You are on page 1of 169

om HGuUyin mDaEpio

ஆசிரியர்‌
Par
y csr அரடிகூளா

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்‌


தபால்பெட்டி - 2
வடலூர்‌ 6027 303 கடலூர்‌ மாவட்டம்‌
மூசுதிப்திப்பு: 2312422003
ஜ்‌ ஊரன்‌ அடிகள்‌

விலை CH. 40-00

அச்சிட்டோரீ:
சுபம்‌ பிரிண்டர்ஸ்‌, சிதம்பரம்‌.-
போன்‌: 232544
முன்னுரை
மக்களைப்‌ பிரிக்கும்‌ பிரிவினைகள்‌ பல. அவற்றுள்‌:
இரண்டு இப்போது பெரும்‌ பிரச்சினைகளாக உள்ளன."
ஒன்று சாதி மற்றொன்று மதம்‌. சாதிகள்‌ நம்‌ நாட்டில்‌
மிகுதி. மதங்கள்‌ உலகெங்கும்‌ உள்ளன.

சாஇகளும்‌ மதங்களும்‌ நன்மைக்காகத்தான்‌ ஏற்படுத்தப்‌


பெற்றன. இீமைக்காக ஏற்படுத்தப்பெறவில்லை, ஒரு,
காலத்தில்‌ நன்மையாக இருந்தவை இன்று இமையாகத்‌
தெரிகின்றன.

தொழில்‌ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சாதிகள்‌ ஏற்படுதிதப்‌


பெற்றன? ததீதுவ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சமயங்கள்‌ (மதங்கள்‌)
ஏற்படுத்‌ தப்பெற்றன என்று வள்ளலார்‌ கூறுகிறாரீ,
கல்வி, காவல்‌, வணிகம்‌, வேளாண்மையும்‌ பிற
தொழில்களும்‌ என்று தொழிலை "முன்னிட்டு மக்களை
நான்கு பெரும்‌ பிரிவுகளாக அவரவர்‌ த்குதி இறமைகளுக்கு
ஏற்றவாறு பிரித்தார்கள்‌.* “தொடக்கத்தில்‌ தொழிலால்‌
ஏற்பட்ட பிரிவு வரவரப்‌ பிறப்போடு பின்னிக்கொண்டு
தொழிலால்‌ சாதி என்றது போய்‌, பிறப்பால்‌” erp
என்றாகிவிட்டது.

இன்று எல்லாத்‌ தொழில்களையும்‌ எல்லாச்‌ சாதி


யாரும்‌ செய்கின்றனர்‌. தொடக்கப்பள்ளி முதல்‌ பல்கலைக்‌
தீழகம்வரை கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ அனைவரும்‌
:* பழங்காலத்தில்‌ எகிப்து முதலிய நாடுகளிலும்‌
pagers பிரிவினைகள்‌ இருக்குன (கலைக்களஸ்சியம்‌
4-562)
iv

அவர்கள்‌ பிறப்பால்‌ எச்சாதியினரேனும்‌ செய்தொழிலால்‌


சிறப்பால்‌ அந்தணர்கள்‌ (பிராமணர்‌). ஆட்சியிலும்‌
காவலிலும்‌ பணியாற்றும்‌ கிராம நிர்வாக அலுவலர்‌ முதல்‌
ஐ. ஏ. எஸ்‌. அதிசாரிகள்வரை, கசான்ஸ்டபிள்‌ முதல்‌
ஐ. பி. எஸ்‌. அதிசாரிவரை, அனைவரும்‌ பிறப்பால்‌ எச்சாதி
யினராயினும்‌ செய்தொழிலால்‌ சிறப்பால்‌ அரச
குலத்தோரே (க்ஷத்திரியர்‌). தெரு ஓரக்‌ கடைகள்‌ முதல்‌
பெரிய பெரிய சூப்பர்மார்க்கெட்‌ வரை பெரிய பெரிய
விநியோகஸ்தர்கள்‌ வரை வியாபாரத்தில்‌ ஈடுபட்டுள்ள
அனைவரும்‌ வணிகரே (வைூயா). விவசாயத்‌ தொழி
லாளர்கள்‌ முதல்‌ மிராஸ்தார்கள்வரை, பல்வேறு பொருள்‌
களை உற்பத்தி செய்யும்‌ செப்பனிடும்‌ சிறு தொழிலி
லிருந்து பெரும்பெரும்‌ தொழிற்சாலைகள்‌ ஆலைகள்வரை,
தொழிலாளர்களும்‌ முதலாளிகளும்‌ வேளாளர்‌ என்ற
பெரும்‌ பிரிவைச்‌ சேர்வோரே (சூத்திரர்‌).
இப்படிப்‌ பார்த்தால்‌ தொழிலதிபர்களும்‌ ஆலை
முதலாளிகளுமாயுள்ள அந்தணர்கள்‌ பிறப்பால்‌ பிராமணர்‌,
செய்தொழிலால்‌ சூத்திரர்‌. கல்விப்‌ பணி செய்யும்‌
அரிசனர்‌ பிறப்பால்‌ சூத்திரர்‌, செய்தொழிலால்‌, சிறப்பால்‌
அந்தணர்‌, அன்றைய நந்தனாரும்‌ அண்மைக்கால
அம்பேத்கரும்‌ பிழப்பால்‌ அரிசனர்‌, செய்தொழிலால்‌ Apis
பால்‌ அந்தணர்‌,

இப்போது, தொழிலாலும்‌ சாதி பொருந்தவில்லை,


பிறப்பாலும்‌ சாதி பொருந்தவில்லை என்னும்‌ போது
சாதியை விட்டு விடலாமே, தத்துவ அடிப்படையில்‌
மதங்கள்‌ ஏற்பட்டன. இப்போது தத்துவங்களை யார்‌
பார்க்கிறார்கள்‌? தத்துவங்களை விட மக்கள்‌ எண்ணிக்‌
கையே பெரிதாகத்‌ தெரிகிறது. எங்கும்‌ எதிலும்‌ எல்லா
வற்றிலும்‌ சாது, எங்கும்‌' எதிலும்‌ எல்லாவறிறிலும்‌ "மதம்‌.
அரசியல்‌ சாதி மதத்‌ இவிர வாதங்களை வளர்க்கிறது,
சாதிப்பற்று மதப்பற்று இருக்கலாம்‌. சாதிவெறி
கூடாது. சாதிமத அடிப்படைவாதம்‌ இருக்கலாம்‌. தீவிர
வாதம்‌ கூடாது. சாதிவெறி மதவெறி தணிய வேண்டும்‌.
சாதிக்‌ இவிரவாதம்‌ மததீ தீவிரவாதம்‌ தணிய வேண்டும்‌.
சாதி மதங்‌ கடற்த மனிதநேயம்‌ மலர வேண்டும்‌, மலிய
வேண்டும்‌.

அதற்கு இந்நூல்‌ உதவும்‌. சாதியைப்‌ பற்றியும்‌ மதவ்‌


களைப்‌ பற்றியும்‌ எம்‌ உள்ளத்தில்‌ உள்ளவற்றையெல்லாம்‌
கொட்டித்‌ இர்ப்பதாயின்‌ குழைந்து 1000 பக்சங்களாவது
வேண்டும்‌ அப்படி, ஒரு பெருநூல்‌ எழுத ஆசைதான்‌.
ஆனால்‌ அதற்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு எங்கே
போவது? இப்போது இயன்றது இவ்வளவே. இந்த
நல்ல நூலை வெளியிட உதவிய நம்‌ இனிய நண்பர்‌
பரவளூ* இல்லறஞானி திரு. நா. பூமலை அவர்களுக்கும்‌
குடும்பத்தாருக்கும்‌ வாழ்த்துகள்‌
வாழ்க! வாழ்க!

- ஊரன்‌ அடிகள்‌
சஈதீயும்‌ பதழும்‌

வேதத்தில்‌ சாதி ne
மனுதர்மத்தில்‌ சாதி
பகவத்கீதையில்‌ சாதி
தொல்காப்பியத்தில்‌ சாதி
சங்க இலக்கியங்களில்‌ சாதி
சாஇகளில்‌ ஏற்றத்தாழ்வு
சாதி என்ற பெயா்‌
சாதிப்‌ பிரிவு
சாதிப்பிரிவில்‌ ஏற்றத்தாழ்வு
அந்தணர்‌ 44
அரசர்‌ 48
வணிகர்‌ 50
வேளாளர்‌ 51
18-வகைச்‌ சாதிகள்‌ 53
அறிஞர்கள்‌ (புலவர்கள்‌) 54
பல்வேறுவகைக்‌ கலைஞர்கள்‌ 55
பல்வேறுவகைத்‌ தொழிலாளர்கள்‌ 56
வண்ணார்‌ பரிகாரி 57
பள்ளர்‌ பறையர்‌ சக்கிலியர்‌ 58
நான்கு அரிரமங்கள்‌ 62
கோத்திரமும்‌ சூத்திரமும்‌
சமயஉலகில்‌ அடியார்களிடையே சாதி வேற்றுமை
்‌ இல்லை 68
நாயன்மார்‌ அறுபத்துமூவரில்‌ சாதி
வேற்றுமை இல்லை 68
vit

பெரியபுராணத்தில்‌ சாதி ஒழிய்பு


அந்தணர்‌ வீட்டு. யாகசாலை
மேடையருகே ஹரிஜன தம்பதிகள்‌ 76
அ௮ருள்தெறி முதல்வர்‌ ஞானசம்பந்தரின்‌
சமயப்புரட்சி 76
தமிழ்ஞானசம்பந்தர்‌, செந்தமிழ்‌ அந்தணர்‌ 80
கண்ணப்பரும்‌ நந்தனாரும்‌
இருநீலகண்டரும்‌ “gut?seb 81
ஆழ்வார்கள்‌ ஆசிரியர்களில்‌ சாதி
வேறுபாடு 'இல்லை 64
இராமானுஜர்‌ செய்த புரட்சி 86
அடியார்களின்‌ சாதியை ஆராய்வது
மாத்ருயோனிப்‌ பரீட்சையை ஓக்கும்‌ 88
சைவ வைணவ உலகில்‌ ஆதிதிராவிடப்‌
பெரியோர்கள்‌ 90
சித்தர்களுள்‌ சாது வேற்றுமை இல்லை 93
காதி வேற்றுமையை வன்மையாகக்‌ கண்டிக்கும்‌
சுபிலார்‌ அகவல்‌ 95
பெரியோர்கள்‌ பலரும்‌ சாதிவேற்றுமபையைக்‌
கண்டிதீதல்‌, சாதி சமரசத்தை வற்புறுத்தல்‌ 103
சங்கப்புலவர்‌ 'சணியன்‌ பூங்குன்றனார்‌ 03
திருவள்ளுவர்‌ 05
திருமூலர்‌ ௨.௨. 105
ஒளவையார்‌ 107
திருநாவுக்கரசர்‌ (அப்பரீ) 107
மாணிக்கவாசகர்‌ . Wt
சித்தா்கள்‌ w HI
வள்ளலார்‌ 12
பாரதியார்‌ 118
சாதியின்‌ இன்றைய நிலை 121
viii

புதிய நான்கு சாதிகள்‌ 124


பிற்பட்டோர்‌ முற்பட்டோராக 125
தாழ்த்தப்பட்டோர்‌ முன்னேற்றம்‌ 128
சாதி ஒழிப்புக்கு வழிகள்‌ 133
சமபந்தி போஜனம்‌ 133
கலப்பூமணம்‌ 133
சாதஇப்‌ பட்டங்களைத்‌ தவிர்த்தல்‌ 135
சாதிகளின்‌ பெயரால்‌ இடப்பெயர்களை
வழங்காமை 135
சாஇகளின்‌ உட்பிரிவுகளை இணைத்தல்‌ 135
எல்லாவகை ஆவணங்களிலும்‌ சாதியைத்‌
தவிர்த்தல்‌ 136
சாதிகள்‌ ஒழிய வேண்டுமானால்‌... 136

மதம்‌
மதமா? சமயமா? 138
மதம்‌, சமயம்‌-பெயர்வீளக்கம்‌ 138
இன்றுள்ள பெரும்‌ மதப்பிரச்சினைகள்‌ 140
மதநல்லிணக்கம்‌-எம்மதமும்‌ சம்மதம்‌ 148
சமயச்சார்பின்மை 153
மிகக்‌ கொடுமையானது எது? சாதியா? மதமா? ... 155
இத்நாலாசிரியரின்‌ சாதி சமய ஒழுக்கம்‌ 157
வேண்டுகோள்‌ 158
Fi HU ஈச குரும்‌

$ேேதத்தீல்‌ சாதி
இருக்கு வேதத்தின்‌ பத்தாம்‌ மண்டலத்திலுள்ள
புருஷசூக்தம்‌ நான்கு சாதிகளின்‌ தோற்றத்தைப்‌ பின்‌
வருமாறு கூறுகிறது.
ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீதி
பாஹு ராஜன்ய கருத |
உஊரூ ததஸ்ய யத்‌ வைஸ்ய பதப்‌ யாம்‌
ஸாத்ரோ அஜாயத | -ருகீவே.தம்்‌910/90/12

பிராமணர்கள்‌ முகத்தில்‌ பிறந்தவர்கள்‌,


க்ஷத்திரியர்கள்‌ தோளில்‌ பிறந்தவர்கள்‌,
வை௫ியர்கள்‌ தொடையில்‌ பிறந்தவர்கள்‌,
சூத்திரர்கள்‌ பாதத்தில்‌ பிறந்தவர்கள்‌
என்பது இதன்‌ பொருள்‌.

மனுதர்மத்தீல்‌ சாதி
மனுதர்ம சாத்திரத்தில்‌ நான்கு சாதிகளின்‌ தோற்றம்‌
பின்வருமாறு கூறப்பெறுகிறது.,
*- உலக விருத்தியின்‌ பொருட்டு தன்னுடைய முகம்‌
புஜம்‌ துடை கால்‌ இவைகளின்றும்‌ பிராமணன்‌
கூத்தஇிரியன்‌ வைூயன்‌ சூத்திரன்‌ இவர்களைக்‌ கிரம
மாக வுண்டு பண்ணினார்‌'?
-- மறுதர்ம சாத்திரம்‌ முதலத்தியாயம்‌ - 31
சாதியும்‌ மதமும்‌

அந்தப்‌ பிரம்மாவானவர்‌ இந்தவுலகத்தைக்‌


காப்பாற்றுலதற்காக தன்‌ முகம்‌ தோள்‌ நுடை. பாதம்‌
இவைகளினின்று முண்டான பிராமண க்ஷத்திரிய
வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு
மறுமைக்கு முபயோகமான கருமங்களைத்‌ தனித்தனி
யாகப்‌ பகுத்தார்‌!” ~ 87

நான்கு சாதியாருக்கும்‌ உரிய தொழில்கள்‌ மனு


தரீமத்தில்‌ பின்வருமாறு கூறப்பெறுகின்றன.

**பிரரமணனுக்கு ஓதுவித்தல்‌, ஓதல்‌, எக்கியஞ்‌


செய்தல்‌, எக்கியஞ்‌ செய்வித்தல்‌, தானங்கொடுத்தல்‌,
தானம்‌ வாங்குதல்‌ ஆகிய இவ்வாறு தொழிலையும்‌
ஏற்படுத்தினார்‌. - 88

*'க்ஷத்திரியனுக்கு பிரசைகளைத்‌ தருமமாகக்‌


காத்தல்‌, தானங்கொடுத்தல்‌, வேதமோதுகதல்‌, பாட்டு
கூத்து ஸ்திரீ முதலிய விஷயங்களில்‌ மனஞ்செல்லாமை
இவை நான்கையும்‌ ஏற்படுத்தினார்‌. எக்யெஞ்செய்தல்‌
முதலான தரும காரியங்களும்‌ அவனுக்குண்டு'? - 89
“*வைசியனுக்கு பசுவைக்‌ காப்பாற்றுதல்‌, தானங்‌
கொடுத்தல்‌, வேதமோதுதல்‌, சலத்திலும்‌ பூமியிலு
முண்டான இரத்தினம்‌ நெல்லு முதலியவைசளில்‌
வியாபாரஞ்‌ செய்தல்‌, வட்டி வாங்குதல்‌, பயிரிடுதல்‌
இவ்வாறையும்‌ ஏற்படுத்தினார்‌. - 90

“சூத்திரனுக்கு இந்த மூன்று வர்ணத்தாருக்கும்‌


பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான
திருமமா ஏற்படுத்தினார்‌. இதனால்‌ அவனுக்கு தான
முதலியவையு முண்டென்று தோன்றுகின்றது.”* - 91.
ஊரன்‌ அடிகள்‌

பகவத்கீதையில்‌ சாதீ
பகவத்ததை நான்காவது அத்தியாயம்‌ ஞானகரீம
ஸந்யாஸயோகம்‌ 13-ஆவது சூத்திரத்தில்‌ கிருஷ்ண
பரமாத்மா தானே நான்கு வருணங்களைப்‌ படைதீததாகக்‌
கூறுறார்‌.
சாதுரீவர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குணகர்ம
விபாகச: |
தஸ்ய கர்தாரமபிமாம்‌ வித்த்யகரீ தார மவ்யயம்‌॥
மயா - என்னால்‌ — 13
குணகர்ம விபாகச - குணத்தினதும்‌ கா்மத்தினதும்‌
வேறுபாட்டுக்கு ஏற்றவாறு
சாதுர்வர்ண்யம்‌ - நான்கு வருணங்களாக
ஸ்ருஷ்டம்‌ - சருஷ்டிக்கப்பட்டன
தஸ்ய | அதற்கு
காரதாரம்‌ அபி - கர்த்தா” எனினும்‌
மாம்‌ - என்னை
அவ்யயம்‌ - நிர்விகாரியாகவும்‌
அகர்தாரம்‌ - கர்த்தா வல்லாதவனெளவும்‌
வித்தி - அறிக,
குணத்துக்கும்‌ கர்மத்துக்கும்‌ ஏற்ப நான்கு வருணங்‌
களை நான்‌ படைத்தேன்‌. அதற்குக்‌ கர்த்தா எனினும்‌
என்னை அவிகாறி என்றும்‌ அகர்த்தா என்றும்‌ அறிக.
குணபேததிதால்‌ சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ
குணம: நிறைந்திருக்கும்‌ ஜீவன்‌ பிராம்மணன்‌. சத்வ
குணமும்‌ சிறிது ரஜோகுணமும்‌ கூடியிருப்பவன்‌
க்ஷத்திரியன்‌, ரஜோகுணம்‌ பெரும்‌ பகுதியும்‌: சிறிது
சத்துவம்‌ தமசு ஆ௫யெவை) கூடியிருப்பவன்‌ ,வைியன்‌,
கீ சாதியும்‌ மதழும்‌

தமோ குணம்‌ பெரிதும்‌ சிறிது ரஜோ குணமும்‌


சேர்ந்திருப்பவன்‌ சூத்திரன்‌.
- சித்பவானந்தர்‌ உரை

நான்கு வர்ணங்கள்‌ கொண்ட சமூகம்‌


குணங்களையும்‌ கர்மங்களையும்‌ ஒட்டிய பிரிவுகளாக
என்னால்‌ படைக்கப்பட்டது.

ஸத்வ குணம்‌ அதிகமாக இருப்பவர்களை ப்றாமண


வர்ணத்தில்‌ பிறக்க வைக்கிறார்‌. ஸத்வ குணம்‌
கலந்த ரஜோகுணம்‌ அதிகம்‌ உள்ளவர்களை
க்ஷத்ரியராகவும்‌, தமோகுணம்‌ கலந்த ரஜோகுணம்‌
அதிகம்‌ உள்ளவர்களை வைூயர்களாகவும்‌, ரஜோ
குணம்‌ கலந்த தமோகுணம்‌ மிக்கவர்களை நான்காம்‌
வர்ணத்திலும்‌ பிறக்கு வைக்கிறார்‌. இவ்விதம்‌
பிரிக்கப்பட்ட வர்ணங்களுக்கேற்றவாறு அவர்கள்‌
ஸ்பாவத்திற்கேற்றபடி அவர்களுக்கு எது ஸாத்ய
மாகுமோ அப்படிப்பட்ட கர்மங்களையும்‌ விதிக்கிறார்‌,
அதாவது புலன்‌ அடக்கம்‌ மனஅடக்கம்‌ முதலிய
வற்றிற்குத்‌ தேவையான கர்மங்களை ப்ரா.மணா்‌
களுக்கும்‌, சூரவீரத்தனத்திற்கு ஏற்ற கர்மங்களை
கஷதீரியர்களுக்கும்‌, உழவுத்‌ தொழில்‌, பசு பராமரிப்பு
முதலிய கர்மங்களை வைசியர்களுக்கும்‌, சேவையை
நான்காம்‌ வர்ணத்தவருக்கும்‌ அமைத்துக்‌
கொடுக்கிறார்‌.
ஸ்ரீ ஐயதயால்‌ கோயங்ககா
பகவத்கதை-தத்வ விவேசனி.தமிழுரை
பசவத்ததை பதினெட்டாவது அத்தியாயம்‌ மோக்ஷ
ஸத்யாஸ யோகத்தில்‌ நான்கு வருணத்தவர்களுக்கும்‌
விதிக்கப்பட்ட கர்மங்கள்‌ கூறப்‌ பெறுன்றன.
ஊரன்‌ அடிகள்‌ 5

ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம்‌ சூத்ராணாம்‌ ௪


பரந்தப்‌ |
கார்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ ப்ரபவைர்‌
குணை:]
— 41
பரந்தப - எதிரிகளை எரிப்பவனே:*
ப்ராண்மண க்ஷத்ரிய விசாம்‌ - பிராம்மண
க்ஷத்திரிய வைசியார்களுடைய
சூத்ராணாம்‌ ௪ - சூத்திரர்களுடையவும்‌
கர்மாணி - கர்மங்கள்‌
ஸ்வபாவ ப்ரபவை:- சுபாவத்திலிருந்து பிறந்த
குணை:- குணங்களுக்கு ஏற்றவாறு
ப்ரவிபக்கானி - பிரிக்கப்பட்டிருக்கின்‌
றன,
எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண க்ஷத்திரிய
வைசிய ரசூத்திரர்களுடைய கருமங்கள்‌ அவரவர்‌
இயல்பில்‌ உதித்த குணங்களுக்கு ஏற்பப்‌ பிரிக்கப்‌
பட்டிருக்கின்‌ றன. — சித்பவானந்தர்‌ உரை

சமோ தமஸ்‌ தப: செளசம்‌ க்ஷாந்திராரீ ஐவ மேவ ௪ |


ஞானம்‌ விக்ஞான மாஸ்திக்யம்‌ ப்ரஹ்மகர்ம
ஸ்வபாவஜம்‌ ॥
— 42
௪ம - அந்தக்‌ கரணத்தை யடக்குதல்‌
தம - புறக்கரணங்களை யடக்குகல்‌
தப - தபசு
செளசம்‌ - தரய்மை
காந்தி - பொறுமை
ஆர்ஜவம்‌ - நேர்மை
* இப்படிப்பட்ட விளிகள்‌ அர்ஜானனை நோக்கி
விளித்தவை
சாதியும்‌ மதழும்‌

ஞானம்‌ - ஞானம்‌
விக்ஞானம்‌ - சுவானுபவம்‌
ஆஸ்திக்யம்‌ ஏவ௪ - ஈசுவர நம்பிக்கையும்‌
ஸ்வபாவஜம்‌ - சுபாவத்தில்‌ உண்டாகிய
ப்ரஹ்மகர்ம - பிராம்மன கர்மங்களாகின்றன.
அகக்‌ கரணங்களை யடக்குதல்‌ புறக்க ரணங்களை
யடக்குதல்‌, தவம்‌, தூய்மை, பொறுமை, நேர்மை,
சாஸ்திர ஞானம்‌, சுவானுப ஞானம்‌, ஈசுவர
நம்பிக்சை - இவை யாவும்‌ இயல்பாயுண்டாகிய
பிராம்மண கர்மங்களாம்‌.
— சித்பவானந்தர்‌ உரை
செளர்யம்‌ தேஜோ தருஇர்‌ தாக்ஷ்யம்‌ யுத்தே
சாப்யபலாயனம்‌ |
தான்‌ மீச்வர பாவஸ்ச க்ஷ£த்ரம்‌ கர்ம ஸ்‌வபாவஜம்‌ 1
— 43

செளர்யம்‌ - சூரத்தன்மை
தேஜ - துணிவு
த்ருதி - உறுதி
தாஷ்யம்‌ - சாதுர்யம்‌
யுத்தே ச அபி அபலாயனம்‌ - போரில்‌ புறகிகாட்டாமை
தானம்‌ - கொடை
ஈச்வரபாவ - இறைமையும்‌
ஸ்வபாவஜம்‌ - இயற்கையில்‌ உண்டாகிய
காத்ரம்‌ - கத்திரியருடைய
கார்ம - கர்மங்களாம்‌.
சூரத்தன்மை, துணிவு, உறுது, சாதுர்யம்‌, போரில்‌
புறங்காட்டாமை, கொடை, இறைமை ஆகியவைகள்‌
இயற்கையில்‌ உண்டாகிய க்ஷத்திரிய கர்மங்களாம்‌,
ஊரன்‌ அடிகள்‌ 7

கீருஷி கோரகஷ்ய வாணிஜ்யம்‌ வைசீயகரீம ஸ்வபாவஜம்‌ |


பரிசர்யாத்மகம்‌ கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்‌) — 44
க்ருஷி கோரக்ஷ்ய வாணிஜழ்யம்‌
- உழவு, பசுக்காத்தல்‌,
வாத்தகம்‌
ஸ்வபாவஜம்‌ - இயல்பாலுண்டாகிய -
வைச்யகாம - வைசிய கர்மங்களாம்‌
, சூதீரஸ்ய அபி - சூதிதிரனுடையவும்‌
ஸ்வபாவஜம்‌ - இயற்கையில்‌ உண்டான
STW - சார்மமானது
uletu ஆத்மகம்‌ - குற்றேவல்‌ வடிவெடுத்துள்ளது.

உழவும்‌, கால்நடை காத்தலும்‌, வாணிகமும்‌


இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்களாம்‌, இட்ட
பணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாயுண்டான
கருமம்‌. -- இித்பவானந்தர்‌ உரை.

ொல்காப்பியத்தில்‌ சாதி
தமிழில்‌ தொல்காப்பியம்‌ சிறப்பு, தொல்காப்பியத்தில்‌
பொருளதிகாரம்‌ இறப்பு. எழுத்து, சொல்‌, பொருள்‌
ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொல்காப்பியம்‌,
எழுத்ததிகாரம்‌ எழுத்திலக்கணத்தைக்‌ கூறுவது, சொல்லதி
காரம்‌ சொல்லிலக்கணத்தைக்‌ கூறுவது. பொருளதிகாரம்‌
வாழ்விலக்கணத்தைக்‌ கூறுவது, யாப்பிலக்கணமும்‌ ௮ணி
இலக்கணமும்‌ பொருளதிகாரத்தில்‌ அடங்கும்‌.

பொருளதிகாரத்தில்‌ சில இடங்களில்‌ சாதியைப்‌


பற்றிய செய்திகள்‌ உள்ளன. குறிப்பாக மரபியலில்‌ 71
முதல்‌ 85 முடியப்‌ 15 சூத்திரங்கள்‌. புறத்திணை இயலில்‌
16ஆவது சூத்திரம்‌. இவற்றுள்‌ முக்கியமான சிலவற்றைக்‌
காண்போம்‌.
8 சாதியும்‌ மதமும்‌

நாலே, கரகம்‌, முக்கோல்‌, மணையே


ஆயும்‌ காலை அந்தணர்க்கு உரிய.
- தொல்‌, பொருள்‌, மரபு - 71
படையும்‌, கொடியும்‌, குடையும்‌, முரசும்‌
நடை நவில்‌ புரவியும்‌, களிறும்‌, தேரும்‌,
தாரும்‌ முடியும்‌, நேர்வன பிறவும்‌
தெரிவு கொள்‌ செங்கோல்‌ அரசர்க்கு உரிய. - 72
வைசிகன்‌ பெறுமே வாணிக வாழ்க்கை - 78
வேளாண்‌ மாந்தர்க்கு உழுதாண்‌ அல்லது
இல்‌ என மொழிப - பிறவகை நிகழ்ச்சி. ~ 81
என்னும்‌ நான்கு சூத்திரங்களும்‌ அந்தணர்‌, அரசர்‌,
வணிகர்‌, வேளாளர்‌ ஆகிய நான்கு சாஇக்குரிய தொழில்‌
களைக்‌ கூறுகின்றன.
“நாலே கரகம முக்கோல்‌ மணையே ஆயுங்காலை
அத்தணர்க்குரிய£ என்னும்‌ சூத்திரம்‌ அந்தணருக்குரிய
அடையாளங்களைக்‌ கூறுவதாகும்‌.

நூலே - genre
கரகம்‌ - குண்டிகை (கமண்டலம்‌)
மூக்கோல்‌ - இரிதண்டம்‌ (தண்டு)
மணை * இருக்கை (ஆசனப்‌ பலகை)
ELST SYD தண்டு கமண்டலங்களும்‌ ஆசனப்பலகையும்‌
அந்தணர்க்குரியனவாம்‌. மணை என்பதற்கு *(யரமை
மாணை” என்று உரை கூறுவார்‌. பேராரிரியர்‌. யரமை
மணை - ஆமை வடிவ ஆசனம்‌, கூர்மா
சனம்‌. நூல்களில்‌
கோல்‌ முக்கோலாகவே (திரிதண்டமாகவே) கூறப்‌
Qu QA et mG goof any th, வைணவ அந்தணத்‌ துறவிகள்‌
முக்கோல்‌ ஏந்துவா்‌ (மூச்கோற்பகவா்‌), சைவ அற்குணத்‌
ஊரன்‌ அடிகள்‌ 9

துறவிகளும்‌ மாத்வ அந்தணத்‌ துறவிகளும்‌ ஒரு கோலே


(௪க தண்டமே) ஏந்துவர்‌ என்பதும்‌ ஈண்டறியத்தக்கது,
சங்கர மடத்தார்‌ மத்வ மடத்தார்‌ ஏகதண்டமும்‌,
ஜீயரீகள்‌ தரிதண்டமும்‌ தாங்கியிருப்பர்‌,

("உறித்தாழ்ந்த சகரகமும்‌ உரை சான்ற முக்கோலும்‌''


என்னும்‌ கலித்தொகையும்‌ (9), “தண்டொடு பிடித்த
தாழ்‌ சமண்டலத்து ப்‌ படிவ உண்டிப்‌ பார்ப்பன மகனே”?
என்னும்‌ குறுந்தொகையும்‌ (156) பேராசிரியரால்‌ உதாரண
மாக எடுத்துக்‌ சாட்டப்‌ பெற்றன.

படையும்‌ கொடியும்‌ குடையும்‌ முரசும்‌ குதிரையும்‌


யானையும்‌ தேரும்‌ மாலையும்‌ முடியும்‌ இவை போன்று
பொருந்தும்‌ பிறவும்‌ செங்கோல்‌ அரசர்க்குரியன என்பது
72-ஆம்‌ சூத்திரப்‌ பொருள்‌.

வைசிகன்‌ பெறுமே வாணிக வாழ்க்கை!” (78)


என்பது வணிக வாழ்வு வைசியர்க்கு உரியது என்பதாம்‌.

வேளாளர்க்கு வேளாண்மை தவிர வேறொன்றும்‌


இல்லை என்று கூறுவது 81-ஆம்‌ சூத்திரம்‌,

அறுவகைப்பட்ட பார்ப்பணப்‌ பக்கமும்‌


ஐவகை மரபின்‌ அரசர்‌ பக்கமும்‌
இரு மூன்று மரபின்‌ ஏனோர்‌ பக்கமும்‌
மறு இல்‌ செய்தி மூவகைக்‌ காலமும்‌
நெறியின்‌ ஆற்றிய அறிவன்‌ தேயமும்‌
நால்‌இரு வழக்கின்‌ தாபதப்‌ பக்கமும்‌
பால்‌அறி மரபின்‌ பொருநர்‌ சண்ணும்‌
அனைநிலை வகசையொடு ஆங்கு ஏழு வகையான்‌
தொசைநிலை பெற்றது என்மனார்‌ பூலவர்‌
10 சாதியும்‌ மதழும்‌

என்பது தொல்காப்பியம்‌ பொருளதிகாரம்‌ புறத்திணையியல்‌


16 ஆவது சூத்திரம்‌. இதன்‌ முதல்‌ மூன்றடிகளில்‌
அந்தணர்‌ (பார்ப்பணர்‌), அரசர்‌, ஏனோர்‌ (வணிகர்‌
வேளாளராகய மற்றை இருவர்‌) பக்கமும்‌ குறிக்கப்‌
பெறுகின்றன.
அறுவசைப்பட்ட பார்ப்பனப்‌ பக்கம்‌:
1. ஓதல்‌, 2 ஓதுவித்தல்‌, 3, வேட்டல்‌, 4, வேட்‌
பித்தல்‌, 5. ஈதல்‌, 6, ஏற்றல்‌.

ஐவகை மரபின்‌ அரசர்‌ பக்கம்‌:


1. ஓதல்‌, 2. வேட்டல்‌, 3. எதல்‌, 4, சாத்தல்‌,
3. தண்டஞ்செய்தல்‌,

இருமூன்று (23) மரபின்‌ ஏனோர்‌ பக்கம்‌:


வணிகர்க்குசிய 6 ude:
1. ஓதல்‌, 2, வேட்டல்‌, 3. ஈதல்‌, 4, உழவு,
5... நிரையோம்பல்‌, (ஆநிரை ஓம்பல்‌ - பசக்காததல்‌)
6. வாணிகம்‌
வேளாளர்க்குரிய 6 பக்கம்‌:
1. வேதம்‌ ஒழிந்த ஒதல்‌, 2. ஈதல்‌, 3, உழவு,
4. நிரையோம்பல்‌, 5. வாணிகம்‌, 6. வழிபாடு -
என்பார்‌ நச்சினார்க்கினியர்‌. இளம்பூரணர்‌ நிரை
யோம்பலைப்‌ பகடு புறந்தருதல்‌ என்பார்‌.
வாணிகத்தைத்‌ தவிர்த்து விருந்தோம்பலைக்‌
கூறுவார்‌.

திவாகரம்‌ பிங்கலம்‌ முதலிய நிகண்டுகளிலும்‌ நான்கு


சாதியாருக்கும்‌ ஆறுஆறு தொழில்களே கூறப்பெற்றன.
எனினும்‌ ஓவ்வொரு சாதிக்கும்‌ ஒவ்வொரு தொழிலே
முூதன்மையானதாகும்‌, சிறப்புத்‌ தொழிலாகும்‌.
ஊரன்‌ அடிகள்‌ 11

அந்தணார்க்குக்‌ கல்வி
அரசர்க்குக்‌ காவல்‌
வணிகர்க்கு வணிகம்‌
வேளாளர்க்கு வேளாண்மை.
ஈூவதியா்க்கு அழகு வேதமும்‌ ஒழுக்கமும்‌
மன்னர்க்கு அழகு செங்கோல்‌ முறைமை
வைசியர்க்கு அழகு வளர்பொருள்‌ ஈட்டல்‌
உழவர்க்கு அழகு இங்கு உழுதூண்‌ விரும்பல்‌””.
என்னும்‌ அதிலீரராமபாண்டியர்‌ வெற்றிவேற்கை ஈண்டு
நினையத்தக்கது.

சங்க இலக்கியங்களில்‌ சாதி


2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம்‌ வைத்துத்‌ தமிழ்‌
வளர்த்தது தமிழ்நாடு. தலைச்சங்கம்‌ இடைச்சங்கம்‌ கடைச்‌
சங்கம்‌ என மூன்று தமிழ்ச்சங்கங்கள்‌ இருந்தன. அகி
காலத்தைச்‌ சங்ககாலம்‌ என்கிறோம்‌. அக்காலத்து நூல்‌
களைச்‌ சங்கநூல்கள்‌, சங்க இலக்கியங்கள்‌, என்கிறோம்‌.

சங்க நூல்கள்‌ பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனப்‌


பதினெட்டு. பாட்டும்‌ தொகையும்‌ என இவை கூறப்‌
பெறும்‌. பாட்டை முன்வைத்துத்‌ தொகையைப்‌ பின்‌
வைதீதுக்‌ கூறுவதே மூறை,
பத்துப்பாட்டு
நூல்‌ பாடினோர்‌
1. திருமுருகாற்றுப்படை - மதுரைக்‌ கணக்காயனார்‌
மகனார்‌ நக்ரேனார்‌
2, பொருநராற்றுப்படை - முடத்தாமக்‌ சண்ணியார்‌
3, சறுபாணாற்றுப்படை - இடைக்கழிதாட்டு
நல்லூர்‌ தத்தத்தனார்‌
12 சாதியும்‌ மதழும்‌

4. பெரும்பாணாற்றுப்‌
படை - கடியலூர்‌ உருத்திரங்‌
கண்ணனார்‌
5. முல்லைப்பாட்டு - காவிரிப்பூம்பட்டினத்துப்‌
பொன்வாணிகனார்‌
மகனார்‌ நப்பூதனார்‌
6. மதுரைக்‌ காஞ்ச - மாங்குடி மருதனார்‌
7. தெடுநல்வாடை - மதுரைச்‌ கணக்காயனார்‌
மகனார்‌ நக்கீரனார்‌
8. குறிஞ்சிப்பாட்டு “ கபிலர்‌
9. பட்டினப்பாலை - கடியலூர்‌ உருத்திரங்‌
கண்ணனார்‌
10. மலைபடுகடாம்‌ - இரணியமுட்டத்துப்‌
பெருங்குன்றார்ப்‌ பெருங்‌
கெளசிகனார்‌
இவை பத்தும்‌ தனித்தனி நீண்ட பாடல்கள்‌, தனித்தனி
நூல்கள்‌,

எட்டுத்தொகை
1. நற்றிணை
குறுந்தொகை
ed

ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
aAS

பரிபாடல்‌
சலித்தொகை
PAN

அகநானூறு
YOST Or oi
இவை எட்டும்‌ தொகை நூல்கள்‌. புலவர்‌ பலர்‌ பாடிய
தனிப்‌ பாடல்கள்‌ பலவற்றால்‌ தொகுக்கப்பெற்ற
நூல்கள்‌,
ஊரன்‌ அடிகள்‌ 13

சங்க நரல்களாகிய இப்பதினெட்டின்‌ காலத்திற்குப்‌


பின்‌ தோன்றிய பதினெட்டு நூல்கள்‌ **பதினெண்‌ €ழ்க்‌
கணக்கு” என ஒரு தொகுதியாக வழங்குகின்றன. இவை
சங்க மருவிய நூல்கள்‌ எனப்பெறும்‌. பதினெண்‌ &ழ்ச்‌
சணக்கு நூல்களில்‌ இருக்குறளும்‌ ஒன்று; நாலடியாரும்‌
ஒன்று. சங்க மருவிய நூல்களுக்குப்பின்‌ தோன்றியவை
ஐம்பெருங்காப்பியங்கள்‌ 1. சிலப்பதிகாரம்‌, 2, மணிமேகலை,
3, சவசூந்தாமணி, 4. வளையாபதி, 5. குண்டலகேசி.
சங்க நால்களில்‌ சாதியைப்‌ பற்றிய குறிப்புகள்‌ பல
உண்டு. காப்பியங்களில்‌ சமயத்தைப்‌ பற்றிய செய்திகள்‌
மிகுதியாக உண்டு,
புறநானூற்றுச்‌ செய்யுளொன்றில்‌ சாதிகள்‌ நான்கு
என்பது கூறப்பெற்றுள்ளது.
உற்றுழி உதவியும்‌ உறு பொருள்‌ கொடுத்தும்‌
பிற்றை நிலை முனியாது கற்றல்‌ நன்றே
பிறப்பு ஒர்‌ அன்ன உடன்வயிற்றுள்ளும்‌
சிறப்பின்‌ பாலால்‌, தாயும்‌ மனம்‌ திரியும்‌
ஒரு குடிப்‌ பிறந்த பல்லோருள்ளும்‌
மூத்தோன்‌ வருக என்னாது அவருள்‌
அறிவுடையோன்‌ ஆறு அரசும்‌ செல்லும்‌
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்‌
கீழ்ப்பால்‌ ஒருவன்‌ கற்பின்‌
மேற்பால்‌ ஒருவனும்‌ அவன்கண்‌ படுமே -புறம்‌ 183
என்பதுபுறநானூறு 183 ஆம்‌ செய்யுள்‌. கல்வியின்‌ சிறப்பைக்‌
கூறும்‌ இப்பாட்டு பாண்டியன்‌ ஆரியப்படை. கடந்த நெடுஞ்‌
செழியன்‌ என்ற மன்னன்‌ பாடியது. இதனுள்‌ *'வேற்றுமை
தெரிந்த ஈரற்பாலுள்ளும்‌'*? என்பதில்‌ '₹நாற்பால்‌*? நான்கு
சாஇகளையே குறிப்பது. ''வேற்றுமை தெரிந்த!” என்று
14 சாதியும்‌ மதழும்‌

சொல்லப்பட்டிருப்பதால்‌ நான்கு சாதிக்குள்ளும்‌ ஒன்றுக்‌


கொன்று வேற்றுமை இருந்தது என்பது தெரியவரும்‌.
என்ன வேற்றுமை? “8p? “Cod” cram Game.
அது அடுத்த அடியிலேயே கூறப்பெறுகறது. *'கீழ்ப்பால்‌
ஒருவன்‌'? **மேற்பால்‌ ஒருவன்‌*' என்றதைக்‌ காண்ச.
வேற்றுமை தெரிந்த நாற்பாலரும்‌, பால்வேறு தெரிந்த
நால்வேறு தெருக்களில்‌ வாழ்ந்தனர்‌. !*பால்வேறு தெரிந்த
நால்வேறு தெருவும்‌”? என்று சிலப்பதிகாரம்‌ இரண்டு
இடங்களில்‌ கூறுகிறது. (14. சகர்ிகாண்‌ காதை 212.
22 அழற்படுகாதை-110) “குலம்‌ நான்காகப்பகுத்த வகை
யால்‌ தெரிந்த அந்தணர்‌ அரசரீ வணிகர்‌ வேளாளரெனச்‌
சொல்லப்பட்டார்‌. இருக்கும்‌ நான்காய்‌ வேறுபட்ட
தெருக்களும்‌?” என்பது அடியார்க்குநல்லார்‌ உரை.
(center cir aren 5)

நான்கு வருணத்தாரும்‌ தனித்தனியாக நான்கு


வெவ்வேறு தெருக்களில்‌ வாழ்ந்தனர்‌. அந்தணர்‌ தெரு,
அறசரி தெறு, வணிகர்‌ தெரு, வேளாளர்‌ தெரு,

சிலப்பதிகார காலத்துக்‌ காவிரிப்பூம்பட்டினம்‌ (புகார்‌


பூம்புகார்‌) மருவூர்ப்பாக்கம்‌ பட்டினப்பாக்கம்‌ என இரு
பிரிவாக இருந்தது. குடியிருப்பு வீதிகள்‌ இருந்தன. கடை.
வீதிகள்‌ இருந்தன, நாளங்காடி, அல்லங்காடி என இரு
கடைவீதிகள்‌ இருந்தன, அங்காடி-கடை. நாளங்காடி.
(நாள்‌--அங்காடி-பகற்கடை அல்லங்காடி (அல்‌-ட அங்காடி)-
இரவுக்கடை அறுவைவீதி கூலவீதி எனத்‌ தனிக்‌ கடைவீதி
களும்‌ இருந்தன. அறுவை வீதி - துணிக்கடைவீதி கூல
வீதி - பரசரக்குக்‌ கடை வீதி. வெள்ளிடைமன்றம்‌, இலஞ்ச
மன்றம்‌, நெடுங்கல்‌ மன்றம்‌, பாவை மன்றம்‌ என மன்றங்கள்‌
இருந்தன. ஆங்காங்கே சதுக்சங்கள்‌ இருந்தன, ஒரு
எள்ரன்‌ அடிகள்‌ 45

சதுக்கத்தில்‌ பூதம்‌ ஒன்று இருந்தது. அதற்குச்‌ சதுச்சபூதம்‌


என்றே பெயர்‌. அச்சதுக்கத்துக்கும்‌ பூதசதுக்கம்‌ என்றே
பெயர்‌. நாளங்காடியில்‌ ஒரு பூதம்‌ இருந்தது. அதற்கு
நாளங்காடிப்‌ பூதம என்று பெயர்‌. இவைதவிர வேறு
பூதங்களும்‌ இருந்தன. நான்கு வருணத்திற்கும்‌ நான்கு
பூதங்கள்‌ இருந்தன. '*மாயோன்‌ பாணியும்‌, வருணப்பூதர்‌
நால்வகைப்‌ பாணியும்‌ நலம்பெறு கொள்கை வானூர்‌
மதியமும்‌ பாடி”? என்பது சிலப்பதிகாரம்‌, 6 கடலாடு
கரதை, அடி 35-37, வருணப்பூதர்‌ நால்வசைப்‌ பாணியும்‌
என்பதற்கு, *வருணப்பூதர்‌ நால்வரையும்‌ பரவும்‌
நால்வகசைத்‌ தேவபாணியும்‌'* என்று அடியார்க்கு நல்லார்‌
உரையெழுதுகறார்‌,
அந்தணர்‌ வேள்வியோடு அருமறை முற்றுக
வேந்தன்‌ வேள்வியோடு யாண்டு பல வாழ்க
வாணிகர்‌ இருநெறி நீள்றிதி தழைக்க
பதினெண்‌ கூலமும்‌ உழவர்க்கு மிகுக

என்று மதிவாணனார்‌ பாடலையும்‌ எடுத்துக்‌ காட்டுகிறார்‌.

காவிரிப்பூம்பட்டினத்தில்‌ இருந்தது போன்று மதுரை


மாநகரிலும்‌ அந்தணபூதம்‌ அரசபூதம்‌ வணிகபூதம்‌ வேளாண்‌
பூதம்‌ என நான்கு பூதங்கள்‌ நகரின்‌ நான்கு வாயிலிலும்‌
காவற்‌ பூதங்களாக இருந்தன அந்தண பூதத்தின்‌ நிறம்‌
வெள்ளை அரச பூதத்தின்‌ நிறம்‌ பவளம்‌, வணிகபூதத்தின்‌
நிறம்‌ பொன்‌. வேளாண்‌ பூதத்தின்‌ நிறம்‌ நீலம்‌. இந்தான்கு
பூதத்தைப்‌ பற்றிய செய்திகளும்‌ வருணனையும்‌ அழற்படு
காதையில்‌ விரிவாகப்‌ பல அடிசளாற்‌ கூறுப்பெறுகின்றன.
கண்ணகியின்‌ வெஞ்சினத்தால்‌ மதுரை மாநசரம்‌ இப்பற்றி
16 சாதியும்‌ மதழும்‌

எரிந்தபோது இந்நான்கு வருணப்பூதங்களும்‌ நகரைவிட்டு


நீங்கின என்பது அழற்படு காதையில்‌ கூறப்பெறுகிறது.
பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு
வருணங்கள்‌ அல்லது அதையே அந்தணர்‌ அரசர்‌ வணிகர்‌
வேளாளர்‌ என்று தமிழிற்கூறும்‌ நான்கு சாதிகள்‌ பொது
வாக இந்திய நாடு முழுவதிலும்‌ பரவியிருந் தவை,
இப்போதும்‌ உள்ளவை. இவைதவிர வேறு பல சாதிகளும்‌
(சாதிப்‌ பெயர்களும்‌) பழந்தமிழ்‌ நால்களில்‌ அதாவது
தொல்காப்பியம்‌ சங்க இலக்கியங்கள்‌ முதலியவற்றிற்‌
காணப்பெறுகின்றன. அவை அந்நாளில்‌ தமிழகத்தில்‌
நிலவிய நிலப்பிரிவுகள்‌ தொழிற்பிரிவுகள்‌ அடிப்படையில்‌
அமைந்தவை.

பழங்காலத்தில்‌ தமிழகத்தின்‌ நிலப்பரப்பு முல்லை


குறிஞ்சி மருதம்‌ நெய்தல்‌ என நான்காகப்‌ பிரிக்கப்பட்டி
ருந்தது. **நானிலம்‌'' என்ற பெயர்‌ வழக்கே இதனாற்றான்‌
ஏற்பட்டது. நானிலம்‌ - நால்வகை நிலம்‌. இப்பிரிவு
இயற்கையமைப்பை ஒட்டி இயல்பாகப்‌ பிரிக்கப்பெற்ற பிரிவு,
காடுகளும்‌ காடுசார்ந்த இடங்களும்‌ - முல்லை நிலம்‌
மலைகளும்‌ மலைசார்ந்த இடங்களும்‌ - குறிஞ்சி நிலம்‌
வயல்களும்‌ வயல்‌ சார்ந்த இடங்களும்‌ - மருத(ம்‌) நிலம்‌
கடற்கரையும்‌ கடலோர இடங்களும்‌ - நெய்தல்‌ நிலம்‌
இவற்றைக்‌ காட்டுப்பகுதி (வனப்பகுதி 110861 ௧௭௦௨9),
மலைப்பகுதி (11117 8௧7௦௧௨), சமவெளிப்‌ பகுதி (118115),
கடற்கரைப்‌ பகுதி (56881106 areas) எனலாம்‌. இப்படிப்‌
பார்த்தால்‌ இன்றைய சென்னை செங்கற்பட்டு மாவட்டப்‌
பகுதிகள்‌ நெய்தல்‌ நிலம்‌, வடஆரிக்காடு (வேலூர்‌-
திருவண்ணாமலை) மாவட்டப்‌ பகுதிகள்‌ முல்லை நிலம்‌,
சேலம்‌, கோயம்புத்தூர்‌, தருமபுரி மாவட்டப்‌ பகுதிகள்‌
ஊரன்‌ அடிகள்‌ 17

குறிஞ்சி நிலம்‌, இருச்ரொப்பள்ளி தஞ்சாவூர்‌ மாவட்டப்‌


பகுதிகள்‌ மருதநிலம்‌.
தமிழ்நாட்டில்‌ பாலைவனம்‌ இல்லை பழந்.தமிழ்நாட்டு
நிலப்‌.பிரிவில்‌ 'பாலை”? என்றொரு பிரிவு இல்லை,
ஈபாலை” என்றொரு பிரிவு பின்னாளில்‌ சேர்க்கப்பெற்றது.
முல்லையும்‌ குறிஞ்சியும்‌ முறைமையில்‌ திரிந்து
நல்லியல்‌ பிழந்து நடுங்குதுயா்‌ கறுத்துப்‌
பாலை என்பதோர்‌ படி.வங்‌ கொள்ளும்‌”?
என்பது சிலப்பதிகாரம்‌ காடுகாண்காதை அடி 64-67.

நீர்வளமும்‌ நிலவளமும்‌ மிக்க தமிழ்நாடு, மருதவளம்‌


மிக்க தமிழ்நாடு, கழளிநாட ாம்‌ தமிழ்நாட ு, காவிரிநா டாம்‌
குமிழ்நாடு. இக்காலத்தில்‌ காவிரிறீர்ப்‌ பீரச்சனையால்‌
பாலையாகி வருகிறது “*வான்பொய்ப்பினும்‌ தான்‌

பொய்யா மலைத்தலைய கடற்காவிரி”?! மலையிலிருந்து


வருகிறது; ஆனால்‌ கடலுக்கு வந்து சேரவில்லை **கடல்‌
வயிறு நிறையாத காவிரி??? **“கடற்கரை மெலிக்குங்‌
கடலோடு கலக்கவில்லை; கடற்கரையை எட்டிப்‌
தாவிரி'8
பாரிக்கவும்‌ இல்லை. தமிழரின்‌, தமிழ்நாட்டு அரசின்‌
கையாலாகாத்தனம்‌.

பழந்தமிழர்‌ வாழ்வு இயற்கையோடியைந்த இன்ப


வாழ்வு. பழந்தமிழர்‌ நிலத்திற்கே முதன்மை தந்தனரி,
தொல்காப்பியத்தின்‌ பொருளதிகாரம்‌ உண்மையிலேயே

பொருளுள்ளது; பொருள்‌ பொதிந்தது. அர்த்தமுள்ள


இந்துமதம்‌ என்கிறோமே அது போன்று அர்த்தமுள்ள
தொல்காப்பியம்‌ எனலாம்‌. பொருளுள்ள தொளல்காப்பி

1 பட்டினப்பாலை 5-6

3 இலப்பதிகாரம்‌,_ கடலாடு காதை 163


18 சாதியும்‌ மதழும்‌

யதிை இன்றைய தமிழர்கள்‌ போதுமான அளவு பொருட்‌


படுத்துவதில்லை, அனுபவிப்பதில்லை.
தொல்காப்பியப்‌ பொருளதிகாரம்‌ உலகத்துப்‌ பொருள்‌
களை முதற்பொருள்‌ உரிப்பொருள்‌ கருப்பொருள்‌ என
மூவகையாகப்‌ பிரிக்கிறது. முதல்‌, உரி, கரு என்பது
தமிழிலக்கண முப்பொருள்‌. பதி பசு பாசம்‌ என்ற தமிழ்த்‌
தத்துவ முப்பொருளைப்‌ போல. ததீதுவ முப்பொருளை
அறிந்துள்ள அளவுக்குக்கூட. இலக்கண முப்பொருளைத்‌
திமிழரி அறியவில்லையே என்பதை எண்ணும்போது குட்டிச்‌
சுவரிற்‌ போய்‌ முட்டிக்‌ கொள்ளலாம்‌ போலிருக்கிறது.

