You are on page 1of 6

ஜெய் ஸ்ரீ ராம். மஹா பெரியவா சரணம்.

இன்று ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ


நந்தநந்தன - ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் அர்த்தத்துடன் படித்துப் பிரார்த்திப்போம்.

ஸ்ரீ நந்தநந்தன - ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்

1)

பஜே வ்ரஜைக மண்டனம்

ஸமஸ்த - பாப - கண்டனம்

ஸ்வபக்தி சித்தரஞ்ஜனம்

ஸதைவ நந்த - நந்தனம் /

ஸுபிச்ச - குச்ச - மஸ்தகம்

ஸுநாத - வேணு - ஹஸ்தகம்

ஹ்யனங்க - ரங்க - ஸாகரம்

நமாமி க்ருஷ்ண - ஸாகரம் //

வ்ரஜபூமியின் ஆபரணமாய் விளங்குபவனும், பாபங்களை அழித்து


பக்தர்களுக்கு அருள்பவனும், நந்தகோபனின் தெய்வகப்புதல்வனும்
ீ தலையில்
மயில்பீலியைச் சூடி, இனிமையான இசையை எழுப்பும் குழலைக் கையில்
ஏந்தி, ராகங்களின் சாகரமாய்க், கருணைக்கடலாய் விளங்கும் ஸ்ரீ
க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

2)

மனோஜ - கர்வ - மோசனம்

விசா'ல - லோல - லோசனம்

விதூத - கோப - சோ'சனம்

நமாமி பத்மலோசனம் /
கராரவிந்தபூதரம்

ஸ்மிதாவலோகஸுந்தரம்

மஹேந்த்ரமான - தாரணம்

நமாமி க்ருஷ்ணவாரணம் //

மன்மதனின் கர்வத்தை அழித்தவனும், தாமரை போன்ற அழகான, நீண்ட


அங்குமிங்கும் அலைபாயும் கண்களை உடையவனும், தூது செல்வதால்
கோபியரின் மனதில் ஏற்பட்ட கவலைகளை நீக்கியவனும், ஆண்யானை
போன்ற கம்பீரமானவனும், தாமரை போன்ற தனது மென்மையான பிஞ்சு
விரல்களால் (கரங்களால் என்றும் கொள்ளலாம்) கோவர்த்தன மலையைத்
தூக்கியவனும், வசீகரமான பார்வையும், புன்முறுவலும் உடையவனும்,
இந்திரனின் கர்வத்தை அழித்த ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

3)

கதம்பஸூன குண்டலம்

ஸுசாருகண்ட மண்டலம்

வ்ரஜாங்கனைக - வல்லபம்

நமாமி க்ருஷ்ண - துர்லபம் /

யசோ'தயா ஸமோதயா

ஸகோபயா ஸநந்தயா

யுதம் ஸுகைகதாயகம்

நமாமி கோப - நாயகம் //

எளிதில் கிட்டாதவனும், கதம்ப மலர்களைக் காதணிகளாக அணிந்தவனும்,


அழகிய கன்னங்களை உடையவனும், வ்ரஜபூமி பெண்களின் தலைவனும்,
கோபர்களின்தலைவனும், பரமானந்தத்தை யசோதைக்கும், நந்தகோபனுக்கும்,
கோபியர்களுக்கும் நல்கியவனும், நினைக்கும் நம் எல்லோருக்கும்
ஆனந்தத்தை அருளும் ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

4)

ஸதைவ பாதபங்கஜம்

மதீயமானஸே நிஜம்

ததான - முத்தமாலகம்

நமாமி நந்தபாலகம் /

ஸமஸ்ததோஷ - சோ'ஷணம்

ஸமஸ்தலோக - போஷணம்

ஸமஸ்தகோப - மானஸம்

நமாமி க்ருஷ்ண - லாலஸம் //

மனம் முழுவதும் அவன் தாமரை போன்ற பாதங்களில் எப்பொழுதும்


சாஸ்வதமாய் மூழ்கியிருக்க, அலைபாயும் சுருண்ட கேசம் முகத்தில் வந்து
விழ நந்தகோபனை வசீகரிப்பவனும், பாபச்செயல்களின் விளைவுகளை
நீக்குபவனும், உலகைக் காத்து ரக்ஷிப்பவனும், கோப கோபியர்களின் மனதில்
நிறைந்தவனுமான ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

5)

புவோ பராவதாரகம்

பவாப்தி கர்ண - தாரகம் (கர்ம)

