You are on page 1of 41

பத்மா கிரகதுரை எழுதும்

கன்னம் வைத்த கள்வனே

சிலு சிலுவென்ற காற்று இப்போது உடலின்


ஆடைகளை ஊடுருவி உட்புகுந்த்து. சிலீரென ஒரு
இதம் உடல் முழுவதும் ஏற்பட, விழி மூடி குளிர்ந்து
விட்ட தன் உடலின் சிலிர்ப்பை அனுபவித்தாள்.

இந்த இயற்கைக்குத்தான் எத்தனை பெரிய சக்தி


இருக்கிறது. எத்தனை பெரிய மனபாரத்தையும்
நொடியில் இல்லாமல் செய்து விடுகிறதே. சிலீரிட்ட
உடலால் மனமும் குளிர சிப்பியாய் மூடிக்கிடந்த
தன் விழிகளை திறக்கும் எண்ணமில்லை அவளுக்கு.

இந்த  குளிர் சூழலை நாவாலும் சுவைப்பவள்


போல் நா ஊறிய எச்சிலை விழுங்கி, தொண்டை 
அசைத்தாள். இனிமையாய் தொண்டையிலிருந்து
நெஞ்சமெல்லாம் நிறைந்த்து அச்சூழல்.

"ரொம்ப சுவட்டோ?"
ீ எதிரிலிருந்து கேட்டது குரல்.
வசீகரிக்கும் அந்த குரலுக்கு வசியப்பட
விரும்பவில்லை அவள் இதயம்.

சாதாரணமாக குரல் மட்டும் கேட்டதுமே முகம்


பார்க்க தூண்டும் கவர்ச்சி நிறைந்திருந்த
ஆண்மையும், ஆளுமையுமான குரல்தான். ஆனாலும்
விழி திறக்கவில்லை அவள்.

தன்னையறியாமல் திறந்து விடுமோ எனப்


பயந்தோ என்னவோ இன்னமும் இமைகளை
இறுக்கிக் கொண்டாள். சூழலோடு அந்த குரலையும்
உட்சேர்த்து விழுங்கி உள்ளம் முழுதும் பரப்பினாள்.

"கண்ணை திறந்து பார்க்கலாமே.."

என்னின் எதையோ அறிந்து கொண்டனவோ அந்த


குரலின் உள்ளம்????

திறவாத கண்களுடன் அழகாக தலையசைத்து


மறுத்தாள்.

"உன் ஜிமிக்கிகள் மிக அழகு.."

எதிரிருந்த விரல்கள் வெகு ஜாக்கிரதையாய் அவள்


காது ஜிமிக்கியை மட்டுமே தொட்டு, வருடி
விலகியது.ஆனால் காது மடலை தொட்டு வருடியது
போல் அவள் நரம்புகளில் ஒரு சிலிர்ப்பு ஓடியது.
கொதித்தோடிய குருதி ஓட்டத்திற்காக
மீ ண்டுமொரு முறை நா  சுவைத்து  எச்சில்
விழுங்கிக் கொண்டாள் அவள்.

"ம் போதும்.. எழுந்து மேலே வா.." உத்தரவு போல்


சொல்லிவிட்டு மேலேறிய அந்த பாதங்களின்
ஓசையில் அதிகாரமான ஆண்மைத்தனம் இருந்த்து.

அவனது அருகாமை விலகி விட்டதை உணர்ந்து


விழித்தவளின் பார்வையில் மேலே செல்லும்
இரும்பு ஏணியின் உச்சி படிகளை கடந்து
கொண்டிருந்த அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் அணிந்த
கால்கள் பட்டன.

சட்டென தன் மோன நிலை கலைத்தவள், பாதி


ஆளை உள் விழுங்கியது போன்றதொரு
மென்மையுடன் அவளை அணைத்திருந்த அந்த
மென் சோபா இருக்கையிலிருந்து எழுந்தாள்.
வேகமாக அந்த இரும்பு படிகளில் ஏறினாள்.

ஒரு நேரம் ஒரு ஆள் மட்டுமே, அதுவும் பாதி


பாதங்களை மட்டுமே வைக்கும் அளவிலான மிக
குறுகிய படிகள் அவை.

இதிலெப்படி அத்தனை வேகமாய்


ஏறினான்.சிந்தித்தபடி ஜாக்கிரதையாக பாதம் வைத்து
கைபிடியை பிடித்துக் கொண்டு ஏறி உச்சியை
அடைந்தாள்.

மேற்புறம் காணக் கிடைத்த காட்சிக்கு தானாகவே


வாய் திறந்து கொண்டாள். விழி விரித்துக்
கொண்டாள்.

எத்தனை அழகு இதோ இப்படி பார்க்கும் விழிகள்


அதிகமின்றி அநாதை போல் கொட்டிக் கிடக்கும்
இத்தனை இயற்கையையும் இப்படி ஒரே நேரத்தில்
காணக் கிடைக்கும் போது, ஹப்பா. உண்மையிலேயே
அவளுக்கு மூச்சு முட்டியது.

எதை பார்க்க எதை விட பரபரத்து அங்குமிங்கும்


அலை பாய்ந்த அவள் விழிகள்..

கரும்பச்சை விரவிக் கிடந்த அந்த கடல் நீரை


கருந்திட்டுக்களாய் இடையில் கிடந்த பெரும்
பாறைகளை. கை கோர்த்துக் கொண்டது போல் 
வரிசையாக போகும் மலை தொடர்களை. அவற்றின்
மீ து கவிந்து கிடந்த வெண் முகில்களை எழும்ப
முடியாமல் தவித்தபடி மேகங்களுக்குள் அமுங்கி
கிடந்தபடி, பிடிவாதமாய் மெல்லிய கீ ற்றாய் தன் ஒளி
சிதற விடும் ஆதவனை. அழுந்தி வந்தாலும்
பிடிவாதமாய்  வெளிப்பட்ட வெண்ணொலியை, உள்
வாங்கி இளஞ்சிவப்பாய் ஒளிர்வித்துக் கொண்டிருந்த
நீலமா. சிவப்பா.. என சந்தேகம் கொள்ள வைக்கும்
வானம்..

எதை பார்க்க..? எதை விட..?

பிரமிப்பில் ஒரு மாதிரி கிறங்கிப் போனாள் அவள்.


நாலு நாள் பட்டினி கிடந்தவனின் முன்னால் தலை
வாழையிலை விருந்து பரிமாறப்பட்டால், எதை
எடுக்க, எதை திங்க எனத் திணறுவானே அது போல்
திணறினாள்..

"அதோ அங்கே பார்.அதுதான் நெருங்கி விட்டோம்"

வன்மையும் ,வலிவும் நிறைந்த நீள் விரல்கள்


அவள் முன் நீண்டு சுட்டியது. இப்போது அவள்
விழிகள் சுற்றுப்புறத்திலிருந்து அந்த விரல்களுக்கு
தாவியது.

மென்மையான  இளஞ்சிவப்பு ரோஜாவை நுனியில்


பதிவித்தது போன்ற நகங்கள் அமைந்த நீள்
விரல்கள். புறத்தில் மிக மெல்லிய ரோமங்கள்
சுருண்டிருந்து ஆண்மையை பறைசாற்றியது.
சட்டென அந்த விரலை தொட்டு இரு விரலால்
வருடி உருவ தோன்றியது.

"அங்கே பார்  என்றேன்"


அழுத்தமான நினைவுறுத்தலில் அவசரமாக
விரலிலிருந்து திரும்பிக்கொண்டு, மீ ண்டும் எதிரே
பார்வை பதித்தாள்.

