You are on page 1of 3

தமிழ்

வகுப்பு : ஆறாம் வகுப்பு


பாடம் : 3.3. கணியனின் நண்பன்
புத்தகப் பயிற்சி – பக்கம்.எண் – 62 & 63

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :


விடைகள் :
1. ஆ) நுண்ணறிவு
2. ஆ) தானியங்கி
3. ஆ) நின்று + இருந்த
4. ஈ) அ + உருவம்
5. ஈ) மருத்துவத்துறை
6. அ) செயலிழக்க
7. ஈ) சேர்த்தல்
8. அ) அரிது
II. கோடிட்ட இடங்களை நிரப்புக :
விடைகள் :
1. எந்திர மனிதன், தானியங்கி
2. செயற்கை நுண்ணறிவு
3. டீப் புளூ
4. சவுதி அரேபியா

III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக :


விடைகள் :
1. நாட்டில் தொழிற்சாலைகள் பெருகினால்தான் வேலைவாய்ப்புகள்
அதிகரிக்கும்.

2. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

3. நிலவில் வாழ்வதற்கான சூழல்பற்றி ஆய்வுகள்


நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
4. பூங்காக்களில் செயற்கை நீரூற்றுகள் கண்ணைக் கவரும் வகையில்
அமைந்துள்ளன.

5. மனிதர்களின் நுண்ணறிவால்தான் அரிய கண்டுப்பிடிப்புகள் பல


உலகிற்குக் கிட்டியுள்ளன.

ஏட்டில் எழுத வேண்டியவை :


I. குறுவினா :
1. “ரோபோ” என்னும் சொல் எவ்வாறு உருவானது ?

விடை : காரல் கபெக் என்பவர் “செக்” நாட்டினைச் சார்ந்தவர். இவர் 1920


ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் அவர்,’ரோபோ”க்கள்
ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதாய்க் காட்சிகளை
அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் உருவானது.

2. “டீப் புளூ”- மீ த்திறன் கணினிபற்றி எழுதுக.

விடை : ஐ.பி.எம். நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மீ த்திறன் கணினி டீப்


புளூ ஆகும். அக்கணினி 1997 ஆம் ஆண்டு, சதுரங்க வெற்றியாளர் கேரி
கேஸ்புரோவ் என்பவரோடு விளையாடிச் சதுரங்கப் போட்டியில் வெற்றி
பெற்றது.

II. சிறுவினா:
1. எந்திர மனிதனின் பயன்களை விளக்குக.
விடை :
எந்திர மனிதனின் பயன்கள் :
i. அது வட்டு
ீ வேலைகளைச் செய்யும்;
ii. கற்க உதவி செய்யும்;
iii. அலுவலக வேலைகளை முடிக்க உதவும்;
iv. கணக்குகளை முடித்துத் தரும்;
v. சிக்கலான அறுவைச் சிகிச்சைகளைச் செய்யும்;
vi. உணவகங்களில் உணவு பரிமாறும்;
vii. பொது இடங்களில் வழி காட்டும்;
viii. வெடிகுண்டுகளைச் செயல் இழக்கச் செய்யும்.
2. துருவப்பகுதியில் ஆய்வு செய்ய எந்திர மனிதர்களை அனுப்புவதன்
காரணம் என்ன ?
விடை :
துருவப்பகுதியில் வெப்பநிலை உறை நிலைக்கும் கீ ழே இருக்கும்.
அங்கு மனிதனால் இருக்க இயலாது. எனவே, அப்பகுதிகளில்
ஆய்வு செய்ய இயந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள்.

*************************************

You might also like