இனி முதல்‌, உரி, கருப்பொருள்கள்‌ இன்னின்ன


வென்பதைக்‌ காண்போம்‌. ்‌
நிலமும்‌ பொழுதும்‌ - முதற்பொருள்‌
புணர்தல்‌, பிரிதல்‌, இருத்தல்‌, இரங்கல்‌, ஊடல்‌ ஆகிய
ஐந்தும்‌ ஐந்திணைக்குரிய உரிப்பொருள்‌,
தெய்வம்‌, உணவு, விலங்கு, மரம்‌, பறவை, பறை,
செய்தி (தொழில்‌) யாழ்‌ முதலியன கருப்பொருள்‌,

இவற்றிற்குசி சூத்திரம்‌:-
முதல்‌, ௧௬, உரிப்பொருள்‌ என்ற மூன்றே
நுவலுங்‌ காலை முறை சிழந்தனவே
பாடலுட்‌ பயின்றவை தநாடுங்‌ காலை.
- தொல்‌, பொருள்‌, அகத்திணை இயல்‌ 3
மூதல்‌ எனப்படுவது நிலம்‌ பொழுது இரண்டின்‌
இயல்பெனமொழிப இயல்புணர்ந்தோரே.
-4
புணர்தல்‌, பிரிதல்‌, இருத்தல்‌, இரங்கல்‌
கடல்‌ அவற்றின்‌ நிமித்தம்‌ என்றிவை
தேருங்காலை இணைக்கு உரிப்பொருளே. - 16
ஊரன்‌ அடிகள்‌ 19

தெய்வம்‌, உணாவே, மா, மரம்‌, புள்‌, பறை


செய்தி யாழின்‌ பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும்‌ கருஎன மொழிப - 20
நிலப்பிரிவிற்குச்‌ சூத்திரம்‌:-
மாயோன்‌ மேய காடுறை உலகமும்‌
சேயோன்‌ மேய மைவரை உலகமும்‌
வேந்தன்‌ மேய தீம்புனல்‌ உலகமும்‌
வருணன்‌ மேய பெருமணல்‌ உலகமும்‌
மூல்லை, குறிஞ்சி, மருதம்‌, நெய்தல்‌, எனச்‌
சொல்விய முறையான்‌ சொல்லவும்‌ படுமே -5

மாயோன்‌ - திருமால்‌
சேயோன்‌ - முருகன்‌
வேந்தன்‌ - இந்திரன்‌
வருணன்‌ - வருணன்‌ என்னும்‌ கடல்‌ தெய்வம்‌
மாயோன்‌ மேய சாடுறை உலசம்‌ என்பது முல்லை நிலம்‌
சேயோன்‌ மேய மைவரை உலகம்‌ என்பது குறிஞ் நிலம்‌
வேந்தன்‌ மேய இம்புனல்‌ உலகம்‌ என்பது மருத நிலம்‌
வருணன்‌ மேய பெருமணல்‌ உலகம்‌ என்பது
தெய்தல்‌ நிலம்‌
முல்லைக்குத்‌ தெய்வம்‌ திருமால்‌
குறிஞ்சிக்குத்‌ தெய்வம்‌ முருகன்‌. (குறிஞ்சிக்கிழவன்‌)
மருதத்திற்குத்‌ தெய்வம்‌ இந்திரன்‌
நெய்தலுக்குத்‌ தெய்வம்‌ வருணன்‌,

நிலத்தை உலகம்‌ என்று தொல்காப்பியர்‌ கூறியிருப்பது


அழகும்‌ அருமையும்‌ உடையது. *:உலகென்னும்‌ சொல்‌
மண்ணுலக முழுதுமேயன்றித்‌ தண்கட்‌ கூறுபட்ட நிலங்‌
களையும்‌ உணர்த்துமென்பது “மாயோன்‌ மேய காடுறை
யுலகமும்‌' என்னும்‌ சூத்திரத்தான்‌ உணர்க'* என்று
நச்சினார்கினியர்‌ உரை கூறுவர்‌ (சித்தாமணி, முத்தியிலம்‌
20 சாதியும்‌ மதமும்‌

பசும்‌, 8, உரை). இக்காலத்திலும்‌ நாம்‌ பத்திரிகை உலகம்‌,


திரைஉலகம்‌, அரசியல்‌ உலகம்‌, இலக்கிய உலகம்‌, சமய
உலகம்‌, சன்மார்க்க உலகம்‌ என்று ௮து அதனை அந்தந்த
உலகம்‌ எனக்‌ கூறுவது வழச்கத்திலுள்ளதே! ஒருவாறு
அது போல என்க.

மாயோன்‌ மேய காடுறை உலகமும்‌ என்னும்‌ மேற்‌


சூத்திரத்திற்கு நச்னொர்க்கினியார்‌ வரையும்‌ உரை இனிமை
மிக்கது.

**சடல்‌ வண்ணன்‌ காதலித்த காடுறையுலகமும்‌


செங்கேம்‌ முருகன்‌ காதலித்த வான்‌ தங்கிய
வரை சூழுலகமும்‌
இந்திரன்‌ காதலித்த தண்புன வாடும்‌
கருங்‌ கடற்‌ சுடவுள்‌ காதலித்த செங்கோட்டு
எக்கர்‌ Blades tb’?
என்று நயம்பட எழுதுகிறார்‌. காதலித்த என்பதைக்‌
கவனிக்க. நிலமக்கள்‌ தெய்வத்தைக்‌ காதலிப்பதற்கு
முன்பே, தெய்வம்‌ நிலத்தைக்‌ காதலிக்கிறது.

சங்க நூல்கள்‌ பெரும்பாலனவற்றைப்‌ பதிப்பித்த


உபகாரி டாக்டர்‌. ௨. வே. சாமிநாதையர்‌ என்றால்‌, சங்க
நூல்கள்‌ பெரும்பாலனவற்றிற்கு உரையெழுதிய உபகாரி
நச்னொர்க்கினியர்‌.. தொல்காப்பியத்திற்கும்‌ பத்துப்‌
பாட்டு முழுவதற்கும்‌ (அதாவது பத்துப்பாட்டு நால்கள்‌
பத்திற்குமே), எட்டுத்தொகையில்‌ கலித்தொகைக்கும்‌,
குறுந்தொகையில்‌ இருபது செய்யுள்களுக்கும்‌, ஐம்பெருங்‌
காப்பியங்களில்‌ சீவகசித்தாமணிக்கும்‌ நச்சினார்க்கினியா
உரையெழுதினார்‌. இவர்‌ மதுரைவாழ்‌ அந்தணர்‌.
பாரத்துவாச கோத்திரத்தினர்‌. பாரத்துவாசி நச்சனார்க்‌
இனியராீ என வழங்கப்பெறுபவர்‌. “*உச்மேற்‌ புலவரீக
ொள்
ஊரன்‌ அடிகள்‌ 21

நச்சினார்க்கினியர்‌'” என்றும்‌, நச்னார்க்கனியன்‌ எச்சில்‌


நறுந்தமிழ்‌ நுகர்வர்‌ நல்லோர்‌!” என்றும்‌ புவவருலகற்‌
கொண்டாடப்‌ பெறுபவர்‌.
நிலம்‌ பொழுது ஆகிய முதற்பொருள்‌ இரண்டில்‌
நிலத்தை இதுகாறும்‌ ஒருவாறு சுருங்கக்‌ கண்டோம்‌. இனி
அவ்வாறே பொழுதைக்‌ சாண்போம்‌. பொழுது என்பது
காலம்‌, காலக்கணக்கில்‌ பண்டைத்‌ தமிழ்ப்‌ புலவர்கள்‌
சிறந்து விளங்கினர்‌. ஓர்‌ ஆண்டை ஆறு. பருவங்களாகப்‌
பிரித்துப்‌ பெரும்பொழுது ஆறு என்றும்‌, ஒரு நாளை ஆறு
கூறாகப்‌ பிரித்துச்‌ சிறுபொழுது ஆறு என்றும்‌ வழங்கினர்‌.

பெரும்பொழுது -6
சித்திரை, வைகாசி - இளவேனிற்‌ காலம்‌
(வசந்த ௬து)
ஆனி, ஆடி - முூதுவேனிற்‌ காலம்‌
(இிரீஷ்ம ரத)
ஆவணி, புரட்டாசி - கார்காலம்‌-மழைகாலம்‌
(array @ $1)
ஐப்பசி, கார்த்திகை - கூதிர்‌ காலம்‌-குளிர்‌ காலம்‌
(சரதி ரது)
மார்கழி, நை - மூன்பனிக்காலம்‌
(ஹேமந்த ருது)
மாச, பங்குனி - பின்பனிக்காலம்‌ (சர ரது)

ஐரோப்பிய நாடுகளில்‌ இளவேனில்‌ (ஸ்பிரிங்‌-5ற11பஐ),


wgiGasle (sbui - Summer), இலை உதிர்காலம்‌
(gye-rib-Autumn), குளிர்காலம்‌ (விண்ட்டர்‌- 1௦0) என
சான்கு பருவங்களே வழங்குகின்றன.
நம்முடைய பெரும்பொழுதுப்‌ பிரிவினையில்‌,
மூன்பனிக்காலத்தில்‌ இரவு முன்னேரத்தில்‌ பனி பெய்யும்‌,
22 சாதியும்‌ மதமும்‌

பின்பனிக்காலத்தில்‌ இரவு பின்னேரதீதில்‌ வைகறையில்‌


விடியற்காலையில்‌ பணி பெய்யும்‌. இவற்னறையெல்லாம்‌
நுண்ணிதின்‌ (நுட்பமாக) உணர்ந்து காலக்கணக்சை
வகுத்துள்ளனர்‌ நம்‌ முன்னோர்‌.

சிறுபொழுது-6
மாலை - இராப்பொழுதின்‌ முற்கூறு
யாமம்‌ * இராப்பொழுதின்‌ நடுக்கூறு
வைகறை - இராப்பொழுதின்‌ பிற்கூறு
விடியல்‌ - பகற்பொழுதின்‌ முற்கூறு
நண்பகல்‌ - பகற்பொழுதின்‌ நடுக்கூறு
எற்பாடு - பகற்பொழுதின்‌ பிற்கூறு
இவ்வாறு ஒரு நாளை ஆறு கூறாக்ச்‌ சிறுபொழுது
வகுத்தனர்‌,

**ஒரு நாளினைப்‌ படுசுடரமையந்‌ தொடங்கி


மாலையெளவும்‌, அதன்பின்‌ இடையாமமெளவும்‌,
அதன்பின்‌ வைகறையெனவும்‌, அதன்பின்‌ காலை
யெளவும்‌, அதன்பின்‌ நண்பகலெளவும்‌, அதன்பின்‌
எற்பாடெனவும்‌ ஆறாகப்‌ பகுத்தார்‌. அவை
ஒரோவொன்று பத்து நாழிகையாக இம்முறையே
சூத்திரங்களிற்‌ சிறுபொழுது வைப்பர்‌”?- என்பது
நச்சினார்க்கனியருரை.
சிறுபொழுது ஒவ்வொன்றும்‌ பத்துப்‌ பத்து நாழிகை)
தான்குமணி நேரம்‌. சிறுபொழுது ஆறும்‌ சேர்ந்தது ஒரு
தாள்‌. 6௦10-60 நாழிகை. 6%4-34 மணி,
படுகடரமையம்‌ என்பது சூரிய அத்தமனநேரம்‌. ௪டர்‌-
சூரியன்‌. படு
- படுதல்‌, அஸ்தமித்தல்‌, படுசடரமையம்‌ -
சூரிய அத்தமன நேரம்‌. சூரிய அத்தமன நேரம்‌ மாலை
600 மணி என்று கொண்டால்‌
ஊரன்‌ அடிகள்‌ 23

06-00 - 10-00 மாலை


10-00 - 02-00 யாமம்‌
02-00 - 06-00 வைசறை
06-00 - 10-00 விடியல்‌ - காலை
10-09 - 02-00 நண்பகல்‌
02-00 ~ 06-00 எம்பாடு (எல்‌-சூரியன்‌, பாடு - படுதல்‌)
இனவ ஒவ்வொன்றும்‌ நான்கு மணிநேரம்‌.
மாலை, யாமம்‌, வைகழை - இவை மூன்றும்‌ சேர்ந்தது
இரவு.
விடுயல்‌ (காலை), நண்பகல்‌, எற்பாடு - இவை
மூன்றும்‌ சேர்ந்தது use,
ஒரு நாளை ஆறு பொமழுதாசப்‌ பிரித்திருப்பதால்‌,
தாள்தோறும்‌ ஆறுகாலத்திலும்‌ வழிபாடு செய்யவேண்டும்‌
என்று நம்‌ முன்னோர்கள்‌ கூறியுள்ளனர்‌. வள்ளலாரும்‌
ஆறுகாலம்‌ வழிபாடு செய்யவேண்டுமென்று கூறுகிறார்‌.

நிலம்‌ பொழுது (இடம்‌, காலம்‌ $றக௦௦ & Time)


இரண்டையும்‌ முதற்பொருள்‌ என்று நம்‌ முன்னோர்கள்‌
வகுத்தனரி. உலஎம்‌ இடமாசவும்‌, காலமாசவும்‌, Space &
Time ஆக, நிலமும்‌ பொழுதுமாக இயல்கிறது, இடம்‌
காலம்‌ (8௨௦௦ ஊம்‌ 710௦ நிலம்‌ பொழுது) இவ்விரண்டும்‌
பெரும்‌ பொருள்கள்‌ (பெரிய விஷயங்கள்‌). இவ்வாறே ஒலி,
geo, (Sound 1,1211- நாதம்‌, விந்து) இரண்டும்‌ பெரிய
சக்திகள்‌. உலகை ஆட்டிப்படைக்கும்‌ இருபெருஞ்‌ சக்திகள்‌.
ஸ்பேஸ்‌ (50806), டைம்‌ (110௦), லைட்‌ ஜட, சவுண்ட்‌
(Sound) என்ற நான்கையும்‌ பற்றி இன்றைய விஞ்ஞானிகள்‌
கூறும்‌ பல செய்திகளை அன்றைய நம்‌ ஞானிகள்‌
(அறிவர்கள்‌) அறிந்திருந்தார்கள்‌. ஆனால்‌ அந்தோ! இன்று
24 சாதியும்‌ மதமும்‌

prib Sound and Light Show (சவுண்ட்‌ அண்டு லைட்‌


ஷோ) வைத்தான்‌ அறிந்திருக்கிறோம்‌.

முதற்பொருளை இவ்வளவில்‌ நிறுத்தி, இனி உரிப்‌


பொருளுக்கு வருவோம்‌.

புணர்தல்‌, பிரிதல்‌, இருத்தல்‌, இரங்கல்‌,


ஊடல்‌ அவற்றின்‌ நிமித்தம்‌ என்றிவை
தேருங்‌ காலை இணைக்குரிப்‌ பொருளே”? - 14
புணர்தலும்‌ புணா தல்‌ நிமித்தமும்‌ குறிஞ்சிக்கு உரிப்பொருள்‌
பிரிதலும்‌ பிரிதல்‌ நிமித்தமும்‌ பாலைக்கு உரிப்பொருள்‌
இருத்தலும்‌ இருத்தல்‌ நிமித்தமும்‌ முல்லைக்கு உரிப்பொருள்‌
இரங்கலும இரங்கல்நிமித்தமும்‌ நெய்தலுக்கு உரிப்பொருள்‌
ஊடலும்‌ அடல்‌ நிமித்தமும்‌ மருதத்‌இற்கு உரிப்பொருள்‌

இங்கு, குறிஞ்சி பாலை முல்லை நெய்தல்‌ மருதம்‌


என்பன நிலங்களைக்‌ குறிப்பனவன்று, இணைகளைக்‌
குறிப்பனவாம்‌, திணை என்பது ஒழுக்கம்‌.
25

"ரா 199.190 TABON necwiGie குற ரா


"மஜா. ஐ00 நிர.
(சம 11257) முழை —yorunegT ‘arya reg) ~ TAGE ME eFye Wes ys - weun
Oungse — - GTAEFENE wrmiG oGegsiG - e¢avo
wm tips ‘Gases - - TAFE MG wim aoe —- neon
ராயா GF wus
(spore) rg we -pormed yg - ads Ng oF peeh பாடக பமல - இரு
emu EEF wue us — Hie - NAGE ம௪௦௫ ரஆரீ௪௪௰௫ - ௬௫ம்‌

ஊரன்‌ அடிகள்‌
சரியாம! fAunOTO9N® (ஐம்‌)
ராமுயக மழஓர ௫ Osun nye அமு.
26 சாதியும்‌ மதழும்‌

மூதற்பொருளாகிய நிலம்‌ பொழுது ஆகிய இரண்டைப்‌


பற்றியும்‌ மேலே கூறிய செய்தகளை ஓரளவு புரிந்து
கொள்ளக்‌ கூடும்‌. உரிப்பொருளைப்பற்றி மேலே கூறிய
செய்திகளைப்‌ புரிந்து கொள்வது அரிது, இன்னும்‌
விளக்கமாக, விரிவாகக்‌ கூறவேண்டு மெனினும்‌ விரி
வஞ்சியும்‌ சாதியும்‌ மதமும்‌ என்னும்‌ இந்தூற்கு அஃது
மற்றொன்று விரித்தலாகுமோ என்றஞ்சியும்‌ விரிக்காது
விடுத்தாம்‌.
மூதல்‌, உரி ஆய இரண்டு பொருள்களும்‌ இவ்வளவில்‌
நிற்ப, இனிக்‌ கருப்பொருளைக்‌ காண்போம்‌,

தெய்வம்‌, உணாவே, மா, மரம்‌, புள்‌, பறை,


செய்தி யாழின்‌ பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும்‌ சர என மொழிப - 20
என்பது சூத்திரம்‌.
1. தெய்வம்‌
2. உணா (உணவுப்‌ பொருள்‌)
3. மா (விலங்கு - மிருகம்‌)
4, மரம்‌
5. புள்‌ (பறவை)
6, பறை
7. செய்தி (தொழில்‌)
8. யாழ்‌ - அவ்வகை பிறவும்‌ என்றதனால்‌
9. பூ, 10. நீர்‌, 11, ஊர்‌ முதலியனவும்‌ கருப்‌
பொருள்களாம்‌.

உணா முதலியன இன்னின்ன என்று மேற்சூத்திரத்திற்கு


நச்சினார்க்கினியர்‌ கூறும்‌ உரை சொல்லழகு பொருளழ
குடன்‌ இன்னோசைத்தாய்‌ மிக்க இனிமையாய்‌ அமைந்‌
துள்ளமையின்‌ அதனை அப்படியே இதன்8ழ்‌ எடுத்துக்‌
காட்டுகிறோம்‌. அது வருமாறு:
ஊரன்‌ அடிகள்‌ 27

முல்லைக்கு உணா, வரகுஞ்‌ சாமையும்‌ முதிரையும்‌


WF, உழையும்‌ புல்வாயும்‌ முயலும்‌; மரம்‌, கொன்றை
யூங்‌ குருந்தும்‌; புள்‌, கானக்கோழியுஞ்‌ சிவலும்‌; பறை,
ஏறுகோட்‌ பறை; செய்தி, நிரை மேய்த்தலும்‌ வரகு
மூதவியன களைகட்டலுங்‌ கடாவிடுதலும்‌; யாழ்‌,
முல்லையாழ்‌, பிறவுமென்றதனால்‌, பூ, முல்லையும்‌
பிடவுந்‌ தளவுந்‌ தோன்றியும்‌; நீர்‌, கான்யாறு) ஊர்‌,
பாடியுஞ்‌ சேரியும்‌ பள்ளியும்‌,
குறிஞ்சிக்கு உணச, ஐவனநெல்லு்‌ இனையும்‌
மூங்லெரிசியும்‌; மா, புலியும்‌ யானையுங்‌ கரடியும்‌
பன்றியும்‌) மரம்‌, அகிலும்‌ ஆரமுற்‌ தேக்குத்‌ தஇமிசும்‌
வேங்கையும்‌; புள்‌, களியும்‌ மயிலும்‌; பறை,
முருகெயமுந்‌ தொண்டகப்பறையும்‌; செய்தி, தேன்‌
அழித்தலுங்‌ கழங்கு அகுழ்தலுந்‌ இனை முதலியன
விளைத்தலுங்‌ கிளிகடிதலும்‌; யாழ்‌, குறிஞ்சியாழ்‌.
பிறவுமென்றதனால்‌, பூ, காற்தளும்‌ வேங்கையுஞ்‌
சுனைக்குவளையும்‌; நீர்‌, அருவியுஞ்‌ சுனையும்‌; ஊர்‌,
சிறுகுடியுங்‌ குறிச்சீயும்‌,
மருதத்திற்கு உணா, செத்தெல்லும்‌ வெண்ணெல்‌
லும்‌; மா, எருமையும்‌ நீர்நாயும்‌; மரம்‌, வஞ்சயுங்‌
காஞ்சியும்‌ மருதமும்‌; புள்‌, தாராவும்‌ நீர்க்கோழியும்‌;
பறை, மணமுழவும்‌ நெல்லரிகிணையும்‌; செய்தி, நடுத
லுங்‌ களைகட்டலும்‌ அரிதலுங்‌ கடாவிடுதலும்‌; யாழ்‌,
மருதயாழ்‌. பிறவுமென்றதனால்‌, பூ, தாமரையுங்‌
கழுதீரும்‌; நீர்‌, யாற்றுநீரும்‌ மனைக்கிணெறும்‌ பொய்‌
கையும்‌; ஊர்‌, ஊர்களென்பனவேயாம்‌.

நெய்தற்கு உணா. மீன்‌ விலையும்‌ உப்பு விலையும்‌;


மா, உமண்பகடு போல்வன; முதலையுஞ்‌ சுறாவும்‌
மீனாதலின்‌ மாவென்றல்‌ மரபன்று, மரம்‌, புன்னை
28 சாதியும்‌ மதமும்‌

யும்‌ ஞாழலுஙி கண்டலும்‌; புள்‌, அன்னமும்‌ அன்றிலும்‌


மூதலியன; பறை, மீன்கோட்‌ பறை; செய்தி,
மீன்‌ படுத்தலும்‌ உப்பு விளைத்தலும்‌ அவை விற்றலும்‌;
யாழ்‌, நெய்தல்‌ யாழ்‌. பிறவுமென்றதனால்‌, பூ,
கைதையும்‌ நெய்தலும்‌; நீர்‌, மணற்சணெறும்‌ உவர்க்‌
குழியும்‌; ஊர்‌, பட்டினமும்‌ பாக்கமும்‌,
இனிப்‌ பாலைக்கு உணா, ஆறலைத்தளவுஞ்‌ சூறை
கொண்டளவும்‌; மா, வலியழிந்த யாளையும்‌ புலியுஞ்‌
செந்நாயும்‌; மரம்‌, வற்றின இருப்பையும்‌ ஓமையும்‌
உழிஞையும்‌ ஜெமையும்‌; புள்‌, கழுகும்‌ பருந்தும்‌
புமாவும்‌; பறை, சூறைகோட்பழையும்‌ நிறைகோட்‌
பறையும்‌; செய்தி, ஆறலைத்தலுஞ்‌ சூழைகோடலும்‌;
யாழ்‌, பாலையாம்‌. பிறவுமென்றதனால்‌, பூ, மராவுங்‌
குராவும்‌ பாதிரியும்‌; நீர்‌, அறுறீர்க்கூவலுஞ்‌ சுனையும்‌;
ஊர்‌, பறந்தலை.

இது நச்சினார்க்கினியர்‌ உரை. இனி இளம்பூரணர்‌


உரையும்‌ இது போன்றதே எனினும்‌ ADA கூட்டல்‌
குறைத்தல்‌ முதலிய சிறு வேறுபாடுகள்‌ உண்டாதலின்‌
அதனையும்‌ அப்படியே இதன்‌ 8ழ்‌ எடுத்துக்காட்டுகிறோம்‌.
அது வருமாறு.

முல்லைக்குத்‌ தெய்வம்‌ கண்ணன்‌. உணவு-வரகும்‌


மூதிரையும்‌. மா - மானும்‌ முயலும்‌, மரம்‌ -
கொன்றையும்‌, குருந்தும்‌ புதலும்‌, புள்‌-கானாங்கோழி,
பறை - ஏறுகோட்பறை. செய்தி - நிரை மேய்த்தல்‌.
யாழிளஸ்‌ பகுதி. என்பது பண்‌. அது சாதாரி. பிறவும்‌
என்றதனால்‌, பூ - முல்லையும்‌ பிடவும்‌ தளவும்‌, நீர்‌ -
கான்யாறு. பிறவும்‌ இந்நிசரன கொள்க.

குறிஞ்சிக்குத்‌ தெய்வம்‌ முருகவேள்‌. உணவு -


தினையும்‌ ஐவனமும்‌ வெதிர்‌ நெல்லும்‌. மா-யரனையும்‌
அரன்‌ அடிகள்‌, 29

புலியும்‌. பன்றியும்‌, கரடியும்‌. மரம்‌ - வேங்கையும்‌


கோங்கும்‌. புள்‌ - மயிலும்‌, களியும்‌. பறை - வெறி
யாட்டுப்‌ பறையும்‌, தொண்டகப்‌ பறையும்‌, செய்தி -
தேனழித்தல்‌. பண்‌ - குறிஞ்சி, பிறவும்‌ என்றதனால்‌,
பூ - வேங்கைப்பூவும்‌, காந்தட்பூவும்‌, குறிஞ்சிப்பூவும்‌.
fr - சுனை நீரும்‌, அருவி நீரும்‌. பிறவும்‌ அன்ன.

பாலைக்குத்‌ தெய்வம்‌ - கொற்றவை. உணவு -


ஆறலைத்தலான்‌ வரும்‌ பொருள்‌, மா - வலியழிந்த
யானையும்‌, வலியழிந்த புலியும்‌, வலியழிந்த செந்‌
நாயும்‌. மரம்‌ - பாலை, இருப்பை, சள்ளி, சூரை,
புள்‌ - எருவையும்‌, பருந்தும்‌. பறை - ஆறலைப்‌
பறையும்‌, சூறைகொண்ட பறையும்‌. செய்தி -
ஆறலைத்தல்‌ பண்‌ - பாலை, பிறவும்‌ என்றதனால்‌,
பூ - மராம்மூ. நீர்‌ - அறுறீர்க்‌ கூவலும்‌ அறுநீர்ச்‌
சுனையும்‌. பிறவும்‌ இத்நிகரன கொள்ள,

மருதத்திற்குத்‌ தெய்வம்‌ இந்திரன்‌; உணவு - நெல்‌.


மா - எருமையும்‌, நீர்நாயும்‌,. மரம்‌ - மருதும்‌,
காஞ்சியும்‌. புள்‌ - அன்னமும்‌, அன்றிலும்‌, பறை-
நெல்லரி* பறை, செய்தி - உழவு. பண்‌ - மருதம்‌.
பிறவும்‌ என்றதனால்‌, பூ - தாமரையும்‌ கழுநீரும்‌.
நீர்‌ - ஆற்றுநீரும்‌ பொய்கை நீரும்‌, பிறவும்‌ அன்ன,
நெய்தற்குத்‌ தெய்வம்‌ வருணன்‌. உணவு - உப்பு
விலையும்‌ மீன்‌ விலையும்‌. மா - கராவும்‌ சுறாவும்‌.
மரம்‌ - புன்னையும்‌ கைதையும்‌. புள்‌ - கடற்காக்கசை,
பறை - நாவாய்ப்பறை, செய்தி - மீன்படுத்தலும்‌
உப்புவிளைத்தலும்‌, பண்‌ - செவ்வழி. பிறவும்‌ என்ற
தனால்‌, பூ- நெய்தல்‌. நீர்‌ - கேணி நீரும்‌ கடல்‌
நீரும்‌. பிறவும்‌ அன்ன,
30 சாதியும்‌ மதமும்‌

நால்வசை (ஐவகை) நிலத்திற்கும்‌ மக்களின்‌ குலப்‌


பெயர்‌ தலைமக்கள்‌ பெயர்‌ உண்டு. அவற்றைக்‌ கூறும்‌
நச்சினார்கினியர்‌ உரையையும்‌ இளம்பூரணர்‌ உரை
யையும்‌ அப்படியே இதன்8£ழ்‌ எடுத்துகாட்டுகிறோம்‌.
அவை வருமாறு:
நால்வகை நிலத்தும்‌ மருவிய குலப்பெயராவன:
குறிஞ்சிக்குக்‌ கானவர்‌ வேட்டுவர்‌ குறவர்‌
இறவுளர்‌ குன்றுவரீ வேட்டுவித்தியரீ குறத்தியரீ
குன்றுவித்தியர்‌; ஏனைப்‌ பெண்‌ பெயர்‌ வருமேனும்‌
உணர்க.
முல்லைக்குக்‌ கோவலர்‌ இடையர்‌ ஆயர்‌ பொதுவர்‌
இடைத்தியார்‌ கோவித்தியர்‌ ஆய்த்தியரீ பொதுவியர்‌.
ரெய்தற்கு நுளையர்‌ இமிலர்‌ பரதவர்‌ நுளைத்தியரி
பரதீதியர்‌; ஏனைப்‌ பெண்‌ பெயர்‌ வருமேனும்‌ உணர்க.
மருதத்திற்குக்‌ களமர்‌ உழவர்‌ கடையர்‌ உழத்தியர்‌
கடைச்சயர்‌; ஏனைப்‌ ' பெண்பெயர்‌ வருமேனும்‌
உணர்க.
பாலைக்குத்‌ 'இணைதொறுமரீ இயற்பெயருந்‌
இணைநிலைப்‌ பெயருங்‌ கொள்க, எயினர்‌ எயிற்றியர்‌
மறவர்‌ மறத்தியர்‌ எனவும்‌ மீளி விடலை காளை
எனவும்‌ வரும்‌.

இனி உ௨ரிப்பொருட்குரிய தலைமக்கள்‌ பெயராவள,


பெயர்ப்‌ பெயரும்‌ நாடாட்சி பற்றி வரும்‌ பெயருமாம்‌
குறிஞ்சிக்கு வெற்பன்‌ சிலம்பன்‌ பொருப்பன்‌,
கொடிச்சி; இஃது ஆண்பாற்கேலாத பெயராயினும்‌
நிலையென்றதனாற்‌ கொள்க, முல்லைக்கு அண்ணல்‌
தோன்றல்‌ குறும்பொறைநாடன்‌, மனைவி, நெய்தற்குக்‌
கொண்கண்‌ துறைவன்‌ சேர்ப்பன்‌ மெல்லம்புலம்பன்‌
ஊரன்‌ அடிகள்‌ 31

தலைவி பெயர்‌ வந்துழிக்‌ காண்க. மருதத்திற்கு


மகிழ்நன்‌ ஊரன்‌* மனையோள்‌ எனவரும்‌.
நச்சினார்க்கினியருரை
* மருதநிலத்‌ தலைவன்‌ பெயராகிய ஊரன்‌ என்பதே
இத்நாலாசிரியர்‌ பெயராயிற்று. சமய குரவரி நால்வரில்‌
ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ பெயரும்‌ ஊரன்‌
என்பதே. நம்பி அரூரன்‌ ஆரூரன்‌ என்பதெல்லாம்‌
சரன்‌ என்பதன்‌ அடை சார்ந்த பெயர்களே.
**மந்திர மாமுனிவர்‌ இவன்‌ ஆர்‌ என எம்பெருமான்‌
“நம்‌ தமர்‌ ஊரன்‌ என்றான்‌! நொடித்தான்‌ மலை
உத்தமனே”' (திருநொடித்தான்மலை9), நாவல ஊரன்‌
சொன்ன ஏழ்‌ இசை'' (திருநொடித்தான்மலை 10),
**நாவல ஊரன்‌ சொன்ன மாலை *((இருநனிபள்ளி 10)*?
**நிரம்பிய ஊரன்‌ உரைத்தன?” (திருஆரூர்ப்‌ பரவையுள்‌
மண்டளி 10) என்பன சுந்தரமூரீத்தி சுவாமிகள்‌
பாடியருளிய தேவாரதி திருவாக்குகள்‌. *'ஒன்று
சிந்தை ஈம்‌ ஊரன்‌ உம்பர்‌ வெள்ளாணையின்‌ உடன்‌
ஏம்றிச்‌ சென்று கொண்டு இங்கு வாரும்‌ என்று அயன்‌
மூதல்‌ தேவர்கட்கு அருள்‌ செய்தார்‌'* என்பது
சிவபெருமான்‌ சுந்தரரை வெள்ளாணையின்‌ மீது
கயிலைக்கு அழைதிதுவரசி சொன்னது (பெரிய
புராணம்‌ 4264), சுந்தரர்‌ கயிலை சென்றணைநீத
போது சிவபெருமான்‌ '*/ஊரனே வந்தனை'' என்று
வரவேற்றருள்கிறார்‌. (பெரியபுராணம்‌ 4275) வள்ளற்‌
பெருமானும்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஊரன்‌ என்ற
பெயராற்‌ குறிப்பிடுகிறார்‌. '*ஒற்றியப்பா ஊரனுக்காத்‌
தூது சென்ற நின்தாள்‌ துணைப்புகழைப்‌ பாடேனோ,'”
**ஊரனாருடன்‌ சேரனார்‌ துரங்கம்‌ ஊர்ந்து சென்ற
அவ்‌உளவறிந்திலையோ?” என்பன வள்ளலார்‌
வாக்குகள்‌ (திருவட்பா 970; 995). ஊரனார்‌-சுந்தர
மூர்த்திகள்‌, சேரனார்‌-சேரமான்‌ பெருமாள்‌ நாயனார்‌.
32 சாதியும்‌ மதமும்‌

முல்லைக்குரிய மக்கட்பெயர்‌ ... ... ... ஆயரீ


வேட்டுவர்‌, ஆயர்‌ என்பார்‌ நிரைமேய்ப்பாரீ.
வேட்டுவர்‌ என்பவர்‌ வேட்டைத்‌ தொழில்‌ செய்வார்‌.
அஃது எயினர்‌ என்னும்‌ குலப்பெயருடையார்‌ மேல்‌
தொழிற்‌ பெயராகி வந்தது. ...... அவ்விருதிறத்தாரும்‌
காடு பற்றி வாழ்தலின்‌ அந்நிலத்‌இன்‌ மக்களாயினர்‌.
அவ்வயின்‌ வரூஉம்‌ இழவா்‌ இருவகையர்‌. அந்நிலத்தை
ஆட்சி பெற்றோரும்‌ அந்நிலத்து வாழ்வோரும்‌ என.
“குறும்பொறைநாடன்‌'' என்பது போல்வன ஆட்சி
பற்றி வரும்‌. “பொதுவன்‌”, “ஆயன்‌? என்பன குலம்‌
பற்றி வரும்‌.

குறிஞ்சிக்கு மக்கட்பெயர்‌ குறவன்‌ குறத்தி


என்பன. தலைமக்கட்‌ பெயர்‌ மலைநாடன்‌ வெற்பன்‌
என்பன. பாலைக்கு மக்கட்பெயர்‌ எயினர்‌ எயிற்றியர்‌
என்பன. தலைமக்கட்பெயர்‌ மீளி விடலை என்பன.
மருதத்திற்கு மக்கட்பெயர்‌ உழவர்‌ உழத்தியர்‌ என்பன.
தலைமக்கட்‌ பெயர்‌ ஊரன்‌* மூழ்நன்‌ என்பன. நெய்‌
தற்கு மக்கட்பெயர்‌ நுளையர்‌ நுழைச்சியர்‌ என்பன.
தலைமக்கட்‌ பெயர்‌ சேர்ப்பன்‌ துறைவன்‌ கொண்கன்‌
என்பன,
- இளம்பூரணர்‌ உரை

தொல்காப்பியத்துக்குப்பின்‌ வந்த இலக்கண நால்கள்‌


இவற்றை இன்னும்‌ பலவாக விரிக்கும்‌, சில பல கூட்டல்‌
குறைத்தல்கள்‌ உண்டு. அவற்றையெல்லாம்‌ இங்கெடுத்துக்‌
காட்ட இடம்‌ போதா.
ஊரன்‌ அடிகள்‌ 33

நிலம்‌ மக்கட்‌ குலப்பெயர்‌ தலைமக்கள்‌ பெயர்‌

,மூல்லை ஆயர்‌ - ஆய்ச்சியர்‌ குறும்பொறை


நாடன்‌
இடையர்‌ -இடைச்சியர்‌
கோவலர்‌ -
கோவித்தியா்‌
Gur gent

குறிஞ்சி குறவர்‌ - குறத்தியர்‌ வெற்பன்‌, சிலம்பன்‌


வேடர்‌ -
வேட்டுவிச்சியொ்‌ பொருப்பன்‌
கானவர்‌
மருதம்‌ உழவர்‌ - உழத்தியர்‌ ஊரன்‌”, மகிழ்நன்‌
சுடையர்‌ - கடைச்சியர்‌
களமர்‌

நெய்தல்‌ நுளையர்‌ - துறைவன்‌,


துளைச்சியர்‌ சேர்ப்பன்‌
பரதவர்‌ - பரத்தியார்‌
உமணர்‌ - ௨உமட்டியர்‌

பாலை எயினர்‌ - எயிற்றியர்‌ மீளி


மறவர்‌ - மறத்தியர்‌ விடனலை, காளை

தலைமக்கள்‌ பெயரீ இலக்கியங்களிற்‌ காணப்‌


பெறுகிறது. பொதுமக்கள்‌ பெயர்‌, குலப்பெயர்‌ சாதிப்‌
பெயராக இன்றும்‌ வழங்கி வருகிறது, குலப்பெயர்கள்‌
தொழிலால்‌ அமைந்துள்ளன:
34 சாதியும்‌ மதமும்‌
மூல்லை நில மக்களின்‌ முக்கிய தொழில்‌ ஆடு மாடு
சளை வளர்த்தல்‌ — ஆயர்‌, இடையர்‌, குறிஞ்சி நில
மக்களின்‌ முக்கியதொழில்‌ வேட்டையாடல்‌ -- வேட்டுவர்‌,
வேடர்‌, குறவர்‌. மருத நில மக்களின்‌ முக்க தொழில்‌
உழவு, வேளாண்மை -- உழவர்‌, வேளாளர்‌, நதெய்தல்நில
மக்களின்‌ முக்கிய தொழில்‌ மீன்‌ பிடித்தல்‌, உப்பு விளைத்‌
தல்‌ -- பரதவர்‌, உமணர்‌, பாலை நில மக்களின்‌ மூக்கிய
கொழில்‌ ஆறலைத்தல்‌ (வழிப்பறி), எயினர்‌, மறவர்‌.

நிலத்துக்கு(ஊருக்கு)த்‌ தகுந்த தொழில்‌. தொழி


அக்குத்‌ தகுந்த பெயர்‌, எல்லாமே இயற்கையாக நன்கு
அமைந்திருக்கின்றன. குலப்பெயர்கள்‌ எப்படி ஏற்பட்டன
என்பதை விளக்கவே இவ்வளவு தூரம்‌ கூறினோம்‌.
இன்னும்‌ இவை போன்ற சில பல குடிப்‌ பெயர்களும்‌
குலப்பெயர்களும்‌ உள்ளன. அவையெல்லாம்‌ பழைய
இலக்கியங்களில்‌ ஆங்காங்கே பரவலாகக்‌ காணப்படு
இன்றன.

புறநானூற்றில்‌ ஒரு பாட்டு, மாங்குடி இழார்‌


பாடியது. அறிஞர்‌ பலராலும்‌ எடுத்துக்காட்டப்‌ பெறுவது.

அடல்‌அருந்‌ துப்பின்‌ .........


ee . குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும்‌ இல்லை;
கருங்கால்‌ வரகே, இருங்கதிர்த்‌ தனையே
சிறுகொடிக்‌ கொள்ளே, பொறிகிளர்‌ அவரையொடு
இத்தான்கு அல்லது உணரவும்‌ இல்லை;
துடியன்‌, பாணன்‌, பறையன்‌, கடம்பன்‌ என்று
இந்நான்கு அல்லது குடியும்‌ இல்லை;
ஒன்னாத்‌ தெவ்வர்‌ முன்‌ erp Dan,
ஒளிறு ஏந்து மருப்பின்‌ களிறு எறிந்து வீழ்த்தென,
ஊரன்‌ அடிகள்‌
சல்லே பரவின்‌ அல்லது
நெல்‌ உகுத்துப்‌ பரவும்‌ கடவுளும்‌ இலவே.
— 335
இப்பாடலின்‌ 7: 8- ஆவது : அடிகளில்‌ *துடியன்‌'
பாணன்‌, பறையன்‌, கடம்பன்‌ என்று இந்நான்கல்லது
குடியும்‌ இல்லை”? என்று பாடலாசிரியர்‌ கூறுகிறார்‌.

டாக்டர்‌. உ.வே.சா. பதிப்பிலும்‌ மர்ரே இராஜம்‌


பதிப்பிலும்‌ இப்பாடலில்‌ முதலடியின்‌ பிற்பாதியும்‌
இரண்டாமடியின்‌ முற்பாதியும்‌ இல்லை, இல்லாத
இடத்தை மேற்கண்டவாறு புள்ளியிட்டுக்‌ சாட்டியுள்ளனர்‌.
கழக வெளியீடு ஒளவை. துரைசாமி பிள்ளை பதிப்பில்‌
இரண்டாமடி **குரவே தளவே குருந்தே முல்லையென்று??
முழுவதும்‌ உள்ளது. **குரவே தகளவே”' என்ற பாடம்‌
அச்சுப்பிரதியில்‌ இல்லை என்று ஒளவை பிள்ளையும்‌
அவர்‌ தரும்‌ விளக்கத்துள்‌ குறிப்பிட்டுள்ளார்‌. ௨ வே.சா.
பதிப்பாலும்‌ மர்ரே பதிப்பாலும்‌ இரண்டு பூக்களே
தெரிகின்றன. ஒளவை பூப்பால்‌ நான்கு பூக்களுமே
தெரிகின்றன.

குரவம்‌, தளவு, குருந்தம்‌, முல்லை - இந்நான்கு தவிர


வேறு பூக்கள்‌ இல்லை.
வரகு, தினை, கொள்ளு, அவரை - இந்நான்கு தவிர
வேறு உணவில்லை.
துடியன்‌, பாணன்‌, பறையன்‌, சுடம்பன்‌ - இத்நான்கு
தவிர வேறு குடிகள்‌ இல்லை.
வீரர்களின்‌ நடுகல்‌ தவிர வேறு கடவுள்‌ இல்லை
என்பது இப்பாடலின்‌ பொருள்‌, குறித்த நான்கு பூக்கள்‌
தவிர வேறு பூக்கள்‌ இல்லையா? நான்கு தானியங்கள்‌
36 சாதியும்‌ மதமும்‌

தவிர வேறு இல்லையா? நான்கு குடிகள்‌ தவிர வேறு


இல்லையா? நடுகல்‌ தவிர வேறு கடவுள்‌ இல்லையா?
என்றால்‌, இவர்‌ பாடும்‌ அந்த ஊரில்‌ இல்லை. இவ்‌
விளக்கம்‌ ஒளவை துரைசாமி பிள்ளை உரையால்‌
தெரிகிறது.

துடியன்‌ - துடி முழக்குவோர்‌ துடியர்‌


பாணன்‌ - யாழ்‌ வாசிப்போர்‌ பாணர்‌
பழையன்‌ - பறையடிப்போர்‌ பறையர்‌
கடம்பன்‌ -
துடியன்‌, பாணன்‌, பறையன்‌, கடம்பன்‌ இந்தான்கு
குடிகளைத்‌ தவிர வேறு குடிகள்‌ இல்லை என்று இப்பாடல்‌
கூறுகிறது. பாடப்பெறும்‌ அவ்வூரில்‌ (அப்பகுதியில்‌)
இல்லை எனப்‌ பொருள்‌ கொள்ளவேண்டும்‌, அன்றிப்‌
பொதுவாகக்‌ குடியே இந்நான்குதான்‌, இவையன்றி
வேறு இல்லை என்று பொருள்‌ கொள்ளலாகாது,
பெரும்பாணாற்றுப்படையில்‌ காஞ்சபுரமூம்‌, பட்டினப்‌
பாலையில்‌ காவிரிப்பூம்பட்டினமும்‌, மதுரைக்காஞ்சியில்‌
மதுரையும்‌ விரிவாக வருணிக்கப்பெறுகன்றன. சிலப்பதி
காரத்தில்‌ சகாவிரிப்பூம்பட்டினம்‌ மதுரை இவ்விரண்டுமே
விரிவாக வருணிக்கப்பெறுகின்றன. பல்வேறு குடியினர்‌
தொழிலினர்‌ பெயர்கள்‌ கூறப்பெறுசன்றன. அவற்றை
யெல்லாம்‌ அப்படி அப்படியே பாடல்‌ வரிகளாக எடுத்துக்‌
காட்டின்‌ மிக நீளும்‌ என்பதால்‌ பெயர்களை மட்டும்‌
பட்டியலிட்டுக்‌ சாட்டுவோம்‌.

அந்தணர்‌
அரசர்‌
வணிகர்‌
வேளாளர்‌
ஊரன்‌ அடிகள்‌ 37

ஆயர்‌ - இடையர்‌ (முல்லை நில மக்கள்‌)


வேட்டுவர்‌ - குறவர்‌ - கானவர்‌ (குறிஞ்சி நில மக்கள்‌)
உழவர்‌ (மருதநில மக்கள்‌)
நுளையர்‌ - பரதவர்‌ - வலைஞர்‌ - எயினர்‌ - உமணர்‌
(நெய்தல்‌ நில மக்கள்‌)
காருகர்‌ (நெய்வோர்‌)
தச்சர்‌ (மரவேலை செய்வோர்‌)
கொல்லர்‌ (இரும்பு வேலை செய்வோர்‌)
கஞ்சகாரர்‌ (கன்னார்‌ - வெண்கல வேலைக்காரர்‌)
பொன்செய்கொல்லர்‌ - பொற்கொல்லர்‌ (தட்டார்‌)
மண்ணீட்டாளர்‌ (குயவர்‌; சத வேலை செய்வோர்‌)
துன்னகாரூ (தையற்காரர்‌)
தோலின்‌ துன்னார்‌ (தோல்‌ தைப்போர்‌)

இன்னும்‌ இவ்வாறு தொழிலாளர்‌ பெயர்கள்‌ நீள்கின்றன.


எல்லாவற்றையும்‌ பட்டியலிட்டால்‌ மிக நீளும்‌, எல்லாம்‌
தொழில்வழிக்‌ குடிப்பெயராகத்‌ தோன்றிக்‌ காலஅடைவில்‌
குலப்பெயராக மாறிப்‌ பின்னாளில்‌ பிறப்பு வழிச்‌ சாதிப்‌
பெயராக ஆடூவிட்டன.
38 சாதியும்‌ மதமும்‌

சாதீகளில்‌ ஏற்றத்‌ தாழ்வு


“*சாதி'' என்ற பெயர்‌
'சாதி'' என்று தமிழில்‌ எழுதுகிறோம்‌, சொல்கிறோம்‌.
““ஜாஇ'* என்று வட வெழுத்திட்டு லழமுதுகி3றாம்‌ சொல்‌
கிமீ்றாம்‌. சாதி என்ற பெயர்‌, அதாவது சாதி என்ற
சொல்‌, தொல்காபபியத்தில்‌ இரண்டு இடத்திலும்‌, சங்க
இலக்கியத்தில்‌ பத்துப்பாட்டில்‌ ஒன்றாகிய பெரும்‌
பாணாற்றுப்படையில்‌ ஓர்‌ இடத்திலும்‌ வருகிறது.
“ஜாஇ” என்று இன்று நாம்‌ வழங்கும்‌ பொருளில்‌
வரவில்லை. *இனம்‌'' என்ற பொருளில்‌ ஆளப்‌
பெற்றுள்ளது அதுவும்‌ மக்களினம்‌ (மனித இனம்‌)
குறித்து இல்லை, நீர்வாழ்‌ உயிரினம்‌, பறவை இனம்‌
என்ற பொருளிலேயே வருகிறது.
“நீர்‌ வாழ்‌ சாதியும்‌ அது பெறற்கு உரிய”
- தொல்‌, பொருள்‌, மரபு 44
**நீர்‌ வாழ்‌ சாதியுள்‌ தந்தும்‌ நாகே?? _ 64
என்பன தொல்காப்பியம்‌ பொருளதிகாரம்‌ மரபியல்‌
சூத்திரங்கள்‌. நீர்வாழ்‌ சாதி என்றது நீரில்‌ வாழும்‌
உயிரினங்களை.
**தடுப்புடைப்‌ பறவைச்‌ சாதி யன்ன" - 2209
என்பது பெரும்பாணாற்றுப்படை. இங்கு பறவைச்சாதி
என்றது பறக்கும்‌ பூச்சி இனமான குளவியை. கொட்டினால்‌
கடுப்புண்டா தலின்‌ **கடுப்புடை'? என்று கூறப்பட்டது.
பறவைச்‌ சாதி என்பகுற்குக்‌ **'குளவித்திரளை ஒத்த"
என்று நச்ரினார்க்கினியர்‌ உரையெழுதுகறார்‌ வள்ளலாரும்‌
திருவருடபாப்‌ பாடலொன்றில்‌ **பறவைச்‌ சாஇ”” என்று
கூறுகிறார்‌,
ஊரன்‌ அடிகள்‌ 39

வாட்டமிலா மாணிக்க வாசகநின்‌ வாசகத்தைக்‌


கேட்டபொழு தங்கிருந்த 8ழ்ப்பறவைச்‌ சாதிகளும்‌
வேட்டமுறும்‌ பொல்லா விலங்குகளும்‌ மெய்ஞ்ஞான
நாட்டமுறு மென்னிலிங்கு நானடைதல்வியப்பன்றே,
இது ஆளுடைய அடிகள்‌ அருண்மாலைப்‌ பாட்டு. இருவாச
கத்தை ஓதக்‌ கேட்ட பொழுது க&ீழ்ப்பறவைச்‌ சாதிகளும்‌
வேட்டமுறும்‌ பொல்லா விலங்குகளும்‌ மெய்ஞ்ஞான
தாட்டமுறும்‌ என்கிறார்‌. பொல்லா விலங்கு என்றும்‌ கீழ்ப்‌
பறுவைச்சாதிகளும்‌ என்று கூறியதேன்‌, பசு முதலியவை
சாதுவான நல்ல விலங்குகள்‌. புலி சிங்கம்‌ முதலியவை பிற
உயிரினங்களுக்குத்‌ இங்கு செய்யும்‌ பொல்லா விலங்குகள்‌.
கிளி புறா போன்றவை காய்‌ சுனி கொட்டை தானியங்‌
சுளை உண்ணும்‌ மேலான பறவைகள்‌. கழுகு போன்றவை
புழு பூச்சிகள்‌ செத்தவை பிணங்கள்‌ முதலிய வற்றைத்‌
இன்னும்‌ மான பறவைச்‌ சாதிகள்‌ என்னும்‌ கருத்துப்படக்‌
கழ்ப்பறவைச்‌ சாதிகள்‌ என்றார்‌.
சாதி (ஜாதி) வடநூல்களில்‌ தான்‌ தொடங்குகிறது,
அங்கும்‌ சாதி இல்லை. வர்ணமே உண்டு, சதுர்வர்ணம்‌
என்று நான்கு வருணங்கள்‌ கூறப்பெறுகின்றன. வர்ணம்‌ -
சம்ஸ்கிருதம்‌. வருணம்‌ - தமிழ்வழக்கு, இரண்டுக்கும்‌
Ca gur® “i? ௬5? என்ற ஓர்‌ எழுத்துதான்‌.
சாதிப்பிரிவு
நான்கு வருணங்கள்‌ என்ற பிரிவு வேதத்தில்‌ தொடங்கப்‌
பெறுகிறது. வேதம்‌ முன்மொழிந்ததை மனுதர்மசாத்திரம்‌
வழிமொழிகிறது. பகவத்கீதை விளங்கந்தருகிறது.
பிராமணர்கள்‌ தலையிற்‌ பிறந்தவர்கள்‌,
க்ஷத்திரியர்கள்‌ தோளிற்‌ பிறந்தவர்கள்‌,
வைசியர்கள்‌ தொடையிற்‌ பிறந்தவர்கள்‌,
சூத்திரர்கள்‌ பாதத்திற்‌ பிறந்தவர்கள்‌,
40 சாதியும்‌ மதமும்‌

எனறு பேதமும்‌ புருஷசூக்தமும்‌ மனு தருமமும்‌ சொல்வது


பொருத்தமற்றது. சாதியைச்‌ கண்டிப்பவர்களெல்லாம்‌
சாதியைக்‌ கண்டிப்பதைவிடச்‌ சாதிகள்‌ தோன்றிய இந்த
வகையைத்தான்‌ முதலில்‌ கண்டிக்கறார்கள்‌. இதையே பின்‌
வருமாறு கூறினால்‌ அது பொருத்தமாக இருக்கும்‌.

