You are on page 1of 3

2/2/24, 6:49 PM Aval Vikatan - 13 February 2024 - வொர்க் ஃப்ரம் ஹோம் : நேரம் வீணாகாமல் , உற்பத்தி திறன் அதிகரிக்க...

செய் ய…

லேப்டாப்பை கையோடு தூக்கிக்கொண்டு, எங்கே இடம் இருக்கிறதோ அங்கே அமர்ந்து


வேலைபார்த்து என வீட்டுக்குள்ளேயே அகதிபோல திரியாமல், உங்களுக்கென ஒரு பணியிடத்தை
நல்ல வெளிச்சமும் காற்றும் வரும்படி அமைத்துக்கொள்ளுங்கள். அந்த இடம் உங்களுக்கானதாக
மட்டுமே இருக்க வேண்டும். மனதளவிலும் உடலளவிலும் உங்களுக்கு வசதியாகவும்,
அசௌகர்யங்கள் இன்றியும் இருக்க வேண்டும். உங்களை ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கொண்ட
ஸ்டிக்கர்கள், மனதை இதமாக்கும் புகைப் படங்கள் போன்றவற்றை உங்கள் வொர்க் ஸ்பேஸில் ஒட்டி
வைத்துக்கொள்ளுங்கள். வசதியாக அமர்ந்து வேலைபார்க்கும் வகையில் கணினி மேஜை, எர்கோ
சேர் (Ergo Chair) என்று வொர்க் ஸ்டேஷனை (Work Station) செட் செய்து கொள்ளாவிட்டால் கழுத்துவலி,
முதுகு வலி என்று அவதிப்பட நேரிடும். இன்னும், கீ போர்டு, தரமான ஹெட் போன், மைக், ஸ்பீக்கர் என
தேவைப் படுபவற்றை நிறுவிக்கொள்ளுங்கள்.

சகாக்களை மிஸ் பண்ணாமல் இருக்க...

பொதுவாக, வீட்டிலிருந்து பணி புரிபவர்கள் தங்கள் அலுவலக சகாக் களை ரொம்பவே மிஸ்
செய்வார்கள். வேலைகளுக்கு இடையே ஒருவரோடு ஒருவர் பேசுவது, ஜோக் சொல்லிச் சிரிப்பது,
டைனிங் ஹாலில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது போன்ற அனைத்தையும் மிஸ் செய்வது ஒருவித
அலுப்பைக் கொடுக்கும். எனவே, வேலை நேரம் முடிந்த பின்னர் அவ்வப் போது சகாக்களுக்கு ஃபோன்
செய்து பேசுவது, குரூப் வீடியோ காலில் சிறிது நேரம் ஜாலியாகப் பேசிச் சிரிப்பது, குரூப் மெசேஜ்
அனுப்புவது என்று தங் களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். இது உங்களது
வேலையின் திறனை இன்னும் சிறப்பாக்கும்.

விகடனின் பிரைவசி மற்றும் குக்கீ பாலிசிகளை ஏற்பதன் மூலம் உங்களுக்கு இத்தளத்தில் நிறைவான அனுபவம் கிடைப்பதை
உறுதி செய்ய உதவுங்கள். நன்றி! பிரைவசி மற்றும் குக்கீ பாலிசி

https://www.vikatan.com/lifestyle/worklife/special-story-about-work-from-home-2?utm_source=magazine-page 4/19
2/2/24, 6:49 PM Aval Vikatan - 13 February 2024 - வொர்க் ஃப்ரம் ஹோம் : நேரம் வீணாகாமல் , உற்பத்தி திறன் அதிகரிக்க... செய் ய…

வொர்க் ஃப்ரம் ஹோம்

இப்படியும் ஒரு ஐடியா!

இந்தியாவைச் சேர்ந்த பெரிய மென்பொருள் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்காக பிரத்யேக


வெப்சைட் ஒன்றை சமீபத்தில் தொடங்கியுள்ளது. அந்த வெப்சைட்டின் வழியாக ஊழியர்கள் தங்களது
திறமைகளை வெளிக்காட்டிப் பணம் சம்பாதிக்கலாம். எடுத்துக் காட்டாக, ஒருவர் நன்றாகக் கேக்
தயாரிப்பார் என்றால் அவர் அதுகுறித்த விவரங்களை அந்த வெப்சைட்டில் பதிவிடுவார்.
தேவையிருப்பின்
விகடனின் மற்ற
பிரைவசி மற்றும் குக்கீஊழியர்கள் அவரிடமிருந்து
பாலிசிகளை ஏற்பதன் கேக்
மூலம் உங்களுக்கு ஆர்டர் செய்து
இத்தளத்தில் விலைக்கு
நிறைவான வாங்கிக்
அனுபவம் கிடைப்பதை கொள்வர்.
உறுதி செய்ய உதவுங்கள். நன்றி! பிரைவசி மற்றும் குக்கீ பாலிசி
இப்படி, பெயின்டிங், சமையல் என்று ஊழியர்கள் தங்களிடம் என்னென்ன திறமைகள் இருக்
https://www.vikatan.com/lifestyle/worklife/special-story-about-work-from-home-2?utm_source=magazine-page 5/19
2/2/24, 6:49 PM Aval Vikatan - 13 February 2024 - வொர்க் ஃப்ரம் ஹோம் : நேரம் வீணாகாமல் , உற்பத்தி திறன் அதிகரிக்க... செய் ய…

