Professional Documents
Culture Documents
தாரை உபயோகிக்கும் அரிய சூட்சுமம்
தாரை உபயோகிக்கும் அரிய சூட்சுமம்
==========================
வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது.
அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள்.
வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள்
அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.
நட்சத்திர குறியீடுகள்:
சின்னங்களின் பயன்:
இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண
நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள்
குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி
சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும்
அறிவார்கள்.
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல்
இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை
மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து
அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக
சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம்
கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும்
அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?
ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு
சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில்
வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின்
மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் என்ன தாரை குறியீடு பயன்படுத்த வேண்டும் என்பதை எளிதாக அறிய, உங்கள் ஜென்ம
நட்சத்திரத்தில் அவதாரித்த கடவுள் உருவங்களை காண்க.
உதாரணமாக உத்திரம் என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரம் எனில், உத்திர நட்சத்திரத்தில் உதித்தவர்
ஐயப்பன், அவரது கையில் வர ஹஸ்த சின்முத்ர குறியீடு இருக்கிறது. எனவே உத்திர நட்சத்திர
நண்பர்கள் தினமும் உள்ளங்கையை பார்த்து வருவது லட்சுமி கடாஷ்ம் தரும் எனலாம்.
இன்னொரு உதாரணமாக பரணி என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரம் எனில், பரணியில் அவதரித்த
துர்ககை
் கையிலிருக்கும், வாள் அல்லது கத்தி வடிவத்தை தன்னிடம் வைத்து கொண்டால் சகல
செல்வங்களையும் பெறலாம்.