You are on page 1of 52

ELECTRIC SHOCKER

எலக்ட்ரிகல்
(ELECTRICAL)

பாகம் - 1 ஓர் அறிமுகம்

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 1


2 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்

https://www.clubhouse.com/club/core-electronics-career
எலக்ட்ரிகல்
(ELECTRICAL)

பாகம் - 1
ஓர் அறிமுகம்

பாலாஜி (Balajee)
பி.இ., எம்.டெக்
whatsapp: 97908 73099
https://www.quora.com/profile/Balajee-Seshadri
1,60,00,000 Content Views
33,000 Followers
1,200 Answers

https://www.linkedin.com/in/balajeeseshadri/
12,000+ Connections
எலக்ட்ரிகல்
1
பாலாஜி

முதல் பதிப்பு: ஜூன் 2017


வெளியிடுவ�ோர்: சார்க் பப்ளிகேஷன்
நெ.28, டாக்டர் அம்பேத்கர் ர�ோடு, க�ோடம்பக்கம்,
சென்னை - 600 024.
வடிவமைப்பு: சார்க் டிசைனிங் சென்டர்
பக்கங்கள்: 48

விலை: Rs.50
M¬ô: `50

ELECTRICAL
Balajee

© SHARK PUBLICATION
First Edition: June 2017
Published by SHARK PUBLICATION
No.28, Dr.Ambedkar Road, Kodambakkam, Chennai - 600 024.
Layout: Shark Designing Centre - 90250 44447
Pages: 48

Price: Rs.50

புத்தகம் வாங்க த�ொடர்புக்கு

6v˜~Ê©{IBuB„Ê6^MDX}Ê
8_HNÊIR{IYƒÊ
BY_GtBY}PKØÊ

All rights reserved. No part of this book may be reprinted or reproduced or utilised in any form or by any electronic,
mechanical or other means, now known or hereafter invented, including photocoping and recording, or in any informa-
tion storage or retrieval system, without permission in writing from the Author.
முன்னுரை

“சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பார்கள். அதேப�ோல்


சிறிதளவு எலக்ட்ரிகல் அறிவு நமக்கு நிறைய விசயங்களை எளிதில்
புரியவைத்து விடும். ஒவ்வொரு எலக்ட்ரானிக்ஸ் மாணவருக்கும்
எலக்ட்ரிகல் பற்றிய அறிவு தேவை. எலக்ட்ரானிக்ஸ் என்பது
எலக்ட்ரிகலின் ஒரு பிரிவே.

Mathematical - Mathematics
Physical - Physics
Optical - Optics

இதேப�ோல்

Electrical - Electronics (Electrics)

நான் உரையாடிய வரை நிறைய எலக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு


எலக்ட்ரிகல் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கிறது. அதனால்தான்
எலக்ட்ரானிக் மாணவர்களுக்கு ‘எலக்ட்ரானிக்’ புரிவது சிறிது
கடினமாக இருக்கிறது. அதேப�ோல் எல்லா இன்டெர்வியூகளிலும்
எலக்ட்ரிகல் பற்றிய கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.
ஆகவே ஒவ்வொரு எலக்ட்ரானிக்ஸ் மாணவருக்கும் எலக்ட்ரிகல்
பற்றிய அடிப்படை அறிவு மிகவும் அவசியம். எலக்ட்ரானிக்ஸ்
என்பது எலக்ட்ரிகல் சிக்னல்களை உள் ளீடாகப் பெற்று எலக்ட்ரிகல்
சிக்னல்களை வெளியீடாகத் தரும் ஒரு துறை.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 5


நன்றியுரை

எந்நன்றி க�ொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை


செய்ந்நன்றி க�ொன்ற மகற்கு.
குறள்: 110

நான் வாழ்வில் உயர்வதற்கு உதவியவர்கள் எராளம். ஒவ்வொரு


வருக்கும் எனது ஒவ்வொரு புத்தகத்தையும் காணிக்கையாக்குகிறேன்.
மன்னார்குடி நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு
முடித்து +1-ல் த�ொழில் கல்வி பிரிவில் மின்னணு சாதனங்கள்
படிப்பைத் தேர்ந்தெடுத்த ப�ோது, முதலில் ஆசிரியர் திரு.
ராஜக�ோபாலன் (ஆர்.ஆர்) அவர்களைச் சந்தித்த ப�ோது, இது எனது
வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கனவிலும்
எதிர்பார்க்கவில்லை. மின்சாரவியலை மிக எளிமையாக செய்முறை
களுடன் ஆசிரியர் ராஜக�ோபாலன் ச�ொல்லிக் க�ொடுத்த முறை
இன்றும் நினைவில் உள்ளது. எல்லா மின்சார சாதனங்களையும்
(மின் விசிறி, மின்சார இஸ்திரி பெட்டி, மின்சார ம�ோட்டார்) பிரித்து,
ஒவ்வொரு பாகமாக விளக்கி ச�ொல்லிக் க�ொடுத்த விதம் இன்றும்
கண் முன்னே நிற்கிறது. எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும்
அலுக்காமல் ச�ொல்லிக்கொடுத்த அவரது ப�ொறுமை மிகவும்
சிறந்தது. மாணவர்கள் நன்றாக கற்க வேண்டும் என்பது அவரது
விருப்பம். அப்போது அதன் அருமை புரியவில்லை. ஆனால்
நான் மற்றவர்களுக்கு ச�ொல்லிக் க�ொடுக்கத் த�ொடங்கிய ப�ோது
நன்றாகவே புரிந்தது. இன்றும் அவர் மன்னார்குடியில் இருந்து
சென்னை வரும் ப�ோதெல்லாம் அவரை சந்திக்கத் தவறுவதில்லை.
நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி தமிழில் ப�ொறியியல்
கல்வியைக் கற்பிக்கப்போவதாக ச�ொன்னவுடன் அதை ஆதரித்து
ஊக்கமளித்தார். ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் ராஜக�ோபாலனைப்
ப�ோல் ஓர் ஆசிரியர் பள்ளி நாட்களில் கிடைத்தால் வாழ்வில்
அவர்களது உயர்வு நிச்சயம்.

6 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


பதிப்புரை

சார்க் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இந்த புத்தகத்தை வெளியிடு


வதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டு. தமிழில் இதுப�ோன்ற
புத்தகம் நிறைய இருந்தாலும் இது சற்று புதியது. காரணம், இதன்
ஆசிரியர் 30 ஆண்டுகள் மின்னணு துறையில் அனுபவம் நிறைந்தவர்.
அந்த அனுபவ அறிவையே புத்தகமாகத் தந்துள்ளார்.

கற்றதும் பெற்றதும் சேரும்போது, அதன் பலன் அதிகம்.


இப்புத்தகத்தை நீங்கள் படிப்பத�ோடு மட்டும் இல்லாமல், இதில்
க�ொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி முயற்சி செய்தீர்கள்
என்றால் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

வாழ்த்துக்களுடன்

சார்க் பதிப்பகம்

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 7


எலக்ட்ரிகல்
(ELECTRICAL)

முதலில் நாம் மின்சாரம் என்றால் என்ன? என்று புரிந்துக�ொள்ள


முயற்சிப்போம். மின்சாரத்தைப் பற்றி அறிந்து க�ொள்வதற்கு
முன்பாக, நாம் நம்முடைய நடைமுறை வாழ்வில் ஒரு ப�ொருளை
எவ்வாறு விற்கிற�ோம் அல்லது பெறுகிற�ோம் என்று பார்க்கலாம்.
பண்டைய காலத்தில் பண்டமாற்று முறை என்று ஒன்று இருந்தது.
அதாவது நம்மிடம் ஒரு ப�ொருள் இருந்தால், நமக்கு தேவையான
ப�ொருள் இருப்பவரிடம் நமது ப�ொருளைக் க�ொடுத்து நமக்குத்
தேவையான ப�ொருளைப் பெற்றுக்கொள்வோம்.

இதில் ஒரு சிக்கல் உள்ளது. நமக்குத் தேவையான ப�ொருள்


உள்ளவருக்கு நமது ப�ொருள் தேவையில்லை என்றால், நம்மால்
பண்டமாற்றம் செய்ய இயலாது.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 9


இதற்குத் தீர்வு காண்பது சுலபம். நடுவில் ஒருவர் எல்லோரிடமும்
வாங்கி வைத்துக்கொண்டு மற்றொருவருக்குத் தருவார்.

ஒருவர் எல்லாவற்றையும் வாங்கிவைத்துக்கொள்ள இயலாது.


ஆகவே இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பணம் என்ற ப�ொருள்
உருவானது. நாம் நம்மிடம் உள்ள அரிசியை பணத்திற்கு விற்று,
பிறகு தேவையான ப�ொழுது பணத்தைக் க�ொடுத்து நமக்குத்
தேவையான ப�ொருளை வாங்கிக் க�ொள்ள இயலும்.

தஞ்சையில் விளைவித்த அரிசியை டெல்லியில் விற்று, அதற்குப்


பதிலாக டெல்லியில் கிடைக்கும் ஒரு ப�ொருளை சென்னைக்குக்
க�ொண்டு வர அதிக நேரம் பிடிக்கும் மற்றும் மிகுந்த சிரமமான

10 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


காரியம். இதற்காக உருவாக்கப்பட்டதே பணம். பணத்தை எளிதில்
எடுத்துச் செல்ல முடிந்தது. இப்படித்தான் பணப் ப�ொருளாதாரம்
உருவானது.