அங்கே முதலில் பார்வையில் பட்டது ,


அடர்த்தியாய் இருந்த தென்னை மரங்கள்தாம். மிக
நெருக்கமாக வரிசை வரிசையாக பள்ளியில் இறை
வணக்கம் சொல்லும் சீருடை அணிந்த குழந்தைகள்
போல் அழகாக அமைந்திருந்த அந்த மரங்கள்.

பார்க்க பார்க்க அவை அருகே நெருங்கி வந்தன..


வா என்னிடம் வா எனக்குள் வா, என அவை கை
நீட்டி அழைப்பது போலிருந்த்து.

அவளுக்கு திடுமென உடல் வியர்க்க


தொடங்கியது. புறங்கழுத்து வியர்த்து முதுகில்
வியர்வை வடிய தொடங்கியது. கையால் நெற்றி
வியர்வையை துடைத்துக் கொண்டாள். திடீரென ஏன்
இப்படி வியர்க்கிறது?

அந்த மரக்கூட்டங்களை உற்று நோக்கினாள்.


உடனடியாக அந்த மரக்கூட்டங்களுக்குள் ஓடிப்போய்
தொலைந்து போக வேண்டுமென விரும்பினாள். அதே
நேரம் வேண்டாம் அவை வேண்டாம் பின்வாங்கி
தப்பி போய்விடுவோமென நினைத்தாள்.
இப்போது இன்னமும் அதிகமாக வியர்க்க
ஆரம்பிக்க, வசிய
ீ காற்றும் வெக்கையை கொடுத்தது.
திடுமென இப்படி சூழல் மாறுவது ஏன்? இது அந்த
இடத்தின் ஏதோ ஓர் பாதிப்போ? பயம் கலந்த ஓர்
ஆர்வம் அவளுள். வேண்டாமென்றும்,
வேண்டுமென்றும் இரு வேறு உணர்வுகளுக்கிடையே
நூலாடி பறந்தபடி திக் திக்கென தன்னை நெருங்கிக்
கொண்டிருந்த அந்த நிலப்பகுதியை பார்த்தாள்.

"அழகான இடம் இல்ல?" சிலாகித்த அவன் குரலில்


அதே காந்த தன்மை.

உச்சந்தலையிலும், முகத்திலும் நீர்த்துளிகள்


சிதறின. துடைத்துக் கொண்டாள். மழை வர
போகிறதா என்ன? அதுதான் அவ்வளவு வெக்கையா?

"பிடித்திருக்கறதுதானே?" இவன் எதை கேட்கிறான்.


எப்படியாவது திரும்பி அவன் கண்களை சந்தித்து
விட வேண்டியதுதான். அந்த கண்கள் தான்
அவளுக்கு தேவையான விபரங்களை தரும்.

உடனடி முடிவெடுத்து பின்னால் நின்றிருந்த   


அவனை பார்க்க விருட்டென திரும்பினாள். குபீரென
அவள் முகத்தின் மீ து கொத்தாக விழுந்த்து நீர்.
அவன் தான் எதிலோ நீரெடுத்து அவள் முகத்தில்
ஊற்றியிருக்கிறான். அவனை பார்ப்பதை தடுக்கவா
இப்படி செய்தான்? முகத்தில் வழிந்த நீரை
துடைத்தபடி கண் விழித்து பார்த்தாள்.

தலையை விரித்து போட்டபடி எதிரே ஓர் உருவம்


இருந்த்து. கைகளை ஆட்டி, நாக்கை துருத்தி அவளை
கோபமாக வைதது அந்த உருவம்.

மீ ண்டுமொரு முறை முகத்தை அழுத்தமாக


துடைத்துக்கொண்டாள். நீரூறி கிடந்த
கண்ணிமைகளை அழுத்தி தேய்த்து துடைத்து
விட்டுக்கொண்டாள். பளிச் பளிச்சென இமையடித்து
விழி பார்வையை தெளிவாக்கினாள்.

"ஏன்டி சொரணை இல்லையா உனக்கு? உன்னை


உலுப்பி உலுப்பி அலுத்து போய், கடைசியில் ஜக்
தண்ணியை பூராம் உன் மேல் கவுத்திருக்கேன்.
அப்படியும் இப்படி இன்னமும் சொக்கி போய்
முழிக்கிற?"
கையாட்டிய அந்த உருவ அடையாளம் இப்போது
புரிபட்டது.

அட, இது ஸ்வாதி

"ஸ்வாதி நீயாடி? நீ எப்படி இங்கே வந்த?"

"நான் எங்கே வந்தேன்?" இடுப்பில் கை வைத்து


முறைத்து கேட்டாள் அந்த ஸ்வாதி.

"அதுதான் இந்த.." ஆரம்பித்து விட்டு விழித்தாள்.

இப்போது நான் எங்கே இருக்கிறேன்? அப்போது


எங்கே இருந்தேன்? விழி சுழற்றி சுற்றுப்புறம்
பார்த்தாள்.

இது அவளுடைய அறை.. அவர்களுடைய அறை..


இங்கே ரூமுக்குள் எப்படி மழை வந்தது?

அருகே பெட்டில் கிடந்த ஜக் மழை வந்த


விபரத்தை விளக்க, சட்டென எழுந்து அமர்ந்து
தன்னை ஆராய்ந்தாள். நீரூற்றப்பட்டு தொப்பலான
தனது நைட்டியை பார்த்தவள் அலறினாள்.

"ஏய் ஏன்டி என் மேல் தண்ணியை ஊத்தினாய்?"

"தண்ணி ஊத்தியிருக்க கூடாதுடி.. ஆசிட்


ஊத்தியிருக்கனும்.பொசுங்கி சாகட்டும்னு
விட்டிருக்கனும்.."
"ஏன்டி ஏன் அப்படி?" ஈரமான பெட்டில் முட்டிங்கால்
போட்டு  சுவாதியை  தாக்க தோதாக உட்கார்ந்து
கொண்டாள்.

"கரெண்ட் போயிடுச்சு.. ஏசி ஆப் ஆயிடுச்சு.. நானே


தூக்கம் வராமல் புரண்டுட்டு இருக்கிறேன். அரை
குறையாய் வந்த தூக்கத்தையும் பக்கத்தில்
படுத்துட்டு கெடுக்கிற நீ.. திடீர்னு சிரிக்கிற.. திடீர்னு
சிணுங்கிற என்னடி நினைச்சுட்டு இருக்கிற?" சுவாதி
தாக்குதலை எதிர் கொள்ள தயாரானாள்.

அடக்கடவுளே கண்டதெல்லாம் கனவா? கரண்ட


போய் ஏசி ஆப் ஆனதால்தான் குளிர் சூழ்நிலை மாறி
வெக்கை வந்த்தா..? பிறகு இவள் தண்ண ீரை
ஊற்றியதால்தான் மழை வந்ததா?

"ஏய் ஏதோ கனவில் உளறினால், அதற்காக ஆசிட்


ஊற்றுவாயாடி நீ?" இடது கையை வசி
ீ ஸ்வாதியின்
பின் மண்டையை தாக்கினாள்.

"தன்னிலை மறந்து உளறுகிற அளவு என்னடி


கனவு உனக்கு?" சுவாதி எதிர் தாக்குதலுக்கு தனது
இரண்டு கைகளையும் உபயோகித்தாள்.

"கனவுன்னா அப்படித்தானடி இருக்கும்? நீ கனவே


காண்க மாட்டாயா?"
"மாட்டேன்.. நான் நிஜத்தில் வாழ்பவள்.. உன் போல்
கற்பனையில்  நேரத்தை வணாக்கமாட்டேன்"

"கற்பனையோ, கனவோ நேர விரயம்னு யாருடி


சொன்னது?"

