You are on page 1of 2

குறிப்புச்சட்டகம்:

முன்னுரை,

ஆசிரியரின் சிறப்பு,

சிட்டுக்குருவிகளின் காதலர்,

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சாதனை பெற செய்தல்,

பெற்ற விருதுகள்,

முடிவுரை.

முன்னுரை:

"சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார், சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு


கற்பிக்கிறார், உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்" என்று வில்லியம் ஆல்பர்ட் கூறியுள்ளர்.
அதன் படி பார்க்கும்போது என் வாழ்வில் எனுக்கு கிடைத்த உன்னதமான ஆசிரியரே திரு.ஜெ.ராஜசேகரன்
அவர்கள். இக்கட்டுரையின் வாயிலாக அவரை பற்றி அறிவோம்.

ஆசிரியரின் சிறப்பு:

இவர் 2016-ஆம் ஆண்டிலிருந்து எனது வேதியல் ஆசிரியராக உள்ளார். புத்தகங்களில் உள்ளவற்றை


எளிமையாக விளக்குவது மட்டுமின்றி செயல்முறை மூலமாகவும் விளக்குவார். மாணவர்களிடம் மிகவும் நெருக்கமாக,
நண்பர்களிடம் பழகுவது போல் பழகுவார். எத்தனை முறை சந்தேகங்கள் கேட்டாலும் முகம்சுளிக்கமல் பதிலளிப்பார்.
ATAL Tinkering ஆய்வகதின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் இவர் மாணவர்களிடம் சிந்தனையை தூண்டும்
விதத்தில் கேள்விகளை கேட்டு, ஊக்குவித்து அறிவியல் போட்டிகளில் பங்கேற்க செய்வார்.

சிட்டுக்குருவிகளின் காதலர்:

எனது ஆசிரியர் திரு.ஜெ.ராஜசேகரன் அவர்கள் தனது வீட்டில் பானைகள் வைத்து பறவைகள்


தங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளார். தற்போது ஐம்பதுக்கும் மேறபட்ட சிட்டுக்குருவிகளும் இருபதுக்கும்
மேற்பட்ட அரியவகை பறவைகளும் தினமும் இவரது வீட்டிற்க்கு வருகின்றன. அவற்றை தனது பிள்ளைகளை
போன்று வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி பத்திரிக்கை ஊடகங்களில் 'தினமும் காலை சிட்டுக்குருவிகள்
ஏற்படுத்தும் கீச் கீச் என்ற ஒலிதான் தனது வீட்டின் அலாரம்' என்று அவர் கூறியது வெளியானது. மேலும், 2021-ஆம்
ஆண்டு பசுமை குடி தன்னார்வ இயக்கத்தினர் "சிட்டுக்குருவிகளின் காதலர்" என்ற விருதை இவருக்கு
வழங்கியுள்ளனர்.

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சாதனை பெற செய்தல்:

பெற்ற விருதுகள்:

"வேலையில் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் திறனுடன் தனது மாணவர்களுக்கு உதவக்கூடிய ஒரு


ஆசிரியர் விருதுகளால் முடிசூட்டப்பட வேண்டும்" என்று ஹப்பார்ட் எல்பர்ட் கிரீன் கூறியுள்ளார். அதை
உண்மையாக்கும் விதத்தில் எனது ஆசிரியர் திரு.ஜெ.ராஜசேகரன் அவர்கள்: அறிவியல் நம்பிக்கை ஆசிரியர்
விருது,2018; சிறந்த சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு ஆசிரியர் பாராட்டுச் சான்றிதழ்,2019; அறிவுலக சிற்பி விருது,2020;
மக்கள் சாணக்கியா மாத இதழ் மகத்தான ஆசிரியர் விருது,2020; செந்தமிழ் சிற்பி விருது,2021; சிட்டுக்குருவிகளின்
காதலர் விருது,2021; சிறந்த ATAL TINKERING ஆய்வக ஒருங்கிணைப்பாளர் விருது,2021 என பல விருதுகை
பெற்றுள்ளார்.

முடிவுரை:

"பள்ளியில் மிக முக்கியமான நிகழ்வு, மிகவும் போதனையான பொருள், மாணவருக்கு மிகவும்


உயிருள்ள உதாரணம் ஆசிரியரே" என்று அடால்ஃப் டிஸ்டர்வெக் கூறியுள்ளார். நம் வாழ்வில் இவ்வளவு
முக்கியமான ஆசிரியர் எவ்வளவு சிறப்பாணவர் என்பது மிகவும் அவசியம்.

You might also like