You are on page 1of 6

www.tntextbooks.

in

அலகு - 2

குடிமக்களும்
குடியுரிமையும்

கற்றல் ந�ோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றுக் க�ொள்வதன் வாயிலாக மாணவர்கள் கீழ்க்கண்ட


அறிவினை பெறுகின்றனர்
▶ கு
 டிமக்கள் மற்றும் குடியுரிமைக்கான ப�ொருள் மற்றும் வரையறைகள்
▶ இந்திய அரசியலமைப்பு சட்டம்
▶ இந்தியக் குடியுரிமை பெறுதலும், நீக்குதலும்
▶ வெளிநாட்டுக் குடியுரிமையின் தன்மை
▶ குடிமக்களின் உரிமைகளும், ப�ொறுப்புகளும்

அறிமுகம் குடியுரிமை என்பது ஒரு குடிமகன்


அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில்
ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பற்றியும், சட்டப்படியாக வசிக்கும் உரிமையை
மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் வழங்குதலே ஆகும்
பற்றியும் படிக்கும் இயல் குடிமையியல்
ஆகும். குடிமகன் (Citizen) என்ற ச�ொல்
குடியுரிமையின் வகைகள்
‘சிவிஸ்’ (Civis) என்னும் இலத்தீன் குடியுரிமை இரண்டு வகைப்படும்
வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் 1. இ யற்கை குடியுரிமை: பிறப்பால்
ப�ொருள் பண்டைய ர�ோமாபுரியில் இருந்த இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை
நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும். 2. இ யல்புக் குடியுரிமை; இயல்பாக
நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் விண்ணப்பித்து பெறும் குடியுரிமை
இச்சொல் நாடுகளின் உறுப்பினர் என்ற
ப�ொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டம்,
குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், 1955
அரசியல் உரிமைகளை அனுபவிக்க தகுதி இ ந் தி ய க் கு டி ம க ன்
உடையவர்கள் ஆவர். தன்னுடைய குடியுரிமையை
பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை
குடிமகனும் குடியுரிமையும் இச்சட்டம் கூறுகிறது.
ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட
உரிமைகளையும், சலுகைகளையும் குடியுரிமையை பெறுதல்
அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் 1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச்
சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து
கடமைகளை நிறைவேற்றுபவருமே வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அவைகள்
அந்நாட்டின் குடிமகன் ஆவார். பின்வருவனவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு - குடிமையியல் 240