"வேறு யாரோ எதற்கு? இதோ நீயே போதும்..


அழகாக தூங்கி எழுந்திருந்திருக்க வேண்டிய
பொழுதை ஏதேதோ பினாத்தி வேஸ்ட்
பண்ணிவிட்டாயே"

"உனக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.


ஆனால் கனவுகளோ, கற்பனைகளோ இல்லாமல்
எனது வேலையே கிடையாது தெரியுமா?"

"சை முதலிலேயே சொன்னேனே, அந்த கண்றாவி


படிப்பை எடுக்காதேன்னு.. அதை எடுத்து படித்துவிட்டு
இப்போது கலை, கற்பனைன்னு என் உயிரை
வாங்குறியேடி சனியனே.."

"நான் கூடத்தான் உன்னை சொன்னேன். உன் படிப்பு


வேண்டாம்னு.. ஒரே ரத்தமும் சதையும் உவ்வே
படிப்பாடி அது? தள்ளிப்போடி அந்தப் பக்கம்.. மருந்து
நாத்தம் குடலை பிரட்டுது பிசாசே"

"யாரடி பிசாசுன்னு சொன்ன?"


"உன்னைத்தான்டி.. கண்ணு முழிச்சு பார்த்தப்ப
தலையை விரித்து போட்டுட்டு என் எதிர்ல நீ
உட்கார்ந்திருந்த்து அப்படியே பிசாசு மாதிரிதான்
இருந்தாய்.."

"அடியேய் உன்னை" சப் சப்பென அவள் முதுகில்


அறைந்தபடியே "அம்மா அம்மா" எனக் கத்தினாள்
ஸ்வாதி.

பதிலுக்கு அவளை இழுத்து பெட்டில் தள்ளி


தானும் முதுகில் மொத்தியபடி தன் பங்குக்கு "அம்மா
அம்மா" என கத்தினாள்.

தீப்பிடித்தது போன்றதொரு பரபரப்பில் திறந்த்து


கதவு.. அறை வாசலில் வந்து நின்ற கலையரசி
திகைத்தாள். அந்த அறையினுள் மட்டுமாக ஏதோ
புயலோ பூகம்பமோ சமீ பத்தில் தாக்கியிருக்க
வேண்டுமென மிக உறுதியாக நம்பினாள்.

அவள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல்


இரு விரல் வைத்து ஏவப்படும் பேப்பர் ராக்கெட்டாய்
ஒரு தலையணை கலையரசி முகத்தை தாக்கி கீ ழே
விழுந்தது. ஒரு நொடி மூச்சு திணறி பிறகு மீ ண்டு
அவள் நிதானத்திற்கு வந்து அறையினுள்
பார்வையிட்ட போது, அங்கே படுக்கை மீ து  புரண்டு
கொண்டிருந்தனர் அவள் பிள்ளை செல்வங்கள்
இருவரும்.

நீயா? நானா? பார்த்துடுவோம் போட்டியில் ஒருத்தி


குடுமி ஒருத்தி கையில் இருந்த்து. கூசாமல் அதை
பற்றி இழுத்தபடி, இடையிடையே பட் பட்டென
ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்த தான்
பெற்ற செல்வங்களை எந்த வகையில்
விலக்குவதென தெரியாமல் விழித்தாள் அவள்.

இப்போது இருவரையும் விலக்கி விடாவிட்டால்


பெரிய விபரீதங்கள் நிகழலாமென உணர்ந்தவள்,
சட்டென தானும் அவர்களுடன் கட்டிலில் ஏறி
கோதாவில் கலந்து கொண்டாள்..
இருவருக்குமிடையே தனது கைகளை நுழைத்து
இடைவெளி உண்டாக்க முயன்றாள். கரும்பு சாறு
மிஷினில் சிக்கிய சக்கையாய் நசுங்கிய தன்
கைகளை கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டாள்.

மனம் தளராமல் மீ ண்டும் முயன்றவள் இம்முறை


கட்டிலின் ஓரம் உருட்டி விடப்பட்டாள். கீ ழே விழ
இருந்த கடைசி நேரம் நுனிக்காலை தரையில்
ஊன்றி தன்னை சமாளித்து நின்று கொண்டவள் இனி
காந்திஜி பாணி சரிவராது ஸ்டெரியிட்டாக நேதாஜி
பின்னால் போய் விடுவோமென முடிவெடுத்து அறை
மூலையில் இருந்த மொசைக் விளக்குமாற்றை
கையில் எடுத்துக் கொண்டாள்.

ஒரு முறை அதை தன் கையில் தட்டி பார்த்துக்


கொண்டவள், தாக்குதலை தொடங்கினாள். முதலில்
தலையில், முதுகில் விழுந்த அடிகளின் சொரணை
இல்லாமல் தங்களிலேயே மூழ்கிக் கிடந்த பெண்கள்,
விளக்குமாற்று அடியை உணர ஆரம்பித்த போது
அது பாதி பிய்ந்து அவர்களை சுற்றி பரவிக் கிடக்க
ஆரம்பித்தது. உடல் முழுவதும் நிறைய அடிகள்
வாங்கியிருந்த்து.

ஒரு நிமிடம் தங்கள் சண்டையை நிறுத்தி


ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள் "டீ 
விளக்கமாத்தால அடிக்கிறாங்கடி.." தாமதமாய்
உணர்ந்து ஒன்று போல் பெட்டின் மேல் ஏறி நின்று..

"அம்மா என்ன பண்றீங்க?" கத்தினார்கள்..

"ம் அவசரத்துக்கு செருப்பு கிடைக்கலை.. அதுதான்


விளக்குமாத்தை எடுத்தேன்.. ஏன்டி நீங்கெல்லாம்
பிள்ளைங்களாடி? இப்படி அதிகாலையில்
தூங்கிட்டிருந்தவளை எழுப்பி உயிரை
வாங்குறீங்களே.."
"அதுக்காக விளக்குமாத்தால் அடிக்கனுமா? நாங்க
யாருன்னு தெரியுமா? மறந்துட்டீங்களா?"

"அடி என் அழகு செல்லங்களே யாருடி நீங்க?"

"நான் டாக்டர்"

"நான் ஆர்க்கிடெக்ட்"

"இதெல்லாம் கொஞ்ச நேரம் முன்னால்  பெட்டில்


உருண்டீங்களே.. பன்னிங்க மாதிரி.. அப்போ
தெரியலையாடி கழுதைங்களா?" கலையரசி
இருவரின் தலையிலும் கொட்ட ஆரம்பிக்க,
இருவரும் அம்மாவின் கையை தள்ள, மூவரின்
பாரம் தாங்காமல் கட்டில் அதிர தொடங்கியது.

"ஏய் என்ன நடக்குது இங்கே?" அதிர்ச்சியாய்


கேட்டபடி அறையினுள்  வந்தார் நடராசன்.

சிறு பிள்ளைகள் போல் கட்டில் மேல் ஏறி


விளையாண்டு கொண்டிருந்த மனைவி, மகள்களை
நம்ப முடியாமல் பார்த்தார் அவர். அசடு வழிந்தபடி
கீ ழே இறங்கினார்கள் பெண்கள் மூவரும்.

3
"சும்மா சொல்லக் கூடாதுடி இன்னைக்கு
அநியாயத்துக்கு அசத்துற.." என நடராசனால்
புகழப்பட்ட கலையரசி இளம்பச்சை காட்டன்
புடவையும், இறுக பின்னிய கூந்தலில் நான்கு
கண்ணி மல்லிகையும், நெற்றியில் ஸ்டிக்கர்
பொட்டின்றி அழகு வட்டமாய் ஜொலித்த
குங்குமுமாய், அழகாகவே இருந்தாள்.