இன்று ‘‘பணம் பத்தும் செய்யும்’’, ‘‘பணம் பாதாளம் வரை பாயும்’’,


‘‘பணம் இல்லை என்றால் பிணம்’’ என்று பல பழம�ொழிகள்
பணத்தைப் பற்றி வழக்கில் உள்ளன. அதேப�ோல் தான் எலக்ட்ரான்
ப�ொருளாதாரமும். எலக்ட்ரான் ப�ொருளாதாரத்திற்கு மின்சாரவியல்
என்று பெயர். சென்னையில் ஒருவர் வீசுகிற விசிறியின் காற்று
எவ்வாறு திருநெல்வேலியில் உள்ள ஒருவருக்குக் கிடைக்கிறது
என்று பார்க்கலாம். அதற்கு முன் மின்சாரம் பற்றிய சில அடிப்
படைகளை அலசுவ�ோம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 11


“அவனின்றி அணுவும் அசையாது” என்பது ஆன்றோர் ச�ொல்.
ஆனால் இன்று அந்த அணுவில் உள்ள ‘எலக்ட்ரானின்’ ஓட்டமின்றி
உலகமே இயங்காது. அந்த எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்சார
ஓட்டம். இன்று மின்சாரம் இல்லாமல் உலகமே இயங்காது. அந்த
மின்சாரத்தின் அடிப்படைகளைப் பற்றி இனி பார்ப்போம்.

ப�ொதுவாக நமது வீடுகளில் நாம் 60W, 40W மின் விளக்குகள்


அல்லது மின்விசிறிகளை உபய�ோகிக்கிற�ோம். நமது மின்சார
வாரியம் நமக்கு இரண்டு மின்கம்பிகளைத் தந்திருக்கிறது. ஒரு
மின்கம்பி மூலமாக நமது வீட்டிற்குள் எலக்ட்ரான்கள் நுழைந்து,
அதே அளவு எலக்ட்ரான்கள் மற்றொரு கம்பி மூலமாக வெளியே
செல்கிறது. எவ்வளவு எலக்ட்ரான்கள் நமது வீட்டிற்கு வருகிறது
என்பதனைக் கணக்கிடுவதற்காகவே மின்சார வாரியம் ‘மின்சார
மீ ட்டர்களை’ நமது வீட்டில் ப�ொருத்தியிருக்கிறார்கள். அந்த மின்சார
மீ ட்டர்கள் நமது வீட்டிற்குள் எவ்வளவு எலக்ட்ரான்கள் நுழைகின்றன
என்பதனைக் கணக்கிடுகின்றன. அதன்படி நமது மின்சார வாரியம்
ஒரு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை
மீ ட்டரில் உள்ள எண்ணிக்கையைக் குறித்துக் க�ொண்டு நம்மிடம்
பணம் வசூலிக்கின்றனர். வீட்டிற்கு உள்ளே வரும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கையும் வீட்டிற்கு வெளியே செல்லும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கையும் சமம். நாம் எந்த எலக்ட்ரான்களையும் நம்மிடம்
வைத்துக்கொள்வதில்லை. பின் எதற்காக மின்சார வாரியம் நம்மிடம்
பணம் வசூலிக்கிறது.

இது சிறிது குழப்பமாகத் தெரிந்தாலும் இதனைப் பற்றி


விளக்குவதே இப்புத்தகத்தின் ந�ோக்கம்.

12 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் ஒரு ப�ொருளை சிறியதாக்கிக் க�ொண்டே சென்றால்
நம்மால் பிளக்க முடியாத அளவிற்கு சிறியதாக உள்ள துகளின்
பெயர் ‘அணு’. உலகில் உள்ள எல்லா ப�ொருட்களின் அடிப்படையே
‘அணு’ தான். ஆனால் ஒவ்வொரு ப�ொருளிலும் உள்ள அணுக்களின்
எண்ணிக்கையும், அவற்றின் அமைப்பும் வெவ்வேறானவை. இனி
நாம் அணுவைப் பற்றி ஆராய்வோம்.

அணு என்பது சிறிய பிளக்க முடியாத ப�ொருள். ஆனால் இதுவும்


சில/பல சிறிய ப�ொருட்களின் த�ொகுப்பு ஆகும். எப்படி சூரியன்
நடுவிலும், மற்ற கிரகங்கள் எப்படி சூரியனைச் சுற்றி வருகிறத�ோ,
அதேப�ோல் அணுவின் நடுவில் ‘நியூக்ளியஸ்’ என்ற பகுதி உள்ளது.
அது அதிக எடை உள்ள பகுதி. அதனைச் சுற்றி ‘எலக்ட்ரான்கள்’
என்ற துகள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

மின்சாரம் என்பது இந்த அணுக்களில் உள்ள எலக்ட்ரான்களின்


இடப்பெயர்ச்சி ஆகும்.

நியூக்ளியஸில் புர�ோட்டான், நியூட்ரான் என்ற இரண்டு ப�ொருட்கள்


உள்ளன. புர�ோட்டான்கள் எலக்ட்ரான்களை விட 1800 மடங்கு
அதிக எடை க�ொண்டது. ஒரு அணுவில் உள்ள புர�ோட்டான்கள்
மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமமாகவே இருக்கும். ஒரு
அணுவில் உள்ள எலக்ட்ரான்களை வெளியேற்றுவதற்கும், ஒரு
அணுவில் எலக்ட்ரான்களை உள்ளே செலுத்துவதற்கும் ஒரு சக்தி
தேவை. ப�ொதுவாக புர�ோட்டான்களை ‘+’ துகள்கள் என்றும், எலக்ட்
ரான்களை ‘-’ துகள்கள் என்றும் அழைக்கிற�ோம். புர�ோட்டான்கள்

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 13


எலக்ட்ரான்களை விட அதிக எடையுள்ளதாகவும், அணுவின் நடுவில்
உள்ள நியூக்ளியஸில் இருப்பதாலும், மேலும் நியூக்ளியஸை
சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்களை புர�ோட்டான்கள் இழுத்துக்
க�ொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நினைத்ததாலும் புர�ோட்டான்களை
‘+’ துகள்கள் என்றும் எலக்ட்ரான்களை ‘-’ துகள்கள் என்றும்
அழைத்தனர். இதனைபற்றி விரிவாக எமது ‘அணுவின் ரகசியங்கள்’
என்ற புத்தகத்தில் படிக்கலாம்.ஒரு அணுவில் புர�ோட்டான்களின்
எண்ணிக்கையும், எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சம அளவில்
இருப்பதால் அணு எப்போதும் சமநிலையில் இருக்கும்.

ஒரு அணுவில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரித்தால்,


அது சமநிலையிலிருந்து ‘-’ நிலைக்கு மாறிவிடும்.

அதேப�ோல் ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை


புர�ோட்டான்களின் எண்ணிக்கையைவிட குறைவாக இருந்தால்,
அந்த அணு ‘+’ நிலைக்கு மாறிவிடும்.

வெளியிலிருந்து சக்தியை தருவதன் மூலம் சமநிலையில் உள்ள


ஒரு ப�ொருளை சமனற்ற நிலைக்கு மாற்ற முடியும்.

14 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


இவ்வாறு ஒரு ப�ொருளின் சமநிலையை மாற்றி அதனை
“-”ஆகவ�ோ அல்லது “+” ஆகவ�ோ மாற்றும் செயலை மின்சார
உற்பத்தி என்று ச�ொல்கிற�ோம். சில ப�ொருட்களுக்கு மட்டும்
இத்தகைய தன்மை உள்ளது. அந்தப் ப�ொருட்களில் எலக்ட்ரான்களை
சுலபமாக வெளியேற்றவ�ோ அல்லது உள் செலுத்தவ�ோ முடியும்.
செப்புக்கம்பி, அலுமினியக் கம்பி ப�ோன்ற ப�ொருட்களை உதாரண
மாக எடுத்துக்கொள்ளலாம். பல வழிகளில் அணுவில் உள்ள
எலக்ட்ரான்களை குறைக்கவ�ோ, கூட்டவ�ோ முடியும்.

வழி 1: காந்த முறை

செப்புக் கம்பியை காந்தக் கதிர்களுக்கிடையே குறுக்காக


அசைப்பது.

இந்த முறையில் தான் மேட்டூர், நெய்வேலி, கல்பாக்கம்,


கூடன்குளம் ஆகிய இடங்களில் மின்சாரம் உற்பத்தியாகிறது.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 15


இவற்றைப் பற்றி விரிவாக எமது ‘மின்சாரம் - உற்பத்தி’ என்ற
புத்தகத்தில் பார்க்கலாம்.

வழி 2: வேதியியல் முறை

வேதியியல் முறை மூலமாக ஒரு ப�ொருளின் அணுவில்


உள்ள எலக்ட்ரான்களை குறைக்கவ�ோ, கூட்டவ�ோ முடியும். இந்த
முறையில்தான் மின்கலன்கள் (Batteries) வேலை செய்கிறது.