கின்றனவோ அதை அந்த வெப்சைட்டில் பதிவிடலாம். இதன்மூலம் ஊழியர்கள் ஒருவருக் கொருவர்


தொடர்பில் இருப்பதோடு அவரவர் திறமையைக் கொண்டு இரண்டாவது வருமானமும் (Secondary
Income) பார்க்கமுடியும். இதை நோக்கமாகக் கொண்டுதான் அந்த நிறுவனம் இந்த ஐடியாவைக்
கொண்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட ஐடியாக் களை அலுவலக சகாக்களும் அவர்களுக் குள்ளாகவே
செயல்படுத்தலாம். இதற் காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்க லாம்.

சின்சியராக இருப்பதே சிறப்பு!

வீட்டில் இருந்து பணிபுரிவதால் ஃபார்மல் (Formal) உடைகளை அணியத் தேவையில்லைதான். ஆனால்,


திடீ ரென்று வீடியோ மீட்டிங்குக்கான அழைப்பு வந்தால் உடை மாற்றுவதற்காக வேக வேகமாக ஓடாத
வண்ணம் உடை யணிந்து கொள்ளுங்கள். அதேபோல, சாப்பிட்டுக்கொண்டே மீட்டிங் அட்டெண்ட்
செய்வது, வேறு ஏதேனும் வேலை பார்த்துக்கொண்டே மீட்டிங் அட்டெண்ட் செய்வது போன்றவற்றை
செய்ய வேண்டாம். அலுவலகத்தில் எப்படி கவனத்துடன் இருப்பீர்களோ, அப்படியே வீட்டிலும் இருக்க
வேண்டும்.

நல்ல உறவில் இருங்கள்!

நீங்கள் எவ்வளவுதான் டாப் பெர் ஃபார்மராக இருந்தாலும், டீமுடனும், டீம் லீடருடனும் தகவல்
தொடர்ந்து சரியாக இல்லையெனில், அது பணியில் எதி்ரொலிக்கும். வீட்டிலிருந்து வேலை
செய்தாலும் நீங்கள் செய்வது டீம் வொர்க்தான். எனவே, வேலை குறித்த திட்டமிடல், டெட்லைன்
அனைத் தையும் சரியாகப் பின்பற்றி, தவறாமல் அப்டேட் செய்ய வேண் டும். இல்லையெனில்,
அலுவலகப் பணிகளில் புதிய புதிய விஷயங் களை உங்களால் செயல்படுத்த முடியாது, துறை சார்ந்த
வளர்ச்சியும் சிறப்பாக இருக்காது. ஊழியர்கள் அனைவரும் இந்த ஒத்திசைவில்
பணியாற்றினால்தான், நிறுவனத்தின் உற்பத்தித்திறன் (Productivity) சீராக, சிறப்பாக இருக்கும்.

நேர மேலாண்மை மிக முக்கியம்!

வீட்டிலிருந்து பணிபுரியும்போது, நேர மேலாண்மை மிக முக்கியம். அலுவலக நேரத்தில் அலுவலக


வேலைகளைச் சரியாகச் செய்து முடித்திடுங்கள். ஒரு முக்கியமான வேலை உங்கள் கைக்கு வந்தால்,
அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லாமல் கையோடு அதைச் செய்து முடித்திடுங்கள்.
இல்லையெனில் ஒரு கட்டத்தில், அதை உடனே செய்துகொடுக்கும்படி அழுத்தம் வரும். அதை அவசரம்
அவசரமாகச் செய்ய வேண்டியிருக்கும். டென்ஷன் தலைக்கு ஏறுவதோடு வேலையின் தரமும்
சிறப்பாக அமையாது. எனவே, ஒருபோதும் முக்கிய வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். அதே நேரம்,
வீட்டில் இருந்து பணிபுரிவதாலேயே அலுவல் நேரம் தாண்டியும், விடுமுறை தினங்களிலும் பணிபுரியத்
தேவை யில்லை. அதுகுறித்த ஓர் உறுதியான தகவலை (Assertive communication) அலுவலகத்தில்
தெரியப்படுத்திவிடுங்கள்.

ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்!
விகடனின் பிரைவசி மற்றும் குக்கீ பாலிசிகளை ஏற்பதன் மூலம் உங்களுக்கு இத்தளத்தில் நிறைவான அனுபவம் கிடைப்பதை
உறுதி செய்ய உதவுங்கள். நன்றி! பிரைவசி மற்றும் குக்கீ பாலிசி

https://www.vikatan.com/lifestyle/worklife/special-story-about-work-from-home-2?utm_source=magazine-page 6/19

You might also like