You are on page 1of 8

நறுமுகையே நறுமுகையே நீ.................................................................................................

சுந்தரி கண்ணால் ஒரு சேதி......................................................................................................3

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே......................................................................................4

முழுமதி அவளது முகமாகும்..................................................................................................5

வெண்மதி வெண்மதியே நில்லு.............................................................................................6

நீ இன்றி நானும் இல்லை...........................................................................................................8

நறுமுகையே நறுமுகையே நீ
ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கை
ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அந்நிலவில்   நெற்றித்  தரள நீர் வடிய கொற்ற  பொய்கை
ஆடியவள் நீயா

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்


வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அந்நிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அந்நிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வைப் பார்த்தவனும் நீயா

ஆண் : மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன


மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பசலை கொண்டதென்ன
ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்


செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றைத்  திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கை
ஆடுகையில் நீயா
அற்றைத்  திங்கள் அந்நிலவில்  நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கை
ஆடுகையில் நீயா

பெண்: யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன


யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்


வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்
அற்றை திங்கள் அந்நிலவில்  கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வைய பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அந்நிலவில்  கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வைய பார்த்தவனும் நீயா

ஆண்: அற்றை திங்கள் அந்நிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை


பார்வைய பார்த்தவளும் நீயா

பெண்:ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..

சுந்தரி கண்ணால் ஒரு சேதி


ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்:என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண்:நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சே...ர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்:என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

இசை
பெண்:வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
ஆண்:ஹா வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ
ஆண் : மறப்பேன் என்றே நினைத்தா...யோ
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண்:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சே...ர்ந்ததே நம் ஜீவனே
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

இசை

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்


பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்
ஆண் : ஹா.... மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்
பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்
ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்
ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நா...ள் நல்ல தேதி
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண் : நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சே...ர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே


யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பாவை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ


ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

முழுமதி அவளது முகமாகும்


முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
ஓஹோ முழுமதி….

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே


அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீ ன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே
ஓஹோ முழுமதி….

அமைதியுடன் அவள் வந்தாள்


விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரை ஒன்று தெரிந்தது 
எதிரினிலே முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓஹோ முழுமதி….

வெண்மதி வெண்மதியே நில்லு


வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது


மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என் இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

வெண்மதி வெண்மதியே நில்லு


நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள்


பொழிந்தது ஆசையின் மழை
அதில் நலைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே


நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

நீ இன்றி நானும் இல்லை


ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...
ஆண்: தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...
குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி... ஓ...

(இசை...)
ஆண்: நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...
ஆண்: விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...
குழு: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாஹி லாஹி...
லாஹி.. லாய் லாஹி...

You might also like