

மேலே உள்ள மின் இணைப்பில்

V = V1 + V2; I = I1 + I2; I = V / R
R = R1 + ((R2 x R3) / (R2 + R3))

இனி V, R1, R2, R3 ஆகியவற்றிற்கு ஒரு மதிப்பைக் க�ொடுத்து V1,


V2, I1, I2 மற்றும் I ஆகியவற்றின் மதிப்பை எவ்வாறு கண்டறிவது
என்று பார்க்கலாம்.

முதலில் R2-ஐயும் R3-யும் ஒரே மின் தடையாக்கி அதன் மதிப்பைக்


கண்டறிவ�ோம். R2-ம், R3-ம் பக்க இணைப்பில் இருப்பதால்

R4 = (R2 x R3) / (R2+R3) = (4*4) / (4+4) = 16/8 = 2Ω

இனி R1 மற்றும் R4 மின் தடைகளை ஒன்றாக்கி அதன் மதிப்பைக்


கண்டறியலாம். R1-ம், R4-ம் த�ொடர் இணைப்பில் இருப்பதால்

R5 = R1+R4 = 2Ω + 2Ω = 4Ω

18 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இனி இந்த மின் இணைப்பில் செல்லும் மின்சார ஓட்டத்தின்
மதிப்பைக் கண்டறியலாம்.

I = V/R = 4V / 4Ω = 1A

இனி R5 மின்தடையை மீ ண்டும் இரண்டு மின்தடைகளாக மாற்றி


ஒவ்வொரு மின்தடையின் இடையேயும் உள்ள மின் அழுத்தத்தின்
மதிப்பை கண்டறியலாம்.

R5 = R1 + R4;

V1 = I x R1 = 1A x 2Ω = 2V;

V2 = I x R4 = 1A x 2Ω = 2V

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 19


இனி R4-ஐ விரிவாக்குவ�ோம்.

I1 = 2V / 4Ω = .5 A
I2 = 2V / 4Ω = .5 A

இந்த மின் இணைப்பில் நாம் இப்பொழுது எல்லா அளவுகளையும்


கண்டறிந்து விட்டோம்.

க�ொடுக்கப்பட்டவை = V, R1, R2, R3 ; V = 4V, R1 = 2, R2 = 4Ω, R3 = 4Ω

கண்டுபிடித்தவை = I, I1, I2, V1, V2 ; I = 1A, I1 = 0.5A, I2 = 0.5A

V1 = 2V, V2 = 2V

இதேப�ோல் நாம் ஒவ்வொரு மின் இணைப்பிலும் ஒவ்வொரு


உறுப்புகளின் (Component) மதிப்பு, அதன் வழியாக செல்லும் மின்
ஓட்டம் மற்றும் அதன் இடையே உள்ள மின் அழுத்தம் ஆகியவற்றை
கண்டறிய தெரிந்து க�ொள்ள வேண்டும். இது ஒரு திறமை. தீவிர
பயிற்சியின் மூலம் இதனை எளிதில் புரிந்து க�ொள்ள முடியும்.

20 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


மேலும் ஒரு உதாரணத்தின் மூலம் நாம் இதனை சரியாகப் புரிந்து
க�ொண்டிருக்கிற�ோமா? என்று பார்க்கலாம்.

V0-ன் மதிப்பை நீங்களாக முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.


பின்னர் கீ ழ்க்கண்ட தீர்வுடன் தங்களது தீர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்.

தீர்வு:

V0 = I2 x R4

R4-ன் மதிப்பு நமக்குத்


தெரியும். ஆனால் I2-ன்
மதிப்பு நமக்குத் தெரியாது.
ஆகவே I2-ன் மதிப்பைக்
கண்டறிய வேண்டும்.

V = V1 + V2

R5 = R3 + R4 = 4Ω + 4Ω
= 8Ω

I2 = (V2 / R5)

நமக்கு R5 தெரியும், ஆனால் V2 தெரியாது. இப்பொழுது V2-ஐக்


கண்டுபிடிக்க வேண்டும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 21


R6 = (R2 x R5) / (R2 + R5)
= (8Ω x 8Ω) / (8Ω + 8Ω)
= 4Ω
V2 = I x R6
R6 = 4Ω

ஆனால் I-ன் மதிப்பு தெரியாது.

R7 = R1 + R6 = 1Ω + 4Ω = 5Ω
I = V / R7 = 5V / 5Ω = 1A

R6 மற்றும் I-ன் மதிப்பு தெரியுமாதலால் V2-ஐக் கண்டுபிடிக்கலாம்.

V2 = I x R6 = 1A x 4Ω
= 4V

22 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இப்பொழுது V2 தெரிவதால் I2-ஐக் கண்டுபிடித்துவிடலாம்.

I2 = V2 / R5 = 4V / 8Ω
= .5A

இப்பொழுது நமக்கு I2 தெரியும். ஆகவே V0-ஐக் கண்டறியலாம்.

V0 = I2 x R4 = .5A x 4Ω
= 2V
ஆகவே V0 = 2V.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 23


நாம் இதுவரை த�ொடர் மற்றும் பக்க இணைப்புகளைப் பற்றி
பார்த்தோம். இவற்றைப் பற்றி நன்றாக புரிந்து க�ொண்டுள்ளோமா
என்று இன்னும் சில உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.

