You are on page 1of 3

உயில் சாசனம்

2023 ஆம் வருடம் ___________________ மாதம் ________ நாள், வேலூர்


மாவட்டம், காவேரிப்பாக்கம், சிப்பாய் முனுசாமி தெரு, கதவு எண் 14 /6
என்ற வட்டில்
ீ வசிக்கும் வேலாயுதம் அவர்களின் குமாரர் சுமார் 74
வயதுள்ள திரு.பெருமாள் ஆகிய நான், பிறர் தூண்டுதல் ஏதுமின்றி
என்னுடைய சுய நினைவுடன் எழுதி வைக்கும் உயில் சாசனம்
என்னவென்றால்,

இதன் கீ ழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள


சொத்துகளானது நான் எனது சொந்த வருவாய் மற்றும் சேமிப்பைக்
கொண்டு பதிவு பெற்ற ஆவணங்கள் மூலம் கிரையம் பெற்று, அது முதல்
சர்வ சுதந்திரமாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வருகிறேன். நான் என்
வாழ்நாளில் காவிரிப்பாக்கம் BDO ஆபிசில் பணிபுரிந்த காரணத்தினால்,
எனது கீ ழ் விவரிக்கப்பட்டுள்ள சொத்துக்களை, எனது மனைவி
திருமதி.ரமணி அவர்களின் பேரில் கிரயம் பெற்றேன்.
தற்போது எனக்கு வயதாகிவிட்ட காரணத்தினால் நான் நல்ல
நிலையில் உள்ள போதே எனக்கு பாத்தியப்பட்ட அசையும் மற்றும்
அசையா சொத்துக்களை பொறுத்து என்னுடைய ஆயுட் காலத்திற்குப்
பிறகு என்னுடைய வாரிசுகளுக்குள் எந்தவிதமான சண்டை சச்சரவுகள்
ஏற்படக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இந்த உயில்
சாசனம் எழுதி வைத்துள்ளேன்.

எனக்கு திருமதி.ரமணி என்கிற மனைவியும் திரு.லோகநாதன்


என்ற மகனும் திருமதி.வளர்மதி என்ற மகளும் உள்ளனர். எனது
மக்களுக்கு எனது வருவாய் மற்றும் சேமிப்புகளைக் கொண்டு நல்ல
முறையில் திருமணம் செய்து வைத்து, அவரவர்கள் அவர்கள்
குடும்பத்துடன் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது எனக்கு வயதாகிவிட்ட காரணத்தினால் எனது


காலத்திற்குப் பிறகு இந்த உயிரில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை, எனது
மகள் திருமதி வளர்மதி மட்டுமே அனுபவிக்கும் பொருட்டு இந்த உயில்
ஆவணம் எழுதி வைக்கப்படுகிறது. அதன்படி சொத்து விவரத்தில்
கண்டுள்ள ஒன்றாவது மற்றும் இரண்டாவது ஐட்ட சொத்தை எனது
காலத்துக்குப் பின் எனது மகள் திருமதி.வளர்மதி பூரணமாக சகல
பாத்தியதைகளுடன் அடைந்து புத்திர பவித்திர பாரம்பரியமாக ஆண்டு
அனுபவித்துக் கொள்வதாக இந்த உயில் சாசனம் எழுதி வைக்கிறேன்.

இந்த உயில் சாசனத்தில் கண்ட சொத்து எனக்கே பாத்தியப்பட்டது


என்றும் அதில் வேறு எவருக்கும் எவ்வகை உரிமையும் பாத்தியமும்
சம்பந்தமும் கிடையாது என்றும் இந்த உயில் சாசனத்தை எழுதி வைக்க
எனக்கு பூரண உரிமை உள்ளது என்றும் உறுதி கூறுகிறேன்.

இந்த உயில் சாசனம் என்னுடைய ஆயுட் காலத்திற்குப் பிறகு


நடைமுறைக்கு வரவேண்டியது. இதை நான் வேண்டும்போது ரத்து
செய்யவும் மாற்றி எழுதவும் திருத்தி அமைக்கவும் எனக்கு பூரண
உரிமை உண்டு.

இதுவே நான் எழுதி வைக்கும் உயில் சாசனம் ஆகும் இந்த படிக்கு


நான் என்னுடைய பூரண சம்மதத்தின் பேரிலும் பிறருடைய தூண்டுதல்
இல்லாமலும் நல்ல ஞாபகசக்தியுடனும் என் விருப்பப் படியும் எழுதி
வைத்த உயில் சாசனம்.

சொத்து விவரம்

ஒன்றாவது ஐட்டம்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் பதிவு மாவட்டம், காவேரிப்பாக்கம்


சார்பதிவகம், அரக்கோணம் வட்டம், காவேரிப்பாக்கம் கிராமத்தில், கிராம
நத்தம் சர்வே நம்பர் 1176A/1 B யில், 8 வார்டு கோட்டை தெரு, கதவு எண்
53A வட்டில்,
ீ கண்ணப்ப நாயக்கர் பாரியால் பச்சையம்மாள் வட்டிற்கு

கிழக்கு,

வெள்ளை நாயக்கர் குமாரர் வி.நரசிம்மன் நாயக்கர் வட்டிற்கும்



முனுசாமி நாயக்கர் குமாரர் ராமு வட்டிற்கும்
ீ மேற்கு, கோட்டை
தெருவுக்கு வடக்கு, சொக்கலிங்கம் பாரியால் மயிலாபாய் அம்மாள்
வட்டிற்கு
ீ தெற்கு, இதன் மத்தியில் மேலண்டை சுவர் நீங்களாக
கீ ழண்டை சுவர் பாத்தியம் உட்பட தெரு பக்கம் கிழக்கு மேற்கு 21 ¾ அடி
பின்பக்கம் கிழக்கு மேற்கு 22 அடி வடக்கு தெற்கு வடவண்டை சுவர்
பாத்தியம் உட்பட 51 1/4 இந்த அளவுள்ள 1134 சதுர அடி மனையும்
அதன்மேல் உள்ள கட்டிடமும்.

இரண்டாவது ஐட்டம்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் பத்திரப்பதிவு மாவட்டம்,


காவேரிப்பாக்கம் சார் பதிவகம், சேர்ந்த மேற்படி காவேரிப்பாக்கம்
யூனியனுக்கு உட்பட்ட நெ.32 சேரி கிராமத்தில் நஞ்சை சர்வே நம்பர்
494/3B ஏக்கர் 1.41 சென்ட் நிலம் இதற்கு சக்குபந்தி - ஏரி கால்வாய்க்கு
கிழக்கு, காலனி ஜெயராமன் நிலத்திற்கு மேற்கு, அழகேச ரெட்டி
வகையறா நிலத்திற்கு வடக்கு, இஸ்மாயில் சாய்வு நிலத்திற்கு தெற்கு,
இதன் மத்தியில் மேற்படி நிலம்.

உயில் எழுதி வைப்பவர்


(திரு பெருமாள்)
சாட்சிகள்:

1.

2.

You might also like