You are on page 1of 8

CONVERSATION – AT THE HOSPITAL

Uraiyaadal – Maruthuvamanaiyil

Kamala: Vanakkam, doctor!
Kamala: Good morning, doctor.
கமலா: வணக்கம் டாக்டர்.
 
Maruthuvar: Vanakkam-ma! Inga vandhu ukkaarunga. Sollunga, udambukku enna
seiyudhu?
Doctor: Good morning! Come and have a seat. Tell me, what’s wrong?
மருத்துவர்: வாங்கம்மா! இங்க வந்து உக்காருங்க. சொல்லுங்க உடம்புக்கு என்ன செய்யுது?
 
Kamala: Rendu naala orey kaaichchal doctor, vayiru vali vera.
Kamala: I’ve been having a fever for two days, and stomach ache too.
கமலா: ரெண்டு  நாளா ஒரே காய்ச்சல் டாக்டர், வயிறு வலி வேற.
 
Maruthuvar: Vaandhi, loose motion (beydhi) yedhaavadhu irukka?
Doctor: Do you have vomiting or diarrhoea?
மருத்துவர்: வாந்தி, லூஸ் மோஷன் (பேதி) ஏதாவது இருக்கா?
 
Kamala:  Illa, doctor.
Kamala: No, doctor.
கமலா: இல்ல, டாக்டர்.
 
Maruthuvar: Veliya yedhaavadhu saappiteengala-ma?
Doctor: Did you eat anything from outside?
மருத்துவர்: வெளிய ஏதாவது சாப்பிட்டீங்களாமா?
 
Kamala: Aamaam doctor, vidumurai-ku Kodaikaanal ponoam; anga hotel la saapitoam.
Kamala: Yes, doctor. We went to Kodaikanal for vacation. There we had food from the
hotel.
கமலா: ஆமாம், டாக்டர். விடுமுறைக்கு கொடைக்கானல் போனோம். அங்க ஹோட்டல்-ல
சாப்பிட்டோம்.
 
Maruthuvar: Ippa varra neraiya noigalukku suththamilladha saappaadu
saappidradhudhaan kaaranam. Mudinja alavu veliya saappiduvadha thavirkkanum ma.
Doctor:  Most diseases these days are caused by eating unhygienic food, Try to avoid
eating from outside.
மருத்துவர்: இப்ப வர்ற நெறைய நோய்களுக்கு சுத்தமில்லாத சாப்பாடு சாப்பிடறது தான்
காரணம்.. முடிஞ்ச அளவு வெளிய சாப்பிடுவத தவிர்க்கணும் மா.
 
Kamala:  Sari, doctor.
Kamala: Ok, Doctor.
கமலா:   சரி, டாக்டர்.
 
Maruthuvar: Indha thermometer-a (veppamaani) unga kai idukkula vainga…
Temperature noothi-rendu irukku. Naan ungalukku kaaichchalukkum, vayithu (vayiru)
valikkum maathirai tharean. Moonu naal-la sariyagala-na blood test (raththa
parisodhanai) pannanum.
Doctor: Keep this thermometer in your armpit…… Your temperature is 102. I’ll give you
medicines for the fever and stomach ache. If it doesn’t subside in 3 days, we should do a
blood test.
மருத்துவர்:  இந்த தெர்மாமீட்டர (வெப்பமானி) உங்க கை இடுக்குல வைங்க… டெம்பரேச்சர்
நூத்திரெண்டு இருக்கு. நான் உங்களுக்கு காய்ச்சலுக்கும் வயித்து (வயிறு) வலிக்கும் மாத்திரை
தரேன். மூணு நாள்ல சரியாகலனா ரத்த பரிசோதனை பண்ணனும்.
 
Kamala: Sari, doctor.
Kamala: Ok, Doctor.
கமலா:   சரி, டாக்டர்.
 
Maruthuvar: Pressure sariyadhaan irukku; unga udal-edai dhaan konjam adhigama
irukku..  Walking (nadaippayirchi) ellam poradhillayaa?
Doctor: Your blood pressure is normal, but your weight is slightly high, Don’t you go for
walking?
மருத்துவர்:  பிரஷர் சரியாதான் இருக்கு; உங்க உடல் எடை தான் கொஞ்சம் அதிகமா இருக்கு.
நடைப்பயிற்சி எல்லாம் போறதில்லையா?
 
