You are on page 1of 1

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொதுப்


போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்து
கொண்டே வருகின்றன. பொது போக்குவரத்து என்பது பொது மக்கள்
ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்குச் செல்ல அரசாங்கம் ஏற்பாடு செய்த
போக்குவரத்து சாதனங்கள் ஆகும். பொதுப் போக்குவரத்தைப்
பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என ஆணித்தரமாகக் கூறலாம்.
முதலாவதாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால்
சாலையில் வாகன நெரிசல்களைக் குறைக்கலாம். பொதுவாக,
பட்டணங்களில் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே
வருகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாகன
நெரிசலும் அதிகரிக்கின்றன. இதனால், சாலை விபத்துகளையும் உயிர்
சேதங்களையும் குறைக்கலாம்.
அடுத்ததாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால்
வாகனங்களால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டினைக்
கட்டுப்படுத்தலாம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதில்
வெளியாகும் புகை காற்றில் கலந்து மாசு அடையச் செய்கிறது. இதனால்,
உடல் நலமும் பாதிப்படைகிறது.
தொடர்ந்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால்
வாகன நிறுத்துமிடங்களின் பற்றாக்குறை, செலவுகள் ஆகியவற்றைத்
தவிர்க்கலாம். அதோடு, போக்குவரத்துக்கான எரிபொருள் செலவு, சுங்க
வரிச் செலவுகளையும் குறைக்கலாம். இதனால், போக்குவரத்திற்கான
அன்றாட செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக வாழ முடியும்.
மேலும், பொதுப் போக்குவரத்தை எல்லாத் தரப்பினரும்
பயன்படுத்தலாம். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால்
மனிதர்கள் பாதுகாப்பாகவும் உடல் அளைச்சல் இல்லாமால் ஓர்
இடத்திற்கும் செல்லலாம். வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு தினமும்
மனச்சோர்வுடனும் மன உளைச்சலுடன் வாழ்வதையும் தவிர்க்கலாம்.
இறுதியாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதே சாலச்
சிறந்தது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. எனவே, பொதுப்
போக்குவரத்தைப் பயன்படுத்தி நாமும் பல நன்மைகளை அடைவோம்.

You might also like