You are on page 1of 3

வாரணமாயிரம் :

வாரணமாயிரம் சூலவலம் செய்து !

நாரணன்நம்பி நடக்கின்றானென்றெதிா் !

பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும் !

தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 1

நாளைவதுவை மணமென்றுநாளிட்டுப் !

பாளைகமுகு பாிசுடைப்பந்தற்கீழ் !

கோளாிமாதவன் கோவிந்தனென்பானோா் !

காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 2

இந்திரனுள்ளிட்ட தேவா்குழாமெல்லாம் !

வந்திருத்தென்னை மகட்பேசிமந்திாித்து !

மந்திரக்கோடியுடுத்தி மணமாலை !

அந்தாிக்சூட்ட கனாக்கண்டேன்தோழீ ! நான். || 3

நால்திசைதீா்த்தம் கொணா்ந்துநனிநல்கிப் !

பாா்பனச்சி்ட்டா்கள் பல்லாரெடுத்தேத்திப் !

பூப்புனைகண்ணிப் புனிதனோடென்தன்னைக் !

காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 4


கதிரொளிதீபம் கலசமுடனேந்திச் !

சதிாிளமங்கையா்தாம் வந்தெதிா்கொள்ள !

மதுரையாா்மன்னன் அடிநிலைதொட்டு, எங்கும் !

அதிரப்புகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 5

மத்தளம்கொட்ட வாிசங்கம்நின்றூத !

முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ் !

மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து,என்னைக் !

கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 6

வாய்நல்லாா் நல்ல மறையோதி மந்திரத்தால் !

பாசிலைநாணல்படுத்துப் பாிதிவைத்துக் !

காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றித் !

தீவலம்செய்யக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 7

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் !

நம்மையுடையவன் நாராயணன்நம்பி !

செம்மையுடைய திருக்கையால்தாள் பற்றி !

அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 8


வாிசிலைவாள்முகத்து என்னைமாா்தாம் வந்திட்டு !

எாிமுகம் பாா்த்து என்னை முன்னே நிறுத்தி !

அாிமுகன் அச்சுதன் கைம்மேலென்கைவைத்துப் !

பொாிமுகந்தட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 9

கும்குமமப்பிக் குளிா்சாந்தம்மட்டித்து !

மங்கலவீதி வலம்செய்துமணநீா் !

அங்கவனோடுமுடன்சென்று அங்கானைமேல் !

மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 10

*ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை !

வேயா்புகழ் வில்லிப்புத்தூா்க்கோதைசொல் !

தூயதமிழ் மாலை ஈரைந்தும் வல்லவா் !

வாயு நன்மக்களைப் பெற்றுமகிழ்வரே ! || 11

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

You might also like