மனித சமுதாயமாயே உடலுக்கு, அதாவது மனித


சமூதாயம்‌ முழுவதையும்‌ ஓர்‌ உடம்பு என்று வைத்துக்‌
கொண்டால்‌ அதற்குத்‌ தலைபோன்றவர்கள்‌ பிராமணர்‌
கள்‌, தோள்களைப்‌ போன்றவர்கள்‌ க்ஷத்திரியர்கள்‌, இடை
(இடுப்பு) போன்றவர்கள்‌ வையர்கள்‌, பாதம்‌, கால்‌, அடி
போன்றவர்கள்‌ சூத்திராகள்‌ என்றால்‌ பொருத்தமாக
இருக்கும்‌.
குணங்களாலும்‌ கர்மத்தாலும்‌ (தொழிலாலும்‌) சாதிப்‌
பிரிவு ஏற்படுத்தப்பெற்றது என்று பகவத்கதை கூறும்‌
விளக்கம்‌ உண்மையானதே; ஏற்றுக்கொள்ளத்தக்கதே,
தொழில்‌ ஒழுச்கம்‌ பற்றிச்‌ சாதிகள்‌ ஏற்படுத்தப்‌
பெற்றன தத்துவ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சமயங்கள்‌
ஏற்படுத்தப்‌
பெற்றன என்று வள்ளற்பெருமான்‌ இராமலி
ங்க அடிகளும்‌
கூறுகிறார்‌.

சமுதாயத்துக்கு வேண்டிய தொழில்கள்‌


எவ்வளவோ
பல இருந்தாலும்‌ முக்கியமாக நான்கு தொழில்களை
கொண்டு நான்கு பிரிவுகளை ஏற்படுத்தினா
ர்கள்‌,
கல்வி, காவல்‌, வணிகம்‌, வேளாண்மை என்பது
அத்நான்கு தொழில்கள்‌ அல்லது துறைகள்‌,

கல்வி - எஜுகேஷன்‌ 141021100)


காவல்‌ - HL WedicivrCoaxeér Administration
ஊரன்‌ அடிகள்‌ 41

வணிகம்‌ - காமரீஸ்‌ 0 ராரா06

வேளாண்மையும்‌ இகர தொழில்களும்‌ - அக்ரிகல்ச்சர்‌


அண்டு இண்டஸ்டிநி Agriculture and Industry
என்று நான்கு பெரும்‌ பிரிவைக்‌ கொண்டார்கள்‌.
சல்வி, மூளை அழைப்பு. கல்விக்கு மூளை பலம்‌
இன்றியமையாதது.
காவலுக்குத்‌ தோள்பலம்‌ (புஜபலம்‌ - தோள்வலி)
இன்றியமையாதது.
வணிகத்திற்கு இலை நடுத்தரமாக இருந்தால்‌
போதுமானது.
வேளாண்மையும்‌ இதர பலதொழில்களும்‌ உடலுழைப்பு
அதற்கு உடல்பலம்‌ இன்றியமையாதது.

ஒரே பெருங்கூட்டமாக (பெரும்பரப்பாக) இருந்த


சமுதாயத்தை, மக்களை, அவரவர்‌ தகுதிக்கும்‌
இறமைக்கும்‌ ஏற்ப (வயலுக்கு வரப்பு கட்டுவதைப்போல)
நான்கு வகைப்படுத்தினார்கள்‌.
மூளை பலமுள்ளவர்களை (இக்கால மொழியில்‌
சொல்லப்போனால்‌ அறிவுலீவிகளை)த்‌ தெரிந்தெடுத்து
அவர்களை ஒரு கூறாக்கிக்‌ கல்விப்‌ பணியை அவர்களிடம்‌
ஒப்படைத்தார்கள்‌. சல்வித்துறை முதன்மைத்‌ துறையாக,
கதலைமைத்துறையாக, தலையான துறையாகக்‌ கொள்ளப்‌
பெற்றது; மூதலிடத்தைப்‌ பெற்றது.
தோள்வலிமை (புஜபலம்‌) உள்ளவர்களையெல்லாம்‌
ஒரு கூறாக்கி அவர்களிடம்‌ காவற்பணியை ஒப்படைத்‌
தார்கள்‌, காவல்துறை இரண்டாம்‌ இடத்தைப்பெற்றது.

மூளைபலம்‌ கல்வித்துறைக்கு வேண்டிய அளவு அதிக


மாச இல்லாமல்‌, தோள்பலம்‌ காவல்துறைக்கு வேண்டிய
42 சாதியும்‌ மதமும்‌

அளவு அதிகமாக இல்லாமல்‌, நடுத்தரமாக இருப்பவர்‌


களை ஒருகூறாக்கி அவர்களிடம்‌ வாணிகத்தை ஒப்படைத்‌
தார்கள்‌. வாணிபம்‌ மூன்றாவது இடத்தைப்‌ பெற்றது.

உடல்பலம்‌ மிகுந்த உடலுழைப்பாளர்களையெல்லாம்‌


ஒரு கூறாக்கி அவர்களிடம்‌ வேளாண்மையையும்‌ மற்ற பல
தொழில்களையும்‌ ஒப்படைத்தார்கள்‌. வேளாண்மையும்‌
தொழிலும்‌ நான்காவது இடத்தைப்‌ பெற்றன,
சல்வியாளர்‌ அறிவுஜீவிகள்‌ மிகச்‌ சிலராகவே இருப்பர்‌,
சிறுபான்மை. காவலாளரும்‌ அப்படியே,

வணிகர்‌, மூன்‌ இருவரைவிட மிகுதியாக இருப்பர்‌.

வேளாளர்‌, ஏனைய எல்லாரையும்விட மிகுதியாக


இருப்பர்‌. பெரும்பான்மை.

வேளாளர்களே சமுதாயத்திற்கு அடிப்படையானவர்கள்‌,


இவர்களது தொழிலாகிய வேளாண்மையும்‌ பிற பல
தொழில்களுமே ஏனைய எல்லாவற்றுக்கும்‌ அடிப்படை
யானவை.
உணவு இன்றேல்‌ உயிர்வாழ்க்கை இல்லை. “உண்டி
கொடுத்தோர்‌ உயிர்‌ கொடுத்தோரே, உண்டி முதற்றே
உணவின்‌ பிண்டம்‌'' என்பது புறநானுறு (18). புறநானூற

மட்டுமன்று, மணிமேகலையிலும்‌ * உண்டி கொடுத்தோர்‌
உயிர்‌ கொடுத்தோரே”? என்று சொல்லப்பெறுகிறது,
(11. பாத்திரம்‌ பெற்ற காதை 96). சோறுதான்‌
சொர்க்கம்‌, சோற்றுக்கு முத்தி என்றொரு பொருளுண்டு.
“சோற்மானை, சோற்றில்‌ உறும்‌ சுகத்தினானை” என்று
வள்ளலார்‌ பாடுகிறார்‌ (இருவருட்பா 3947). சமுதாயத்‌
துக்குச்‌ சோறு போடுவோர்‌ வேளாளர்‌, வயிற்றுக்குச்‌
சோறு போடாவிட்டால்‌ மூளை வேலை செய்யாது,
ஊரன்‌ அடிகள்‌ 43

சமுதாயத்துக்குத்‌ தலை (மூளை) அந்தணர்‌ (பிராமணர்‌


சமூதாயத்துக்குத்‌ தோள்கள்‌ அரசர்‌ (க்ஷத்திரியர்‌)
சமுதாயத்துக்கு இடை(இடுப்பு) வணிகர்‌ (வைசியர்‌)
சமூதாயத்துக்குப்‌ பாதங்கள்‌ (அடி) வேளாளர்‌ (சூதீதிரார்‌)
அடிதான்‌, மேலே உள்ளவற்றைத்‌ தாங்குகிறது. அடி
இல்லாவிட்டால்‌ இடை. இருக்காது. தோள்கள்‌ இரா, முடி
இருக்காது, முடி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
முக்கியம்‌, அதைவிட முக்கியம்‌ அடி. இறைவனது
இருமேனியில்‌ முடியைத்‌ திருமுடி. எனச்‌ சொல்வதைவிட
அடியைத்‌ திருவடி. என்று சொல்வதே பெருவழக்கு.
உன்னைவிட உன்‌ இருவடி இறந்தது, “'நின்னின்‌ சிறந்த
நின்தாள்‌ இணையவை?” என்றொரு பழம்‌ your
பாடுகிறார்‌ (பரிபாடல்‌ 4, கடுவன்‌ இளவெயினனார்‌
பாட்டு)
சமுதாயத்திற்கு அடிபோன்றவர்கள்‌, அடிப்படை
யானவர்கள்‌ வேளாளர்‌. சமுதாயத்‌ திருமேனிக்குத்‌
திருவடிகள்‌ வேளாளர்‌.
இடை வணிகர்‌
தோள்கள்‌ அரசர்‌
திருமுடி அந்தணர்‌
இடையையும்‌ தோள்களையும்‌ முடியையும்‌ அடிகளே
தாங்குகின்றன வணிகர்களையும்‌, அரசர்களையும்‌,
அற்தணர்களையும்‌ வேளாளர்களே, தாங்குகிறார்கள்‌.

சாதிப்பிரிவில்‌ ஏற்றத்‌ தாழ்வு


பிராமணர்‌, க்ஷத்திரியர்‌, வைசியர்‌, சூத்திரர்‌ என்று
வடமொழி நூல்கள்‌ கூறுவதைத்‌ தமிழ்‌ நூல்கள்‌ அந்தணர்‌,
அரசர்‌, வணிகர்‌, வேளாளர்‌ எனக்‌ கூறுகின்றன. அந்தணர்‌
44 சாதியும்‌ மதமும்‌

(பிராமணர்‌) எல்லாரினும்‌ மேலானவராகக்‌ கருதப்‌


பெற்றனர்‌. வேளாளர்‌ (சூத்திரர்‌) எல்லாரினும்‌ மானவ
ராகக்‌ கருதப்‌ பெற்றனர்‌. முதல்‌ மூன்று சாதியாரும்‌
மேலோராகக்‌ கருதப்‌ பெற்றனர்‌. தான்காவதாகிய
வேளாளரி 8ழோர்‌ எனப்‌ பெற்றனர்‌.
மேலோர்‌ மூவர்க்கும்‌ புணர்த்த கரணம்‌
கீழோரர்க்கு ஆகிய காலமும்‌ உண்டே”
என்னும்‌ தொல்காப்பியப்‌ பொருளதிகாரக்‌ கற்பியற்‌
சூத்திரத்தில்‌ (3) மேலோர்‌ என்றது அந்தணர்‌, அரசர்‌,
வணிகர்‌ என்னும்‌ மேல்‌ மூன்று வருணத்தாரை, ஈழோர்‌
என்றது நான்காவதாகிய வேளாளரை,.
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்‌
கீழ்ப்பால்‌ ஒருவன்‌ கற்பின்‌
மேற்பால்‌ ஒருவனும்‌ அவன்சுண்‌ படுமே “183
என்னும்‌ புறநானூற்றில்‌, **நாற்பால்‌?? என்பது நான்கு
சாதி; :8ழ்ப்பால்‌!”, * மேற்பால்‌”” என்பன இழ்ச்சாதி
மேற்சாதி, இச்செய்யுள்‌ முன்பும்‌ எடுத்துக்‌ காட்டப்‌
பெற்றது (பக்கம்‌ 13 காண்க),

அந்தணர்‌

பழந்தமிழ்‌ இலக்கியங்களில்‌ பார்ப்பார்‌ அந்தணர்‌


என்ற பெயர்களே வழங்கப்‌ பெறுகின்றன. பிராமணர்‌
என்ற பெயர்‌ இல்லை. பார்ப்பார்‌ அற்தணர்‌ என்பன
குணப்பெயராகவே அமைந்தன. பதார்த்தம்‌ பாராது
பரமே பார்த்திருப்பார்‌ பார்ப்பார்‌ (பார்ப்பணர்‌).
MDT ST -மை- அத்தண்மை (அழகிய குளிர்ந்த தன்மை),
அந்தண்மை உடையோர்‌ அந்தணர்‌.
இறைவனை “spars saps? என்கிறார்‌
திருவள்ளுவர்‌.
ஊரன்‌ அடிகள்‌ 45

“அறவாழி அந்தணன்‌ தாள்சேர்ந்தார்க்‌ கல்லால்‌


பிறவாழி நீந்தல்‌ அரிது?” - திருக்குறள்‌ 8
என்பது கடவுள்‌ வாழ்த்து அதிகாரத்துத்‌ இருக்குறள்‌.
அந்தணர்‌ என்போர்‌ அறவோர்‌ மற்‌ றெவ்வுயிர்க்கும்‌.
செந்தண்மை பூண்டொமுசக லான்‌. - திருக்குறள்‌ 30
என்பது நீத்தார்‌ பெருமை அதிகாரத்துத்‌ தஇருக்குகள்‌.
அந்தணர்‌ என்பது அழகிய தட்பத்தினை உடையார்‌ என
ஏதுப்பெயராதலின்‌?' என்பது அதற்குப்‌ பரிமேலழகர்‌ உரை.
1*அந்தண்மை பூண்ட அருமறை அநீதத்துச்‌
சிற்தைசெய்‌ அந்தணர்‌!” - இருமூலரீ இருமற்திரம்‌ 234,

*“அந்ததிதை அணவுவார்‌ அத்தணர்‌; என்றது, வேதாந்‌


தத்தையே நதோக்குவாரென்றவாறு”' - திருமுருகாற்றுப்‌
படை 96 ஆம்‌ அடியில்‌ வரும்‌ “அந்தணர்‌?” என்பதற்கு
நசீனார்க்கினியர்‌ உரை. “அந்தணர்‌ - வேதாந்தத்தை
எக்காலமும்‌ பார்ப்பார்‌” .. மதுரைக்காஞ்சி (474),
தச்னொர்க்கினியர்‌ உரை. *:அந்தத்தை அணவுவார்‌
அறிதணர்‌: என்றது வேதகாந்ததினதயே பொருளென்று
மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு"** - சுவித்தொகை,
Slade வாழ்த்து, நச்சினாரீச்சினியர்‌ உரை,

திருமூலர்‌ திருமந்திரத்தில்‌ முதல்‌ தந்திரத்தில்‌


*“அந்தணர்‌ ஓழுக்கம்‌!*? என்றே ஓர்‌ அதிகாரம்‌ உண்டு,
1 அந்தண்மைபூண்ட அருமறை ஒழுக்கத்துச்‌ சிந்தைசெய்‌
அந்தணர்‌”? என்று கூறும்‌ இிருமூலா்‌
சத்தியம்‌ இன்றித்‌ தனிஞானம்‌ தானின்றி
ஒத்த விடயம்விட்‌ டோரும்‌ உணர்வின்றிப்‌
பத்தியும்‌ இன்றிப்‌ பரன்‌ உண்மையின்றிப்‌
பித்தேறும்‌ மூடர்‌ பிராமணர்‌ தாம்‌ அன்றே. -231
என்றும்‌ சொல்லு£றொர்‌.
46 சாதியும்‌ மதமும்‌
*“அந்தண்மை””, *'செந்தண்மை'* என்ற சொற்கள்‌
இரு,வி.௪.வுக்கு மிகவும்‌ பிடித்தமரனவை. *அந்தண்மை"?
என்ற சொல்லை அவர்‌ தம்‌ பேச்சிலும்‌ எழுத்திலும்‌
அடிக்க வழங்குவார்‌. அவர்‌ எழுதிய திருக்குறள்‌
விரிவுரையில்‌ *“அந்தணர்‌ என்போர்‌ அறவோர்‌”? என்னும்‌
குறளுக்கு எழுதும்‌ உரை ஈண்டு நோக்கத்தக்கது. விரிவஞ்சி
இங்கு எடுத்துக்காட்டவில்லை தமது வாழ்க்கைக்‌ குறிப்பு
களை :*அந்தண்மை'' என்ற தலைப்பில்‌ சல பத்திகளுட
னேயே நிறைவு செய்கிறார்‌. ஈற்றில்‌ அந்தணர்‌ என்போரி
அறவோர்‌?” என்ற குறளை எடுத்துக்காட்டியே
மூடிக்கறார்‌. ளு
மறப்பினும்‌ ஒஓத்துக்கொளல்‌ ஆகும்‌ பார்ப்பான்‌
பிறப்பொழுக்கம்‌ குன்றக்‌ கெடும்‌ ~ 134
என்பது ஒழுக்கமுடைமை அதிகாரதிதுத்‌ திருக்குறள்‌,
வேதத்தை மறந்தாலும்‌ இரும்பக்‌ கற்றுக்‌ கொள்ளலாம்‌.
ஆனால்‌ பிறப்பொழுக்கம்‌ குன்றினால்‌ கெட்டே போகும்‌;
திரும்பக்‌ கொள்ள இயலாது. பார்ப்பாரின்‌ பிறப்பொழுக்கம்‌
என்ன? வேதம்‌ ஒதுதலா? அதுதான்‌ மறப்பினும்‌ (ஒத்துக்‌)
கொளல்‌ ஆகும்‌ என்று சொல்லியாயிற்றே. பின்‌, பிறப்‌
பொழுக்கம்‌ என்பதென்ன? எவ்வுயிர்க்கும்‌ செத்தண்மை
பூண்டொழுகும்‌ அந்தண்மைதான்‌ (அந்தணத்தன்மை
தான்‌),
அற்தண்மைக்குச்‌ சத்துவகுணம்‌ முக்கியம்‌, இன்றியமை
யாதது. சத்துவகுணமுடையோர்‌ சாதுவாகவே இருப்பர்‌,
ஆப்சு. பசு சாதுவானது அந்தணர்களும்‌ சாதுவான
வர்கள்‌. அதனால்தான்‌ **ஆவும்‌ ஆனியற்‌ பார்ப்பன
மாக்களும்‌?” என்று பாடினார்கள்‌. (புழதானூறு 9),
ஆன்‌--பசு, ஆனியல்‌ (ஆன்‌ இயல்‌) - பசுவின்‌ இயல்பு,
ஆனியற்‌ பார்ப்பன மாக்கள்‌ - பசுவின்‌ இயல்பையுடைய,
பசுப்‌ போன்ற சாதுவான பார்ப்பன மக்கள்‌,
ஊரன்‌ அடிகள்‌ 47
சங்க காலத்தில்‌ அரசர்கள்‌ ஒருவரோடொருவர்‌
போரிட நதேருங்கால்‌ போர்‌ தொடங்குமுன்‌
₹*அவும்‌ ஆன்‌இயற்‌ பார்ப்பன மாக்களும்‌
பெண்டிரும்‌ பிணியுடை யீரும்‌ பேணித்‌
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன்‌ இறுக்கும்‌
பொன்போல்‌ புதல்வர்ப்‌ பெறாஅதீரும்‌
எம்‌ அம்பு கடிவிடுதும்‌, நும்‌ அரண்‌ சேர்மின்‌ என
- புறநானூறு 9
பறையறிவிப்பர்‌, பசுக்கூட்டங்களையும்‌ பசுப்‌ போன்ற
பார்ப்பன மக்களையும்‌, பெண்களையும்‌, நோயாளரீ
களையும்‌ பிள்ளைப்பேறு பெறாதவர்களையும்‌ பாதுசாப்‌
பான இடங்களுக்குச்‌ சென்றுவிடும்படி. அறிவிப்பர்‌, இது
அக்காலப்‌ போர்‌ அறம்‌.

கண்ணகிக்கு நேரத்த கொடுமையால்‌, கண்ண௫யின்‌


வஞ்செனத்தால்‌, அக்கினித்‌ தெய்வம்‌ கண்ணகியின்‌ முன்‌
தோன்றி மதுரை மாநகரைத்‌ இப்பற்றி எரிந்து அழியச்‌
செய்யுமுன்‌,
பார்ப்பார்‌, அறவோர்‌, பசு, பத்தினிப்பெண்டிர்‌
மூத்தோர்‌, குழவி, எனும்‌ இவரைக்கைவிட்டு;
தீத்திறத்தார்‌ பக்கமே சேர்க என்று
கண்ணகி ஏவியதாகச்‌ சிலப்பதிகாரம்‌ கூறுகிறது,
(22 வஞ்சின மாலை 53- 55).
அன்றைய சமுதாயத்தில்‌ பார்ப்பனர்களுக்குத்‌ தனிச்‌
சிறப்பு இருந்தது. “பேணுதகு இறப்பிற்‌ பார்ப்பான்‌?
என்று தொல்காப்பியம்‌ கூறுகிறது. (தொல்‌, பொருள்‌,
செய்யுளியல்‌ 182) அரசர்களும்‌ அந்தணர்களுக்குப்‌ பணிந்து
நடத்தார்கள்‌. '*பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே”
என்பது பதிற்றுப்பத்து (63). செல்வக்கடுங்கோ வாழியாதன்‌
48 சாதியும்‌ மதழும்‌

என்னும்‌ சேரமன்னனை அவனது பல குணங்களையும்‌


ஒருங்குகூறி வாழ்த்திப்பாடும்‌ சுபிலர்‌ “பார்ப்பார்க்கு
அல்லது பணிபு அறியலையே'? என்று தான்‌ பாட்டைத்‌
தொடங்குகிறார்‌. பணிபு - பணிவு. பாட்டின்‌ முதலடியே
தொடக்கமே இது தான்‌. “நின்‌ முன்னோர்‌ எல்லாம்‌
பார்ப்பார்‌ நோவன செய்யலர்‌'' என்று சோழன்‌ நலங்‌
கிள்ளியின்‌ தம்பி மாவளத்தானைத்‌ தாமப்பல்கண்ணார்‌
பாடுகிறார்‌ (புறநானூறு 43).
அரசர்‌
சேரர்‌ சோழர்‌ பாண்டியர்‌ என்ற மூவரும்‌ முடியுடை
மூவேந்தர்களாகத்‌ திகழ்ந்தார்கள்‌, பேரரசர்களாகத்‌
திகழ்ந்தார்கள்‌. இவர்களிலும்‌ சிறப்புக்‌ குறைந்த நிலையில்‌
சிற்றரசர்கள்‌ பலர்‌ இருந்தார்கள்‌; வேளிர்‌ போன்றோர்‌.
சேரர்‌ சோழர்‌ பாண்டியர்‌ என்பன குடிப்பெயரீ என்று
பழைய இலக்கியங்களும்‌ அவற்றின்‌ உரைகளும்‌ கூறுகின்றன.
*'பழங்குடி-தொன்று தொட்டு வருன்றகுடி. தொன்று
தொட்டு வருதல்‌: சேர சோழ பாண்டியர்‌ என்றாற்‌
போலட்‌ படைப்புக்‌ காலந்‌ தொட்டு மேம்பட்டுவருதல்‌??
என்பது பரிமேழகர்‌ உரை. (இருக்குறள்‌ 955)
சேரர்குடி, சோழர்குடி, பாண்டியர்குடி என்ற குடிப்‌
பெயர்கள்‌ இப்போது வழக்கிலில்லை, சேரர்குடி இன்றைய
கொங்குவேளாளக்‌ கவுண்டர்களாக இருக்கலாம்‌ ஆய்‌
என்று சேரமன்னர்கள்‌ பெயரீ வைத்துக்‌ கொண்டிருந்‌
தார்கள்‌, இன்றும்‌ கொங்கு வேளாளக்‌ சவுண்டர்கள்‌
ஆய்கி கவுண்டர்‌ என்று பெயர்‌ வைத்துக்‌ கொள்றொரீகள்‌.
அண்மைக்‌ சாலம்‌ வரை ஜமீன்‌ தாரிகளாகவும்‌ பட்டக்‌
காரர்களாகவும்‌ இருந்திருக்கிறார்கள்‌. இப்போதும்‌
பட்டக்காரர்கள்‌ என வழங்கப்‌ பெறுறார்கள்‌.
சோழர்கள்‌ இன்றைய சோழநாட்டு (தஞ்சாவூர்‌)க்‌ கள்ளர்‌
ஊரன்‌ அடிகள்‌ 49

களாக இருக்கலாம்‌. சைவத்‌ தமிழறிஞர்‌ நாவலர்‌ பண்டித


தமூ. வேங்கடசாமி நாட்டார்‌. “கள்ளர்‌ சரித்திரம்‌?"
என்றொரு நாலே எழுதியுள்ளார்‌ படைவீரர்களின்‌ பட்டப்‌
பெயர்களாக ஏறத்தாழ முந்நாறு பட்டப்பெயர்சகளை அதிற்‌
குறிப்பிட்டுள்ளார்‌. பாண்டியர்கள்‌ இன்றைய மதுரை
இராமநாதபுரம்‌ மாவட்ட மறவர்களாக (தேவர்களாக)
இருக்கலாம்‌ இன்று வறை சேது வேந்தர்கள்‌ (சேதுபதி
மன்னர்கள்‌) தேவர்‌ இனத்தவர்களே. பாண்டித்துரைத்‌
தேவர்‌ முதலிய ஜமீன்தார்கள்‌ (குறுநில மன்னர்கள்‌) பலர்‌
தேவர்களே கொங்குநாட்டுக்‌ கவுண்டர்‌, சோழநாட்டுக்‌
கள்ளர்‌, பாண்டியநாட்டு மறவர்‌ இனத்தவர்களே
முன்னாளில்‌ முடியுடை மூவேந்தர்களாக, சேர சோழ
பாண்டியர்சளாகதீ திகழ்ந்திருக்கிறார்கள்‌. பின்னாளில்‌
குறுநில மன்னர்களாகவும்‌ படைத்தலைவர்களாகவும்‌
விளங்கியிருக்கிறார்கள்‌.

சரீமன்‌(சர்மா) என்ற பட்டப்‌ பெயர பிராமணர்‌


களுக்கும்‌, வாமன்‌ (வாமா) என்ற பட்டப்பெயர்‌ க்ஷத்‌ திரியா்‌
களுக்கும்‌, குப்தன்‌ (குப்தா) என்ற பட்டப்பெயர்‌ வைசியர்‌
களுக்கும்‌, தாசன்‌ (தாஸ்‌) என்ற பட்டப்‌ பெயர்‌ சூத்திரா
களுக்கும்‌ உரியதென வடமொழித்‌ தர்ம சாத்திரங்கள்‌
கூறுகின்றன. மகேந்திரவர்மன்‌, நரசிம்மவர்மன்‌, நந்தி
வர்மன்‌ முதலிய பல்லவ மன்னர்கள்‌ வர்மன்‌ என்று பெயர்‌
பூண்டிருந்தனர்‌, ராஜா ரவிவர்மா என்ற பெயரும்‌
கருதத்தக்கது,
வன்னியர்கள்‌ வன்னியகஷத்திரியர்‌ என்று இப்போதும்‌
வழங்கப்பெறுகின்‌ றனர்‌. மூன்னாளில்‌ குறுநிலமன்னார்‌
களாகவும்‌ படைத்தலைவர்களாகவும்‌ விளங்கனர்‌,
அரியலூர்‌ உடையார்பாளையம்‌ ஐமீன்சார்கள்‌
வன்னியர்களே.
ou சாதியும்‌ மதழும்‌

ராஜா, ராஜா என்ற பட்டப்பெயர்களை


யுடையவர்கள்‌ க்ஷத்திரியர்கள்‌ என்பர்‌. ராஜபாளையம்‌
முதலிய ஊர்களில்‌ இப்போதும்‌ வாழ்கின்றனர்‌.
மராட்டிய மன்னர்கள்‌ க்ஷத்திரியரீகள்‌. அவர்கள்‌
வழிவந்த தஞ்சாஷூர்‌ மாராட்டிய மன்னர்கள்‌ நூற்றைம்பது
ஆண்டுகளுக்குமுன்பு வரை ஆட்சி செய்தனர்‌. இப்போதும்‌
கெளரவ இளவரசுப்பட்டத்துடன்‌ விளங்குகின்றனர்‌.

தமிழ்‌ அரசர்கள்‌ ஒருவரோடு ஒருவர்‌ போரிட்டு


அழித்தார்கள்‌ என்பதைத்தவிர வேறு பெருங்குறைகள்‌
கூறுவதற்கில்லை அரூயல்‌ அறத்தை (க்ஷத்திரிய
தர்மத்தை) அவ்வக்‌ காலத்திற்‌ கேற்றவாறு கடைப்பிடித்து
நல்லாட்சியே செய்திருக்கிறார்கள்‌. உலகெங்கும்‌ முடியரசு
ஒழிந்து குடியரசு நிலவும்‌ இக்காலத்திலும்‌ அரசுகள்‌
ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொண்டு நாட்டையும்‌
மக்களையும்‌ அழிக்கும்‌ கொடுமை உள்ள போது, அக்கால
முடியரசர்கள்‌ போரிட்டு அழிந்தஇல்‌ வியப்பென்னை?

வணிகர்‌
தமிழ்வணிகரின்‌ வாணிகம்‌ கடைவீதிகளில்‌ மட்டுமன்று,
கடல்களிலும்‌ கொடிகட்டிப்‌ பறந்தது. தெருஓர வாணிகத்‌
திலிருந்து கப்பல்வாணிசகம்வரை செய்தனர்‌. ஏற்றுமதி
இறக்குமதி வாணிகம்‌ செய்தனர்‌, தராசுமுனை தவறாது
செய்தனர்‌. அந்தணர்க்கு முக்கோல்‌, தருப்பைக்கோல்‌,
அரசர்க்கு செங்கோல்‌. வணிகரிக்குத்‌ துலாக்கோல்‌,
உழவரிக்குச்‌ (வேளாளர்க்கு) ஏர்க்கோல்‌, இவற்றில்‌ எக்‌
கோலும்‌ கோடக்கூடாது, வளையக்கூடாது, நேராக
இருக்கவேண்டும்‌, நேர்மையாக இருக்கவேண்டும்‌.
துலாக்‌
கோல்‌ (தரா) இக்காலத்தில்‌ நீதி (தேவதையின்‌ சின்ன
மாகவும்‌ கொள்ளப்பெறுகிறதன்றோ?
ஊரன்‌ அழகள்‌ 5ம்‌

**தமவும்‌ பிறவும்‌ ஒப்பநாடி


கொள்வதாஉம்‌ மிகைகொளாது
கொடுப்பதாஉம்‌ குறைகொடாது
பல்பண்டம்‌ பகர்ந்து வீசும்‌"? — 209-11
என்பது பட்டினப்பாலையுள்‌ காவிரிப்பூம்பட்டினத்து
வணிகர்‌ வாழ்க்கை மூறையைக்‌ கூறுவது, வியாபாரிகள்‌
சரக்குகளை வாங்கும்போது ஏமாற்றி அதிகமாக வாங்கிக்‌
கொள்ளக்‌ கூடாது. விற்கும்போது ஏமாற்றிக்‌ குறைத்துக்‌
கொடுத்துவிடக்கூடாது. தம்முடைய பொருளையும்‌ பிற
ருடைய பொருளையும்‌ சமமாக ஒப்பகீ கருதவேண்டும்‌.
-தமவும்‌ பிறவும்‌ ஒப்பநாடிச்‌ கொள்வதூம்‌ மிகைகொளாது
கொடுப்பதாம்‌ குறை கொடாது" என்பது இதுதான்‌.
இதற்குமேல்‌ :*பல்பண்டம்‌ பகரிந்து வீசும்‌” என்பதற்கு
நச்சினார்கினியர்‌ கூறும்‌ உரைதான்‌, இப்படியும்‌
நடக்குமா? என்று வியக்கச்செய்யும்‌ உரை. பகரித்து
வீசும்‌ — இலாபத்தை வெளிப்படையாகச்‌ சொல்லிக்‌
கொடுக்கும்‌?” என்பது நச்சனாரக்கினியர்‌ உரை. வணிகர்கள்‌
இலாபத்தை வெளிப்படையாகச்‌ சொல்லி விற்பனை
செய்வரோ? அந்நாளில்‌ செய்தனர்‌.

வைூயருள்‌ தனவைசியர்‌, பூவைசியர்‌, கோவைகசியரி


என முப்பிரிவு கூறப்பெறுகிறது. தனவைசியர்‌ நாட்டுக்‌
கோட்டை நகரத்தார்‌. பூவைசியரீ நிலவுடைம ையாளராச
இருக்கக்கூடும்‌. கோவைசியர்‌ பசுப்பண்ணை வைத்திருப்‌
போராகக்‌ கூடும்‌. வைசியர்‌ அறுதொழிலில்‌ நிரை
யோம்பலும்‌ (பசுக்‌ காத்தலும்‌) ஒன்றென்பது முன்னரே
கூறப்பெற்றது.

வேளாளர்‌
வேளாளர்‌ உழுதாண்‌ வாழ்வினர்‌. வேளாளர்க்கு
உழவு ஒன்றே தொழில்‌ என்று தொல்காப்பி யம்‌ கூறுகிறது.
52 சாதியும்‌ மதமும்‌

"வேளாண்‌ மாந்தர்க்கு உழுதாண்‌ அல்லது இல்லென


மொழிப பிறவகை நிகழ்ச்சி'' என்னும்‌ தொல்காப்பியச்‌
சூத்திரம்‌ (பொருள்‌, மரபியல்‌ 81) முன்னரே மேலெடுத்துக்‌
காட்டப்‌ பெற்றது

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்‌ மற்றெல்லாம்‌


தொழுதுண்டு பின்‌ செல்பவர்‌, - குறள்‌ 1033
என்றார்‌ திருவள்ளுவர்‌.
சுழன்றும்‌ ஏர்ப்பின்னது உலகம்‌ அதனால்‌
உழந்தும்‌ உழவே தலை. 1031
என்பது திருக்குறள்‌. உழுவார்‌ உலகத்தார்க்கு ஆணி?
என்பதும்‌ அவரி வாக்கு (1032), சில சாரார்‌ அந்நாளில்‌
உழுதொழிலை உரிய அளவு மதிக்கவில்லை, இழிதொழில்‌,
கீழ்க்கடைத்‌ தொழில்‌ என்று கருதினர்‌. அதனால்‌ தான்‌
இருவள்ளுவர்‌ உழுதொழிலின்‌ உயர்வை உயர்த்திப்‌ பீடிக்க
ஒரு அதிகாரமே செய்தார்‌ போலும்‌,

உணவு இன்றேல்‌ உலகம்‌ இல்லை, உயிர்‌ வாழ்வு


இல்லை. உழவின்றேல்‌ உணவில்லை. *உண்டிகொடுத்‌
தோர்‌ உயிர்‌ கொடுத்தோரே?! என்பது முன்னரே எடுத்துக்

காட்டப்‌ பெற்றது. வேளாளரின்‌ தனிச்சிறப்பு விருந்‌
தோம்பல்‌, *$வளாளன்‌ என்பான்‌ விருந்து இருக்க
உண்ணாதான்‌"? என்பது இரிகடுசம்‌ (12). இது ஒரு பழ
மொழியாகவே வழங்குகிறது.

உழுவித்துண்போர்‌, உழுதுண்போர்‌ என வேளாளரில்‌


இருவகையர்‌ உண்டென்பது மேலோர்‌ (pen nen to
நால்வர்க்கும்‌ உரித்தே", மன்னர்‌ பாங்கிற்‌ பின்னோர்‌
ஆகுப?? என்னும்‌ தொல்காப்பியப்‌ பொருளதிகார அகதி
இணையியற்‌ சூத்திரங்களுக்கு நச்சினார்க்கினியர்‌ வரையும்‌
,கரையால்‌ தெரிகிறது,
ஊரன்‌ அடிகள்‌ 53

'உமுவித்து உண்போரும்‌ உழுது உண்போரும்‌


என... வேளாளர்‌ இருவகையரென்ப...... அவருள்‌
உழுவித்துண்போர்‌ மண்டிலமாக்களுநீ தண்டத்‌
தலைவருமாய்ச்‌ சோழநாட்டுப்‌ பிடவூரும்‌ அழுந்தாரும்‌
நரங்கூரும்‌ நாவூரும்‌ ஆலஞ்சேரியும்‌ பெருஞ்சிக்கலும்‌
வல்லமுூங்‌ இழாரும்‌ முதலிய பதியிற்றோன்றி
வேளெனவும்‌ அரசெனவும்‌ உரிமை யெய்தினோரும்‌,
பாண்டி நாட்டுக்‌ காவிதிப்பட்ட மெய்தினோரும்‌,
குறுமுடிக்குப்‌ பிறந்தோர்‌ மூதலியோருமாய்‌ மூடியுடை
வேந்தர்க்கு மகட்சொடைக்கு உரிய வேளாளராகுப.
என்பது நச்ரினார்க்கினியருரை

உழுவிதீது உண்போர்‌ பெருநிலக்கிழார்கள்‌, நில


வுடைமைக்காரர்கள்‌, மிராஸ்தார்கள்‌, ஆள்‌ வைத்து
வேலை வாங்க விவசாயம்‌ செய்வோர்‌. உமுது உண்போர்‌
நிலதீதஇல்‌ வேலை செய்பவர்‌, விவசாயத்‌ தொழிலாளரிகள்‌
என்று கொள்ளலாம்‌. உமுவித்து உண்போர்‌, அரசில்‌
பதவியும்‌ பட்டமும்‌ பெற்றுப்‌ பெருமக்களாக வீளங்கினரி.
உழுதுண்போர்‌ நிலத்தில்‌ கூலி வேலை செய்து பொது
மக்களாக விளங்கியிருப்பர்‌. இருவகை வேளாளருள்‌
உழுவித்து உண்போர்‌ *உயர்ந்த வேளாளர்‌” என்று
இலவிடத்துக்‌ குறிக்கப்‌ பெறுகின்றனர்‌. எனவே உழுதுண்‌
போர்‌ தாழ்ந்தவர்‌ என்பது தானே பெறப்படும்‌. இவர்களே
பின்னாளில்‌ தாழ்த்தப்பட்டோராயிருக்கக்‌ கூடும்‌.

18-வகைச்‌ சாதிகள்‌

*பள்ளுப்பறை பதினெட்டு சாதிகளும்‌?” என்றொரு


உலக வழக்கு வழங்குகிறது. அந்தணர்‌ அரசரி வணிகர்‌
வேளாளர்‌ என்ற நான்கு சாதியாரைத்‌ தவிர மற்ற
கலைஞர்கள்‌ தொழிலாளர்கள்‌ பலரையும்‌ பதினெட்டு
வகையாகப்‌ பிரித்துப்‌ 18-வகைச்‌ சாதியார்‌ என வழங்கினர்‌
54 சாதியும்‌ மதமும்‌
போலும்‌. *பள்ளுப்பறை பதினெட்டு வகுப்பார்‌?" என்று
வழங்குவதை ஆராய்ச்‌ அறிஞர்‌ துடிசைகிழார்‌ சிதம்பர
னாரும்‌ கழகத்‌ தமிழ்‌ வினாவிடை முதற்புத்தகத்தில்‌
எடுத்துக்‌ காட்டுகிறார்‌.
பதினெண்‌ புராணங்கள்‌, பதினெட்டு ஸ்மிருஇகள்‌,
பதினெண்‌ கணங்கள்‌, சங்க இலக்கயெங்கள்‌ பாட்டும்‌
தொகையுமாகப்‌ பதுனெட்டு, பதினெண்‌ கீழ்க்கணக்கு,
பதினெண்‌ நிலங்கள்‌1, பதினெண்‌ மொழிகள்‌£, பதினெண்‌
மடங்கள்‌, பதினெண்‌௫த்தர்கள்‌, பதினெட்டுப்‌ படிகள்‌ என
அவ்வப்போது வழக்குகள்‌ தோன்றியது போன்று ஒரு
காலத்தில்‌ பதினெட்டு வகைச்‌ சாதிகள்‌ அல்லது வகுப்புகள்‌
என்ற வழக்கும்‌ தோன்‌ றிவிட்டதுபோலும்‌.

**வேந்துவினை யியற்கை”' என்னும்‌ சூத்திரத்இற்கு


உரை வரையும்‌ நச்சனொர்க்கினியர்‌ “இது மலயமாதவன்‌
நிலங்கடத்த நெடுமுடியண்ணலுழை தரபதியருடன்‌
கொணர்ந்த பதினெண்வகைக்‌ குடிப்பிறந்த வேளிர்க்கும்‌
வேந்தன்றொழில்‌ உரித்தென்கிறது?”? என்றெழுதுஇன்றார்‌,
'*பதினெண்குடிவேளிர்‌'* என்பது எண்ணத்‌ தக்கது
அறிஞர்கள்‌ (புலவர்கள்‌)
நான்கு சாதியாருள்ளும்‌ புலவர்கள்‌இருந்தனர்‌. கபிலர்‌,
உறையூர்‌ ஏணிச்சேரி முடமோ?ியார்‌. கடியலூர்‌ உருத்திரங்‌
கண்ணனார்‌, பெருங்குன்றார்ப்‌ பெருங்கெளசிசனார்‌,
பாலைக்‌ கெளதமனார்‌, குமட்டூர்க்கண்ணனார்‌,
தாமப்பல்கண்ணனார்‌ மூதலியோர்‌ அந்தணர்‌.
பாண்டியன்‌ அறிவுடைதம்பி, சோழன்நலங்கள்ளி,
"கோப்பெருஞ்சோழன்‌, பாலை பாடிய பெருங்கடுங்கோ
1 தன்னூரல்‌, பெயரியல்‌ 16
3. பணடிதராவார்‌ பதினெட்டுப்‌ பாடையும்‌ - திருமூலர்‌
திருமந்திரம்‌ 39,
ஊரன்‌ அடிகள்‌. 55

முதலியோர்‌ அரசர்‌. கூலவாணிகன்‌ சாத்தனார்‌, அறுவை


வாணிகன்‌ இளவேட்டனார்‌, காவிரிப்பூம்பட்டினத்துக்‌
காரிக்கண்ணனார்‌ முதலியோர்‌ வணிகர்கள்‌ (கூலவாணிகம்‌-
பரசரக்கு வணிகம்‌. அறுவை வாணிகம்‌ - துணி வணிகம்‌.
இக்காலத்தில்‌ வாணிபம்‌ செய்வோருள்‌ எத்தனை பேருக்குத்‌
தமிழ்‌ புலமையுண்டு?) அம்பர்கிழான்‌ நாகனார்‌, வல்லங்‌
கிழான்‌ மாறனார்‌ முதலியோர்‌ வேளாளர்கள்‌. கணியன்‌
பூங்குன்றனார்‌ சோதிடம்‌ வல்லவர்‌, பத்தொன்பதாம்‌
நூற்றாண்டில்‌ மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளை,
ஆறுமுகநாவலர்‌, வள்ளலார்‌. இராமலிங்க அடிகள்‌
காலத்தில்‌ இருச்சராப்பள்ளி உறையூரில்‌ இருந்த முத்துவீர
உபாத்தியாயர்‌ கொல்லர்‌. முத்துவீரியம்‌ என்ஜஹறொரு
இலக்கண நாலே செய்திருக்கிழார்‌, பிறழ சமயத்தாரும்‌
புலவர்களாக விளங்கியுள்ளனர்‌. இளம்போதியார்‌, புத்த
மித்திரனார்‌ போன்றோர்‌ பெளத்தர்‌, திருத்தக்கதேவர்‌
மூதலியோர்‌ சமணர்‌. இஸ்லாமியரும்‌ கிறித்தவருங்கூடத்‌
தமிழ்ப்புலவர்களாக விளங்கியுள்ளனர்‌.

பல்வேறுவகைக்‌ கலைஞர்கள்‌
சங்ககாலத்தில்‌ இசை நாடகக்‌ கலைகள்‌ இறந்து
விளங்கின. பாணர்‌, விறலியர்‌, கூத்தர்‌, பொருநர்‌ என்று
இசைக்கலைஞர்‌ மரபினர்‌ பலர்‌ இருந்தனர்‌. பாணர்‌ யாழ்‌
வாூப்போர்‌. சீறியாழ்‌ (சிறியயாழ்‌) வாசிப்போர்‌ சிறுபாணர்‌.
பேரியாழ்‌ (பெரியயாழ்‌) வா௫ப்போர்‌ பெரும்பாணர்‌, சிறு
பாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை பொருது
ராற்றுப்படை நூல்கள்‌ சிறுபாணனையும்‌ பெரும்பாண
ளையும்‌ பொருநனையும்‌ ஆற்றுப்படுத்துவதாகப்‌ பாடி
யனவே.

இயற்றமிழ்‌, இசைத்தமிழ்‌, நாடகத்தமிழ்‌ எனத்‌


தமிழே முத்தமிழாக விளங்கிற்று , இம்முத்தமிழ்ப்பிரிவினை
6 சாதியும்‌ மதமும்‌
தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு. கலெப்பதிகாரம்‌ முத்தமிழ்க்‌
காப்பியம்‌. இயலிசை நாடகக்‌ காப்பியம்‌, அதன்‌
அரங்கேற்றுக்‌ காதை ஒரு கலைச்‌ சுரங்கம்‌. எத்தனை
வகையான இசைக்கருவிகள்‌.

இசையும்‌ நாடகமும்‌ நுண்கலைகள்‌, அழகுக்கலைகள்‌.


இவற்றைப்‌ போன்றே சிற்பமும்‌ நுண்கலை. வானளாவிய
கோபுரங்கள்‌ உயர்ந்த மதில்கள்‌, பரந்த மண்டபங்கள்‌,
வேலைபபாடுமிக்க அழூய சிற்பங்கள்‌, மாடமாளிகைகள்‌
கூடகோபுரங்கள்‌, எழுநிலை மாடங்கள்‌. இவற்றை
யெல்லாம்‌ செய்த சிற்பிகள்‌ எப்போப்பட்டவர்கள்‌ அரசா
களும்‌ சிற்பிகளுக்கு அடைப்பைச்‌ சுருள்‌ கொடுத்தனர்‌
என்ற வரலாறுகள்‌ எப்பேர்ப்பட்டவை.
பல்வேறு வகைத்‌ தொழிலாளர்கள்‌
மண்‌ வேலை செய்வோர்‌ குயவர்‌
கல்‌ வேலை செய்வோர்‌ கற்றச்சா்‌
மரவேலை செய்வோர்‌ தச்சர்‌.
பொன்வேலை செய்வோர்‌ தட்டார்‌, பொற்கொல்லர்‌
இரும்பு வேலை செய்வோர்‌ கருமார்‌, கொல்லர்‌
வெண்கலம்‌ முதலிய உலோக வேலை செய்வோர்‌
கன்னார்‌,
இவர்களெல்லாம்‌ பூணூல்‌ அணியும்‌ உரிமை பெற்றனர்‌.
இவர்களுள்‌ குயவர்‌ தவீர ஏனையோர்‌ விஸ்வப்பிராமணர்‌
எனப்‌ போபெற்றனர்‌.
பாலாவி போன்ற மிக மெல்லிய துணிகள்‌, பாம்புச்‌
சட்டம்‌ போன்ற நேர்த்தியான துணிகள்‌ நெய்யப்‌
பெற்றன நெசவாளர்களின்‌ செய்நோர்த்தஇத்திறன்‌ எப்பேர்ப்‌
| ட்டது சிறந்த நெசவாளிகள்‌ இறந்த இற்பிகளின்‌
கட்டை விரல்கள்‌ (பெருவிரல்கள்‌) பொறாமைக்காரர்‌
களால்‌ வாங்கப்பட்டன என்ற வரலாறுகள்‌ எத்தகையவை,
ஊரன்‌ அடிகள்‌ 57

நிலத்தில்‌, நிலத்தடியில்‌ சுரங்கத்தில்‌, நீரில்‌, கடற்‌


கரையில்‌, ஆழ்க௨லில்‌, மலையடிவாரத்தில்‌, மலைச்சரிவில்‌,
மலைமுகடுகளில்‌ தொழிலாளர்கள்‌ என்னென்னவெல்லாம்‌
தொழில்‌ செய்தார்கள்‌, மலைபடுபொருள்‌, கடல்படு
பொருள்‌, காடுபடுபொருள்‌ என்று என்னென்ன பொருள்‌
களையெல்லாம்‌ திரட்டினார்கள்‌. இரைடீடலோடியும்‌
திரவியம்‌ தேடினார்கள்‌. தமிழரின்‌ தாவாய்தான்‌
ஆங்கிலேயரின்‌ நேவி (18கா) ஆயிற்று என்பதை எண்ணும்‌
போது எவ்வளவு பெருமிதம்‌ ஏற்படுகிறது. சகப்பற்கலை
இன்று காணோமே. தமிழ்ச்சிறார்கள்‌ மழைநீரில்‌, காகிதக்‌
கப்பல்‌, அதிலும்‌ கத்திக்கப்பல்‌ செய்து மிதக்கவிட்டு
விளையாடினரே.

வண்ணார்‌, பரிகாரி

வண்ணார்‌, பரிகாரி ஆகிய இரு தொழிலாளர்‌ அல்லது


இரு சாதியார்‌ சமுதாயத்தில்‌ அன்றாட வாழ்வில்‌ பெரிதும்‌
இடம்‌ பெறுபவர்‌, இன்றியமையாத இடத்தைப்‌ பெறுபவர்‌.
துணி வெளுப்போர்‌ வண்ணார்‌. மயிர்‌ வினைஞர்‌ பரிகாரி.
மயிர்வினையோடு (முடி திருத்துவதோடு) மருத்துவமும்‌
(நோய்க்குப்‌ பரிகாரமும்‌) செய்வதால்‌ பரிகாரி எனப்‌
பட்டனர்‌. பரிகாரி குடும்பப்‌ பெண்பாலரே முன்பெல்லாம்‌
பிரசவம்‌ பார்ப்பர்‌. அதில்‌ அவர்களுக்கு இணையாக வேறு
யாரும்‌ இருந்ததில்லை. நான்கு சாதியாரின்‌ இல்லத்து
நிகற்வுகளிளெல்லாம்‌ நலந்திங்குகளிளெல்லாம்‌ இவ்விரு
வசையாரும்‌ இடம்‌ பெறுவர்‌. வண்ணார்‌ பரிகாரி இன்றித்‌
இருமணச்‌ சடங்கு நிகழாது, இழவுச்‌ சடங்கும்‌ நிகழாது.
மக்கள்‌ வாழ்வில்‌ உடையழகு (உடையலங்காரம்‌) Ope
வாளரையும்‌ தையற்காரரையும்‌, வண்ணாரையும்‌ இன்றி
அமையாது. ஆடவரின்‌ சிகையழகு (சிகை அலங்காரம்‌)
பரிகாரி இன்றி அமையாது. இவ்வலங்காரக்‌ கலைஞர்‌
களை, தொழிலாளர்களை, அந்நாளைய சமுதாயம்‌ நன்கு
58 சாதியும்‌ மதமும்‌,

பேணிப்‌ பாதுகாத்தது, இவர்களுக்கு வண்ணார்மானியம்‌,


பரிகாரி மானியம்‌ என்று நிலமான்யம்கூட விட்டது. இந்‌
நாளில்‌ இவர்கள்‌ நிலை இரங்கத்தக்கதாகத்தான்‌ உள்ளது.
இன்றைய தேவைக்கு ஏற்ற வருமானம்‌ இல்லை. சமுகத்தில்‌
உரிய மதிப்பும்‌ குறைவு.

