You are on page 1of 5

நடன முறை

நடன முறையிலும் இலக்கியம் கற்பிக்கலாம். அக்காலத்திலும்


தற்காலத்திலும் பல வகையான நடனங்கள் ஆடப்படுகின்றது.

• உதாரணமாக:

• 1) பரதம்
• 2) தெருகூத்து
• 3) கதக்
• 4) மோகினி ஆட்டம்
ஒரு செய்யுளை முறைப்படி ஆசான் சீரிய ஆற்றலோடும்
பாடலுக்குரிய உணர்ச்சிகளோடும் வெளிப்படுத்தினால், அஃது
மாணாக்கரின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.

ஆசிரியரின் அவ்வாற்றலும் உணர்ச்சியும் புதுமையான


முறையில் வெளிப்படுத்தப்பட்டால் அஃது மாணாக்கரின்
வாழ்க்கை முழுவதிலும் நினைவிச் செம்மையாகும்.

அதாவது செய்யுளைக் கற்பித்தலின் மாணக்கர் புதுமை என்று


ஏற்கும் “புதுமை” அவசியம். இன்நவீன முறைக்கு ஒரு சிறந்த
சான்று செய்யுட் பகுதிகளில் உணர்வுப்பூர்வமான சில
மையங்களைத் தெரிவு செய்து அதை பயிற்ச்சி பெற்ற நாடிய
ஆசிரியர்கள் மூலம் அபிநயங்களாக பிடிக்கச் செய்வதாகும்.
• இப்புதுமை முறைக்கு பொருட் செலவும், காலச் செலவும்
மிகுதியும் ஏற்படும்.
• இம்முறைக்குச் சான்றாக:

நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி


..............................................................................
..............................................................................
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவானில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்’ (ஊர்சூழ்வரி 21:
57-60)
• என்ற சிலம்பு பாடலில் உள்ள கண்ணகியின் தோற்றத்தை
உள்வாங்கி கண்களில் அழுகையும், முகத்தில்
வெகுளியையும் கலந்து அபிநயம் பிடிக்கச் செய்தால்
‘சிலம்பு’ என்று மாணாக்கர் மனதில் நீங்காத நிலைபெறும்.
• இஃது புதுமைகளில் மிகவும் நூதனமான ஒன்றாகும்.
• மேலும் மாணவர்கள், இலக்கியப் பாடத்தை உள்வாங்கியும்
ஆர்வத்துடனும் கற்பர்.
• இதனால். பசுமரத்தாணிப் போல் மனதில் நீங்க வண்ணம்
இருக்கும்.

கவிதா பாலகிருஷ்ணன்
அனுஷா சௌந்தர பாண்டியன்

You might also like