Kamala: Onnumey panradhu illa doctor; veetu vaelayey sariya irukku.
Kamala:  I don’t do anything (exercise) doctor, busy without household chores.
கமலா: ஒண்ணுமே பண்றது இல்ல டாக்டர்; வீட்டு வேலையே சரியா இருக்கு.
 
Maruthuvar: Oru mani naeramavadhu udarpayirchikku odhukunga ma – ippa illa,
udambu sariyaana piragu.
Doctor: Set aside at least one hour for exercise – not now, once you are well.
மருத்துவர்:  ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்க மா – இப்ப இல்ல உடம்பு சரியான
பிறகு.
 
Kamala: Sari, doctor.
Kamala:  OK, Doctor.
கமலா: சரி, டாக்டர்.
 
Maruthuvar: Indha maathiraya moonu vaela saappaattukku apuram moonu naalu-kku
saappidanum. Indha capsula kaalailayum iravum saappatukku apuram moonu naal
saappidanum.
Doctor: Take this tablet thrice a day after food for three days. Take this capsule morning
and night after food for three days.
மருத்துவர்:  இந்த மாத்திரைய மூணு வேளை சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு நாளுக்கு
சாப்பிடணும். இந்த கேப்சூல காலைலயும் இரவும் சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு நாள்
சாப்பிடணும்.
 
Kamala: Saringa doctor, Nandri… Doctor! Bread, kanji, pazhangal – idhellam
saappidalaama?
Kamala:  Will do, doctor. Thank you…. Doctor, can I eat foods like bread, porridge and
fruits?
கமலா:   சரிங்க டாக்டர், நன்றி… டாக்டர்! பிரட், கஞ்சி, பழங்கள் – இதெல்லாம் சாப்பிடலாமா?
 
Maruthuvar: Bread vendaam. Kanji, apuram neraiya pazhangal saappidunga.
Doctor: Don’t eat bread, but have porridge and lots of fruits.
மருத்துவர்:  பிரட் வேணா மா ,கஞ்சி அப்புறம் நெறைய பழங்கள் சாப்பிடுங்கள்
 
Kamala: Nandri doctor.
Kamala: Thank you doctor.
கமலா: நன்றி டாக்டர்.

CONVERSATION  - IN THE OFFICE


Uraiyaadal – Aluvalagaththil
உரையாடல் – அலுவலகத்தில்
 
 
 
Raghu: Good morning, Karthi.
Raghu: Good morning, Karthi.
ரகு: வணக்கம் கார்த்தி.
 
Karthi: Good morning.
Karthi: Good morning.
கார்த்தி: வணக்கம்.
 
Raghu: Boss (Maelaalar) vandhuttaaraa?
Raghu: Has our boss come?
ரகு: பாஸ் (மேலாளர்) வந்துட்டாரா?
 
Karthi: Aamaa. Avar innaikku seekkiramaavey vandhuttaar.
Karthi: Yes. He came in early today.
கார்த்தி: ஆமா. அவர் இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டார்.
 
Raghu: Yaen? Innaikku edhuvum visaeshamaa?
Raghu: Why? Anything special today?
ரகு: ஏன்? இன்னைக்கு எதுவும் விசேசமா?
 
Karthi: Illa. Maasa kadaisi kanakku mudikkanum-la, adhanaala dhaan. Nee yaen late-aa
(thaamadham) vandha?
Karthi: No. Month end accounts need to be tallied. Why are you late?
கார்த்தி: இல்ல. மாச கடைசி கணக்கு முடிக்கணும்-ல, அதுனால தான். நீ ஏன் லேட்டா (தாமதம்)
வந்த?
 