பள்ளர்‌: பறையர்‌; சக்கிலியர்‌


, பள்ளத்தில்‌ வேலை செய்வோர்‌ பள்ளர்‌. பள்ளம்‌-
வயல்‌; தாழ்வான நிலம்‌, பள்ளத்தில்‌ - வயலில்‌ - உழவு
செய்வோர்‌ பள்ளர்‌, இவர்களது வாழ்வு, பணியைப்‌ பற்றிய
சிற்றிலக்கியம்‌ (பிரபந்தம்‌) பள்ளு, வயலும்‌ வயல்‌ சார்ந்த
இடங்களும்‌ மருதநிலம்‌. மருத நிலத்திற்குத்‌ தெய்வம்‌
இற்திரன்‌. இன்றும்‌ பள்ளர்கள்‌ இந்திரன்‌ என்று பெயர்‌
வைத்துக்‌ கொண்டிருப்பதைக்‌ காணலாம்‌, எமது ஊர்‌
பள்ளர்‌ தெருவில்‌ நல்லேந்திரன்‌ என்றொருவர்‌ இருந்தது,
யாம்‌ ஊரை விஃட்டு வந்து முப்பத்தைந்தாண்டுகளுக்குமேல்‌
ஆகியும்‌, இன்றும்‌ எமக்கு நினைவிருக்கிறது. பள்ளர்கள்‌
இன்று தேவேந்திரகுல வேளாளர்‌ என்று சொல்லிக்‌
கொள்வது பொருத்தமே. இந்திரன்‌ காதலித்த நிலமாகிய
மருதநில மக்கள்‌ இந்திரனைக்‌ குல முதல்வனாகக்‌ கொள்‌
வதில்‌ வியப்பென்ன? நிலவுடைமையாளராகிய உயர்த்த
வேளாளர்கள்‌ மிரரஸ்தார்கள்‌ இந்திரன்‌ பிள்ளை என்று
பெயரிட்டுக்‌ கொள்வதில்லை வேளாண்‌ தகொழிலாள
ராகிய ஏழைப்‌ பள்ளர்‌ இந்திரன்‌ (நல்லேந்திரன்‌) என்று
வைத்துக்‌ கொள்கிறார்‌. இந்திர குலம்‌ என்பதற்கு
இஃதொன்றையேகூடச்‌ சான்றாகக்‌ கொள்ளலாம்‌.
பள்ளர்கள்‌ பலர்‌ விவசாயத்‌ கொழிலாளர்களாக -
விவசாயக்‌ கூலிகளாக - இருந்தாலும்‌ சிலருக்குச்‌ சொந்த
நிலம்‌ உண்டு, எங்கள்‌ ஊரில்‌ பள்ளர்களுக்குச்‌ சொந்த
நிலம்‌ உண்டு. நிலத்தில்‌ கூலி வேலை செய்பவராக
ஊரன்‌ அடிகள்‌ 59

மட்டுமன்றி, நில உடைமையாளர்களாகவும்‌ பள்ளர்‌


உள்ளனர்‌. பள்ளர்களுக்கு மள்ளர்‌ என்ற பெயரும்‌ உண்டு,
இலக்கியங்களிற்‌ காணப்படுகிறது, பள்ளார்களில்‌ தலை
மக்கள்‌ மள்ளர்‌ என வழங்கப்‌ பெற்றிருக்கலாம்‌.
சங்ககாலத்திய பாணர்‌ இப்பள்ளர்‌ வகுப்பைச்‌
சேர்ந்தவர்‌ என்றே தோன்றுகறைது இசைக்கருவிகள்‌
எல்லாவற்றிலும்‌ சிறந்தது யாழ்‌, தலையானது யாழ்‌.
அதை வாூப்போர்‌ யாழ்ப்பாணர்‌. பாணர்‌ குடிப்‌ பெண்‌
பாலார்‌ பாடினி, *பாணர்‌ வருக! பாட்டியர்‌ வருக.
யாணர்ப்‌ புலவரொடு வயிரியர்‌ வருக?” என்பது மதுரைக்‌
காஞ்ச (749750) பாணருக்குப்‌ பெண்பால்‌ பாணிச்சியர்‌.
'பாட்டியர்‌ வருக” என்ற தொடருக்குப்‌ **பாணிச்சியர்‌
வருவாராக"? என்று நச்சினார்ச்கினியர்‌ உரையெழுது
இறார்‌. வயிரியர்‌ - கூத்தர்‌. பாணர்‌, விறலியர்‌, கூத்தர்‌,
பொருநர்‌ முதலிய இசைக்கலைஞர்களைப்‌ பற்‌றிய செய்தி
களே சங்க இலக்கியங்களில்‌ மிகுதியாக உள்ளன. இன்று
பாணர்‌ இல்லை, யாழ்‌ இல்லை, பாணர்‌ எங்கே போயினர்‌?
யாழ்‌ எங்கே போயிற்று? பாணரிடமும்‌ கூத்தரிடமும்‌
இருந்த இசையும்‌ கூத்தும்‌ (சங்கீதமும்‌ நாட்டியமும்‌)
அந்தணரிடம்‌ ஐயர்‌ ஐயங்காரிடம்‌ போய்விட்டன. இசை
யுலகில்‌ கொடிகட்டிப்‌ பறந்த செம்மங்குடியும்‌ அரியக்‌
குடியும்‌ (செம்மங்குடி சீனிவாசையரும்‌, அரியக்குடி
இராமாநுஜையங்காரும்‌) பிறப்பால்‌ பிராமணர்‌ அந்தணர்‌
எனினும்‌ செய்தொழிலால்‌ சிறப்பால்‌ பாணர்‌ வகுப்பிற்‌
சேர்க்கப்‌ பெற்வேண்டியவர்களே இன்ழைய இறந்த
வீணை வித்துவான்௧களெல்லாம்‌ பிடில்‌ வித்துவான்‌
களெல்லாம்‌, பரத நாட்டியக்‌ சலைஞர்களெல்லாம்‌
அவர்கள்‌ பிறப்பால்‌ எக்குடியினராயினும்‌ அந்தணரே
யாயினும்‌ செய்தொழிலால்‌, சிறப்பால்‌, பாணர்‌, பாடினியர்‌,
விறலியர்‌, கூத்தர்களே, அமரராகிவிட்ட பெரியவர்களின்‌
60 சாதியும்‌ மதமும்‌
பெயர்களை மட்டும்‌ மேலே எடுத்துக்‌ காட்டினோம்‌.
இன்று நம்மிடையே வாழ்வோரை எடுத்துக்காட்டினால்‌
கோபித்துக்‌ கொள்வரோ என்னவோ என்பதால்‌
எடுத்துக்‌ காட்டவில்லை.

யாழ்‌ என்றதும்‌ வணக்கத்திற்குரிய சுவாமி விபு


லானந்தர்‌ நினைவுதான்‌ வருகிறது. விபுலானந்தரிடம்‌
நேரிற்‌ பழகிப்‌ பயின்றவர்‌ அண்மையில்‌ அமரரான பண்‌
ணாராய்ச்சி வித்தகர்‌ குடந்தை ப. சுந்தரேசனார்‌. அவரது
மாணாக்கர்கள்‌ இன்று நம்மிடையே இசைப்புலமையிற்‌
சிறந்து விளங்கும்‌ பேராசிரியர்‌ மா. வயித்தியலிங்கம்‌,
அவரது தம்பியார்‌ மா. கோடிலிங்கம்‌. இவ்விருவருக்கும்‌
“*பெரும்பாணநம்பி'* என்ற பட்டம்‌. இவர்கள்‌ பிறப்பால்‌
பரணர்‌ அல்லர்‌. இசைவேளாளரும்‌ அல்லர்‌, சைவ
வேளாளர்‌. சைவச்‌ செட்டியார்கள்‌. றப்பாற்‌ பெரும்‌
பாணநம்பி ஆயினர்‌,

பறையறைவோர்‌ பறையர்‌. பறை வல்லிசை, துன்ப


காலத்தில்‌ முழங்கப்பெறுவது, பள்ளர்களுக்கு உழவுத்‌
தொழில்‌. பறையர்களுக்கு இழவு வீட்டில்‌ வேலை. பள்ளரி
களுக்கு வயலில்‌ வேலை, பறையர்களுக்குச்‌ சுடுகாட்டில்‌
வேலை. பெரும்பாலும்‌ பள்ளர்‌ சேரி வயற்புறத்தைச்‌
சார்ந்திருக்கும்‌. பெரும்பாலும்‌ பறையர்‌ சேரி இடுகாடு
சுடுகாடுகளைச்‌ சார்ந்திருக்கும்‌. இழவு சொல்லிப்போதல்‌,
இழவு வீட்டில்‌ பறையடித்தல்‌, சுடுகாட்டில்‌ பிணம்‌ சுடுதல்‌
ஆகியவை பழையர்‌ தொழில்‌. இழவுப்‌ பணியில்‌ ஊஇியம்‌
குறைவு. அஉழவுப்பணியில்‌ ஊதியம்‌ அதைவிடச்‌ றிது
மிகுதி, பள்ளர்களைவிடப்‌ பறையர்களில்‌ சொந்த நிலம்‌
உள்ளோர்‌ தொகை குறைவு, பள்ளர்களின்‌ பொருளா
காரத்தைவிடப்‌ பறையர்களின்‌ பொருளாதாரம்‌ குறை
வாகவே இருக்கும்‌. இறந்த விலங்குகளை அப்புறப்படுத்‌தப்‌
ஊரன்‌ அடிகள்‌ 61

புதைக்கும்‌ பணி செத்தமாடு தூக்குதல்‌ பறையர்களிடம்‌


விடப்பட்டது. அவற்றின்‌ தோலைஉரித்து விற்பனை செய்வ
தோடு அவற்றின்‌ மாமிசத்தையும்‌ தின்பாராயினர்‌, இவை
யெல்லாம்‌ அக்காலத்திய நிலை. இக்காலத்தில்‌ நிலைமை
மாறிவருகிறது. பெரும்பாலும்‌ சிற்றூர்களில்‌ பழையறிலை
ஓரளவு நீடித்தாலும்‌ பேரூர்களில்‌, நசுரங்களில்‌, பெருநகரஙி
களில்‌ நிலை பெருமளவு மாற்றமடைந்தே வருகிறது
சக்கிலியர்‌ தோல்‌ தொழில்‌ செய்வோர்‌, வேளாண்‌
மைக்கு நீரிறைக்கத்‌ தோற்பரை செய்வோர்‌, செருப்புத்‌
தைப்போர்‌. சங்க இலக்கியத்தில்‌ செருப்பு என்பது
வந்தாலும்‌ தொடுதோல்‌ அடிபுதைஅரணம்‌ என்ற பெயர்‌
களே இறப்பாக வழங்குகின்றன. வடமொழியில்‌ பாது
ரட்சை. தமிழில்‌ அடிபுதைஅரணம்‌. பாதங்களை ரக்ஷிப்பது
பாதரக்ை. அடியைப்‌ புதையச்‌ செய்து அரண்‌ செய்வது,
காப்பது, அடிபுதை அரணம்‌, சோதிடம்‌ பார்ப்பதும்‌
அரச கருமத்தில்‌ முரசறைவதும்‌, பறையர்க்குப்‌ புரோகிதம்‌
செய்வதும்‌ வள்ளுவர்‌ தொழில்‌. சக்கிலியர்க்கு வள்ளுவரி
என்பது சிறப்புப்‌ பெயர்‌.

பள்ளர்‌, பறையர்‌, சக்கிலியர்‌ தமிழ்நாட்டின்‌ பழங்‌


குடிகள்‌. ஆதலின்‌ ஆதிதிராவிடர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றனரி.
கோயிற்பூசை செய்யும்‌ வொசாரியர்கள்‌ ஆதிசைவர்‌ என்பது
போல என்க, பள்ளர்‌, பறையர்‌, சக்கிலியர்‌ என்ற
பெயர்கள்‌ அண்சமக்காலமாக அதிகம்‌ வழக்கிலில்லை.
மிகவும்‌ குறைந்துவிட் டது. ஆதிதிராவிடர்‌ என்பதே பெரு
வழக்காயிற்று, அதுவும்‌ காந்தியடிகளால்‌ ஹரிஜன்‌ என்று
மாறிற்று, இப்போது அதுவும்‌ மாறித்‌ தாழ்த்தப்பட்டோர்‌
தலித்‌ என்ற பெயர்களே வழங்கி வருகின்றன. தாழ்த்தப்‌
பட்ட தலித்‌ மக்களின்‌ இன்றைய பிரச்சனைகளைப்‌ பற்றிப்‌
பின்னே தக்க இடத்திற்‌ காண்போம்‌.
62 சாதியும்‌: மதமும்‌

நான்கு ஆசிரமங்கள்‌
வருணத்திற்குப்‌ பின்பு ஆரைமம்‌ சொல்லப்‌ பெறுகிறது.
வருணம்‌ ஆரெமம்‌ இரண்டும்‌ சேர்ந்து வருணாூரமம்‌
என்று சொல்லப்பெறுகறது. வருணாசிரம தர்மம்‌ என்று
சொல்லப்‌ பெறுகிறது. வருணம்‌ நான்கு. ஆ?ரமமும்‌
நான்கு ஆசிரமம்‌ வருணம்‌ போன்றதன்று, வருணம்‌
பிறப்பு மூதல்‌ இறப்பு வரை ஒரு பிறப்பு முழுவதும்‌
மாறாதது. ஆூரமம்‌ வயது நிலைக்கும்‌ வாழ்க்கை
நிலைக்கும்‌ ஏற்ப மாறுவது. பிரமசரியம்‌, கருஹஸ்தம்‌,
வானப்பிரஸ்தம்‌, சந்நியாசம்‌ என ஆசிரமங்கள்‌ (நிலைகள்‌)
, நான்கு.
திருமணம்‌ செய்து கொள்ளும்‌ வரை பீரமச்சரியம்‌,
பிரமச்சாரி.

வாழ்நாள்‌ முழுவதும்‌ இருமணம்‌ செய்து கொள்ளாமல்‌


தனியே வாழ்வது நைட்டிக பிரமச்சரியம்‌, முன்னது,
திருமணமாகும்‌ வரை பெளதிக பிரமச்சரியம்‌.

திருமணம்‌ செய்து கொண்டு கணவன்‌ மனைவியாகக்‌


குடும்ப வாழ்க்கை வாழ்வது கிருஹஸ்தம்‌ (இல்லறம்‌),
வயது முதிர்ந்த நிலையில்‌ - வயதான காலத்தில்‌ -
பிள்ளைகளிடம்‌ குடும்பப்‌ பொறுப்பை விட்டுவிட்டுப்‌
பெற்றோர்கள்‌ தோட்டந்துறவுகளில்‌ வனங்களில்‌ அமைதி
யாக வாழ்வது வானப்பிரஸ்தம்‌.

எல்லாவற்றையும்‌ துறந்துவிட்டுதி துறவு வாழ்க்சை


்‌- வாழ்வது சந்நியாசம்‌,

தமிழ்‌ நூல்களில்‌ இல்லறம்‌ துறவறம்‌ ஆய இரு


அறங்களே பேசப்பெறுகின்றன. பிரமச்சரியம்‌, வாளப்‌
ஊரன்‌ அடிகள்‌ 63
fe!

பிரஸ்தம்‌ ஆகிய இரண்டும்‌ இல்லறதீதின்பால்‌ அடக்கிக்‌


கொள்ளப்பெற்றது போலும்‌. திருக்குறளில்‌ இல்லறம்‌
துறவறம்‌ ஆகிய இரு பேரறங்களும்‌ சிறப்பாக விளக்சுப்‌
பெறுகின்றன, தொல்காப்பியத்தில்‌
காமம்‌ சான்ற சடைக்‌ கோட்‌ காலை
ஏமம்‌ சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும்‌ கிழத்தியும்‌
சிறந்தது பயிற்றல்‌ இறந்ததன்‌ பயனே
- பொருளதிகாரம்‌, கற்பியல்‌ 51
என்பது வானப்பிரத்தமாகிய கசானுறை வாழ்க்சையைக்‌
கூறுவதாம்‌.

இளமையில்‌ கல்விகற்கும்‌ மாணாக்க(மாணவ) நிலை


பிரமச்சரியம்‌. இல்லறத்தில்‌ ஈடுபடாமல்‌ வாழ்நாள்‌
முழுவதும்‌ பிரமச்சரியம்‌ காத்தல்‌ நைட்டிக பிரமச்சரியம்‌,
அதாவது, இல்லற இன்பத்தை மட்டும்‌ துறப்பது
நைட்டிக பிரமச்சரியம்‌, எல்லாவற்றையுமே துறப்பது
துறவு (சந்நியாசம்‌). இவ்வேறுபாட்டை நன்கு விளங்கிக்‌
கொள்ள வேண்டும்‌.

இல்லறம்‌ இயல்பு, பொது, துறவறம்‌ இறப்பு,


இல்லறமே பெரும்பான்மை. துறவறம்‌ இறுபான்மை,
இல்லறம்‌ எல்லார்க்கும்‌ உரியது. துறவறம்‌ அதற்குரிய
லருக்சே உரியது. எல்லாரும்‌ துறவறத்தாராக அல்லது
பெரும்பாலோர்‌ துறவறத்தாராக இருந்துவிட்டால்‌
உலகமே இயங்காது. உலக இயக்கமே இல்லறத்தில்‌ தான்‌
உள்ளது எல்லாரும்‌ அல்லது பெரும்பாலோர்‌ துறவறத்‌
தாராக இருத்தல்‌ இயலாது, இயற்கையின்‌ அமைப்பே
அப்படி,
64 சாதியும்‌ மதழும்‌
இல்லறத்தைக்‌ காட்டிலும்‌ துறவறம்‌ மரியாதைக்‌
குரியதாக விளங்குறது, இல்லறத்தாரைவிடத்‌ துறவி
களுக்கு மிகுந்த மதுப்பும்‌ மரியாதையும்‌ உள்ளன.
காரணம்‌ துறவும்‌ தொண்டும்‌. இல்லறத்தில்‌ தொண்டுக்கு
மிகுதியாக வாய்ப்பில்லை, முமுநேர வாய்ப்பில்லை.
றவறதிடுல்‌ தெதொண்டுக்கு மிகுந்த வாய்ப்பும்‌ முழுமை
தூன வாய்ப்பும்‌ உண்டு. தவம்‌ செய்த நேரம்போக மற்ற
நேரமெல்லாம்‌ தொண்டு செய்யலாம்‌ இராமகிருஷ்ண மடம்‌
போன்ற துறவு நிறுவனங்கள்‌ தொண்டு நிறுவனங்களாகத்‌
திகழ்வதைக்‌ காணலாம்‌ இல்லறத்திலிருந்து கொண்டும்‌
இயன்றவரை தொண்டு செய்யலாம்‌, ஞானியாக விளங்‌
கலாம்‌. திருவள்ளுவர்‌ போன்றோர்‌ இல்லறஞானிகளாக
விளங்ளனொர்‌. அருட்செல்வர்‌ டாக்டர்‌ நா. மகாலிங்கம்‌,
பரவ.லூர்‌ நல்லறச்செல்வார்‌ இல்லறஞானி திரு. நா. ூமலை
போன்றோர்‌ இந்நாளில்‌ இல்லறஞானிகளாக விளங்கு
கின்றனர்‌,

பிரமச்சரிய தர்மம்‌, இல்லறதரீமம்‌, வாளப்பிரஸ்த


தர்மம்‌, துறவற தர்மம்‌ என்று அவ்வந்‌ நிலைக்குரிய
தரீமங்கள்‌ உள்ளன. அவரவர்‌ அவரவர்க்குரிய தரு.மங்‌
களைக்‌ கடைப்பிடித்து வாழவேண்டும்‌.
பிரமச்சாரிகள்‌ பாலின்பத்தில்‌ ஈடுபடலாகாது.
இல்லறத்தார்‌ பிரமச்சரிய, வாளப்பிரத்த, துறவற வாழ்வு
வாழக்கூடாது, முழுமையாக இல்லறத்தில்‌ ஈடுபட
வேண்டும்‌, வானப்பிரத்தர்கள்‌ பாலின்பத்தை மறந்துவிட
வேண்டும்‌. துறவிகள்‌ அகத்துறவு புறத்துறவு ஆகிய
இரண்டிலுமே கவனமாக நடத்தல்‌ வேண்டும்‌ போலித்‌
துறவு கூடாது. உண்மைத்துறவு உள்ளத்துறவு வேண்டும்‌.
இத்நாளில்‌ வேடத்துறவு (துறவு லேடம்‌) மலிந்துவிட்டது.
ஊரன்‌ அடிகள்‌ 65

அவறவர்க்குரிய நிலையில்‌ தர்மத்தில்‌ நான்கு ஆசிரமத்‌


இனரும்‌ (நிலையினரும்‌) வாழவேண்டும்‌. அதுவே
வாழ்வாங்கு வாழ்தல்‌.

கோத்திரமும்‌ சூத்திரமும்‌

வருணத்தையும்‌ ஆரெமத்தையும்‌ அடுத்து, கோத்திரமூம்‌


சூத்திரமும்‌ வருகின்றன கோத்திரம்‌ என்பது குடிப்பெயர்‌,
சூத்திரம்‌ என்பது அப்பரம்பரைக்‌
வம்சபரம்பரைப்பெயர்‌
குரிய கோத்திரத்‌இற்குரிய தர்மசூத்திரங்கள்‌.
நான்கு சாதியாருக்குமே கோத்திரங்கள்‌ உண்டு
சூத்திரங்கள்‌ உண்டு. அந்தணர்கள்‌ கோத்திர சூத்திரங்‌
களைக்‌ கண்டிப்பாகச்‌ சடைப்பிடித்துவருகின்றனர்‌. ஏனைய
முற்பட்ட வகுப்பினரிடமும்‌ இவை ஓரளவு வழக்கிலுள்ளன.
கோத்திரங்கள்‌ ரிஷிகளிடமிருந்து தொடங்குகின்றன.
ரிஷி என்பதை இருடி எனத்‌ தமிழ்ப்படுத்துவர்‌. மூனிவா்‌
எனத்‌ த.மிழிற்‌ கூறுவர்‌. ரிஷிகள்‌ பலர்‌ எனினும்‌ அவருள்‌'
எழுவர்‌ சப்தரிஷிகள்‌ எனச்‌ சிறப்பாக வழங்கப்பெறுவர்‌.
1 அத்திரி, 2 பிருகு, 3. குத்ஸா்‌, 4, வசிஷ்டர்‌,
5. கெளதமர்‌, 6. காசியபர்‌, 7. ஆங்கிரஸர்‌. இவர்களின்‌
பேராலும்‌ இவர்களுக்குப்பின்‌ வந்த ரிஷிகளின்‌ பேராலும்‌
கோத்திரங்கள்‌ வழங்குகின்‌ றன. ்‌

பாரத்வாஜ-ஷடமர்ஷண-ஆக்ரேய-வாதுல -ஸ்ரீவத்ச-
கெளஸிக-விஸ்வாமித்ர-கெளண்டிந்ய-ஹரித-என ஒன்பது
கோத்திரங்கள்‌ இப்போது பெருவழக்காயுள்ளன.
புறநானூற்றில்‌ 166-ஆம்‌ பாட்டுக்குச்‌ ''சோணாட்டுப்‌
பூஞ்சாற்றூர்ப்‌ பார்ப்பான்‌ கெளணியன்‌ விண்ணந்தாயனை
ஆவூர்‌ மூலங்கிழார்‌. பாடியது" என்ற குறிப்பு உள்ளது.
விண்ணந்தாயன்‌ கெளண்டின்னிய கோத்திரத்திற்‌
பிறந்தவன்‌, ஆதலின்‌ கெளணியன்‌ விண்ணத்தாயன்‌ எனப்‌
66 சாதியும்‌ மதழும்‌
பட்டான்‌. திருஞானசம்பந்தரும்‌ கெளண்டின்னிய
கோத்திரத்திற்‌ பிறந்தவர்‌, அதனால்‌ கவுணியர்கோன்‌
என வழஙநிகப்பெற்றார்‌.
நச்சனார்க்கினியர்‌ பாரத்வாஜ கோத்திரத்திற்‌
பிறந்தவர்‌. பாரத்துவாசி நச்ரினார்‌.கஇனியர்‌ என வழங்கப்‌
பெறுவார்‌, ஆத்திரையன்‌ பேராூரியர்‌ ஆத்ரேய
கோத்திரத்தினர்‌. பிரகச்சரணம்‌, அஸ்டசகஸ்ரம்‌ என்பனவும்‌
கோத்திரப்‌ பெயர்கள்‌, அஷ்ட சசஸ்ரம்‌ 8000. எண்ணாயிரம்‌
குடும்பங்களைக்‌ கொண்டதால்‌ அட்டசகச்ரம்‌ என இக்‌
கோத்திரப்‌ பெயர்‌ குழுப்பெயராக அமைந்தது. தமிழ்த்‌
தாதிதா டாக்டர்‌ உ.வே. சாமிநாதையர்‌ அஷ்டசகஸ்ரப்‌
பிரிவைச்‌ சேர்ந்தவர்‌.
மூன்பெல்லாம்‌ ஒருவரையொருவர்‌ புதிதாகக்‌ கண்டால்‌
நாடு ஊர்‌ பேரோடு குலம்‌ கோத்திரம்‌ விசாரிக்கும்‌
பழக்கம்‌ இருந்தது. பெருங்கதையில்‌ ஒரிடத்தில்‌ நீர்‌
**இந்நாட்டார்‌ அலிர்‌, ஏனையர்‌ போல்வீர்‌, எந்நாட்டு
எவ்வூர்‌ எக்கோத்திரத்தீர்‌, யாமு நும்மை அறியப்போமோ,
வாய்மையாக மறையாது உரைமின்‌?? என்று கேட்பதும்‌
அதற்குப்‌ பதிலாக நாடு ஊர்‌ பெயர்‌ கோத்திரம்‌ கூறப்‌
பெறுவதும்‌ காணப்படுகிறது (3. மகதகாண்டம்‌
7:184-198
கோத்திரம்‌ குடிவழியாதலின்‌ சககோத்‌்தஇரத்தில்‌,
(தன்‌ கோத்திரதிஇலேயே) பெண்‌ கொள்ளலாகாது என்பது
பழைமை தொட்டே வழக்கத்திலுள்ளது. பாத்திரமறிந்து
பிச்சையிடு, கோத்துரமறிந்து பெண்ணைக்‌ கொடு என்பது
பழமொழி. இருமண அழைப்பிதழ்களில்‌ மணமக்களின்‌
பெற்றோரது கோத்திரத்தைக்‌ குறிப்பிடும்‌ வழக்கம்‌
இன்றுமுள்ளது, இது மணமக்கள்‌ ஒரே கோத்திரமன்று
வெவ்வேறு கோத்திரத்தினர்‌ என்று அறிவதற்காகவே.

கோயிலில்‌ அர்ச்சனை செய்யும்போது பெயா்‌


கோத்திரம்‌ நட்சத்திரம்‌ இம்மூன்றையும்‌ சொல்லியே
ஊரன்‌ அடிகள்‌ 67

செய்ய வேண்டுமென்ற மரபு இன்றும்‌ உள்ளது,


கோத்திரத்தை இவ்வளவில்‌ நிறுத்தி இனிச்‌ சூத்திரத்திற்கு
வருவோம்‌.

சூத்திரம்‌ என்பது ஒருவகைச்‌ சாத்திரநால்‌. வேசம்‌


களையும்‌ தரும சாத்திரங்களையும்‌ கொண்டு ரிஷிகள்‌
சூத்திரங்களைச்‌ செய்இிருச்கிறார்கள்‌. ஸ்மிருதிகள்‌ 18,
ஏனையவை பலவும்‌ 18, என்று பதினெட்டுப்‌
பதினெட்டாக அமைந்திருப்பது போன்றே சூக்கிரங்களம்‌
பதினெட்டு 1 போதாயணம்‌, 2. ஆபஸ்கசம்பம்‌,
3. சத்யாஷாடம்‌, 4. தீராஹயாயணம்‌ 5 ஆகஸ்த்யம்‌,
6. சாகல்யம்‌, 7. ஆசிவலாயனம்‌, 8. சாம்பவீயம்‌,
9. காதியாயனம்‌, 10, வைகானஸம்‌, 11, செளனகயம்‌,
12. பாரதீவாஜம்‌, 13. ஆக்னிவேச்யம்‌ 14, ஜைமினியம்‌,
15. மாதுன்யம்‌, 16. மாதியந்தினம்‌, 17, கெளண்டின்யம்‌,
18 கெளஷிதசம்‌.
இவற்றுள்‌ போதாயன அபலவிதம்ய ரூத்திரங்கள்‌
யஜுர்‌ வேதத்திற்குரியவை. ஆசீவலாயன, சாதீ்யாயன
சூத்திரங்கள்‌ ரக்‌ வேதத்திற்குரியவை, தீரா.ஹ்யரயணி
சூத்திரம்‌ சாம வேதத்திற்குரியது.
அந்தணர்களுக்கு மட்டுமின்றி ஏனையோருக்கும்‌
சூத்தாம்‌ உண்டு.

இராமானுஜர்‌ அந்தனர்‌, ஆஸுரிகுடி, வடமர்‌, யஜுஸ்‌


சாகை, ஹாரீத கோத்துரம்‌. ஆபஸ்தம்ப சூத்திரம்‌,
வள்ளலாரது மாணாக்கர்‌ காரணப்பட்டு சமரச
பஜனை. ௪, மு. கந்தசாமிபிள்ளை வேளாளர்‌, கருணீகர்‌,
பிரமகோத்திரம்‌, ஆபஸ்தம்பசூத்திரம்‌ ஒழுகரையான்குடி
மற்றொரு மாணாக்கர்‌ தொழுவூர்‌ வேலாயுத முதலியார்‌
68 சாதியும்‌ மதமும்‌

வேளாளர்‌, முதலியார்‌, சதாளவ மகரிஷிகோத்திரம்‌,


போதாயன சூத்திரம்‌
பெரியோர்களை வணங்கி ஆடிபெறும்போது இரண்டு
உள்ளங்கைகளாலும்‌ காதுகளை மூடிக்கொண்டு குலம்‌
கோத்திரம்‌ வேதசாகை சூத்திரம்‌ ஆகியவற்றைச்‌ சொல்லி
முடித்துத்‌ இருவடிகளில்‌ வீழ்ந்து வணங்கி ஆ௫பெற
வேண்டும்‌. இம்முறைக்கு அபிவாதுனம்‌ என்று பெயர்‌,
அபிவாதயே என்று இது தொடங்கும்‌. உதாரணத்திற்கு
ஒரு அபிவாதனம்‌ வருமாறு:

அபிவாதயே - வைஸ்வாமித்ர-அஹமர்ஷவன-கெளசச
கோத்ர - தீரியாரிஷியச - த்ராஹ்யாயன ஸுத்றக,.-
சாமசாஹாத்யாயி-வைத்தியநாத சர்மா நாமாஹம்‌ அஸ்மி
போ:

சமயஉலகில்‌ அடியார்களுள்‌
சாதி வேற்றுமை இல்லை
நாயன்மார்‌ அறுபத்து மூவரில்‌ சாதி வேற்றுமை இல்லை
சைவ சமயத்தில்‌ நாயன்மார்‌ அறுபத்துமூவர்‌,
திருஞானசம்பந்தர்‌, இருநாவுக்கரசா்‌ சுந்தரமூர்த்‌இகள்‌
ஆகிய. சமயகுரவர்கள்‌ மூவரும்‌ இவ்வறுபத்துமூவருள்‌
அடங்குவர்‌. நாயன்மார்‌ அறுபத்துமூவரும்‌ அந்தணர்‌
முதல்‌ அரிசனர்வரை பல சாதியினர்‌. ஆயினும்‌ இவர்களுள்‌
* அஸ்மிபோஹோ என்று முடிக்கவேண்டும்‌. “போ?”
எழுத்தின்பின்‌ இரு புள்ளியும்‌ கோடும்‌: 1 இட்டது போஹே
என்று முடிவதைக்‌ குறிக்கும்‌. இது
எமது நண்பர்‌ முத்து
கிருஷ்ண ஐயருக்குரியது. அவரது சா்மநாமம்‌ வைத்திய
தாதசர்மா. உபநயணத்தின்‌ போது ம்ணூல்‌ அணிவித்து
இடம்பெறும்‌ பெயர்‌ சர்மநாமம்‌ எனப்படும்‌,
முன்னோர்‌ பெயர்களுள்‌ அது
ஒன்றாக இருக்கும்‌,
ஊரன்‌ அடிகள்‌ 69

சாதி வேற்றுமை பாராட்டப்பட்டதில்லை. இவ்வறுபத்து!


மூவர்‌ வரலாற்றைக்‌ கூறுவதே பெரியபுராணம்‌, நாயன்மார்‌
அறுபத்து மூவரின்‌ சாதி பின்வருமாறு:

நாயன்மார்‌ அறுபத்துமூவர்‌ சாதி


திருநீலகண்டர்‌ குயவர்‌
இயற்பசையார்‌ வணிகர்‌
மூ ஸூ
5283௮

இளையான்குடி wrpt வேளாளரீ


மெய்ப்பொருள்‌ நாயனார்‌ குறுநிலமன்னாீ
விறன்மிண்டா்‌ வேளாளர்‌
அமர்நீதியார்‌ வணிகர்‌
எறிபத்தர்‌
எனாதிதாதர்‌ சான்றார்‌
கண்ணப்பர்‌ வேடர்‌
குங்குலியக்‌ சலயா்‌ அற்துணரி

மானக்கஞ்சாறர்‌ வேளாளர்‌
மம்‌ பம
NAUPWON YE

அரிவாட்டாயர்‌ வேளாளர்‌
ஆனாயர்‌ இடையர்‌
ம்‌ வம்‌ கை பம

மூர்த்தியார்‌ வணிகர்‌
முருகர்‌ அந்தணர்‌
உருத்திரபசுபதியார்‌ அற்தணரி
திருநாளைப்போவார்‌
நக

(நந்தனார்‌) பறையர்‌
18. இருக்குறிப்புத்‌ தொண்டர்‌ வண்ணார்‌
19, சண்டேசுரர்‌ BESTT
20. திருநாவுக்கரசர்‌ வேளாளர்‌
25, குலச்றையார்‌
32. பெருமிழலைக்‌ குறும்பரீ குறுநிலமன்னா்‌
23. காரைக்காலம்மையார்‌ வணிகர்‌
24. அப்பூதியடிகள்‌
அந்தணர்‌
10 சாதியும்‌ மதமும்‌
25. திருநீலநக்கர்‌ அத்தணரீ
26. நமிநந்தியடிகள்‌ அந்தணர்‌
27 திருஞானசம்பந்தர்‌
அற்துணர்‌
28. ஏயர்கோன்‌ கலிக்காமர்‌ வேளாளர்‌
29, திருமூலர்‌
30. தண்டியடிகள்‌
31. மூர்க்கர்‌ வேளாளர்‌
32. சோமாசிமாதர்‌
அத்தணர்‌
33. சாக்கியர்‌ வேளாளர்‌
34, சிறப்புலியார்‌
அந்தணர்‌
35. சிறுத்தொண்டர்‌ மாமாத்திரர்‌
36. கழறிற்றறிவார்‌
(சேரமான்‌ பெருமாள்‌) அரசர்‌ - சேரர்‌
37. கணதாதர்‌
அற்தணர்‌
38 கூற்றுவ அரசர்‌
39. புகழ்ச்சோழர்‌
அரசர்‌
40. நரசிங்கமுனையரையா்‌ குறுறிலமன்னர்‌
41. அதிபத்தர்‌ பரதவர்‌
42. கவிச்கம்பர்‌
வணிகர்‌
43. Sob arr
செக்காரி
44, சத்தியார்‌
வேளாளர்‌
45. ஐயடிகள்‌ காடவர்கோன்‌ அரசரீ - பல்லவ
மன்னர்‌
46. கணம்‌ புல்லர்‌
47. காரியார்‌
48. நின்றசீர்‌ நெடுமாறா்‌
49, வாயிலார்‌
50 முனையடுவார்‌
51. கழற்சிங்கர்‌
அரசர்‌ -
பல்லவ மன்னார்‌
52. இடங்கழியார்‌
அரசர்‌ - வேளிர்குலம்‌
ஊரன்‌ அடிகள்‌ 71
53, செருத்துணையார்‌ வேளாளர்‌
54, புகழ்த்துணையாரி அதிசைவரி
553. சகோட்புலியார்‌ வேள௱ளர்‌
56, பூசலார்‌ அந்தணர்‌
57. மங்கையர்க்கரஇியாச்‌ அரசர்‌ - பாண்டியரி
58, நேசர்‌ சாலியர்‌
59, சகோச்செங்குட்சோழர்‌ அரசர்‌ - சோழரி
60, திருநீலகண்ட
யாழ்ப்பாணர்‌ பாணர்‌
61. - சடையனார்‌ ஆதிசைவர்‌
62. இசைஞானியார்‌ ஆதிசைவார்‌
63. சுந்தகரமூர்த்திகள்‌ ஆதிசைவர்‌
அந்தணர்‌ - 12
1. குங்குலியக்‌ கலயர்‌ 7. தமிதந்தியடிகள்‌
2. முருகர்‌ 8. திருஞானசம்பத்தரி
3. ருத்திர பசுபதியார்‌. 9, கோமாசிமாறர்‌
4. சண்டேசுவரர்‌ 10, சிறப்புலியார்‌
3. அப்பூதியடிகள்‌ 11. கணநாதர்‌
6. திருறீலநக்கார்‌ 12, யூச்லாரி

அரசர்‌ - 12

1. மெய்ப்பொருள்‌ நாயனார்‌
2. பெருமிழலைச்‌ குறும்பர்‌
3. சேரமான்‌ பெருமாள்‌
4. கூற்றுவர்‌
5. புகழ்ச்‌ சோழார்‌
6. நரசிங்கமுனளையரையர்‌
7. ஐயடிகள்‌ காடவர்சோன்‌
8. நின்றசீர்‌ நெடுமாறர்‌
9: கழற்சிங்கர்‌
72 சாதியும்‌ மதமும்‌
10, இடங்கழியார்‌
11, மங்கையர்க்கரசயார்‌
12. கோச்செங்கட்‌ சோழர்‌

இவருள்‌
1. சேரர்‌ : சேரமான்‌ பெருமாள்‌ 1
2, Geappit புகழ்ச்‌ சோழரீ
கோச்செங்கட்‌ சோழர்‌ 2
3. பாண்டியர்‌ : நின்ற சீர்‌ நெடுமாறர்‌,
மங்கையார்க்கரசியார்‌ 2

4. பல்லவர்‌ : ஐயடிகள்‌ காடவர்கோன்‌,


கழற்சிங்கர்‌ 2

9. சளப்பிரர்‌ ்‌ கூற்றுவர்‌ I

6, குறுநில மன்னர்‌ ; மெய்ப்பொருள்‌ நாயனார்‌


(ற்றரசர்‌) பெருமிழலைக்குறும்பரி
(குறும்பர்‌)
தரசங்கமுனையரையர்‌
இடங்கழியார்‌ (வேளிர்‌) 4

12

வணிகர்‌ -6

1. இயற்பகையார்‌ 4. சாரைக்காலம்மையார்‌
2, அமர்நீதியார்‌ 5. சலிக்கம்பச்‌
3. மூர்த்தியார்‌ 6. கலியா்‌
ஊரன்‌ அடிகள்‌ 73

வேளாளர்‌ - 13
இளையான்குடி மாறார்‌ 8, சாக்கியர்‌
விழன்மிண்டர்‌ 9. சத்தியார்‌
PR wo
MAW

மாளக்கஞ்சாறர்‌ 10, வாயிலார்‌


அரிவாட்டாயா்‌ 11. முனையடுவார்‌
திருநாவுக்கரசர்‌ 12. செருத்துணையார்‌
ஏயர்கோன்‌ கலிக்காமர்‌ 13. கோட்புலியார்‌
மூர்க்கர்‌

ஆதிசைவர்‌ - 4
புகழ்திதுணையார்‌ 3. இசைஞானியார்‌
=

சடையனார்‌ &, சுந்தரர்‌


uN

மரபுக்கு ஒருவர்‌-10
திருநீலகண்டர்‌ குயவர்‌
ஜூ உ. ஒய்‌

ஏனாதிநாதர்‌ சான்றார்‌
கண்ணப்பா Cant
ஆனாயா்‌ இடையார்‌
தத்தனார்‌ பறையர்‌
திருக்குறிப்புத்‌ தொண்டர்‌ வண்ணார்‌
சிறுத்தொண்டர்‌ மாமாத்திராரீ
அதிபத்தார்‌ பரதவர்‌
நேசர்‌ சாலியர்‌
திருநீலகண்ட யாழ்ப்பாணர்‌ பாணர்‌
ம்‌
_

மரபு கூறப்படாதவர்‌ - 6
1. எறிபத்தா்‌
2. குலச்சிறையார்‌
3. திருமூலர்‌
4. தண்டியடிகள்‌
3. கனம்புல்ல
6. காரியார்‌
74 சாதியும்‌ மதழும்‌

அந்தணர்‌ 12
அரசர்‌ 12
வணிகர்‌ 6
வேளாளர்‌ 13
ஆதிசைவா்‌ 4
மரபுக்கொருவர்‌ 10
மரபுகூறப்படாதார்‌ 6

ஆக. 63

அந்தணர்கள்‌ அடியார்களாக இருந்ததில்‌ வியப்பில்லை,


அரசர்களும்‌ (மன்னர்களும்‌) அடியார்களாக இருந்திருக்‌
கிறார்கள்‌. மற்றவர்களோடு சரிசமமாக, இன்னும்‌
சொல்லப்போனால்‌, பணிவாகப்‌ பழகியிருக்கிறார்கள்‌.
அந்தணர்‌ சுந்தரரும்‌ அரசர்‌ சேரமான்‌ பெருமானும்‌
தோழர்களாக விளங்கெர்‌. திருஞானசம்பந்தர்‌ அந்தணர்‌,
இருநாவுக்கரசர்‌ (அப்பர்‌) வேளாளர்‌ (சைவமுதலியார்‌).
இருவரும்‌ ஒன்றாகப்‌ பழகயிருக்கிறார்கள்‌, உடனுண்ணல்‌
உட்னுறைவு நிகழ்ந்திருக்கிறது, இளைஞர்‌ சம்பந்தர்‌
பல்லகீகை முதியவர்‌ அப்பர்‌ அன்பாற்‌ சுமந்தார்‌. அப்பரை,
**அப்பரே”' என்று தந்தைப்‌ பெயரிட்டு, தந்‌ைத முறை
வைத்து, அழைத்தார்‌ சம்பந்தர்‌. அதனாலேயே
நாவுக்கரசருக்கு அப்பர்‌ என்ற பெயர்‌ உண்டாயிற்று.
வண்ணார்‌ அடியாராக இருந்திருக்கிறார்‌. அவரை
வண்ணார்‌ என்று தெரிந்தபின்னும்‌ அரசராகிய சேரமான்‌
பெருமாள்‌ பணிந்து வணங்கியிருக்கிறார்‌. மண்பாண்டம்‌
வேயும்‌ குயவர்‌, கள்‌இறக்கும்‌ சாணார்‌, மீன்பிடிக்கும்‌
பரதவர்‌, வேட்டையாடும்‌. வேடர்‌, பள்ளர்‌ இனத்தைச்‌
சேர்ந்த பாணர்‌, புலையர்‌ எனப்பட்ட பறையர்‌ ஆகிய
ஊரன்‌ அடிகள்‌ 75

சாதியோரும்‌, அடியாராக, நாயன்மாராக இருந்திருக்‌


கின்றனர்‌. ஹரிஜனங்களை ஆதிதிராவிடர்‌ என்பது
பலரும்‌ அறிந்தது. ஆனால்‌ கோயிற்பூசை செய்யும்‌
சவொசாரியார்களை ஆதிசைவர்‌ என்பது பலரும்‌ அறியாதது.
சிலரே அறிந்தது. ஆதிதிராவிடரும்‌ ஆதிசைவரும்‌ தமிழ்‌
நாட்டின்‌ பூர்வகுடிகள்‌, ஆதிதிராவிடர்‌ இப்போது
தாழ்திதப்பட்டவராக உள்ளனர்‌. ஆதிசைவர்‌ ewig
தோராக உள்ளனர்‌. சமுதாய நிலையில்‌ (அந்தஸ்தில்‌)
இருவருக்கும்‌ வேறுபாடு இருப்பினும்‌ பொருளாதார
நிலையில்‌ (அந்தஸ்தில்‌) இருவரும்‌ ஒன்றாகவே இருக்‌
இன்றன. ஆதி திராவிடர்கள்‌ ஏழைகள்‌. ஆதிசைவரும்‌
(சிவாசாரியரும்‌) ஏழைகள்‌. ஆதிதிராவிடரிற்பலர்‌
வறுமைக்கோட்டுக்குக்கழே உள்ளனர்‌. ஆதிசைவரிலும்‌
(சீவாசாரியரிலும்‌) பலர்‌ வறுமைக்கோட்டுக்குக்‌&ழே
உள்ளனர்‌. இருவர்‌ பொருளாதாரமும்‌ ஓன்று; ஆனால்‌
இருவர்‌ பழக்கவழக்கங்கள்‌ ஒழுக்கங்கள்‌ ஆசாரங்கள்‌
(ஆசாரம்‌ என்பதே தமிழில்‌ ஒழுக்கம்‌) வெவ்வேறு, முக்கிய
மாச உணவொமுக்கம்‌. ஆதிசைவர்‌ சுத்தசைவ உணவினரா்‌;
மதுமாமிசம்‌ நீத்தவர்‌; கோயிற்பூசகர்‌ ஆயினர்‌, அதிதிரா
விடர்‌ மது மாமிசங்களுக்குப்‌ பெரிதும்‌ ஆட்பட்டனர்‌.
மேலும்‌ அவருள்‌ ஒரு சாரார்‌ இறந்ததன்‌ புலாலைப்‌
புசிப்பவர்கள்‌. இப்படிப்பட்ட தரந்தாழ்ந்த பழக்கவழக்‌
கங்களால்‌, ஓழுக்கங்களால்‌ காழ்த்தப்பட்டோர்‌ ஆயின]
கோயில்‌ நுழைவினின்றும்‌ தடுக்கப்பட்டனர்‌.

ஆதி திராவிடர்‌ உட்பட நாயன்மார்‌ அறுபத்து மூவரும்‌


ஒரு வரிசையாகக்‌ சுற்ரிலையாகவும்‌ செம்புச்சிலையாகவும்‌
கோயில்களுள்‌ வைத்து வழிபடப்‌ பெறுகின்றனர்‌. ஆதி
சைவ அந்தணர்கள்‌ (சவாசாரியர்கள்‌) அவர்களுக்கு வழி
பாடு நிகழ்த்துகின்றனர்‌. அடியார்களுக்குள்‌ சாது வேறு
இல்லை. அனைவரும்‌ சமமே, ஒன்றே.
76 சாதியம்‌ மதழும்‌

பரிய புராணத்தில்‌ சாதி ஒரிப்பு


அந்தணர்‌ வீட்டு யாகசாலை மேடையருகே அரிஜன
தம்பதிகள்‌
அருள்நெறி முதல்வர்‌ ஞானசம்பந்தரின்‌ சமயப்புரட்‌.சி
சைவ சமயகுரவர்‌ நால்வருள்‌ முதல்வர்‌ திருஞான
சம்பத்தர்‌. சம்பத்தர்‌, அப்பர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகரி
என்பது காலமுறைவைப்பு, வரிசை மூறை வவைப்பு,
சம்பந்தரும்‌ அப்பரும்‌ சமகாலத்தவர்கள்‌. ஒருவரை
யொருவர்‌ கண்டு பழகியவர்கள்‌. போற்றியவர்கள்‌,
சேரீற்து தலயாத்திரை செய்தவர்கள்‌. இவர்களுக்குச்‌
சுமார்‌ நூறு அண்டுகளுக்குப்‌ பின்‌ வந்தவர்‌ சுந்தரர்‌.
மூவருக்கும்‌ பின்‌ நான்காமவராக வற்தவர்‌ மாணிக்க
வாசகர்‌, அப்பரும்‌ சம்பந்தரும்‌ சமகாலத்தவரெனினும்‌
சம்பற்தரே முதலிடம்‌ பெறுகிறார்‌. “அருள்‌ நெறியில்‌
முதல்‌ அரசு இயற்றிய துரையே?” என்று சம்பந்தரை
வள்ளலார்‌ போற்றிப்‌ புகழ்கிறார்‌ (இருவருட்பா 3231),
சம்பந்தர்‌ அந்தணர்‌, சுமார்த்தப்பிராமணரி, ஐயர்‌,
அப்பர்‌ வேளாளர்‌... சைவ முதலியார்‌
apart அந்தணர்‌. ஆதிசைவர்‌. இவாசாரியர்‌.
கோயிற்‌ பூசை மரபு.

மாணிக்கவாசகர்‌ அந்தணர்‌. அமாதிதியப்‌ பிராமணர்‌,


அமைசிசராதற்குரிய மரபு.

நால்வரும்‌ தலயாத்திரை செய்தனர்‌. மணிவாசகர்‌


யாத்திரை குறைவு. மற்ற மூவரும்‌ யாத்திரை மிகுதி,
அப்பரும்‌ ஈந்தரரும்‌ தனியாகவே யாத்திரை செய்தனர்‌.
சம்பந்தர்‌ யாத்திரையிலோ ஒரு கூட்டமே அவருடன்‌
ஊரன்‌ அடிகள்‌ 77

சென்றது. சம்பந்தர்‌ திருக்கூட்டமாகத்‌ தலயாத்திரை


செய்திருக்கின்றார்‌. மற்ற இருவரும்‌ (அப்பரும்‌ சுந்தரரும்‌)
தாம்‌ தாம்‌ தனித்தே தலயாத்திரை செய்திருக்கின்றனர்‌.

அப்பரும்‌ சுந்தரரும்‌ நடந்தே சென்றனர்‌. சம்பந்தரோ


இவிகையூர்ந்து சென்றார்‌. பல்லக்கிற்‌ சென்றார்‌. சிவிகை
பல்லக்கு, அது சாதாரணச்‌ சிவிகையன்று; முத்துச்‌
சிவிகை, முத்துப்‌ பல்லக்கு. ஊர்வதற்கு முதிதுச்‌ சிவிகை,
நிழற்றுவதற்கு முத்துப்பந்தர்‌, மணிக்குடை; கட்டியங்‌
கூறி ஊதுவதற்குப்‌ பொற்டின்னங்கள்‌ இவையெல்லாம்‌
ஆளுடைய பிள்ளையார்க்கு அப்பன்‌ ஆண்டவன்‌ அருளிய
அருட்கொடைகள்‌,

பல்லக்குச்‌ சுமப்போர்‌, குடை பிடிப்போர்‌, முத்துப்‌


பந்தர்‌ ஏந்துவோர்‌, தருச்சன்னங்கள்‌ ஊதுவோர்‌, இப்படிப்‌
பல எடுபிடிகளோடும்‌, பக்கவாத்தியம்‌ வாசிப்போர்‌, பத்தி
நிறைந்த அடியார்கள்‌ இப்படிப்‌ பலரோடு ஒரு திருக்‌
கூட்டமாகவே சம்பந்தர்‌ நாடெங்கும்‌ சென்று சைவமுற்‌
தமிமுந்‌ தழைத்‌ தினிதோங்கச்‌ செய்தார்‌.
திருஞான சம்பந்தரின்‌ திருக்கூட்டத்தில்‌ அவருக்குப்‌
பக்கவாத்தியமாக யாழ்‌ வாசித்துக்‌ கொண்டு வந்தவர்‌
யார்‌ தெரியுமா? அவர்‌ ஒரு ஹரிஜன்‌. பெயர்‌ திருநீலகண்ட
யாழ்ப்பாணர்‌. தஇருநீலகண்டர்‌ என்பது அவர்‌ பெயர்‌!
யாழ்‌ - தொழில்‌; பாணர்‌ - குலம்‌. எனவே திருநீலகண்ட
யாழ்ப்பாணர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌. சைவத்தில்‌
நாயன்மார்களுட்‌ பாணர்‌ ஒருவர்‌. வைணவத்தில்‌
ஆழ்வார்களுட்‌ பாணர்‌ ஒருவர்‌. நாயன்மார்‌- திருநீலகண்ட
யாழ்ப்பாணர்‌ ஆழ்வார்‌ - திருப்பாணாழ்வார்‌, பாணர்‌
என்போர்‌ யாழ்‌ வா௫ிப்போர்‌ சங்க நூலாகிய பத்துப்‌
பாட்டில்‌ சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
என இரண்டு பாணாற்றுப்படைசன்‌ உண்டு. சிறுபாணனை
78 சாதியும்‌ மதமும்‌

" ஆற்றுப்படுத்தியது சிறுபாணாற்றுப்படை . பெரும்பாணனை


ஆற்றுப்படுத்தியது பெரும்பாணாற்றுப்படை. சரியாழ்‌
(சிறிய யாழ்‌) வாசிப்பவன்‌ ஈறுபாணன்‌. பேரியாழ்‌ (பெரிய
யாழ்‌) வாசிப்பவன்‌ பெரும்பாணன்‌, இங்கு, திருநீலகண்டர்‌
பெரும்பாணர்‌ எனப்படுகிறார்‌. பேரியாழ்‌ வாசிப்பதாற்‌
பெரும்பாணர்‌. பெருமை சான்றவராதலாலும்‌ பெரும்‌
பாணர்‌. பாணர்‌, தாம்‌ மட்டும்‌ சம்பந்தர்‌ கூட்டத்தில்‌
இடம்‌ பெறவில்லை. தம்‌ மனைவியார்‌ மதங்கசூளாமணியா
ரோடும்‌ இடம்‌ பெறுகிறார்‌.

அந்தணராகிய சம்பந்தரின்‌ இருக்கூட்டத்தில்‌ அரிஜன


ராகிய இருநீலகண்ட யாழ்ப்பாணர்‌, அதுவும்‌, மனைவியா
ரோடும்‌ இடம்பெறுகிறார்‌ எனில்‌ அக்காலத்தில்‌ இது
எப்பேர்ப்பட்ட புரட்சி, சாதி எங்கே போயிற்று?
இண்டாமை எங்கே போயிற்று? ஒரு தாளா இரு நாளா?
கடைசி வரை, காலமெல்லாம்‌ சம்பந்தர்‌ கூட்டத்துலேயே
இருக்கிறார்‌ பாணனார்‌. திருஞான சம்பந்தரின்‌ திருமணத்‌
இலும்‌ இருக்கிறார்‌. அவ்வருண்‌ மணத்தில்‌ அனைவர்க்கும்‌
மூத்தியளித்தபோது சம்பந்ததோடு பாணரும்‌ அவரது
பத்தினியாரும்‌ முத்தியைப்‌ பெறுகின்றனர்‌.