கணவனின் பாராட்டுதலை காதில் வாங்காமல்


சட்னியை தாளித்து கொண்டிருந்தாள் கலையரசி.

"நெற்றியில் வைத்திருக்கிறாயே அந்த குங்குமம்


தான்டி உன் பெயரை தனித்து சொல்லும்" நடராசன்
விடாமல் தன் புகழ்ச்சியை தொடர்ந்தார்.

அவர் சொல்வது போல் கலையரசி


தலைமையாசிரியையாக வேலை பார்க்கும்
பள்ளியில், இந்த நெற்றி, வகிட்டு குங்குமங்கள் தான்
அவளது அடையாளங்கள். இந்தக் காலத்திலும் இப்படி
அழகாக குங்குமம் இட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியை 
அங்கே மாணவர்கள் முதல், பெற்றோர் வரை
அனைவருக்கும் இஷ்டமானவள்.

மனைவயிடமிருந்து தனது கொஞ்சல்களுக்கு


பதிலில்லாமல் போக, நடராசன் தான் உட்கார்ந்திருந்த
டைனிங் டேபிள் சேரலிருந்து எட்டி அவளது நீள
பின்னலை பிடித்து இழுத்தார். வேகமாக திரும்பிய
கலையரசியின் கையில் தோசை கரண்டி இருந்த்து..
கண்களில் கோபம் இருந்தது.

"என்ன காலங்கார்த்தாலே கொஞ்சல் வேண்டிக்


கிடக்கு உங்களுக்கு? நான் அப்போதிருந்து அடுப்போடு
போராடிட்டு இருக்கேன்.. நீங்க ஜாலியாக
பேனுக்கடியில் உட்கார்ந்துட்டு கமெண்ட் பண்ணிட்டு
இருக்கீ ங்களா? கொஞ்சமாவது வயதுக்கேற்ற
பொறுப்பு இருக்கா உங்களுக்கு?" காலை வேலைக்கு
கிளம்பும் அவசர பொழுதுகள் கலையரசிக்கு இந்த
கோபத்தை தந்திருந்தன.

"ஷ் வயசை பத்தி நீ பேசாதே.. நீ மட்டும்


வயசுக்கேத்த மாதிரியா நடந்துக்கிற?" நடராசன்
கண்களை சிமிட்டினார்.

"அப்படி என்ன செய்தேன் நான்?" கலையரசி


யோசித்தாள்.

"இன்று காலையில் கட்டில் மேல் ஏறி நின்று


பிள்ளைங்களோடு சண்டை போட்டாயே.. சும்மா
சொல்லக்கூடாது கலை.. அப்படியே துள்ளி
விளையாண்டாய்.. நான் கூட என்னடா நமக்கு
இரண்டு பொண்ணுங்கதானே.. மூணாவதா இந்த
இளம் பொண்ணு யாருன்னு ஒரு நிமிடம்
திகைச்சிட்டேன்.."

கணவரது சீண்டலை இப்போதுதான் உணர்ந்த


கலையரசி "உங்களை கிண்டலா பண்றீங்க?" தோசைக்
கரண்டியை ஓங்கியபடி வந்தவள் அருகே வந்ததும்
கடைசி நொடி மனதை மாற்றி கரண்டியை விட்டு
கையால் கணவரின் முதுகை மொத்தினாள்.

"அடிப்பாவி கட்டின புருசனை இப்படி


அடிக்கிறாயே? யாராவது என்னை காப்பாத்துங்களேன்
ஸ்வாதி, ஜோதி" தனது உச்சபட்ச குரலில் கத்த
ஆரம்பிக்க..

முதலில் ஓடி வந்த ஸ்வாதி "ப்ச்


இவ்வளவுதானா.." என்றுவிட்டு அரைகுறையாக
கட்டாமல் விட்டு வந்திருந்த தனது தலைமுடியை
சரி செய்தபடி திரும்ப போய்விட்டாள்.

ஐந்து நிமிடம் கழித்து நிதானமாக எட்டி பார்த்த


ஜோதி தாயின் அடிகளில் சிக்கியிருந்த தகப்பனை
கண்டு கொள்ளாமல், "அம்மா எனக்கு இன்னைக்கு
லன்ஞ் கட்டாதீங்க.. ஏதோ நியூ கஷ்டமராம்..
அவரோடு  ஹோட்டல்ல லன்ஞ்.." தகவல் தந்துவிட்டு
தன் போக்கில் போனாள்.

"அடிப்பாவிகளா ஒரு அப்பாவி ஆம்பளை அடிபட்டு


அழுதுட்டிருக்கான். கண்டுக்காம போறீங்களே. நீங்க
எல்லோரும் பொம்பளைங்க கிறதாலதானே இப்படி
உங்களுக்கு நீங்களே சப்போர்ட் பண்ணிக்கிறீங்க..
இதுவே எனக்கு ஒரு பையன் இருந்தால் இது மாதிரி
அநியாயம் எனக்கு நடக்க விட்டிருப்பானா?"

நடராசன் முடித்த மறுநொடி அவரது இரு


பெண்களும் அவர் முன்னால் காளியை உள்வாங்கி
பிரசன்னமானார்கள்.. கண்கள் சிவந்து, கோப மூச்சு
கூட நாசி வழியாக சிவப்பாக வருவது
போலிருந்த்து.. சிவப்பாய் நாக்கு வெளியே
தொங்காத்து ஒன றுதான் இல்லை.

"என்னப்பா சொன்ன ீங்க? உங்களுக்கு ஆம்பளை


பையன் வேணுமா?"

கையில்   சூலமில்லாத்தால் இப்போதைக்கு


உயிருக்கு ஆபத்தில்லையென்ற தைரியம்
இருந்தாலும் அந்த கண் உருட்டலிலேயே வயிறு
கலங்கியது நடராசனுக்கு.
"ஹிஹி இல்லைடா செல்லங்களே.. நீங்கள்
இரண்டு பேரும் எனக்கு ஆம்பளை புள்ளைங்களை
விட பிடித்தமானவர்கள். ஒரு ஆம்பளை புள்ளையை
பெத்திருந்தா இந்த நேரம் நான் தெருவில்தான்
நின்றிருப்பேன்.. அழகான என்
பொண்ணுங்களாலேதானே நான் இப்போது
தைரியமாக தலை நிமிர்ந்து ஊருக்குள் நடந்துட்டு
இருக்கேன்.."

"இனி ஒரு தடவை.. ஆண்பிள்ளை இல்லையேன்னு


சொல்ல மாட்டீங்களே"

"இல்லைடா கண்ணுகளா அப்பா அப்படி


சொல்வேனா மலை இறங்குங்கடா மகராசிகளா.."
மகள்களை சாமாதானம் செய்தபடி மனைவியை
கண்களால் தேடினார்.

கலையரசி மகள்களின் கையில் கணவரை


ஒப்படைத்த திருப்தியில் மீ ண்டும் அடுப்பு பக்கம்
திரும்பியிருந்தாள்.. கிராதகி நான் இவர்களுக்கிடையே
சிக்கி முழிச்சிட்டிருக்கேன்.. இவள் பாட்டுக்கு இவள்
வேலையை பார்க்கிறாளே .

"கலை" என இழுத்தவரை திரும்பி முறைத்தாள்.


"கொலை.." ஆட்காட்டி விரலை ஆட்டினாள்..
நடராசன் கப்பென வாயை மூடிக்கொண்டார்.

