You are on page 1of 5

பொதுவான கோழி வர்க்கங்கள் (Common Chicken breeds)

1. கோழி இனங்களின் தோற்றம்

உலகில் தற்பொழுது அறியப்பட்ட உள்நாட்டு கோழிகளின் இனங்கள் மற்றும் வகைகள் அனைத்தும்


தென்கிழக்கு ஆசியாவிலிருந்து காலஸ் கல்லஸ் என்றும் அழைக்கப்படும் கல்லஸ் பாங்கிவாவிலிருந்து
உருவாகியுள்ளன என்று நம்பப்படுகிறது, இவை காடு கோழி இனங்களில் இருந்து தோற்றம் பெற்று
வந்துள்ளது. இதில் இலங்கையெய் சேர்த்த ஒரு காட்டுக்கோழி இனமும் உள்வாங்கப்படுவது முக்கிய
அம்சமாகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு காட்டுக்கோழி வகைகள் கோழிகளின் மூதாதைகள் என
நம்ம்பப்படுகின்றது

1. சிவப்பு காட்டுக்கோழி (Red Jungle Fowl) - Gallus gallus/Gallus bankiva


2. சிலோன் காட்டுக்கோழி (Ceylon Jungle Fowl) - Gallus lafayetti
3. சாம்பல் காட்டுக்கோழி (Grey Jungle Fowl) - Gallus sonneratii
4. ஜுவான் காட்டுக்கோழி (Javan Jungle Fowl) - Gallus varius

சிவப்பு
காட்டுக்கோழி சிலோன் காட்டுக்கோழி

ஏனைய
ஜுவான் காட்டுக்கோழி
குடித்
சாம்பத ொகையில்
ல் காட் டுக்கஇருந்
ோழி து வேறுபடுத்தக்கூடியதும், தனித்துவமான இயல்புகளை கூட்டாக கொண்டதுமான
குடித்தொகையே வர்க்கம் எனப்படும். கோழி இனங்கள் அவற்றின் உயிரியல் நிலைமைகள் (Biological
conditions), பயன்பாட்டுத்திறன் (Utility value), தோற்றம் பெற்ற இடம் (Country Origin), வர்க்கங்கள்
(Breeds) என்பவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றது

a) உயிரியற் பாகுபாடு
திணை (Kingdom) : விலங்கு (Animalia)
பிரிவு (Phylum) : முதுகெலும்பி (Chordata)
வகுப்பு(Class) : பறவை (Aves)
வரிசை(Order) : காட்டுக்கோழிவடிவி (Galliforms)
குடும்பம்(Family) : வண்ணக்கோழி (Phasianidae)
பேரினம் (Genus) : காட்டுக்கோழி (Gallus)
இனம் (Species) : சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus)
துணையினம் (Sub species): Gallus gallus domesticus
b) பயன்பாட்டிற்கமைய அல்லது நோக்கத்தின் அடிப்படையில்
a. இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் வர்க்கங்கள்
இறைச்சிக்காக பொதுவாக பிராய்லர் இனக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன, இவை உணவை
இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம் கொண்டவை, இவ்வகை கோழி இனங்களின் உடல் நிறை 42
நாட்களில் 1.5-2.5 கிலோ கிராமாக காணப்படும்.
உ ம்:
b. முடடை உற்பத்திக்காய் வளர்க்கப்படும் வர்க்கங்கள்
இவ்வகை கோழி இனங்களின் உடல் நிறை குறைவானதாக காணப்படும் அதே வேளை
இவற்றிற்கான உணவுத்தேவையும் குறைவாகவே காணப்படும். 4-4.5 மாதங்களில் பருவமுதிர்சச
் ி
அடைந்து முடடையிடக்கூடியதாக காணப்படும். ஆண்டிற்ற்கு 280 முடடைகளுக்கு மேல் இடும்.
உ ம்:
c. இரு நோக்கு உற்பத்திக்காக வளர்க்கப்படும் வர்க்கங்கள்
இவ்வகை கோழி இனங்கள் இறைச்சி, முடடை ஆகிய இரு நோக்கங்களுக்கவும்
வளர்க்கப்படுகின்றன. இவ்வகை கோழி இனங்கள் சுறுசுறுப்பானவையாகவும் முடடைக்காக
வளர்க்கப்படும் கோழிகளை விட நிறை கூடியதாகவும் காணப்படும். ஆண்டொன்றிற்கு 120-200
முடடைகள் இடும்
உ ம்:

d. விளையாட்டு அல்லது சண்டைக்காக வளர்க்கப்படும் வர்க்கங்கள்


இவை பொழுது போக்கை முக்கிய நோக்கமாக கொண்டு வளர்க்கப்படுகின்றது. இவ்வகை கோழி
இனங்கள் மிகவும் உறுசுறுப்பாகவும், மூர்கத்தன்மை உடையதாகவும் காணப்படும். நன்கு உயரமாக
வளரும்.
உ ம்:
e. அழகுக்காக வளர்க்கப்படும் வர்க்கங்கள்
மிகவும் அரிதான கோழி இனங்கள் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றிலிருந்து உற்பத்தி
பிரதானமாக எதிர்பாக்கப்படுவதில்லை. இவை மிகவும் விலை உயர்ந்த அரிதான இனங்களாகும்
உ ம்:
பீனிக்ஸ், பேந்தம், அமெரிக்கன் கிரில், பிரம்மா, கொச்சின் பேந்தம், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட்,
போலீஸ் கேப்.

c) தோற்றம்பெற்ற இடத்தின் அடிப்படையில் பாகுபாடு


தோற்றம்பெற்ற இடத்தின் அடிப்படையில் கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன
வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
a. அமெரிக்க கோழியினங்கள்
b. ஆசிய கோழி இனங்கள்
c. ஆங்கில கோழி இனங்கள்
d. மத்திய கோழி இனங்கள்
காது மடல் முட்டை
கோழியினங்கள் தோல் நிறம் தாடி வளர்க்கப்படும் நோக்கம் உடல் தோற்றம் உதாரணங்கள்
நிறம் ஓட்டின் நிறம்

1)ரோட் ஐலேண்ட் ரெட்


அமெரிக்கன் இறகுகள் இறைச்சிக்காகவும் 2)பிளை மவுத் ராக்
மஞ்சள் சிவப்பு பழுப்பு நடுத்தரம்
வர்க்கம் அற்றது முட்டைக்காகவும் 3)நியூ ஹேம்ப்ஷையர்
4)வியன்டோட்

1)பிரம்மா
இறகுகள்
ஆசிய வர்க்கம் மஞ்சள் சிவப்பு இறைச்சிக்காக பழுப்பு பெரியவை 2)கொச்சின்
உடையது
3)லாங்ஷான்
1)கார்னிஷ்
2)அஸ்ட்ரா லார்ப்
இறகுகள் இறைச்சிக்காகவும்
ஆங்கில வர்க்கம் வெள்ளை சிவப்பு பழுப்பு நடுத்தரம் 3)டார்க்கிங்
அற்றது முட்டைக்காகவும்
4)ஆர்பிங்டன்
5)சசெக்ஸ்
1)லெகார்ன்
மஞ்சள்
மத்தியதரை இறகுகள் 2)மைனார்க்கா
அல்லது வெள்ளை முட்டைக்காக வெள்ளை சிறியவை
வர்க்கம் அற்றது 3)அன்கோனா
வெள்ளை
4)ஆன்டலூசியன்
பொதுவான கோழி வர்க்கங்கள் (Common breeds of poultry)

You might also like