16 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


வழி 3: சூரியக் கதிர் முறை

சூரியக்கதிரை ஒரு ப�ொருளின் மீ து விழ வைப்பதன் மூலம் அப்


ப�ொருளின் அணுவில் உள்ள எலக்ட்ரான்களைக் குறைக்கவ�ோ,
கூட்டவ�ோ முடியும். இந்த முறைக்கு ச�ோலார் மின்சாரம் (Solor
Electricity) என்று பெயர்

இதேப�ோல் பல வழிகளில் ஒரு ப�ொருளின் அணுவில்


உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கூட்டவ�ோ அல்லது
குறைக்கவ�ோ முடியும். இதனைத்தான் நாம் மின்சார உற்பத்தி என்று
அழைக்கிற�ோம்.ஆங்கிலத்தில் “Generation” என்று அழைக்கிற�ோம்.
நாம் மின்சாரத்தைத் தான் உற்பத்தி செய்கிற�ோம். அதாவது, மற்ற
ஆற்றல்களை மின்சார ஆற்றலாக மாற்றுகிற�ோம்.

“ஆற்றலை ஆக்கவ�ோ அழிக்கவ�ோ முடியாது.”

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 17


மின் அழுத்தம்
(VOLTAGE)

மின்னழுத்தம் பற்றி அறிந்துக�ொள்வதற்கு முன்பாக நாம் எப்படி


தண்ணீர் த�ொட்டியிலிருந்து தண்ணீர் எப்படி குழாய் வழியாக
பாத்திரத்திற்குச் செல்கிறது என்பதனை தெரிந்து க�ொள்ளலாம். நாம்
சென்ற அத்தியாயத்தில் எவ்வாறு பணத்தையும் எலக்ட்ரான்களையும்
ஒப்பிட்டோம�ோ, அதேப�ோல் இந்த அத்தியாயத்தில் மின்சாரத்தை
தண்ணீர�ோடு ஒப்பிட்டு மின் அழுத்தத்தைப் பற்றி அறிந்துக�ொள்ளலாம்.

தண்ணீர் த�ொட்டியில் உள்ள தண்ணீரின் மட்டமும் குழாயின்


மட்டமும் ஒரே அளவில் இருந்தால் தண்ணீர் குழாயில் செல்வ
தில்லை. ஆனால் தண்ணீரின் மட்டம், குழாயின் மட்டத்தைவிட
அதிக அளவில் இருப்பின் தண்ணீர் குழாயில் செல்கிறது. இதற்கு
தண்ணீரின் அழுத்தம் என்று பெயர்.

18 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


தண்ணீர்த் த�ொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பது
முக்கியமல்ல. மேலே உள்ள படத்தில் நாம் மூன்று குழாய்களைத்
தண்ணீர் த�ொட்டியுடன் இணைத்துள்ளோம். குழாய் 1--ல் அதிக
அழுத்தத்துடன் தண்ணீர் வெளியேறும். குழாய் 2-ல் குறைந்த
அழுத்தத்துடனும் வெளியேறும். ஆனால் குழாய் 3--லிருந்து
தண்ணீரே வெளியேறாது. குழாய்களில் ஏற்படும் தண்ணீர் அழுத்தம்
குழாய்களைய�ோ அல்லது தண்ணீர்த் த�ொட்டியின் தண்ணீர்
மட்டத்தைய�ோ ப�ொறுத்தது அல்ல. அது குழாய்க்கும் தண்ணீர்
மட்டத்திற்குள்ள இடைவெளியைப் ப�ொறுத்தது. இதுவரை நாம்
படித்தவற்றைப் புரிந்துக�ொண்டு இனி மின்னழுத்தத்தைப் பற்றி
புரிந்துக�ொள்வோம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 19


நாம் ப�ொருட்களின் அணுவில் உள்ள எலக்ட்ரான்களைக்
குறைக்கவ�ோ, கூட்டவ�ோ செய்வதன் மூலம் இரு ப�ொருட்களுக்கு
இடையே வித்தியாசத்தை உருவாக்குகிற�ோம்.

இந்த மின்னழுத்த வித்தியாசத்தை (A-B)


“Potential Difference”
என்று அழைக்கின்றனர். இதனை (Voltage) என்று
வ�ோல்டேஜ்
அழைக்கின்றனர். இதன் குறியீடு ‘V’. அதன் அளவை Volts என்ற
அளவால் குறிப்பிடுகின்றனர்.

இதில் ஒரு சந்தேகம் உள்ளது. ‘B’ ப�ொருளில் அதிக எலெக்ட்ரானும்


‘A’ ப�ொருளில் குறைந்த எலெக்ட்ரானும் உள்ளன. இருப்பினும் VAB
பாசிடிவ்-ஆக இருக்கிறது. இதன் காரணத்தைப் பிறகு பார்ப்போம்.

1 வ�ோல்ட் என்பது 6.242 x 1018 (6242000000000000000) எலக்ட்


ரான்களின் வித்தியாசம் என்று ப�ொருள். உதாரணமாக ஒருவரிடம்
ரூ.1000-ம் மற்றொருவரிடம் ரூ.800-ம் இருந்தால், இருவருக்கும்
இடையே உள்ள வித்தியாசம் ரூபாய் 200 அல்லது 20,000 பைசாக்கள்.

இங்கு 1 ரூபாய் என்பது 100 பைசாக்கள். அதேப�ோல் மின்சார


வியலில் 1 வ�ோல்ட் என்பது 6242000000000000000 எலெக்ட்ரான்கள்.

20 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


ஆகவே 1.5V, 3V, 12V, 24V, 48V, 110V, 230V,11KV , 33KV, etc.
என்றால் 1 வ�ோல்டுடன் (6242000000000000000 எலெக்ட்ரான்கள்)
அந்த எண்ணைப் பெருக்கினால் வரும் எண் அளவு எலெக்ட்ரான்கள்
வித்தியாசம் என்று ப�ொருள்.

இரு ப�ொருட்களுக்கு இடையே 1.5 Volts என்றால், குறைந்த எலக்ட்


ரான்கள் வித்தியாசமும், 230 Volts என்றால், அதிக எலக்ட்ரான்கள்
வித்தியாசமும் உள்ளது என்று ப�ொருள். இந்த வ�ோல்டேஜ் எவ்வாறு
நமக்கு உபய�ோகப்படுகிறது என்பதனை அடுத்த அத்தியாயங்களில்
பார்க்கலாம்.

வ�ோல்டேஜைக் குறிப்பிடுவதற்கு இரண்டு புள்ளிகள் வேண்டும்.


வ�ோல்டேஜ் என்பது Potential Difference, அதாவது வித்தியாசம்.

VAB = 5V

இதனை நாம் பணப் ப�ொருளாதாரத்தின் மூலம் புரிந்துக�ொள்ள


முயல்வோம். உதாரணமாக இரண்டு நபர்கள் ரமேஷ் மற்றும்
கணேஷிடம் ரூபாய் 4,000 மற்றும் ரூபாய் 2,000 இருப்பதாக
வைத்துக் க�ொள்வோம். ரமேஷிடம் கணேஷை விட ரூபாய் 2,000
அதிகமாக உள்ளது. அதேப�ோல் ரமேஷ் மற்றும் கணேஷிடம் ரூபாய்
10,000 மற்றும் ரூபாய் 8,000 இருப்பதாக வைத்துக் க�ொள்வோம்.
இப்போதும் ரமேஷிடம் கணேஷை விட ரூபாய் 2,000 அதிகமாக
உள்ளது. ஆகவே வித்தியாசமே முக்கியம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 21


மின் ஓட்டம்
(CURRENT)

எலக்ட்ரான்கள் ஓட வேண்டுமானால், அதற்கு ஒரு சக்தி தேவை.

இந்த சக்தியை தரும் ப�ொருளின் A,B என்ற பகுதிகளுக்கு இடையே


உள்ள மின் அழுத்த வித்தியாசத்தைப் ப�ொருத்தே எலக்ட்ரான்களின்
ஓட்டம் இருக்கும்.

உதாரணமாக மேலே உள்ள படத்தில் நாம் தரும் சக்தி அணு 1-ல்


உள்ள எலக்ட்ரானை இடம் பெயரச் செய்கிறது. அந்த எலக்ட்ரான்
அணு இரண்டிற்குச் சென்று அணு 2-ல் உள்ள எலக்ட்ரானை இடம்
பெயரச் செய்கிறது. இந்த எலக்ட்ரான்களின் வேகம் வினாடிக்கு
3,00,000 கி.மீ . ஆகும். ஆக, மேட்டுரில் புறப்பட்ட எலக்ட்ரான் உந்து
சக்தி சென்னையை வந்தடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது
புலப்படும்.

ப�ொருளுக்குப் ப�ொருள் அதன் உள்ளே உள்ள அணுவின்


அமைப்பைப் ப�ொருத்து. அது எலக்ட்ரான் ஓட்டத்திற்குத் தரும்
தடை மாறுபடுகிறது. அந்த மின்தடையின் ஊடே எலக்ட்ரான்களை
மின் அழுத்தத்தின் மூலம் தள்ளினால் எலக்ட்ரான்கள் உரசி வெப்பம்
ஏற்படுகிறது. இதனைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்க்கலாம்.

