You are on page 1of 11

CONVERSATION 

– AT THE BOOKSTORE
Uraiyaadal   – Puththagak Kadaiyil
 
 
Conversation between Bookstore owner and Customer Kumar
 
SPOKEN TAMIL
 
Kumar: Vanakkam Sir.
Kumar: Hello Sir.
குமார்: வணக்கம் ஸார்.
 
Kadaikaarar: Vanakkam Sir. Sollunga.
Storekeeper: Hello Sir. Tell me.
கடைக்காரர்: வணக்கம் ஸார். சொல்லுங்க.
 
Kumar: Naa indha puththagaththa maaththa vandhaen.
Kumar: I need a replacement for this book.
குமார்: நான் இந்த புத்தகத்த மாத்த வந்தேன்.
 
Kadaikaarar: Yaen Sir, enna aachchu?
Storekeeper: Why Sir? What’s wrong?
கடைக்காரர்: ஏன் ஸார்? என்ன ஆச்சு?
 
Kumar: Idhula paththu-la irundhu pathinaaru vara ulla pakkaththa kaanala.
Kumar: Pages from 10 to 16 are missing.
குமார்: இதுல பத்துல இருந்து பதினாறு வர உள்ள பக்கத்த காணல.
 
Kadaikaarar: Neenga vaangumbodhu paaththu vaangalaiyaa?
Storekeeper: Didn’t you check it while purchasing?
கடைக்காரர்: நீங்க வாங்கும் போது பாத்து வாங்கலையா?
 
Kumar: Appo gavanikkala Sir.
Kumar: Didn’t notice it then, Sir.
குமார்: அப்போ கவனிக்கல ஸார்.
 
Kadaikaarar: Indha puththagaththa eppo vaanguneenga?
Storekeeper: When did you buy this book?
கடைக்காரர்: இந்த புத்தகத்த எப்போ வாங்குனீங்க?
 
Kumar: Moonu naalai-kku munnaala vaangunaen.
Kumar: Three days ago.
குமார்: மூணு நாளை-க்கு முன்னால வாங்குனேன்.
 
Kadaikaarar: Aduththa naaley yaen kondu varala?
Storekeeper: Why didn’t you bring it the very next day?
கடைக்காரர்: அடுத்த நாளே ஏன் கொண்டு வரல?
 
Kumar: Naan kudumbaththoda suttrulaa poyittaen. Naeththu kaalaiyila dhaan
vandhaen. Raaththiri padikka eduththappa dhaan paaththaen.
Kumar: I went on family tour; arrived just yesterday morning. Only when I took out the
book last night to read, did I notice it (the missing pages).
குமார்: நான் குடும்பத்தோட சுற்றுலா போயிட்டேன். நேத்து காலையில தான் வந்தேன். ராத்திரி
படிக்க எடுத்தப்ப தான் பாத்தேன்.
 
Kadaikaarar: Puththagam vaanguna raseedhu vachchirukkeengalaa?
Storekeeper: Do you have the receipt for this purchase?
கடைக்காரர்: புத்தகம் வாங்குன ரசீது வச்சிருக்கீங்களா?
 
Kumar: Aamaa, raseedhu irukku. Idha paarunga.
Kumar: Yes, I do. Check this one.
குமார்: ஆமா ரசீது இருக்கு. இத பாருங்க.
 
Kadaikaarar: Idhu sariyaana raseedhu dhaan. Oru nimisham irunga, naan vaera
puththagam thaaraen.
Storekeeper: Well, it’s the right receipt. Give me a minute while I get another copy for
you.
கடைக்காரர்: இது சரியான ரசீது தான். ஒரு நிமிஷம் இருங்க, நான் வேற புத்தகம் தாரேன்.
 
Kumar: Saringa…
Kumar: Sure.
குமார்: சரிங்க….
 
Kadaikaarar: Indhaanga, idhula ellamey sariyaa irukkaa-nnu paarunga.
Storekeeper: Here you are. Please check if it is OK.
கடைக்காரர்: இந்தாங்க, இதுல எல்லாமே சரியா இருக்கான்னு பாருங்க.
 
Kumar: Aamaa Sir, ellaamey sariyaa irukku.
Kumar: Yes, it’s all good.
குமார்: ஆமா ஸார். எல்லாமே சரியா இருக்கு.
 