சோழவளநாட்டில்‌ சாத்தமங்கை என்றோருரி,


ஆங்கோர்‌ அடியவர்‌. அருமறை அற்தணர்‌, பெயர்‌
நீலநக்கர்‌. திருஞானசம்பந்தர்‌ திருக்கூட்டத்தோடு சாத்த
மங்கைக்கு எழுந்தருளுகிறார்‌. திருநீலநக்கர்‌ வரவேற்‌
கிறார்‌. தம்‌ மனைக்கு அழைத்துவந்து அனைவர்க்கும்‌
விருந்தளிக்கிறார்‌. அன்று இரவும்‌ சம்பந்தர்‌ இருநீலநதக்கர்‌
இல்லத்திலேயே தங்குகிறார்‌. நீலநக்கர்‌ வீட்டில்‌ அன்று
பெருங்கூட்டம்‌. படுக்கைக்குச்‌ செல்லும்‌ நேரம்‌. எல்லோரும்‌
அங்கங்கே படுத்துவிட்டார்கள்‌. அந்நேரத்தில்‌ சம்பந்தர்‌
நிலறக்கரை அழைத்தார்‌ இன்றிரவு “நீலகண்டப்‌ பெரும்‌
ஊரன்‌ அழிகள்‌ 79

பாணரும்‌ இங்கேதான்‌ தங்கப்போகிறார்‌, அவருக்கும்‌ படுக்க


இடங்கொடுத்தருளுவீர்‌'? என்று கூறினார்‌. சொல்லாமலே
செய்யக்கூடியவர்‌ இருறீலரச்கர்‌. இருந்தும்‌” அழைத்துச்‌
சொல்லிவிட்டார்‌ ஞானசம்பந்தர்‌, நீலகண்டரோ. பாணர்‌;
நீலநக்கரோ அந்தணர்‌, வைதிகர்‌, நாள்தோறும்‌ வீட்டில்‌'
௪ வளர்த்து ஓமஞ்‌ செய்பவர்‌, நீலகண்டரும்‌ அவம்‌.
மனைவியாரும்‌ தம்‌ வீட்டில்‌ படுக்க மனம்‌ ஒப்புவரோ”
ஓப்பாரோ, என்று ஐயுற்றார்‌ போலும்‌ அனைவரெதிரே
அழைத்து அவர்களுக்கும்‌ இடந்தாரும்‌ என்று சொல்லி
விட்டார்‌. பாணர்‌ தம்பதிகளைப்‌ படுக்க வைக்க நீலநக்கர்‌
இடம்பார்க்கிறார்‌. எல்லாரும்‌ வீட்டினுள்ளும்‌ புறமும்‌
அநிகங்கே படுத்துவிட்டகால்‌ தக்க இடம்‌ அமையவில்லை.
வீட்டின்‌ நடுவில்‌ யாக குண்டத்திற்கு அருகில்தான்‌ சிறிது
இடம்‌ இருக்கிறது. படுக்கவைப்பதாயின்‌ அங்கேதான்‌
படுக்கவைக்கவேண்டும்‌. சற்றும்‌ யோசிக்காமல்‌ மனம்‌ மிச
பாகிழ்ந்தவராய்ப்‌ பாணர்‌ தம்பதிகளை அழைத்து யாக
மேடை அருகில்‌ படுக்கவைத்தார்‌, பாணர்‌ தம்பதிகளும்‌
வந்து யாசுசானலை மேடையருகே படுத்சுனர்‌.

அந்தணர்‌ வீட்டு யாகசாலை மேடையருகே அரிஜனத்‌


கும்பதிகளின்‌ படுக்கை இது வியப்பன்று. இனிமேல்‌
நடந்ததுதான்‌ வியப்பு! ஹோமமெமல்லாம்‌ முடிந்த இரவு
தேரமல்லவா, ஓம குண்டத்தில்‌ தீ அடங்கியிருந்தது.
பாணர்‌ தம்பதிகள்‌ வந்து அருகே படுத்ததுதான்‌ தாமதம்‌,
ஒமகுண்டத்தில்‌ அடங்கியிருந்த தீ மூண்டு எழுந்து
வலஞ்சுழித்து ஒங்கி முன்னையிலும்‌ ஒருபடி அதஇகமாக
ஒளி வீசிற்றாம்‌, இதைச்‌ சேக்கிழாரே சொல்லுறார்‌.
நின்ற அன்பரை '“நீலகண்‌ டப்பெரும்‌ பாணர்க்‌(கு)
இன்று தங்கர்‌ இடங்கொடுத்‌ தருளுவீர்‌'” என்ன
நன்றும்‌ இன்புற்று நடுமனை வேதியின்‌ பாங்கர்சி
சென்று மற்றவர்ச்‌ இடங்கொடுத் தனர்‌ இரு மறையோர்‌
80. சாதியும்‌ மதமும்‌

ஆங்கு வேதியில்‌ அறாதசெந்‌ தீவலஞ்‌ சுழிவுற்‌ (று)


ஒங்கி முன்னையில்‌ ஒருபடித்‌ தன்றியே ஒவிரத்‌
தாங்கு நூலவர்‌ மகழ்வுறச்‌ சகோடயாழ்தி தலைவர்‌
பாங்கு பாணியா ரடன்‌அரு ளாற்பள்ளி கொண்டார்‌.
அந்தணராக திருஞான சம்பந்தரின்‌ திருக்கூட்டதீதில்‌
ஹரிஜனராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரி தம்‌
மனைவியார்‌ மதங்கசூளாமணியாரோடும்‌ இடம்பெற்றார்‌.
சம்பந்தா பாடியருளிய தேவாரப்‌ பதிகங்களுக்குப்‌
பண்ணோடு யாழிசைத்துப்‌ பக்கவாத்தியகி காரராய்த்‌
திகழ்ந்தார்‌. ஒருநாள்‌ இருநாளன்று, காலமெல்லாம்‌
ஞானசம்பந்தரோடேயே இருந்தார்‌, சம்பந்தர்‌ முத்தி
பெற்றபோது இவரும்‌ மனைவியாரோடு முத்திபெற்றார்‌.
அத்தணராகிய திருநீலநக்கர்‌ ஹரிஜனராகிய திருநீல
கண்ட யாழ்ப்பாணர்‌ அவர்‌ மனைவியாரோடும்‌ படுத்‌இருப்‌
பதற்குத்‌ தம்‌ வீட்டு நடுவில்‌ யாகசாலை மேடையில்‌
இடங்கொடுத்தார்‌.
இவை அந்நாளில்‌ செயற்கரிய செயல்கள்‌. சாதி வேறு
பாடும்‌ தீண்டாமையும்‌ பாராட்டப்பெறவில்லை, பக்தியும்‌
ஒழுக்கமுமே பாராட்டப்பெற்றன. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள்‌ இருஞானசம்பந்தரும்‌ ஒருவா்‌. இருநீல
கண்ட யாழ்ப்பாணரும்‌ ஒருவர்‌. இருநீலநக்கரும்‌ ஒருவர்‌.
மூவரும்‌ ஒன்றாக உண்டனர்‌, உறங்கினர்‌; பத்தி செய்தனர்‌,
மத்தி பெற்றனர்‌.
இது ஞானசம்பந்தர்‌ வரலாறு சாட்டும்‌ சாத ஒழிப்பு,
பெரியபுராணங்கூறும்‌ சாதி ஒழிப்பு.

**தமிழ்ஞானசம்பந்தர்‌”?. செந்தமிழ்‌ அந்தணர்‌


அந்தணர்கள்‌ வடமொழியையும்‌ வேதங்களையுமே
மிகுதியாகப்‌ போற்றுவர்‌, சம்பந்தர்‌ தமிழை மிகுதியாகப்‌
ஊரன்‌ அடிகள்‌ 81

போழ்றினார்‌. தன்னைத்‌ ''தமிழ்ஞானசம்பந்தன்‌'” என்று


தமது பாடல்களில்‌ நூற்றுக்கணக்கான இடங்களில்‌ கூறிக்‌
கொண்டார்‌. நான்மறைகளையும்‌ விட்டுவிடவில்லை,
தம்மைப்பற்றிச்‌ சொல்லும்‌ போதெல்லாம்‌ நான்மறை
களோடு தமிழையும்‌ சேர்த்தே சொன்னார்‌. **நான்மறை
நாவன்‌ நற்றமிழ்‌ ஞானசம்பந்தன்‌”, **“நான்மறைநாவன்‌
நற்றமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தன்‌'' என்பன போன்ற
இடங்கள்‌ நூரற்றுக்கணக்கானவை. ஏறத்தாழ ஐந்நூறு
ஆகும்‌.
அந்தணர்கள்‌ காயத்திரி மற்திரத்தைப்‌ போற்று
மளவுக்குப்‌ பஞ்சாக்கர மந்திரத்தைப்‌ Gur pore.
சம்பத்தருக்குப்‌ பூணூல்‌ அணிவிக்கப்பெற்றபோது - உப
நயனத்தஇன்போது - காயத்திரி மூதவிய வேத மந்திரங்களை
உபதேக்கப்‌ புகுந்த வேதஇியரீக்குப்‌ பஞ்சாக்கரத்தின்‌
சிறப்பை விளக்இப்‌ பஞ்சாக்கரப்‌ பதிகத்தை அருளிச்செய்‌
தார்‌ சம்பந்தர்‌.

ஞானசம்பந்தர்‌ பிறப்பால்‌ நான்மறை அற்தணரீ,


சிறப்பால்‌ செந்தமிழந்தணர்‌.

கண்ணப்பரும்‌ ஈந்தனாரும்‌ திரு£லகைண்டயாழ்ப்பாணரும்‌


**ஐயர்‌?* ஆதல்‌

கண்ணப்பர்‌ பிறப்பால்‌ வேடர்‌, நந்தனார்‌ பிறப்பால்‌


பறையர்‌. திருநீலகண்ட யாழ்ப்பாணர்‌ பிறப்பால்‌ பாணர்‌.
இம்மூவரும்‌ இறப்பால்‌ ஒழுக்கதீதால்‌ *1ஐயர்‌'” ஆறார்கள்‌,
சண்ணப்பருக்குப்‌ பெற்றோர்கள்‌ இட்டபெயர்‌, (இயற்‌
பெயர்‌, பிள்ளைத்திருநாமம்‌) திண்ணன்‌. இப்பெயரைத்‌
**இண்ணனார்‌”' என்று ஆர்‌ விகுகஇு கொடுத்து மரியாதையாக
வழங்குகிறார்‌ சேக்கிழார்‌. திண்ணனார்‌ தம்‌ கண்ணைப்‌
பெயர்த்து இறைவன்‌ காளத்தியப்பருக்கு அப்பிய பிறகுதான்‌
82 சாதியும்‌ மதழும்‌

கண்ணப்பர்‌ என்ற பெயர்‌ உண்டாடறது. கண்ணப்பர்‌


என்பது இறைவன்‌ திருவாயாலேயே வந்த பெயர்‌, வழங்கிய
பெயரீ, கண்ணப்பர்‌ முதன்முதலில்‌ காளத்திமலை மீது
ஏறிச்சென்ற காட்டியைக்‌ கூறும்‌ சேக்கிழார்‌ “Gar per
தாணனும்‌ தமது அன்பும்‌ முன்னே ஏறிச்செல்ல, பின்னே,
துதிதுவப்படிகள்‌ ஏறிச்‌ வத்தைச்‌ சார்வதுபோல “ஐயர்‌”
மலைஏ.றிச்‌ செல்வறார்‌?" என்றார்‌. கண்ணப்பரை *ஐயர்‌”
என்கிறார்‌. கண்ணப்பரைச்‌ குறிப்பிட ஐயர்‌”? என்ற
சொல்லை ஆனள்ூறார்‌.
நற்தன்‌ என்று சொல்லிப்‌ பின்‌ நந்தனார்‌ என்று சொல்‌
லாமல்‌ முதன்முதலிலேயே *-நந்தனார்‌'” என்று பெயர்‌
சொல்லிவிடுகிறார்‌ சேக்கிழார்‌. நாளைப்போவேன்‌,
தாளைப்போவேன்‌, என்று பல நாள்‌ இல்லைச்‌ சிதம்பரத்‌
தைத்‌ தரிசிக்கும்‌ ஆர்வமிக்க நந்தனாராம்‌ திருநாளைப்‌
போவார்‌ ஒரு நாள்‌ இல்லைக்கு வந்துசேரிந்து தம்‌ குலப்‌
பிறப்பை எண்ணிக்‌ கோயிற்குள்‌ நுழைய அஞ்சி வெளியே
வருத்தத்துடன்‌ தங்கியிருக்கிறார்‌. நற்தனார்‌ கனவில்‌
நடராசப்பெருமான்‌ தோன்றிக்‌ கோயில்‌ வாயிலில்‌ ஏரி
மூழ்கி உள்ளேவர அருள்கிறார்‌. அவ்வாறே தில்லைவாழற்‌
துணரிக்கும்‌ எரியமைக்க அருள்கிறார்‌. தில்லைவாழந்தணர்‌
கள்‌ நற்தனாரிடம்‌ சென்று கண்டு “ஐயரே” அம்பலவர்‌
அருளால்‌ அழல்‌ அமைக்கிறோம்‌, அதன்வறி உள்ளே
வருவீராக என்று மொழிந்தார்கள்‌. எரி மூழ்கிய நந்தனார்‌
மார்பில்‌ வெண்நால்‌ விளங்க மாமுனிவர்‌ வடிவாய்‌ எழுந்து
கோயிலுட்‌ புகுந்து நடராசா சந்நிதியை அடைந்து வணங்க
யாவரும்‌ காணாவண்ணம்‌ உருவத்திருமேனி அருவத்‌
தருமேனியாய்‌ அருளுருவாய்‌ மறைந்தார்‌. தில்லைவாழந்‌
தணர்கள்‌ தந்தனாரை “ஐயரே” என்று அழைத்தனர்‌.

திருஞானசம்பந்தர்‌ இருநீலகண்ட யாழ்ப்பாணரை


தான்கு இடங்களில்‌ - நான்குமுறை - “gout” என்று
4
ஊரன்‌ அடிகள்‌ 83

அழைக்கிறார்‌, பாணனார்‌ சம்பந்தரைக்காண Far Pee


முதன்முதலில்‌ வந்தபோது இருவரின்‌ முதல்‌ சந்திப்பில்‌
“nuit நீர்‌ உளம்‌ மழ இங்கு அணைந்த உறுதியுடை
யோம்‌?? என்று உவகையுடன்‌ வரவேற்கிறார்‌. பாணனார்‌
பிறந்த ஊராகிய எருக்கத்தம்புலியூருக்குச்‌ எம்பந்தர்‌
சென்றபோது, “இப்பதி அடியேன்‌ பதி” எனப்‌ பாணனார்‌
வணங்கிக்கூற, “ஐயர்‌ நீர்‌ அவதரித்திட இப்பதி அளவு
இல்‌ மாதவம்‌ முன்பு செய்தவாறு"? என்று சம்பந்தர்‌
சிறப்பித்துக்‌ கூறியருளினார்‌. இருவரும்‌ தருமபுரம்‌ சென்று
வழிபடும்போது சம்பந்தர்‌ பாடும்‌ பண்ணின்‌ இசை யாழில்‌
அடங்காமையினால்‌ பாணனார்‌ யாழை முறிப்பதற்கு
ஒங்கவே சம்பந்தர்‌ தடுத்‌.தருளி “ஐயரே! உள்ள இசை
அளவினதால்‌, நீர்‌ ஆக்கெ இக்கருவியினைத்தாரும்‌"?என்று
கூறித்‌ தம்‌ கையில்‌ யாழை வாங்கிக்கொண்டு, **ஐயர்‌! நீர்‌
இதனை முறிக்குமது என்‌"?என்று கேட்டுவிட்டு, திருவருளின்‌
பெருமையெலாம்‌ இக்கருவியினில்‌ அளவுபடுமோ, இக்கருவி
யின்‌ அளவுக்கு வந்தவாறே வாசிப்பீர்‌**என்று கூறி யாழைப்‌
பாணனாரிடம்‌ திரும்பத்‌ தந்தருளுகிறார்‌. இவ்வாறு
நான்கு இடங்களில்‌ - நான்கு முறை - சம்பநீதப்பெருமான்‌
திருநீலகண்ட யாழ்ப்பாணரை “ஐயர்‌ நீர்‌”, “ஐயரே?
*ஐயர்‌ நீர்‌' என்று அழைக்கிறார்‌.
கவிக்கூற்றாகச்‌ சேக்கிழார்‌ கண்ணப்பரை ஐயர்‌ என்று
கூறுமிடம்‌ ஒன்று. தில்லைவாழந்தணர்‌ நந்தனாரை ஐயர்‌
என்று கூறுமிடம்‌ ஒன்று. சம்பந்தர்‌ இருநீலகண்ட
யாழ்ப்பாணரை ஜயர்‌ என்று கூறுமிடங்கள்‌ நான்கு, ஆக
ஆறு இடங்களில்‌ ஐயர்‌ என்று வேடரையும்‌ புலையரையும்‌
பாரணரையும்‌ பெரியபுராணம்‌ கூறுகிறது; சேக்கிழார்‌
கூறுகிறார்‌. இதுபெரிய புராணம்காட்டும்‌ சாதி ஒழிப்பு.
பெரியபுராணம்‌ சாதி ஒழிப்புக்‌ காப்பியம்‌, தென்னிந்தி
யாவின்‌ தேரிய காப்பியம்‌,
84 சாதியும்‌ மதமும்‌

ஆழ்வார்கள்‌ ஆசாரியர்களில்‌ சாதி வேறுபாடு இல்லை


சைவத்தில்‌ சமயகுரவர்‌ சந்தாளகுரவர்‌ என்பதுபோல
வைணவத்திலும்‌ ஆழ்வார்கள்‌ ஆசாரியர்கள்‌ எனப்‌
பெரியோர்கள்‌ இருவகையர்‌. :*ஆழ்வார்‌?' என்பதற்குப்‌
பகவத்‌ குணங்களில்‌ ஆழ்ந்து ஈடுபடுவோர்‌, ஆழ்ந்தவர்கள்‌
என்று பொருள்‌. ஆழ்வார்களுக்குப்பின்‌ வைணவ
சம்பிரதாயத்தை வளர்த்த பெரியோர்கள்‌ ஆசாரியர்கள்‌,
ஆழ்வார்கள்‌ பன்னிருவர்‌. ஆசாரியர்கள்‌ பலர்‌, இவ்விரு
வகையாரும்‌ அந்தணர்‌ முதல்‌ அரிசனரீவரை பல சாதியினர்‌.
எனினும்‌ இவர்களுள்‌ சாதி வேறுபாடு இருந்ததில்லை;
பாராட்டப்‌ பெற்றதில்லை.

ஆழ்வார்கள்‌ பன்னிருவர்‌
3. பொய்கையாழ்வார்‌ - பொற்றாமரைப்‌ பூவில்‌
கோன்றியவர்‌
2. பூதத்தாழ்வார்‌ - மாதவி(குருக்கத்தி)ப்‌
பூவில்‌ தோன்றியவர்‌
3. பேயாழ்வார்‌ - செவ்வல்லிப்பூவில்‌
தோன்றியவர்‌
4. திருமழிசையாழ்வா£ - ரிஷிபுத்திரா்‌, பிரம்புக்‌
கூடை pentru
வேடனால்‌ வளர்க்கப்‌
பெற்றவர்‌.
5. குலசேகராழ்வார்‌ - கூத்திரியாீ
(சேரமன்னா்‌)
6. பெரியாழ்வார்‌ பிராமணர்‌ (வேயர்குலம்‌)
7. ஆண்டாள்‌ - துளூச்செடி அடி
மண்ணில்‌ தோன்‌ நியவராீ
ஊரன்‌ அடிகள்‌ 85

8. தொண்டரடிப்‌ பிராமணர்‌ (முன்குடுமிசி


பொடியாழ்வார்‌ சோழிய அந்தணர்‌)
9. திருப்பாணாழ்வார்‌ - பாணர்‌ (பஞ்சமர்‌ என்ற
கணக்கற்‌ சேர்ப்பர்‌)
10, திருமங்கையாழ்வாரீ - கன்ளர்‌ (குறுநிலமன்னரீ)
11. நம்மாழ்வார்‌ - வேளாளர்‌, தொண்டக்‌
குலம்‌ என்பர்‌
12. மதுரகவியாழ்வார்‌ - பூரிவசிகை (முன்குடுமி)ப்‌
பிராமணர்‌.

ஆழ்வார்களுக்குள்ளே e728 வேறுபாடு பாராட்டப்‌


படுவதில்லை. இவர்கள்‌ வைணவத்‌ திருக்கோயில்களில்‌
வழிபடப்பெறுகிறார்கள்‌. அழ்‌.தணர்கள்‌ இவர்களுக்கு
வழிபாடு செய்விக்கிறார்கள்‌. இவர்கள்‌ அருளிய நாலாயிர
இவ்யப்‌ பிரபந்தம்‌ இருக்கோயில்களில்‌ எம்பெருமான்‌
இருமுன்னா்‌ அத்தணர்களால்‌ ஒதப்பெறுகிறது.
எம்பெருமான்‌ திருவீதி எழுந்தருளும்போது வேதபாராயணக்‌
குழுவிற்குமுன்‌ இவ்வியப்பிரபந்த பாராயணக்குழு செல்‌
இறது. இவ்வியப்பிரபந்தம்‌ பெருமாளுக்கு முன்னே செல்ல,
வேதங்கள்‌ பெருமாளுக்குப்‌ பின்னே வருகின்றன.
பாணராகிய இருப்பாணாழ்வார்‌ திருவரங்கமண்ணை
யும்‌ மிதிக்க அஞ்சியவராய்க்‌ காவிரிக்கரையிலேயே நின்று
பாடித்‌ துதிக்கிறார்‌. அரங்கப்‌ பெருமான்‌ அவரைதி
தோளில்‌ ஏற்றித்‌ தன்‌ சழ்நிதிக்குக்‌ கொண்டு வருமாறு
பட்டாசாரியர்‌ உலக சாரங்கமுனிவரைப்‌ பணிக்கிறார்‌.
முனிவரின்‌ வற்புறுத்தலின்‌ பேரில்‌ முனிவர்‌ தோளில்‌ ஏறி,
முனிவாகனராய்‌, அரங்கப்‌ பெருமான்‌ சந்நிதிக்கு வந்த
திருப்பாணாழ்வார்‌. அரங்களைப்‌ பாடியவாறே அரங்கு
னோடு ஐக்கியமாகி அந்தர்ப்பவித்தருளினார்‌. ஆழ்வார்‌
சளில்‌ ஆண்டாளும்‌ திருப்பாணாழ்வாரும்‌ அரங்கநாதன்‌
86 சாதியும்‌ மதமும்‌

விக்கிரகத்தில்‌ ஐக்கயெமானவர்கள்‌; உடம்போடு மறைந்த


வர்கள்‌. அந்தர்ப்பவித்தருளினார்கள்‌ என்பது வரலாறு,

ஆசாரியர்கள்‌
வைணவ உலகில்‌ ஆசாரியர்கள்‌ நூற்றுக்கு மேற்‌
பட்டவர்கள்‌. இவர்களில்‌ பெரும்பான்மையோர்‌ அந்தணர்‌.
சிறுபான்மை வேறு குலத்தோரும்‌ உண்டு இவர்களது
சிடர்களில்‌ வேறு குலத்தோரும்‌ உண்டு ஆசார்யர்களில்‌
அிறப்பாகக்‌ குறிப்பிடப்‌ பெறுபவர்கள்‌: நாதமுனிகள்‌-
உய்யக்கொண்டார்‌ - மணக்கால்‌ நம்பி - ஆளவந்தார்‌ -
பெரிய நம்பி- உடையவர்‌ (இராமானுஜர்‌) - எம்பார்‌ -
பட்டர்‌ - நஞ்ஜீயர்‌ - நம்பிள்ளை- வடக்குத்‌ தஇிருவீதுப்‌
பிள்ளை - பிள்ளை லோகாசாரியர்‌ - திருவாய்மொழிப்‌
பிள்ளை - மணவாளமாமுனிகள்‌ ஆவர்‌ இது தென்கலை
குருபரமபரை. வடகலை குருபரம்பரையில்‌ வேதாந்த
'தே9கர்‌ முதல்வர்‌.
இராமானுஜர்‌ செய்த புரட்சி
வைணவ அஆசாரியர்களில்‌ முன்னோராலும்‌ பின்னோ
ராலும்‌ பெரிதும்‌ பாராட்டப்‌ பெற்றுத்‌ தலைமை
பெற்றவர்‌ இராமானுஜர்‌. வைணவ (விட்டாத்துவித)
தரிசனம்‌ இவர்‌ பெயரால்‌ இராமானுஜ தரிசனம்‌ என்றே
பெயர்‌ பெற்றது.

அந்தணராகய இராமானுஜர்‌ வைரியராகிய திருக்கச்சி


தம்பிகளிடம்‌ பக்தி பண்டொழுகினார்‌, பாடங்கேட்டார்‌.
அவர்‌ உண்ட மிச்சிலை (சே௨த்தை) த்‌ தாம்‌ அருந்த
எண்ணினார்‌ அஃதியலாது போன நிலையில்‌ அதற்‌
காகப பெரிதும்‌ வருந்தினார்‌. அவர்‌ வந்தபோது
மரியாதைக்‌ குறைவாக நடந்து கொண்டதற்காக, உபகாரத்‌
திற்குப பதில்‌ அபசாரமாக நடந்து கொண்டதற்காகத்‌,
ஊரன்‌ அடிகள்‌ 87
தம்‌ மனைவியாரை மிகவும்‌ கடித்து கொண்டார்‌. அதனா
லேயே துறவு பூண்டார்‌.
இராமானுஜருக்குச்‌ டர்கள்‌ பலர்‌, முதலியாண்டான்‌,
கூரத்தாழ்வான்‌ என்ற இரு சீடர்களும்‌ அந்தணர்கள்‌,
பிள்ளை உறங்கா வில்லிதாசர்‌ என்ற சீடர்‌ வேடர்‌,
இராமானுஜர்‌ நாள்தோறும்‌ காவிரிக்கு நீராடச்‌ செல்லும்‌
போது முதலியாண்டான்‌, கரத்தாழ்வான்‌ ஆ௫ய இருவர்‌
கரங்களையும்‌ பற்றிச்‌ செல்வார்‌. அவ்விருவரும்‌ இவரது
இரு பக்கமும்‌ வருவர்‌. அவர்களது முன்‌ கைகளில்‌ ஈரத்‌
துணியைப்‌ போட்டு அதன்‌ மேல்‌ கை வைத்துச்‌ செல்வார்‌
இராமானுஜர்‌. நீராடித்‌ இரும்பும்‌ போது பிள்ளை உறங்கா
வில்விதாசரின்‌ தோளில்‌- உலர்ந்த துணியோ args
துணியோ போடாத வெறுந்தோளில்‌ - கையை வைத்துக
கொண்டு திரும்புவார்‌. அற்தணச்‌ சீடர்களின்‌ கரங்களில்‌
கரத்துணி போட்டுக்‌ கைவைத்தார்‌. வேட்சி சீடனின்‌
வெறுந்தோளில்‌ கைவைத்தார்‌. வேடச்‌ சீடன்‌ வேஷசி
சிடனன்று; உண்மைச்‌ சிடன்‌. இரவெல்லாம்‌ உழங்காது
ஆசாரியனுக்குப்‌ பணி செய்ததால்‌ உறங்காவில்லிதாசன்‌
என்று பெயர்‌ பெற்றான்‌. அவன்‌ உயிர்‌ நீத்தபோது
அவனுடைய இறுதிச்‌ சடங்குகளை இராமானுஐசே செய்‌
தார்‌. அவன்‌ மனைவி பொன்னாச்சி வைணவ சம்பிர
தாயம்‌ வல்லவளாய்‌, கேட்பார்‌ ஐயங்களையெல்லாம்‌
தெளிவிக்கும்‌ திறத்தளாய்த்‌ திகழ்ந்தாள்‌. வில்லியோடு
பொன்னாச்சியும்‌ ஆசாரியன்‌ திருமடத்தில்‌ பணி செய்து
வந்தாள்‌. வில்வி உயிர்‌ நீத்த சிறிது நேரத்தில்‌
பொன்னாச்சியும்‌ உயிர்‌ நீத்தாள்‌. இருவர்க்கும்‌ ஒன்றாச
இறுதிச்சடங்கு நிகழ்ந்தது. இராமானுஜரே நிகழ்த்தினார்‌.

திருநாராயணபுரத்தில்‌ இராமானுஜர்‌ வழிபாடு


செய்துகொண்டு தங்கியிருந்தபோது தம்மிடம்‌ வந்த
88 சாதியும்‌ மதமும்‌
ஹரிஜனங்களுக்கெல்லாம்‌ இருக்குலத்தார்‌ என்று பெயரிட்டு
அவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமையும்‌ அளித்தார்‌.
திருவரங்கத்தில்‌ கோயில்‌ வண்ணான்‌ அரங்கப்‌
பெருமானின்‌ ஆடைகளை நன்கு வெளுத்து வந்திருப்பதைக்‌
கண்டு உவந்து அவனது கையைப்‌ பிடித்து அழைத்துச்‌
சென்று அரங்கநாதனைச்‌ சேவிக்கச்‌ செய்தார்‌.

பக்தி ஜாதிக்கு மேற்பட்டது. பாகவதர்களிடத்தில்‌


ஜாதி வேறுபாடு பார்க்கக்கூடாது என்பதை செயலில்‌
செய்துகாட்டினார்‌ இராமானுஜர்‌.

அடியார்களின்‌ சாதியை ஆராய்வது


மாத்ருயோனிப்‌ பரீட்சையை ஒக்கும்‌
அடியார்களின்‌ சாதியை ஆராய்வது, அடியார்களிடம்‌
சாதி வேற்றுமை பாராட்டுவது மாத்ரு யோனிப்‌ பரிட்சை
போன்றது என்று ஸ்ரீவசபூஷணம்‌ என்னும்‌ வைணவ
த.த்துவநூல்‌ கூறுகிறது. ஸ்ரீவசனபூஷணம்‌ பிள்ளை
லோகாச்சார்யர்‌ (உலசா௫ரியர்‌) அருளிச்செய்தது இதன்‌
வியாக்கியானம்‌ மணவாளமாமுனிகள்‌ அருளிச்செய்தது.
இதற்கு ஒர்‌ அருமையான தமிழாக்கம்‌ பண்டித வித்துவான்‌
பு.ரா. புருஷோத்தம நாயுடு அவர்களால்‌ செய்யப்‌
பெற்றது. இதற்கு மிக மிக அருமையான பதிப்பொன்று
எமது நண்பர்‌ அறிஞர்‌ கடலூர்‌ இ, ஓ, நாராயணசாமி
தாயுடு அவர்களால்‌ வெளியிடப்பெற்றது. (1970) கபீர்‌
அச்சுக்கூடத்தில்‌ அச்சிட்டது. இப்பதுப்பிலுள்ள கிடைத்தற்‌
கரிய ஒளிப்படங்கள்‌ பல அந்நாளில்‌ யாம்‌ எடுத்துதவியவை,
ஸ்ரீவசனபூஷணத்தில்‌ பாகவத அபசாரத்தைப்‌ பற்றிய
சூத்திரங்களும்‌ அவற்றின்‌ வியாக்கியானங்களும்‌ வருமாறு:
பாகவத அபசாரந்தான்‌ அநேக வீதம்‌. - சூத்திரம்‌ 198
அதிலே ஒன்று அவர்பக்கல்‌ ஜன்ம நிரூபணம்‌, - 199
ஊரன்‌ அடிகள்‌ 89

இதுதான்‌ அர்ச்சாவதாரத்தில்‌ உபாதான


ஸ்மிருதியிலும்‌ காட்டில்‌ கொடூரம்‌. - 200
அத்தை மாத்ருயோறி பரீட்சையோடு ஓக்கும்‌
என்று சாஸ்திரங்கள்‌ சொல்லும்‌. - 201
ஜன்ம நிரூபணம்‌ - பிறவியைப்‌ பற்றிக்‌ குறைவாக
நினைத்தல்‌,
அர்ச்சாவதாரம்‌ - தெய்வவிக்கிரகம்‌. உபாதானஸ்‌
மிருதி - ஏதனால்‌ செய்யப்பட்டது என்று ஆராய்தல்‌.
ஒரு பாகவதனுடைய பிறப்பைப்‌ பற்றி ஆராய்வது
விக்ரெகத்தின்‌ தெய்வத்தன்மையைப்‌ பாராது, அது எந்த
மூலப்பொருளால்‌ செய்யப்பட்டது என்று ஆராய்வதை
விடக்‌ குரூரமானது (கொடுமையான து).
*அர்ச்சாவதார விக்கிரகங்கள்‌ செய்யப்பட்ட பொருள்‌
களைப்‌ பற்றிய ஆராய்ச்சியையும்‌, ஒரு பாகவதனுடைய
பிறவியைப்‌ பற்றிய ஆராய்ச்சியையும்‌, தாயினுடைய
யோனிப்‌ பரிட்சை ஓப்பாகசி சாஸ்திரம்‌ அறிந்தவர்கள்‌
சொல்கிறார்கள்‌ - என்னா நின்றதிறே."'
“மாத்ரு யோறிப்‌ பரிட்சையாவது, வேஹறொரு
பெண்ணின்‌ யோனியினுடைய அழகினையும்‌
அழகின்மையினையும்‌ ஆராய்ந்த நினைவின்‌
வாசனையாலே, தன்‌ தாயின்‌ யோனியினையும்‌
அப்படி நினைத்தல்‌”
— மனவாளமாமூனிகள்‌ வியாக்கியானம்‌

மாத்ரு யோனிப்‌ பரீட்சை என்பதற்கு இதைவிடக்‌


குரூரமான (கொடுமையான) ஒரு பொருளையும்‌ கூறலாம்‌.
மாத்ருயோனி - தான்‌ பிறந்த இடம்‌. தன்னுடைய தாய்‌,
தன்னைத்‌, தன்‌ தந்தைக்குத்தான்‌ பெற்றாளா என்று
தாயின்‌ கற்பை ஆராய்வது, மாத்ரு யோனிப்‌ பரீட்சை
என்றும்‌ கூறலாம்‌, அழகு அழகின்மையினை ஆராய்வ
90 சாதியும்‌ மதமும்‌

திலும்‌ கற்பை ஆராய்வது குரூரம்‌ அல்லவா (கொடுமை


அல்லவா)7

அடியார்களின்‌ ஜாதியைப்‌ பற்றிய ஆராய்ச்சி, தாயின்‌


யோனி அழகு அழடன்மையைப்‌ பற்றிய, கற்பைப்‌ பற்றிய
ஆராய்ச்சி போல்வதாம்‌.

அடியார்களின்‌ ஜாதியை ஆராயக்கூடாது என்பதற்கு


இதைவிடக்‌ குரூரமாக (கொடுமையாக) வேறென்ன mp
முடியும்‌. தான்‌ பிறந்த இடத்தை, தாயின்‌ கற்பை
ஆராய்வோர்‌ அடியார்களின்‌ சாதியை ஆராய்ந்து குறை
காணலாம்‌.
சைவ வைணவ உலகில்‌ ஆதிதிராவிடப்‌ பெரியோர்கள்‌

இன்று தாழ்த்தப்பட்டோராக உள்ள ஆஇதிராவிடர்‌


களில்‌ நாயன்மார்ர்‌, ஆழ்வா, ஆசாரியர்‌, பெரியோர்கள்‌
பலர்‌ இருந்துள்ளனர்‌.

சைவத்தில்‌ அறுபத்துமூன்று நாயன்மார்களுள்‌ ஒருவ


ரான திருநீலகண்ட யாழ்ப்பாணர்‌ பாணர்‌ குடியினர்‌.
(பள்ளர்‌ குலத்தினர்‌) மற்றொருவரான நந்தனார்‌
(திருநாளைப்போவார்‌) பறையர்‌ குலத்தவர்‌. இவர்களது
பெருமையைப்‌ பெரியபுராணம்‌ பரக்கப்‌ பேசுறது.
சைவத்திருமுறை பன்னிரண்டனுள்‌ ஒன்பதாம்‌ திரு
முறையில்‌ சேர்ந்துள்ள தஇருவிசைப்‌ பாவையும்‌ திருப்‌
பல்லாண்டையும்‌ பாடியருளிய சேந்தனார்‌ பறையரீ.
“அன்பாகிய பண்டைப்‌ பறைச்சேந்தன்‌'” என்று இவரை
நம்பியாண்டார்‌ நம்பி பாடுகிறார்‌, பறைச்‌ சேந்தனார்‌
பாடிய திருப்பல்லாண்டு நாள்‌ேதாறும்‌ திருக்கோயில்களின்‌
இஹஷைவன்‌ திருமுன்னர்‌ ஒதுவார்களால்‌ பாடப்பெறுகிறது,
சேந்தனா ஏழை. சோற்றுக்குப்‌ பதிலாகப்‌ பெரும்பாலும்‌
களியையே உண்டு இருப்தி கொள்பவர்‌, ஒருநாள்‌ நடராசப்‌
ஊரன்‌ அடிகள்‌ 91

பெருமான்‌ வெனடியார்‌ கோலத்தில்‌ சேந்தனாரிடம்‌ வந்து


சளியுணவை விரும்பி வாங்கி உண்டு, மிகுந்ததையும்‌
கந்தைத்துணியில்‌ முடிந்துகொண்டு சென்றார்‌. இதன்‌
அடையாளமாக இன்றும்‌ சிதம்பரத்தில்‌ மார்கழி ஆருத்ரா
கதுரிசனத்தின்போது நடராசப்பெருமானுக்குக்‌ களியமுது
படைக்கப்‌ பெறுகிறது. “மன்னுக தில்லை வளரீசு
நம்‌ பத்தார்கள்‌'*? என்று நடராசப்பெருமானுக்குப்‌ பல்லாண்டு
பாடிய இறப்பும்‌, களியமுது அளித்த இறப்பும்‌ பறைசி
சேந்தனாருக்குரியன. அவரை அன்பாகிய பண்டைப்பறைச்‌
சேந்சுன்‌ என்கிறார்‌ நம்ம,
திருவிளையாடற்புராணத்திற்‌ கூறப்பெறும்‌ பாண
பத்திரார்‌ பாணர்‌ குலத்தினர்‌

தில்லையில்‌ நடராசப்பெருமானிடம்‌ கைச்சீட்டுப்‌


பெற்று உமாபதி இவத்தின்மூலம்‌ முத்திப்பேறு பெற்ற
பெற்றான்‌ சாம்பான்‌ பறையர்‌, சைவமெய்யன்பர்களால்‌
சாம்பானார்‌ என்று சிறப்பிக்கப்பெறுபவர்‌.
இருத்தினை நகரில்‌ தினைக்கஞ் உண்டு வாழும்‌
பெரியான்‌ என்னும்‌ ஏழைப்‌ பறையர்‌ குலத்‌ தொண்டருகி
காகச்‌ சிவபெருமான்‌ உழவு செய்து இனை விளைதி
தருளினார்‌. பெரியானால்‌ ஊரின்‌ பெயரே தஇனைதகர்‌
ஆயிற்று.
வைணவ உலகில்‌ ஆழ்வார்‌ பன்னிருவருள்‌
திருப்பாணாழ்வார்‌ பாணர்‌, சைவத்தில்‌ ஒரு பாணர்‌
என்றால்‌ வைணாவத்திலும்‌ ஒரு பாணர்‌. அரங்கப்பெருமான்‌
அருளை நேரே பெற்றவர்‌.

வைணவ ஆசாரியர்‌ மாறனேர்நம்பி ஆதிதிராவிடர்‌,


அவரை அந்தண ஆசாரியர்‌ ஆளவந்தார்‌ திருவரங்கத்திற்கு
அழைத்துவந்து இருக்கச்‌ செய்தார்‌. அவரது அந்திய
92 சாதியும்‌ மதமும்‌
காலத்தில்‌ அந்திமக்‌ கிரியைகளை அந்தண ஆசாரியர்‌
பெரியநம்பி தாமே செய்தார்‌.
பாணர்‌ குலத்தில்‌ நம்பாடுவான்‌ என ஒர்‌ வைணவ
அடியவர்‌. நம்மாழ்வார்‌ (நம்‌ஆழ்வாரி), நம்பிள்ளை,
நஞ்சீயர்‌ (தம்ஜீயர்‌) என்பதுபோல நம்பாடுவான்‌ (நம்மைப்‌
பாடுவான்‌, நமது பாடுவான்‌) என்று இவர்‌ பெயா்‌
பெற்றார்‌. இருமாலாம்‌ பெருமாளுக்கு நம்பெருமாள்‌
என்று பெயர்‌. ஆழ்வாருக்கு நம்மாழ்வார்‌ என்று பெயர்‌,
ஆசாரியர்களுக்கு நஞ்சியார்‌ நம்பிள்ளை என்று பெயர்‌.
இப்பெயர்‌ நயத்தை மணவாள மாமூனிகள்‌ உபதேச
ரத்தினமாலையில்‌
தம்பெருமாள்‌ நம்மாழ்வார்‌ நஞ்சீயர்‌ நம்பிள்ளை
என்ப தவரவர்‌ ஏற்றத்தால்‌ — 50
என்று பாடுகிறார்‌. நம்‌ பாடுவானும்‌ **நம்‌?? என்னும்‌
ஏற்றம்‌ பெற்றார்‌.
விளாஞ்சோலைப்‌ பிள்ளை என்றொரு ஹரிஜன
அடியவர்‌, வைணவ ஆசாரியர்‌ வரிசையில்‌ இவரும்‌ ஒருவர்‌.
பக்தியும்‌ பக்குவமும்‌ உள்ள ஆதிதிராவிட அன்பர்‌
களும்‌ அடியவர்களும்‌ “*திருக்குலத்தார்‌”? என வைணவ
ஆசாரியர்களால்‌ சிறப்பிக்கப்‌ பெற்றனர்‌.
ஐம்பது ஆண்டுகளுக்குமுன்‌ இதம்பரத்தில்‌ சுவாமி
சகஜானந்தா என்றொரு ஹரிஜனத்‌ துறவி இருந்தார்‌
(27-01-1890 -30--04--1959) சிதம்பரத்தில்‌ தந்தனாருக்கு
மடம்‌ ஏற்படுத்தினார்‌. நந்தனார்‌ பேரால்‌ கல்வி
நிறுவனங்களை நிறுவினார்‌, ஆண்களுக்கென்றும்‌ பெண்‌
களுக்கென்றும்‌ தனித்தனி மேல்நிலைப்பள்ளிகளாக௪ இன்று
அவை சிறந்து விளங்குகின்றன. பிரிட்டிஷ்‌ ஆட்டிக்‌
சாலத்திலேயே மேலவை உறுப்பினராக நியமிக்கப்‌
ஊரன்‌ அடிகள்‌ 93

பெற்மார்‌. சுதநீதிரத்துக்குப்பின்‌ சிதம்பரம்‌ தனித்‌


தொகுதியில்‌ மூன்றுமுறை தேோற்தெடுக்கப்‌ பெற்றுச்‌
சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்‌. காந்தியடிகள்‌,
ராஜாஜி போன்ற பெருந்தலைவர்களால்‌ நன்கு மதிக்கப்‌
பெற்றார்‌. இளமை முதல்‌ இறுதிவரை தூய சைவ
உணவினராகவும்‌ தாய துறவியாகவும்‌ தொண்டராகவும்‌
இகழ்ந்தார்‌. இன்று அவரைப்‌ போன்றவர்‌ யாருமில்லை.
ஹரிஜன முன்னேற்றத்திற்கு இன்று பல சகஜானந்தர்கள்‌
தேவை.

சித்தர்களுள்‌ சாதி வேற்றுமை இல்லை

சித்தர்கள்‌ பதினெண்மர்‌ என்று கூறுவதுண்டு. சித்தர்‌


ஒன்பதின்மர்‌, சித்தர்‌ பதினெண்மர்‌ என இரண்டு
தொகுதியினரை அபிதானசிந்தாமணி கூறுகிறது. சித்தர்‌
ஒன்பதின்மர்‌ நவநாத௫ித்தர்கள்‌, “நாதர்‌? என்று பேரீ
பெற்றோரி. சித்தர்‌ பதினெண்மரீ என்பது பொதுவான
வழக்கு. இத்தர்‌ துதிப்பாடலும்‌ சித்தர்‌ வணக்கம்‌ என்னும்‌
பாடலும்‌ 18 இத்தர்களின்‌ பெயர்களைக்‌ கூறுகின்றன.
எனினும்‌ சித்தர்ஞானக்கோவையில்‌, அது பதினெண்சித்தர்‌
ஞானக்கோவை என்று வழங்கப்பெற்ற போதிலும்‌,
பதினெட்டுக்கு மேற்பட்டோர்‌. பாடல்கள்‌ தொகுக்கப்‌
பெற்றுள்ளன.
*இத்தர்‌ பெரியஞாளக்கோவை என வழங்கும்‌ சிதீதர
பாடல்கள்‌”, பிரேமா பிரசுரம்‌ அர. ராமநாதன்‌ பதிப்பில்‌
(மூன்றாம்‌ பதிப்பு 1968) 'சித்தர்கள்‌ மரபு முதலியன”
என்றொரு அட்டவணை கொடுக்கப்பெற்றுள்ளது. அதில்‌
25 சித்தர்களின்‌ பெயர்‌ மரபு அடக்கம்‌ பெற்ற தலம்‌
கொடுக்கப்‌ பெற்றுள்ளன. அவ்வட்டவணையை
அப்படியே இதன்‌8ழ்‌ எடுத்துக்காட்டுகறோம்‌.
94 சாதியும்‌ மதழும்‌

பெயர்‌ மரபு அ டக்கம்‌


தலம்‌ பெற்‌oD

1. அகத்தியர்‌ வேளாளர்‌ அனந்தசயனம்‌


2. அகப்பேய்‌ வேளாளர்‌ அழகர்மலை
3. அழுகண்ணா்‌ சீனத்து ஆசாரி அழகர்மலை
8. இடைக்காடர்‌ இடையர்‌ இருவண்ணாமலை
3. கமலமுனி உவச்சர்‌ திருவாரூர்‌
6, கருவூரார்‌ சன்னாரர்‌ கருவூர்‌
7. சாளாங்கிதாதர்‌ சீனத்து ஆசாரி காஞ்சீபுரம்‌
8. குதம்பை இடையார்‌ மாயூரம்‌
9. கொங்கணவர்‌ சுன்னட இடையர்‌ இருப்பத
10. கோரக்கர்‌ கள்ளர்‌ பேரூர்‌ (கோவை)
11. சட்டநாதர்‌ சிங்களவர்‌ Away mab
12, சுந்தரானந்தர்‌ வேளாளர்‌ மதுரை
13. தன்வந்திரி குருக்கள்‌ வைத்தீஸ்வரர்‌
கோயில்‌
[4 இருமூலா்‌ வேளாளர்‌ தில்லை (சிதம்பரம்‌)
15. தேரையர்‌ பிராமணர்‌ பொதிகைமலை
16, நத்தி பிராமணர்‌ காசி
17. பதஞ்சலியார்‌ கள்ளர்‌ ராமேஸ்வரம்‌
18 பாம்பாட்டி கோஸாயீ விருத்தாசலம்‌
19, புண்ணாக்சேர்‌ கன்னட இடையர்‌ நாங்குனேரி
20. புலஸ்தியர்‌ சிங்களவர்‌ யாழ்ப்பாணம்‌
21. பூனைக்கண்ணர்‌ எகிப்தியர்‌ எகிப்து
22. போகர்‌ சீனதேசக்‌ குயவர்‌ பழனி
23. மச்சமுனி செம்படவர்‌ திருப்பரங்குன்றம்‌
24, வாமதேவர்‌ ஓதுவார்‌ அழகர்மலை
25. வான்மீகர்‌ வேடர்‌ எட்டிக்குடி
ஊரன்‌ அடிகள்‌' 95
அந்தணர்‌ முதல்‌ வேடர்‌ செம்படவர்வரை பல
சாதியாரும்‌ இதில்‌ உள்ளனர்‌. தமிழ்‌ நாட்டுக்கு வெளி
யேயும்‌ இந்திய நாட்டுக்கு வெளியேயும்‌ இருந்துகூட
வந்துள்ளனர்‌. அமுகண்ணரும்‌, காளாங்கிநாதரும்‌ சீனத்து
ஆசாரிகள்‌. போகர்‌ சீனதேசக்‌ குயவர்‌ பூனைக்கண்ணா்‌
எகிப்தியர்‌, சட்டநாதரும்‌ புலஸ்தியரும்‌ சிங்களவர்‌,
புலஸ்திய அடக்கத்‌ தலம்‌ யாழ்ப்பாணம்‌, இராவணன்‌
புலஸ்தியர்‌ மரபு என்று கூறப்பெறுவது இங்கே எண்ணத்‌
தக்கது,

சித்தர்கள்‌ பல சாதியாராக, தமிழ்நாடு, சன்னடம்‌,


சிங்களம்‌, சீனம்‌, எகிப்து எனப்‌ பல நாட்டினராக
இருப்பினும்‌ எல்லாரும்‌ ஒன்றாகவே மதிக்கப்பெறுகின்றனர்‌.
இவர்களிடையே சாதி வேறுபாடு பாராட்டப்பெறவில்லை.
நாட்டு வேறுபாடுகூட இல்லை,

சாதி ம$வற்றுமையை
வன்மையாகக்‌ கண்டிக்கும்‌ கபிலர்‌ அகவல்‌
சாதிப்‌ பிரிவினையைக்‌ கடுமையாகத்‌ தாக்கும்‌ நால்‌
கபிலர்‌ அகவல்‌. கபிலர்‌ என்ற பெயருடைய புலவர்கள்‌
பலர்‌ இருந்திருக்கின்றனர்‌. சங்க காலக்‌ கபிலர்‌ ஒருவர்‌,
அவர்‌ குறிஞ்சிப்பாட்டையும்‌ அசதநானூறு புறநானூற்றுப்‌
பாடல்களையும்‌ பாடியவர்‌. பதினோராம்‌ திருமுறையில்‌
சேர்க்கப்‌ பெற்றுள்ள மூத்தநாயனார்‌ திருவிரட்டைமணி
மாலை, இிவபெருமான்‌ திருவிரட்டைமணிமாலை, சவ
பெருமான்‌ திருவந்தாதி என்னும்‌ மூன்று பிரபத்தங்களைப்‌
பாடிய கபிலர்‌ இன்னொருவர்‌, இவருக்குக்‌ கபிலதேவ
நாயனார்‌ என்று பெயர்‌. கபிலரசவலப்‌ பாடிய கபிலர்‌
56 சாதியும்‌ மதழும்‌

மூன்மாமவர்‌. இவரது கரலம்‌ பதினைந்தாம்‌ நூற்றாண்டு


ஆகலாம்‌.

காதிப்பிரிவினையைக்‌ கடுமையாகத்‌ தாக்கும்‌ நூல்‌


தமிழில்‌ இதைத்‌ தவிர வேறு இல்லை. இந்நரலின்‌ தடை
மிக எளிய நடை, ஆனால்‌ அது செல்லும்‌ வேசம்‌ வேறு
எற்த நூலுக்கும்‌ இல்லை, சொற்செறிவு, பொருட்‌
செறிவு, ஓசை இனிமை முதலியவற்றுடன்‌ விறுவிறுப்பாக
ஓட்டமும்‌ நடையுமாக வெகுவேகமாக இத்தூல்‌ செல்கிறது,
139 அடிகளைக்‌ கொண்ட இச்‌ இறு நூல்‌ ஒரே மூச்சில்‌
படித்துவிடகீ கூடியது, எளிதில்‌ மனப்பாடம்‌ ஆகக்‌
கூடியது. இதில்‌ சொல்லப்‌ பெறும்‌ கருத்துகள்‌ சிறற்தவை,
கதை உண்மையன்று. சாதி guns பிரச்சாரத்திற்கு
இதை விடச்‌ சிறந்த நால்‌ வேறில்லை.
வாழ்நாள்‌ நிலையற்றது என்பதையும்‌, குறுகிய அவ்‌
வாழ்நாளில்‌ சாதி வேற்றுமை கருதாது, புலையும்‌ கொலை
யூம்‌ களவும்‌ தவிர்ந்து, இரப்பவர்க்கு இட்டு உண்டு வாழ
வேண்டும்‌ என்பதையும்‌, சிறப்பும்‌ எலமும்‌ நலந்தருமே
ஒழியப்‌ பிறப்பு நலந்தரரது என்பதையும்‌ இச்சபிலரகவல்‌
அழகாகக்‌ கூறுவதோடு அழுத்தந்திருத்தமாகவும்‌ வேச
மாகவும்‌ விளக்கமாகவும்‌ கூறுகிறது. மணிமேகலையில்‌
வரும்‌ ஆபுத்திரன்‌ கதையும்‌ கபிலரகவலோடு ஒத்ததே.
அதுவும்‌ சாதி ஒழிப்புப்‌ பிரச்சாரத்திற்கு மிகவும்‌ பொருத்த
மானது.

பாய்ச்ச லூர்ப்பதிகம்‌ என ஒரு சிறுநால்‌ உண்டு, 10


பாடல்கள்‌. உத்தரநல்‌ லூர்‌ நங்கை என்னும்‌ நந்தனார்‌
குலத்து நங்கை ஒருத்தி பாடியது. “'பாடல்தோறும்‌
பாய்ச்சலூர்க்‌ கிராமத்தாரே”' என்று முடிவது, இதுவும்‌
சாதிப்பிரிவினையைக்‌ கடுமையாகச்‌ சாடுவது.
ஊரன்‌ அடிகள்‌ 97

கபிலர்‌ அகவலை அப்படியே முழுமையாக இதன்கீழ்த்‌


தருகிறோம்‌. அதைத்‌ தொடர்ந்து பாய்ச்ச லூர்ப்‌ பதிகத்தின்‌
இரண்டு பாடல்களை மட்டும்‌ தருகிறோம்‌ பாய்ச்சலூர்ப்‌
பதிகம்‌ தோன்றியதற்கு ஒர்‌ அருமையான வரலாறுண்டு.
அதனை மிகச்‌ சுருக்கமாகப்‌ பாய்ச்சலுரர்ப்‌ பதிகப்‌ பாடல்கள்‌
இரண்டின்பின்‌ கொடுத்திருக்கிறோம்‌.