22 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் ஒவ்வொரு ப�ொருளுக்கும் அதன் தன்மையைப் ப�ொருத்து
ஓர் அளவால் (Unit) குறிப்பிடுகிற�ோம். சிலவற்றிற்குக் கிராம் என்ற
அளவையும், சிலவற்றிற்கு லிட்டர் என்ற அளவையும், சிலவற்றிற்கு
எண்ணிக்கையை அளவாகவும் உபய�ோகப்படுத்துகிற�ோம். அதே
ப�ோல் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை, ஒரு வினாடிக்கு எவ்வளவு
எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கடக்கிறது என்பதை
ஆம்பியர் (Ampere) என்ற அளவால் குறிக்கிற�ோம். 1 ஆம்பியர்
என்பது சுமாராக ஒரு வினாடிக்கு 6242000000000000000 (6.242 * 1018)
எலக்ட்ரான்களின் ஓட்டத்தினைக் குறிக்கிறது.

உதாரணமாக 1 mA (1 milli ampere) current என்றால் 6242 000


000 000 000 எலக்ட்ரான் ஒரு வினாடி நேரத்தில் அந்த கம்பியில்
செல்கிறது என்று ப�ொருள்.

மீ ண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிற�ோம், இரு பகுதிகளுக்கு


இடையே உள்ள மின்சார ஓட்டத்தின் அளவு, அந்த இரு பகுதிகளுக்கு
இடையே உள்ள மின் அழுத்த வித்தியாசத்தையும், அந்த ஓடுபாதை
எலக்ட்ரான்களுக்குத் தரும் தடையையும் ப�ொறுத்தது.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 23


மின்தடை
(RESISTANCE)

நாம் ஏற்கெனவே படித்தபடி எலக்ட்ரான்களின் ஓட்டம் எல்லா


ப�ொருட்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது அந்தப் ப�ொருட்
களில் உள்ள அணுவில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நியூக்ளியஸுடன்
இணைக்கப்பட்டுள்ளது என்பதனைப் ப�ொருத்தது. அதேப�ோல்
ப�ொருட்களின் அளவைப் (Size) ப�ொருத்தும் எலக்ட்ரான்களின்
ஓட்டம் இருக்கும். உதாரணமாக,

மேலே உள்ள தண்ணீர்த் த�ொட்டிகளில் ஒரே அளவு தண்ணீர்


உள்ளது. அதேப�ோல் குழாய்களும் ஒரே மட்டத்தில் இணைக்கப்
பட்டுள்ளது. ஆனால் குழாய்களின் அளவில் வித்தியாசம் உள்ளது.
முதல் படத்தில் உள்ள குழாய் சிறிய விட்டம் உடையதாகவும், 2-ஆம்
படத்தில் உள்ள குழாய், அதைவிட அதிக விட்டம் உடையதாகவும்,
கடைசிக் குழாய் மிக அதிக விட்டம் உடையதாகவும் உள்ளது. ஆகவே

24 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


முதல் குழாயின் வழியாக தண்ணீர் மிகக் குறைவாகவும், கடைசிக்
குழாயின் வழியாக தண்ணீர் அதிகமாகவும் வெளியேறுகிறது.

உதாரணமாக,

முதல் குழாயில் ஒரு நிமிடத்திற்கு 1 லிட்டர் எனவும்,

2வது குழாயில் ஒரு நிமிடத்திற்கு 2 லிட்டர் எனவும்,

3வது குழாயில் ஒரு நிமிடத்திற்கு 3 லிட்டர் எனவும்

தண்ணீர் வெளியேறும்.

குழாய் பெரிதாக பெரிதாக தண்ணீர் வெளியேறும் அளவும்


அதிகமாகிறது. இதனை வேறு விதமாகவும் குறிப்பிடலாம். அதாவது
குழாயின் அளவு அதிகமாக அதிகமாக அந்தக் குழாய்த் தண்ணீர்
ஓட்டத்திற்குத் தரும் தடை குறைகிறது. இதனையே நாம் மின்சார
ஓட்டத்திற்கும் பயன்படுத்தலாம். அதாவது மின்கம்பியின் விட்டம்
அதிகமாக அதிகமாக அது மின்சார ஓட்டத்திற்குத் தரும் தடை
குறைகிறது.

குறிப்பிட்ட உல�ோகங்களில் அணுக்களுக்கு இடையே உள்ள


இடைவெளி அதிகம். எந்தப் ப�ொருட்களில் இடைவெளி அதிகமாக
உள்ளத�ோ, அந்தப் ப�ொருட்கள் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு
குறைந்த தடை தரும். இதனால் இந்த ப�ொருட்களில் உள்ள
அணுக்களில் உள்ள எலக்ட்ரான்களை இடம்பெயரச் செய்வதற்கு
சிறிதளவு சக்தியே தேவை. எந்த அளவு சக்தி க�ொடுத்தால் எந்த
அளவு எலக்ட்ரான்கள் இடம்பெயரும் என்பதற்கு ஒரு அளவுக�ோல்
உள்ளது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட ப�ொருள் ஒரு குறிப்பிட்ட
அளவு தடையை (Resistance) எலக்ட்ரான் இடப்பெயர்ச்சிக்குத் தரும்
எனில், நாம் தரும் சக்திக்கு ஏற்றவாறு இடப்பெயர்ச்சி ஏற்படும்.

இந்த தடையை மின்தடை என்று அழைக்கிறார்கள். எல்லா


ப�ொருட்களும் ஒரு குறிப்பிட்ட மின்தடையை மின்சார ஓட்டத்திற்குத்
தருகிறது. மின் அழுத்தத்தை அதிகரிக்கும் ப�ோது மின்சார ஓட்டம்
மின்தடையை மீ றி அதிகரிக்கிறது. இந்த மின்தடையை “Ohm” என்ற

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 25


அளவால் குறிப்பிடுகின்றனர். மின்தடையின் குறியீடு “R”. மின்
தடையின் அளவை “Ω” என்ற குறியீட்டால் குறிப்பர்.

மின்சாரத்திற்கு அதிக தடை தரும் ப�ொருளை ‘இன்சுலேடர்’


(Insulator), அதாவது மின் கடத்தான் என்று அழைக்கின்றனர்.
மின்சாரத்திற்கு குறைந்த தடை தரும் ப�ொருளை ‘கண்டக்டர்’
(conductor), அதாவது மின் செலுத்தான் என்று அழைக்கின்றனர். சில
ப�ொருட்கள் குறைந்த வெப்ப நிலையில் இன்சுலேடராகவும், அதிக
வெப்பநிலையில் கண்டக்டராகவும் வேலை செய்கின்றன.

26 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


மின்சக்தி
(POWER)

நாம் இதுவரை மின் அழுத்தம் (V), மின் ஓட்டம் (I) மற்றும் மின்
தடை (R) ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இப்போது நாம் இந்த
மின்சார ஓட்டத்தினால் நமக்கு என்ன பயன்? என்று பார்ப்போம்.
இதற்கு நாம் சிறிது பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதாவது ஆதி
காலத்தில் முதலில் மனிதன் எப்படி தீயை உருவாக்கினான் என்று
பார்ப்போம். இரண்டு சிக்கிமுக்கிக் கற்களை உராயும்பொழுது அது
முதல் கல்லிற்கு சிறிது தடையை ஏற்படுத்துகிறது. அந்த தடையை
மீ றுவதற்கு அதிக சக்தியைத் தரும் ப�ோது, அந்த சக்தி வெப்பமாக
மாறுகிறது.

மின்தடை வழியாக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சார


ஓட்டம் செல்லும் ப�ோது எலக்ட்ரான்கள் உராய்வினால் மின்தடை
வெப்பமடைகிறது. மின்தடை தாங்க முடியாத அளவு வெப்பமடையும்
ப�ோது அது காற்றில் உள்ள ஆக்ஸிசனுடன் கலந்து எரிந்து
விடுகிறது. இதனைத் தடுப்பதற்காக மின் தடையை ஒரு வெற்றிடக்
குழாயினுள் வைத்தனர். அப்போது மின் தடை வெப்பமடையும்
ப�ோது எரியாமல் ஒளிரத் த�ொடங்குகிறது. இதுதான் மின்விளக்கு
ஒளிர்தலின் காரணம். மின் விளக்கின் உதவியால் நாம் மின்சார
ஓட்டத்தை ஒளியாக மாற்றுகிற�ோம். ஆகவே மின்சார ஓட்டத்திற்கு
ஒரு பயன் ஏற்பட்டுவிட்டது.

