You are on page 1of 1

தமிழ்

வகுப்பு : ஆறாம் வகுப்பு


பாடம் : 3.4 ஒளி பிறந்தது
ஏட்டில் எழுத வேண்டியவை :

I. சிறுவினா :
1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாய் அப்துல்கலாம் எவற்றைக்
குறிப்பிடுகிறார் ?
விடை :
சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாய் அப்துல்கலாம்
குறிப்பிடுபவை:
i. உணவு உற்பத்தியில் தன்னிறைவு
ii. தகவல் தொழில் நுட்பத்தில் மிகுதியான வளர்ச்சி
iii. அணு உலைகள் மூலம் மின்சாரம் தாயரிப்பதில் முன்னணியில்
இருத்தல்.
iv. நவன
ீ மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி
பெற்றிருத்தல்.
v. “அக்னி” மற்றும் “பிருத்திவி” ஆகிய ஏவுகணைகளைச்
செலுத்துவதில் வெற்றி பெற்றமை.

2. தமக்குப் பெரும் மகிழ்வை அளித்ததாய் அப்துல்கலாம் குறிப்பிடும்


நிகழ்வு யாது ?
விடை : போலியோ நோயினால் பாதிப்புற்றவர்கள் மூன்று கிலோ
எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு சிரமப்பட்டு
நடந்தனர். அதைக் கண்டு வருந்திய அப்துல்கலாம், பாதுகாப்புக்
கருவிகளில் பயன்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம்
எடையில் செயற்கைக் கால்கள் உருவாக ஏற்பாடு செய்தார். அவற்றைப்
போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சி தமக்குப் பெரும் மகிழ்வைத் தந்ததாய் அப்துல் கலாம்
குறிப்பிடுகிறார்.

******************************************

You might also like