கீ ழ்கண்ட இணைப்புப் படத்தில் ஸ்விட்சு OFF-ல் இருக்கும் ப�ோது


ஸ்விட்சிற்கு இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசம் எவ்வளவு?

நாம் முன்பே கூறியபடி நீங்களாகவே இதற்கு தீர்வு காணுங்கள்.


பின்னர் இந்த புத்தகத்தில் க�ொடுக்கப்பட்டுள்ள தீர்வுடன் தங்களது
தீர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்.

S1 ஸ்விட்சு OFF-ல் இருக்கும் ப�ோது, மின்சார ஓட்டம் இருக்காது.


ஆகவே I = 0A.

V = V1 + Vo = 5V

Vo = V - V1 = 5V - V1

V1 = I x R1 = 0 x 5Ω = 0V.

ஆகவே Vo = 5V - 0V = 5V.

24 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


கீ ழ்கண்ட இணைப்புப் படத்தில் ஸ்விட்சு ON-ல் இருக்கும் ப�ோது
ஸ்விட்சிற்கு இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசம் எவ்வளவு?

நாம் முன்பே கூறியபடி நீங்களாகவே இதற்கு தீர்வு காணுங்கள்.


பின்னர் இந்த புத்தகத்தில் க�ொடுக்கப்பட்டுள்ள தீர்வுடன் தங்களது
தீர்வை ஒப்பிட்டுப் பாருங்கள்.

S1 ஸ்விட்சு ON-ல் இருக்கும் ப�ோது, மின்சார ஓட்டம் I = 5V/5Ω = 1A.

V = V1 + Vo = 5V
Vo = V - V1 = 5V - V1
V1 = I x R1 = 1A x 5Ω = 5V.

ஆகவே Vo = 5V - 5V = 0V.

இந்த இரண்டு இணைப்புப் படங்களும் அதி முக்கியத்துவம்


வாய்ந்தவை. ஆகவே இவற்றை சரியாகப் புரிந்து க�ொண்டு அடுத்தப்
பகுதிக்குச் செல்லுங்கள்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 25


இணைப்புப் படங்களில் குழப்பத்தையும், சிக்கலான படங்களையும்
தவிர்ப்பதற்காக நாம் ப�ொதுவாக மின்கலன்களைக் காட்டுவதில்லை.
மின்கலங்கள் இணைப்பில் இருக்கும், ஆனால் படங்களில் காட்டப்
பட்டிருக்காது.

அதேப�ோல் மின்கலத்தின் “-” பகுதியை ப�ொது சிக்னல்


(Common) -ஆக உபய�ோகப்படுத்துவர்.

முதல் முறை:

இந்த இணைப்புப் படத்தில் மின்கலத்தின்


“-” சிக்னலை காட்டவில்லை. அதற்கு பதிலாக
புதிய common சிக்னலை காட்டியிருக்கிற�ோம்.
இந்த இரண்டு common சிக்னல்களும் படத்தில்
இணைக்கப்படவில்லை என்றாலும் சர்க்யூட்
ப�ோர்டில் இணைக்கப்பட்டிருக்கும்.

Common குறியீடு:

என்ற குறியீட்டினை Common சிக்னலுக்காக


உபய�ோகப்படுத்துகின்றனர். இதனை Ground
சிக்னல் என்று அழைக்கின்றனர். ஒரு இணைப்
பில் உள்ள எல்லா Ground சிக்னல்களும் இணைக்
கப்பட்டிருக்கும்.

26 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இரண்டாம் முறை:

இந்த இணைப்புப் படத்தில் “+” மற்றும்


“-” சிக்னல்கள் மின்கலத்துடனும், மின்தடை
யுடனும் இணைக்கப்படவில்லை. ஆனால்
சர்க்யூடில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த
இணைப்புப் படத்தில் மின்கலன் காண்பிக்கப்
பட்டிருக்கிறது. இணைப்புப் படத்தில் ஒரே
பெயருள்ள எல்லா சிக்னல்களும் சர்க்யூடில்
இணைக்கப்பட்டிருக்கும்.

மூன்றாம் முறை:

இந்த இணைப்புப் படத்தில் மின்கலன் காண்பிக்கப் படவில்லை.


ஆனால் சர்க்யூடில் மின்கலன் இருக்கும். 5V மற்றும் Ground சிக்னல்
கள் இணைப்புப் படத்தில் இருந்தாலே மின்கலனும் இருப்பதாக
நினைத்துக் க�ொள்ள வேண்டும். அதேப�ோல் எல்லா சிக்னல்களின்
வ�ோல்டேஜ், Ground-ஐப் ப�ொறுத்தே அமையும். ஆகவே Vo-ன்
வ�ோல்டேஜ், அந்த புள்ளிக்கும் Ground-ற்கும் என்று ப�ொருள். மின்
அழுத்தம் என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே அளவிடப்படுவது.
ஆகவே ஒரே ஒரு புள்ளியின் மின் அழுத்தம் க�ொடுத்தால் அடுத்த
புள்ளி “Common” என்று புரிந்து க�ொள்ள வேண்டும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 27


நாம் சரியாகப் புரிந்து க�ொண்டிருக்கிற�ோமா? என்று கீ ழ்கண்ட
உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

இதில் Vo எவ்வளவு என்று கண்டறிந்து விட்டு பின்னர் நமது


விடையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இந்தப் படத்தில் A, B, C ஆகிய மூன்று புள்ளிகளில் மின் அழுத்தம்


க�ொடுக்கப்பட்டிருக்கிறது. மின் அழுத்தத்தை அளவிட இரண்டு
புள்ளிகள் தேவை. அந்த இரண்டாவது புள்ளி “Common” புள்ளி. புள்ளி
A-க்கும் B-க்கும் இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசம் 9V - 6V
= 3V புள்ளி A-க்கும் B-க்கும் இடையே உள்ள மின் தடை 3Ω. (2Ω + 1Ω).
ஆகவே மின் ஓட்டம்

28 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


I = 3V / 3Ω = 1A.