Kadaikaarar: Vaera yaedhaavadhu vaenumaa? Idhey author (aasiriyar) ezhudhuna
pudhu puththagam vandhirukku. Paakkureengalaa?
Storekeeper: Do you need anything else? A new book written by the same author is
available. Would you like to see it?
கடைக்காரர்: வேற ஏதாவது வேணுமா? இதே ஆத்தர் (ஆசிரியர்) எழுதுன புது புத்தகம்
வந்துருக்கு. பாக்குறீங்களா?
 
Kumar: Aduththa thadava Sir; idha modhala padichchu mudichchukkuraen.
Kumar: Next time, Sir. Let me finish reading this one first.
குமார்: அடுத்த தடவ ஸார். இத மொதல படிச்சு முடிச்சுக்கிறேன்.
 

Kadaikaarar: Pillaigalukku thaevaiyaana kadha puththagam, padam varaiyira


puththagam, color pencil, crayon, water color ellaam irukku. Yaedhaavadhu venumaa??
Storekeeper: We also have story books, drawing books, color pencils, crayons and
water colors for children. Would you like any?
கடைக்காரர்: பிள்ளைகளுக்கு தேவையான கத புத்தகம், படம் வரையிற புத்தகம், கலர் பென்சில்,
கிரையான், வாட்டர் கலர் எல்லாம் இருக்கு. ஏதாவது வேணுமா?
 
Kumar: Ippo vaendaam Sir. Naan paiyana inga kootteettu vandhu vaangikkuraen.
Kumar: Not now Sir. I will bring my son here and buy them.
குமார்: இப்போ வேண்டாம் ஸார். நான் பையன இங்க கூட்டீட்டு வந்து வாங்கிக்குறேன்.
 
Kadaikaarar: Indha maasa kadaisi-yila thallupadi virpanai irukku. Unga mobile number-
a (kaipaesi enn) kuduththeengannaa naan ungalukku thagaval solraen.
Storekeeper: There is a discount sale at the end of this month. If you give me your
mobile number, I will inform you.
கடைக்காரர்: இந்த மாச கடைசியில தள்ளுபடி விற்பனை இருக்கு. உங்க மொபைல் நம்பர
(கைபேசி எண்) குடுத்தீங்கன்னா நான் உங்களுக்கு தகவல் சொல்றேன்.
 
Kumar: Ennoda mobile number (kaipaesi enn) 9876543210. En manaivi-um neraiya
puththagam padippaanga. Avangalayum kandippaa kootteettu vaaraen.
Kumar: My mobile number is 9876543210. My wife, too, reads a lot of books. I will
surely bring her along.
குமார்: என்னோட மொபைல் நம்பர் (கைபேசி எண்) 9876543210. என் மனைவியும் நெறைய
புத்தகம் படிப்பாங்க. அவங்களையும் கண்டிப்பா கூட்டீட்டு வாறேன்.
 
Kadaikaarar: Sari Sir. Nandri.
Storekeeper: OK Sir. Thank you.
கடைக்காரர்: சரி ஸார். நன்றி.

CONVERSATION –In the Classroom

Uraiyaadal   – Vagupparaikku Ullae


உரையாடல் –வகுப்பறைக்கு உள்ளே
 
 
Conversation between Teacher and Kayal
Aasiriyar-kkum Kayal-kkum idaiyae nadaiperum uraiyaadal
ஆசிரியருக்கும் கயலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்:
 
SPOKEN TAMIL
 
Teacher: Good morning students.
Aasiriyar:Good morning ( vanakkam) students (Maanavargal).
ஆசிரியர்:குட் மார்னிங் (காலை வணக்கம்) ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்கள்).
 
Students :Good morning Teacher.
Maanavargal :Good morning Teacher (Aasiriyar).
மாணவர்கள்:குட் மார்னிங் டீச்சர் (ஆசிரியர்).
 
Teacher:Did you all study the question and answer from the lesson I gave yesterday?
Aasiriyar:Naeththu naan sonna lesson-la (paadam) irundhu ellaarum kaelvi-um, badhil-
um padichchittu vandhutteengalaa?
ஆசிரியர்:நேத்து நா சொன்ன லெஸன்ல (பாடம்) இருந்து எல்லாரும் கேள்வியும்,பதிலும்
படிச்சிட்டு வந்துட்டீங்களா?
 
Students:Yes mam.                             
Maanavargal:Yes (Aam) mam.
மாணவர்கள்:யெஸ் (ஆம்) மேம்.
 
Teacher: All of you answer the questions I ask one by one.
Aasiriyar:Naan kaekkura kaelvi-kku ovvoruththaraa badhil sollunga.
ஆசிரியர்:நான் கேக்குற கேள்விக்கு ஒவ்வொருத்தரா பதில் சொல்லுங்க.
 
