You are on page 1of 11

விதிவருமுறை

(படிநிலை 2)
படைத்தல்

படைப்பாளர்கள்:
• அன்பரசி பரமசிவம்
• பவித்திரா விஜயகுமார்.
இலக்கணம் விதிவருமுறை
அணுகுமுறை
படிநிலை 2
ஆண்டு 6
திறன் 5.0 இலக்கணம்
பாடவேளை 1 பாடவேளை
உள்ளடகத் தரப் பட்டியல்
• உள்ளடக்கத் தரம்
5.9 வலிமிகா இடங்களை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
• கற்றல் தரம்
5.9.8 ன்று, ந்து என முடியும் வினையெச்சத்தின் பின்
வலிமிகா என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பாட துணைப்பொருள்
• சொற்குவியல் அட்டைகள்

• படைப்புக் கருவி (கணினி, ப்ரோஜெக்டர்)


பீடிகை
• ஆசிரியர் தயாரித்த சொற்குவியல் அட்டையைக்

கரும்பலகையில் ஒட்டுதல்.
• மாணவர்கள் சொற்குவியலுள்ள எழுத்துகளைக் கொண்டு

இன்றையப் பாடப்பகுதி தலைப்பைக் கண்டறிதல்.


• குறிப்பு வழங்குதல்.

• மாணவர்கள் கண்டுபிடித்த தலைப்பை வெண்பலகையில்

எழுதுதல்; வாசித்தல்.
• விடைகள்: வினையெச்சம் & வலிமிகா இடங்கள்
படிநிலை 1
• ஆசிரியர் சில வாக்கியத்தைப் கணினி வழி படைத்தல்
• 2 நிமிடம் மெளனமாக வாசித்துப் புரிந்து கொள்ள பணித்தல்.
• வாக்கிய எடுத்துக்காட்டு:
வாக்கியம் 1:
மேகம் இருண்டு காணப்பட்டதால் இன்று
கனத்த மழை பெய்யும் என்று அகிலா எண்ணி
வீட்டிலிருந்து குடையை எடுத்துச்
சென்றாள்.
வாக்கியம் 2:
எப்பொழுதும் கல கலவென இருக்கும் சீலன்
திடீரென்று வாட்டமாக இருப்பதைக் கண்டு
அவன் எதோ மனக்குழப்பத்தில் உள்ளான்
என்பதை அவனின் தாய் அறிந்து கொண்டார்.
படிநிலை 2
1) ஆசிரியர் கேள்வி கேட்டல்.
• வாக்கியத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சொற்களை யாதென்று
வினவுதல்; அச்சொற்களை வாசிக்க சொல்லுதல்.
• எப்பொழுது மழை பெய்யும் என அகிலா எண்ணிணாள் :-
இன்று
• எங்கிருந்து அகிலா குடை கொண்டு வந்தாள்
:-வீட்டிலிருந்து
• சீலனின் முகத்தைக் கண்ட அவனது தாய் என்ன செய்தார்?
:- அவன் மனக்குழப்பத்தில் இருப்பதை அறிந்துக் கொண்டார்.

• வினாக்கள் மூலம் விடை வரவழைத்து விதியை


விளக்கலாம்.
• இங்கு மாணவர்களை மையமாகக் கொண்ட
கற்றல் கற்பித்தல்
நடைப்பெருகின்றது
படிநிலை 3
• ஆசிரியர் மாணவர்கள் கண்டுபிடித்த விடைகளை விளக்குதல்.
• விடைகளில் ஏற்பட்டுள்ள வலிமிகா இடங்களை
மாணவர்களுக்கு எடுத்துக் கூறுதல்.
• வலிமிகா மற்றும் வலிமிகும் இடங்களுக்கிடையே உள்ள
மாற்றத்தை மாணவர்கள் குழுமுறையில் அமர்ந்து “round
table” எனும் விளையாட்டின் மூலம் ஆய்வு செய்து
கலந்துரையாடுதல்.
• ஆசிரியர் பல எடுத்துக் காட்டுகளைக் காண்பித்து விளக்குதல்.
• மாணவர்களின் அடைவுனிலையைக் கொடுக்கப்படும்
பயிற்சிகளின் மூலம் மதிப்பிடுதல்.
வேறு சில
எடுத்துக்காட்டுகள்
• அன்று சொன்னான்
• என்று கத்தினாள்
• துணிந்து போனான்
• பணிந்து சென்றான்
• சென்று பார்த்தான்
நன்றி

You might also like