புள்ளி C-க்கும் புள்ளி B-க்கும் இடையே உள்ள மின் தடை 1Ω, அந்த
மின் தடையின் வழியே ஓடும் மின்சார ஓட்டம் 1A. ஆகவே புள்ளி
C-க்கும் புள்ளி B-க்கும் இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசம்

Vd = 1A x 1Ω = 1V

ஆனால் நமக்கு வேண்டிய Vo புள்ளி C-க்கும் “Common” புள்ளிக்கும்


இடையே மட்டுமே.

ஆகவே

Vo = VCB + VB
= 1V + 6V = 7V

விடை = 7V

நாம் இதுவரை எப்படி Ohm’s Law-ஐ உபய�ோகித்து இணைப்புப்


படங்களில் உள்ள பல்வேறு புள்ளிகளில் மின் அழுத்தத்தைக்
கண்டறிவது என்று பார்த்தோம். இதனை பல முறை பயிற்சி செய்து
பார்த்தால் மிகவும் எளிதில் புரிந்துவிடும். எமது “மின் இணைப்புகள்-
பயிற்சி” என்ற புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை செய்து பார்த்தால்
நமக்கு Ohm’s Law-ஐ எவ்வாறு உபய�ோகிப்பது என்பது மிகவும்
தெளிவாகப் புரிந்துவிடும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 29


இதுவரை நாம் நிலையான மின்தடையை பற்றி பார்த்தோம்.
இனி நாம் மாறும் மின்தடையைப் (Variable Resistor) பற்றி பார்ப்போம்.
இப்பொழுது நாம் மாறும் மின்தடையை தண்ணீர் குழாயில் உபய�ோ
கிக்கும் அடைப்பான் (tap) உதவியுடன் புரிந்து க�ொள்ள முயல்வோம்.

தண்ணீர் ஓட்டத்தின் அளவு, நாம் அடைப்பானை எவ்வளவு


திறக்கிற�ோம�ோ அல்லது மூடுகிற�ோம�ோ, அதற்கு தகுந்தாற் ப�ோல்
மாறுபடும். அதேப�ோல் மாறும் மின்தடையை (Variable Resistor)
மாற்றுவதன் மூலம் அதன் மின்தடை அளவை மாற்றலாம். அதன்
மூலம் மின் ஓட்டத்தை மாற்றலாம். மின் ஓட்டம் மாறுவதால்
மின்தடையில் வெளியேறும் சக்தியும் (Power) மாறும்.

P = I x I x R

இப்பொழுது ஒரு மாறா மின்தடையையும், ஒரு மாறும் மின்


தடையையும் ஒரே மின் இணைப்பில் இணைத்து, மாறா மின்தடையில்
செல்லும் மின்சார ஓட்டத்தினை, மாறும் மின்தடையை மாற்றுவதன்
மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

30 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


Vo = I x R2

I = V / (R1 + R2)

ஆகவே R1-ஐ மாற்றினால் I மாறும், அதன் காரணமாக Vo மாறும்.


இந்த மின் இணைப்பை கீ ழ்கண்ட முறையில் வரையலாம்.

Vo = V x (R2 / (R1 + R2))

ஆகவே R1-ஐ மாற்றினால் Vo மாறும். இந்த மின் இணைப்பை


கீ ழ்கண்ட முறையிலும் வரையலாம்.

Vo = V x (R2 / (R1 + R2))

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 31


உதாரணமாக

R2 - 0Ω-ஆக இருந்தால், Vo = 0V

I = 5V/10Ω = 0.5A

V0 = 0.5A X 0Ω = 0V

R2 - 10Ω-ஆக இருந்தால் Vo = 2.5V

I = 5V/20Ω = 0.25A

V0 = 0.25A X 10Ω = 2.5V

R2 - 40Ω-ஆக இருந்தால் Vo = 4V

I = 5V/50Ω = 0.1A

V0 = 0.1A X 40Ω = 4V

32 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இதேப�ோல் R2-ஐ அதிகரிக்க அதிகரிக்க Vo-ன் அளவு உயர்ந்து
க�ொண்டே இருக்கும். கடைசியாக R2- அதிகபட்ச மின்தடையாக
மாற்றும் ப�ோது அதாவது R2 ஓபன் ஆக இருக்கும் ப�ோது,

R2 இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால்
இணைப்பில் R1 மற்றும் R2 வழியாக
செல்லும் மின்சாரத்தின் அளவு 0A.
ஆகவே R1 மின்தடைக்கு இடையே
உள்ள மின் அழுத்தம் 0V (0A x 10)