"சமையல் முடிந்தது.. இந்த பாத்திரத்தையெல்லாம்


ஒதுக்கி பின்னால் சிங்ல போடுங்க.. மாரி பத்து
மணிக்கு பின் வழியாக வந்து தேய்த்து வச்சிட்டு
போவா.. வாஷிங் மெசின் முடிஞ்சிருக்கும்.. துணியை
பால்கனில காய போடுங்க இந்த
வேலையையெல்லாம் செய்து முடிச்சாத்தான்
உங்களுக்கு இன்னைக்கு லன்ஞ்.. இல்லைன்னா
கேன்டீன் சாப்பாடுதான்"

உத்தரவாக சொல்லிவிட்டு கலையரசி காலை


டிபனை டேபிளில் எடுத்து வைக்க ஆரம்பிக்க,
அவரது  அரசு அலுவலக கேன்டீனின் அதி
சுவையான மதிய சாப்பாடு நினைவு வந்து
நடராசனை திக்கிட வைத்தது.

இவள் சொல்வதோடு நிறுத்தமாட்டாள்.. நிச்சயம்


செய்தும் விடுவாள் என தோன்ற ஆரம்பிக்க அவர்
அவசரமாக சமைத்து  முடித்து கிடந்த பாத்திரங்களை
பொறுக்கி எடுத்து போய், சிங்கில் போட துவங்கினார்.
"அம்மா என் க்ளிப்பை இவ எடுத்து
மாட்டிட்டாம்மா.." கத்தியபடி சாப்பிட வந்து
அமர்ந்தாள் ஜோதி.

"ஏய் நேத்து நீ என் ரப்பர்பேன்டை போட்டுட்டு


போனியே.. வரும்போது அதை பிய்த்து வேறு
கொண்டு வந்தாயே.. நான் உன்னை ஏதாவது
கேட்டேனா? ஒரு சின்ன க்ளிப் அதுக்கு போய் தையா
தக்கான்னு குதிக்கிறியே.."

"சின்ன க்ளிப்பா? அது எனக்கு சென்டிமென்ட் 


தெரியுமா? என்  லாஸ்ட்  காலேஜ் டேயில் என் டியர்
ப்ரெண்ட் ப்ரசென்ட் பண்ணியது.. அதை பற்றி
உனக்கென்ன தெரியும்?"

"ஆபெரிய காலேஜ்.. பெரிய ப்ரெண்ட்ஷிப்


போவியா.."

"என் காலேஜை என் ப்ரெண்டையா குறை


சொல்கிறாய் உன்னை?"

மீ ண்டும் கலையரசி  இடை புகாவிட்டால்,


இருவருமே அன்று வேலைக்கு லீவ் போட்டுவிட்டு
வட்டிலிருந்து
ீ சண்டை போடும் எண்ணத்தில்
இருந்தனர்.
"ஏன்டி எந்த நேரங்கெட்டு பிறந்தீங்கடி நீங்க?
டெய்லி டே அன்ட் நைட்  இப்படி உயிரை வாங்கி
தொலையிறீங்களே.."

"ஜாதகத்தை எடுத்து பாருங்கம்மா"

"எதுக்கு?"

"பிறந்தநேரம் கேட்டீங்களே.. அது எங்களுக்கு


நினைவில்லை" சாதாரணமாக தாய்க்கு
விளக்கமளித்து விட்டு தங்கைபுறம் குனிந்து ரகசியம்
பேச ஆரம்பித்தாள் ஸ்வாதி.. தலை சாய்த்து அதை
கவனிக்க ஆரம்பித்தாள் ஜோதி.

சற்று முன் ஒரு க்ளிப்பிற்காக கத்தியை


தீட்டியவர்கள் இவர்கள் என்று சூடம் அணைத்தாலும்
யாரும் நம்பமாட்டார்கள்.. கலையரசி நோகாமல்
தலையிலடித்துக் கொண்டாள்.

வட்டிலுள்ள
ீ எல்லா உறுப்பனர்களும் காலை
ஒன்பது முப்பதிற்கெல்லாம் வட்டை
ீ விட்டு
வேலைக்கென வெளியேறும் நிலையில் இருக்கும்
ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பத்தின் காலை
நேரம் எப்படி இருக்குமோ அப்படியேதான் அந்த
வடும்
ீ இருந்தது.
"இன்னைக்கு அதிகாலையில் கனவில் யார் கூடடி
கொஞ்சிக்கிட்டு இருந்தாய்?" ஸ்வாதியின் கேள்விக்கு
ஜோதி விழித்தாள்.

அதி நவன
ீ முறையில் அண்ணாந்து பார்க்கும்படி
உயரத்தில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் அந்த நான்கு
மாடிக் கட்டிடம் ஜோதிக்கு எப்போதுமே  பிடிக்கும்.
இன்றும் அது போன்றே தூரத்தில் வரும்போதே
கட்டிடத்தை ரசித்தபடியே அதனுள் தன் ஸ்கூட்டியை
செலுத்தினாள்.

அகலமாய் அமைந்திருந்த க்ரானைட் படிகட்டுகள்


கறுப்பாய் மின்னின. ஓரத்தில் அமைந்திருந்த தங்க
நிற பூண் போட்டிருந்த இரும்பு கை பிடி சுவரை
வருடி பிடித்தபடி அலுவலகத்தினுள் நுழைந்தாள்.

அது ஜோதி வேலை பார்க்கும் அலுவலகம்.


சென்னையில் பிரபலமான பில்டர்ஸ்களில் ஒன்று..
படிப்பு முடிந்ததும் இங்கே இன்டர்வியூ அட்டென்ட்
பண்ணி உடனே வேலையும் கிடைத்து விட  ஓர்
ஆண்டாக இங்கேதான் வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறாள். மூன்று மாதங்களுக்கு முன்பு
தான்.

"மேடம் சார் காச் பூச்சுன்னு கத்திட்டு இருக்கிறார்.."


உள்ளே நுழைந்த்தும் அவளிடம் மெல்லிய குரலில்
கம்ப்ளைன்ட் பண்ணினாள்  பூமதி. அவளும் அங்கே
வேலை பார்ப்பவள்.. இன்ஞினியரிங் முடித்தவள்.

"எதற்கு பூமதி?"

"நேற்று போட்ட ப்ளான் கஷ்டமருக்கு


பிடிக்கவில்லையாம் அதற்குதான்.."

அதற்கு நம்மை கத்தி என்ன செய்ய? தனக்குள்


நினைத்துக் கொண்டவள், "சரி நான்
பார்த்துக்கொள்கிறேன்.. நீ போ.." அவளை
அனுப்பினாள்.

உடனே உள்ளே போய் பார்க்கலாமா என


யோசித்துவிட்டு, வேண்டாம் கொஞ்சம் வேகம்
அடங்கட்டும்.. இப்போது போனால் தாறு மாறாக
கத்துவான் என நினைத்துவிட்டு தன் இடத்தில்
அமர்ந்து கொண்டாள்.  தன் லேப்டாப்பில்   முதல்நாள்
போட்டு வைத்த ப்ளானை எடுத்து சரி பார்க்க
தொடங்கினாள்.
எல்லாம் பெர்பெக்டாகத்தான் இருந்த்து.
கஸ்டமருக்கு பிடிக்காத்துதான் இதன் மைனசாக
இருக்கும். ஒரு நிமிடம் கண் மூடி அந்த கஸ்டமரை
பற்றி யோசித்தாள். ஒரு ஆண், ஒரு பெண்னெண
இரண்டு பிள்ளைகள் அவருக்கு. கணவன் மனைவி
இருவரும் வேலைக்கு செல்பவர்கள். குழந்தைகள்
ஆறு மற்றும் எட்டாவது படித்து கொண்டிருந்தார்கள்.