மின்கம்பியை இரண்டு காந்த துண்டுகளுக்கு (North & South)


இடையே வைத்து அந்த மின்கம்பியில் மின்சாரத்தைப் பாய்ச்சினால்,
அந்த மின் கம்பி சுற்றும். இதுதான் ம�ோட்டார் வேலை செய்யும்
தத்துவம். இதனைப் பற்றி விரிவாக எமது அடுத்தப் புத்தகங்களில்
படிக்கலாம். மின்விளக்கு ஒளிர்வதற்கும், ம�ோட்டார் சுற்றுவதற்கும்
மின்சக்தி தேவை.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 27


எல்லா மின் ப�ொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட மின் தடை இருக்கும்.
மின்பொருளின் மின் தடை எப்போதும் ஒரே அளவாக இருக்கும்.
ஆகவே மின் அழுத்ததை மாற்றுவதன் மூலம் மின்சார ஓட்டத்தை
மாற்றலாம். ஒவ்வொரு மின்பொருளும் அதன் மூலம் செல்லும் மின்
ஓட்டத்திற்கு ஏற்றாற் ப�ோல் சக்தியை வெளியிடும். ஆகவே ஒரு
குறிப்பிட்ட மின்னழுத்தத்திற்கு அந்த மின்பொருள், ஒரு குறிப்பிட்ட
சக்தியை வெளியிடும். எல்லா மின்பொருட்களும் ஒரு குறிப்பிட்ட
மின்சக்தியை (Electrical Power) எடுத்துக்கொண்டு வேறு சக்தியாக
(வெப்பமாக, ஒளியாக, இயக்கமாக) வெளியிடும்.

மின் சக்தியின் அளவை Watt என்ற அளவால் குறிப்பிடுகின்றனர்.


ஆகவே நமது வீட்டில் உள்ள 40W மின் விளக்கை எடுத்துக்
க�ொண்டோமேயானால் அதுவும்

ஒரு மின்தடையே

28 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் மின்தடையை Ohm என்ற அளவால் குறிப்பிடுகிற�ோம்.
ஆனால் மின் விளக்கை Watt என்ற அளவால் குறிப்பிடுகிற�ோம்.
ஏன் இந்த குழப்பம். இதில் குழப்பம் ஏதுமில்லை. மின் விளக்கை
வாங்கும் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மின்தடையைப் பற்றித்
தெரியாது. அவர்களுக்கு எளிதில் புரிந்து க�ொள்வதற்காக மின்
விளக்கின் சக்தியை, வாட் (Watt) என்ற அளவால் குறிப்பிடுகிற�ோம்.
நாம் மின்விளக்கை ஒரு மின்சப்ளையுடன் இணைத்துவிட்டால்
அதில் மின்சார ஓட்டம் ஏற்படுகிறது. ஆகவே 40W மின்விளக்கு
40W மின்சக்தியைப் பெற்று க�ொண்டு அதற்கு ஈடான ஒளியைத்
தருகிறது.

இப்பொழுது ஒரு குழப்பமான ஒரு தகவலைப் பார்க்கப்போகிற�ோம்.


புரிந்துக�ொள்ள முயலுங்கள். புரியாவிட்டால் விட்டுவிடுங்கள். பிறகு
சில முறைப் படித்தால் தானாகவே புரிந்துவிடும். நாம் முன்பே
கூறியபடி ஒவ்வொரு மின்பொருளுக்கும் ஒரு மின்தடை இருக்கும்.
அது மாறாது. ஆகவே நாம் ஒரு குறிப்பிட்ட மின்னழுத்தத்தை
அந்த மின்பொருளுக்கு செலுத்தினால், அந்த மின்பொருள்
குறிப்பிட்ட சக்தியை வெளியிடும். அது எப்போதும் மாறாது. நாம்
மின்னழுத்தத்தை மாற்றினால் மின்பொருள் தரும் சக்தியும் மாறும்.
இங்கு தான் நாம் ஒரு முக்கியமான தகவலை கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு மின்பொருளும் ஒரு குறிப்பிட்ட சக்தியை தருவதற்காக
வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த சக்தியைவிட அதிகமாக சக்தியை
அந்த மின்பொருள் தரும்படி செய்தால், அந்த மின்பொருள் வீணாகி
விடும். ஒவ்வொரு மின்பொருளின் மின்தடையும் நிலையாக
இருப்பதால், அதிக மின்னழுத்தைச் செலுத்தினால், அந்த மின்பொருள்
வீணாகிவிடும்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 29


மேலே க�ொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பில் நாம் 40W
மின்விளக்கிற்கு 230V-ஐ விட அதிகமான வ�ோல்டேஜ் செலுத்தினால்,
அந்த மின்விளக்கு வீணாகிவிடும். நாம் இந்தியாவில் எலக்ட்ரிகல்
கடையில் சென்று 40W மின்விளக்கை வாங்கினால், அதற்கு
40W@230V என்று ப�ொருள், அதாவது அந்த மின்விளக்கு 230V
க�ொடுத்தால் மட்டுமே 40W-க்கு உரிய ஒளியைக் க�ொடுக்கும். 230V-
க்கு குறைவாகக் க�ொடுத்தால் அது குறைந்த ஒளியையும், 230V-
க்கு அதிகமாகக் க�ொடுத்தால் அதிக ஒளியையும் தரும் (பிறகு
வீணாகிவிடும்). ஆனால் அமெரிக்காவில் எலக்ட்ரிகல் கடையில்
சென்று 40W மின்விளக்கை வாங்கினால், அதற்கு 40W@110V என்று
ப�ொருள். ஆகவே நாம் அமெரிக்காவில் வாங்கிய மின்பொருளை
இந்தியாவில் உபய�ோகித்தால் 110V தருவதற்குப் பதிலாக 230V
தருவதால் மின்விளக்கு வீணாகிவிடும். அதனால்தான் சில
சமயங்களில் நமது வீடுகளில் 230-ற்கு அதிகமாக வ�ோல்டேஜ் வரும்
ப�ோது மின்பொருட்கள் வீணாகிவிடுகின்றன. ஏன் சில சமயங்களில்
230V பதிலாக அதிக மின்னழுத்தம் வருகின்றது என்ற காரணத்தை
பின்னர் பார்க்கலாம்.

ஒவ்வொரு மின்பொருளும் ஒரு குறிப்பிட்ட மின்சக்தியை எடுத்துக்


க�ொண்டு, வேறு சக்தியாக மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே அந்த மின்சக்திக்கு மேல் கூடுதல் மின்சக்தியை அந்த
மின்பொருளுக்கு அளித்தால், அந்த மின்பொருள் வீணாகிவிடும்.
ஒரு மின்பொருள் அது உள்ளே எடுத்துக்கொள்ளும் மின்சக்தியும்
வெளியே அனுப்பும் மாற்று சக்தியும் சமமாக இருக்குமா? என்றால்,
அது மின்பொருளுக்கு மின்பொருள் வேறுபடும். இது குறித்து தான்
விஞ்ஞானிகளும், ப�ொறியாளர்களும் த�ொடர்ந்து ஆராய்ச்சி செய்து
க�ொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆரம்பகால வெற்றிடக்
குழாய் மின்விளக்குகள் 40W மின்சக்தியை உள்ளே எடுத்துக்கொண்டு
குறைந்த ஒளியைத் தந்தன. அடுத்து CFL வகை மின் விளக்குகள்
அதே ஒளியைத் தருவதற்கு 20W மின் சக்தியை மட்டும் உள்ளே
எடுத்துக் க�ொண்டன. அடுத்து LED வகை மின்விளக்குகள் அதே
ஒளியைத் தருவதற்கு 10W மின் சக்தியை மட்டுமே உள்ளே எடுத்துக்
க�ொள்கின்றன.

ஒரு மின்சாதனத்தின் சக்தி (power) என்பது அந்த மின் சாதனம்


ஒரு வினாடியில் வெளியிடும் மின் ஆற்றல் (energy) ஆகும்.
இதனைப் பற்றி தெளிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

30 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


மின் ஆற்றல்
(ENERGY)

நாம் மின் ஆற்றலுக்கும் மின் சக்திக்கும் உள்ள வித்தியாசத்தை


பார்க்கலாம். முந்தைய அத்தியாயத்தில் மின் சக்தி என்றால் என்ன
என்று பார்த்தோம். மின் சக்தி என்பது ஒரு வினாடியில் வெளிப்படும்
மின் ஆற்றலே ஆகும். மின் ஆற்றல் என்பது ம�ொத்தத்தில்
வெளிப்படும் அளவு. உதாரணமாக நம்மிடம் 10000 ரூபாய் இருப்பது
மின் ஆற்றலை ப�ோன்றது. தினமும் 100 ரூபாய் செலவழிப்பது மின்
சக்தி ப�ோன்றது. நமது சக்தி தினமும் 100 ரூபாய் செலவழிப்பது
மட்டுமே. தினமும் 100 ரூபாய் செலவழித்தால் நம்மால் 100
நாட்களில் 10000 ரூபாய் செலவழிக்க முடியும். தினமும் ரூபாய் 1000
செலவழித்தால் 10 நாட்களில் ரூபாய் 10000 செலவழிக்க முடியும்.
உதாரணமாக 40W பல்பு என்று கடையில் வாங்கினால், அதில் உள்ள
40W என்பது அந்த மின் விளக்கானது ஒளியைத் தருவதற்கு ஒரு
வினாடியில் 40W மின் ஆற்றலைச் செலவிடும் என்று ப�ொருள்.
நாம் முன்பே பார்த்தபடி, அந்த விளக்கு 40W மின்சக்திக்கு ஈடான
ஒளியைத் தரும். நாம் 10 வினாடிகள் பல்பினை உபய�ோகித்தால்
அந்த பல்பானது 10*40=400W மின்சாரத்தை உபய�ோகிக்கிறது. ஆகவே
பல்பில் குறிப்பிட்டுள்ள 40W என்பது ஒரு வினாடிக்கு 40W மின்
ஆற்றலை வெளியிடும் என்று குறிப்பதாகும். இதனை மின்சக்தி
என்று அழைக்கிற�ோம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 31


நாம் அதிக நேரம் பல்பினை ஒளிரச் செய்தால், அதிக மின்
ஆற்றலைச் செலவழிக்கிற�ோம். அதனை கட்டுப்படுத்துவதற்காக
நாம் மின்சார சப்ளைக்கும் பல்பிற்கும் இடையே சுவிட்சை பயன்
படுத்துகிற�ோம்.