ஆதலால்

Vo = V - V1 = V - 0V = 5V

அதாவது மாறும் மின்தடை 0Ω(close)-ஆக இருக்கும் ப�ோது


Vo-ன் அளவு 0V, அதே ப�ோல் மாறும் மின்தடை, open-ஆக இருக்கும்
ப�ோது Vo அளவு 5V. ஆகவே Vo-ன் அளவு 0V-லிருந்து 5V வரை
இருக்கும். இது ஒரு மிகவும் முக்கியமான பகுதி. எனவே புரியும்
வரை படியுங்கள். இதுதான் “அனலாக் எலக்ட்ரானிக்ஸ்” (Analog
Electronics) மற்றும் “டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்” அடிப்படை.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 33


மின் ப�ொருள் - த�ொடர் மற்றும் பக்க இணைப்பு

நாம் ஒரு 230W சக்தியுள்ள மின்பொருளை வாங்கினால், அது


230W-க்கு ஈடான சக்தியை தரும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை
உள்ளது. நாம் மின்பொருள் கடையில் இருந்து 100W மின் விளக்கினை
வாங்கி வந்தால் கடையில் பரிச�ோதிக்கும் ப�ோது நன்றாக ஒளிரும்.
ஆனால் அதே மின்விளக்கு வட்டில்
ீ சிறிது குறைந்த ஒளியை
தரும். வட்டிலேயே
ீ பகலில் அதிக ஒளியைத் தரும் மின்விளக்கு
மாலையில் சிறிது மந்தமாக ஒளிரும். நாம் உடனே கடைக்காரரிடம்
சென்று மின்விளக்கு சரியில்லை என்று முறையிடுவதில்லை.
எல்லோருக்கும் தெரியும் நமக்கு வரும் மின் விநிய�ோகத்தில் ஏத�ோ
பிரச்சனை, அதனால் மின் அழுத்தம் (வ�ோல்டேஜ்) சிறிது குறைவாக
தருகிறது. அதாவது 230W-ற்கு பதிலாக 200W மட்டுமே வருகிறது.
மின் விளக்கில் 100W சக்தி என்று எழுதியிருக்கிறது. பின் ஏன் அது
100W-ற்கு குறைவான சக்தியை தரவேண்டும். இதற்கு காரணம்
மின் ப�ொருள் தயாரிப்பாளர்கள் 100W என்று குறிப்பிட்டிருந்தாலும்
அது 100W@230W, அதாவது இந்த மின் ப�ொருள் 230W மின் அழுத்தம்
க�ொடுத்தால் மட்டுமே 100W மின்சக்தி தரும். 230W-ற்கு குறைவாகவ�ோ
அல்லது அதிகமாகவ�ோ க�ொடுத்தால் அது தரும் சக்தி வேறுபடும்.
இதனை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

ஒவ்வொரு மின் ப�ொருளும் மின்சார ஓட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட


தடையை தருகிறது. அத்தடையை ப�ொறுத்து அதன் வழியாக
செல்லும் மின் ஓட்டத்தின் அளவு உள்ளது. அந்த மின்பொருளின்
வழியாக குறிப்பிட்ட மின் ஓட்டத்தினை விட அதிகமாக செலுத்தினால்
அம்மின்பொருள் வணாகிவிடும்.
ீ உதாரணமாக 230W@230W என்ற
மின்சார விளக்கிற்கு 230W வ�ோல்டேஜ் க�ொடுத்தால் அந்த மின்
விளக்கு 230W-க்கு ஈடான ஒளியைத் தரும். அப்போது அந்த மின்
விளக்கின் வழியாக 230W/230W = 1A மின் ஓட்டம் இருக்கும். இதுதான்
அந்த மின் விளக்கின் தாங்கும் சக்தி (rating). நாம் 1A மின்சாரத்திற்கு
பதிலாக அதிக மின்சாரம் செலுத்தினால் அந்த பல்பு வணாகிவிடும்.

அதேப�ோல் 1A-ற்கு குறைவான மின்சாரம் செலுத்தினால் அந்த பல்பு
குறைந்த வெளிச்சம் தரும். இதை இரண்டு விதமாக அணுகலாம்.

34 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


முதலில் அதிக வ�ோல்டேஜில் எவ்வாறு குறைந்த வ�ோல்டேஜ் மின்
விளக்கை இணைப்பது.

இந்த முறையில் இணைத்தால் மின்விளக்கு வணாகிவிடும்.



மின்விளக்கு வழியாக செல்லும் மின்சாரத்தின் அளவு அதிகமாக
இருக்கும். அது எவ்வாறு என்று பார்க்கலாம். முதலில் மின்
விளக்கின் மின்தடையை கண்டறியவேண்டும்.

மின் விளக்கு 230W வ�ோல்டேஜ் க�ொடுத்தால் 230W மின்சக்தியை


தரும். இதுதான் அந்த உற்பத்தியாளர் க�ொடுத்திருக்கும் ஒரே
தகவல். 460V வ�ோல்டேஜ் க�ொடுத்தால் அந்த மின்விளக்கு எவ்வளவு
சக்தியை தரும் என்று உற்பத்தியாளர் குறிப்பிடவில்லை. ஆகவே
உற்பத்தியாளர் க�ொடுத்திருக்கும் 230W@230W என்ற தகவலிலிருந்து
நாம் அதன் மின்தடையை கண்டறிய வேண்டும்.