சுபிலர்‌ அகவல்‌

நான்முகன்‌ படைதீத நானாவகை உலூல்‌


ஆன்ற சிறப்பின்‌ அரும்பொருள்‌ கூறுங்கால்‌
ஆண்முதுதோ? பெண்முதிதோ? அன்றி அலிமுதிதோ?
நாள்‌ முதிதோ? கோள்‌ முதிதோ? நல்வினை முதிதோ?
தீவினை முதிதோ
செல்வம்‌ சிறப்போ? சல்வி சிறப்போ?
தொல்லை மா ஞாலம்‌ தோற்றமோ? படைப்போ?
எல்லாப்‌ பிறப்பும்‌ இயற்கையோ? செயற்கையோ?
காலத்தால்‌ சாவரோ? பொய்ச்சாவு சாவரோ?
நஞ்சுறு வினை துஞ்சுமோ? துஞ்சாதோ?
10. துஞ்சம்போ தந்தப்‌ பஞ்சேந்திரியம்‌
என்செயா நிற்குமோ? எவ்விடத்‌ தேகுமோ?
ஆற்ற லுடையீர்‌ அருந்தவம்‌ புரிந்தால்‌
வேற்றுடம்‌ பாகுமோ? தமதுடம்‌ பாகுமோ?
உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?
15. உலகத்தீரே! உலகத்திரே!
நாக்கடிப்‌ பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக்‌ கேண்மின்‌! சாற்றக்‌ கேண்மின்‌!
மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை,
ஐம்பது இரவில்‌ அகலும்‌ துயிலினால்‌,
20. ஒட்டிய இளமை யால்‌ ஒரைந்து நீக்கும்‌,
ஆக்கை இளமையில்‌ ஐம்மூன்று நீங்கும்‌,
98 ச்ரதியும்‌ ம்தழும்‌

எழுபது பேர்க நீக்கி இருப்பது: முப்பதே


அவற்றுள்‌,
இன்புறு நாளும்‌ ரிலவே, அதாஅன்று
25. துன்புறு நாளும்‌ சிலவே, ஆதலால்‌
பெருக்காறு ஒத்தது செல்வம்‌, பெருக்காற்று
இடிகரை ஓத்தது இளமை, இடிகரை -
வாழ்மரம்‌ ஒத்தது வாழ்நாள்‌, ஆதலால்‌
ஒன்றே செய்யவும்‌ வேண்டும்‌, ஒன்றும்‌
30, நன்றே செய்யவும்‌ வேண்டும்‌, நன்றும்‌:
இன்றே செய்யவும்‌ வேண்டும்‌, இன்றும்‌
இன்னே செய்யவும்‌ வேண்டும்‌, இன்னும்‌
தாளை நான்ள என்பீர்‌ ஆடல்‌, நாளை
தம்முடை முறைநாள்‌ ஆவதும்‌ அறியீர்‌,
35. நமனுடைய மூறைதாள்‌ ஆவதும்‌ அறியீர்‌
எப்போ தாயினும்‌ கூற்றுவன்‌ வருவான்‌
அப்போ தந்தக்‌ கூற்றுவன்‌ தன்னைப்‌
போற்றவும்‌ போகான்‌, பொருளொடும்‌ போகான்‌,
சாற்றவும்‌ போகான்‌, தமரொடும்‌ போகான்‌,
40. தில்லா ரென்னான்‌, நல்குர வறியான்‌,
தீயா ரென்னான்‌, செல்வரென்‌ நுன்னான்‌,
துரியான்‌ ஒருகணம்‌ தறுக ணானன்‌,
உயிர்கொடு போவான்‌, உடல்கொரு போகான்‌,
ஏதுக்‌ கழுவீர்‌ ஏழை மாந்தர்காள்‌!
45, உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?
உயிரிழந்‌ தழுதுமென்‌ றோதுவீ ராகில்‌
உயிரினை அன்றும்‌ காணீர்‌ இன்றும்‌ காணீர்‌
உடலினை அன்றும்‌ சண்டீர்‌ இன்றும்‌ கண்டீர்‌
உயிரினை இழந்த உடலது தன்னைக்‌
30. களவுகொண்ட கள்வனைப்‌ போலக்‌
காலும்‌ ஆரித்துக்‌ தையும்‌ Bi Hs
ஊரன்‌ அடிகள்‌ “99

கூறை களைந்து சோவணம்‌ கொளுவி


ஈமத்‌ தீயை எரியெழ மூட்டிப்‌
பொடிபடச்‌ சுட்டுப்‌ புணலிடை மூழ்கி
55, போயத்‌ தமரொடும்‌ புந்திநைந்‌ தமுவது
சலமெனப்‌ படுமோ? சதுரெனப்‌ படுமோ?
பார்ப்பன மாநீதர்காள்‌ பகர்வது கேண்மின்‌!
இறந்தவ ராய்‌உமை இல்லிடை இருத்திப்‌
பாவனை மந்திரம்‌ பலபட உரைத்தே
60. உமக்கவா்‌ புத்திரர்‌ ஊட்டின போது
அடுபசியாற்‌ குழைந்து ஆங்கவரீ மீண்டு
கையேந்தி நிற்பது சண்டதார்‌? புகலீர்‌!
அருந்திய உண்டியால்‌ ஆர்ப9 கழிந்தது?
ஓட்டியர்‌, மிலேச்சர்‌, ஊணர்‌, சிங்களர்‌
65. இட்டிடைச்‌ சோனகர்‌, யவளரீ, Fer Set
பற்பலர்‌ நாட்டினும்‌ பாரிப்பார்‌ இல்லையால்‌,
முற்படைப்‌ பதனில்‌ வேறாகிய முறைமைபோல்‌
நால்வகைச்‌ சாதி இந்நாட்டினில்‌ நாட்டினீர்‌
மேல்வகை தகீழ்வகை விளங்குவ தொழுக்கால்‌
70. பெற்றமும்‌ எருமையும்‌ பிறப்பினில்‌ வேமே
அவ்விரு சாதியில்‌ ஆண்பெண்‌ மாறிக்‌
கலத்து கருப்பெறல்‌ கண்ட துண்டோ?
ஒருவகைச்‌ சாதியாம்‌ மக்கட்‌ பிறப்பில்‌
ஈரிரு வகையாக நீர்‌ இயம்பிய குலத்துள்‌
75. ஆண்பெண்‌ மாறி அணைதலும்‌, அணைந்தபின்‌
கருப்பொறை உயிர்ப்பதும்‌ காண்கின்‌ றிலிரோ?
எந்நிலத்‌ தெந்தவித்‌ தஇடப்படு கின்றதோ
அத்நிலத்‌ தந்தவித்‌ தங்குதித்‌ இடலால்‌
மாறிவே றாகும்‌ வழக்கமொன்‌ றிலையே
80. பூசுரர்ப்‌ புணர்ந்து புலைச்சியர்‌ ஈன்ற
புத்திரர்‌ ஆயினோர்‌ பூசுரர்‌ அல்லரோ?
பெற்றமும்‌ எருமையும்‌ பேதமாய்த்‌ தோன்றல்போல்‌
100 சாதியும்‌ மதமும்‌

மாந்தரில்‌ பேதமாம்‌ வடிவெவர்‌ கண்டுளார்‌?


வாழ்நாள்‌, உறுப்பு, மெய்‌, வண்ணமொடு அறிவினில்‌
85. வேற்றுமை யாவதும்‌ வெளிப்பட லின்றே
தென்திசைப்‌ புலையன்‌ வடஇசைக்‌ கேகன்‌
பழுதற ஒப்‌ பார்ப்பா னாவான்‌
வடதிசைப்‌ பார்ப்பான்‌ தென்திசைக்‌ கேசின்‌
தடையது கோணிப்‌ புலைய னாவான்‌
90. அது நிற்க
சேற்றிற்‌ பிறந்த செங்கழுறீர்‌ போலப்‌
பிரமற்குக்‌ கூத்திவயிற்றிற்‌ பிறந்த வூட்டரும்‌
வசிட்டற்குச்‌ சண்டாளி வயிற்றிற்‌ பிறந்த சத்தியரும்‌
சத்தியர்க்குப்‌ புலைச்சதோள்‌ சேர்ந்துபிறந்த
பராசரரும்‌
95. பராசரரிக்கு மீன்வாணிச்சி வயிற்றிற்‌ பிறந்த ்‌
வியாசரும்‌
ஆூய இந்நால்வரும்‌
வேதங்களோதி மேன்மைப்‌ பட்டு
மாதவ ராக வயங்க ரன்ழோ?
அருந்தவ மாமுனியாம்‌ பகவற்கு
ட கருவூரீப்‌ பெரும்பதிக்கட்‌ பெரும்‌ புலைச்சி
ஆதி வயிற்றினில்‌ அன்றவ தரித்த
கான்முளை யாகிய சகபிலனும்‌ யானே
என்னுடன்‌ பிறந்தவர்‌ எத்தனை பேரெனில்‌
ஆண்பால்‌ மூவர்‌ பெண்பால்‌ நால்வர்‌
105, யாம்‌ வளர்திறஞ்‌ ஈிறிதியம்புவல்‌ கேன்மின்‌!
கற்றுக்‌ காடெனும்‌ ஊர்தனில்‌ தங்கியே
வண்ணார்‌ அகத்தினில்‌ உப்பை வளர்ந்தனள்‌
காவிரிப்‌ பூம்‌ பட்டினத்தில்‌ கள்விலைஞர்‌ சேரியில்‌
சான்றார்‌ அகந்தனில்‌ உறுவை வளர்ந்தனள்‌,
110.. தரப்புக்‌ கருவியோர்‌ நண்ணிடுஞ்‌ சேரியில்‌
ஊரன்‌ அடிகள்‌ 101
பாணர்‌ அகத்தில்‌ ஒளவை வளர்ந்தளள்‌,
குற்வா்‌ கோமான்‌ கொய்தினைப்‌ புளஞ்சூழ்‌
வண்மலைச்‌ சாரலில்‌ வள்ளி வளர்ந்தனள்‌,
தொண்டை. மண்டலத்தில்‌ வண்டமிழ்‌ மயிலைப்‌
115. பழைய ரிடத்தில்‌ வள்ளுவர்‌ வளர்ந்தனர்‌,
அரும்பார்‌ சோலைச்‌ சுரும்பார்‌ வஞ்சி
அதிகன்‌ இல்லிடை அதிகமான்‌ ai psd,
பாரூர்‌ நீர்நாட்டு ஆரூர்‌ தன்னில்‌
அந்தணர்‌ வளர்க்க யானும்‌ வளர்ந்தேன்‌,
120. ஆதலால்‌
மாரிதான்‌ சிலரை வரைந்து பெய்யுமோ?
சாற்றும்‌ சிலரை நீக்கி வீசுமோ?
மாநிலம்‌ சுமக்க மாட்டேன்‌ என்னுமோ?
கதிரோன்‌ சிலரைக்‌ காயேன்‌ என்னுமோ?
125. வாழ்நான்கு சாதிக்‌ குணவு நாட்டிலும்‌
ஈழ்நான்கு சாதிக்‌ குணவு காட்டிலுமோ?
இருவும்‌ வறுமையும செய்தவப்‌ பேறும்‌
சாவதும்‌ வேறிலை தரணி யோர்க்கே,
குலமும்‌ ஒன்றே குடியும்‌ ஒன்றே;
130. இறப்பும்‌ ஒன்றே, பிறப்பும்‌ ஒன்றே;
வழிபடு தெய்வமும்‌ ஒன்றே, ஆதலால்‌
முன்னோர்‌ உரைத்த மொழிதவ றாமல்‌
எந்நா ளாயினும்‌ இரப்பவர்க்‌ கிட்டுப்‌
புலையும்‌ கொலையும்‌ களவும்‌ தவிர்ந்து
135. நிலைபெற அறத்தில்‌ நிற்பதை அறிந்து
ஆணும்‌ பெண்ணும்‌ அல்லதை உணர்ந்து
பேணி உரைப்பது பிழைஎனப்‌ படாது
சிறப்பும்‌ சீலமும்‌ அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதை யீரே!
(சபிலரசுவல்‌ முற்றும்‌)
102. சாதியும்‌ மதமும்‌
சந்தனம்‌ அகிலும்‌ வேம்பும்‌ தனித்தனிச்‌ கந்தம்‌ நாறும்‌
அந்தணர்‌ தீயில்‌ வீழ்ந்தால்‌ அவர்மனம்‌ வீசக்‌ காணேம்‌
செந்தலைப்‌ புலையன்‌ வீழ்த்தால்‌ இீமணம்‌ வேற தாமோ
பந்தமும்‌ இதயும்‌ வேறோ பாய்ச்சலூர்க்‌ கராமத்தாரே,.
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில்‌ அறித்தவற்கு அதுவுங்கள்‌ இதுவுங்‌ ச௪ள்ளே
ஒருகுலை உயர்த்த தேனோ ஒருகுலை தாழ்ந்த தேனோ
பறையனைப்‌ பழிப்பதேனோ பாய்ச்சலூர்க்‌ கராமத்‌ தாரே.
- பாய்ச்சலூரிப்‌ பதிகம்‌.
நந்தனார்‌ குலத்திற்‌ பிறந்த உத்தரநல்.லூர்‌ நங்கை
சிறுவயதில்‌ ஆற்றங்கரையில்‌ மாடு மேய்த்துக்‌ கொண்டிருந்த
போது, அக்கரகாரத்திலிருந்து அங்கு நீராடவந்த
அந்தணச்‌ சிறுவனொருவன்‌ வேதம்‌ ஒதி மந்திரம்‌ சொல்வி
சந்தியாவந்தனம்‌ செய்வதை வேடிக்கையாகப்‌ பார்த்தாள்‌,
இப்படியே சிலநாள்‌ நிகழ்ந்தது, முதலில்‌ வேடிக்கையாகப்‌
பார்த்தவள்‌ வரவர, பக்தியோடு பார்த்து, ல ஆண்டுகளில்‌
அவற்றைத்‌ தானும்‌ கற்றுக்‌ கொண்டாள்‌. இருவரும்‌
சிறுவயதினராதலால்‌ சாதி வேற்றுமை உணர்வு மனத்தில்‌
புகவில்லை, அவன்‌ கற்றுக்கொடுக்க, இவள்‌ கற்றுக்‌
கொள்ள நாளடைவில்‌ அவன்‌ கற்றிருந்ததையெல்லாம்‌
இவளும்‌ கற்று ஓரளவு பண்டிதையாடூவிட்டாள்‌. மங்கைப்‌
பருவமடைந்தும்‌ மனவிகற்பமின்றி இருவரும்‌ ஆற்றுத்‌
துறையில்‌ நாள்தோறும்‌ சந்தித்து அளவளாவி கல்வித்‌
துறையிற்‌ கலந்து உறவாடி வந்தது ஊரார்‌ கண்ணிற்‌
படவே அலர்‌ தாூற்றலாயினார்‌ இருவரையும்‌ அவரவரி
வீட்டார்‌ கண்டித்தனர்‌. எனினும்‌ இருவர்‌ சந்திப்பும்‌
கலைப்பயிழற்சியும்‌ காதலும்‌ நிற்கவில்லை. அதுகண்ட ஊர்‌
அந்தணர்கள்‌ இவள்தான்‌ அந்தண இளைஞளுனைத்‌ தன்பால்‌
இழுக்கிறாள்‌ என்று எண்ணி ஒருநாள்‌ இரவு இவர்த்தி
முதலியன எடுத்துக்கொண்டு இவளைக்‌ சண்டிக்க இவள்‌
வசித்த சேரியை நோக்கி வந்தார்கள்‌. அதீ தண இளைஞன்‌
ஊரன்‌ அடிகள்‌ . 163

ஓரளவு கோழையாய்‌ இருந்தாலும்‌ இந்தந்தனார்‌ குலத்து


தங்கை அவனிடம்‌ பெற்ற கல்விப்‌ பயிற்சியால்‌ விவேகமும்‌
வீரமும்‌ உடையவளாகி, வந்த அந்தணரிகளைத்‌ தடுத்து
நிறுத்தி, அவர்களுக்கு அறிவு புகட்டும்‌ வகையில்‌
பாய்ச்சலூர்ப்பதிகம்‌ பத்துப்‌ பாடல்களையும்‌ பாடினாள்‌.
பாய்ச்சலூர்ப்‌' பதிகத்தின்‌ வரலாறு இதுவே.

ரபரியோர்கள்‌ பலரும்‌ சாதி 8வற்றுமையைக்‌


கண்டித்தல்‌. சாதி ஒருமைப்பாட்டை
வற்புறுத்தல்‌
சங்கப்புலவர்‌ கணியன்‌ பூங்குன்றனார்‌

முதன்‌ முதலில்‌ சமரசக்‌ குரல்‌ ஒலித்தது தமிழ்‌ நாட்டில்‌


தான்‌. 2000 ஆண்டுகளுக்கு முன்பே *யாதும்‌ ஊரே
யாவரும்‌ கேளிர்‌” என்று தமிழகம்‌ சமரசப்‌ பிரகடனம்‌
செய்தது.
யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌
இதும்‌ நன்றும்‌ பிறர்தர வாரா
நோதலும்‌ தணிதலும்‌ அவற்றோ ரன்ன
சாதலும்‌ புதுவது அன்றே, வாழ்தல்‌
இனிதுஎன மகிழ்ந்தன்றும்‌ இலமே, மூனிவின்‌
இன்னாது என்றலும்‌ இலமே, மின்னொடு
வானம்‌ தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்‌ மல்லல்‌ பேர்ஙாற்று -
நீர்‌ வழிப்படூஉம்‌ பூணைபோல்‌ ஆர்‌உயிர்‌
மூறைவழிப்படுஉம்‌ என்பது இறவோா்‌
காட்சியின்‌ தெளிந்தனம்‌ ஆகலின்‌, மாட்சியின்‌
பெரியோரை வியத்தலும்‌ இலமே
சிறியோரை இகழ்தல்‌ அதனினும்‌ இலமே,
104 சாதியும்‌ மதமும்‌

என்பது புறநானூறு 192-ஆம்‌ பாட்டு, “*கணியன்‌


பூங்குன்றன்‌ பாட்டு",

"யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌*” என்பது பாட்டின்‌


மூதல்‌ அடி, முதல்‌ வரி, சமரசத்தைப்‌ பற்றி இன்று
ஏதேனும்‌ ஒரு நூலோ கட்டுரையோ எழுத வேண்டு
மென்றால்‌ பேச வேண்டு மென்றால்‌ இதுதான்‌ அதன்‌
மூதல்‌ வரியாக இருக்கும்‌, முன்னுரையாக இருக்கும்‌.
மூகவுரையாக இருக்கும்‌. முகவரியாக இருக்கும்‌. ஆம்‌.
தமிழுக்கு முகவரி இதுதான்‌. தமிழனுக்கு முசுவரி இது
தான்‌.

யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ - எமக்கு எல்லாம்‌


ஊர்‌, எல்லாரும்‌ சுற்றத்தார்‌. உலகத்து களர்கள்‌ எல்லாம்‌
எங்கள்‌ ஊரே. உலகத்து மக்கள்‌ எல்லாரும்‌ எங்கள்‌ சுற்றதி
தாரே. “wirgib? :யாவரும்‌'? என்ற இவ்விரு சொற்‌
களுக்கு ஈடேது? இணையேது? யாதும்‌ ஊரே யாவரும்‌
கேளிர்‌ என்பது உலக சமரசம்‌.
இவ்வகில உலக சமரசதக்தைக்‌ கண்டவர்‌, புறநானூற்றுப்‌
பாடலால்‌ விண்டவர்‌, கணியன்‌ பூங்குன்றனார்‌ என்ற
புலவர்‌. சோதிடம்‌ (கணிதம்‌) அவருடைய தொழில்‌.
பூங்குன்றம்‌ அவருடைய eat, அதனால்‌ சணியன்‌
பூங்குன்றன்‌ என்று பெயர்‌ பெற்றார்‌. பெயர்‌ பெற்ற
சோதிடர்‌. சோதிடத்தாலும்‌ பெயர்‌ பெற்றார்‌, ஊராலும்‌
பெயர்‌ பெற்றார்‌. இப்பாடலால்‌, அதன்‌ முதலடியால்‌,
உலகப்‌ புகழ்‌ பெற்றார்‌.
பழைய காலத்துப்‌ பூங்குன்றம்தான்‌ இன்றைய மக
பாலன்பட்டி. இம்மகபாலன்‌ பட்டியில்‌ தான்‌ பண்டிதமணி
(மூ கதிரேசச்‌ செட்டியார்‌) பிறந்தார்‌ யாதும்‌ ஊரே
யாவரும்‌ கேளிர்‌ என்ற பாடல்‌ பிறந்த ஊரில்‌ பண்டிதமணி
பிறந்தார்‌.
ஊரன்‌ அடிகள்‌ 105

பூங்குன்றனாரின்‌ பொன்மொழியை இன்றைய உலகம்‌


பின்பற்றினால்‌ சாதிப்‌ பூசல்களுக்கு இடமேது? மதப்‌
போராட்டங்களுக்கு இடமேது? கணியன்‌ பூங்குன்றன்‌
பாட்டு என்றென்றும்‌ எங்கெங்கும்‌ ஐலிக்சட்டும்‌, எல்லா
ஊர்களிலும்‌ எல்லாரிடமும்‌-யாவரிடமும்‌ - பரவட்டும்‌.

திருவள்ளுவர்‌
இருவள்ளுவர்‌ தம்மை இன்ன சாதி இன்ன சமயம்‌
என்று இனங்காட்டிக்‌ கொள்ளாதவர்‌. கணியன்‌
பூங்குன்றனார்‌. பாட்டுக்கு இலக்கியமும்‌ இலக்கணமும்‌
ஆனவர்‌.
பிறப்புஒக்கும்‌ எல்லா ௨யிரிக்கும்‌ சிறப்புஓவ்வா
செய்தொழில்‌ வேற்றுமை யான்‌- திருக்குறள்‌ 972
என்பது அவர்‌ குறள்‌ - குரல்‌, எல்லா உயிர்க்கும்‌ பிறப்பு
ஒக்கும்‌, சிறப்பு ஒவ்வாது, காரணம்‌ செய்தொழில்‌
வேற்றுமை, செய்யும்‌ தொழில்களின்‌ வேற்றுமை. பிறப்பு
ஓக்கும்‌'” என்றதால்‌ பிறப்பால்‌ வேறுபாடு கூறப்படுவதை
வள்ளுவர்‌ ஒப்பவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்‌
பால்‌ சாதி வேறுபாடு உண்டென்பது அடிபட்டுப்போகறது.
பிறப்பு ஒக்கும்‌ என்ற வள்ளுவரின்‌ குறள்‌ - குரல்‌ -
உலகெங்கும்‌ ஒலிக்கட்டும்‌, எட்டுத்‌ இசைகளின்‌ எல்லை
வரையில்‌ எதிரொலிக்கட்டும்‌.

திருமூலர்‌
தமிழ்ச்‌ சாத்திரங்களுக்கு மூல இலக்கியம்‌ செய்தவர்‌
திருமூலர்‌.
ஒன்றே குலமும்‌ ஒருவனே தேவனும்‌
நன்றே நினைமின்‌ நமனில்லை நாணாமே
சென்றே புகுங்‌ கதியில்லை நுஞ்‌ சித்தத்து
நின்றே நிலைபெற நீர்றினைந்‌ துய்மினே, 2104
106 சாதியும்‌ மதமும்‌

என்பது அவருடைய திருமந்திரம்‌, “ஒன்றே குலமும்‌


ஒருவனே தேவனும்‌"*. யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌
என்பதற்கு அடுத்தபடியாக எல்லாரும்‌ எடுத்துக்காட்டுவது
இதைத்தான்‌. அந்தப்பாட்டில்‌ அது முதல்‌அடி. இந்தப்‌
பாட்டில்‌. இது முதல்‌அடி. முதல்‌ அடியிலேயே Aw
பெரியவர்கள்‌ செம்மையாக - செமத்தியாக - அடித்து
வீடுிறார்கள்‌. யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ என்ற-
மூதலடி எல்லாருக்கும்‌ தெரியும்‌. அதற்கு அடுத்த அடி
தெரியாது, ஒன்றே குலமும்‌ ஒருவனே தேவனும்‌ என்ற
முதலடி எல்லாருக்கும்‌ தெரியும்‌ அதற்கு அடுத்த அடி
தெரியாது.
ஒன்றே குலமும்‌ ஒருவனே தேவனும்‌ என்று
சொன்னவர்‌ யார்‌ என்று ஒர்‌ இளைஞரைக்‌ கேட்டால்‌
என்ன சொல்லுவார்‌. அண்ணா சொன்னது என்பார்‌.
அண்ணா மேடைதோறும்‌ இதைச்‌ சொல்லிப்‌ பிரபலப்‌
படுத்தினார்‌. அண்ணாவால்‌ இது பிரபலமாயிற்று.
அண்ணா சொன்னது, அண்ணாவின்‌ பொன்மொழி,
என்று சொல்லுமளவுக்குப்‌ பிரபலமாகிவிட்டது. UT gre)
எழுதியவரைப்‌ பலருக்குத்‌ தெரியாது. நோட்ஸ்‌ எழுதிய
வரை எல்லாருக்கும்‌ தெரியும்‌, அண்ணா நோட்ஸ்‌ வெளி
யிட்டார்‌. எல்லாருக்கும்‌ தெரிந்தது. திருமூலர்‌
டெக்ஸ்ட்புக்‌ (பாடதால்‌) எழுதினார்‌. சிலருக்கே
வெளிச்சம்‌.

ஒன்றே குலமும்‌ ஒருவனே தேவனும்‌ என்பதையே


திரும்பத்‌ இரும்ப எடுத்துக்‌ காட்டுகிறார்கள்‌. கேட்டுக்‌
கேட்டுச்‌ சலித்துவிடும்‌ போலிருக்கிறது. எடுத்துக்காட்டு
வதற்கு இதைத்தவிர இதைவிடப்‌ பொருத்தமானது
வேறென்ன இருக்கிறது? வேறெதுவும்‌ இல்லையே!
திருமூலர்‌ திருவாக்கு ஏறத்தாழ ஆயிரத்‌ தைந்நூறு
ஊரன்‌ அடிகள்‌ 107
ஆண்டுகளுக்கு மேலாசத்‌ இிக்செல்லாம்‌ ஒலித்துக்‌
கொண்டிருக்கிறது. அதை நாமும்‌ ஒலி பரப்புமீவாம்‌.
ஒன்றே குலமும்‌ ஒருவனே தேவனும்‌.

ஒளவையார்‌
இட்டார்‌ இடாதார்‌ ஆகிய இரண்டு . சாதிகளைத்‌
தவிர வேறு சாதிகள்‌ இல்லை, இட்டார்‌ பெமியசாது
(பெரியோர்‌), இடாதார்‌ சன்னச்சாதி (இறிகுலத்தோர்‌)
என்றார்‌ ஒளவையார்‌. என்ன இட்டார்‌? என்ன இட
தார்‌? திருநீறு இட்டார்‌ இடாதார்‌. திருமண்‌ இட்டார்‌
இடாதார்‌ என்பது போன்றவை பொருளன்று. ஐயமிட்டார்‌
இடாதார்‌. பிச்சையிட்டார்‌, இடாதார்‌; பிறருக்குக்‌
கொடுப்பார்‌, கொடாதார்‌; சவார்‌. ஈயார்‌ என்பது
பொருள்‌.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்‌
நீதுவழுவா நெறிமுறையின்‌ மேதினியில்‌
இட்டார்‌ பெரியோர்‌ இடாதார்‌ இழிகுலத்தோர்‌
பட்டாங்கில்‌ உள்ளபடி.

என்பது ஓளவையார்‌ பாடல்‌ (நல்வழி 2). இட்டார்‌ இடா


தாரி என்ற இரண்டே சாதிகள்தான்‌ உண்டு. இட்டார்‌
பெரியோர்‌. இடா தார்‌ இழிகுலத்தோர்‌. இது ஒளவையார்‌
இர்ப்பு, உள்ளது உள்ளபடியே நல்ல தீர்ப்பு.
(பட்டாங்கு - உள்ள நிலைமை; உண்மை)

திருநாவுக்கரசர்‌ (அப்பர்‌)
காத்திரம்‌ பல பேசும்‌ சழக்கர்‌ காள்‌!
கோத்திரமும்‌ குலழும்‌ கொண்டு என்செய்வீர்‌?
பாத்திரம்‌ சவம்‌ என்று பணிதிரேல்‌
மாத்திரைக்குள்‌ அருளும்‌ மாற்பேறரே,
தேவாரம்‌ - 5843
108. சாதியும்‌ மதமும்‌
கங்கை ஆடிலென்‌? காவிரி ஆடிலென்‌?
கொங்கு தண்குமரித்துறை ஆடிலென்‌?
ஒங்குமாகடல்‌ ஓதநீர்‌ ஆடிலென்‌?
எங்கும்‌ ஈசன்‌ எனாதவர்கு இல்லையே, - 6236
வேதம்‌ ஓதில்‌ என்‌? வேள்விகள்‌ செய்கில்‌ என்‌?
நீதிநூல்‌ பல நித்தல்‌ பயிற்றில்‌ என்‌?
ஓதி அ௮ங்கம்‌ஓர்‌ ஆறும்‌ உணரில்‌ என்‌?
ஈசனை உள்குவார்க்கு
ஈர்‌ ௮ன்றி இல்லையே ர்ந்த

இவையெல்லாம்‌ திருதாவுக்கரசரின்‌ தேவாரப்‌


பாடல்கள்‌.
சாத்திரம்‌ பல பேசும்‌ சழக்கர்களே!
நீங்கள்‌ கோத்திர த்தையும்‌ குலத்தையுமே பெரிதாகக்‌
கொண்டு என்ன செய்வீர்‌!
அங்கையில்‌ நீராடினால்‌ என்ன?
காவிரியில்‌ நீராடினால்‌ என்ன?
கன்னியாகுமரியில்‌ நீராடினால்‌ என்ன?
வேதம்‌ ஓதினால்‌ என்ன?
வேள்விகள்‌ செய்தால்‌ என்ன?
தீதி தால்கள்‌ பலவற்றைப்‌ படித்ததால்‌ என்ன?
ஆறங்கங்களையும்‌ ஒதி உணரிந்ததால்‌ என்ன?
பாத்திரம்‌ சிவம்‌ என்று பணியாவிட்டால்‌-
எங்கும்‌ உள்ள ஈசனை எண்ணி உள்ளம்‌
உருகாவிட்டால்‌ -
இவற்மாலெல்லாம்‌ என்ன பயன்‌?
இறைவனிடத்து உள்ளன்பு இல்லாமல்‌, உள்ளி
உருகாமல்‌, சாத்திரத்தையும்‌ குலம்‌ கோத்திரத்தையும்‌
கொண்டு என்ன பயன்‌? புனிதநீராடி வேதம்‌ ஓதி
வேள்விகள்‌ செய்து ஆறங்கங்களையும்‌ சுரைத்துக்‌ குடித்த
தால்‌ என்ன பயன்‌? என்று திருநாவுக்கரசர்‌ என்னமாய்க்‌
ஊரன்‌ அடிகள்‌ 109

கேட்றொர்‌! உண்மை அன்பால்‌ பத்தியால்‌ அன்றி வெற்று


வைதிகத்தால்‌ பயனில்லை என்பதை என்னமாய்‌ இடி இடி
என்று இடித்துரைக்கிறார்‌! பாருங்கள்‌!

இதைவிட இன்னும்‌ ஒரு பாடல்‌:

சங்கநிதி பதுமநிதி இரண்டும்‌ தந்து


கரணியொடு வான்‌ஆளத்‌ தருவ ரேனும்‌,
மங்குவார்‌ அவர்செல்வம்‌ மதிப்போம்‌௮ல்லோம்‌,
மாதேவர்க்கு ஏகாந்தர்‌ அல்லார்‌ஆகில்‌;
அங்சும்‌எலாம்‌ குறைந்து அமுகு தொழுநோயராய்‌
ஆஉரித்துத்‌ இன்று உழலும்‌ புலையரேனும்‌,
கங்கைவார்‌ சடைக்‌ கரந்தார்க்கு அன்பர்‌ஆ௫ல்‌,
அவர்சண்டீர்‌, நாம்‌ வணங்கும்‌ கடவுளாரே!
— 7193
சங்கம்‌ பதுமம்‌ என்பன முற்காலத்தில்‌ வழங்கிய
பேரெண்கள்‌. இக்காலத்திய இலட்சம்‌ கோடியைவிட Ha
மானவை, சங்கறிதி பதுமநிதி ஆகிய இரண்டையும்‌ தந்து
பூமி முழுவதையும்‌ வானத்தையும ஆளத்தருவாரேனும்‌,
அவர்‌. இஹறைவனடியாராக இல்லாவிட்டால்‌ அவர்‌ கரும்‌
செல்வத்தை மதிக்கமாட்டோம்‌; உடல்‌ உறுப்புகளெல்லாம்‌
அழுகிக்‌ குறைந்த தொழுதோயராய்‌, பசுவைக்‌ கொல்று
அதன்‌ தோலை உரித்து மாமிசத்தைத்‌ தின்று உழலும்‌
புலையராய்‌ இருந்தாலும்‌ இறைவனடியாராக இருந்தால்‌
அவர்தான்‌. நாம்‌ வணங்கும்‌ கடவுளார்‌ என்கிறார்‌
இருநாவுக்கரசர்‌. “ara? என்னாது *கடவுளார்‌?”
என்று ஆர்‌ விகுதி கொடுத்துக்‌ கூறுவதன்‌ அருமை
நோக்கத்தக்கது. பக்தியின்‌ சிறப்பைக்‌ கூற வந்த பாட்டு
இது, ஆஉரித்துத்‌ தின்பதை ஆதரிக்கவந்த பாட்டன்று.
ஏனைய எல்லாக்‌ கொலைகளையும்விடப்‌ பசுக்கொலை
கொடியது, கொடியவற்றுளெல்லாம்‌ கொடியதைக்கூறிப்‌
பக்தியின்‌ பெருமையை வற்புறுத்த வந்த பாட்டு இது,
110 சாதியும்‌: மதமும்‌

ஆரித்துத்‌ இன்று உழலும்‌ பாவத்தைச்‌ செய்தால்‌ அங்கம்‌


எலாம்‌ குறைந்து அழுகும்‌ தொழுநோயர்‌ ஆவர்‌ என்ற
பொருளும்‌ இதில்‌ உள்ளது. புலையராக இருந்தாலும்‌
பக்தியுள்ளவராக இருந்தால்‌ கடவுளாக மதிக்கவேண்டும்‌
என்றுகூறி, பக்திஉலகில்‌ சாதி வேற்றுமை இல்லை எனக்‌
கூறவந்த பாட்டு இது,

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குமுன்‌ சுயமரியாதை


இயக்க அன்பர்கள்‌ சாதி வேற்றுமை ஒழிப்பிற்கு இப்‌
பாடலின்‌ முதல்மூன்று அடிகளை அப்படியே வைத்துக்‌
கொண்டு, ஈற்றடியில்‌ **கங்கைவார்‌ சடைக்கரந்தார்க்கு
அன்பராகில்‌?? என்பதைத்‌ **தங்கு சுயமரியாதை
காண்பாராகில்‌'? என்றும்‌ "நாம்‌ வணங்கும்‌ கடவுளாரே?””
என்பதை “நாம்‌ மதிக்கும்‌ மனிதனாரே”! என்றும்‌ மாற்றி
அச்சிட்டுப்‌ பரப்பிச்‌ சுயமரியாதைப்‌ பிரச்சாரம்‌ செய்தனர்‌.
நாவுக்கரசரின்‌ இப்‌ பக்திப்‌ பிரச்சாரப்‌ பாட்டு, இதில்‌
சொல்லப்படும்‌ சாதி வேற்றுமை பாராத கருத்து,
சுயமரியாதை இயக்க அன்பா்களையும்‌ ஈர்த்தது,
சுயமரியாதைப்‌ பிரச்சாரத்திற்குப்‌ பயன்படுத்திக்‌
கொள்ளச்‌ செய்தது. இதைப்போன்றே வைணவத்தில்‌
நாலாயிர திவ்வியப்‌ பிரபந்தத்திலும்‌ பக்தி௨லகில்‌ சாதி
வேறுபாடில்லை என்ற கருத்துக்கொண்ட பாட்டு ஒன்று
உண்டு.
குலந்தாங்கு சாதிகள்‌ நாலிலும்‌
'8ீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண்‌ டாளசண்‌
டாளர்சு ளாகிலும்‌,
வலந்தாங்கு சக்கரத்‌ தண்ணல்‌
மணிவண்ணற்‌ காளென்றுள்‌
கலந்தார்‌, அடியார்‌ தம்‌.அடி
யாரெம்‌ அழுகளே, — 2971
- ஊரன்‌ அடிகள்‌ 111

நம்மாழ்வார்‌ இருவாய்மொழியில்‌ தருவாய்‌ மலரீந்தருளிய


இப்பாடல்‌ அப்பர்‌ பாடலை அப்படியே படி எடுத்தது
போன்று இல்லையா?
பக்இி உலகல்‌, சைவத்திலும்‌ சரி வைணவத்திலும்‌
சரி, சாதி வேறுபாடு பாராட்டப்‌ பெறவில்லை என்பதற்கு
இவ்விரு பாடல்களும்‌ நல்ல எடுத்துக்காட்டுகள்‌, இவற்றில்‌
ஒன்று சீரிதிருத்தவாதிகள்‌ உள்ளத்தையும்‌ அவரீந்திறாக்சிறது
என்பதையும்‌ கண்டோம்‌.

மாணிக்கவாசகர்‌
**சாரத குலம்‌ பிறப்பு என்னும்‌ சுழிப்பட்டுத்‌ தடுமாறும்‌
ஆதமிலி நாயேனை? என்று தம்மைத்தாமே நொந்து
கொள்கிறார்‌ மாணிக்கவாசகர்‌.
'சாதிகுலம்‌ பிறப்பென்னும்‌ சுழிப்பட்டுத்‌ தடுமாறும்‌
ஆதமிலி நானேனை அல்லலறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம்‌ பிறர்‌ உருவம்‌ யான்‌ எனதுஎன்‌ உரை
[மாய்த்து
கோதில்‌ அமுது ஆனானைக்‌ குலாவுதில்லைச்‌
கண்டேனே — 477
என்பது அவர்‌ இருவாசகம்‌, சாதி, குலம்‌, பிறப்பு இம்‌
மூன்றையும்‌ சுழி (நீர்ச்சுழல்‌) என்கிறார்‌. சுழியிற்பட்டால்‌
தடுமாறச்‌ செய்யும்‌, ஆழ்த்தும்‌. அழித்தும்விடும்‌.
சித்தர்கள்‌
சித்தர்கள்‌ சர்திருத்தவாதிகள்‌, சித்தர்களின்‌ சீர்திருத்‌
தங்களில்‌ பிறப்பால்‌ சாதி வேற்றுமை இல்லை என்பதும்‌
ஒன்று. இத்தர்‌ பாடல்களில்‌ சாதி வேற்றுமையைக்‌
சண்டிக்குமிடங்கள்‌ பல.
“சரதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்‌!? என்கிறார்‌
பாம்பாட்டிரத்தர்‌.
112 சாதியும்‌ மதமும்‌

பறைச்சி யாவ தேதடா? பணத்தி யாவ தேதடா?


இறைச்‌ தோல்‌ எலும்பிலும்‌ இலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம்‌ வேறதோ? மணத்திபோகம்‌ பேறதோ?
பறைச்சியும்‌ பணத்தியும்‌ பகுந்து பாரும்‌ உம்முளே
என்றார்‌ சிவவாக்கியர்‌.
சாதிபேதந்‌ தனைக்குறித்துத்‌ தயங்கி மயங்கித்‌
: தளராதே!
சாதி யாவ தெவர்‌ அறிவார்‌? சருவ உடலும்‌
ஒன்றாச்சே!
சாதி யாவர்‌ எவரென்னில்‌ தன்னை அறிந்து சிவமான
சாதி பெரிய சாதி என்று சாற்றும்‌ மறைகள்‌ சத்தியமே
என்பது சித்தர்‌ ஞானக்கோவையிலுள்ள சிவானந்த
போதப்‌ பாடல்‌,

வள்ளலார்‌
சாதிகளையும்‌ சமயங்களையும்‌ பற்றி வள்ளலார்‌
பாடல்களிலும்‌ உபதேசங்களிலும்‌ பல இடங்களில்‌ பல
கருத்துக்கள்‌ தெளிவாகக்‌ கூறப்‌ பெறுகின்றன. சிலவற்றை
மட்டும்‌ இங்கெடுத்துக்‌ காட்டுகிறோம்‌.
தத்துவ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சமயங்கள்‌ ஏற்படுத்தப்‌
பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம்‌ பற்றி ஜாதிகள்‌
ஏற்படுத்தப்பட்டி.ருக்கின்றன. தயவை விருத்தி செய்‌
வதற்குத்‌ தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்‌
பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்‌, அவை
யாவன; ஜாதியாசாரம்‌, குலாசாரம்‌, ஆசிரம ஆசாரம்‌,
லோகாசாரம்‌, தேசாசாரம்‌, கிரியாசாரம்‌, ௪மயா
சாரம்‌, மதாசாரம்‌, மரபாசாரம்‌ கலாசாரம்‌, சாதனா
சாரம்‌, அற்தாசாரம்‌, சாஸ்திராசாரம்‌ முதலிய
ஆசாரங்கள்‌. ஆதலால்‌ மேல்‌ குறித்த ஆசாரங்கள்‌
ஊரன்‌ அடிகள்‌ 113

ஒழிந்து, சுத்த சிவ சன்மாரீக்சு சத்திய ஞான


ஆசாரத்தை வழங்கிப்‌ பொது நோக்கம்‌ வந்தால்‌,
மேல்படி காருண்யம்‌ விருத்தியாகிச்‌ ச௪டவுளருளைப்‌
பெற்று அனந்த ஏத்தி முத்திகளைப்‌ பெறக்‌ கூடுமே
யல்லது இல்லாவிடில்‌ கூடாது.”
--. வள்ளலார்‌ உபதேசம்‌.
“தத்துவ நியாயத்தை அனுசரித்துச்‌ சமயங்களேற்‌
படுத்‌ தப்பட்டிருக்கன்‌ றன தொழில்‌ நியாயத்தை
அனுசரித்து ஜாதகன்‌ ஏற்படுத்தப்பட்டிருக்கன்றன
குயவை விருத்தி செய்வதற்குத்‌ தடையாக இருப்பன
சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள்‌
ஆதலால்‌, இவைகளை விட்டொழித்துப்‌ பொது
நோக்கம்‌ வற்தாலொழிய, காருண்ணியம்‌ விருத்தி
Bas சுடவுள்‌ அருளைப்‌ பெற்று அனந்த சித்தி
வல்லபங்களைப்‌ பெறமுடியாது”?
-- வள்ளலார்‌ உபதேசம்‌. (வேறு ஒருவர்‌ குறிப்பு)
காதி சமய வேறுபாடுகளை வள்ளற்பெருமான்‌ அறவே
வெறுக்கிறார்‌. தயவை விருத்தி செய்வதற்குத்‌ தடையா
யிருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்‌
பாட்டு ஆசாரங்கள்‌; இவைகளை விட்டொழித்துப்‌ பொது
நோக்கம்‌ வந்தாலொழியக்‌ கடவுளருளைப்‌ பெறமுடியாது
என்று வள்ளற்பெருமான்‌ மேலே கூறியிருப்பதைக்‌ கவனிக்க
வேண்டும்‌.
சாதி சமயங்களைக்‌ கண்டித்து வள்ளற்பெருமான்‌
அருளிய பாடல்கள்‌ பல.
“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்‌ சந்தடிகளிலே கோத்திரச்‌ சண்டையிலே
ஆதியிலே அபிமானித்‌ தலைகின்ற உலர்‌
அலைத்தலைத்து வீணே நீர்‌ அழிதல்‌ அழகலவே?*
— 5566
114 சாதியும்‌ மதமும்‌:

“சதி சமயங்களிலே வீதிபல வகுத்த


சாத்திரக்‌ குப்பைகள்‌ எல்லாம்‌ பாத்திரம்‌
அன்‌ றெனவே”” — 5805
**இருட்சாதிதி தத்துவச்‌ சாத்திரக்‌ குப்பை
இருவாய்ப்புப்‌ புன்செயில்‌ எருவாக்கிப்‌ போட்டு
மருட்சாதி சமயங்கள்‌ மதங்களாச்‌ சிரம
வழக்கெல்லாம்‌ குழிக்கொட்டி மண்மூடிப்‌
போட்டு — 4654
சாதியும்‌ மதமும்‌ சமயமும்‌ தவிர்த்தே
சத்தியச்‌ சுத்த சன்மார்க்க
வீதியில்‌ உமைத்தான்‌ நிறுவுவல்‌ உண்மை
விளம்பினேன்‌ வம்மினோ விரைந்தே”??? — 5453
*நால்வருணம்‌ ஆரிரமம்‌ ஆசாரம்‌ முதலா
தவின்றசலைச்‌ சரிதம்‌எலாம்‌ பிள்ளை விளையாட்டே
மேல்வருணம்‌ தோல்வருணம்‌ கண்டறிவார்‌ இலை!”
— 4174
*1எங்குலம்‌ எம்மினம்‌ என்பதொண்ணூற்றா
றங்குலம்‌ என்றருள்‌ அருட்பெருஞ்‌ ஜோதி”?
— 4615 (219-220)
**சாதியும்‌ மதமும்‌ சமயமும்‌ காணா
ஆதி அதாதியாம்‌ அருட்பெருஞ்‌ ஜோது?”
~ 4615 (1415-116)
"*சாதியும்‌ மதமும்‌ சமயமும்‌ பொய்யென
ஆதியில்‌ உணர்தீதிய அருட்பெருஞ்‌ ஜோதி”?
- 4615 (211-212)
*'சாதிகுலம்‌ சமயம்‌ எலாம்‌ தவிரீத்தெனை மேல்‌
ஏற்றி?” - 4112
ஊரன்‌ அடிகள்‌ 115

“srBeaw fcr சமயத்தை மதத்தை எலாம்‌


விடுவித்து... ... ... vee வப வ ல 4674

*இந்தச்சாதி இந்த மதம்‌ எனும்‌ வாய்ச்‌


சழக்கை எலாம்‌ தவிரீத்த சத்தியனே?? - 4637:
சாஇயும்‌ சமயமும்‌ தவிர்த்தவர்‌ உறவே” - 3704

சாதியும்‌ பேதச்‌ சமயமும்‌ நீங்கித்‌ தனித்தனனே”'


- 4742

* சாரதி சமயச்‌ ௪ழக்கை விட்டேன்‌ அருட்‌


சோதியைக்‌ கண்டேனடி... ... ... .."? 4949

“சாதி ௪மயச்‌ சழக்கெலாம்‌ அற்றது


சன்மார்க்க ஞானசபை நிலை பெற்றது”?
= 4913

“மதித்த சமயமத வழக்கெல்லாம்‌ மாய்ந்தது


வருணாச்‌ சரெமமெனு மயக்கமுஞ்‌ சாய்ந்தது”
- 4503
என்பன வள்ளற்பெருமான்‌ சாதி சமயங்களைக்‌ கண்டித்துப்‌
பாடிய பாடல்‌ வரிகள்‌ சிலவாம்‌.
“மேல்வருணம்‌ தோல்வருணம்‌ கண்டறிவார்‌ இல்லை”
என்று எள்ளி நகையாடுறார்‌. வருணம்‌ என்பது சாதிக்கும்‌
பெயர்‌, நிறத்திற்கும்‌ பெயர்‌. மேல்‌ வருணம்‌ - மேல்சாதி,
தோல்‌ வருணம்‌
- தோலின்‌ நிறம்‌. தோலின்‌ வருணத்தைக்‌
கொண்டு மேல்வருணம்‌ இழ்வருணம்‌ என்று அறிவார்‌
இல்லை - தோலின்‌ நிறதிதைக்‌ கொண்டு மேல்‌ சாதி
ஈழ்சாதி என்று கண்டுபிடிப்பதற்‌ இல்லை என்கிறார்‌.
எங்குலம்‌ (எம்முடைய குலம்‌) என்பது 96 அங்குலம்‌
என்று பாடுகிறார்‌. பாடுகிறாரில்லை,; சாடுகிறார்‌ என்று
116 சாதியும்‌ மதமும்‌

சொல்லவேண்டும்‌. 96 அ௱்குலம்‌ என்பது உடம்பின்‌ அளவு.


உடம்பு அவரவர்‌ கையால்‌ 8 சாண்‌, ஒரு சாண்‌ 12
அங்குலம்‌. 8 சாண்‌ உடம்பு, எண்சாணுடம்பு, 8%12-96
அங்குலம்‌, 96 அங்குல உடம்புக்குத்தான்‌ சாதியே தவிர
உயிருக்குச்‌ சாதியில்லை என்பார்‌ போன்று “எங்குலம்‌
எம்மினம்‌ என்பது தொண்ணாற்றா றங்குலம்‌”? எனப்‌ பாடு
கின்றார்‌-சாடுகின்றார்‌,

நால்வருணம்‌ ஆசிரமம்‌ ஆசாரம்‌ முதலாக நவின்ற


கலைச்சரிதம்‌ எல்லாம்‌ பிள்ளை விளையாட்டு என்கிறார்‌.

சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திரங்க


ளெல்லாம்‌ குப்பைகள்‌, அவை பாத்திரம்‌ அன்று என்கிறார்‌,
அச்‌ சாத்திரக்‌ குப்பைகளைப்‌ புன்செய்‌ நிலத்திற்கு
எருவாகப்‌ போடலாம்‌ என்கிறார்‌, நன்செய்‌ நிலத்திற்கு
இன்னும்‌ சற்று நல்ல எருப்‌ போடவேண்டும்‌, இந்தச்‌
சாத்திரக்‌ குப்பை எரு நன்செய்‌ நிலத்துக்கு ஆசாது, புன்‌
செய்‌ நிலத்திற்குத்‌ தான்‌ எருவாகும்‌ என்பது போல “புன்‌
செயில்‌ எருவாக்கிப்‌ போட்டு” என்கிறார்‌. சாத்திரக்‌
குப்பைகளைக்‌ குழிவெட்டிப்‌ போட்டு அதன்‌ மீது
மண்ணைப்போட்டு மூடவேண்டும்‌ என்கிறார்‌.

வள்ளற்பெருமான்‌ அருளிய உரைநடை விண்ணப்பங்கள்‌


நான்கில்‌ முதலாவதாகிய இறு விண்ணப்பத்தின்‌ ஈற்றில்‌
“எல்லாம்‌ உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக்கடவுளே
என்று தொடங்கி, அவ்விண்ணப்பம்‌ முடியும்வரை உள்ள
பகுதி சுத்த சன்மார்க்கத்தின்‌ முக்ய தடைகளையும்‌
மூக்கிய லட்சியத்தையும்‌ கூறுவது. இப்பகுதியை
வள்ளலாரின்‌ ** ஆன்மநேய ஒருமைப்பா ட்டுரிமைப்‌
பிரசுடனம்‌'” என்று நாம்‌ சொல்வது வழக்கம்‌,
அதுவருமாறு।
ஊரன்‌ அடிகள்‌ 117

“எல்லாம்‌ உடைய அருட்பெருஞ்சேகதி அற்புதக்‌


கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும்‌ சுத்த ௪ன்‌
மார்க்கத்தின்‌ முக்கிய தடையாகிய சமயங்கள்‌ மதங்கள்‌
மார்க்கங்கள்‌ என்பவற்றின்‌ ஆசார சங்கற்ப விகற்பங்‌
களும்‌ வருணம்‌ ஆசிரம முதலிய உலகாசார சங்கற்ப
விகற்பங்களும்‌ எங்கள்‌ மனதிற்‌ பற்றாத வண்ணம்‌
௮ருள்‌ செய்தல்‌ வேண்டும்‌. சுத்து சன்மார்க்கத்தின்‌
முக்கிய லக்ஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை
எங்களுக்குள்‌ எக்காலத்தும்‌ எவ்விடத்தும்‌ எவ்விதத்தும்‌
எவ்வளவும்‌ விலகாமல்‌ நிறைந்து விளங்கச்‌ செய்வித்‌
,கருளல்‌ வேண்டும்‌. எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை
அருட்பெருஞ்சோதியாண்டவரே! தேவரீர்‌ தஇருவருட்‌
பெருங்கருணைக்கு வந்தனம்‌! வந்தனம்‌!
சத்து சன்மார்க்கத்தின்‌ முக்கிய தடைகள்‌ முக்கிய
லக்ஷியம்‌ ஆகிய இரண்டும்‌ இதனுள்‌ அழகாகவும்‌ அழுத்தந்‌
திருத்தமாகவும்‌ apuGup
Her nw.
முக்கிய லட்சியம்‌ ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை,
முக்கிய தடைகள்‌ சமயங்கள்‌, மதங்கள்‌, வருணம்‌ ஆரிரமம்‌
முதலியன. லட்சியம்‌, தடை என்று மட்டும்‌ சொல்லாது
முக்கியம்‌?" என்பதைச்‌ சேர்த்து முக்கிய லட்சியம்‌ முக்கிய
தடை என்று சொல்வதைக்‌ கவனிக்க வேண்டும்‌,
தடைகள்‌ தகர்ந்தாலன்றி லட்சியம்‌ வளராது. மலை
போன்ற அத்தடைகளை வள்ளலார்‌ உளிகொண்டு பிளக்க
வில்லை. வெடி வைத்தே தகர்க்கிறார்‌. தூள்‌ தூள்‌
ஆக்குகிறார்‌.