8th_Civics_TM_Unit-2.indd 240 4/15/2019 4:16:17 AM


www.tntextbooks.in

1. பிறப்பால் குடியுரிமை  இந்தியக் குடிமகனை திருமணம் செய்த


பெறுதல் ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும்
 இ க் கு டி யு ரி மை முன் ஏழு ஆண்டுகள் இந்தியாவில்
பி ற ப் பி ட த ்தா ல் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
தீ ர ்மா னி க ்க ப்ப டு கி ற து .
4. இயல்புக் குடியுரிமை
1950 ஜனவரி 26 முதல்
ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய
1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த
அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான
குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக
சான்றிதழை வழங்குகிறது.
இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை
பெறுகின்றனர்.  எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத
 1987 ஜூலை 1 மற்றும் அதற்குப் பின் ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின்
இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் குடிமகனாவதை தடுக்கும் ப�ொருட்டு இயல்பு
பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
குடிமகனாக இருத்தல் வேண்டும்.  வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர்
 2 004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் துறக்கும் பட்சத்தில் அவருக்கு இயல்பு
பின் இந்தியாவில் பிறந்தவர்கள் குடியுரிமை வழங்கப்படுகிறது.
பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.  ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில்
அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியக் அல்லது இந்திய அரசுப்பணியில் இருக்கும்
குடிமகனாகவும் மற்றொருவர் சட்ட பட்சத்தில் (அ) ஆண்டு முழுவதும் இந்தியாவில்
வி ர �ோத ம ா க இ ந் தி ய ா வி ற் கு ள் தங்கியிருக்கும் பட்சத்தில் இக்குடியுரிமையை
இடம்பெயர்ந்தவராக இல்லாதிருந்தால் பெறுகிறார்.
குடியுரிமை பெறுகின்றனர்.  ந ல்ல பண்புகளையும் இந்திய
2. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல் அ ர சி ய ல மை ப் பி ல் எ ட்டா வ து
 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர்10 க்கு அ ட்ட வ ணை யி ல் கு றி ப் பி ட் டு ள்ள
முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் ஏதேனும் ஒரு ம�ொழியில் (தற்போது 22
அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக ம�ொழிகள்) ப�ோதிய அறிவினையும் பெற்ற
இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் ஒருவர் இயல்புக் குடியுரிமையைப் பெற
இந்திய குடியுரிமையைப் பெறுகிறார். தகுதியுடையவராவார்.
 1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர்
வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் 5. பிரதேசங்களை இணைத்தல் மூலம்
எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய பெறும் குடியுரிமை
குடிமகனாக இருந்தால் அவர் இந்தியக் எந்தவ�ொரு வெளிநாட்டுப் பகுதியும்
குடியுரிமையைப் பெறுகிறார். இந்தியாவுடன் இணையும் ப�ோது, இந்திய
 2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் அரசு அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக
பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஏற்றுக்கொள்கிறது.அந்த குறிப்பிட்ட நாளில்
ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.
பதிவு செய்யவில்லை எனில் இந்திய உதாரணமாக பாண்டிச்சேரி இந்தியாவுடன்
வம்சாவளிக் குடிமகனாக முடியாது. இணைந்த ப�ொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு
1962ல் இந்தியக் குடியுரிமைக்கான
3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை ஆணையை வழங்கியது.
பெறுதல்
 இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு
இந்தியக் குடியுரிமையை இழத்தல்
நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று
அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச்
வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11
பதிவு செய்தலின் மூலம் குடியுரிமை பெறலாம். வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

241 குடிமக்களும் குடியுரிமையும்

8th_Civics_TM_Unit-2.indd 241 4/15/2019 4:16:17 AM


www.tntextbooks.in

குடியுரிமையை துறத்தல் (தானாக இந்திய குடிமக்கள் அனைவரும்


முன்வந்து குடியுரிமையைத் துறத்தல்) இந்தியாவில் எங்கு பிறந்திருந்தாலும்,
ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை வசித்தாலும் மாநில வேறுபாடின்றி
பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை குடியுரிமைக்கான அனைத்து அரசியல்
அவரால் கைவிடப்படுகிறது. மற்றும் குடிமையியல் உரிமைகளை
அனுபவிக்கின்றனர்.
குடியுரிமை முடிவுக்கு வருதல்
(சட்டப்படி நடைபெறுதல்)
ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து முன்னுரிமை வரிசைப்படி
வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் குடியரசு தலைவர் நாட்டின்
பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை முதல் குடிமகன் ஆவார்.
தானாகவே முடக்கப்படுகிறது.
குடியுரிமை மறுத்தல் (கட்டாயமாக
முடிவுக்கு வருதல்) இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக்
ம�ோசடி, தவறான பிரதிநிதித்துவம் குடியுரிமை பெற்றவர்
அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு
புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர் – NRI (Non Resident Indian)
இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் இந்தியக் கடவுச் சீட்டினை (Passport) பெற்று
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள்.
குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை
இந்திய பூர்வீக குடியினர் – PIO (Person on Indian Origin)
மூலம் இழக்கச் செய்கிறது. இந்தியக் குடியுரிமை உடைய மூதாதையர்களைக்
க�ொண்ட, வெளிநாட்டில் குடியுரிமை (பாகிஸ்தான்,
வங்காளதேசம், ஸ்ரீலங்கா, பூடான், ஆப்கானிஸ்தான்,
சீனா, நேபாளம் நீங்கலாக) பெற்றிருக்கும் ஒருவர் இந்திய
பூர்வீக குடியினர் ஆவர். 2015 ஜனவரி 9 முதல் PIO முறை