P = V x I

I = P / V

I = 230W / 230V = 1A

ஆகவே 230W பல்பின் மின்தடை 230Ω

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 35


V = I x R

R = V / I

= 230V / 1A = 230Ω

இப்பொழுது 230W பல்பிற்கு 460V க�ொடுத்தால் என்ன நடக்கிறது


என்று பார்க்கலாம்.

V = I x R

I = V / R

= 460V / 230Ω

I = 2A

உற்பத்தியாளர் தகவலின் படி 230W@230W மின் விளக்கு 1A மின்


ஓட்டத்தை மட்டும் தாங்க வல்லது. இப்பொழுது 2A மின்சாரம்
செல்வதால் மின் விளக்கு வணாகிவிடும்.
ீ இதனை எவ்வாறு கட்டுப்
படுத்துவது.

V = I x Rt

Rt → இணைப்பின் ம�ொத்த
மின் தடை

I = 1A

Rt = V / I

= 460V / 1A = 460Ω

R = 460Ω - 230Ω = 230Ω

36 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


நாம் தரும் சப்ளை 460V. அதனால் மின் விளக்கின் வழியாக
செல்லும் மின் ஓட்டம் 2A. ஆனால் மின் விளக்கிற்கு 1A மட்டுமே
தேவை. 460V மின்னழுத்தம் உள்ள மின் இணைப்பில் 1A மின் ஓட்டம்
தேவை 460Ω- மின் தடை தேவை. ஆனால் மின் விளக்கு தருவத�ோ
230Ω மின்தடை மட்டுமே. ஆகவே நாம் 230Ω மின்தடையை மின்
விளக்குடன் த�ொடர் இணைப்பில் இணைக்க வேண்டும். இப்பொழுது
மின் இணைப்பில் 1A மின் ஓட்டம் மட்டுமே ஏற்படும். அதனால் மின்
விளக்கு வணாகாது

நாம் இந்த மின்விளக்குகளை த�ொடர் மற்றும் பக்க இணைப்புகளில்


இணைத்துப் பார்க்கலாம். இந்த இணைப்புகளில் எந்த இணைப்பில்
எந்த விளக்கு பிரகாசமாக எரியும் என்று முதலில் நீங்கள்
கண்டுபிடியுங்கள். பின்னர் இதற்கான தீர்வினைப் பாருங்கள்.

இணைப்பு 1: இணைப்பு 2:

இணைப்பு 3: இணைப்பு 4:

விடையை படிக்காமல் நீங்களாகவே இந்த நான்கு இணைப்பு


களிலும் எந்த இணைப்பில் எந்த மின்விளக்கு பிரகாசமாக ஒளிரும்
என்று கண்டுபிடித்து பின்னர் அதன் விடையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 37


இணைப்பு 1:

நாம் முன்பே விவாதித்த படி

AB = CD = EF = 230V

ஆகவே 40W மின்விளக்கிற்கு 230V கிடைப்பதால் அது 40W-ற்கு


உரிய ஒளியைத் தரும். அதேப�ோல் 60W மின் விளக்கிற்கும் 230V
கிடைப்பதால் அது 60W-ற்கு உரிய ஒளியைத் தரும். 60W-ன் ஒளி
40W-ன் ஒளியை விட அதிகமாக இருப்பதால் இந்த இணைப்பில் 60W
மின்விளக்கு அதிக பிரகாசமாக ஒளிரும்.

விடை = 60W

இணைப்பு 2:

நாம் முன்பே விவாதித்த படி

AB = CD = EF = 230V

38 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


ஆகவே 60W மின்விளக்கிற்கு 230V கிடைப்பதால் அது 60W-ற்கு
உரிய ஒளியைத் தரும். அதேப�ோல் 40W மின் விளக்கிற்கும் 230V
கிடைப்பதால் அது 40W-ற்கு உரிய ஒளியைத் தரும். 60W-ன் ஒளி
40W-ன் ஒளியை விட அதிகமாக இருப்பதால் இந்த இணைப்பில் 60W
மின்விளக்கு அதிக பிரகாசமாக ஒளிரும்.

விடை = 60W

இணைப்பு 3:

இந்த இணைப்பில் V1 + V2
= 230V. ஆகவே V1 மற்றும்
V2, 2 3 0 V -ற்கு கு றைவ ாக
இருப்பதால் இரண்டு மின்
விளக்குகளுமே அதற்குரிய
பி ரகாசத ்தி ல் ஒள ிர ாது.
ஆனால் எது அதிக பிரகாசத்
தில் ஒளிரும் என்று எப்படி
கண்டு ப ிடி ப்ப து . இத னை இரு வழிகளில் ஆராயலாம். முதல்
வழியில் எது பிரகாசமாக ஒளிரும் என்று கண்டறியலாம். ஆனால்
இந்த முறையில் துல்லியமாக ஒவ்வொரு மின்விளக்கும் எவ்வளவு
பிரகாசமாக ஒளிரும் என்று ச�ொல்ல முடியாது. அதற்கு இரண்டாவது
முறையை உபய�ோகப் படுத்தலாம்.

40W மின்விளக்கின் மின் தடை, 60W மின்விளக்கின் மின் தடையை


விட அதிகம்.