Students:Okay Mam.
Maanavargal:Okay (Sari) mam.
மாணவர்கள்:ஓகே (சரி) மேம்.
 
Kayal:Excuse me Mam.
Kayal:Excuse me (mannikkavum) Mam.
கயல்: எக்ஸ்க்யூஸ் மீ (மன்னிக்கவும்) மேம்.
 
Teacher: Tell Kayal.
Aasiriyar:Sollu Kayal.
ஆசிரியர்:சொல்லு கயல்.
 
Kayal:I did not study madam.
Kayal:Naa padichchittu varala madam.
கயல்:நா படிச்சிட்டு வரல மேடம்.
 
Teacher: Why?
Aasiriyar:Yaen?
ஆசிரியர்:ஏன்?
 
Kayal:Yesterday I went to Hospital, madam.
Kayal:Naeththu naan hospital-kku (maruththuvamanai) poyittaen madam.
கயல்:நேத்து நான் ஹாஸ்பிடலுக்கு (மருத்துவமனை) போயிட்டேன் மேடம்.
 
Teacher: Not feeling well?
Aasiriyar:Udambu sari illayaa?
ஆசிரியர்:உடம்பு சரி இல்லயா?
 
Kayal:Yes Madam.
Kayal:Aamaa Madam.
கயல்:ஆமா மேடம்.
 
Teacher: What happened?
Aasiriyar:Ennaachu?
ஆசிரியர்:என்னாச்சு?
 
Kayal:I was having headache madam.
Kayal:Romba thala valiyaa irundhuchu madam.
கயல்:ரொம்ப தல வலியா இருந்துச்சு மேடம்.
 
Teacher: Why Kayal?
Aasiriyar:Edhanaala Kayal?
ஆசிரியர்:எதனால கயல்?
 
Kayal:I do not know madam. But, the doctor told me to check my eyes.
Kayal:theriyala madam. Doctor (maruththuvar) kann-a check (sari paarppu) panna
sonnaaru.
கயல்:தெரியல மேடம். டாக்டர் (மருத்துவர்) கண்ண செக் (சரி பார்ப்பு) பண்ண சொன்னாரு.
 
Teacher: Did you check?
Aasiriyar:Check panniniyaa?
ஆசிரியர்:செக் பண்ணினியா?
 
Kayal:Yes madam. I saw an eye specialist yesterday.
Kayal:Aamaa madam. Naeththu  oru eye specialist-a (kannnibunar) paakka ponaen.
கயல் :ஆமா மேடம். நேத்து ஐ ஸ்பெஷலிஸ்ட (கண் நிபுணர்) பார்த்தேன்.
 
Teacher: Ok, what did the doctor tell?
Aasiriyar:Sari, doctor enna sonnaaru?
ஆசிரியர்:சரி, டாக்டர் என்ன சொன்னாரு?
 
Kayal:He told me to wear specs. It was too late to come back home. That is why I could
not read.
Kayal:Kannaadi poda solli irukkanga. Veettukku vara late (thaamadham) aayiruchchi.
Adhanaalathaan ennaala padikka mudiyala.
கயல்:கண்ணாடி போட சொல்லி இருக்காங்க. வீட்டுக்கு வர லேட் (தாமதம்) ஆயிருச்சி.
அதனாலதான் என்னால படிக்க முடியல.
 
Teacher: Ok. I give you one hour time. You study that lesson and answer me.
Aasiriyar:Ok. Naan unakku one hour time (orumaninaeram) thaaraen. Nee padichchittu
badhil sollu.
ஆசிரியர்:ஓகே. நான் உனக்கு ஒன் ஹவர் டைம் (ஒரு மணி நேரம்) தாரேன். நீ படிச்சிட்டு பதில்
சொல்லு.
 
Kayal:Thank you Mam.
Kayal:Thank you mam (nanri).
கயல் :தேங்க் யூ மேம் (நன்றி).
CONVERSATION – HOUSE FOR RENT

Uraiyaadal   – Vaadagai Veedu


உரையாடல் –வாடகை வீடு
 
 
Conversation between Balu and the House Owner
 
SPOKEN TAMIL
 
Balu: Sir, Sir……
Balu: Sir, Sir…..
பாலு: சார், சார்….
 
Veettu Urimaiyaalar: Vaanga Sir. Enna vaenum?
House owner: Yes Sir. What do you want?
வீட்டு உரிமையாளர்:வாங்க சார். என்ன வேணும்?
 
