You are on page 1of 13

*ஒப்பற்ற சிவபெருமான் அன்பர் உள்ளத்தில் அமர்ந்திருப்பவன்*

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை


அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே.

(இ - ள்)
சிவபெருமானோடு ஒப்பாகும் தெய்வம் எங்குத் தேடினும் இல்லை.
அச் சிவனுக்கு நிகரானவர் யாவரும் இலர்.
எல்லா உலகங்கட்கும் அப்பாற்பட்டுள்ளவன்.
அச்சிவம் பொன்போல ஒளிவிடும் - வண்ணம் போன்ற சடைமுடி உடையவன்.
அவன் அன்பர்களின் மனத்தாமரையில் அமர்ந்திருப்பவன்.
============================================

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து


மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!

============================================
சிவன் மூல மந்திரம்:
===============
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

திருமூலர் அருளிய இந்த மந்திரமானது


சிவன் மூல மந்திரமாக போற்றப்படுகிறது.
============================================

Maha Mrityunjaya Mantra


======================
Aum Tryambakam yajaamahe sugandhim pushti-vardhanam |
Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaath
=====================================================

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி


காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
============================================

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி


ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே
============================================

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்


பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல் மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பது மறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
============================================
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
============================================
அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே
============================================

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே


என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே
============================================

நல்லவை பெருகவேண்டும் நாடெல்லாம் வாழவேண்டும்


அல்லவை ஒழியவேண்டும் அனைத்துயிர் வாழவேண்டும்
பொல்லவைக் கலியும் நீஙக
் ிப் புதுயுகம் பூக்கவேண்டும்
செல்வமிக் கோங்கும் அண்ணாமலை வளர் தேவதேவ!
============================================

அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!


பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே
============================================

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய


ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே
============================================

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்


பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்…பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
============================================

பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா


எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே.
============================================

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்;


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்;
அலகு இல் சோதியன்; இம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
============================================

மந்திர மாவது நீறு


வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே.
============================================

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி


நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்,
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே!
============================================

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்


திருப்புலம்பல் (சிவானந்த முதிர்வு)
8-ம் திருமுறை
==========
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.
============================================

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் கனிப்பே!


காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே!
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே!
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே!
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
என்னரசே! யான்புகலும் இசையும் அணிந்து அருளே!
============================================

https://www.youtube.com/watch?v=lR4v6Xo-lRU
சிவபுராணம் - சிவபுராணம் | வாதவூரடிகள் | சிவலோகம் | பக்தி டிவி

திருசிற்றம்பலம்
============
====
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி==
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே, எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்,
திருவாசகம் என்னும் தேன்.

சிவபுராணம்
=========
====
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)

திருச்சிற்றம்பலம்
=============
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க,
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க,
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க, 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க,


பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க,
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க,
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க,
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க, 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி,


தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி,
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி,
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி,
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி, 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி,

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்==


அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்,
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை==
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி==


எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி,
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்,
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன், 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்,


பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்,
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்,
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்==
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்,


மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்,
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற,
மெய்யா விமலா விடைப்பாகா .....வேதங்கள்==
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா,


பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி,
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே,
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே,
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே, 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்,


ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்,
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்,
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே,
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே, 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்,


சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்,
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த,
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை, 50

மறைந்திட மூடிய மாய இருளை,


அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை,
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு,


கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்,
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத், 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே,


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே==
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே,
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே==
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப், 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே,


ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே,
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே,
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே,
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே, 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்,


சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே,
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே,
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில், 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே,


போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே,
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே,
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற,
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய், 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்,


தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்,
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே,
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப==
ஆற்றேன் எம் ஐயா ...... அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்


மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே,
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே,
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே, 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று,


சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்,
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்,
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்
=======================================

கோளறு பதிகம்
============
நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான
சம்பந்தரால் இயற்ற பெற்றது .
இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு
பயன் பெறுங்கள்

https://www.youtube.com/watch?v=PctKeRA0ZPo

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே


பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவள மேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்


முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்


நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்


துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்


நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்


ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்


வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்


சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்


மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
=====================================================

சொற்றுணை வேதியன் சோதி வானவன்


பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 2

இல்லக விளக்கது இருள் கெடுப்பது


சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்


தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்


பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

திருச்சிற்றம்பலம்
====================================

கடன் நீக்கும் பதிகம்:


===============
நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வணம் இடுவது சொல்லே. 1

நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்


கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே. 2

நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய


அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே. 3

நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய


ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே. 4

நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய


ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
பாடுளம் உடையவர் பண்பே. 5

நெற்றியொர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய


பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே. 6

நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய


கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே. 7
நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை அசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை அன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே. 8

நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்


றிருவரை யிடர்கள்செய் தீரே
இருவரை யிடர்கள்செய் தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே. 9

நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய


சாக்கியச் சமண்கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே. 10

நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் யீசனை


நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே. 11
==================================

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
தலம் : நெடுங்களம்

மறையுடையாய் தோலுடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய்
கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய்
நெடுங்களம் மேயவனே. 1

===================================================================================
===================================

திருவாசத்துக்கு இணையாக இந்தப் பாடலும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. மனம்


லயித்துப் படித்தால் பாடலின் பொருள் எளிதாக விளங்கும் வகையில் இந்தப் பாடல்
அமைந்துள்ளது இதன் சிறப்பு ஆகும். நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக
அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள்.