40W மின்விளக்கின் மின் தடை = R1


60W மின்விளக்கின் மின் தடை = R2
R1 > R2; I x R1 > I x R2; V1 > V2; V1 x I > V2 x I
P1 > P2
ஆகவே 40W மின்விளக்கே இந்த இணைப்பில் அதிக பிரகாசமாக
எரியும்.

விடை = 40W

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 39


இணைப்பு 4:

60W மின்விளக்கின் மின்


தடை = R1

40W மின்விளக்கின் மின்


தடை = R2

R1 < R2; I x R1 < I x R2


V1 < V2; V1 x I < V2 x I
P1 < P2

ஆகவே 40W மின்விளக்கே இந்த இணைப்பிலும் அதிக பிரகாசமாக


எரியும்.

விடை = 40W

மின் ப�ொருள்களில் 40W என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால், அது


எந்த நாட்டில் மின் ப�ொருளை வாங்குகிற�ோம�ோ அந்த நாட்டின்
வ�ோல்டேஜில் மட்டும் 40W இணையான சக்தி தரும். இந்தியாவில்
40W மின் விளக்கு வாங்கினால் 40W@230V என்று ப�ொருள்.
அமெரிக்காவில் 40W மின் விளக்கு வாங்கினால் 40W@110V என்று
ப�ொருள். இந்தியாவில் மற்றும் அமெரிக்காவில் வாங்கிய இரண்டு
பல்புகளும் 40W என்று குறிப்பிட்டிருந்தாலும் இந்தியாவில் வாங்கிய
மின் விளக்கு 230V க�ொடுத்தால் 40W மின் சக்தியை பெற்றுக்
க�ொள்ளும்.

40 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


அமெரிக்காவில் வாங்கிய மின் விளக்கு 110V க�ொடுத்தால் 40W
மின் சக்தியை பெற்றுக் க�ொள்ளும்.

இதனை கூர்ந்து கவனித்தால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்


புலப்படும். இந்தியாவில் வாங்கிய மின் விளக்கு 0.17W மின்சார
ஓட்டத்தில் 40W மின்சக்தியை உபய�ோகிக்கிறது. அமெரிக்காவில்
வாங்கிய மின் விளக்கு 0.36A மின்சார ஓட்டத்தில் 40W மின் சக்தியை
உபய�ோகிக்கிறது. அதாவது அமெரிக்காவில் உள்ள மின் விளக்கிற்கு
இந்தியாவில் உள்ள மின் விளக்கு ப�ோல் இரண்டு மடங்கு மின்சார
ஓட்டம் தேவைப்படுகிறது.

இப்பொழுது அமெரிக்காவில் வாங்கிய 40W மின் விளக்கை


இந்தியாவில் உபய�ோகித்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
அமெரிக்காவில் வாங்கிய மின் விளக்கு 110V க�ொடுத்தால் 40W
மின்சக்தியை உபய�ோகப்படுத்துகிறது.

அமெரிக்காவில் வாங்கிய 40W மின் விளக்கை இந்தியாவில்


உபய�ோகித்தால் அதன் வழியாக 0.75A மின் ஓட்டம் ஏற்படும்.
அமெரிக்காவில்

V = I x R
I = V / R
= 230V / 305Ω
= 0.75A

வாங்கிய 40W மின் விளக்கு 0.36A மின் ஓட்டத்தினை தாங்கும்.


ஆனால் அதனை இந்தியாவில் உபய�ோகித்தால் அதன் வழியாக

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 41


0.75A மின்சார ஓட்டம் ஏற்பட்டு அந்த மின் விளக்கு வணாகிவிடும்.

இந்தியாவில் வாங்கிய 40W மின் விளக்கை அமெரிக்காவில்
உபய�ோகித்தால் என்ன நடக்கும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

இப்பொழுது இந்த மின் விளக்கிற்கு 110V க�ொடுத்தால் என்ன


நடக்கும் என்று பார்க்கலாம்.

V = I x R
I = V / R
= 110V / 1353Ω
= 0.08A

இந்த மின் விளக்கின் வழியாக குறைந்த மின் ஓட்டம் செல்வதால்


மின் விளக்கு மிக குறைந்த ஒளியைத் தரும்.

நமக்கு இப்பொழுது ஒன்று தெளிவாக புரிந்திருக்கும். அமெரிக்கா


வில் 110V வ�ோல்டேஜை உபய�ோகிப்பதால் ஒரே சக்தியுள்ள மின்
ப�ொருளுக்கு இந்தியாவில் உபய�ோகிக்கும் மின் ஓட்டத்தை விட
இரண்டு மடங்கு மின் ஓட்டம் தேவை.

ஒரே சக்திக்கு அதிக மின் ஓட்டம் தேவைப்படுவதால், அமெரிக்கா


வில் ஒயரிங் செய்யும் ப�ோது அதிக விட்டமுள்ள மின் கம்பிகளை
உபய�ோகிக்க வேண்டும். அதன் காரணமாக செலவு அதிகரிக்கும்.
இந்தியாவில் ஒயரிங் செலவு குறைவு. அமெரிக்காவில் ஒயரிங்
செலவு அதிகம். பிறகு ஏன் அமெரிக்காவில் 110V வ�ோல்டேஜை
உபய�ோகிக்கிறார்கள்? தவறுதலாக மனிதர்கள் 230V வ�ோல்டேஜ் உள்ள
மின்கம்பியைத் த�ொட நேரிடும் ப�ோது உயிரிழப்பு நேரிடுவதற்கான
வாய்ப்புகள் அதிகம். ஆனால் 110V வ�ோல்டேஜ் உள்ள மின்கம்பியைத்
த�ொட நேரிடும் ப�ோது உயிரிழப்பு நேரிடுவதற்கான வாய்ப்புகள்
குறைவு.