நாட்டுரிமை மற்றும் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCI முறையுடன்


இணைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை வெளிநாட்டுக் குடியுரிமையை க�ொண்ட இந்தியாவில்


வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர் (Overseas
citizen of India Card Holder)
பூர்வீகம், பிறப்பு மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் க�ொண்ட வெளிநாட்டு

இனம் ஆகியவற்றின்
குடிமகன் (பாகிஸ்தான், வங்காளதேசம் நீங்கலாக)
காலவரையின்றி இந்தியாவில் வசிப்பதற்கும், பணி

அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர்


செய்வதற்கும் OCI அட்டை பெறுகிறார். இவர்களுக்கு
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை


எனப்படும். சட்ட நடைமுறைகளுக்கு
உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி இந்திய குடிமக்களின் உரிமைகளும்,
ஒருவருக்கு வழங்கப்படுவது குடியுரிமை கடமைகளும்
எனப்படும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற
கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு
முடியாது. ஆனால் தனது குடியுரிமையை
வழங்குகிறது
மாற்ற முடியும்.
■ அடிப்படை உரிமைகள்
■ மக்களவை தேர்தலுக்கும், மாநில
சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும்
ஒற்றைக் குடியுரிமை உரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ■ இந்திய
 அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. உரிமை. இந்திய பாராளுமன்றம்
அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது. மற்றும் மாநில சட்ட மன்றங்களில்
ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உறுப்பினராவதற்கான உரிமை.
சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி அமைப்பு இந்திய அரசியலமைப்பு 42 வது
க�ொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் சட்டத்திருத்தத்தின் படி இந்தியக்
குடியுரிமை வழங்கப்படுகிறது. (தேசிய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள்
குடியுரிமை, மற்றும் மாநில குடியுரிமை) வரையறுக்கப்பட்டுள்ளன.
எட்டாம் வகுப்பு - குடிமையியல் 242

8th_Civics_TM_Unit-2.indd 242 4/15/2019 4:16:18 AM


www.tntextbooks.in

(உதாரணமாக: நே ர ் மை ய ா க
வரி செலுத்துதல், மற்றவர்களின்
கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்
கும்,உரிமைகளுக்கும் மதிப்பளித்தல்,
நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயலாற்றுதல்,
சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்படிதல்.)

ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை


இரண்டு வகையினராக நாம்
அழைக்கின்றோம் அவை :
1. அந்நியர் (Alien)
ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக
அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.
உதாரணம் : வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்
2. குடியேறியவர் (Immigrant) தினம் (பிரவாசி பாரதிய
ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி தினம்)
நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் இந்திய அரசின் வெளியுறவுத்
உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் துறை அமைச்சகத்தால் இரண்டு
எனப்படுகிறார். ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய
தினம் க�ொண்டாடப்படுகிறது.இந்த தினம்
இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில்
நற்குடிமகனின் பண்புகள் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பினை
■ அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல் பெறும் வகையில் க�ொண்டாடப்படுகிறது. இது
மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து
■ சட்டத்துக்கு கீழ்படிதல்
இந்தியாவிற்கு வருகை புரிந்த தினமான
■ சமுதாயத்திற்கு
 தன் பங்களிப்பை ஆற்றுதல் ஜனவரி – 9 – ஆம் நாள் க�ொண்டாடப்படுகிறது.
மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
■  ற்பண் பு களை யு ம் ,
ந நீ தி யை யு ம்
முடிவுரை
நிலைநாட்டுதல்
நமது அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக்
■ வேற்றுமைகளை மறந்து நடத்தல்
குடியுரிமையை வழங்குகிறது. இதன்
மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் சம
உலகளாவிய குடியுரிமை உரிமையை வழங்குகிறது. ஒருங்கிணைந்த
ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் இந்தியாவை உருவாக்கும் ப�ொருட்டு, இந்திய
என்பதை விட உலகளாவிய சமுதாயத்தில் மக்களிடையே சக�ோதரத்துவத்தையும்,
ஒவ்வொருவரும் அங்கம் என்பதே ஒற்றுமையையும் நமது அரசியலமைப்பு
உலகளாவிய குடியுரிமை ஆகும். உலக மக்கள் ஊக்குவிக்கிறது.
அனைவருக்கும் உரிமைகளும், குடிமைப்
ப�ொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன. மீள்பார்வை
புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் ■ ஒரு
 அரசால் அளிக்கப்பட்ட சட்ட
இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், உரிமைகளையும் சலுகைகளையும்
பங்களிப்பையும் பெறுவதே உலகளாவிய அனுபவிக்கும் ஒருவர் குடிமகன்
குடியுரிமையின் அடிப்படை ஆகும். எனப்படுகிறார்.