யசோ'மதீ - கிசோ'ரகம்

நமாமி துக்த - சோரகம் /

த்ருகந்தகாந்த - பங்கினம்

ஸதாஸதால - ஸங்கினம்
தினேதினே நவம் நவம்

நமாமி நந்த - ஸம்பவம் //

பூமியின் பாரத்தைக்குறைக்க அவதரித்தவனும், சம்சார சாகரத்தைக் கடக்க


உதவுபவனும், யசோதையின் செல்லப்பிள்ளையும், நந்தகோபனின் மகனும்,
மனம் கவர்ந்த கள்வனும், ஒளிவசும்
ீ கண்களை உடைய, தேன ீக்கள்
எப்பொழுதும் அவன் பின்னே செல்லும் தேனினும் இனிய, எப்பொழுதும்,
என்றென்றும், இன்றும், என்றும், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் தன்
பக்தர்களுக்கு காட்சி தந்தருளும் ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

6)

குணாகரம் ஸுகாகரம்

க்ருபாகரம் க்ருபாவரம்

ஸுரத்விஷந் - நிகந்தனம்

நமாமி கோப நந்தனம் /

நவன
ீ - கோப - நாகரம்

நவன
ீ - கேலி - லம்படம்

நமாமி மேகஸுந்தரம்

தடித்ப்ரபா - லஸத்படம் //

உயர்ந்த செல்வங்களை தன் அகத்தே கொண்ட பொக்கிஷ அறை போல்


இன்பம் காருண்யம் போன்ற நற்குணங்களை தன் அகத்தே கொண்டவனும,
அப்பாற்பட்ட கருணை உடையவனும், தேவர்களின் துன்பங்களை
நீக்கியவனும், மேக வண்ணனும், மின்னல்போல் ஒளிவசும்
ீ மஞ்சள் பட்டாடை
அணிந்தவனும், ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிய கோபனாய்
காட்சி தருபவனும், ஒவ்வொரு முறையும் புதிதாகத் தோன்றும்
பழையனவற்றில் ஆர்வமுள்ளவனுமாகிய ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.
7)

ஸமஸ்தகோபநந்தனம்

ஹ்ருதம்புஜைக - மோஹனம்

நமாமி குஞ்ஜ - மத்யகம்

ப்ரஸன்ன - பானு - சோபனம் /

நிகாம - காம - தாயகம்

த்ருகந்த - சாரு - ஸாயகம்

ரஸால - வேணு - காயகம்

நமாமி குஞ்ஜநாயகம் //

அனைத்து கோபர்களின் செல்வமகனும், அவர்களின் மனம் கவர்ந்து


எப்பொழுதும் ஆனந்தம் அளிப்பவனும், வ்ரஜபூமியின் நடுவில்
சூரியனைப்போல் நன்றாக பிரகாசிப்பவனும், கோபமைந்தர்களின் தலைவனும்,
ஆத்மார்த்தமாக குழலூதி மனதைக் கொள்ளை கொள்பவனும், உலக
இன்பங்களை அவன் விரும்பவில்லை ஆயினும் அவற்றை அருள்பவனும்,
தடையில்லாமல் நம் மனத்தை கவர்ந்திழுக்கும் அம்பு போன்ற பார்வை
உடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

8)

விதக்த - கோபிகா - மனோ

மனோக்ஞ - தல்ப - சா'யினம்

நமாமி குஞ்ஜகானனே

ப்ரவ்ருத்த - வஹ்னி - பாயினம் /

கிசோ'ரகாந்தி ரஞ்ஜிதம்

த்ருகஞ்ஜனம் சுசோ'பிதம்
கஜேந்த்ர மோக்ஷ காரிணம்

நமாமி ஸ்ரீ விஹாரிணம் //

வ்ரஜபூமியின் தோட்டங்களிலும், காடுகளிலும் நெருப்பை விழுங்கியவனும்,


கோபியர்களுடன் அவர்களின் கனவில் உறங்கிக்கொண்டிருப்பவனும், லக்ஷ்மி
தேவியின் கணவனும், கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளித்தவனும், ஒளிவசும்

தெய்வக
ீ இளமையுடன் இருப்பவனும், எத்திசையிலும் மிளிர்பவனுமான ஸ்ரீ
க்ருஷ்ணனைத் துதிக்கின்றேன்.

9)

யதா ததா யதா ததா

ததைவ க்ருஷ்ண ஸத்கதா

மயா ஸதைவ கீ யதாம்

ததா க்ருபா விதீயதாம் /

ப்ரமாணிகாஷ்ட கத்வயம்

ஜபத்யதீத்ய ய : புமான்

பவேத் ஸ நந்தநந்தனே

பவே பவே ஸுபக்திமான் //

எங்கெங்கு வாழ்ந்தாலும், எங்கெங்கு இருப்பினும் இடைவிடாமல் க்ருஷ்ண


பக்தியில் மூழ்கி அவன் அருளுக்குப் பாத்திரமாக இருக்க வேண்டுகிறேன்.
இந்த அஷ்டகத்தை படிப்பவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் க்ருஷ்ண
பக்தியில் திளைப்பர் என்பது திண்ணம்.

நாளை மேலும் சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

மஹா பெரியவா சரணம். ஜெய் ஸ்ரீ ராம்.

You might also like