You are on page 1of 4

கட்டுமான ஒப்பந்தம்

2022-ம் வருடம் ஜூன் மாதம் 16-ம் தேதி

திருநெல்வேலி மாவட்டம்-627758, சங்கரன் கோவில் தாலூக்கா,வாசுதேவநலூர், சண்முகா நகர், கதவு


எண்.54 என்ற முகவரியில் வசிக்கும் திரு.கருப்பன் கவுடர்(லேட்)அவர்களின் குமாரர்
திரு.K.கருப்பசாமி(1) (PAN NO.AWJPK3298B) மற்றும் அதே முகவரியில் வசிக்கும்
திரு.கருப்பசாமி அவர்களின் மனைவி திருமதி.K.பாக்கியலட்சுமி(2) (ஆதார் எண்.3089 9956 0999)
1 வது பார்ட்டி ஆகிய உங்களுக்கு,

கோயமுத்தூர் மாவட்டம்—641029, கோயமுத்தூர் வடக்கு, ஜி.என்.மில்ஸ் அஞ்சல், நெஸ்ட் அவென்யூ,


கதவு எண்.3 என்ற முகவரியில் வசிக்கும் திரு.மாணிக்கம் அவர்களின் குமாரர்
திரு.M.குமாரவாசகம் (ஆதார் எண்.3124 6991 8695)
( 2 வது பார்ட்டி ஆகிய நான் எழுதிக் கொடுக்கும் கட்டுமான ஒப்பந்தம் என்னவென்றால்,
1 வது பார்ட்டி 2 வது பார்ட்டி

1.

2.

கோயமுத்தூர் மாவட்டம், காந்திபுரம் சார்பதிவு மாவட்டம், வெள்ளக்கிணர் கிராம்ம், க.ச.40/1C, PART,


40/1D PART நெ.காலைகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினரால் VELLAKINAR SCHEME
PHASE III என்ற பெயரில் லேயவுட் செய்த மனையைடங்களாகப் பிரித்துள்ளதில் 8004/2017 நெ
கிரைய சாசனப்படி உள்ள பிளாட் நெ.LIG-380 என்ற மனையிடத்தில் கடந்த 2019-ம் வருடம்
நவம்பர் மாதம் தங்களுக்கு சுமார் ……………. சதுரடிகளில் ஆர்.சி.சி.குடியிருப்பு 2 வது
பார்ட்டியாகிய எனது தலைமையிலும் மேற்பார்வையில் நான் தங்களிடம் விற்பனை செய்த வீடு
தற்போது 03 (மூன்று) வருடங்கள் மட்டுமே முடிந்த நிலையில் 1 வது பார்ட்டியாகிய தாங்கள் கூறிய
புகாரின் அடிப்படையில் மேற்படி குடியிருப்பின் உட்புறம் அனைத்து அறைகளிலும் சுற்றுப்புற
சுவற்றில் விரிசல் அதிகமாக ஏற்பட்டும், நிலவு சேர்ந்த இடங்களில் கலவை பாளங்களாக பெயர்ந்தும்,
குளியலறைகளில் ஓதம் அடித்தும் காணப்படுகிறது என்பதனை 2 வது பார்ட்டியாகிய நான் முழு
மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்.

மேற்படியான குறைகளை 2 வது பார்ட்டியாகிய நான் எனது சொந்த செலவில் நல்ல முறையில்
இனிவரும் காலங்களில் எந்தவித சேதாரமும் ஏற்படாத வண்ணம் கட்டி முடித்துத் தருகிறேன் என்றும்
இனி வரும் காலங்களில் மேற்படி வீட்டில் எந்தவிதமான விரிசல், வெடிப்புக்சள், தளம் இறங்குவது
போன்று ஏதும் 10 ஆண்டுகளுக்கு நடக்காது என்று இந்த ஒப்பந்தத்தின் மூலம் 1 வது பார்ட்டியாகிய
தங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

மேற்படி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை 2 வது பார்ட்டியாகிய நான் எதிர் வரும் 2022-ம்
வருடம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் செய்து முடித்துத் தருகிறேன் என்றும் இதன் மூலம் உறுதி
செய்கிறேன்.

இப்படிக்கு யாருடைய வற்புறுத்தலும் தூண்டுதலும் இல்லாமல் 2 வது பார்ட்டி ஆகிய நான் என் சுய
நினைவுடன் 1 வது பார்ட்டியாகிய தங்களுக்கு கீழ்காணும் சாட்சிகள் முன்னிலையில் எழுதிக்
கொடுக்கும் கட்டுமான ஒப்பந்தப் பத்திரம் இதுவே ஆகும்.

1 வது பார்ட்டி 2 வது பார்ட்டி

1.

2.

சாட்சிகள்:

1.

2.

You might also like