உதாரணமாக, நாம் 40W பல்பினை 10 வினாடிகள் ஒளிரவிட்டு


பிறகு சுவிட்சினை அணைத்து விடுகிற�ோம். பிறகு 1 மணி நேரம்
கழித்து நாம் மீ ண்டும் 40 வினாடிகள் பல்பினை ஒளிரவைத்தால்
ம�ொத்தமாக நாம் 50 வினாடிகள் பல்பினை ஒளிரவைத்திருக்கிற�ோம்.
ஆகவே அந்த 40W பல்பு, மின்சப்ளையிலிருந்து எடுத்துக்கொண்ட
மின் ஆற்றல் 50*40=2000W ஆனால் அந்த பல்பின் மின்சக்தி 40W
மட்டுமே அதாவது அந்த பல்பு ஒரு வினாடிக்கு எடுத்துக்கொண்ட
மின் ஆற்றல் 40W. ஆகவே மின் ஆற்றல் = மின் சக்தி X நேரம்.

32 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நமக்கு மின்சாரத்தை வழங்குவது மின்சாரத்துறை. அவர்கள்
மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு மற்றும் விநிய�ோகிப்பதற்கு செலவு
செய்யும் பணத்தை, மின்சார உபய�ோகிப்பாளரிடம் இருந்து
பெறுகிறார்கள். அதற்காக ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும்,
வணிக நிறுவனங்களிலும் மற்றும் த�ொழிற்சாலைகளிலும் நமது
மின்சாரத்துறை மின் ஆற்றல் கணக்கிடும் கருவியை (Energy Meter)
ப�ொருத்துகிறார்கள்.

இந்த மின் ஆற்றல் மீ ட்டரானது நாம் மின்சாரத்தை உபய�ோகப்


படுத்தும் ப�ொழுதெல்லாம் எவ்வளவு மின் சக்தியை உபய�ோகிக்-
கிற�ோம் என்பதை கூட்டிக்கொண்டே வரும். ஒரு மாதம் கழித்து,
நமது மின்சாரத்துறை ஊழியர், அந்த மீ ட்டரிலுள்ள அளவினை
குறித்துக்கொண்டு அதன்படி நம்மிடம் பணம் வசூலிப்பார். நம்
மின்சாரத்துறை எவ்வளவு மின் ஆற்றலுக்கு எவ்வளவு பணம்
என்று கணக்கிடுகிறது என்று பார்க்கலாம். உதாரணமாக நாம் 40W
பல்பினை 3 மணி நேரம் உபய�ோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.

3*60 = 180 நிமிடங்கள்

180*60 = 10800 வினாடிகள்

10800*40 = 432000 Watts

இது ஒரு 40W பல்பினை 3 மணி நேரம் உபய�ோகப்படுத்துவதற்கே


இத்தனை பெரிய எண். ஆகவே இதனை எவ்வாறு மிகச் சிறிய
எண்ணில் குறிப்பிடுவது என்று பார்க்கலாம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 33


உதாரணமாக, நாம் 5600 பைசா 78000 பைசா என்று ச�ொல்வதற்கு
பதில் 56 ரூபாய் மற்றும் 780 ரூபாய் என்று சுருக்கமாகச்
ச�ொல்லலாம். அதேப�ோல் மின் ஆற்றலை Watts என்று ச�ொல்வதற்கு
பதிலாக Watthour-ல் குறிப்பிடுகிறார்கள் அதாவது ஒரு பல்பினை ஒரு
வினாடி உபய�ோகிப்பதனை W என்று குறிப்பிட்டால், 1 மணி நேரம்
உபய�ோகிப்பதை Wh(Watt hour) என்று குறிப்பிடுவார். உதாரணமாக ஒரு
40W பல்பினை ஒரு மணி நேரம் (3600 வினாடிகள்) ஒளிர்வித்தால்
அது 40*3600=144000W மின் ஆற்றலைச் செலவழித்திருக்கும். இதனை
144000W என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 40Wh என்று குறிப்பிடுவர்.
ஆகவே மின் சக்தியை W என்ற குறியீட்டிலும் மின் ஆற்றலை Wh
என்ற குறியீட்டிலும் குறிப்பர். அதேப�ோல் 1000Wh-ஐ 1KWh (1 Kilo Watt
hour) என்று குறிப்பிடுவர். மின்சாரத்துறை 1000Wh அல்லது 1WKh-ஐ
ஒரு யூனிட் மின்சாரம் என்று குறிப்பிடுவர். மின்சாரத்துறையின்
அளவுகள் எல்லாம் யூனிட் மின்சாரத்திலேயே இருக்கும். உதாரண
மாக மின்சாரத்துறை 1 யூனிட் மின்சார பயன்பாடிற்கு ரூபாய் 2
வசூலித்தால் அது 1000Wh (1KWh)-க்கு 2 ரூபாய் என்று ப�ொருள்.

அதாவது ஒரு 40W பல்பினை ஒரு மணி நேரம் ஒளிர வைத்தால்


அது 40Wh மின் ஆற்றலைப் பயன்படுத்தும். இப்பொழுது 40W பல்பினை
25 மணி நேரம் உபய�ோகித்தால் 25*40= 1000Wh மின் ஆற்றலை அந்த
பல்பு உபய�ோகப்படுத்தும். 1000Wh = 1KWh = 1 யூனிட். ஆகவே நாம் 40W
பல்பினை 25 மணி நேரம் ஒளிர வைத்தால் நாம் மின்சாரத்துறைக்கு
ரூபாய் 2 செலுத்தவேண்டும்.

25W பல்பு - 40 மணி நேரம் - 1000W - 1KWh - 1 யூனிட்

40W பல்பு - 25 மணி நேரம் - 1000W - 1KWh - 1 யூனிட்

100W பல்பு - 10 மணி நேரம் - 1000W - 1KWh - 1 யூனிட்

இதையே இன்றைய ம�ொபைல் ப�ோன்களில் வேறுவிதமாக


குறிப்பிடுகிறார்கள். 2000mAh, 3300mAh, 5000mAH என்று குறிப்
பிடுகிறார்கள். எப்படி நமது வீடுகளில் 230V மின்னழுத்தை உபய�ோகிக்

34 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


கிற�ோம�ோ, அதேப�ோல் ம�ொபைல் ப�ோன்களில் 3.7V அல்லது 4.2V
மின்னழுத்தத்தை உபய�ோகிக்கிற�ோம்.

நமது வீடுகளில் மின்சாரத்தை உபய�ோகிக்கும்போது நமக்கு


மின்சாரம் த�ொடர்ச்சியாக வந்து க�ொண்டிருக்கிறது. அதாவது
மின்சாரம் உற்பத்தியாகும் இடங்களில் த�ொடர்சியாக “+”-ற்கும்
“-”-ற்கும் உள்ள வித்தியாசத்தைப் பராமரிக்கிறார்கள். அது நடக்க
வில்லை என்றால் நமக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. அதாவது
“+”-ற்கும் “-”-ற்கும் இடையே எலக்ட்ரான் வித்தியாசம் இல்லாமல்
ப�ோய்விடும். அதேப�ோல் ம�ொபைல் ப�ோனிலும் மின்சாரத்தை
உபய�ோகித்துக்கொண்டே இருந்தால், பாட்டரியில் மின்னழுத்த
வித்தியாசம் குறைந்துக�ொண்டே வரும். திரும்பவும் மின்னழுத்த
வித்தியாசத்தை அதிகரிப்பதற்காக, நாம் ம�ொபைல் பாட்டரியை
சார்ஜ் செய்கிற�ோம். நாம் குறைந்த மின்சாரத்தை உபய�ோகித்தால்,
பாட்டரியில் உள்ள சார்ஜ் அதிக நேரத்திற்கு வரும்.