Raghu: Adha yaen kaekkura! Ennoda vandi tyre (chakkaram) puncture (pazhudhu)
aayiruchchu. Adhanaala mechanic-a (porimuraiyaalar) vara solli sari panradhukkulla late
aayiruchchu.
Raghu: Don’t ask!! My bike’s tyre got punctured. By the time the mechanic arrived and
fixed it, it got late.
ரகு: அத ஏன் கேக்குற! என்னோட வண்டி டயர் (சக்கரம்) பஞ்சர் (பழுது) ஆயிருச்சு. அதனால
மெக்கானிக்க (பொறிமுறையாளர்) வர சொல்லி சரி பண்றதுக்குள்ள லேட் ஆயிருச்சு.
 
Karthi: Unnoda vandi adikkadi puncture aagudhu. Adhanaala indha maasa sambalam
vaanguna udana tyre-a maaththu.
Karthi: Your bike’s tyres have been getting punctured frequently. So, replace them as
soon as you get this month’s salary.
கார்த்தி: உன்னோட வண்டி டயர் அடிக்கடி பஞ்சர் ஆகுது. அதனால இந்த மாச சம்பளம்
வாங்குன உடனே டயர மாத்து.
 
Raghu: Aamaa, maaththanum. Adikkadi pirachchana vandhukitte irukku.
Raghu: Yes, I should. It keeps malfunctioning often.
ரகு: ஆமா. மாத்தணும். அடிக்கடி பிரச்சன வந்துகிட்டே இருக்கு.
 
Karthi: Unnoda manaivi office-kku (aluvalagam) eppadi ponaanga?
Karthi: How did your wife go to work?
கார்த்தி: உன்னோட மனைவி ஆஃபிஸ்-க்கு (அலுவலகம்) எப்படி போனாங்க?
 
Raghu: Avanga call-taxi (vaadaga vandi) book (mun-padhivu) panni poyittaanga.
Saayandhiram pogum bodhu naan kootteettu poganum.
Raghu: She booked a call taxi and went. In the evening, I need to pick her up.
ரகு: அவங்க கால்-டாக்ஸி (வாடக வண்டி) புக் (முன் பதிவு) பண்ணி போயிட்டாங்க. சாயந்திரம்
போகும் போது நான் கூட்டீட்டு போகணும்.
 
Karthi: Sari…
Karthi: Ok..
கார்த்தி: சரி…
 
Raghu: Vaanadhi enga? Idam kaaliyaa irukku.
Raghu: Where is Vanadhi? Her seat is empty!
ரகு: வானதி எங்க? அவங்க இடம் காலியா இருக்கு.
 
Karthi: Avanga Accounts section-ukku (kanakkugal thurai-kku) poyirukkaanga.
Karthi: She has gone to the Accounts section.
கார்த்தி: அவங்க அக்கௌண்ட்ஸ் செக்சன்-க்கு (கணக்குகள் துறை) போயிருக்காங்க.
 
Raghu: Edhukku?
Raghu: Why?
ரகு: எதுக்கு?
 
Karthi: Chief Accountant (thalaimai kanakkaalar) avangala vara sonnaaru.
Karthi: The Chief Accountant called her.
கார்த்தி: சீஃப் அக்கவுன்டன்ட் (தலைமை கணக்காளர்) அவங்கள வர சொன்னாரு.
 
Raghu: Sari, Nee saapputteeya?
Raghu: OK. Did you eat?
ரகு: சரி, நீ சாப்புட்டீயா?
 
Karthi: Aamaa. Naan veetla saapputtuttu dhaan vandhaen. Nee saappudalaiyaa?
Karthi: Yes, I did, at home. Didn’t you?
கார்த்தி: ஆமா. நான் வீட்ல சாப்புட்டுட்டு தான் வந்தேன். நீ சாப்புடலையா?
 
Raghu: Saapputtaen. Aanaa tension-aa (padhattam) vandhadhaala thala valikkudhu.
Tea kudikka canteen-kku (unavagam) polaamaa?
Raghu: I did, but because I came already stressed, I have a headache. Shall we go to
the canteen and have some tea?
ரகு: சாப்புட்டேன். ஆனா டென்ஷனா (பதட்டம்) வந்ததால தல வலிக்குது. டீ குடிக்க கேண்டீன்-
க்கு (உணவகம்) போலாமா?
 
