You are on page 1of 1

1.

திருக்குறள் கதை கூறும் போட்டி

பொறுப்புப் பள்ளி தேசிய வகை பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி


தொடர்புக்கு திருமதி.இரா.விஜயலெட்சுமி (0193741710)

விதிமுறைகள் :

1.இப்போட்டி முதலாம் படிநிலை மாணவர்களுக்கானது.


2.ஒரு மாவட்டத்தைப் பிரதிநிதித்து ஒருவர் மட்டுமே மாநிலப் போட்டியில்
பங்கெடுக்க முடியும்.
3.கதையின் கரு முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையிலான
புதியப் பாடத்திட்டத்தில் உள்ள குறட்பாக்களில் ஏதேனும் ஒன்றை
மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
4.முகவுரைக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டா.
5.போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் இருத்தல் வேண்டும்.
6.உபகரணங்கள் பயன்படுத்தக் கூடாது.
7. 4 முதல் 5 நிமிடத்திற்குள் கதை அமைய வேண்டும்.
8. 4-ஆவது நிமிடத்தில் ஒரு முறையும் 5-ஆவது நிமிடத்தில் இரண்டு
முறையும் மணி ஒலிக்கப்படும்.
9.கொடுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் போகும் படைப்புகளுக்குப் புள்ளிகள்
வழங்கப்படமாட்டாது.மேலும் நீடிக்கப்படும் படைப்புகளின் ஒவ்வொரு
30 வினாடிகளுக்கும் தலா ஒரு புள்ளி குறைக்கப்படும்.
10.போட்டியாளர்களின் புள்ளிகள் சமநிலையில் இருப்பின்,புள்ளி வழங்கும்
கூறுகளின் முக்கியத்துவத்திற்கேற்ப வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.
11.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

புள்ளிகள் வழங்கும் முறை :


1. கருத்தும் விளக்கமும் : 30 புள்ளிகள்
2. படைப்பு : 20 புள்ளிகள்
3. உச்சரிப்பு : 20 புள்ளிகள்
4. சரளம் : 15 புள்ளிகள்
5. குரல் வளம்/ தொனி : 15 புள்ளிகள்
மொத்தம் : 100 புள்ளிகள்

You might also like