You are on page 1of 4

செட்டில் மெண்ட பத்திரம்

2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29 தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம்

கொத்தமங்கலம் கிராமம் மஜரா நெருஞ்சி பேட்டையில் வசிக்கும் லேட். முத்தப்பன் மகன் ஜான்

பிரிட்டோ ஆகிய உமக்கு

ஷையூரில் வசிக்கும் முத்தப்பன் பெண் மகள் அல்போன்சா மேரி ஆகிய நான்

எழுதிக்கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரம் என்னவெனில்

கீழ்கண்ட சொத்து விவரத்தில் கண்டுள்ள சொத்தானது எனக்கும் என் சகோதர

சகோதரிகள் லேட். சிலுவை முத்தம்மாள் , லேட். சிலுவை ரத்தினம் ஆகியோருக்கு சுயார்ஜிதமாய்

கடந்த 20.03.2008 ம் தேதியில் செட்டில்மென்ட் வகையில் பாத்தியப்பட்ட சத்தியமங்கலம்

சார்பதிவாளர் அலுவலகத்தில் 2008 ஆம் வருடத்திய 1378 எண்ணாக பதிவு செய்யப்பட்ட

செட்டில்மெண்ட் ஆவணத்தின் படி பாத்தியப்பட்டது. அவர்கள் காலமான பின் வாரிசுரிமை

எனக்கும் ,உமக்கும், நம் உடன் பிறந்த சகோதரர்கள் சந்தியாகு,சேவியர் க்கு பாத்தியப்பட்ட தாகும்.

கீழ்க்கண்ட சொத்தில் தாங்கள் செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும் போது அந்த

செட்டில்மென்ட் குறித்து தங்களுக்கும் நம் சகோதரர்கள் அனைவரின் பின்னிட்ட வாரிசுகளுக்கும்

எவ்விதமான பாத்திய சம்பந்தமும் பின் தொடர்ச்சியும் கிடையாது என்றும் இந்த சொத்தின்

சுவாதீனம் ஏற்றுக் கொண்ட படியால் இதை மாற்றவோ ரத்து செய்யவும் உங்களுக்கு அதிகாரம்
இல்லை என்றும் அப்படி ரத்து செய்தாலும் அது செல்லத்தக்கது அல்ல என்றும் நீங்கள் கொடுத்த

செட்டில்மெண்ட் மூலம் எனக்கு இந்த சொத்தினை சர்வ சுதந்திரமாய் தானாதி விற்கிரையங்களுக்கு

பாத்திரத்துடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள முழு உரிமை எனக்கு உள்ளது.

நீ என் உடன் பிறந்த சகோதரன் உன் மீது எனக்கு இருக்கப்பட்ட அன்பு அபிமானத்தின்

பெயரிலும் நீ நன்றாக வாழவேண்டும் என்கின்ற என் நல்ல எண்ணத்திலும் உமக்கு ஓர் ஆதரவு

செய்துவைக்க வேண்டும் என்கின்ற என் நெடுநாளைய ஆசை நாளும் எனக்கு மேற்கண்ட வகையில்

சொந்தமாகி என் அனுபோக சுவாதினத்திலிருந்து வரும் கீழ்கண்ட சொத்தினை இந்த

செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் உமக்கு நான் எழுதி வைத்துக் கீழ்கண்ட செட்டில்மெண்டையும்

இன்றே உமக்கு சுவாதீனம் செய்துள்ளேன்.

நீ கீழ்க்கண்ட சொத்தை இன்றே உமக்கு சுவாதீனம் ஏற்றுக் கொண்டபடியால் இனி நீயே

கீழ்கண்ட இடத்தை சர்வ சுதந்திரமாய் தானாதி விக்கிரகங்களுக்கு வாத்தியத்துடன் ஆண்டு

அனுபவித்து கொள்ளவேண்டியது. இனி கீழ்கண்ட சொத்தை குறித்து எனக்கும் என் பின்னிட்ட

வாரிசுகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் பின் தொடர்ச்சியும் கிடையாது .

சொத்து மீது எவ்விதமான வில்லங்கமும் இல்லை இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை

இன்று அமலுக்கு கொண்டு வந்து கீழ்க்கண்ட சொத்தை இன்று உமக்கு சுவாதீனம் செய்து நீ இன்றி

உனது சுவாதீனம் ஏற்றுக் கொண்டபடியால் இதை மாற்றவோ ரத்து செய்யவோ எனக்கு அதிகாரம்

இல்லை அப்படி ரத்து செய்தாலும் அது செல்லத்தக்கதல்ல.


நான் இந்த செட்டில் மென்ட் பாத்திரத்தினை யாருடைய தூண்டுதலும் இன்றி என்

சுயநினைவுடன் முழு சம்மதத்தின் படியும் சாட்சிகளின் முன்னிலையில் எழுதிக்கொடுத்த

செட்டில்மெண்ட் பத்திரம் இதுவாகும்.

சொத்து விவரம்

கோபிரிடி சத்தி சப்ரிடி சத்தியமங்கலம் தாலுக்கா, கொத்தமங்கலம் கிராமம் மஜரா

நெருஞ்சிப்பேட்டை ஊர்க்கட்டில் நத்தம் எண்.123/3 தற்கால நத்தம் எண்.144/9 (மனைவரிப் பட்டா

எண்.227) இதில்

முதல் தாக்கு:- ஜான்டிபிரிட்டோ பாக வீட்டுக்கும் (வடக்கு) 5 அடி அகல தென்வடல்

நடைபாதைக்கும் (கிழக்கு) கிழமேல் ரோட்டுக்கும் (தெற்கு) தென்வடல் ரோடுக்கும் (மேற்கு) இதன்

மத்தியில் கிழமேல் வடபுரம் 20 அடி தென்புரம் 20 அடி தென்வடல் கிழபுரம் 14/% அடி மேபுரம் 14

அடி அளவுகள் கொண்ட 2874 சதுரடி இடமும் இதில் உள்ள ஓட்டு வில்லை விடும் இதன் கதவு

நிலவு கட்டுக்கோப்பும் சகல கட்டிட சாமான்கள் சகல வித மின்சார இணைப்புகள் குடிநாக் குழாய்

இணைப்புகள் சகிதம்.
இரண்டாம் தாக்கு:- மேல்கண்ட முதல் தாக்கு வீட்டுக்கும் எங்களுக்கும் உங்களுக்கும் சொந்தமான

காலி இடத்துக்கும் மத்தியில் 5 அடி அகலத்தில் 56 அடி நீளத்தில் 280 சதுரடி தென்வடல்

நடைபாதையில் பொதுவில் 4 ல் 1 பங்கு 70 சதுரடி நடைபாதை இடமும்.

ஆக மேல்கண்ட தாக்குகள் 2 க்கும் ஒட்டு 357% சதுரடி 33.21 சதுர மீட்டர் இடமும் இடத்துக்குண்டான

மாமூல் தடபாத்திய உரிமைகள் சகிதம். மின் இணைப்பு எண்.113 ஐ நீரும் நாங்களும் பொதுவில்

அனுபவித்துக் கொள்ள வேண்டியது.

மேலே கண்ட பூரா சொத்தின் மதிப்பு

ரூபாய்.36,000/

இதில் ஏற்கனவே உமக்கு உரிமை உள்ள 6 ல் 3 பங்கு நீங்கலாக

எங்கள் பாத்தியம் பொதுவில் 6 ல் 3 பங்கு இதன் மதிப்பு

ரூபாய்.18,000/

You might also like