Karthi: Sari polaam. Adhukku munnaala nee vandhadhum boss unna vara sonnaar.
Poyy enna-nnu kaettuttu vaa.
Karthi: Sure. But before that, Boss said you should meet him as soon as you came. Go
and find out why.
கார்த்தி: சரி போலாம். அதுக்கு முன்னால நீ வந்ததும் பாஸ் உன்ன வர சொன்னார். போய்
என்னா-ன்னு கேட்டுட்டு வா
.
 
Raghu: Kobamaa irukkaaraa?
Raghu: Is he angry?
ரகு: கோபமா இருக்காரா?
 
Karthi: Appadi ellaam illa. Naeththu un-kitta kuduththa vaelaya mudichchitteeyaa-nnu
kaekka dhaan kooppuduraaru-nu ninaikkuraen.
Karthi: Not at all. I think he’s going to ask if you completed the task assigned to you
yesterday.
கார்த்தி: அப்படி எல்லாம் இல்ல. நேத்து உன்-கிட்ட குடுத்த வேலய முடிச்சிட்டீயா-ன்னு கேக்க
தான் கூப்புடுறாறு-னு நினைக்குறேன்
 
Raghu: Sari, naan poyy avara paaththuttu vaaraen. Appuramaa rendu paerum tea
kudikka pogalaam.
Raghu: Ok, I’ll meet him and come. Then we’ll go and get some tea.
ரகு: சரி, நான் போய் அவர பாத்துட்டு வாறேன். அப்புறமா ரெண்டு பேரும் டீ குடிக்க போகலாம்.
 
Karthi: Sarida. Naan inga wait (kaathiru) pannuraen.
Karthi: Sure. I’ll wait here.
கார்த்தி: சரிடா. நான் இங்க வெயிட் (காத்திரு) பண்ணுறேன்.
 
CONVERSATION  – AT THE AIRPORT
Uraiyaadal  –Vimaana Nilaiyaththil
உரையாடல் – விமான நிலையத்தில
 
Passenger: Vanakkam!
Passenger: Hello!
பயணியர்: வணக்கம்
 
Vimaana Nilaiya Paniyaalar: Vanakkam Madam! Sollunga.
Airport Staff: Hello Ma’am! Tell me.
விமான நிலைய பணியாளர்: வணக்கம் மேடம்! சொல்லுங்க.
 
Passenger: Naan Airport-kku (vimaana nilaiyam) varuvadhu idhu dhaan mudhal
thadava. Enakku inga ulla process (nada murai) theriyaadhu.
Passenger: This is my first time at the Airport. I don’t know the process here.
பயணியர்: நான் ஏர்போர்ட்டுக்கு (விமான நிலையம்) வருவது இது தான் முதல் தடவ. எனக்கு
இங்க உள்ள பிராசஸ் (நட முறை) தெரியாது.
 
Vimaana Nilaiya Paniyaalar: Neenga kavala padaadheenga. Naan ungalukku help
(udhavi) pannuraen. Neenga endha ooru-kku poreenga?
Airport Staff: Don’t worry. I’ll help you. Which city are you going to?
விமான நிலைய பணியாளர்: நீங்க கவல படாதீங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் (உதவி)
பண்ணுறேன். நீங்க எந்த ஊருக்கு போறீங்க?
 
Passenger: British Airways flight-la (vimaanam) London poraen. Andha flight eppo
varum-nnu solla mudiyumaa?
Passenger: I’m traveling to London by British Airways. Can you tell me when that flight
will arrive?
பயணியர்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஃப்ளைட்ல (விமானம்) லண்டன் போறேன். அந்த ஃப்ளைட்
எப்போ வருமுன்னு சொல்ல முடியுமா?
 
Vimaana Nilaiya Paniyaalar: Flight delay (thaamadham) aanadhu naala, raaththiri
paththu mani-kku dhaan varum.
Airport Staff: Since the flight is delayed, it will arrive only at 10 pm.
விமான நிலைய பணியாளர்: ஃப்ளைட் டிலே (தாமதம்) ஆனதுனால ராத்திரி பத்து மணிக்கு தான்
வரும்.
 