உதாரணமாக, ஒருவரிடம் ரூ.2500-ம் மற்றோருவரிடம் ரூ.1500-ம்


இருப்பதாக வைத்துக்கொள்வோம். இருவரும் சமமாக ஆவதற்கு
முதலாமவர் ரூ.500 தரவேண்டும், இரண்டாமவர் ரூ.500 பெற
வேண்டும். மேலும் முதலாமவர் ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே
தர முடியும் என்றால், முதலாமவர் இரண்டாமவருக்கு ரூ.500
க�ொடுக்க 5 நாட்கள் தேவைப்படும் அல்லது 5 நாட்களுக்கு தரும்
அளவிற்கு இரண்டாமவரை விட முதலாமவரிடம் அதிக பணம்
உள்ளது. ஆனால் இருவரும் சமம் ஆனவுடன் ஒருவருக்கொருவர்
பணப் பரிமாற்றம் நின்று விடும். இப்போது இருவருக்குமிடையே
உள்ள வித்தியாசம் ரூ.10000 எனில் ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 5
நாட்களுக்கு வழங்கமுடியும் அல்லது ரூ.100 வீதம் 50 நாட்களுக்கு
வழங்கமுடியும். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது இரு
வருக்கும் இடையே உள்ள வித்தியாசமே பணப் பரிமாற்றத்திற்கு
முக்கிய காரணம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 35


முதலாமவர் இரண்டாமவருக்கு பணத்தை க�ொடுத்துக்
க�ொண்டிருக்கும் ப�ோது, வேறு ஒரு நபர் இரண்டமாவரிடமிருந்து
பணத்தை எடுத்து முதலாமவருக்குக் க�ொடுத்துக் க�ொண்டிருந்தால்
முதலாமவருக்கும், இரண்டாமவருக்கும் பணவித்தியாசம் இருந்து
க�ொண்டே இருக்கும். இதனால் பணப் பரிவர்த்தனை நடந்துக�ொண்டே
இருக்கும். இதுதான் மேட்டூரிலும், நெய்வேலியிலும், கல்பாக்கத்திலும்
நடந்து க�ொண்டிருக்கிறது. அதனால்தான் நமக்கு வீடுகளில்
த�ொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

ம�ொபைல் ப�ோன் பாட்டரியில் இது நடக்காததால் தான், நாம்


அடிக்கடி ம�ொபைல் ப�ோன் பாட்டரியை சார்ஜ் செய்ய வேண்டி
யிருக்கிறது.

36 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


மின் அளவடு

(MEASUREMENT)

மின் அழுத்தம், மின் ஓட்டம் மற்றும் மின்தடை ஆகிய மூன்றிற்கும்


இடையே த�ொடர்பு உள்ளது. மின்னழுத்த வித்தியாசத்தை அதிகரித்
தால் அதிக மின்சார ஓட்டம் ஏற்படும். அதேப�ோல் மின் தடையைக்
குறைத்தால் அதிக மின் ஓட்டம் ஏற்படும். மின் அழுத்தம், மின்
ஓட்டம் மற்றும் மின்தடை ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள
த�ொடர்பை “George Simon Ohm” என்ற 1826-ஆம்
விஞ்ஞானி
ஆண்டு கண்டுபிடித்தார். இதுதான் மிகவும் பிரபலமான “Ohm’s Law”..
மின்சாரவியல் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த “Ohm’s Law”-ஐ
நன்றாக பயன்படுத்தத் தெரிந்து க�ொள்ளவேண்டும்..

Ohm’s Law:

V = I x R

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 37


அதாவது மின் அழுத்த வித்தியாசம் = மின் ஓட்டம் x மின் தடை

ஏற்கனவே குறிப்பிட்டபடி மின் அழுத்த வித்தியாசத்தை (V)


Volts (V) என்ற அளவாலும், மின்சார ஓட்டத்தை(I) ஆம்பியர்(A)
என்ற அளவாலும், மின் தடையை(R) ஒம்ஸ் (Ω) என்ற அளவாலும்
குறிப்பிடுவர். உதாரணமாக ஒரு மின்கலத்தின் அளவு 5V என்றால்
அதன் “-” மற்றும் “+” பின்னிற்கும் இடையே உள்ள மின் அழுத்த
வித்தியாசம் (Potential Difference) 5V என்று ப�ொருள்.

V = I x R

ஒரு மின்கலத்தின் மின் அழுத்தம் 1V என்றும் மின்தடையின்


அளவு 1Ω என்றும் இருந்தால் இந்த இணைப்பில் ஓடும் மின்சார
ஓட்டத்தின் அளவு 1A ஆகும். மின் அழுத்ததின் அளவையும், மின்
தடையின் அளவையும் மாற்றுவதன் மூலம் மின்சார ஓட்டத்தைக்
கட்டுப்படுத்தமுடியும். இது மிகவும் எளிமையான விதி. ஆனால்
மிகவும் முக்கியமான விதி. நாம் மின்சாரவியல், மின்னணுவியல்
(Electronics) மற்றும் கம்ப்யூட்டர் பற்றி தெளிவாக புரிந்து க�ொள்ள
இந்த விதியை நன்றாகப் புரிந்து க�ொள்ள வேண்டும். அதாவது
மின்கலன் தரும் மின் அழுத்தத்தின் காரணமாக மின்சார ஓட்டம்
ஏற்படுகிறது. மின்சார ஓட்டத்திற்கும், நாம் ஏற்கெனவே படித்த
எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம்
உள்ளது. இரண்டும் ஒரே அளவாக இருந்தாலும் மின்சார ஓட்டம்

38 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் இருக்கும். மின்சாரம்
கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெரிய விவாதங்களுக்குப்
பிறகு விஞ்ஞானிகள் மின்சார ஓட்டத்தை எலக்ட்ரான்களின்
ஓட்டத்திற்கு எதிர் திசையில் ஒப்புக்கொண்டார்கள். அது முதல்
உலகம் முழுவதும் மின்சார ஓட்டத்தை எலக்ட்ரான்களின்
ஓட்டத்திற்கு எதிர் திசையில் ஒப்புக் க�ொண்டார்கள்.

மின் தடையை

என்ற குறியீட்டால் குறிப்பிடுவர்

மின்கலத்தினை

என்ற குறியீட்டால் குறிப்பிடுவர். இதில் “-” என்ற பெரிய க�ோட்டை


“+” என்றும், “-” என்ற சிறிய க�ோட்டை “-” எனவும் குறிப்பிட்டனர்.
அதாவது இந்த மின்கலத்தின் மின் அழுத்தம் 5V என்றால் “+” பகுதி

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 39


“-” பகுதியைவிட 5V அதிக மின் அழுத்தத்தில் உள்ளதாக ப�ொருள்.
இது மின்சார ஓட்டத்திற்கும் ப�ொருந்தும். ஆகவே மின்சார ஓட்டம்
“+” பகுதியிலிருந்து “-” பகுதிக்கு ஏற்படும்.

ஆனால் எலக்ட்ரான்களின் ஓட்டம் “-” பகுதியிலிருந்து மின்கம்பி


மூலமாக “+” பகுதிக்கு பாயும்.

நாம் ஏற்கெனவே கூறியபடி உலகம் முழுவதும் மின்சார


ஓட்டத்தை எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில்
ஒப்புக்கொண்டபடியால், நாம் இனி நமது புத்தகங்களில் எல்லாம்
இதையே குறிப்பிடுவ�ோம். இனி நாம் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை
குறிப்பிடப்போவதில்லை.

மின் அழுத்தம் (V), மின்சார ஓட்டம் (I) மற்றும் மின் தடை (R)
ஆகியவற்றுக்குள்ள த�ொடர்புகளைப் பற்றி மட்டும் விரிவாகப்

40 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


பார்க்கலாம். நாம் ஏற்கெனவே விவாதித்தபடி “Ohm’s Law”, V, I,
மற்றும் R ஆகியவற்றுக்கிடையிலான த�ொடர்புகளை தெளிவுபடுத்தி
யிருக்கிறது.

V = I x R
1V = 1A x 1Ω

ஆகவே V = A x Ω

சில உதாரணங்கள் மூலம் இந்த “Ohm’s Law”-ஐ விரிவாகப் புரிந்து


க�ொள்ளலாம்.

V = I x R
I = V / R = 5V / 5 Ω = 1A

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 41


I = V / R = 5V / 5kΩ = 1mA

5000Ω என்பதை 5KΩ என்று குறிப்பிடுவ�ோம்.

Kilo - 1,000

Mega - 1,000,000

Giga - 1,000,000,000

Tera - 1,000,000,000,000

அதேப�ோல்

1/1,000 - milli - 1/Kilo

1/1000,000 - micro - 1/Mega

1/1000000000 - nano - 1/Giga

1/1000,000,000, 000 - pico - 1/Tera

103 - 1,000 - Kilo - K

106 - 1,000,000 - Mega - M

109 - 1,000,000,000 - Giga - G

1012 - 1,000,000,000, 000 - Tera - T

10-3 - 1/1,000 - milli - m

10-6 - 1/1,000,000 - micro - fc

10-9 - 1/1,000,000, 000 - nano - n

10-12 - 1/1,000,000,000, 000 - pico - p

ஆகவே மேலே கண்ட இணைப்பில்

I = V/R = 5V/5KΩ = (5/5) (1/K) (V/Ω) = (1)(m)(A) = 1 mA (1 milli Ampere)

அதேப�ோல்

42 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


I = V / R = 5V / 5MΩ = 1μA

நாம் மின்னழுத்தம், மின் ஓட்டம், மின்தடை ஆகியவற்றை உணர்


வதில்லை. ஆனால் இவற்றின் காரணமாக உருவாகும் சக்தியை
(ஒளியாக, காற்றாக, ஒலியாக etc....) உணர்கிற�ோம். இந்த சக்திகள்
மின்பொருள் மின்சக்தியை மாற்றுவதன் மூலமாக கிடைகிறது. நாம்
மின்னழுத்தம், மின் ஓட்டம், மின்தடை ஆகிய மூன்றுக்கும் மின்
சக்திக்கும் இடையே உள்ள த�ொடர்பைப் பற்றி பார்க்கலாம்.

