You are on page 1of 3

1

Home > Shaiva Siddhanta > Thirumurai > திருத்தொண்டர் புராணம் (மூலம்)

Thiruthondar Puranam (Periya Puranam) Twelfth Thirumurai

சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5. திருநின்ற சருக்கம

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by

thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

5. திருநின்ற சருக்கம்

21. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

திருச்சிற்றம்பலம்

1. திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ 1266-1

வரு ஞானத் தவமுனிவர் வாகீ சர் வாய்மை திகழ் 1266-2

பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் 1266-3

ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 1266-4

2. தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா 1267-1

நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் 1267-2

சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் 1267-3

மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு 1267-4

2
3. புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் 1268-1

கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் 1268-2


3

You might also like