Passenger: Sari. Flight-la yaerradhu-kku munnaadi naan ennadhu ellaam pannanum?
Passenger: OK. What must I do before boarding the flight?
பயணியர்: சரி. ஃப்ளைட்ல ஏர்றதுக்கு முன்னாடி நான் என்னது எல்லாம் பண்ணனும்?
 
Vimaana Nilaiya Paniyaalar: Mudhala unga luggage-a (saamaan) scan (oodukadhir)
seyyanum.
Airport Staff: First you need to scan your luggage.
விமான நிலைய பணியாளர்: முதல உங்க லக்கேஜ (சாமான்) ஸ்கேன் (ஊடு கதிர்) செய்யனும்.
 
Passenger: Company (aluvalaga) vaelayaa oru vaaram mattum poradhunaala enkitta
dress (udai), Laptop (madi kanini), sila puththagangal-a thavira vaera edhuvum illa.
Passenger: As I am going on an official trip for just one week, apart from my clothes,
laptop and some books, I don’t have anything else with me.
பயணியர்: கம்பெனி (அலுவலக) வேலயா ஒரு வாரம் மட்டும் போறதுனால என்கிட்ட டிரஸ்
(உடை), லேப்டாப் (மடி கணினி), சில புத்தகங்கள தவிர வேற எதுவும் இல்ல.
 
Vimaana Nilaiya Paniyaalar: Irundhaalum neenga unga porutkala scan senjae
aaganum. Idhu ingulla process.
Airport Staff: Nevertheless, you must scan all your things (bags). This is the process
here.
விமான நிலைய பணியாளர்: இருந்தாலும் நீங்க உங்க பொருட்கள ஸ்கேன் செஞ்சே ஆகணும்.
இது இங்குள்ள பிராசஸ்.
 
Passenger: Sari. Aduththu naan enna seyyanum?
Passenger: Alright. What must I do next?
பயணியர்: சரி. அடுத்து நான் என்ன செய்யனும்?
 
Vimaana Nilaiya Paniyaalar: Neenga unga visa-va-yum (nuzhaivu seettu), passport-a-
yum (kadavu seettu), ticket-ai-um (payana seettu) ready-aa (thayaar)
vachchirukkeengalaa?
Airport Staff: Do you have your Visa, Passport and Ticket handy?
விமான நிலைய பணியாளர்: நீங்க, உங்க விசாவயும் (நுழைவு சீட்டு), பாஸ்போர்ட்டையும்
(கடவுசீட்டு) டிக்கெட்டையும் (பயண சீட்டு) ரெடியா (தயார்) வச்சிருக்கீங்களா?
 
Passenger: Aamaa, Ready-aa irukku..
Passenger: Yes, I do.
பயணியர்: ஆமா. ரெடியா இருக்கு.
 
Vimaana Nilaiya Paniyaalar: Unga visa, passport, ticket, ID proof (adaiyaala saandru),
ellaamey anga irukkira British Airways Staff-kitta (paniyaalar) kuduththu sari paaththu,
unga boarding pass-a vaanganum. Adhula unga flight details (vibaram) ellaamey
irukkum.
Airport Staff: You need to have your Visa, Passport, Ticket and ID proof checked by the
British Airways staff over there, and get your Boarding pass. All your flight details will be
on it.
விமான நிலைய பணியாளர்: உங்க விசா, பாஸ்போர்ட், டிக்கெட், ஐடி ப்ரூஃப் (அடையாள
சான்று), எல்லாமே அங்க இருக்கிற பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்டாஃப்-கிட்ட (பணியாளர்) குடுத்து சரி
பாத்து, உங்க போர்டிங் பாஸ வாங்கணும். அதுல உங்க ஃப்ளைட் டீடெயில்ஸ் (விபரம்) எல்லாமே
இருக்கும்.
 
Passenger: Sari. Boarding pass-a vaangeettu naan enna seyyanum?
Passenger: OK. What should I do after getting my Boarding pass?
பயணியர்: சரி. போர்டிங் பாஸ வாங்கீட்டு நான் என்ன செய்யணும்?
 