நாம் இதுவரை பல்வேறு விதமான த�ொடர் மற்றும் பக்க


இணைப்புகளைப் பற்றியும் Ground (Common point) பற்றியும் பார்த்தோம்.

42 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இப்பொழுது “மைனஸ் வ�ோல்டேஜ்” என்றால் என்ன என்று
பார்க்கலாம். உதாரணமாக நாம் கடையில் பேட்டரி வாங்கும் ப�ோது
3V, 6V, 9V பேட்டரி என்று கேட்டு வாங்குவ�ோம்.

இந்த 3V எதை குறிக்கிறது என்றால் பேட்டரியின் “+”-ற்கும் “-”-ற்கும்


உள்ள வித்தியாசம் 3V. இப்பொழுது ஒரு வ�ோல்ட் மீ ட்டர் அல்லது
மல்டி மீ ட்டரை உபய�ோகித்து இந்த பேட்டரியின் வ�ோல்டேஜை
அளந்தால் நமக்கு கீ ழ்க்கண்டவாறு வ�ோல்டேஜ் தெரியும்.

படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது ப�ோல் இணைத்தால் வ�ோல்ட் மீ ட்டர்


3V என்றும் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது ப�ோல் இணைத்தால் வ�ோல்ட்
மீ ட்டர் -3V என்றும் காண்பிக்கும். பேட்டரி 3V-ஆக இருக்கும் ப�ோது
ஏன் இந்த வித்தியாசம்? இதை நாம் சரியாக புரிந்து க�ொண்டால்
மின் இணைப்புகளில் “மைனஸ் வ�ோல்டேஜைப்” பற்றி எளிதாக
புரிந்து க�ொள்ள முடியும். இதனை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம்
விளக்கலாம்.

கணேஷ் மற்றும் ரஹீமிடம் சிறிது பணம் உள்ளது. இருவருக்கும்


இடையே உள்ள வித்தியாசம் ரூ.1000 கணேஷிடம் ரஹீமை விட
அதிக பணம் உள்ளது.

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 43


இதனையே ரஹீமிடம் கணேஷை விட ரூ.1000 குறைவாக
உள்ளது என்றும் கூறலாம். நாம் யாரை க�ொண்டு மற்றவரை
அளவிடுகிற�ோம�ோ அதைப் ப�ொறுத்து குறை/நிறை உள்ளது.

கீ ழ்க்கண்ட மின் இணைப்பில் ஒவ்வொரு புள்ளியிலும் என்ன


வ�ோல்டேஜ் உள்ளது என்று கண்டறியலாம்

VAB என்றால் A புள்ளியில் B புள்ளியை


விட எவ்வளவு அதிக அல்லது குறைவான
வ�ோல்டேஜ் உள்ளது என்று ப�ொருள்.

VBA என்றால் B புள்ளியில் A புள்ளியை


விட எவ்வளவு அதிக அல்லது குறைவான
வ�ோல்டேஜ் உள்ளது என்று ப�ொருள்.

VA என்றால் A புள்ளியில் Ground-ஐ விட


எவ்வளவு அதிக அல்லது குறைவான
வ�ோல்டேஜ் உள்ளது என்று ப�ொருள்.

VB என்றால் B புள்ளியில் Ground-ஐ விட எவ்வளவு அதிக அல்லது


குறைவான வ�ோல்டேஜ் உள்ளது என்று ப�ொருள்.

VAB = VA - VB

VBA = VB - VA

44 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


VA = 15V

VB = 10V

VC = 5V

VD = 0V

VAB = 5V

VAC = 10V

VAD = 15V

VA = 10V

VB = 5V

VC = 0V

VD = -5V

VAB = 5V

VAC = 10V

VAD = 15V

VA = 5V

VB = 0V

VC = -5V

VD = -10V

VAB = 5V

VAC = 10V

VAD = 15V

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 45


ஒரே இணைப்பில் ஒவ்வொரு புள்ளியிலும் வ�ோல்டேஜ் வேறுபடு
கிறது. இது நாம் எந்த புள்ளியை Ground புள்ளியாக தேர்வு செய்கி
ற�ோம�ோ அதைப் ப�ொறுத்து மாறுபடுகிறது.

குறிப்பு: Ground-ஐயும் Earth-ஐயும் குழப்பிக் க�ொள்ளாதீர்கள். Ground


என்பது ப�ொது புள்ளி. Earth என்பது எப்பொழுதுமே 0V. உதாரணமாக
நாம் லிப்டில் பயணம் செய்யும் ப�ோது 0-ற்கு (Ground) கீ ழே உள்ள
தளங்களை -1, -2, -3 என குறிப்பிடுவர்.

நாம் இதுவரை படித்தவை மிகவும் முக்கியமானவை. இவற்றை


மனத ்தில் இருத்திக்க ொண்டு பி ன்ன ர் அ டுத ்த பாக ங்க ளுக் கு
செல்லுங்கள்.