வள்ளலாரால்‌ மிகுதியும்‌ கண்டிக்கப்பட்டவை


புலாலும்‌ சாதி சமயங்களும்‌, மிசச்‌ ல இடங்களையே
இங்கெடுத்துக்‌ காட்டினோம்‌. இன்னும்‌ இவை போன்று
பல உள,
118 சாதியும்‌ மதமும்‌

வள்ளலாருடனிந்த 'திருக்கூட்டத்தில்‌ அற்தணர்‌ ஆடூர்‌


சிவாசாரியாரிலிருந்து அரிசனர்‌ அமாவாசை வரை பல
சாதியாரும்‌ இருந்தனர்‌. சைவ உணவினராக இருந்தால்‌
எல்லாச்‌ சாதியாரையும்‌ வள்ளலார்‌ சேர்த்துக்‌ கொண்டார்‌.
அனைவரும்‌ சமபந்தி போஜனம்‌ செய்தனர்‌, சைவ
உணவினர்‌ அக இனத்தார்‌, புலாலுணவினர்‌ புற இனத்தார்‌
'என்பது வள்ளலாரின்‌ கொள்கை. புறவினத்தார்‌ அகவினதி
தாராக மாறவேண்டும்‌ என்றார்‌. இதைத்‌ தவிரப்‌ பிறப்‌
பால்‌ சாதி வேற்றுமை பாராட்டியதில்லை.
பாரதியார்‌
பாரதியார்‌ அந்தணர்‌, எல்லாரையும்‌ போன்று
சாதாரண அந்தணர்‌ அல்லர்‌. சராசரி அந்தணர்‌ அல்ஊர்‌.
சீர்திருத்த அந்தணர்‌. ஹரிஜன கனகலிங்கத்திற்குப்‌ பூணூல்‌
அணிவிக்கும்‌ அளவுக்கு அவருடைய சீர்திருத்தம்‌ சென்றது.
சாதி ஆசாரத்தை அவர்‌ கடைப்‌ பிடிக்க வில்லை.
எல்லாச்‌ சாதியினருடனும்‌ சமபந்தி போஜனம்‌ செய்தார்‌.
அந்தணரல்லாதார்‌ இல்லங்களிலும்‌ உணவுண்டார்‌.
அத்தணரல்லாதார்‌ தெரு ஓரங்களில்‌ விற்கும்‌ தின்பண்டக்‌
கடைகளில்‌ தின்பண்டங்கள்‌ வாங்கி உண்டார்‌. முஸ்லிம்‌
களின்‌ தேநீர்க்‌ கடைகளிலும்‌ தேநீர்‌ அருந்தினார்‌.
கடையத்து அந்தணர்கள்‌ அவரை ஜாதிப்‌ பிரஷ்டம்‌
செய்யுமளவுக்கு, சாஇயை விட்டும்‌ சவரை விட்டும்‌ தள்ளி
வைக்குமளவுக்கு அவருடைய சீர்திருத்தப்‌ போக்குகள்‌
போயின. பாரதி வாய்ச்‌ சொல்‌ வீரரன்று, செயல்‌ வீரர்‌,
சீர்திருத்தங்களைப்‌ பேசயதோடன்றி, எழுதிய தோடன்றி,
பாடிய தோடன்றிச்‌ செயலிலும்‌ செய்து காட்டினார்‌.
பாரதியாருடைய நடை உடை பாவனைகளில்‌ செயல்‌
களில்‌ வாழ்க்கையில்‌ சாதி வேற்றுமை கருதாமை முதலிய
பல சீர்திருத்தங்கள்‌ காணப்பட்டன. அவருடைய
- உரன்‌ அடிகள்‌ 119

பாடல்களில்‌, கதைகளில்‌, கட்டுரைகளில்‌, கார்ட்டூன்களில்‌


பதிதிரிகை எழுத்துகளில்‌ சாதிவேற்றுமையைக்‌ கண்டிக்கு
மிடங்கள்‌ மிகப்‌ பல,

குழந்தைகளுக்குக்‌ கூறும்‌ பாப்பாப்‌ பாட்டிலேயே.


சாதிகள்‌ இல்லையடி பாப்பா - குலத்‌
தாழ்சீசி உயர்ச்சி சொலல்‌ பாவம்‌

என்கிறார்‌... இந்தப்‌ பாவத்துக்கு ஆளாகாதவர்கள்‌ அன்று


எத்தனை போர்‌, இன்று எத்தனை பேர்‌.
சாதி மதங்களைப்‌ பாரோம்‌......
வேதிய ராயினும்‌ ஒன்றே - அன்றி
வேறு குலத்தவ ராயினும்‌ ஒன்றே,
எல்லாரும்‌ ஓர்‌ குலம்‌ எல்லாரும்‌ ஓர்‌ இனம்‌
சாதக்கொடுமைகள்‌ வேண்டாம்‌ - அன்பு
தன்னிற்‌ செழித்திடும்‌ வையம்‌
பறையருக்கும்‌ இங்கு இயர்‌ புலையருக்கும்‌ விடுதலை
பரவரோடு குறவருக்கும்‌ மறவருக்கும்‌ விடுதலை

பாரதியாரின்‌ சாதி எதிர்ப்பு, தன்‌ சொந்தச்‌ சாதியைக்‌


குறித்தே
பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே
பார்ப்பனக்குலம்‌ கெட்டு அழிவெய்திய
பாழடைந்த கலிய மாதலால்‌
சூத்திரனுக்‌ கொருநீதி - தண்டச்‌
சோறுண்ணும்‌ பார்ப்புக்கு வேறொருநீதி
சாத்திரம்‌ சொல்லிடுமாயின்‌ அது
சாத்திரம்‌ அன்று சதிஎன்று கண்டோம்‌
120 சாதியும்‌ _மதழும்‌
என்றெல்லாம்‌ பச்சை பச்சையாகப்‌ பாடுமளவுக்குச்‌
சென்றது. இவ்வாறெல்லாம்‌ பாடும்பாரஇயார்‌ நந்தனாரை
அந்தணரென்கிறார்‌,
நந்தனைப்‌ போலொரு பார்ப்பான்‌ - இந்த
தாட்டினி லில்லை; குணம்‌ நல்லதாயின்‌
எந்தக்‌ குலத்தினரேனும்‌ - உணர்வு
இன்பமடைதல்‌ எளிதெனக்‌ கண்டோம்‌
என்று பாடும்‌ அவர்‌ பின்னும்‌ ல ஆண்டுகள்‌ இருந்திருந்‌
தால்‌

அம்பேத்கர்‌ போலொரு அறிவுடை அந்தணன்‌


இந்தநாட்டினி லில்லை; வேறு எந்த நாட்டினிலுமில்லை
என்று பாடியிருப்பார்‌,
சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையார்‌
சொல்லிய சொல்‌ அமிழ்தம்‌ என்று அதை வழி மொழி
கிறார்‌ பாரதியார்‌.
சாதி இரண்டொழிய வேறிலை பென்றே
தமிழ்மகள்‌ சொல்லியசொல்‌ அமிழ்தமென்போம்‌
நீதிநெறியினின்று பிறர்க்குதவும்‌
நேர்மையர்மேலவர்‌ 8ழவர்‌ மற்தோர்‌
என்பது ஒளவையைப்‌ பாராட்டிப்‌ பாரதி வழிமொழிவது,
கபிலரகவலை முழுமையாக மூன்னர்‌ எடுத்துக்‌ காட்டி
யுள்ளோம்‌. அதைப்போன்றே பாரதியாரும்‌ ஸ்ரீ கபிலர்‌
அகவல்‌ என்றொரு நீண்ட தொடரைப்‌ பாடத்‌ தொடங்கப்‌
பாடினார்‌. பாதியில்‌ அது நின்றுவிட்டது முற்றுப்பெற
வில்லை. கபிலர்‌ அகவல்‌ முதல்நூல்‌, பாரதியின்‌ முற்றுப்‌
பெறாத ஸ்ரீ கபிலர்‌ ௮கவல்‌ அதற்கு வழிநூல்‌.
ஊரன்‌ அடிகள்‌ 121

சாதியின்‌ இன்றைய நீலை


தொடக்கத்தில்‌ நான்காக இருத்த சாதிகள்‌
நாளடைவில்‌ உட்பிரிவுகள்‌ பல்‌ ஏற்பட்டு நாற்பதாகி,
தானூறாகி இன்று ஏறத்தாழ நாலாயிரம்வரை வளர்ந்து
விட்டன.
தினமணி நாளிதழில்‌ வாரந்தோறும்‌ வெளியாகும்‌
மணமாலை, ஆங்லை இத்து இதழில்‌ மெட்ரிமோனியல்‌
பகுதிகளைப்‌ பார்த்தாலே போதும்‌ எவ்வளவு சாதிகள்‌,
உட்பிரிவுகள்‌ இருக்கின்றன என்பது தெரிந்துவிடும்‌.
பிராமணர்‌ எண்ணிக்கையால்‌ சிறுபான்மை. க்ஷத்திரி
யரும்‌ சிறுபான்மை. வைசியர்‌ சிறிது மிகுதி, சூத்திரர்‌
களே பெரும்பான்மை. மூதல்மூன்று சாதியார்‌ தவிர மற்ற
அனைவரையும்‌ சூத்திரர்‌ என்ற பிரிவில்தான்‌ சேர்க்க
வேண்டும்‌. ஆதிதிராவிடரைச்‌ சூத்திரர்களுடன்‌ சேர்க்காமல்‌
தனியாகப்‌ பஞ்சமர்‌, ஐந்தாம்‌ சாதி, என்று பிரித்து
வைத்தது பொருந்தாது.
க்ஷத்திரியர்‌ வைசியர்‌ பற்றிப்‌ பிரச்சினைகள்‌ அதிக
மில்லை. பிரச்சனைகளெல்லாம்‌ பிராமணர்‌, சூத்திரர்‌,
ஹரிஜனங்கள்‌ இம்மூவருக்கி௮டையேதான்‌.
பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌ என்ற பிரிவு சில
காலம்‌ பேசப்பட்டது. பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌
ஹரிஜனங்கள்‌ என்று மூன்றாகப்‌ பிரித்தும்‌ சிலகாலம்‌
பேசப்பட்டது.
பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ - ஹரிஜனங்கள்‌
பிராமணர்‌ - குடியானவர்கள்‌ - ஹரிஜனங்கள்‌
122 சாதியும்‌ மதமும்‌

பீராமணர்‌ - காஸ்ட்‌ ஹிண்டூஸ்‌ - ஹரிஜனங்கள்‌


(Caste Hindus)
ஜாதி இந்துக்கள்‌
என்று மூன்று பிரிவாகப்‌ பேசப்பட்டனர்‌,
பிராமணர்கள்‌, பிராமணரல்லாதாரையும்‌ ஹரிஜனங்‌
சுளையும்‌ அடக்கி ஆண்டனர்‌. பிராமணரல்லாதார்‌
பிராமணர்களுக்கு அடங்கி நடந்தனர்‌. ஹரிஜனங்களை
அடக்கி ஆண்டனர்‌, ஹரிஜனங்கள்‌, பிராமணர்‌ பிரா. மண
ரல்லாதார்‌ ஆகிய இருவருக்குமே அடங்கி நடக்க வேண்டிய
தாயிற்று, இந்தச்‌ சாதி அடக்குமுறைகளால்‌ சமுதாய
அமைதி குன்றிப்‌ பலவகைக்‌ குழப்பங்கள்‌ (ஏகப்பட்ட
சுந்தரகோலங்கள்‌) ஏற்பட்டன.
இன்று நடப்பது ஆரிய திராவிடப்‌ போராட்டமன்று.
திராவிட ஆதிதிராவிடப்‌ போராட்டம்‌.
பிராமணர்களுக்கும்‌ ஹரிஜனங்களுக்குமிடையே
இப்போது பிரச்சினை இல்லை. பிரச்சினைகளெல்லாம்‌
பிராமணரல்லாதாரில்‌ பிற்பட்ட, மிகவும்‌ பிற்பட்ட
வகுப்பினருக்கும்‌ ஹரிஜனங்களுக்கும்‌ இடையேதான்‌
பிற்பட்ட வகுப்பு, மிகவும்‌ பிற்பட்ட வகுப்பு என்ற
பெயர்கள்‌ ஏற்படுவதற்குமுன்பு குடியானவர்கள்‌ என்று
வழங்கப்படுவது வழக்கத்திலிருந்தது. பின்பு ஜாதி
இந்துக்கள்‌ என்று குறிப்பிடும்‌ வழக்கமும்‌ ஏற்பட்டது,
பத்திரிகைகள்‌ ஜாதி இந்துக்கள்‌ (காஸ்ட்‌ ஹிண்டூஸ்‌
Caste Hindus) என்று எழுதின, ஜாதி இந்துக்கள்‌ -
காஸ்ட்‌ ஹிண்டூஸ்‌- என்ற பெயரை யார்‌ கண்டு
பிடித்தார்கள்‌? பிராமணர்கள்‌ இந்து இல்லையா?
ஹரிஜனங்கள்‌ இந்துக்கள்‌ இல்லையா? நான்கு சாதிக்குள்‌
ஹரிஜனங்கள்‌ வரவில்லை. அவர்கள்‌ தனிசாதி, பஞ்சமர்‌,
ஐந்தாம்‌ சாதி, 04 0851௦ அவுட்‌ காஸ்ட்‌ என்றார்கள்‌.
ஊரன்‌ அடிகள்‌ 123

இப்படி அவுட்‌ பண்ணலாமா? எவ்வளவு அக்கிரமம்‌, அநீதி,


கொடுமை இப்படி. அவுட்‌ பண்ணியதால்தான்‌ அவர்கள்‌
இந்து மதத்தைவிட்டே அவுட்‌ ஆக (வேறு மதங்களுக்கு
மாற) முற்பட்டார்கள்‌. மதமாற்றத்திற்கு முக்கிய காரணம்‌
ஜாதிக்கொடுமை, அதிலும்‌ கொடுமை - கொடுமையில்‌
கொடுமை - தீண்டாமை,

ஆரிய திராவிடப்‌ போராட்டம்‌ "என்று ஒரு காலத்தில்‌


பேசப்பட்டது. இப்போது நடப்பது ஆரிய திராவிடப்‌
போராட்டமன்று, திராவிட ஆதிதிராவிடப்‌ போராட்டம்‌,
பிற்பட்டோர்‌ மிகப்பிற்பட்டோர்‌ % அட்டவணையின்‌
போராட்டம்‌.

பிராமணர்‌ காப்பிக்கடையில்‌ உள்ளூர்‌ ஆதிதிராவிடர்‌


தாராளமாக நுழைந்து உணவுண்டு வருகிறார்‌. பிராமண
ரல்லாதார்‌ டீக்கடையில்‌ (மலையாள நாயர்‌ கடை அல்ல,
குமிழரில்‌ பிற்பட்டோர்‌, மிகப்‌ பிற்பட்டோர்‌ நடத்தும்‌
கடையில்‌) உள்ளூர்‌ ஆதிதிராவிடர்‌ மற்ற எல்லாரையும்‌
போல்‌ தாராளமாக நுழைந்து உணவுகொள்ள முடியாத
நிலை பல ஊர்களில்‌ இன்றும்‌ உள்ளது. ஆதிதிராவிட
ருக்குத்‌ தனிக்குவளை என்ற இரட்டைக்குவளைமுறை
இன்றும்‌ பல சளர்களில்‌ உள்ளது.
அக்கிரகாரத்தில்‌ ஆதிதிராவிடர்‌ செருப்புப்‌ போட்டுக்‌
கொண்டு நடக்க முடிகிறது. குடியானவர்‌ தெருவில்‌ நடக்க
முடியவில்லை.

அரசு நிர்வாகத்திலும்‌ முற்பட்டோர்‌ நிர்வாகத்திலும்‌


உள்ள பெருங்கோயில்களில்‌ ஆதிதிராவிடர்கள்‌ தாராளமாக
வழிபடமுடிகிறது. பிற்பட்டோர்‌ மிகப்பிற்பட்டோர்‌
ஆதிக்கத்திலுள்ள கிராமப்புறத்துப்‌ பெரிய றிய கோயில்‌
களில்‌ ஆதிதிராவிடர்‌ வழிபடுவதில்‌ பிரச்சினைகள்‌
ஏற்படுகின்‌ றன.
124 சாதியும்‌ மதமும்‌

இப்படியே ஏனைய பலவற்றிலும்‌.


இது ஆரிய திராவிடப்‌ போராட்டமா? அல்லது
திராவிட ஆதிதிராவிடப்‌ போராட்டமா? ஆரிய மாயை
அகன்றாலும்‌ திராவிட மாயை விடாது போலிருக்கிறதே!

புதிய நான்கு சாதிகள்‌


1. பிராமணர்‌
2. க்ஷத்திரியா்‌ இத்தான்கும்‌ வடமோழி வேத
3. வைசியா சாத்திர நான்கு சாதிகள்‌
4. சூத்திரர்‌
1. அந்தணர்‌
2. அரசர்‌ \ இந்தான்கும்‌ தமிழ்‌ இலக்கண
3. வணிகர்‌ இலக்கிய நான்கு சாதிகள்‌
4. வேளாளர்‌ J

2: பேக்வோட
3.
இந்நான்கும்‌ அரசு செசட்‌
மோஸ்ட்பேக்வேர்டு பதிவுபெற்ற புதிய நான்கு
4; வெடியூல்டு சாதிகள்‌ (வகுப்புகள்‌).

முற்காலப்‌ பிரிவினைக்குப்‌ பெயர்‌ சாதி. இக்காலப்‌


பிரிவினைக்குப்‌ பெயர்‌ வகுப்பு, அதுவும்‌ நான்கு, இதுவும்‌
நான்கு,

முற்பட்ட வகுப்பினர்‌ - பார்வேர்டு - Forward


பிற்பட்ட வகுப்பினர்‌ - பேக்வேர்டு - Backward
மிகப்பிற்பட்ட வகுப்பினர்‌ - மோஸட்‌ பேக்வேர்டு-
Most Backward
அட்டவணை வகுப்பினர்‌ - ஷெடியூல்டு -- 8016500160

பழைய நான்கு சாதிகள்‌ அழிந்தாலும்‌ இப்புதிய


தான்கு வகுப்புகள்‌ அழியாது போலிருக்கிறது. இது செசட்‌
ஊரன்‌ அடிகள்‌ 125

அந்தஸ்து, பதிவு, பெற்றுவீட்டது. இதைக்‌ கைவிட


யாரும்‌ விரும்பவில்லை. தேர்தல்களும்‌ அரசியலும்‌
சலுசைகளும்‌ ஒதுக்கீடுகளும்‌ சாதிசளை, வகுப்புகளை
வளர்க்கின்றன.
யாரும்‌ இப்போது பார்வேர்டில்‌ இருக்க விரும்ப
வில்லை. பார்வேர்டில்‌ இருப்போர்‌ பலர்‌ தங்களைப்‌
பேக்வேர்டில்‌ சேர்க்க வேண்டுகின்றனர்‌. பேக்வேர்டில்‌
இருப்போர்‌ பலர்‌ தங்களை மோஸ்ட்‌ பேக்வேரடில்‌ சேரிக்க
வேண்டுகின்றனர்‌. மோஸ்ட்‌ பேக்வேர்டில்‌ இருப்போர்‌
பலர்‌ தங்களை ஷெடியூல்டில்‌ சேர்க்க வேண்டுகின்றனர்‌.
இது இறங்குபடி. காரணம்‌ என்ன? சலுகை, ஒதுக்கீடு.
வள்ளலார்‌ கொள்கை ஏறுபடி. எல்லாரும்‌ பார்வேர்டில்‌
இருக்க வேண்டும்‌ என்பது வள்ளலாரின்‌ கொள்கை,
வள்ளலாரின்‌ விருப்பம்‌. முதலில்‌, ஷெடியூல்டில்‌ இருப்பவர்‌
களையெல்லாம்‌ கல்வியால்‌ பொருளாதாரத்தால்‌, சமூக
நிலையால்‌ (சமூக அந்தஸ்தால்‌) மேலே ஏற்றி மோஸ்ட்‌
பேக்வேர்டில்‌ சேர்த்துவிட வேண்டும்‌. நான்கு, மூன்றாக
விடும்‌. இரண்டாவதாக, மோஸ்ட்பேக்வேர்டையெல்லாம்‌
மேலே ஏற்றி பேக்வேர்டில்‌ சேரீத்து விடவேண்டும்‌.
இப்போது மூன்று இரண்டா விடும்‌, பார்வேர்டு பேக்‌
வேர்டு என இரண்டே இருக்கும்‌. மூன்றாவதாக, பேக்‌
வேர்டையெல்லாம்‌ மேலே ஏற்றி பார்வேர்டுக்கு உயர்த்த
பார்வேர்டுடன்‌ சேர்த்துவிட வேண்டும்‌. இப்போது
பார்வேர்டு ஒன்றே இருக்கும்‌. எல்லாரும்‌ பார்வேர்டாக
இருப்பர்‌.

பிற்பட்டோர்‌ முற்பட்டோராக
சலுகைகளையும்‌ ஒதுக்கீட்டையும்‌ அனுபவித்துக்‌
கொண்டு காலமெல்லாம்‌ பிற்பட்டோராகவே இருந்து
விடுவதா? பரம்பரை பரம்பரையாகப்‌ பிற்பட்டோராகவே
126 சாதியும்‌ மதமும்‌

இருந்து விடுவதா? இந்தத்‌ கலைமுறையிலேயே முற்பட்டு


விட வேண்டாமா? அடுத்த தலைமுறையாவது வருங்காலத்‌
தலைமுறையாவது முற்பட்டோராகி விட வேண்டாமா?
முநிபட்டோர்‌ பிற்பட்டோர்‌ என்ற பிரிவினை எதனால்‌
ஏற்படுகிறது? பிற்பட்டோர்‌ எதனால்‌ பிழ்படுகிநார்கள்‌?
கல்வியால்‌ பிற்பட்டோர்‌ (எஜுகேஷனலி பேக்வேர்டு)
பொருளாதாரத்தால்‌ பிற்பட்டோர்‌ (எகானமிகலி
பேஃவேரீடு)
சமூக அந்தஸ்தால்‌ பிற்பட்டோர்‌ (சோஷியலி பேக்‌
வேர்டு) என்று மூன்று வசையால்‌ பிற்படுவதைச்‌
கூறுகிறோம்‌.
கல்வி நிலையை உயர்த்தி, உயர்கல்வி பட்டப்படிப்பு
முதலியவற்றைக்‌ கொடுத்து, கல்வியால்‌ மூற்பட்டோராகசி
செய்து விடலாம்‌.
பொருளாதார நிலையை உயர்த்தி, உத்தியோகம்‌
தொழில்‌ வருமானம்‌ மூதலியவற்றைக்‌ கொடுத்து, பொரு
ளாதாரத்தால்‌ முற்பட்டோராகச்‌ செய்து விடலாம்‌.
சமூகநிலையால்‌ முற்பட்டோராக்குவது எப்படி?
சமூக அந்தஸ்து பிறரால்‌ ஏற்படுவதன்று, கல்வியாலும்‌
பொருளாதாரத்தாலும்‌ சமூக அந்தஸ்து வந்துவிடாது.
எவ்வளவுதான்‌ படித்திருந்தாலும்‌ பட்டம்‌ பதவிகளில்‌
இருந்தாலும்‌ பத்தாயிரம்‌ இருபதாயீரம்‌ சம்பளம்‌
பெற்றாலும்‌, குடிகாரராக இருந்தால்‌, ஒழுக்கக்கேடுள்ள
வராக இருந்தால்‌ சமூக அந்தஸ்து எப்படி வரும்‌,
சாராயம்‌ குடிப்பவருக்கு சமூக அந்தஸ்து வருமா? சாராயக்‌
சடை முதலாளிக்குப்‌ பணவசதி வரும்‌. சமூக அந்தஸ்து
எப்படி. வரும்‌?
ஊரன்‌ அடிகள்‌ 127

சமூக அந்தஸ்து என்பது பண்பாட்டால்‌ வருவது;


நாகரிகத்தால்‌ வருவது, நாகரிகம்‌ என்றால்‌ நன்றாக
உடுத்துவது அலங்கரித்துக்‌ கொள்வது என்று மட்டும்‌
கருதலாகாது. நாகரிகம்‌ என்ற சொல்லைவிடப்‌ பண்பாடு
என்ற சொல்லே பொருத்தமானது, பண்பாடு என்பது
நல்ல உயர்ந்த பழக்கவழக்க ஒழுக்கங்கள்‌. உயர்ந்த
பழக்கவழக்க ஒழுக்கங்களுள்ள வர்களுக்கு சமூகத்தில்‌
உயர்ற்த அறந்தஸ்துக்‌ கடைக்கும்‌, தாழ்ந்த பழக்க வழக்க
ஒழுக்கங்களுள்ளவர்களுக்குச்‌ சமுதாயத்தில்‌ தாழ்ந்த
அந்தஸ்தே கிடைக்கும்‌, பழக்கவழக்க ஒழுச்கங்களால்‌
பண்பாட்டால்‌ எல்லாரும்‌ உயர்ந்தவராடவிட்டால்‌
எல்லாரும்‌ ஒன்றாகி விடலாம்‌. மக்களின்‌ பழக்கவழக்க
ஒழுக்கங்களின்‌ ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடிதான்‌ சமூக
ஏற்றதிதாழ்வுசள்‌ அந்தஸ்து வேறுபாடுகள்‌ ஏற்பட்டன.
பழக்க வழக்கங்களில்‌ முதன்மையானது உணவுப்‌
யழக்க வழக்கம்‌, முற்பட்டோரிடையே மது மாமிசப்‌
பழக்கம்‌ இல்லை (காலக்கேட்டால்‌ இப்போது அங்சொன்று
இங்கொள்றாக இருப்பதாசக்‌ கொண்டாலும்‌ அது மிசவும்‌
குறைவு). பிற்பட்டோரிடையே மது மாமிசப்‌ பழக்கம்‌
இருக்கிறது. மிகப்‌ பிற்பட்டோரிடையே அதிகமாக
இருக்கிறது. ஷெடியூல்டினரிடம்‌ இன்னும்‌ அதிகமாக
இருக்கிறது.
மாமிசத்திலும்‌ உயரீவு தாழ்வு வேறுபாடு உள்ளது.
ஆடு கோழி மீனைவிட மாட்டு மாமிசம்‌ தாழ்ந்ததாசக்‌
கருதப்பெறுகிறது. செத்தமாட்டு மாமிசம்‌ மிகவும்‌ தாழ்ந்த
தாகச்‌ கருதப்‌ பெறுகிறது. மாட்டு மாமிசம்‌ போலவே
பன்றி மாமிசமும்‌ தாழ்ந்ததாசக்‌ கருதப்பெறுகிறது.
எலி, நண்டு, நத்தை மாமிசம்‌ மற்ற எல்லாவற்றையும்‌
விடத்‌ தாழ்ந்ததாகச்‌ கருதப்பெறுகறது. மாமிசம்‌ உண்‌
128 சாதியும்‌ மதமும்‌

போரிலும்‌ இத்தசைய வேறுபாடுகள்‌ உயர்வுதாழ்வுகள்‌


உள்ளன. இன்ன சாதியார்‌ இன்ன மாமிசம்‌ உண்பர்‌
என்பது போன்ற சில பழக்கவழக்கங்களும்‌ உள்ளன.
இவற்றையெல்லாம்‌ சந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌.
வள்ளலாரின்‌ உயிர்க்கொள்கையே மாமிச விலக்கு
தான்‌, புலால்‌ மறுத்தல்தான்‌. வள்ளலார்‌ ஜீவகாருண்‌
யத்தின்‌ இருவுருவம்‌, கடவுள்‌ ஒன்று, சாதி ஒன்று, சமயம்‌
ஒன்று, குலம்‌ ஒன்று, கோத்திரம்‌ ஒன்று என்று எல்லா
வற்றிலும்‌ ஒருமைப்பாட்டைக்‌ கடைப்பிடித்த வள்ளலார்‌
உணவொழுக்கம்‌ பற்றி மனிதரை அகவினத்தார்‌ புற
வினத்தார்‌ என இரண்டு வகையாகப்‌ பிரித்தார்‌. புலால்‌
உண்போர்‌ புறவினத்தார்‌ புலால்‌ மறுத்தோரீ அசுவினத்‌
தாரி. எல்லாரும்‌ புலால்‌ மறுத்து அகவினத்தாராசு
வேண்டும்‌ என்று வள்ளற்பெருமான்‌: விரும்பினார்‌.
புறவினத்தார்‌. அனைவரும்‌ அகவினத்தாரா௫ூவிட்டால்‌
பின்பு இரண்டு இனங்களுக்கு இடமிராது அனைவரும்‌
ஒரே இனமாக ஆஅூவிடலாம்‌. கொள்வினை கொடுப்பு
வினை (சம்பந்தம்‌) செய்து கொள்ளலாம்‌,
தாழ்த்தப்பட்டோர்‌ முன்னேற்றம்‌
மக்கள்‌ வாழும்‌ (வூக்கும்‌, நிலமட்டத்தைவிட
வேளாண்மை செய்யும்‌ (உழுது பயிரிடும்‌) நிலத்தின்‌ மட்டம்‌
பள்ளமானது, புன்செய்‌ நிலம்‌ மேட்டுநிலம்‌ நன்செய்‌
நிலம்‌ பள்ளநிலம்‌, புன்செய்‌ நிலத்தைப்‌ புஞ்சைக்காடு
என்பர்‌. நன்செய்‌ நிலத்‌ைத நஞ்சைவயல்‌ என்பர்‌ வயல்கள்‌
பள்ளமானவை மேட்டுக்குப்பம்‌ விழப்பள்ளம்‌, முந்நீர்ப்‌
பள்ளம்‌ என்பன போன்ற ஊரீப்பெயர்களும்‌, பள்ளத்தாக்கு
என்ற வழக்கும்‌ நிலத்தின்‌ மேடு பள்ளம்‌ பற்றி
ஏற்பட்டனவே. மேட்டுநிலத்தில்‌ குடியிருப்பர்‌, பள்ள
நிலத்தில்‌ விவசாயம்‌ செய்வர்‌. பள்ளம்‌ என்பது வயல்‌,
பள்ளத்தில்‌ வேலை செய்வோர்‌ பள்எர்‌,
ஊரன்‌ அடிகள்‌ 129

வேளாண்மைத்‌ தொழிலை ஏனைய எல்லாத்‌ தொழில்‌


களையும்விடத்‌ தாழ்த்தினர்‌. வேளாண்மைத்‌ தொழில்‌
தாழ்த்தப்பட்டது. வேளாளராகிய பள்ளரும்‌ தாழ்த்தப்‌
பட்டோராயினர்‌. இன்றும்கூட வேளாண்மை ஒரு
தொழிலாக அங்கேரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே!
என்ன கொடுமை? ஆலைத்தொழிலுக்குக்‌ கொடுக்கப்படும்‌
மதிப்பு விவசாயத்‌ தொழிலுக்குக்‌ கொடுக்கப்படுகிற.தா?
ஆலைப்பொருளாதாரம்‌ எவ்வளவு? விவசாயப்‌ பொருளா
தாரம்‌ எவ்வளவு? ஆலை முதலாளிகள்‌ கோடீசுவரர்கள்‌.
விவசாய மூதலாளிகள்‌ லட்சாஇபதிக்குமேல்‌ போகவில்லை.
அண்மைக்காலம்வரை மாட்டுவண்டிதான்‌. உழுதுண்ணும்‌
விவசாயத்‌ தொழிலாளருக்குக்‌ கட்டைவண்டி, உழுவித்‌
துண்ணும்‌ மிராசுதார்களுக்கு வில்வண்டி (கூட்டுவண்டி),.
அண்மைக்‌ காலத்தில்தான்‌ மிராஸ்தார்கள்‌ காரைக்‌ காண
முடிந்தது. இப்போதும்‌ சிலர்‌ பலர்‌ வாடசைக்கார்தான்‌.
சொந்தக்கார்‌ அரிது. நெல்லில்தான்‌ காரைக்‌ கண்டார்கள்‌
(கார்‌ நெல்‌). வாகனக்‌ காரைக்‌ காணவில்லை. ஆலைத்‌
தொழிலில்‌ சம்பளம்‌, விவசாயத்‌ தொழிலில்‌ கூலி. மாதச்‌
சம்பளம்‌ தரும்‌ ஆலைத்தொழிலில்‌ நான்கு சுவருக்கிடையே
காற்றாடிக்குக்‌ சழே வேலை. தினக்கூலி தரும்‌ விவசாயத்‌
தொழிலில்‌ பள்ளத்தில்‌ சேற்றில்‌ தண்ணீரில்‌ வேலை.
ஆலைத்தொழிலில்‌ குறிப்பிட்ட நேர வேலை விவசாயத்‌
தொழிலில்‌ நேரம்‌ காலம்‌ பார்க்க இயலாது, தண்ணீர்‌
வரும்போது பாய்ச்சிக்‌ கொள்ளவேண்டும்‌, காற்றுள்ள
போது தூற்றிக்‌ கொள்ளவேண்டும்‌ ஆலைத்தொழில்‌
பேண்ட்‌ போட்டுக்கொண்டு கைக்கடிகாரம்‌ கடடிக்‌
கொண்டு செய்யலாம்‌. விவசாயத்தொழில்‌ கோவணம்‌ -
கூப்பாக்கி - கட்டிக்கொண்டு கிழக்கிலும்‌ மீமற்கிலும்‌ சூரிய
கடிகாரத்தைப்‌ பார்த்துச்‌ செய்யும்‌ வேலை ஆலைத்‌
தொழிலாளரின்‌ பொருளாதார த்தைவிட விவசாயத்‌
தொழிலாளரின்‌ பொருளாதாரம்‌ குறைவு, தாழ்ந்தது.
130 சாதியும்‌ “மதமும்‌

ஆலைத்‌ தொழிலாளர்கள்‌ ஆடு கோழி மரமிசம்‌ வாங்கச்‌


சாப்பிடுவர்‌ ஏழை விவசாயத்‌ தொழிலாளர்கள்‌ வயல்‌
வரப்புகளில்‌ உள்ள எலி நண்டு நத்தைகளைப்‌ பிடித்துத்‌
இன்பா்‌. விவசாயத்‌ தொழில்‌ தாழ்த்தப்பட்டது. விவசாயத்‌
தொழிலாளர்களின்‌ வாழ்க்கைத்தரம்‌ தாழ்த்துது.
அத்தொழில்‌ செய்யும்‌ மக்கள்‌ தாழ்த்தப்பட்டோராயினர்‌.

உழவுவேலை செய்வோர்‌ பள்ளர்‌ என்றால்‌


இழவு(க்குரிய) வேலை செய்வோர்‌ பறையர்‌, பள்ளர்‌ சேரி
களரை ஒட்டி வயலுக்கு அருசே அமைந்தது. பறையர்‌
சேரி ஊருக்குச்‌ சற்றுப்‌ புறம்பே இடுகாடு சுடுகாட்டை
ஒட்டி, அமைந்தது. செய்தொழிலால்‌ ஏற்பட்ட இயற்கை
யான அமைப்பு. சேரி என்ற பெயர்‌ முற்காலத்தில்‌
தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு (காலனிகளுக்கு)
வழங்கிற்று, அக்கிரகாரத்திற்குத்‌ தமிழிலக்கெயங்களில்‌
அற்தணர்‌ சேரி, பார்ப்பனச்சேரி என்று பெயர்‌. சாவகச்‌
சேரி, யவனச்சேரி போன்றவையும்‌ விளங்க, இழவு
சொல்லிப்‌ போவது, இழவு வீட்டில்‌ பறையடிப்பது,
பிணங்களைப்‌ புதைப்பது, சுடுவது, செத்த மாடுகளைத்‌
தூக்கி அப்புறப்படுத்துவது இத்தகைய அசுத்தமான,
அசுசியான, அசூயையான, அருவருப்பான, தொழில்களைச்‌
செய்பவர்களுக்கு என்ன கூலி கடைக்கும்‌. உழவு
தொழிலைவிட இந்த இழவுதொழிலில்‌ மிசக்‌ குறைந்த
கூலியே கிடைத்தது. தநீதி, தொலைபேசி வசதி இல்லாத
அநீதக்காலத்தில்‌ இழவு சொல்லிப்‌ போவோர்‌ ஓட்டமும்‌
நடையுமாக இரைக்க இரைக்க ஓடிச்சென்று சொல்வர்‌,
இழவ சொல்லி வருவோருக்கு இழவோலை (சாவோலை)
கொண்டு வருவோருக்குச்‌ இல்லறைக்‌ காசுகள்‌ கொடுப்ப
துண்டு, பணம்‌ காசு என்பதில்‌ பணம்‌ புபரியது, sre
சிறியது.
ஊரன்‌ அடிகள்‌ 43

இவையெல்லாம்‌ எவ்வளவு காலத்துக்கு நடக்கும்‌.


வரவரக்‌ குறைந்துவிட்டன. இப்போது பல்வேறு
மாற்றங்கள்‌ ஏற்பட்டுவிட்டன. இனியும்‌ பல்வேறு
மாற் மங்கள்‌ ஏற்பட வேண்டும்‌.

எல்லாச்‌ சாதியாரும்‌ எல்லாத்‌ தொழில்களையும்‌


செய்யும்‌ நிலை ஏற்பட்டு விட்ட இக்காலத்தில்‌ இழவு
தொழிலுக்கென்று குறிப்பிட்ட ஒரு சாதியாரை எதிர்‌
பார்ப்பது முறையன்று. அவர்களும்‌ தொழில்களை மாற்றிக்‌
கொண்டு தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து உயர வேண்டும்‌.
முூற்பட்டோராக மூன்னேற வேண்டும்‌.

தலித்‌ இலக்கியம்‌ தலித்‌ கலைகள்‌ என்று தப்பு,


தாரை, பறை, கரகம்‌ முதலியவற்றிலேயே எஈடுபட்டிருத்த
லாகாது கரகத்திலிருந்தகொண்டே பரதநாட்டியத்துக்கும்‌
உயர வேண்டும்‌. தப்பு, தாரை, பறை இவற்றிலிருந்து
கொண்டே தவில்‌, நாகசுரம்‌, மிருதங்கம்‌, வீணை என்று
உயர வேண்டும்‌.

தப்பு, தாரை, பறை - இழவு வாத்தியங்கள்‌, அமங்கல


வாத்தியங்கள்‌ - பறையர்‌ கையில்‌ - இழவு வீடுகளில்‌ Ag
தெய்வக்‌ கோயில்களில்‌,

தவில்‌, நாதசுரம்‌, கல்யாணவாத்தியங்கள்‌, மங்கல


வாத்தியங்கள்‌ - அந்நாளில்‌ மேளக்காரர்‌, இன்னாளில்‌
இசைவேளாளர்‌ கையில்‌ - கல்யான வீடுகளில்‌ - சச்சேரி
களில்‌ - பெருந்தெய்வக்‌ கோயில்களில்‌.

மிருதங்கம்‌, வயலின்‌, வீணை - கச்சேரி வாத்தியங்கள்‌.


பிராமணர்கள்‌ கையில்‌, உயர்சாதிக்காரார்களின்‌ கையில்‌,

மிருதங்கம்‌ தவிலைவிட உயர்ந்தது. மிருதுவான


அங்கம்‌ மிருதங்கம்‌ போலும்‌, பெயரே ஒரு மாதிரியாக
132 சாதியும்‌ மதழும்‌

இருக்கிறது. அதைப்‌ பிராமணரிகள்‌ எடுத்துக்‌


கொண்டார்கள்‌, தவில்‌ வாக்கும்‌ பிராமணரைக்‌
காணோம்‌. மிருதங்கம்‌ முதல்‌ வகுப்பு (பஸ்ட்‌ கிளாஸ்‌).
அது அந்தணர்‌ கையில்‌, உயர்சாதிக்காரரீ கையில்‌.
தவில்‌ சசண்ட்‌ கஇளாஸ்‌ அது மேளக்காரர்கள்‌ கையில்‌.
தப்பு (பறை) கடை வகுப்பு (லாஸ்ட்‌ கிளாஸ்‌), அது
கடைச்‌ சாதியாராகிய பறையர்‌ கையில்‌, தப்பு அடிப்பதும்‌
தாரை ஊதுவதும்‌ சுடுகாட்டுப்‌ பணிகளும்‌ பறையர்களுக்கு.
அவர்களே சமுதாயத்தின்‌ லாஸ்ட்‌ கிரேடு சர்வெண்ட்கள்‌.
இன்னும்‌ எவ்வளவு காலத்துக்கு அப்படியே இருப்பது?
திப்பு, தாரைக்குச்‌ சம்பளம்‌ (கூலி) எவ்வளவு? அந்தஸ்து
என்ன? தவில்‌, நாதசுரத்திற்குச்‌ சம்பளம்‌ எவ்வளவு?
அந்தஸ்து என்ன? மிருதங்கம்‌, வயலின்‌, வீணைக்குச்‌
சம்பளம்‌ (சன்மானம்‌) எவ்வளவு? அந்தஸ்து என்ன?

கிராமியக்‌ கலைகளை வளர்க்கிறோம்‌ என்று தப்பு,


தாரை முதலியவற்றை வளர்ப்பது பொருளாதாரத்தையும்‌
சமூக அந்தஸ்தையும்‌ தராது, கரகாட்டக்‌ சலைஞர்கள்‌
பரத நாட்டியம்‌ கற்றால்‌ அதிலும்‌ வித்தகராக விளங்குவர்‌
என்பதில்‌ ஐயமில்லை.
ஹரிஜன கனகலிங்கத்திற்குப்‌ பாரதியார்‌ பூணூல்‌
போட்டுப்‌ பிராமணனாக்கியது போல, பாணர்‌ பாணீனி
கையிலிருந்த யாழை (அன்றைய வீணையை) பார்ப்பார்‌
பார்ப்பனி கையிற்‌ கொடுத்ததுபோல, அல்லது அவர்கள்‌
எடுத்துக்கொண்டது போல இன்று தாழ்த்தப்பட்ட
மக்கள்‌ கையில்‌ நான்கு பள்ளி பறைச்சகள்‌ கையில்‌
வீணையைக்‌ கொடுத்துப்‌ பழக்கவேண்டும்‌. சரஸ்வதி
கடாட்சம்‌ இவர்களுக்கு இல்லாமற்போகாது.
தாழ்த்தப்பட்ட மக்கள்‌, தலித்‌ மக்கள்‌, பழக்கவழக்க
ஒழுக்கங்களால்‌, உணவால்‌, உடையால்‌, உத்தியோகத்தால்‌,
ஊரன்‌ அடிகள்‌ 133
தொழிலால்‌, கலையால்‌, வாழ்க்கைத்தரத்தால்‌, துழை
தோறும்‌ துறைதோறும்‌, பல்வேறு வகைகளிலும்‌ முன்னே ற-
முற்பட - முயலவேண்டும்‌.

சாதி ஒழிப்புக்கு வழிகள்‌


சமபந்தி போஜனம்‌
இதை உடனுண்ணல்‌ என்று திரு, வி. ௧, அழகாகக்‌
கூறுவார்‌. பாரதியார்‌, இரு. வி. ௧க,, மறைமலையடிகள்‌,
குன்றக்குடி அடிகளார்‌. ஆகியோர்‌. உடனுண்ணலை
ஆதரித்தவர்கள்‌. தாங்களே உடனுண்ணல்‌ செய்தவர்கள்‌.
உடனுண்ணல்‌ (ச௪மபத்தி போஜனம்‌) இப்போது மிகுந்து
வருகிறது. இன்னும்‌ மிகவேண்டும்‌, ஆசஸ்ட்‌ 15-இல்‌
கோயில்களில்‌ சமபந்தி போஜனம்‌ நடத்தப்பெறுகிறது.
இது போதாது. அமைச்சர்கள்‌, அரசியல்‌ தலைவர்கள்‌
அரசு அதிகாரிகள்‌ வீடுகளில்‌ சமபந்தி போஜனம்‌ நடக்கு
வேண்டும்‌.

கலப்பு மணம்‌
மூதல்‌ மூன்று வருணத்து ஆண்மக்கட்கும்‌ 8ீமுள்ள
வருணத்துப்‌ பெண்‌ மக்கட்கும்‌ பிறந்தோர்‌ அநுலோமர்‌
என்றும்‌,மேல்வருணத்துப்‌ பெண்‌ மக்களுக்கும்‌ 8ழ்வருணத்து
ஆண்‌ மக்களுக்கும்‌ பிறந்தோர்‌ பிரதிலோமர்‌ என்றும்‌ மனு
தர்ம சாத்திரம்‌ கூறுவதால்‌ அக்காலத்திலேயே இத்தகைய
கலப்பு மணங்கள்‌ நடைபெற்றன என்று தெரிகிறது.
ஆங்கிலேயர்களும்‌ இந்தியர்களும்‌ செய்து கொண்ட கலப்பு
மணத்தால்‌ ஆங்கிலோ இந்தியர்‌ என்றொரு சாதி உண்டாக
வில்லையா? இது போன்று எங்கும்‌ எக்காலத்திலும்‌ நிகழ்ந்து
தான்‌ வருகிறது. எனினும்‌ இவை ஓரளவுக்கே நடை
பெறும்‌. பெருமளவில்‌ நிகழ்வதில்லை.
134 சாதியும்‌ மதமும்‌"

கலப்பு மணங்களை ஊக்குவிக்க வேண்டும்‌. அதிகம்‌


நிகழும்‌ வகை செய்தல்‌ வேண்டும்‌. **உண்பனை தின்பனை
கொள்வினை கொடுப்பினை'” என்று ஒரு பேச்சு வழக்கு
வழங்கக்‌ காண்கிறோம்‌. *“உண்ணும்‌ தின்னும்‌ வினை,
கொள்ளும்‌ வினை கொடுக்கும்‌ வினை'” என்பதே
கொச்சையாக மேற்கூறியவாறு விளங்குகிறது என்று
கொள்ளலாம்‌. உண்ணும்‌ வினை தின்னும்‌ வினை என்பது
சமபந்து போஜனம்‌, கொள்ளும்வினை கொடுக்கும்வினை
என்பது சம்பந்தம்‌ போடுவது என்று கொள்ளலாம்‌.
சமபந்தி போஜனம்‌ சாதாரணமாக (எளிகாக) இயல்கிறது.
அவ்வளவு எளிதாகச்‌ சம்பந்தம்‌ செய்து கொள்ள இயல்‌
கிறதா? இயல்வதில்லையே, ஏன்‌? சமபந்தி போஜனம்‌
அந்த நேரத்திற்குரியது, தற்காலிகம்‌. சம்பந்தம்‌ வாழ்நாள்‌
முழுவதும்‌ நீடிப்பது, நிரந்தரம்‌, அதனால்‌ மிகவும்‌
நிதானிக்க வேண்டியுள்ளது. உணவுக்கடைகளிலும்‌ தொடர்‌
வண்டியிலும்‌ பொது விருந்துகளிலும்‌, ஏன்‌? நமது
இல்லத்து விருந்துகளிலுமே கூடச்‌ சர்வ சாதாரணமாகச்‌
சமபந்தி போஜனம்‌ செய்வது போல, அவ்வளவு எளிதாக
சம்பந்தம்‌ செய்து கொள்ள இயலாது. வாழ்நாள்‌
சம்பந்தம்‌. அதற்குப்‌ பழக்க வழக்கங்கள்‌ ஓத்திருக்க
வேண்டும்‌. உணவு, உடை, சடங்குகள்‌ முதலியவற்றில்‌
ஒவ்வொரு சாதியாரிடமும்‌ வெவ்வேறு பழக்க வழக்கங்கள்‌
உள்ளன. முக்கியமாக உணவுப்‌ பழக்கம்‌. சைவ உணவின
Gb அசைவ உணவினரும்‌ ஒன்றாக அமர்ந்து சமபந்தி
போஜனம்‌ செய்து விடலாம்‌. ஆனால்‌ சம்பந்தம்‌
செய்து கொள்வதில்‌ சிரமம்‌ இருக்கிறது. உணவு
போன்றுதான்‌ மற்ற எல்லாப்‌ பழக்கவழக்கங்களும்‌.
உதாரணத்திற்காக உணவு ஒன்றை மட்டும்‌ குறிப்பிட்‌
டோம்‌. பழக்கவழக்கம்‌, வாழ்க்கைமுறை முகுலியவற்றால்‌
ஒருமைப்பாடு வந்துவிட்டால்‌ சாதி விட்டுச்‌ சாதி மணம்‌
ஊரன்‌... அடிகள்‌ - 135

செய்துகொள்ளும்‌ sen, மணத்திற்குப்‌ பெரிதும்‌ தடை


ஸிராது.
கலப்பு மணங்கள்‌ முன்னையைவிட இப்போது ஒரளவு
மிகுந்து வருகின்றன. இன்னும்‌ மிகுவதற்கு வழிகாண
வேண்டும்‌ கலப்பு மணத்‌இற்குத்‌ கடையாக உள்ளவை
யாவை என்று நன்கு சிந்தித்து அவற்றைத்‌ தவிர்ப்பதற்கு
உரியவாறு முயலுசுல்‌ வேண்டும.
சாதிப்‌ பட்டப்‌ பெயர்களைத்‌ தவிர்த்தல்‌
பெயருக்குப்பின்‌ ஐயர்‌ ஐயங்கார்‌, பிள்ளை, மூ.தலியாச்‌,
செட்டியார்‌, நாயடு, இன்னும்‌ இவை போன்ற சாப்‌
பட்டப்பெயர்களைச்‌ சேர்த்துக்‌ கொள்வதை அறவே
தவிர்க்கவேண்டும்‌ முன்னைக்கு இப்போது குறைந்து
வருகிறது எனினும்‌ இன்னும்‌ குறைய வேண்டும்‌, அறவே
தவிர்க்கவேண்டும்‌

சாதிகளின்‌ பெயரால்‌ இடப்‌ பெயர்களை வழவ்காமை


செட்டியார்‌ தெரு, வேளாளர்‌ தெரு, முதலியார்‌ தெரு
என்று பல்வேறு சாஇகளின்‌ பெயரிலும தெருக்கள்‌ உள்ளன.
இவற்றின்‌ பெயரை மாற்ற வேண்டும. கஸ்தூரிரங்க
ஐயங்கார்‌ சாலை, தம்புசெட்டித்‌ தெரு, லிங்கி செட்டித்‌
தெரு மூதலிய தெருப்‌ பெயர்களில்‌ சாதிப்பட்டற்தை
அகற்றிவிட்டோம்‌

பாப்பாரப்பட்டி, செட்டிகுளம்‌, ரெட்டியப்பட்டி,


ஒட்டன்சத்திரம்‌ என்பன போன்று நூற்றுக்கணக்கான
கஊர்ப்பெயாகள்‌: உள்ளன. அவற்றை என்ன செய்யப்‌
போகிறோம்‌ இவற்றையெல்லாம்‌ சிந்திக்கவேணடும்‌,

சாதிகளின்‌ உட்பிரிவுகளை இணைத்தல்‌


அந்தணரில்‌ ஐயர்‌, ஐயங்கார்‌; அரிசனங்களில்‌ பள்ளா்‌
பறையர்‌, முதலியார்களில்‌ பல முதலியார்கள்‌, செட்டியாரி
136 சாதியும்‌ மதமும்‌

களில்‌ பல செட்டியார்கள்‌ இப்படிப்‌ பல சாதிகளிலும்‌


உட்பிரிவுகள்‌ - உட்சாதிகள்‌ - பல உள்ளன. முதலில்‌
இவற்றை ஒன்று சேர்த்து உட்பிரிவுகள்‌ உட்சாதஇகளின்‌
எண்ணிக்கையைக்‌ குறைக்க இயலுமா என்று பார்க்க
வேண்டும்‌.

எல்லாவகை ஆவணங்களிலும்‌ சாதியைத்‌ தவிர்த்தல்‌


பள்ளியில்‌ சேர்ப்பதிலிருந்து, அலுவலகம்‌, அரசு
ஆவணங்கள்வரை அனைத்திலும்‌ எங்கும்‌ எதிலும்‌ சாதிப்‌
பெயரே இடம்பெறாதபடி ரெக்கார்டு ஆகாதபடிச்‌ செய்ய
வேண்டும்‌.

சாதிகள்‌ ஒழிய வேண்டுமானால்‌...