Balu: Maadi veedu kaaliyaa irukkunnu advertisement-la (vilambaram) paaththaen. Adhai
naerla paakkalaamunnu vandhaen.
Balu: I saw an advertisement that the house upstairs is for rent. I’ve come to see it for
myself.
பாலு: மாடி வீடு காலியா இருக்குன்னு அட்வெர்டைஸ்மெண்ட்ல (விளம்பரம்) பாத்தேன். அதை
நேர்ல பாக்கலாமுன்னு வந்தேன்.
 
Veettu Urimaiyaalar: Ulla vaanga.
House owner: Come on in.
வீட்டு உரிமையாளர்: உள்ள வாங்க.
 
Balu: Nandri Sir.
Balu: Thank you Sir.
பாலு: நன்றி சார்.
 
Veettu Urimaiyaalar: Neenga enga irundhu vaareenga?
House owner: Where are you coming from?
வீட்டு உரிமையாளர்: நீங்க எங்க இருந்து வாரீங்க?
 
Balu: Bangalore-la irundhaen. Ippo transfer (idam maattral) aagi Chennai-kku
vandhirukkaen.
Balu: I was in Bangalore. Now I’ve got transferred to Chennai.
பாலு: பெங்களூர்ல இருந்தேன். இப்போ ட்ரான்ஸ்பர் (இடம் மாற்றல்) ஆகி சென்னைக்கு
வந்திருக்கேன்.
 
Veettu Urimaiyaalar: Neenga enga vaela paakkureenga?
House owner: Where are you working?
வீட்டு உரிமையாளர்: நீங்க எங்க வேல பாக்குறீங்க?
 
Balu: Oru IT company (IT niruvanam) InfoComp-la vaela paakkuraen.
Balu: I am working at InfoComp, an IT Company.
பாலு: ஒரு ஐ‌டி கம்பெனி (ஐ‌டி நிறுவனம் ) இன்ஃபோகாம்ல வேல பாக்குறேன்.
 
Veettu Urimaiyaalar: Unga veettla moththam eththana paeru?
House owner: How many people live in your house?
வீட்டு உரிமையாளர்: உங்க வீட்ல மொத்தம் எத்தன பேரு?
 
Balu: Naanga moonu paeru, ennoda ammaa, appaa-va saeththu moththam anju paeru.
Balu: There are three of us, and counting my mom and dad, the total is five.
பாலு: நாங்க மூணு பேரு, என்னோட அம்மா, அப்பாவ சேத்து மொத்தம் அஞ்சு பேரு.
 
Veettu Urimaiyaalar: Ammaa, appaa maadi padi yaeriruvaangalaa?
House owner: Will your mom and dad be able to climb the stairs?
வீட்டு உரிமையாளர்:அம்மா, அப்பா மாடி படி ஏறுவாங்களா?
 
Balu: Yaeriruvaanga Sir.
Balu: Yes, they will, Sir.
பாலு: ஏறுவாங்க சார்.
 
Veettu Urimaiyaalar: Veetta paarunga. Ungalukku pudichchaa maththadha
paesuvoam.
House owner: See the house first. If you like it, we will discuss other details.
வீட்டு உரிமையாளர்: வீட்ட பாருங்க. உங்களுக்கு புடிச்சா மத்தத பேசுவோம்.
 
Balu: Sari Sir.
Balu: OK Sir.
பாலு: சரி சார்.
 
Veettu Urimaiyaalar: Idhu hall (varavaerpparai). Inga rendu bedroom (padukkai arai)
irukku – Indha bedroom-la attached bathroom (inaikkappatta kuliyalarai) irukku. Rendu
bedroom-la-yum balcony (maadi mugappu) irukku. Idhu kitchen (samayalarai). Pooja
room (poojaiyarai) thaniyaa irukku. Bedroom-la thaevaiyaana cupboard-um (alamaari),
kitchen-la thaevaiyaana shelves-um (alamaarigal) irukku.
House owner: This is the hall. There are two bedrooms here – this bedroom has an
attached bathroom. Both bedrooms have balconies. This is the kitchen. There is a
separate pooja room. There are necessary cupboards in the bedrooms and shelves in
the kitchen.
வீட்டு உரிமையாளர்: இது ஹால் (வரவேற்பறை). இங்க ரெண்டு பெட்ரூம் (படுக்கை அறை)
இருக்கு – இந்த பெட்ரூம்ல அட்டேச்டு பாத்ரூம் (இணைக்கப்பட்ட குளியலறை) இருக்கு. ரெண்டு
பெட்ரூம்லயும் பால்கனி (மாடி முகப்பு) இருக்கு. இது கிச்சன் (சமயலறை). பூஜ ரூம் (பூஜையறை)
தனியா இருக்கு. பெட்ரூம்ல தேவையான கப்போர்டும் (அலமாரி), கிச்சன்ல தேவையான
ஷெல்ஃப்களும் (அலமாரிகள்) இருக்கு.
 