46 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


இதுவரை படித்தவற்றின் சுருக்கம்.

1. த�ொடர் மின் இணைப்பில் மின் ஓட்டம் (Current) எல்லா


மின்தடைகளிலும் ஒரே அளவாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு
மின்தடையின் இடையிலும் உள்ள மின் அழுத்தம் (Voltage)
வெவ்வேறாக இருக்கும். எல்லா மின்தடையின் இடையே உள்ள
மின் அழுத்த அளவுகளைக் கூட்டினால் அது மின் இணைப்பில்
உள்ள மின்கலத்தின் மின்னழுத்த மதிப்பிற்கு சமமாக இருக்கும்.

V = V1 + V2 + V3
R = R1 + R2 + R3
I = V/R
V1 = I x R1
V2 = I x R2
V3 = I x R3

2. பக்க மின் இணைப்பில் மின் அழுத்தம் (Voltage) எல்லா மின்தடை-


யிலும் ஒரே அளவாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு மின்தடையின்
வழியாக செல்லும் மின் ஓட்டம் (Current) வெவ்வேறாக இருக்கும்.
எல்லா மின்தடைகளின் வழியாக செல்லும் மின்சாரத்தின் அளவு
களை கூட்டினால் அது மின்கலன் தரும் மின் ஓட்டத்திற்கு சமமாக
இருக்கும்.

I = I1 + I2 + I3
1/R = 1/R1 + 1/R2 + 1/R3
I = V/R
I1 = V / R1
I2 = V / R2
I3 = V / R3

பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 47


3. மின் இணைப்புகளை பற்றிய அறிவு எலக்ட்ரானிக் துறைக்கு
மிகவும் அவசியம். கீ ழ்க்கண்ட மின் இணைப்புகள் எலக்ட்ரானிக்
துறைக்கு அடிப்படை.

a. மின்தடை மற்றும் சுவிட்சு


(ஆஃப்) த�ொடர் இணைப்பு.

I = 0A
Vo = 5V - 0V
= 5V

b. மின்தடை மற்றும் சுவிட்சு


(ஆன்) த�ொடர் இணைப்பு.

I = 1A
Vo = 5V - 5V
= 0V

c. மாறும் மின்தடை மற்றும்


மாறா மின்தடை த�ொடர் இணைப்பு.

0A < I < 1A
0V < Vo < 5V

48 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


a, b டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸிற்கும்,

c அனலாக் எலக்ட்ரானிக்ஸிற்கும் அடிப்படை.

4. Ground என்பது ப�ொதுப் புள்ளி (Common Point). இது மாறும்


தன்மை உள்ளது. சில சமயம் 0V ப�ொதுப் புள்ளியாக இருக்கும். சில
சமயம் 3V கூட ப�ொதுப் புள்ளியாக இருக்கும்.

ஆனால் எர்த் (Earth) மாறாதது. அது எப்பொழுதும் 0V-ல் இருக்கும்.

https://www.quora.com/Balajee-Seshadri/answers
எங்களின் பிற வெளியீடுகள்

50 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)


பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction) மின் இணைப்புகள் 51
பாலாஜி 1963ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்பொழுது
திருவாரூர்) உள்ள கூத்தனுர் கிராமத்தில் பிறந்தார். கூத்தனுர்
கிராமத்தில் உள்ள “அப்பு குட்டை” பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை
படித்தார். பின்னர் மன்னார்குடியில் உள்ள கணபதி விலாஸ் பள்ளியில்
8ஆம் வகுப்பு வரை படித்தபின், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
மன்னார்குடியில் உள்ள நேஷனல் மேல்நிலை பள்ளியில் படித்தார்.
பி.இ (EEE) ப�ொறியியல் படிப்பினை காரைக்குடி அழகப்பா ப�ொறியியல்
கல்லூரியில் படித்த பின் கரக்பூர் ஐஐடில் M.Tech (Instrumentation)
படிப்பினை 1986ஆம் வருடம் முடித்தார்.

1987ஆம் ஆண்டு சனவரி மாதம் HCL கம்பெனியில் R&D (H/W)


பிரிவில் வேலை செய்யத் துவங்கி இன்று வரை (2017) கடந்த 30
வருடங்களில் மின்னணுதுறையில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு
கம்பெனிகளில் வேலை செய்துள்ளார். ச�ொந்தமாகவும் கம்பெனிகள்
நடத்தியுள்ளார்.

30 வருட மின்னணு துறை அனுபவத்தில் 10 வருடங்கள் அமெரிக்கா,


ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பணிபுரிந்துள்ளார். மின்னணு
துறையில் HW, SW மற்றும் VLSI பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
நிறைய மின்னணு ப�ொருட்கள் வடிவமைத்துள்ளார்.

தமிழ் மீ தும், தமிழ் மக்கள் மீ தும், தமிழ்நாட்டின் மீ தும் உள்ள


தீராத ஆசையினால் தனது 30 வருட மின்னணு துறை அனுபவங்களை
புத்தகங்களாக எழுதுகிறார்...
~ 50

52 மின் இணைப்புகள் பாகம் 1 - ஒர் அறிமுகம் (Introduction)

You might also like