Vimaana Nilaiya Paniyaalar: Opposite side-la (edhir thisai) security checking-kaga
(paadhukaapu sodhanai) varisai-la nikkanum. unga kai-la irukkira luggage-ai-yum
ungalayum sodhana senjittu, unga boarding pass-la seal (muththirai) vaippaanga. Seal
vachchu kidaichchadhukku appuram, neenga waiting lounge-la (oayvu arai) relaxed-aa
(nidhaanamaaga) irukkalaam.
Airport Staff: On the opposite side, you should stand in a queue for Security Check.
After security check of you and your hand luggage is complete, they will put a seal on
your Boarding pass. After you get this seal, you can relax in the waiting lounge.
விமான நிலைய பணியாளர்: ஆப்போஸிட் சைடுல (எதிர் திசை) செக்யூரிட்டி செக்கிங்காக
(பாதுகாப்பு சோதனை) வரிசைல நிக்கணும். உங்க கைல இருக்கிற லக்கேஜையும் உங்களயும்
சோதன செஞ்சிட்டு, உங்க போர்டிங் பாஸ்ல சீல் (முத்திரை) வைப்பாங்க. சீல் வச்சு கிடைச்சதுக்கு
அப்புறம், நீங்க வெயிட்டிங் லௌஞ்ச்ல (ஓய்வு அறை) ரிலேக்ஸ்டா (நிதானமாக) இருக்கலாம்.
 
Passenger: Birtish Airways vimaanam vandha udana-yey London-kku purappadumaa?
Passenger: Will the British Airways flight depart for London soon after arrival?
பயணியர்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வந்த உடனயே லண்டனுக்கு புறப்படுமா?
 
Vimaana Nilaiya Paniyaalar: Illa. Airport-la rendu mani naeram nikkum.
Airport Staff: No. It will halt at the airport for 2 hours.
விமான நிலைய பணியாளர்: இல்ல. ஏர்போர்ட்ல ரெண்டு மணி நேரம் நிக்கும்.
 
Passenger: Yaen?
Passenger: Why?
பயணியர்: ஏன்?
 
Vimaana Nilaiya Paniyaalar: Saappaadu eduppaanga, suththam seyvaanga. Seat
(irukkai) cover (urai) maaththuvaanga, fuel (eri porul) nirappuvaanga.
Airport Staff: They load food, clean the flight, change the seat covers and refuel the
airplane.
விமான நிலைய பணியாளர்: சாப்பாடு எடுப்பாங்க, சுத்தம் செய்வாங்க. சீட்(இருக்கை) கவர்
(உறை) மாத்துவாங்க, ஃப்யூல் (எரி பொருள்) நிரப்புவாங்க.
 
Passenger: Oh! Appadiyaa! Sari. Kadaisiyaa orey oru kaelvi – inga ulla cafeteria-la
(unavagam) saiva unavu kidaikkumaa?
Passenger: Oh! Really! OK, one last question – Are vegetarian meals available in the
cafeteria here?
பயணியர்: ஓ! அப்படியா! சரி. கடைசியா ஒரே ஒரு கேள்வி – இங்க உள்ள கேஃப்டேரியால
(உணவகம்) சைவ உணவு கிடைக்குமா?
 
Vimaana Nilaiya Paniyaalar: Kidaikkum.
Airport Staff: Yes, they are.
விமான நிலைய பணியாளர்: கிடைக்கும்.
 
Passenger: Romba nalladhaa pochchu! Neenga kuduththa ellaa information-kku
(thagaval) romba thanks (nandri).
Passenger: That’s great! Thank you for all the information you provided.
பயணியர்: ரொம்ப நல்லதா போச்சு! நீங்க குடுத்த எல்லா இன்ஃபர்மேஷனுக்கு (தகவல்) ரொம்ப
தேங்க்ஸ் (நன்றி).
 
Vimaana Nilaiya Paniyaalar: You’re welcome (paravaayilla), madam. Happy journey
(Ungal payanam inidhaaga irukkattum)!
Airport Staff: You are welcome, Ma’am. Happy Journey.
விமான நிலைய பணியாளர்: யு ஆர் வெல்கம் (பரவாயில்ல) மேடம். ஹேப்பி ஜர்னி (உங்கள்
பயணம் இனிதாக இருக்கட்டும்)

You might also like