சாதி ஒழிப்புக்கு வழிகள்‌ எனச்‌ சிலவற்றை மேலே
கூறினோம்‌. இவைபோன்று இன்னும்‌ பல உள,
1. சாதிச்‌ சங்கங்கள்‌ அனைத்தும்‌ கலைக்கப்பட
வேண்டும்‌. இது எளிதில்‌ இயல்வதன்று, சாதிச்சங்கங்கள்‌
பதிவு செய்யப்பட்டிருந்தால்‌ அதையாவது ரத்து செய்ய
வேண்டும்‌. இனிப்‌ பதிவு செய்யாமை வேண்டும்‌.
௨ சாதியின்‌ பேரால்‌ எந்த ஸ்தாபனமும்‌ இருக்கச்‌
கூடாது.
3. அரசு ஆவணங்கள்‌ அனைத்திலும்‌ சாஇப்பெயரைக்‌
கேட்கக்கூடாது குறிக்கக்கூடாது.
4 சாதி அடிப்படையில்‌ வழங்கப்பெறும்‌ சலுகைகள்‌
இதுக்கீடுகள்‌ அனைத்தையும்‌ நிறுத்தவேண்டும்‌. இதை
உடனே செய்ய இயலாது. இதற்கு ஒரு கால வரம்பு
குறிக்கவேண்டும்‌ அதன்பின்‌ திறுத்தவேண்டும்‌, பொருளா
தார அடிப்படையில்‌ லெகாலம்‌ சலுகைகள்‌ வழங்கப்‌
பெறலாம்‌. இதற்கும்‌ ஒரு காலவரம்பு குறிக்கவேண்டும்‌.
ஊரன்‌ அடிகள்‌ 137

3. ஆற்றுத்துறை, ஏரி, குளம்‌, கிணறு, குடிநீர்க்‌


குழாய்‌, சுடுகாடு, தெருக்கள்‌ முதலிய எல்லாப்‌ பொது
வசதிகளும்‌ எல்லாச்‌ சாதியாருக்கும்‌ பொதுவாக இருக்க
வேண்டும்‌.
6. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்‌ தனிக்கிணறு, தனிச்‌
சுடுகாடு, அதற்குத்‌ தனிப்பாதை கூடாது என்பது போலதீ
தனிக்குடியிருப்பும்‌, தனிக்கோயிலும்‌ கூடாது. எல்லா
இடங்களிலும்‌ தாழ்த்தப்பட்ட மக்கள்‌ குடியேறும்‌ வகை
செய்யவேண்டும்‌. எல்லா ஊரும்‌ சமத்துவபுரங்களாகத்‌
திகழவேண்டும்‌.
யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளீர்‌'*
என்ற சங்ககாலத்‌ தமிழர்‌ வாழ்வியல்‌ இன்று வழங்கும்‌
வசை செய்தல்‌ வேண்டும்‌,
in Din

மதமா? சமயமா?
மிதம்‌, சமயம்‌ - பயர்‌ விளக்கம்‌
“மதம்‌!” “சமயம்‌'' என இரண்டு பெயர்களை வழங்கு
கஇிஜழோம்‌. மதம்‌ என்‌.றால்‌ என்ன? சமயம்‌ என்றால்‌ என்ன?
இரண்டும்‌ ஒன்றா? வெவ்வேறா? என்பதை முதலில்‌
தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்‌.
**மதம்‌”' என்பது கொள்கை **சமயம்‌*? என்பது
ஒழுகலாறு, அனுட்டானம்‌. வேதாந்தம்‌, இத்தாந்தம்‌,
அத்வைதம்‌, விசட்டாத்வைதம்‌, துவைதம்‌ என்பன
மதங்கள்‌. சைவம்‌ வைணவம்‌ என்பன சமயங்கள்‌.

சைவம்‌, சமயம்‌. அதன்‌ கொள்கையாகிய சித்தாந்தம்‌


(சைவசித்தாந்தம்‌) மதம்‌. சைவம்‌ என்று சொன்னால்‌ அது
சமயம்‌. அதையே சைவ இித்தாந்தம்‌ என்று சொல்லும்‌
போது அது மதம்‌. வைணவம்‌ என்று சொன்னால்‌ சமயம்‌,
அதையே விசிட்டாத்வைதம்‌ என்றால்‌ அது மதம்‌,
வேதாந்தம்‌ ஒரு கொள்கை, மதம்‌. அதை அனுஷ்டிக்கும்‌
இந்துமதம்‌ சமயம்‌.

சைவத்தில்‌ சம்பந்தர்‌ முதலிய சமயகுரவர்களும்‌


வைணவத்தில்‌ பன்னிரண்டு ஆழ்வார்களும்‌ சமய
குருமார்கள்‌, சமயாசாரியர்கள்‌,
சைவத்தில்‌ சந்தான குரவர்களும்‌ வைணவத்தில்‌
ஆசாரியர்களும்‌ மதகுருமார்கள்‌, மதாசாரியர்கள்‌,
ஊரன்‌ அடிகள்‌ 139

தோத்திரங்கள்‌ சமய நூல்கள்‌. சாத்திரங்கள்‌. மத


நூல்கள்‌, கொள்சை விளக்க நூல்கள்‌.
சமயம்‌ தோத்திரம்‌ ஆசய இரண்டும்‌ இலக்கியம்‌
போன்றன.

மதம்‌ சாத்திரம்‌ ஆகிய இரண்டும்‌ இலக்கணம்‌


போன்றன.
ஆங்கிலத்தில்‌ ரிலிஜன்‌ (Religion), பிலாசமி,
(Philosophy) என்று இரண்டு பெயர்கள்‌,
சொற்கள்‌ உள்ளன. சமயம்‌ - ரிலிஜன்‌. மதம்‌ - கொள்கை,
பிலாசபி.
“ததிதுவ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சமயங்கள்‌ ஏம்படுத்தப்‌
பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம்‌ பற்றி ஜாதிகள்‌
ஏற்படுத்‌ தப்பட்டிருக்கின்‌றன”? என்பது வள்ளார்‌
உபதேசம்‌.
குத்துவம்‌ என்பது ஒரு பொருளின்‌ உண்மை தத்துவ
அடிப்படையில்‌ காணப்பெற்ற உண்மைகளுக்கும்‌ கொள்கை
களுக்கும்‌ மதம்‌ என்று பெயர்‌. அக்கொள்கைகளைக்‌
சுடைப்பிடிப்பதற்கு, மதத்தை அனுட்டிப்பதற்கு
(மதானுட்டான த்திற்கு)ச்‌ சமயம்‌ என்று பெயர்‌.

சைவத்திலும்‌ வைணவத்திலும்‌ மதம்‌ சமயம்‌ என


இவ்வாறு பிரித்துச்‌ காணலாம்‌,
சமணம்‌ பெளத்தம்‌ கிறிஸ்துவம்‌ இஸ்லாம்‌ முதலிய
வற்றை மதம்‌ என்றும்‌ சொல்லலாம்‌, சமயம்‌ என்றும்‌
சொல்லலாம்‌.
140 சாதியும்‌ மதமும்‌

. இன்றுள்ள 0பரும்‌ மதப்பிரச்சினைகள்‌


சாதியைப்பற்றி மிகவும்‌ விரிவாகக்‌ கூறினோம்‌. இனி
மதத்தைப்பற்றி அவ்வாறு விரிவாகக்‌ கூறவேண்டுமாயின்‌
இந்நூல்‌ இன்னும்‌ நூறு பக்கங்களுக்குமேல்‌ விரியும்‌.
உலக மதங்கள்‌ எல்லாவற்றைப்‌ பற்றியும்‌ பொதுவாக ஓர்‌
அறிமுக நூலும்‌, ஒவ்வொரு மதத்தைப்‌ பற்றியும்‌
சிறப்பாகத்‌ தனித்தனி விரிவான நூல்களும்‌ எழுதி வெளி
யிடவேண்டும்‌ என்ற எண்ணம்‌ நீண்டநாளாகவே உண்டு.
அண்மையில்‌ அது நிறைவேறுங்காலம்‌ வரலாம்‌. ஆதலின்‌
இந்நூலில்‌ மதங்களின்‌ (சமயங்களின்‌) தோற்றம்‌, வளர்ச்சி
இன்றைய நிலை முதலியவற்றை விரிவாக ஆராயாது,
இன்று நம்‌ நாட்டிலுள்ள மதப்பிரச்சினைகளில்‌
முக்கியமான பெரிய பிரச்சினைகளைப்‌ பற்றி மட்டும்‌ மிகச்‌
சுருக்கமாகக்‌ கூறி நிறைவு செய்வோம்‌.
நம்‌ இந்திய நாட்டில்‌ உள்ள மதங்கள்‌ பல, எல்லா
மதங்களினிடையேயும்‌ இப்போது பிரச்சனை இல்லை.
இன்றுள்ள பெரும்‌ பிரச்சினைகள்‌ எல்லாம்‌ இந்து
கிறிஸ்துவம்‌ இஸ்லாம்‌ ஆகிய மூன்று மதங்களுக்கிடையே
தான்‌, பெளத்தம்‌ சமணம்‌ சக்கியம்‌ பார்‌ யூதம்‌ போன்ற
மதங்களைப்பற்றி இன்று நம்‌ நாட்டில்‌ அதிகப்‌ பிரச்சினை
இல்லை.

மூன்று மதங்களுக்கிடையேயும்‌ முக்கிய பிரச்சனைகள்‌


பெரிய பிரச்சினைகள்‌ இரண்டே இரண்டுதான்‌.
1. மதமாற்றம்‌
. அயோத்தி இராமர்‌ கோயில்‌
1, மதமாற்றம்‌
மதம்‌ என்பது கொள்கை, அக்கொள்கைகளை
அனுட்டிப்பது சமயம்‌, வாழ்க்சைமுறை, மதத்தை
ஊரன்‌ Sip BET 14]

(சமயத்தை) மாற்றிக்கொள்ள மச்சள்‌ ஒவ்வொருவருக்கும்‌


உரிமை உண்டு. இது தனி மனித உரிமை; சொந்த உரிமை,
மக அமைப்புகள்‌, அல்லது மதகுருமார்கள்‌, அல்லது மததி
தொண்டர்கள்‌, தங்கள்‌ மதத்துமக்களின்‌ எண்ணிக்கையைப்‌
பெருக்கவேண்டும்‌ என்பதற்காகச்‌ சில பல உத்திகளால்‌
கூட்டம்‌ கூட்டமாக மக்களை மதமாற்றம்‌ செய்வதற்கு
உரிமையில்லை.
மதமாற்றம்‌ அன்றும்‌ நடந்தது, இன்றும்‌ நடந்து
கொண்டுதான்‌ இருக்கறது அன்று நடந்தது என்பதற்கு
ஆதராம்‌ வேளாளக்‌ கிறிஸ்துவர்‌. வன்னியக்‌ கிறிஸ்துவர்‌,
நாடார்‌ கிறிஸ்துவர்‌, எஸ்‌ 9, கிறிஸ்துவர்‌ என்று வழங்கி
வருவதே போதுமானது.
மதமாற்றம்‌ இன்றும்‌ கடந்து கொண்டுதான்‌
இருக்கிறது என்பதற்கு ஆதாரம்‌:-
அப்போஸ்தல எதிரொலி என்றொரு கிறித்துவ மாத
இதழில்‌ இருந்து சில பகுஇகள்‌:
இந்தியா அறுவடை திட்டம்‌, திருத்தணியில்‌
வரலாறு காணாத கூட்டங்கள்‌.
-. அப்போஸ்தல எதிரொலி, மார்ச்‌ 2001
நடுப்பக்கங்கள்‌ 10 ; 11
இந்தியா அறுவடை திட்டம்‌ திருப்பத்தூரில்‌
திரண்டுவந்த மக்கள்‌ கூட்டம்‌,

“அறுப்புமிகுதி என்று இயேசு அன்று உரைத்தது,


இன்றைக்கும்‌ பொருந்தக்கூடிய ஒன்று, இன்னும்‌ அநேச
கிராமங்களில்‌ சுவிசேஷத்தைக்‌ கேள்விப்படாத
இலட்சக்கணக்கான மக்கள்‌ இருக்கிறார்கள்‌, அவரி
களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது தம்முடைய
142 சாதியும்‌ மதமும்‌

கடமையாயிருக்கிறது. “இந்தியா அறுவடைத்‌ திட்டம்‌”


"அதற்காகவே ஏற்படுத்தப்‌ பட்ட திட்டமாகும்‌.
மே 2001, நடுப்பக்கங்கள்‌ 10 : 11
இதுவரை இவர்கள்‌ வேலூரைச்‌ சுற்றியுள்ள
சுமார்‌ 50 கிராமங்களில்‌ சுவிசேஷத்தை அறிவித்து
ஏறக்குறைய ஆயிரம்‌ பேரை கிறிஸ்துவுக்குள்‌ கொண்டு
வந்திருக்கிறார்கள்‌.
௨ பக்கம்‌ 12
இந்தியா அறுவடை திட்டம்‌, உரவகசொண்டா
கூட்டங்கள்‌. -. முசம்பர்‌ 200!
இந்தியா அறுவடை திட்டம்‌. ஒசூர்‌ கூட்டங்கள்‌.
௨ பிப்ரவரி 2002
“இந்தியா அறுவடை திட்டம்‌? என்பது இரண்டு பக்க
அகலத்திற்கும்‌ ஒரே வரியாக ஓரங்குல சதுரமான பெரிய
கொட்டை எழுத்துகளில்‌ அச்சிடப்‌ பெற்றுள்ளது.
முதல்‌ ஆயிரம்‌ ஆண்டுகளில்‌ ஐரோப்பாவில்‌ கிறிஸ்துவம்‌
பரப்பப்பட்டது. இரண்டாவது ஆயிரம்‌ ஆண்டுகளில்‌
ஆப்பிரிக்க நாடுகளில்‌ பரப்பப்பட்டது. மூன்றாவது
ஆயிரத்தில்‌ ஆசியாக்‌ கண்டத்தில்‌ மாபெரும்‌ அறுவடை
(02௦84 பகா) செய்யவேண்டும்‌ என்று போப்‌ அவர்களே
சொல்லிச்‌ சென்ற.ன்‌ திட்டமிட்டுத்‌ தீவிர அறுவடை
நடைபெறுவதில்‌ வியப்பில்லை,
கிறிஸ்துவ மதமாற்றம்‌ போன்றே இஸ்லாமிய
மதமாற்றமும்‌ இன்றும்‌ நடந்துகொண்டுதான்‌ உள்ளது.
மதமாற்றங்கள்‌ நிகழ்ந்து வருவதை நமது சுற்றுப்‌ பயணங்‌
களிலும்‌ கள ஆய்விலும்‌ நாம்‌ சண்டறிந்துள்ளோம்‌,

2. அயேசத்தி இராமர்‌ கோயில்‌ பிரச்சினை


காசியைப்‌ பற்றி இந்திய அரசின்‌ சுற்றுலாத்துறை
அச்சிட்டு வழங்கும்‌ சுற்றுலாக்‌ குறிப்புச்‌ உற்றேட்டில்‌ கா௪
ஊரன்‌ அடிகள்‌ 143

விஸ்வநாதர்‌ கோயிலைப்‌ பற்றியும்‌, ஞானவா.பி மசூதியைப்‌


பதிறியும்‌, gener மசூதியைப்‌ பற்றியும்‌ கொடுக்கப்‌
பெற்றுள்ள குறிப்புகள்‌ பின்வருமாறு

Vishwanath Temple (Golden Temple)


5 km. The present temple of Lord Vishwanath
(more correctly Vishveswara) was erected by Rani
Ahalayabai Holkar of Indore in 1776. The temple
is adjacent to the old temple which was destroyed
and converted into the Gyanvapi Mosque by
Emperor Aurangzeb. The gold plating on the
shikharas was a gift of Maharaja Ranjit Singh in
1835. On account of this it is popularly known as
the Golden Temple.
Gyanvapi Mosque
5 km. Constructed by Aurangzeb in the 17th
century over the ruins of the Vishveswara temple
which he destroyed, the foundation and the rear
of the mosque still reveal rare specimens of the
ancient temple art of India.

Alamgir Mosque
8 km. Popularly known as Beni Madhav Ka
Durera it was originally a Vishnu temple erected
in the early 17th century by Beni Madhav Rao
Scindia a Maratha chieftain. The temple was
destroyed by Emperor Aurangzeb in the 17th century
and a mosque raised on the site. It is an odd
mixture of Hindu and Mughal styles of architecture,
144 சாதியும்‌ மதழும்‌

The lower portions and the enclosure walls are of


Hindu design and the mosque, Islamic.
— VARANASI, ALLAHABAD
Travel Services Directory
Department of Tourism
Government of India
February, 1990.
அண்மைக்காலமாகப்‌ பிரதேச மொழிகளிலும்‌
சுற்றுலாக்‌ குறிப்புகள்‌ அச்சிட்டு வழங்கப்பெறுகின்றன.
1988-89-இல்‌ தமிழில்‌ அச்சிட்டு வெளியிடப்பெற்ற
சுற்றுலாத்‌ தலக்குறிப்பில்‌ காச (வாரணாசி) கோயில்‌
மசூதிகளைப்‌ பற்றிக்‌ கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள்‌
பின்வருமாறு.

அருள்மிகு காசி விசுவநாதர்‌ கோயில்‌: வாரணா9


நகருக்கு வழிபடுவதற்காக வரும்‌ பக்தர்கள்‌ முதலில்‌
செல்வது புகழ்மிக்க காசிவிசுவநாதர்‌ ஆலயத்திற்குத்‌
தான்‌. முகலாய மன்னன்‌ ஒளரங்க?ப்‌, இங்கிருந்த
புராதனக்‌ கோயிலை இடித்துத்‌ தகர்த்து விடவே,
18-ம்‌ நூற்றாண்டில்‌ இந்தூர்‌ மகாராணி அகல்யா
பாயினால்‌ மீண்டும்‌ கட்டப்பட்டது. மகாராஜா
ரஞ்ஜீத்‌ ங்‌, கோவில்‌ தங்கத்தால்‌ வேய்ந்ததால்‌,
காசி-விசுவநாதர்‌ கோயில்‌, தங்கக்‌ சோயில்‌ என்றும்‌
அழைக்கப்படுகிறது.

ஞானவாபி மசூதி: புராதனமான விசுவேசுவரா


கோவிலை அழித்து அவுரங்கசீப்‌ கட்டிய இந்த
மசூதியின்‌ அடிப்புறத்திலும்‌ பின்பக்கத்திலும்‌ பழங்‌
சாலக்‌ கோவில்‌ சிற்பக்கலையின்‌ ௮ரிய அம்சங்களைக்‌
சாணலாம்‌,
ஊரன்‌ அடிகள்‌ 145

மம்கீர்‌ மசூதி: இத்த இடம்‌, பெனி மாதவ்கா


தரேரா என்று சாதாரணமாக அழைக்கப்படுகிறது.
17-வது நரற்றாண்டில்‌ பென்‌ மாதவ்‌ ராவ்‌ சிந்தியா
என்ற அரசரால்‌ கட்டப்பட்ட விஷ்ணு கோவிலை
அழித்து, ஒளரங்க?ப்‌ கட்டிய இந்த மசூதி, இந்து-
முஸ்லீம்‌ இருவித கட்டிடக்‌ கலைகளின்‌ அபூர்வ கலவை
யாகக்‌ காட்சி அளிக்கிறது.
மதுரையைப்‌ பற்றி இந்திய அரசின்‌ சுற்றுலாத்துறை
அச்சிட்டு வழங்கும்‌ சுற்றுலாக்‌ குறிப்புச்‌ சிற்றேட்டில்‌
இருஷ்ணர்‌ பிறந்த இடம்‌ பற்றியும்‌ ஜமா மசூதி பற்றியும்‌
கொடுக்கப்‌ பெற்றுள்ள குறிப்புகள்‌ பின்வருமாறு.
Shri Krishna Janma Bhoom!
The foremost place of Hindu veneration, the
birthplace of Lord Krishna is in Katra Keshav
Deo. On the same site stands Aurangzeb’s red
stone mosque. Originally, there was a temple
dedicated to Lord Krishna which was destroyed by
Aurangzeb in 1669 in order to build the present
mosque.
Jama Masjid
The mosque lies in the very heart of the city
and was built by Abc—in-Nabir Khan, the local
Governor in 1661 AD on the ruins of the Keshav
Deo temple dedicated to Lord Krishna which was
destroyed by Aurangzeb. This is the place where
Lord Krishna is believed to have been born in
prison.
— AGRA MATHURA VRINDABAN
Department of Tourism
Government of India
January 1977
146 சாதியும்‌ மதழும்‌

அயோத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினைக்கு


உட்பட்டுவிட்டசகால்‌ அயோத்தியைப்பற்றிச்‌ சுற்றுலாக்‌
குறிப்புகள்‌ அச்சிட்டு வெளியிடப்பெறுவதஇில்லை,
காசி, மதுரையைப்‌ பற்றிக்கூட அண்மைக்காலத்திய
வெளியீடுகளில்‌ ஒளரங்க?ப்பால்‌ இடிக்கப்பெற்றது என்ற
செய்தியை நீக்கியே வெளியிடப்பெறுகின்றன, காரணம்‌
அயோத்தி பிரச்சினையாகிவிட்ட தால்‌, இவற்றைப்‌
பற்றியும்‌ பிரச்சினைக்குரிய செய்திகளை இனி வெளியிடு
வதை நிறுத்திக்கொள்ளலாம்‌ என்பதே.
உண்மையில்‌ ஒளரங்கசீப்‌ ஆட்சிக்காலத்தில்‌ காசி
விஸ்வநாதர்‌ கோயிலுக்கும்‌, மதுரை இருஷ்ணர்‌
கோயிலுக்கும்‌, ஏற்பட்ட அதே கதிதான்‌ அயோத்தி
இராமர்‌ கோயிலுக்கும்‌ ஏற்பட்டது. அயோத்து இராமர்‌
கோயில்‌ இடிக்கப்பெற்று அவ்விடத்தில்‌ பாபர்‌ மசூதி
கட்டப்பெற்றது. இன்றுள்ள நில்‌அளவை ஆவணங்கள்‌,
சர்வேரெக்கார்டுகள்‌ எல்லாம்‌ பிரிட்டிஷ்‌ ஆட்டுக்காலத்தில்‌
ஏற்பட்டவையாதலால்‌ அவ்விடத்திற்குரிய பட்டா பாபர்‌
மசூதி பெயரிலேயேகூட இருக்கலாம்‌.
முகம்மதிய மன்னர்களின்‌ படைபெடுப்புக்‌ காலங்‌
களிலும்‌ ஆட்?க்காலத்திலும்‌, போர்ச்சுசயார்‌ டச்சுக்‌
காரர்‌, பிரெஞ்சுக்காரர்‌, பிரிட்டிஷ்காரர்கள்‌ வந்து
ஆட்சியைப்‌ பிடித்துக்கொண்ட தொடச்சகாலத்திலும்‌
மிகப்பல இந்து கோயில்கள்‌ இடிக்கப்பட்டன என்பது
வரலாற்று உண்மை, தமிழ்நாட்டில்‌, சிதம்பரம்‌, ஸ்ரீரங்கம்‌,
மதுரை, காஞ்சிபுரம்‌ முதலிய கோயில்களில்‌ பல ஆண்டுகள்‌
வழிபாடு பாதிக்கப்‌ பெற்றிருந்தது. மயிலாப்பூர்‌
கபாலீசுவரர்‌ கோயில்‌ போர்ச்சுியரால்‌ இடிக்கப்பட்டது,
இப்போதுள்ள கோயில்‌ அதன்பின்னர்‌ புதிதாகக்‌ கட்டப்‌
"பட்டது.
ஊரன்‌ அடிகள்‌ 147

இவ்வாறு பழைய செய்திகளையெல்லாம்‌ Keays


கிளறிக்‌ சொண்டிருப்பதில்‌ பயனில்லை.

இந்த 21-ஆம்‌ நூற்றாண்டில்‌, உலகெங்கும்‌ சமயதி


துறை உட்படப்‌ பலதுறைகளில்‌ சீர்திருத்தங்கள்‌ தோன்றி
நடைமுறைப்படுத்தப்படும்‌ இத்நாளில்‌ இவைபோன்ற
பிரச்சினைகளைச்‌ சம்பந்தப்பட்டவர்களே சுமுகமாகதீ
தீர்த்துக்கொள்ளுவது நல்லது.

அயோத்திப்‌ பிரச்சினை நீதிமன்ற விசாரணையில்‌


உள்ளது.

அதற்குள்‌ இந்துக்கள்‌ இராமர்‌ பிறந்த இ! த்தில்‌


கட்டப்பெற்றிருந்த பாபர்‌ மசூதியை இடித்துவிட்டார்கள்‌.
இடிப்புச்குபின்‌ பிரச்சினை பெரிதாகிவிட்டது. இங்கு
அயோத்தியில்‌ பாபர்‌ மசூதி இடிச்கப்பட்டதைக்‌ கண்டோம்‌.
ஆப்கானிஸ்தானத்தில்‌ பாமியானில்‌ உலகப்‌ புகழ்பெற்ற
புத்தர்‌ சிலைகள்‌ தகர்க்கப்பட்ட தயும்‌ உலகம்‌ கண்டது.

இவைபோன்ற செயல்கள்‌ இனியும்‌ தடைபெறுவது


நாகரிகமல்று. ்‌

ஒன்று, நீதிமன்றத்‌ தீர்ப்பு வரும்வரை, இருசாராரும்‌


காத்திருக்கவேண்டும்‌. அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே
சமாதானம்‌ பேசித்‌ தீர்த்துக்கொள்வதோடு அதை
நீதிமன்ற உத்தரவாகவும்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.
இந்துசமய வழிபாடு உருவ வழிபாடு, இஸ்லாமிய
சமய வழிபாடு உருவமற்ற அருவ வழிபாடு இந்துசமய
வழிபாடு ஆரவார வழிபாடு, சில சமயங்களில்‌ மிகவும்‌
ஆரவாரமாகக்கூட இருக்கும்‌, பஜனைகள்‌, கோஷங்கள்‌,
வாத்தியங்கள்‌ முதலியன உண்டு. இஸ்லாமிய வழிபாடு
இவையெல்லாம்‌ இல்லாத மிகவும்‌ அமைதியான
148 சர்தியும்‌ மதமும்‌
வழிபாடு. இந்துக்‌ கோயில்களில்‌ திருவிழாக்‌ கூட்டம்‌
மிகுதி, அமைதி குறைவு. இஸ்லாமிய மசூதிகளில்‌
விழாக்‌ காலங்களிலும்‌ அமைதி உண்டு, இரு சமய வழி
பாட்டுத்‌ தலங்களும்‌ அருகருகே, அதுவும்‌ அடுத்து அடுத்து
ஒன்றை ஒன்று ஒட்டினாற்‌ போல்‌ இருப்பது இயல்பாகவே
பொருத்தமற்றதாகும்‌. எந்நாளும்‌ ஏதாவது Ag ஈறு
பிரச்சினைகளுக்கு இடங்‌ கொடுப்பதாகவே இருக்கும்‌.
சற்றுதி தள்ளி இருப்பதே இரு சாரார்க்கும்‌ இன்று மட்டு
மன்று, எல்லையற்ற நீண்ட எஇர்காலதிதிற்கும்‌ நல்ல
தாகும்‌.

மீத நல்லிணக்கம்‌
எம்மதமும்‌ சம்மதம்‌

மதநல்லிணக்கத்துற்கு இத்தய நாடு றந்த களம்‌.


இந்தியாவில்‌ மத சுதந்திரம்‌ அதிகம்‌. அதனால்தான்‌
இந்தியாவுக்கு வந்த மதங்கள்‌ இந்த அளவுக்குப்‌ பெருக
இஉன்றது. இந்து மதத்தில்‌ சுதந்திரம்‌ அதிகம்‌. கடவுள்‌
இல்லை என்றும்‌ சொல்லலாம்‌, நாத்திகம்‌ பேசலாம்‌.
கிறித்துவ இஸ்லாமிய சமயங்களில்‌ நாத்திகத்திற்கு
இவ்வளவு இடமில்லை, இஸ்லாமிய சமயத்தில்‌ நாத்திகத்‌
திற்கு இடமே இராது என்று எண்ணுகிறோம்‌. இந்து
மதத்திலும்‌ சைவம்‌ மிகவும்‌ சமரசம்‌ வாய்ந்தது. சைவத்‌
தின்‌ சமரசம்‌ என்றே ஒரு நூல்‌ எழுதினார்‌ இரு.வி.க.
சைவத்தின்‌ சமரசத்தை வேறு எங்கும்‌ காண இயலாது.
சைவத்தின்‌ சமரசம்‌ வைணவத்திலும்‌ கூட இல்லை.
சைவம்‌ சமயாதீதம்‌ பேசுகிறது. சமய அதிதம்‌ என்றொரு
நிலையை சைவ ஞானியார்‌ பேசியுள்ளனர்‌.
தமிழ்‌ ஞானிகள்‌ மிகுதியும்‌ மத நல்லிணக்கம்‌, ௪ம௰
ஒருமைப்பாடு, சமய சமரசம்‌ பே௫யுன்ளனர்‌
ஊரன்‌ அடிகள்‌ 149

ஒரு பெரிய அஊருக்குசி செல்ல ஆறு வழிகள்‌


இருப்பதைப்‌ போன்று ஆறு சமயங்களும்‌ அவற்றில்‌
நல்லது இது கெட்டது இது என்று வீண்‌ வாதம்‌ செய்‌
வோர்‌ மலையைப்‌ பார்த்துக்‌ குரைக்கும்‌ நாய்க்குச்‌
சமானமானவர்கள்‌ என்கிறார்‌ திருமூலர்‌.
ஒன்றது பேரூர்‌ வழியா றதற்குள
என்றது போல இருமுச்‌ சமயமும்‌
நன்றிது இதிது என்றுரை யாளர்கள்‌
குன்று குரைத்தெழு நாயையொத்‌ தார்களே.
- 1558
எச்சமயத்தோர்‌ சொல்லும்‌ இது ஒழிய நன்மை செயல்‌
என்று சமரசம்‌ பேசுறார்‌ ஒளவையார்‌.
புண்ணியம்‌ஆம்‌, பாவம்போம்‌; போனதாள்‌
செய்த அவை
மண்ணில்‌ பிறற்தார்க்கு வைத்த பொகுள்‌
எண்ணுங்கால்‌
ஈதுதிய வேறில்லை எச்‌ சமயத்தோர்‌ சொல்லும்‌
தீதுஒழிய நன்மை செயல்‌. - நல்வழி 40.
சமயங்களெல்லாம்‌ நதிகள்‌ (ஆறுகள்‌) போன்றன,
தஇகளெல்லாம்‌ சென்று சேர்கின்ற கடல்‌ போன்றவன்‌
இறைவன்‌ என்கிறார்‌ தாயுமானவர்‌.

வேறுபடும்‌ சமயமெல்லாம்‌ புகுந்து பார்க்கின்‌


விளங்கு பரம்பொருளே நின்‌ விளையாட்டு
அல்லால்‌
மாறுபடும்‌ கருத்து இல்லை; முடிவு இல்‌ மோன
வாரிதியில்‌ நஇித்திரள்போல்‌ வயங்கிற்‌ றம்மா1
— சல்‌ஆலின்‌ 26
இதே நதி கடல்‌ உதாரணத்தை வள்ளலாரும்‌
கூறுகிறார்‌.
150 சாதியும்‌ மதமும்‌

பொங்குபல்‌ சமயமெனும்‌ நதிக ளெல்லாம்‌


புகுந்துகலந்‌ திடநிறைவாய்ப்‌ பொங்கி ஓங்கும்‌
கங்குகரை காணாத சுடலே எங்கும்‌
கண்ணாகக்‌ காண்டுன்ற கதியே அன்பர்‌
தங்கநிழல்‌ பரப்பிமயல்‌ சோடை யெல்லாந்‌
தணிக்கின்ற தருவேபூந்‌ தடமே ஞானசி
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்‌
செய்யவல்ல கடவுளே தேவ தேவே,
- திருஅருட்பா 2118

வள்ளலாரின்‌ சமய சமரசத்திற்கு இரண்டு பாடல்கள்‌


சிறந்த எடுத்துக்காட்டுகளாகத்‌ இகழ்சின்றன.
பெருகியபேர்‌ அருளுடையார்‌ அம்பலத்தே நடிக்கும்‌
பெருந்தகைஎன்‌ கணவர்‌ இருப்‌ பேர்புகல்‌என்‌ கின்றாய்‌
அருகர்புத்தர்‌ ஆதிஎன்பேன்‌ அயன்‌ என்பேன்‌ நாரா
யணன்‌என்பேன்‌ அரன்‌ என்பேன்‌ ஆதிஏவன்‌ என்பேன்‌
பருகுசதா சிவம்‌என்பேன்‌ சத்திரிவம்‌ என்பேன்‌
பரமம்‌என்பேன்‌ பிரமம்‌என்பேன்‌ பரப்பிரமம்‌ என்பேன்‌
துருவுசுத்தப்‌ பிரமம்‌என்பேன்‌ துரியநிறை வென்பேன்‌
சுத்தசிவம்‌ என்பன்‌இவை சித்துவிளை யாட்டே. 5801

சிற்சபையில்‌ நடிக்கின்ற நாயகனார்‌ தமக்குச்‌


சேர்ந்தபுறச்‌ சமயப்பேர்‌ பொருந்துவதோ என்றாய்‌
பிற்சமயத்‌ தார்பெயரும்‌ அவர்பெயரே கண்டாய்‌
பித்தர்‌என்றே பெயர்படைத்தார்க்‌ கெப்பெயர்‌்ஓவ்‌
வாதோ
அச்சமயத்‌ தேவர்மட்டோ நின்பெயர்‌என்‌ பெயரும்‌
அவர்பெயரே எவ்வுயிரின்‌ பெயரும்‌அவர்‌ பெயரே
சிற்சபையில்‌ எம்கணவர்‌ செய்யும்‌ஒரு ஞானத்‌
திருக்கூத்துக்‌ கண்டளவே தெளியும்‌இது தோழி 5802
ஊரன்‌ அடிகள்‌ 151

நாயக நாயகி பாவதிதில்‌, தலைவி தோழிக்குச்‌


சொல்லுவதாகப்‌ பாடிய பாடல்கள்‌. நடராசப்பெருமான்‌ -
நாயகர்‌, தலைவர்‌. வள்ளற்பெருமான்‌ - நாயகி, தலைவி.
தலைவி மனமாகிய தோழிக்குக்‌ கூறுவதாகப்‌ பாடிய
பாடல்கள்‌,

இல்லையம்பலத்திலே திருநடனஞ்செய்யும்‌ உன்னுடைய


கணவர்‌ பெயரைச்‌ சொல்‌ என்று சேட்கிறாய்‌. அருகர்‌
என்பேன்‌ புத்தர்‌ என்பேன்‌ நாராயணன்‌ என்பேன்‌ அரன்‌
என்பேன்‌ ஆதிசிவன்‌ என்பேன்‌ சதாசிவம்‌ என்பேன்‌
சத்தியும்‌ எவமும்‌ என்பேன்‌ பரமம்‌ என்பேன்‌ பிரமம்‌
என்பேன்‌ பரப்பிரம்மம்‌ என்பேன்‌ சுத்தப்‌ பிரம்மம்‌
என்பேன்‌ துரிய நிறைவு என்பேன்‌ சுத்த சிவம்‌ என்பேன்‌
என்று அடுக்கடுக்காகச்‌ சொல்லி, இவை எல்லாம்‌ சித்து
விளையாட்டே என்று முடிக்கிறார்‌. இது முதற்பாடல்‌,
சிவன்‌, அரன்‌, நாராயணன்‌, பிரமம்‌, பரப்பிரமம்‌,
சதாசிவம்‌, சத்து வெம்‌, சுத்த சிவம்‌ முதலிய சைவ
வைணவ வேதாந்த இத்தாந்தப்‌ பெயார்களெல்லாம்‌ அகச்‌
சமயப்‌ பெயர்கள்‌, நம்‌ சமயப்‌ பெயர்கள்‌, இவை
சிற்சபையில்‌ நடிக்கின்ற நாயகனார்க்குப்‌ பொருந்தும்‌.
ஆனால்‌ அருகர்‌ என்பதும்‌ புத்தர்‌ என்பதும்‌ ௪மண
பெளத்தமாகிய புறச்‌ சமயப்‌ பெயர்களாயிற்றே, இவை
பொருந்துமா? என்று சேட்டிறாய்‌, பிற சமயத்தார்‌
பெயரும்‌ அவர்‌ பெயரே, பித்தர்‌ என்று பெயர்‌ பெற்ற
வருக்கு வேறு எப்பெயர்தான்‌ ஒவ்வாதோ? பிற சமயத்‌
தேவர்‌ பெயர்‌ மட்டுமா, உன்பெயரும்‌ என்பெயரும்கூட
அவர்‌ பெயரே, சிற்சபையில்‌ என்‌ கணவர்‌ செய்யும்‌ ஞானத்‌
இிருக்கூத்தைக்‌ கண்டால்தான்‌ இது தெளியும்‌ (தெரியும்‌)
தோழி என முடிக்கிறார்‌. இது இரண்டாம்‌ பாடல்‌.
“ஈஸ்வர்‌ அல்லா தேரே நாம்‌” என்ற பாடல்‌ தோன்று
வதற்குப்‌ பல்லாண்டுகளுக்கு முன்‌ பாடிய பாடல்‌ இது.
152 ஊரன்‌ அடிகள்‌

இன்னும்‌ ல ஆண்டுகளுக்குப்பின்‌ பாடியிருப்பாரேயானால்‌,


அருகர்‌ புத்தராதி என்பேன்‌ என்பதை இன்னும்‌ விரித்துக்‌
கர்ததர்‌ என்பேன்‌, அல்லா என்பேன்‌, இயேசு என்பேன்‌,
முகம்மதென்பேன்‌ என்று பாடியிருப்பார்‌. அருகர்‌
புத்தராதி என்பது அருகர்‌ புத்தர்‌ முதலான எனப்‌
பொருளபடும்‌. புத்தராதி என்பது, புத்தர்‌ முதலான
என்பது இயேசு முகம்மது ஆகிய பின்னவர்களையும்‌
உள்ளடக்கியது ஆகும்‌.
எம்மதமும்‌ சம்மதம்‌ என்கிறார்‌ வள்ளலார்‌.
எம்மத மிலையும்‌ நின்னருள்‌ நிலையில்‌
இலங்குதல்‌ அறிந்தனன்‌ எல்லாம்‌
சம்மதம்‌ ஆக்கிக்‌ கொள்கின்றேன்‌ அல்லால்‌
தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன்‌ பாதம்‌ அறியநான்‌ அறியேன்‌
சிறிதும்‌இங்‌ இனித்துயர்‌ ஆற்றேன்‌
இம்மதிக்‌ கடியேன்‌ குறித்தவா றுள்ள
தியற்றுவ துன்கடன்‌ எந்தாய்‌, — 3639
வள்ளலாருக்குப்பின்‌ வந்த காந்தியடிகள்‌ ஈஸ்வர்‌
அல்லா தேரே நாம்‌”*, ஈஸ்வரன்‌ என்பதும்‌ அல்லா என்பதும்‌
உன்னுடைய திருப்பெயர்கள்‌ என்றார்‌. நாள்தோறும்‌
தன்னுடைய பிரார்த்தனைக்‌ கூட்டத்தைச்‌ சர்வ சமயப்‌
பிரார்த்தனையுடனேயே நடத்தினார்‌.

காந்தியடிகளின்‌ டரான வினோபா பாவே


“The era of religion and politics is over;
The era of Science and spirituality has begun’’.
“சமயம்‌, அரசியல்‌ ஆகியவற்றின்‌ காலம்‌ முடிந்து
விட்டது.
ஆன்மீகம்‌, அறிவியல்‌ ஆலயேவற்றின்‌ காலம்‌
தொடங்லவிட்டது.!?
ஊரன்‌ அடிகள்‌ 153

என்று கூறினார்‌. இப்புதிய சூத்திரம்‌ இந்தியப்‌ பிரதமா்‌


பண்டித நேருவுக்கு மிகவும்‌ பிடித்தமான சூத்திரம்‌.
சாதிகள்‌ அறவே ஒழியவேண்டும்‌, அதைப்போல்‌
மதங்களும்‌ அறவே ஒழியவேண்டும்‌, சாதிகளே இருக்கக்‌
கூடாது, மதங்களே இருக்சுக்கூடாது என்பதுதான்‌
வள்ளலாரின்‌ கருத்து, இக்கருத்தைப்‌ பிரதிபலிப்பது
போன்று இருக்கிறது வினோபாவின்‌ புதிய சூத்திரம்‌.

எம்மதமும்‌ சம்மதம்‌ என்று வள்ளலார்‌ சொல்வதை,


இன்று இந்துக்களில்‌ பலர்‌ சொல்வதை ஈஸ்வர்‌ அல்லா
தேரே நாம்‌ என்று காந்தியடிகள்‌ சொல்வதை ஏனைய
சமயத்தாரும்‌ சொல்லத்‌ தொடங்கினால்‌ அப்போதே மத
நல்லிணக்கம்‌ வந்துவிடாதா?

சமயச்‌ சார்பின்மை
நம்‌ நாட்டு அரசு (இந்திய அரசு) சமயச்‌ சார்பின்‌
மையைக்‌ கடைப்‌ பிடிக்கிறது, சமயச்‌ சார்பற்ற அரசு,
Gregor சுவர்ண்மெண்ட்‌, ஆக உள்ளது.
சமயச்சார்பின்மை (Secularism - செக்குலரிசம்‌)
என்பதன்‌ பொருளைச்‌ சரியாகப்‌ புரிந்து கொள்ள
வேண்டும்‌. சமயமே இல்லாதது, சமயமே இன்மை செச்‌
குலரிசம்‌ அன்று. எந்த ஒரு சமயத்தையும்‌ சாரிந்து
இல்லாமை, சார்பின்மை, எல்லாச்‌ சமயங்களையும்‌ சம
மாகக்‌ கருதி ஒழுகும்‌ நடுவு நிலைமைதான்‌ செக்குலரிசம்‌,
தங்களை இஸ்லாமிய நாடுகள்‌ என்று அறிவித்துக்‌
கொண்ட நாடுகள்‌ பல, இஸ்லாமிய நாடுகளின்‌ கூட்ட
மைப்பில்‌ 57 நாடுகள்‌ உள்ளன என்று கூறப்பெறுகிறது.
154 சாதியும்‌ மதமும்‌

கிறித்துவ நாடுகள்‌ என்ற அறிவிப்பு வெளிப்படையாக.


பகிரங்கமாக இல்லை.

இஸ்லாமிய நாடுகள்‌ பலவற்றைவிட, கிறித்துவ


நாடுகள்‌ என அறிவிக்கப்‌ பெறாவிடினும்‌ இறித்துவத்திற்கு
முக்கியத்துவமும்‌ முதன்மையும்‌ அளிக்கும்‌ பல நாடுகளை
விடப்‌ பெரிய நாடாகிய இந்தியா, தன்‌ மண்ணின்‌
மதமான, பெரும்பான்மை மதமான இந்துமத நாடாக
அறிவித்துக்‌ கொள்ளாமல்‌, மதச்சார்பற்றதாய்‌, பெரும்‌
பரன்மை மதத்திற்குத்‌ தராத பல சலுசைகளைச்‌ இறு
பான்மை மதங்களுக்கு அளித்து (அவற்றின்‌ வளர்ச்சிக்கு
ஆதரவளித்து) வருகிறதே, அதுதான்‌ பெருமை, இறப்பு;
அதுதான்‌ இந்துயிசம்‌, இந்துத்துவம்‌.
இந்தியாவின்‌ இழ்தப்‌ பெருந்தன்மைப்‌ போக்கு, வேறு
பல நாடுகளில்‌ காணப்பெறாதது, வேறு பல சமயங்களில்‌
காணப்பெறாதது. இதைப்‌ பிற நாடுகளும்‌ பிற சமயங்‌
களும்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌.

தம்‌ இந்திய அரசும்‌, சிறுபான்மை மதங்களுக்கு அதிக


சலுகைகளும்‌ அதீதச்‌ சலுகைகளையும்‌ அளித்து அவற்றின்‌
வளர்ச்சிக்கு உதவி, பெரும்பான்மை மதமர௫ய மண்ணின்‌
மதத்திற்கு அத்தகைய சலுகை முதலியவற்றை அளிக்காமல்‌
வளர்ச்சிக்கு இடையூறாக இருத்தல்‌ ஆட்சி அறமன்று.
“சமன்செய்து ஈர்‌ தூக்கும்‌ கோல்போல்‌ அமைற்து ஒருபால்‌
கோடாமை சான்றோர்க்கு அணி' * - 118
என்பது இருவள்ளுவர்‌ திருக்குறளில்‌ நடுவுநிலைமை
அதிகாரக்‌ குறள்‌.

இக்குறட்பாவில்‌ சான்றோர்க்கு என்பதை அரசுக்கு


என்றோ, சமயச்‌ சார்பின்மைக்கு என்றோ மாற்றிக்‌
ஊரன்‌ அடிகள்‌ 155

கொண்டால்‌ அரசுக்கும்‌, சமயச்சார்பின்மைக்கும்‌


பொருத்தமானதாகும்‌.
சமன்செய்து சீர்தூக்கும்‌ கோல்போல்‌ அமைநீது
ஒருபால்‌ கோடாமை சமயச்சார்பற்‌ற அரசுக்கு அணி,

அரசும்‌ மதத்தலைவர்களும்‌ மக்களும்‌ ஒல்லும்‌ வகை


எல்லாம்‌, அரசின்‌ மதச்சார்பின்மை வெல்லும்‌ வசை
செய்தல்‌ வேண்டும்‌.

மிகக்‌ கொடுமையானது எது?


சாதியா? மதமா?
மதம்‌ அவரவர்‌ விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக்‌
கூடியது. இந்து ஒருவர்‌ கிறித்துவராக மாறலாம்‌,
முஸ்லிமாக மாறலாம்‌. அவ்வாறே அவர்களும்‌ இந்துவாக
மாறலாம்‌. மாறிய மதம்‌ பிடிக்கவில்லையென்றால்‌
மீண்டும்‌ தாய்மதம்‌ திரும்பிவிடலாம்‌. சம்பிரதாயங்களும்‌
சட்டங்களும்‌ மதமாற்றத்திற்கு இடங்கொடுக்கின்‌ றன.
சாதி அவரவர்‌ விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளக்‌
கூடியதன்று. செட்டியார்‌ ஒருவர்‌ முதலியாராக மாற
விரும்பினால்‌ மாறமுடியாது. முதலியார்‌ செட்டியாராக
மாறமுடியாது. சாதிமாற்றத்திற்குச்‌ சம்பிரதாயங்களிலோ,
சட்டங்களிலோ இடமில்லை.
செட்டியாராகப்‌ பிறந்தவர்‌ கடைசிவரை செட்டியா
ராகவே வாழவேண்டும்‌, செட்டியாராகவே சாகவேண்டும்‌.
முதலியாரும்‌ அப்படியே. வேண்டுமானால்‌ அடுத்த
பிறப்பில்‌ என்னை முதலியாராகப்‌ பிறப்பி, செட்டியாராகப்‌
Yond என்று ஆண்டவனை வேண்டிக்கொள்ளலாம்‌.
156 சாதியும்‌ மதழும்‌
இப்பிறப்பில்‌ சாதி மாறுவது முடியாது. எந்தச்‌ சாதியிற்‌
பிறந்தோமோ அந்தச்‌ சாதியிலே சாகவேண்டும்‌ செத்த
பின்பும்‌ கருமாதி இதி போன்றவை அந்த அந்தச்‌ சாதி
வழக்கப்படியே நடக்கும்‌, சாதி பிறப்போடு ஒன்றுபடுத்தப்‌
பட்டு விட்டது அதனால்‌ பிறப்பு முதல்‌ இறப்பு வரை
மாறாமல்‌ இருக்கிறது. மாற்றிக்‌ சொள்ள முடிவதில்லை,
மதமோ பிறப்போடு ஒன்றுபடுத்தப்படவில்லை, ஒரு
மதத்தில்‌ பிறந்தவர்‌ வேறு மதத்தைத்‌ தழுவலாம்‌,
மீண்டும்‌ பிறந்த மதத்திற்கே திரும்பலாம்‌. மதத்தை எந்த
நேரமும்‌ மாற்றிக்‌ கொள்ளலாம்‌, சாதியை எத்தக்‌ காலத்‌
திலும்‌ மாற்றிக்‌ கொள்ள முடியாது...
சாதிப்பிடிப்பு இறுக்கமானதா? மதப்பிடிப்பு (சமயப்‌
பிடிப்பு) இறுக்கமானதா? என்பதை இதிலிருந்தே தெரிந்து
கொள்ளலாம்‌.
சாதிக்‌ கொடுமைகளால்தான்‌ மதமாற்றக்‌ சொடுமை
நிகழ்கிறது.
சாதியா? மதமா? எது Wad கொடுமையானது
என்பதை இவற்றிலிருந்தே தீர்மானித்துக்‌ கொள்ளலாம்‌.

சாதிக்கொடுமையை ஒழிப்போம்‌!
சமயசமரசம்‌ கொள்வோம்‌!!
ஊரன்‌ அடிகள்‌ 157

இந்நூலாசிரியரின்‌ சாதி சமய ஒழுக்கம்‌


இத்நாலாிரியர்‌ நாட்டால்‌ இந்தியர்‌
(நேஷனாலிட்டி-இந்தியன்‌
பிறற்த மதத்தால்‌ : இந்து, சைவா்‌
நடைமுறை ஒழுக்சுதிதால்‌: சமரச சுத்த சன்மாரீக்கி
பிறந்த சாதியால்‌ : பரம்பரைச்‌ சுத்த சைவ
வேளாளர்‌
நடைமுறை ஒழுக்கத்தால்‌: அதிவர்ணாச்சிரமி

வருணம்‌ ஆஸ்ரமம்‌ ஆகிய வேறுபாடு பாராது


எல்லாரிடமும்‌ சமமாகப்‌ பழகும்‌ துறவிகளை அதி
வர்ணாஸ்ரமி'” என்று குறிப்பிடுவர்‌. வருணம்‌ ஆரரமம்‌
சுடத்தவர்‌ என்று பொருள்‌. கோடகநல்லூ? «ber
சுவாமிகள்‌ அற்தணர்‌, ஆயினும்‌ அதிவரீணாச்ரமியாகதி
அகழ்த்தார்‌. யாமும்‌ அதிவர்ணாச்சிரமி, வருணம்‌ ஆசிரமம்‌
மட்டுமன்றி மதமும்‌ (சமயமும்‌) நாம்‌ பார்ப்பதில்லை,
ஆதலால்‌ அதிமதவர்ணாச்ரமி என்றுகூடச்‌ சொல்லலாம்‌,
எல்லா மதத்தாரோடும்‌ சாதியாரோடும்‌ நாம்‌ சமமாசுப்‌
பழகுவோம்‌. வேறுபாடின்றிப்‌ பழகுவோம்‌. எல்லாரிடதி
திலும்‌ உண்போம்‌. ஆனால்‌ ஒரு நிபந்தனை, ஒரு கட்டுப்‌
பாடு. அவர்‌ முழுக்க முழுக்கச்‌ சைவ உணவினராக இருக்க
வேண்டும்‌. வீடு முழுவதும்‌ உணவில்‌ சைவமாக இருக்க
வேண்டும்‌. பரம்பரைச்‌ சைவ உணவினராகக்கூட
இருக்க வேண்டுமென்பதஇல்லை, தேற்றுவரை புலால்‌
உண்டிருந்தாலும்‌ இன்றிலிருந்து புலால்‌ மறுத்தவராக
மாதினாற்‌ போதும்‌.
நாற்பது வருடங்களாக நமக்கு நண்பராக உள்ள
பலரது சாதி இன்னதென்று இன்றுவரை நமக்குதி
158 சாதியும்‌ மதமும்‌

தெரியாது, சாதி மதம்‌ கேட்டு நாம்‌ பழகுவதில்லை,


வள்ளலார்கூறும்‌ அகவினம்‌ மட்டும்‌ பார்ப்பதுண்டு,
* அகவினத்தார்‌ இடங்களில்‌ உண்பதுண்டு. புழவினத்தாரி
இடங்களில்‌ உண்பதில்லை. சமபநற்தபோஜனத்‌தஇில்‌ புற
வினத்தாரைத்‌ தள்ளுவதில்லை,

வேண்டுகோள்‌

சாதி மதம்‌ - இவ்விரண்டும்‌ இன்று உணர்ச்சிமிக்க


செய்திகளாக (விஷயங்களாக) உள்ளன. இவற்றைப்‌ பற்றி
நூல்‌ எழுதும்போது விழிப்பாக (ஜாக்ரதையாக) எழுத
வேண்டியுள்ளது. பழைய நிலைமைகளைக்‌ கூறும்போது
வண்ணார்‌, பரிகாரி, பள்ளர்‌, பறையர்‌ முதலிய சாப்‌
பெயர்களைப்‌ பல இடங்களில்‌ அப்படியே வழங்கி
யுள்ளோம்‌. இப்போதெல்லாம்‌ பொதுவாழ்வில்‌ அவ்வாறு
வழங்கும்‌ வழக்கமில்லை. சலவையாளர்‌, மூடிஇருத்து
வோர்‌, தாழ்த்தப்பட்ட மக்கள்‌, தலித்‌ மக்கள்‌ என்பனவே
வழக்கிற்கு வந்து வழங்குகின்றன. ஆயினும்‌ பழஞ்செய்தி
களைக்‌ கூறும்போது பழம்பெயர்களை வழங்கினால்தான்‌
தெரியும்‌ என்பதால்‌ வழஙிகியுள்ளோம்‌. அன்பர்கள்‌
இதனை வேறாகக்‌ கருதவேண்டாம்‌ என்பது தம்‌ அன்பான
வேண்டுகோள்‌.
மதவிடயத்திலும்‌ யாரையும்‌ குறைகூற வேண்டும்‌
என்ற எண்ணமில்லை. குறையிருப்பின்‌ அன்பர்கள்‌
பொறுத்துக்கொள்ளவும்‌ எடுத்துக்காட்டவும்‌ வேண்டு
கிறோம்‌,
* புலால்‌ உண்போர்‌ புறவினத்தார்‌. புலால்‌ மறுத்தோரீ
அகவினத்தார்‌ என்பது வள்ளலார்‌ கொள்கை,
சாதியும்‌ மதழம்‌ சமயழம்‌ பொய்யென
ஆநியில்‌ உணர்த்திய அநட்ரபருஞ்ஜோதீ
௮ வள்ளலார்‌
திருஅருட்பா
அருட்பெருஞ்ஜோதி அகவல்‌ 4615 (211-12)

சாதிகள்‌ இல்லையடி பாப்பா


பாரதியார்‌

எம்மதமும்‌ சம்மதம்‌
௪ வள்ளலார்‌
திருஅருட்பா 3639

You might also like