ஏற்கெனவே விவாதித்தபடி “Ohm’s Law” V, I மற்றும் R ஆகியவற்றுக்


கிடையிலான த�ொடர்புகளை தெளிவுபடுத்தியிருக்கிறது.

V = I x R

இப்போது நாம் “Power Law” பற்றி பார்க்கலாம்.

Power Law:

P = V x I

Power = Voltage x Current

மின் சக்தி = மின் அழுத்தம் x மின் ஓட்டம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 43


மின் அழுத்தத்தை மாற்றும் ப�ோது மின்சக்தியும் மாறுகிறது.
நாம் முன்பே விவாதித்தபடி, நமக்கு 40W மின்விளக்கு ஏன் 230V
மின் அழுத்தம் க�ொடுத்தால் மட்டும், அது 40W-ற்கு உரிய ஒளியைத்
தரும் என்பது நன்றாகப் புரிந்திருக்கும். நாம் 40W மின்விளக்கில்
உள்ள மின் இழையின் மின் தடையைக் கண்டுபிடிக்கலாம்.

I = 40W / 230V = .17A


R = V / I = 230V / .17A = 1352Ohm

இதன் மூலம் நாம் 40W மின்விளக்கின் மின்தடையைக் கண்டு


பிடிக்கலாம். அடுத்து 60W / 230V மின்விளக்கின் மின்தடையை கண்ட
றியலாம்.

44 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


I = 60W / 230V = .26A
R = V / I = 230V / .26A = 884Ohm

அதாவது 60W மின்விளக்கின் மின்தடை 884 Ohm.

இதன் மூலம் ஒரு முக்கிய தகவல் தெளிவாகிறது. எல்லா மின்


சாதனங்களும் ஒரு மின்தடையை மின்சாரத்திற்கு வழங்குகிறது.

Power Law:

P = V x I

இதனை பல்வேறு விதமாகக் குறிப்பிடலாம்.

P = V x I = I x R x I = I x I x R = I2R
P = V x I = V x V / R = V2/R

“Ohm’s Law” மற்றும் “Power Law” பற்றி விளக்கமாக புரிந்து க�ொள்ள


நிறைய உதாரணங்களைப் புரிந்துக�ொள்ளவேண்டும். மேலும் அதிக
பிரச்சனைகளை (Problems) தீர்க்க வேண்டும். இவற்றைப் பற்றி
விரிவாக எமது ‘எலக்ட்ரிகல் - பிரச்சனைகள்’ என்ற புத்தகத்தில்
விவாதிப்போம்.

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 45


மின் கட்டுப்பாடு
(CONTROL)

நாம் இதுவரை மின் (Voltage), மின் விநிய�ோகம்


உற்பத்தி
(Current), மின் உபய�ோகம் (Resistance) மற்றும் மின் அளவீடு
(Measurments) பற்றி சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இனி,
நாம் மின் கட்டுப்பாடு (Control) பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு மின்பொருள் அது வடிவமைக்கப்பட்டுள்ள மின் ஓட்டத்தை
அளித்தால் அது குறிப்பிட்ட மின்சக்தியை வெளியிடும். உதாரணமாக
கீ ழே க�ொடுக்கப்பட்டுள்ள இணைப்புப் படத்தில் உள்ள மின்பொருள்
230W மின் சக்தியை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற மாற்று சக்தியை
வெளியிடும்..

இந்த மின் இணைப்பில் மின்பொருள் மின்சப்ளையுடன் நேரடியாக


இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்பொருள் எப்போதும் மின்

46 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


சப்ளையிடமிருந்து 230W மின்சக்தியைப் பெற்றுக்கொண்டு அதற்கு
ஈடான மாற்று சக்தியை வெளியிட்டுக் க�ொண்டிருக்கும்.

மேலே உள்ள இணைப்புப் படத்தில் மின் சப்ளைக்கும் மின்


ப�ொருளுக்கும் இடையே ஒரு சுவிட்சு இணைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சு OFF நிலையில் இருக்கும் ப�ோது மின்சார ஓட்டம் இருக்காது
அதன் காரணமாக, மின்பொருள் எந்த சக்தியையும் உள்ளே
எடுத்துக்கொள்ளாது. அதேப�ோல் எந்த சக்தியையும் வெளியிடாது.

சுவிட்சு ON நிலையில் இருக்கும் ப�ோது மின்சார ஓட்டம் ஏற்படும்.


அது மின்பொருளில் குறிப்பிட்ட அளவாக இருக்கும். ஏனெனில் நாம்
அந்த மின்பொருளில் குறிப்பிட்டுள்ள அளவு மின்னழுத்தத்தை அந்த
மின்பொருளுக்கு அளிக்கிற�ோம்.

இந்த இணைப்பு முறையில் மின்பொருளை ஆன் அல்லது


ஆப் மட்டுமே செய்ய முடியும். மின்பொருளின் மின்தடையும்
மின்பொருளுக்குத் தரும் மின்னழுத்தமும் மாறாமல் இருப்பதால்,
மின்பொருளின் உள்ளே செல்லும் மின் ஓட்டமும் மாறாமல் இருக்கும்
ஆகவே மின்பொருள் ஒரே அளவு சக்தியையே வெளியிட்டுக்
க�ொண்டிருக்கும். இது மின்விளக்கிற்கு பரவாயில்லை. ஆனால்

பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 47


மின்விசிறிக்கு இந்த முறை அவ்வளவாக பயனளிக்காது. வெயில்
காலத்தில் மின்விசிறி வேகமாக சுழலவேண்டும். குளிர் காலத்தில்
மெதுவாக சுழல வேண்டும். அதற்கு மின்விசிறி மெதுவாக சுழல
வேண்டும் எனில் மின்விசிறியின் உள்ளே குறைந்த மின்சார
ஓட்டமும், வேகமாக சுழலவேண்டும் எனில் மின்விசிறியின் உள்ளே
அதிக மின்சார ஓட்டமும் செல்ல வேண்டும். சுவிட்சினால் அதனை
செய்ய இயலாது. அதற்கு ரெகுலேட்டர் (Regulator) என்ற ப�ொருள்
தேவைப்படுகிறது. ரெகுலேட்டரை மின்பொருளுடன் இணைப்பதற்கு
கீ ழ்க்கண்டவாறு மின் இணைப்புத் தரவேண்டும்.

48 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்


நாம் மின்சாரத்தை இரண்டு வழிகளில் கட்டுப்படுத்தலாம் என்று
பார்த்தோம்.

1. சுவிட்சு (Switch) முறை

2. ரெகுலேட்டர் (Regulator) முறை.

இதனைப் பற்றி விரிவாக எமது அடுத்த புத்தகங்களில் பார்க்கலாம்.

https://www.quora.com/Balajee-Seshadri/answers
எங்களின் பிற வெளியீடுகள்
பாகம் 1 - ஒர் அறிமுகம் எலக்ட்ரிகல் 51
பாலாஜி 1963ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்பொழுது
திருவாரூர்) உள்ள கூத்தனுர் கிராமத்தில் பிறந்தார். கூத்தனுர்
கிராமத்தில் உள்ள “அப்பு குட்டை” பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை
படித்தார். பின்னர் மன்னார்குடியில் உள்ள கணபதி விலாஸ் பள்ளியில்
8ஆம் வகுப்பு வரை படித்தபின், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
மன்னார்குடியில் உள்ள நேஷனல் மேல்நிலை பள்ளியில் படித்தார்.
பி.இ (EEE) ப�ொறியியல் படிப்பினை காரைக்குடி அழகப்பா ப�ொறியியல்
கல்லூரியில் படித்த பின் கரக்பூர் ஐஐடில் M.Tech (Instrumentation)
படிப்பினை 1986ஆம் வருடம் முடித்தார்.

1987ஆம் ஆண்டு சனவரி மாதம் HCL கம்பெனியில் R&D (H/W)


பிரிவில் வேலை செய்யத் துவங்கி இன்று வரை (2017) கடந்த 30
வருடங்களில் மின்னணுதுறையில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு
கம்பெனிகளில் வேலை செய்துள்ளார். ச�ொந்தமாகவும் கம்பெனிகள்
நடத்தியுள்ளார்.

30 வருட மின்னணு துறை அனுபவத்தில் 10 வருடங்கள் அமெரிக்கா,


ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பணிபுரிந்துள்ளார். மின்னணு
துறையில் HW, SW மற்றும் VLSI பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
நிறைய மின்னணு ப�ொருட்கள் வடிவமைத்துள்ளார்.

தமிழ் மீ தும், தமிழ் மக்கள் மீ தும், தமிழ்நாட்டின் மீ தும் உள்ள


தீராத ஆசையினால் தனது 30 வருட மின்னணு துறை அனுபவங்களை
புத்தகங்களாக எழுதுகிறார்...
~ 50

52 எலக்ட்ரிகல் பாகம் 1 - ஒர் அறிமுகம்

You might also like