மூன்று பெடரூமுடன் கூடிய குட்டி பங்களா


போன்ற அமைப்புடனான வடு
ீ ஒன்றை
கட்டுவதற்காக அவர்களை அணுகியிருந்தார்கள்
அவர்கள்.. இத்தோடு ஐந்து ப்ளான் போட்டு
காண்பித்தாயிற்று.. அவர்களுக்கு திருப்தியில்லை.

குடும்ப தலைவரை தவிர்த்துவிட்டு, அவரது


மனைவியிடம் மனதை கொண்டு வந்தாள் ஜோதி..
இந்த திருப்தியின்மைகள் எல்லாமே
அவளிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமென
தோன்றியது.. தான் பார்த்து பேசிய அளவில் அந்த
பெண்ணின் குணநலன்களை மனதிற்குள் கொண்டு
வந்து ஆராய்ந்தாள்.
சில பாயிண்டுகள் தோன்ற அதன்படி டிரை
பண்ணலாமே என தன் லேப்டாப்பில் அந்த வட்டின்

ப்ளானை மாற்ற தொடங்கினாள்.

"மேடம்" பூமதி அவள் தோள்களை லேசாக தொட்டு


உலுக்கிய பிறகே நினைவிற்கு வந்தாள்.

"சார் கூப்பிடறார் மேடம்"

"ம் இதோ போறேன்மா.. நானே போகனும்னுதான்


நினைத்திருந்தேன்.." தனது லேப்டாப்பை தூக்கிக்
கொண்டு எழுந்தாள்.

" மஹிந்தர் ஐ காட் எ நியூ ஐடியா.. இதை


பாருங்களேன்.. நிச்சயம் இது ஒர்க்அவுட் ஆகும்"
கையில் லேப்டாப்புடன் அறைக்கதவை திறந்தபடி
உள்ளே வந்தவள், அங்கே எம்.டி நாற்காலியில்
இவளை குதறுவது போன்ற பார்வை பார்த்தபடி
அமர்ந்திருந்த முத்துராமனை கண்டதும் நாக்கை
கடித்தாள்.

இவர் எப்போது வந்தார்? ஐய்யய்யோ


கவனிக்கவில்லையே அவஸ்தையாய் எச்சில்
விழுங்கினாள்.

"சாரி சார் நான் ஒரு புது ப்ளான் போட்ட


அவசரத்தில்"
"புது கஸ்டமர் வந்திருக்கிறார்.." முத்துராமன்
பற்களுக்கிடையே வார்த்தைகளை வைத்து கடித்து
துப்பினார்.. அவளையே அப்படி கடித்து துப்பும் ஆசை
அவருக்கு இருப்பதை உணர்ந்தபடி திரும்பி
பார்த்தாள்.

இது போல் புது கஸ்டமர் வந்திருக்கும் நேரம்


தான் இப்படி மரியாதையின்றி உள்ளே வந்தது
தவறுதானே. இது அந்த கஸ்டமருக்கு அவர்கள்
நிறுவனத்தின் மீ திருக்கும் மதிப்பை இறக்கிவிடுமே
தன்னை தான் நொந்தபடி வந்திருந்த கஷ்டமரை
வணங்கினாள்.

"ஹலோ சார்.. நான் சாரின் பி.ஏ.என் பெயர் ஜோதி"


தானே அறிமுகம் செய்து கொண்டவள் காயம்
பட்டாள்.

ஒரு ஹாயோ ஹலோவோ இல்லாமல்


வெறுமனே தலையை மட்டுமே ஆட்டினார் அந்த
ஆள்.. அதைக் கூட அவள் முகத்தை பார்த்து
சொல்லவில்லை.. ஜோதி பற்களை கடித்து
கொண்டாள்.

திமிர் பிடித்த மேல் தட்டு வர்க்கம்..


இவர்களுக்கெல்லாம் சம்பளம் வாங்குபவர்கள்
என்றால் மட்டம்.. முத்துராமனையும் சேர்த்துதான்
இப்படி நினைத்தாள்.

அப்போது அறையினுள்ளிருந்த பாத்ரூமிலிருந்து


வந்தான் மஹிந்தர்.. இவளை பார்த்ததும் கொஞ்சம்
முகம் மலர்ந்து சிறிதாய் தலையசைத்தான்.. அந்த
சிறு வரவேற்பே அந்நேரம் ஜோதிக்கு மிக இனிதாய்
இருந்தது. மஹிந்தர் முத்துராமனுக்கு அருகே
அமர்ந்து கொண்டு தன் லேப்டாப்பை திருப்பினான்.

"இங்கே பாருங்கள் டாட்.." என ஏதோ விளக்கம்


சொல்ல ஆரம்பித்தான்.. முத்துராமன் முழுதாக மகன்
பக்கம் திரும்பிக் கொண்டார்.

ஜோதி இன்னமும் நின்று கொண்டுதான்


இருந்தாள்.. கையில் லேப்டாப்பை சுமந்தபடி, ஏ.சி
அதற்குரிய குளிர்ச்சியை இழந்து  எரிச்சலை  வாரி
வசியது..
ீ என்னமும் பண்ணிக் கொள்ளுங்கள் என
வெளியேறி விடுவோமா என நினைத்துவிட்டு,
வேண்டாம் சும்மாவே மரியாதை குறைவாக நடந்து
கொண்டிருக்கிறாள் என்ற காரணம் காட்டி இப்படி
நிற்க வைத்திருக்கின்றனர். இப்போது தானாக
வெளியேறினானால் அவ்வளவுதான்..
லேப்டாப்பை கை மாற்றி பிடித்தபடி பார்வையை
திருப்பிய போது, அவர் அவன் அந்த புது கஸ்டமர்
அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

இவன் எதற்கு இப்படி பார்த்து தொலைகிறான்


முழியை பார் உருட்டிக்கிட்டு ஏனோ சிறு மின்னலின்
உணர்வை உடலில் உணர்ந்தாள் அவன் பார்வையில்.

நிறைய ஆண்களின் இது போன்ற ஆராய்தல்  


பார்வையை முன்பே எதிர் கொண்டிருக்கிறாள்..
ஆனால் அவை அருவெறுப்பூட்டுபவையாகவோ,
அதிகாரம் வாய்ந்தவையாகவோ அவள் மேல் பாயும்..
இவனது பார்வை அப்படி இல்லை.. ஏதோ ஒரு
ஆராய்தல் அறியும் வேகம்.. அப்படியே அவளின்
உள்ளுக்குள் ஊடுறுவி அலசி ஆராய்ந்தது அந்த
பார்வை.

இன்னும் சற்று அந்த பார்வையை கவனித்தால்


அது ஒரு வகை பயக்குளிரை அவளுள் விதைத்தது..
புருவம் சுருக்கி அவனது பார்வையை ஆட்சேபிக்கும்
பதில் பார்வையை எறிய, அவன் புருவம் உயர்த்தி,
விழி அகற்றி உதடு பிதுக்கினான்.
"உங்க ஸ்டாப்ஸ்க்கு கஸ்டமர் சர்வசை
ீ பற்றி
சொல்லி தர மாட்டீர்களா சார்?" முத்துராமனிடம்
கேட்டான்.

அது வெகு நிச்சயமாக அவளை மீ ண்டுமொரு


முறை அவளது எம்.டியின் அதிருபதிக்கு ஆளாக்க
வைக்கும் கேள்வி.

"நாம் உள்ளே வரும் போது நிமிர்ந்து கூட


பார்க்காமல் லேப்டாப்பை பார்த்துக்
கொண்டிருந்தவர்கள் தானே இவர்கள்.." தயக்கமின்றி
அவளை விரல் நீட்டி சுட்டினான்.

ஜோதி அவனை அதிர்ந்து பார்த்தாள். இவன்


இப்போது என்ன செய்கிறான் .? போட்டுக்
கொடுக்கிறானா .?