243 குடிமக்களும் குடியுரிமையும்

8th_Civics_TM_Unit-2.indd 243 4/15/2019 4:16:18 AM


www.tntextbooks.in

■ இந்திய அரசியலமைப்பின் பகுதி – II 5 பெறுதலையும், நீக்குதலையும் பற்றி


முதல் 11 வரையிலான விதிகள் இந்தியக் குறிப்பிடுகின்றது.
குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது. ■ இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒற்றைக்
■ 1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் குடியுரிமையை நமக்கு வழங்குகிறது.
சட்டம், ஒருவர் இந்தியக் குடியுரிமையைப்

கலைச்சொற்கள்
முயன்று அடைதல் acquisition act of acquiring
திருத்தம் amendment a minor change
அரசியலமைப்புச் சட்டம் Constitution Law determining the fundamental
political principles of a government
சக�ோதரத்துவம் fraternity brotherhood
குடியிருப்பவர் Resident inhabitant

மதிப்பீடு II. க�ோடிட்ட இடத்தை நிரப்புக


1. ஒரு நாட்டின் _______, அந்நாடு வழங்கும்
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப்
I. சரியான விடையை தேர்வு பெறத் தகுதியுடையவர் ஆவார்.
செய்க 2. இந்திய
 அரசியலமைப்புச் சட்டம் _______
குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
1. கீ ழ ்க ்க ண ்டவைக ளி ல்
எந்த ஒன்று இந்திய 3. இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று
குடியுரிமை பெறும் (Passport) வெளிநாட்டில் வாழும்
வழிமுறை அல்ல? இந்தியக் குடிமகன் ________ என
அழைக்கப்படுகிறார்.
அ) பிறப்பின் மூலம்
4. மக்கள்
 அனைவரும் உரிமைகள்
ஆ) ச�ொத்துரிமை பெறுவதன் மூலம்
மற்றும் ________ யும் இயற்கையாக
இ) வம்சாவழியின் மூலம் பெற்றிருக்கின்றனர்.
ஈ) இயல்பு குடியுரிமை மூலம் 5. ________ என்பது இளைஞர்களை
2. அரசியலமைப்புச்
 சட்டத்தின் எந்தப் பகுதி நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில்
மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் பங்கேற்க செய்யும் ஒரு ய�ோசனை ஆகும்.
குறிப்பிடுகின்றன?
III. சரியா ? தவறா ? குறிப்பிடுக
அ) பகுதி II 1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக்
ஆ) பகுதி II பிரிவு 5 – 11 குடியுரிமையை வழங்குகிறது.
இ) பகுதி II பிரிவு 5 – 11 2. வெளிநாட்டுக் குடியுரிமையை க�ொண்டு
இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை
ஈ) பகுதி I பிரிவு 5 - 11
வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.
3. இந்தியாவின் முதல் குடிமகன் யார்? 3. அடிப்படை உரிமைகளை இந்தியக்
அ) பிரதமர் குடிமகன் அனுபவிக்க நமது
ஆ) குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம்
அளிக்கிறது.
இ) முதலமைச்சர்
4. நாட்டுரிமையை
 மாற்ற இயலும். ஆனால்
ஈ)இந்திய தலைமை நீதிபதி குடியுரிமையை மாற்ற இயலாது.