ஒவ்வொரு பாடலும் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே என முடிவது பாடலின்
அழகை மேம்படுத்துகின்றது. இதனை பாராயணம் செய்பவர்களுக்கு சர்வ நிச்சயம் ஸ்ரீ
நடராஜரின் அருள் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பாடல் : 1

மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,


மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் : 2

மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,


மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 3

கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,


காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 4

வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல


பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 5:

நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ


நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 6:

வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்


வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்கக
் னேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோபார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 7

அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ


அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்றுஉணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ
என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 8

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ


கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லையென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 9

தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி


தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் சந்தை உறவென்று
தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 10 :

இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ


இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
கெடுவனோ,ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை
முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்ஈசனே சிவகாமி நேசனே
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
=======

https://www.youtube.com/watch?v=Ec2cgnGCGxo

1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்


மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே!

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்


அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே!

3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த


கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்:
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்:
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்:
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே!

4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்


சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்:
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்:
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்!

5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்


மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்:
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்:
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வாள்ளலாரின் இனிமையான பாடல்


வரிகள்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.
===============================================================

நவகிரஹ துதி
==========

ஞாயிறு
=======
ஞாலத்தை சுற்றி வரும் ஞாயிறே
நின் சேவடியை கோலமுடன் கைகூப்பி கும்பிடுவேன்
சீலமுடன் பாரினிலே காத்தென்னை பல் சுகமும் நீ தந்து
வீரியனே என் வினையை வீழ்த்து.

திங்கள்
=======
மனக்கவலை நீக்கிடும் மாமதியே போற்றி
பனிக்கதிரே உன்னை பணிந்தேன்
அனுதினமும் சங்கடங்கள் இல்லாமல் சார்ந்தென்னை ஆதரித்து
திங்களே எங்கள் குறையை தீர்.

செவ்வாய்
=========
மங்களனே மாசில்லா மாமணியே செவ்வாயே
துங்கமுடன் தூக்கி துதிக்கின்றேன்
பங்கமின்றி தொட்டதெல்லாம் வெற்றி பெற தோல்வியே வாராது
கட்டமில்லா நன்னெறியை காட்டு.

புதன்
====
புத பகவான் பாதமதில் பூ மணக்க செய்து
நிதமும் வணங்கினேன் நேராய் மதிமகனே
அல்லவை தேய அறம் பல மேலோங்க
நல்லறிவை நீ எனக்கு நல்கு.

வியாழன் துதி
============
குருவின் அருளாலே குற்றமெல்லாம் போகும்
இருள் நீங்கி மாட்சியே பொங்கும்
சுரகுருவே உன்னை யான் நேசித்தேன்
ஓர் பாவமும் சூழாது என்னை நீ காப்பாய் இனி.

வெள்ளி
=======
நன் மலரை சூட்டியே நா மணக்க செப்பினேன்
போன் பொருளை ஈட்டும் புகர் புயனே
எந்தனுக்கே இன்ப ஒளி நீ ஏற்றி, எழில் வழியை நீ காட்டி
அன்பான ஆசி அருள்.

சனீஸ்வரன்
===========
காகத்தின் வாகனனே காக்கும் சனி தேவா
சோகத்தின் நல்குரவால் சோர்வுற்றேன்
மோகத்தால் எத்தனையோ தீங்கு சூழ்ந்து என் அறிவை மாற்றுதய்யா
உத்தமனே என் இடரை ஒட்டு.

ராகு
====
ஏகாந்த வாழ்வில்லை எந்நிலையும் மாறவில்லை
பாகாக நெஞ்சிளகி பாழானேன் ராகுவே
தூமலரை சாற்றி தொழுதிட்டேன்
என் குறையை தாமதமே இன்றி தகர்.

கேது
====
செம்பாம்பே உன்னை சிரம் பணிந்து வேண்டுகின்றேன்
வம்புகளும் வாத வழக்குகளும் தங்காமல்
எந்நோயும் வாராமல் ஏழ்மை நிலை மாற்றி
நிந்தனையும் வஞ்சனையும் நீக்கு.
=========================

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

திருச்சிற்றம்பலம்

சனீஸ்வரன் தோத்திரம்:
=================
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

நீலாஞ்சன சமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்


சாயாமார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைஸ்சச
் ரம்

நவகிரஹ சாந்தி ஸ்லோகம் :


====================
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ
===================================================================================
==============================
https://in.pinterest.com/pin/289919294761529501/
https://in.pinterest.com/pin/289919294761532300/
http://shrinarasimha.com/slogas.html
================================
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்

===================================================================================
================================
===================================================================================
================================

You might also like