"ம்.." முத்துராமன் யோசனையுடன் இவளை


பார்க்க..

"உங்கள் கன்சர்னுக்கு வரும் ஒரு வேல்யபுள்


கஷ்டமரை, உங்கள் ஸ்டாப் எழுந்து நின்று வரவேற்க
மாட்டார்களா சார்?" பவ்யமாக கேட்பது போன்ற
அவன் கேள்வியில் விசமம் தொக்கிக் கொண்டு 
இருந்தது.

"ஆமாம் அப்படித்தான் இருக்கனும்.. வந்து இந்த


பொண்ணு" முத்துராமன் இழுக்க..

"ஜோதி மரியாதை தெரிந்தவள்தான் சார்.


உண்மையலேயே அவள் ஏதாவது வேலைதான்
பார்த்துக்.." சமாளிப்பாய் வந்த மஹிந்தரின் பதிலை
பாதியில் வெட்டினான்.

"ஒரு வேளை நான் உங்களுக்கு வேல்யபுள்


கஸ்டமரில்லையோ?"

பதறிவிட்டனர் அப்பாவும், மகனும். தங்கள்


இருக்கையை விட்டே எழுந்து நின்று விட்டனர்.

"என்ன சார் உங்களை விட பெரிய கஸ்டமர் 


யாருக்கு கிடைப்பார்கள்? நீங்கள் ரொம்ப பெரிய இடம்
உங்கள் கான்டராக்ட் மட்டும் எங்களுக்கு
கிடைத்துவிட்டால் நாங்கள் மிகவும்
அதிர்ஷ்டசாலிகளாகி விடுவோம்.." முத்துராமன்.

"உங்களுக்கு  தகுந்த மரியாதை கிடைக்காத்தில்


வருந்துகிறேன். இதோ இப்போதே சரி செய்து
விடுகிறேன். ஜோதி.. சாரிடம் சாரி கேளு.."
எளிதாக சொன்ன மஹிந்தரின் பேச்சில்
அதிர்ந்தாள். சாரி கேட்க வேண்டுமா. எதற்காக அவள்
என்ன தப்பு பண்ணினாள்?  வேலையில்
ஆழ்ந்திருந்த்து ஒரு தப்பா?

மறுப்பை காட்டிய ஜோதியின் விழிகளை கவனித்து


விட்ட மஹிந்தர் "சாரி சொல்லு ஜோதி.." கண்டிப்பை
குரலில் கூட்டினான்.

இது நியாயமா என அவனிடம் கண்ணால்


கேட்டவளுக்கு, ப்ள ீஸ் என  தந்தையை விழியால்
காட்டி இறைஞ்சினான் அவன்.

சட்டென மனதில் மூண்ட அலுப்புடன் இயந்திர


பொம்மையாய் அந்த கஸ்டமர் புறம் திரும்பியவள்,
அவன் தான் அமர்ந்திருந்த நாற்காலியின் முன்புறம்
தள்ளி வந்து கூர் பார்வையுடன் தங்கள்
இருவரையும் பார்வை ஆராய்தல் செய்து
கொண்டிருந்த்தை பார்த்தாள்.

நிச்சயம் அவர்களின் பார்வை பேச்சை


கவனித்திருப்பான். என்ன கருமத்திற்கு இப்படியே
பார்த்து தொலைகிறான்? மனதிற்குள் அவனை
வைதபடி வெளியே உதட்டை இளித்தாற் போல்
வைத்துக் கொண்டாள். அவன் உடனேயே
நாறகாலியில் பின்னால் சாய்ந்து அமர்ந்து கால்
மேல் கால் போட்டுக் கொண்டு "ம்" என்பது போல்
பார்த்தான்.

இதென்ன, இவன் நான் மன்னிப்பு கேட்க


தயாராகிறானா?குழப்பத்துடன் அவனை ஆராய,
அவன் அமர்ந்திருந்த தோரணை இது போல் 
பந்தாவாக அமர்வதற்கென்றேயானது போலிருந்த்து.
துளி போலித்தனம் இல்லை அதில்.. இதுவே என்
இயல்பு என்றாற் போலிருந்த்து.

"சாரி சார் நீங்கள் வரும்போது நான் ஒரு


முக்கியமான ப்ளான் சரி செய்து கொண்டிருந்தேன்.
அதனால் உங்களை கவனிக்கவில்லை. இனி இப்படி
நடக்காது மன்னிச்சிடுங்க.." கஸ்டமர்கள் நம்
கடவுள்கள் என அவளுக்கு காலேஜில்
பயிற்றுவித்ததை மனதிற்குள் கொண்டு வந்து
அச்சடித்து நிறுத்திக் கொண்டாள்.

"ஓ என்ன ப்ளான்? எதை பார்த்துக்


கொண்டிருந்தீர்கள்?" அவன் கேட்ட விதத்தில் ஆர்வம்
தெரிய, உடனே அவனிடம் சொல்ல வாய் திறந்தவள்
முத்துராமனை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு வாய்
மூடிக்கொண்டாள்.
"அது ஒரு சிறிய ப்ராஜெக்ட் சார். மூன்று
பெட்ரூம்களில் ஒரு தனி வடு.
ீ ஒரு மாதமாக எங்கள்
ப்ளான்களையெல்லாம் ரிஜக்ட் செய்து உயிரை
வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களை மாதிரி
பெரிய கஸ்டமர்களை கூட எளிதாக திருப்திபடுத்தி
விட முடிகிறது. இவர்களை போல் நடுத்தர
வர்க்கத்தினரை சமாளிப்பதற்குள்தான் எங்களுக்கு
நாக்கு தள்ளி விடுகிறது.." முத்துராமன் சலித்துக்
கொண்டார்.

கஸ்டமர்கள் கடவுள்கள் என்பது இவனை மாதிரி


உயர்தர பணக்கார்ர்களுக்கு மட்டும்தானோ..
முத்துராமனை வெறுத்து போய் பார்த்தாள். அப்படி
என்ன பெரிய ப்ராஜெக்ட் வைத்திருக்கிறான் இவன்?
அப்பாவும், மகனுமாக இந்த தாங்கு தாங்குகின்றனரே..

"அவர்களும் உங்கள் கஸ்டமர்கள்தானே


முத்துராமன் சார்?"

ஒற்றைக் கேள்விதான் முத்துராமனின் முகம்


வெளிறி விட்டது. மஹிந்தரின் முகம் இருண்டு
விட்டது.
நீங்கள் இப்படித்தான் உங்கள்  கஸ்டமர்களை
நடத்துவர்களா
ீ எனக் கேளாமல் கேட்டுவிட்டு
நிதானமாக இவள் பக்கம் திரும்பினான்.

"நீங்கள் சொல்லுங்கள் மிஸ்.என்ன உங்கள் 


ப்ளான்?"

"அது சாதாரண ப்ளான் சார்.. உங்களுக்கு


சுவைக்காது" இடையிட்ட மஹிந்தரை திரும்பி ஒரு
பார்வை பார்க்க அவன் வாயை மூடிக்கொண்டான்.

முத்துராமன் ஒப்புதலாய் தலையசைக்க, அந்த


புதியவன் முன் டேபளில் தன் லேப்டாப்பை திறந்து
வைத்த ஜோதி விளக்க தொடங்கினாள்.

"சார் இந்த குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர்கள்


பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒன்று, பெற்றவர்களுக்கு
ஒன்றென மொத்தம் மூன்று பெட்ரூம்கள்
கேட்டிருக்கிறார்கள். நாம் பலவிதங்களில் அந்த
பொட்ரூம்களை அமைத்து கொடுத்தும் அவர்களுக்கு
திருப்தி வரவில்லை"

"அவர்களிடமே ஐடியா கேட்டிருக்கலாமே நீங்கள்?"