எட்டாம் வகுப்பு - குடிமையியல் 244

8th_Civics_TM_Unit-2.indd 244 4/15/2019 4:16:18 AM


www.tntextbooks.in

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் ப�ொருத்தமான V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஒன்று அல்லது


விடைகளை தேர்வு செய்க இரண்டு வாக்கியங்களில் விடையளி
1. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை 1. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது. 2. ஓர்
 இந்தியக் குடிமகன் நமது நாட்டில்
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை அனுபவிக்கும் உரிமைகள் யாவை?
பெறும் ப�ோது 3. நற்குடிமகனின் மூன்று பண்புகளை
ii) பதிவு செய்வதன் மூலம் குறிப்பிடுக
iii) தவறான ம�ோசடி வழிகளில் ஒருவர் 4. இந்தியக்
 குடிமகனாவதற்குரிய ஐந்து
குடியுரிமை பெற்றார் என்று அரசு வழிமுறைகளை எழுதுக?
கருதும் ப�ோது 5. 1955
 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச்
iv) ப�ோரின் ப�ோது எதிரி நாட்டிடம் இந்திய சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
குடிமகன் வணிகம் செய்யும் ப�ோது
VI. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி
அ. I மற்றும் II சரி
ஆ. I மற்றும் III சரி 1. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக்
இ. I, II, IV சரி குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
ஈ. I, II, III சரி
VII. மாணவர்களுக்கான செயல்பாடு
2. கூற்று: 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி
இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு அட்டவணைப்படுத்துக:
வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர். அ. ந ல்ல குடிமகனாக வகுப்பறையிலும்,
காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் வகுப்பறைக்கு வெளியிலும் நீவிர்
சட்டத்தின் படி பிரதேசங்களை எவ்வாறு நடந்து க�ொள்வாய் என
இணைத்தல் என்பதன் அடிப்படையில் அட்டவணைப்படுத்துக
அவர்கள் இந்திய குடிமக்களாகினர் ஆ. ந ல்ல குடிமகனாக உன்னுடைய
அ. காரணம் கூற்றிற்கான சரியான ப�ொறுப்புகள் எவை (ஏதேனும் மூன்று
விளக்கம் கருத்துக்களை எழுதுக)
ஆ. காரணம் தவறு
வீட்டில்:- பள்ளியில்:-
இ. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ. காரணம், கூற்று இரண்டும் தவறு
உனக்கு நீயே:- சுற்றுச்சூழலுக்கு:-

இணையச் செயல்பாடு
குடிமக்கள் மற்றும் குடியுரிமை
படிநிலைகள்
• கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி உள்நாட்டு விவகாரங்கள்
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் செல்க.
• “Act/Rules/Regulations” என்பதைத் தேர்வு செய்து இந்தியக் குடியுரிமைப் பெறுவதற்கான
அரசியலமைப்பு நடைமுறைகளை அறிந்து க�ொள்க.
• திரையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் “Required Documents” என்பதைத்
தேர்வு செய்து முக்கிய ஆவணங்கள் பற்றித் தெரிந்து க�ொள்க.
• “Sample Forms” என்பதைச் ச�ொடுக்கி குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கத்
தேவையான படிவங்களின் மாதிரிகளை அறிந்து க�ொள்க.
உரலி:
https://indiancitizenshiponline.nic.in/Home.aspx

245 குடிமக்களும் குடியுரிமையும்

8th_Civics_TM_Unit-2.indd 245 4/15/2019 4:16:18 AM

You might also like