Balu: Thannee vasadhi eppadi Sir?
Balu: What about the water facility Sir?
பாலு: தண்ணீ வசதி எப்படி சார்?
 
Veettu Urimaiyaalar: Corporation (nagaraatchi) water-kum (thanneer), bore (aazhthulai)
water-kum thaniththani pipe (kuzhaay) irukku.
House owner: There are separate pipes for corporation water and bore water.
வீட்டு உரிமையாளர்: கார்ப்பரேஷன் (நகராட்சி) வாட்டருக்கும் (தண்ணீர்), போர் (ஆழ்துளை)
வாட்டருக்கும் தனித்தனி பைப் (குழாய்) இருக்கு.
 
Balu: Veedu romba nallaa irukku Sir. Car-a (vandi) niruththura idaththa kaattunga.
Balu: The house is very nice, Sir. (Please) Show me where I can park my car.
பாலு: வீடு ரொம்ப நல்லா இருக்கு சார். கார (வண்டி) நிறுத்துர இடத்த காட்டுங்க.
 
Veettu Urimaiyaalar: Ennoda car pakkaththula neengalum niruthikkalaam. Idam romba
irukku.
House owner: You can park it beside mine. There is ample space.
வீட்டு உரிமையாளர்: என்னோட கார் பக்கத்துல நீங்களும் நிறுத்திக்கலாம். இடம் ரொம்ப
இருக்கு.
 
Balu: Vaadagai, advance (munpanam) evvalavu?
Balu: How much do we need to pay as rent and what’s the advance amount?
பாலு: வாடகை, அட்வான்ஸ் (முன்பணம்) எவ்வளவு?
 
Veettu Urimaiyaalar: Vaadagai e-ruvadhaayiram ruvaa. Advance oru latcham ruvaa.
House owner: The Rent is Rs.20,000/-; Advance Rs.1,00,000 (One lakh).
வீட்டு உரிமையாளர்: வாடகை இருவதாயிரம் ருவா. அட்வான்ஸ் ஒரு லச்சம் ருவா.
 

Balu: Enakku veedu pudichchirukku. Naalai-kku ennoda ammaa, appaa, manaiviya


kootteettu vandhu veetta paaththuttu mudivu solraen.
Balu: I like the house. Tomorrow I’ll bring my mom, dad and wife to see it and then I’ll
tell you my decision.
பாலு: எனக்கு வீடு புடிச்சிருக்கு. நாளைக்கு என்னோட அம்மா, அப்பா, மனைவிய கூட்டீட்டு
வந்து வீட்ட பாத்துட்டு முடிவு சொல்றேன்.
 
Veettu Urimaiyaalar: Kandippaa varuveengalaa?
House owner: Will you surely come?
வீட்டு உரிமையாளர்: கண்டிப்பா வருவீங்களா?
 
Annan: Balu: Avanga ellaarum pakkaththila enga relatives (sondhakkaaranga) veettula
dhaan irukkaanga. Adhanaala kaalaiyilaeyey kandippaa varuvoam. Avangalukku
pudichchirundhaa naalaikkey advance kuduththuttu Sunday (gnayittrukkizhamai) kudi
vandhuruvoam.
Balu: They are staying close by in my relatives’ house, so we’ll certainly come in the
morning itself. If they like it (the house), we can pay the advance tomorrow and move in
by Sunday.
பாலு: அவங்க எல்லாரும் பக்கத்தில எங்க ரிலேடிவ்ஸ் (சொந்தக்காரங்க) வீட்டுல தான்
இருக்காங்க. அதனால காலையிலேயே கண்டிப்பா வருவோம். அவங்களுக்கு புடிச்சிருந்தா
நாளைக்கே அட்வான்ஸ் குடுத்துட்டு, சன்டே (ஞாயிற்றுக்கிழமை) குடி வந்துருவோம்.
 
Veettu Urimaiyaalar: Romba nalladhu.
House owner: That’s great.
வீட்டு உரிமையாளர்: ரொம்ப நல்லது.
 
Balu: Nandri Sir. Poyittu vaaraen.
Balu: Thank you Sir. Bye.
பாலு: நன்றி சார். போயிட்டு வாறேன்.

You might also like