அவன்து பார்வை லேப்டாப்பில் இருந்த அவளது
ப்ளானில் பதிந்திருந்த்து.
"கேட்டோம் சார் ரொம்பவும் குழப்புகிறார்கள்..
சரியாக சொல்ல போனால் தங்கள் தேவை என்ன
என்பது அவர்களுக்கே தெரியவில்லை அல்லது
தங்கள் தேவையை விளக்கி சொல்ல
தெரியவில்லை.. அதனால் அவர்களது குண
இயல்புகளை நான் அனுமானித்த வரை, இந்த
ப்ளானை மாற்றி வரைந்திருக்கிறேன் பாருங்கள்.."

"இது மாஸ்டர் பெட்ரூம்.. பேரன்ட்சுக்கு அதன்


அருகில் அதன் சரிபாதியாக இரண்டு சிறிய பெட்ரூம்,
ஒவ்வொரு குழந்தைக்கும்.இந்த அமைப்பைத்தான்
அவர்கள் திரும்ப திரும்ப பிடிக்கவில்லை
என்கிறார்கள். நாமும் இடம், வலமென்று பலதடவை
மாற்றிவிட்டோம்.. அவர்களுக்கு திருப்தியில்லை..
இப்போது இந்த மாஸடர் பெட்ரூமிற்கும், சிறிய
பெட்ரூம்களுக்கும் இடையே இருக்கும் சுவரை
எடுத்து  மூன்றையும் ஒன்றாக்கி விடுவோம்"

"மூளை இருக்கிறதா உனக்கு? அவர்கள் கத்தி கத்தி


மூன்று பெட்ரூமென ஏலமிட்டுக்
கொண்டிருக்கின்றனர்.. நீ என்னவென்றால்.."

துடித்து கத்திய முத்துராமன் பக்கம் கை நீட்டி


அசைத்து "உஷ் "என்றான்.
"ம் நீங்க சொல்லுங்க"

"மூன்று  பெட்ரூம்களுக்குமிடையே இருக்கும்


கற்சுவரை எடுத்துவிட்டு, செயற்கை சுவர்களை
வைக்க வேண்டும்.அதாவது தேவைப்பட்டால்  சுவர்
அமைத்து கொள்வது, இல்லாவிட்டால் எடுத்துக்
கொள்வது போன்ற மெதட்.. இப்போது
பெற்றவர்களும், பிள்ளைகளும் ஒரே அறையில்
தூங்குவது போன்றுமிருக்கும்.. தனித்தனியாக
இருப்பது போன்றுமிருக்கும். என் கணிப்புபடி அவர்கள்
மன எண்ணம் இதுதான் இந்த ப்ளான் நிச்சயம்
அவர்களுக்கு பிடிக்கும்"

மஹிந்தர் "புரியவில்லை.." என்றான்.

முத்துராமன் புரிந்தும் புரியாத நிலையிலிருந்தார்.

அந்த புதியவனின் முக பாவத்திலிருந்து எதையும்


அறிய முடியவில்லை.

தத்திங்க ஒண்ணுக்காவது புரியுதா பார் தனக்குள்


அலுத்துக் கொண்டாள் ஜோதி.

6
"அந்தக் குடும்பத்தில் இருவரும் வேலைக்கு
போகிறவர்கள் ஒரு நாளின் மிகக் குறைந்த  நேரமே 
தங்கள் குழந்தைகளுடன் இருக்க  அவர்களுக்கு
கிடைக்கும்.. அந்த நேரம் பெரும்பாலும் இரவு நேரம்..
அந்த நேரத்தில் தன் குழந்தைகளை பிரிந்திருக்க
அந்த தாய் விரும்பவில்லை.. ஆனால்
குழந்தைகளுக்கு தனி பெட்ரூம் என்ற ஹை
சொசைட்டி கல்சருக்குள்ளும் தங்களை பொருத்திக்
கொள்ள நினைக்கின்றனர்.. இந்த குழப்பமே
அவர்களை  நாம் சொல்லும் எல்லா ப்ளானையும்
ரிஜக்ட் பண்ண வைக்கிறது.. இப்போது எனது இந்த
ப்ளானில் குழந்தைகள் அவர்கள் அருகே இருந்தது
போன்றும் இருக்கும்.. தள்ளி இருந்தது போன்றும்
இருக்கும்.. தங்கள் அறையிலிருந்தபடியே அடுத்த
தடுப்பில் படுத்திருக்கும் தங்கள் குழந்தைகள் மேல்
ஒரு கண் வைத்துக் கொள்ள அந்த தாய்க்கு
வசதியாக இருக்கும்.. நினைத்தவுடனேயே தங்கள்
குழந்தைகளின் அறைக்குள் எழுந்து போகவும்
முடியும்.. அநேகமாக இந்த ப்ளான் அவர்களுக்கு
பிடிக்குமென நினைக்கிறேன்.."
"ஜோதி சொல்வது சரியென்றுதான்
தோன்றுகிறதுப்பா.." மஹிந்தர் முதல் ஆளாக அவளது
புது ப்ளானுக்கு டிக் அடித்தான்..

"ம் ம் பார்க்கலாம்.. அவர்களிடம் காட்டலாம்..


அவர்கள் சொல்லட்டும் சரி என்று.." அரைகுறையாக
தலையாட்டினார் முத்துராமன்..

இவர் எப்போதுதான் என் வேலைகளை முழு


மனதோடு பாராட்டியிருக்கிறார் தாங்கலோடு
நினைத்தபடி பார்வையை அந்த புதியவன் பக்கம்
திருப்பினாள்..

இவள் திரும்பியதும் அவன் லேசாக


தலையசைத்தான்.. அவ்வளவுதான்.. வேறு எந்த
ரியாக்சனையும் காட்டவில்லை.. பைன் னு ஒரு
வார்த்தை வாயை திறந்து சொன்னால் முத்தா
உதிர்ந்திடும்.. பெரிய மகராசா, தலையாட்டுகிறார்..
பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்..

"நான் கிளம்பட்டுமா சார்?" ஜோதி இன்னமும்


நின்று கொண்டுதான் இருந்தாள்.. அவள் மனம்
எரிச்சலில் இருந்த்து..

மூன்று ஆண்கள் வசதியாக அமர்ந்து


கொண்டிருக்கும் அறையில் ஒரு பெண்ணை அரை
மணி நேரமாக நிற்க வைத்து பேசிக்
கொண்டிருக்கிறார்களே இவர்கள் எல்லோரும் என்ன
ஜென்மங்கள்.. பணத்திமிர் அதிகாரத் திமிர்.. பற்களை
கடித்தாள்..

"எனக்கு வேலை இருக்கிறது சார்" மீ ண்டும் தனது


காத்திருத்தலை நினைவுறுத்தினாள்.. ஏனென்றால்
அவளது முன்னதான கேள்வியை கவனிக்காமல்
அவர்கள் மூவரும் ஏதோ பேச்சிற்குள்
நுழைந்திருந்தனர்..

அந்த அவனின் ஏதோ புதிய ப்ராஜெக்ட்..


மகாபலிபுரத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலாம்..
பெரிய இடம்தான் போலும்.. அதுதான் அவனிடம்
இப்படி குழைகின்றனர்..

"பைவ் மினிட்ஸ் பொறுமையாக இருக்க


மாட்டார்களா சார் உங்க ஸ்டாப்?" அவன்தான்.. மிகச்
சரியாக திரும்ப போட்டுக் கொடுத்தான்..

You might also like